மகரிஷியாகும் மகத்துவம்
உதாரணமாக குளவி ஒரு புழுவைத் தூக்கி வந்து தன் இனத்தை விருத்தி செய்ய மண்ணாலான கூட்டினை அமைத்து அதனுள் தான் எடுத்து வந்த புழுவினை வைத்து அப்புழுவிற்குள் தன் நஞ்சினைப் பாய்ச்சுகின்றது.
தன் உடலில் உள்ள நஞ்சினை அப்புழுவினிடத்தில் பாய்ச்சியபின் புழுவினை உள்ளே வைத்துக் கூட்டினை மூடி விடுகின்றது.
புழுவினிடத்தில் நஞ்சு பாய்ந்ததால் புழுவின் உடலை உருவாக்கி அணுக்கள் உள்ளடங்கி புழுவின் தோல் சருகு போன்று ஆகிவிடுகின்றது.
புழுவைத் தூக்கி வரும் பொழுது எந்த சப்தத்தை வெளிப்படுத்தியதோ எந்தச் சப்தத்தை வெளிப்படுத்தியதோ அதே சப்த்த்தைச் சில நாட்களுக்குப் புழுவினிடத்தில் நினைவாற்றலைக் கூட்டுவதற்காக அந்தல் கூட்டுக்கருகே வந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.
அப்பொழுது இதே நஞ்சால் கூடு அமைத்து அதிலே இந்த உயிரணுவின் அந்தச் சத்தை அது ஒலி அலைகளாகப் பரப்பப்படும் பொழுது இந்தப் புழுவுக்குள் இருக்கும் இந்த ஜீவ அணுக்கள் இந்தக் குளவியின் நஞ்சான நிலைகள் பட்டபின் குளவி போன்று மாற்றம் பெறுகின்றது.
சிறிது காலத்தில் இந்த உணர்வின் சக்தி இந்த புழுவின் தசைகளை உணவாக உட்கொண்டு அதனின் மலத்தை உமிழ்த்தப்படும் பொழுது குளவியின் ரூபத்தை அடைகின்றது.
குளவியின் ரூபம் வந்தபின் குளவிக்கு உருவானது போன்று அந்த உடலின் தன்மை நஞ்சு உருவாகும்.
அந்த உமிழ் நீரைக் கொட்டி அந்தக் கூட்டைப் பிளந்து அது தன் உணர்வால் அதே குளவி எதைச் செய்ததோ அதே உணர்வின் தன்மைக்கு வருகின்றது.
அதற்கு யாரும் சொல்லித் தருவதில்லை.
கூட்டினில் உருவான குளவியானது தன்னிடம் சுரக்கும் உமிழ் நீரைக் கொட்டி கூட்டினைப் பிளந்து வெளி வருகின்றது.
தாய்க் குளவியோ உமிழ் நீரைப் பயன்படுத்திக் கூட்டினை அமைத்தது. கூட்டினுள் உருவான குளவியோ அதே உமிழ் நீரைப் பயன்படுத்தி கூட்டினைக் கரைத்து வெளியே வருகின்றது.
இது போன்றுதான்
1.மகரிஷிகள் உணர்வுகளை ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்களுக்கு உணவாகக் கொடுக்கப்படும் பொழுது
2.இந்த உடலான கூட்டில் இருந்து ஒளியின் சுடராக… அழியா ஒளிச் சரீரமாக
3.புழு குளவியாக மாறியது போன்று நாமும் அந்த மகரிஷிகளாக அருள் ஞானிகளாக அழியாத நிலை பெற முடியும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.