வெறும் சொல்லாக யாம் சொல்லவில்லை… அது மிக உயர்ந்த சக்தி

வெறும் சொல்லாக யாம் சொல்லவில்லை… அது மிக உயர்ந்த சக்தி

 

யாம் உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்து வந்து சாமி…! என் உடம்புக்குச் சரியில்லை என்று ஒருவர் கேட்டால் எப்படி இருக்கும்…? வெளியில் வேலைகள் எப்படி நடக்கிறது…? என்று பார்த்து வரலாம் என்று யாம் சுற்றிப் பார்க்கும் பொழுது அங்கே வந்து என்னிடம் இடைமறித்து “என் கஷ்டம் போக வேண்டும் என்று நீங்கள் கேட்டால் எப்படி இருக்கும்…?”

சாதாரணமாக… ஒருவர் தன் கஷ்டத்தை உங்களிடம் சொல்கிறார் என்றாலே அதைக் கேட்கும் பொழுது உங்களால் சமாளிக்க முடியவில்லை… அந்தக் கஷ்டம் உங்களுக்கு வந்து விடுகின்றது.

1.ஆனால் எத்தனையோ பேர் எம்மைச் சந்தித்து கஷ்டம்… கஷ்டம்… என்று சொல்லி
2.அதையெல்லாம் நான் காதில் கேட்டால் எப்படி இருக்கும்…?
3.நான் உங்களைக் கவனிக்க வேண்டும்… நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.

அதற்கப்புறம் அதை நான் உணர வேண்டும். பின் உங்கள் தீமை நீங்க வேண்டும் உங்கள் கஷ்டம் நீங்க வேண்டும் என்று நான் சொல்ல வேண்டும்.

நீங்கள் சொல்லும் கஷ்டமான உணர்வையெல்லாம் எனக்குள் இயக்காமல் அதை நீக்கித் தூய்மைப்படுத்தி விட்டு உங்களுக்கு நல்ல வாக்காகக் கொடுக்க வேண்டும் என்றால் நான் எத்தனையோ சிரமப்பட வேண்டி வரும்…?

1.நீங்கள் சொல்லும் கஷ்டத்தை எல்லாம் எனக்குள் வராது
2.அதைச் சமாளிக்கக் கூடிய அந்தச் சக்தி இருந்தால்தான் உங்களுக்கு நல்ல வாக்கையே நான் கொடுக்க முடியும்.

அந்த உயர்ந்த சக்தி வாய்ந்த வித்தை யாம் உங்களுக்குக் கொடுக்கும் பொழுது நீங்கள் அதை விளைய வைத்தால் உங்களுக்கு அந்தப் பலன் கிடைக்கும்.

இல்லாமல் போனால் என்னுடைய சொல் வெறும் சொல்லாகத்தான் இருக்கும்.

ஞானிகளும் மகரிஷிகளும் நம்மைப் போன்று மனிதர்களாக வாழ்ந்தவர்கள் தான். வாழ்க்கையில் வந்த துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உயர்ந்த எண்ணங்களை எடுத்து அந்தக் கெட்டதை எல்லாம் பஸ்பம் ஆக்கியவர்கள்.

1.தன் உடலுக்குள் வந்த நோய்களை மாற்றி மெய் ஞானத்தின் தன்மை வளர்த்து
2.தன் உடலில் இருக்கும் உணர்வுகளை ஒளியாக மாற்றி
3.தன் உடலில் இந்த வாழ்க்கையில் வந்த அனைத்தையுமே புடம் போட்டு அதை மாற்றி உயிரணுவோடு சேர்த்து உயிருடன் சேர்த்து
4.உயிராத்மாவை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதற்குப் பின்னாடி வந்தவர்கள் அவர் உடலில் விளைய வைத்த அந்த உணர்வின் சக்தியை எடுத்து அதைச் சுவாசித்து தன் உடலில் வந்த கஷ்டங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலந்து அதைப் புடம் போட்டு சங்கடத்தையும் சலிப்பையும் மாற்றிவிட்டு தன் உணர்வுகளை ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாகச் சென்றிருக்கின்றார்கள்.

தனக்குள் வந்த துன்பத்தையெல்லாம் மாற்றி விண் செல்ல வேண்டும் என்ற நிலைகள் கொண்டு அங்கே சென்றார்கள். அவர்கள் மனிதனாக இருக்கும் பொழுது வெளிப்பட்ட அந்த உயர்ந்த சக்திகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நம் பூமியிலும் பரவச் செய்துள்ளது.

விண்ணிலே அவர்கள் இன்று சப்தரிஷி மண்டலங்களாக இருந்தாலும் அதிலிருந்து வெளிப்படும் ஒளி உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றவர்கள் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக இருக்கின்றார்கள்.
1.பூமி சுற்றுகிறது என்றால் வட துருவத்தில் இருக்கும் பொழுது
2.சப்தரிஷி மண்டலம் வானிலே தெரியும் போது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இடத்திற்கும் வித்தியாசமாகத் தெரியும்.

இரவில் இன்று ஏழு மணிக்கு நாம் இருக்கும் இடத்தில் சப்தரிஷி மண்டலத்தைப் பார்க்க முடிகிறது என்றால் அதே ஏழு மணி அளவில் ஒரு வாரம் கழித்து மற்ற இடங்களில் மாறி வரும் பொழுது அங்கே தெரியும். அந்த ஒரு வார வித்தியாசத்தில் அங்கே அதே நேரத்தில் பார்க்க முடியும்.

துருவ நட்சத்திரம் இருந்த இடத்திலேயே இருக்கும். அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்தின் ஒளியான உணர்வுகள் அனைத்தும் இப்படி பூமியைச் சுழன்று கொண்டு வருகின்றது.

ஆனால் சூரியனுடைய வெப்ப காந்தம் அதிலிருந்து வரும் சக்திகளைக் கவர்ந்து நம் பூமிக்குள் இங்கே நமக்கு முன் கொண்டு வருகின்றது… பூமிக்குள் படர்ந்து கொண்டிருக்கின்றது.

1.அந்தச் சக்தியைத் தான் குருநாதர் எம்மை எடுக்கும்படி செய்தார்.
2.அதை எடுத்துத் தான் தீமைகளை மாற்றி உணர்வுகளை ஒளியாக மாற்றுகின்றேன்.
3.அதிலே விளைந்த அதே வித்தைத் தான் உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாக வாக்காக ஊன்றுகின்றேன்.
4.அதை வளர்த்துக் கொண்டால் அவர்கள் சென்றடைந்த எல்லையை நீங்களும் அடைய முடியும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply