மூன்று சக்திகளின் இயக்கம் தான் இயற்கை

மூன்று சக்திகளின் இயக்கம் தான் இயற்கை

 

ஓர் விஷமான ஆவியின் நிலைகள் விஷமற்றதைத் தாக்கப்படும் பொழுது அந்தத் தாக்குதல் தாங்காது வெப்பமாகி அணுக்களாகச் சிதறுண்டு பரவுகின்றது ஆதியில்,

அவ்வாறு தாக்கி அணுக்களாகப் பரவிய நிலைகளைத் தான் நாம் அறிந்து கொள்வதற்காக இதை உண்மையில் கண்டுபிடித்த அகஸ்தியன் சாதாரண தன் இன மக்கள் கண்டு கொள்வதற்காகக் காரணப் பெயர்களை வைத்தான்.

1.வெப்பத்தை வைத்துத் தான் நாம் பல பொருள்களைச் சமைக்கின்றோம்.
2.மனித உடலில் அந்த வெப்பம் இருந்தால் தான் அணுக்களும் இயங்குகின்றது.
3.மரத்திற்கு வெப்பம் இருந்தால் தான் அதுவும் வளர்கின்றது.

கடல் நீரிலே வாழும் உயிரினங்கள் இருப்பினும்
1.பூமியின் வெப்ப அலைகள் அதனால் ஏற்படும் காந்த அலைகள் நீருக்குள் பரவும் பொழுது தான்
2.அந்த மீன்களில் உள்ள உயிரில் வெப்ப நிலைகள் ஊடுருவி அது தனக்குள் கவரும் ஓட்டத்தில் எலக்ட்ரானிக்காக மாற்றி
3.அதனால் தனக்குள் வெப்பத்தை உருவாக்குகின்றது.

இதைப் போன்று தான் விண்ணின் ஆற்றலில் ஆரம்பத்தில் ஏற்பட்ட வெப்பம் அது நகர்ந்து செல்லும் பொழுது காந்தமாக அமைகின்றது.

வெப்பம் காந்தம் விஷம் ஆதியிலே இந்த மூன்றும் ஒன்றாக உருப் பெறும் சந்தர்ப்பத்தால் தான் உலகமே இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

1.வெப்பம் உருவாகும் சக்தி…
2.காந்தம் தன்னுடன் எப்பொருளையும் ஈர்த்துத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் சக்தி.
3.அதனுடன் சேர்ந்த விஷமோ எப்பொருள் அதனுடன் கவர்ந்ததோ அந்தப் பொருளின் மணத்தையும் குணத்தையும்
4.உணர்ச்சிகளைத் தூண்டி அது இயக்கச் சக்தியாகச் செயல்படுகின்றது.

இதனைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தான் “ஆதிசக்தி விஷம்… ஆதிபராசக்தி வெப்பம்… ஆதிலக்ஷ்மி காந்தம்…” என்று காரணப் பெயரை வைத்து அழைக்கின்றார்கள்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply