
விதி மதி
நாம் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் வேதனைப்படுவோரின் நிலைகளைக் கண் கொண்டு பார்க்கும் பொழுது நமக்குள் “அது வித்தாகப் பதிந்து விடுகின்றது…”
உடலில் பதிந்த ஆந்த வேதனையின் வித்து நமது உடலில் இருந்து கொண்டு அதனின் உணர்வின் கிளர்ச்சியைத் தூண்டி வித்துக்குச் சத்தாகத் தன் உணர்வை ஈர்க்கின்றது.
இது போன்று
1.எதனின் உணர்வின் குணத்தை அதிகமாக நமக்குள் பதிவு செய்கின்றோமோ
2.அது நமக்குள் விதியாக மாறுகின்றது.
நமக்குள் எத்தகைய தீமையைப் பதிவு செய்தாலும் அந்த உணர்வின் தன்மை நம்முள் ஊழ்வினையாக விதியாக உருவாகின்றது. மீண்டும் மீண்டும் அதே எண்ணங்களை எண்ணும் பொழுதுதான் அதன் வழிகளில் நாம் செயல்பட ஆரம்பித்து விடுகின்றோம்.
இதைத்தான் சிவனுக்குக் கணக்குப் பிள்ளை நந்தீஸ்வரன் என்று பக்தி மார்க்கங்களில் சாதாரண மனிதரும் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் வண்ணம் காவியங்களைத் தொகுத்தனர்.
வித்தாகப் பதிந்து வளரும் உணர்வுகளை நாம் மதி கொண்டு மாற்றிடல் வேண்டும்.
அவ்வாறில்லாமல் வேதனையின் உணர்வுகள் வளர்ந்து விதியாகச் செயல்படுமானால் அது நம் உடலைக் கரைத்து இறுதியில் நம்மை மடியச் செய்துவிடும்.
1.அந்த விதியை மதி கொண்டு மாற்றிட வேண்டும்.
2.மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியை நம்முள் வலுப் பெறச் செய்வதே மதியாகும்.
இந்த மதி கொண்டு நம்முள் சேரும் நஞ்சான இருளை அகற்றுவோம். மகரிஷிகளின் அருள் சக்தியினை நமக்குள் வளர்ப்போம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.