துருவ நட்சத்திரத்தின் சக்தியை எந்த நேரத்திலும் பெற நாம் பசித்திருக்க வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எந்த நேரத்திலும் பெற நாம் பசித்திருக்க வேண்டும்

 

இந்த மனித வாழ்க்கையில் நாம் விழித்திருப்பது மிகவும் நலம். இந்த நினைவாற்றல் கொண்டு தெளிவாக்கி அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கச் செய்ய வேண்டும்.

நாம் போகும் பாதையில் தவறு செய்யாமலேயே பிறருடைய நிலைகளை நுகர்ந்தறிய நேருகின்றது. தீமையிலிருந்து விடுபடும் நிலைகள் வருகின்றது.
1.ஆனால் தீமையிலிருந்து விடுபட்டுச் சென்றாலும் நுகர்ந்த தீமையான அணுக்கள் நமக்குள் வளர்ந்து
2.தீமையை உருவாக்கும் நிலையாக தீமையையே உணவாக ஏங்கி எடுத்துத் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடும்.
3.அந்த இனத்தைப் பெருக்காது நாம் தடைப்படுத்த நாம் விழித்திருப்பதே நல்லது.

தனித்திரு… நீ விழித்திரு…! என்று சொல்வார்கள். எப்பொழுதுமே பிறிதொரு தீமையின் உணர்வுகள் நமக்குள் கலக்காது “தனித்த அந்த ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது” பிறருடைய உணர்வுகள் நமக்குள் கலந்திடாது அந்த மகரிஷியின் உணர்வுடன் ஒன்றி நாம் தனித்து வாழ முடியும்.

இல்லையென்றால் பிறருடைய தீமை செய்யும் உணர்வுகள் நம்மை இயக்கிவிடும். அதனால் தான் ஒவ்வொரு நிலைகளிலும்.. நீ விழித்திரு நீ தனித்திரு என்று காரணங்களைச் சொல்லி ஞானிகள் கூறுகின்றார்கள்.

அருள் ஞானிகள் உணர்வை விழித்திருந்து அந்த உணர்வினைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால் பிறிதொரு தீமை செய்வோர் உணர்வுகள் நம்மை இயக்காது.. நாம் தனித்து தனித்தன்மையில் வாழ்கின்றோம்.

தனித்தன்மை கொண்டு துருவ நட்சத்திரம் அந்த ஒளியின் சுடராக
1.மற்றொன்று இதை இயக்கிடாது… அதைத் தனக்குள் இயக்கப்பட்டு ஒளியின் தன்மையாக “தனித்தன்மையாக அது எப்படி வளர்கின்றதோ…”
2.இந்த மனித வாழ்க்கையில் எவரொருவர் அதனைப் பின்பற்றி அதைப்போல விழித்திருந்து செயல்பட்டாரோ
3.இன்றும் அவர்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சுடராக
4.அவரவர் நிலைக்கொப்ப தனித்தே வாழ்கின்றார்கள் தனித்தன்மை கொண்டு.

ஆகவே நாம் இந்த மனித வாழ்க்கையில் நாம் எதனின் தன்மை கொண்டு நுகர்கின்றோமோ அடுத்தவர்களுடன் தொடர்பு கொண்டு தான் நாம் வாழ்கின்றோம்.

ஒருவருக்கொருவர் இணை சேர்த்து ஒருவருக்கொருவர் ஒன்றி வாழுகின்றோம். கோள்களும் அதே போன்று தான் அதனதன் நிலைகள் வளர்ந்து அதனதன் தனித்தன்மையில் வளர்ந்தாலும்… அதனின் விஷத்தன்மைகள் வளர்கின்றது.

1.ஆனாலும் சூரியன் தனித்தன்மை கொண்டு வரும் நஞ்சினை எல்லாம் பிரித்து விட்டு ஒளியின் சுடராக மாற்றுகின்றது.
2.இதைப் போன்று தான் நாம் தனித்திருந்து விழித்திருத்தல் வேண்டும்.

எத்தகைய தீமையான உணர்வாக இருந்தாலும் ஒவ்வொரு நொடியிலும் அது உள் சேராது சூரியன் நஞ்சினைப் பிரித்து அதனுடைய தனித் தன்மையை எப்படிக் காட்டுகின்றதோ… தனித்த நிலைகள் அதனுடைய ஒளியின் தன்மையாக அது எப்படிச் செயல்படுகின்றதா இதைப் போன்று தான் நமக்குள் தனித்து இருத்தல் வேண்டும்… விழித்திருத்தல் வேண்டும்.

1.இந்த மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் நல்லவர்களுடைய உணர்வுகளை அறிந்தாலும்
2.அவர்கள் உணர்வுக்குள் சிக்கி நாம் அடிமையாகாது தனித்திருப்பது நல்லது… தனித்திருப்பது என்றால் நாம் விழித்திருப்பது நல்லது.

தீமைகள் நமக்குள் ஊடுருவாது மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்து அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கித் தனித்தன்மையாக… நமது நிலைகள் உணர்வுகள் பிறருடைய தீமைகளிலிருந்து விடுபட்டுத் “தீமையற்றவராக வாழும் நிலை பெற வேண்டும்…”

மகரிஷிகள் தனித்திருந்து விழித்திருந்ததனால் தனித்திருக்கும் நிலை பெற்றார்கள். அதனின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் நமது வாழ்க்கையில் விழித்திருக்கும் உணர்வும் தனித்து வாழும் நிலைகளும் தீமையற்ற நிலைகளும் நமக்குள் வளர்ந்திடும் நிலை பெறுகின்றது.

அதை நினைவுபடுத்தும் நன்னாள் தான் சிவன் ராத்திரி.

1.நம் உடலுக்குள் இருளாக இருப்பதை அருள் ஞானிகள் ஒளிச்சுடரைச் சேர்த்து
2.இருள் சூழும் நிலையை நீக்கி இருளற்ற உணர்வினைத் தனக்குள் வளர்த்து
3.மெய் உணர்வுடன் ஒன்றிய நிலைகளை நமக்குள் பெருக்க வேண்டும்.
4.அந்த அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply