
துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள் வலுப் பெறச் செய்யுங்கள்
காலையில் துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாக வளர்க்க நம் உடலில் உள்ள தீய அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது தடைப்படுத்தப்படுகின்றது.
துருவ நட்சத்திரத்துன் சக்தியை முன்னணியில் வைத்தால்…
1.தீமையான அணுக்களை நம் உடலுக்கு ஓர் அடிக்கு உள்ளே வராதபடி தடுத்துவிடலாம்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைத் தியானித்து வலுப்பெற வலுப்பெற
3.நமது ஈர்ப்பு வட்டத்தில் இருந்து அந்தத் தீமைகள் கடந்து பரமாத்மாவிலே கலந்து விடுகின்றது.
நம் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள நல்ல அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க அது வலுப்பெற்று தீமைகளை மாற்றிவிடும்.
இவ்வாறு மாற்றி அமைத்தால் துருவ நட்சத்திரத்தின் உணர்வு நமக்குள் வலுப் பெறுகின்றது. இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்கின்றோம்.
ஆனால் பிறிதொரு உணர்வுக்குள் சிக்கிவிட்டால் அந்த உடலுக்குள் சென்று நோயை உருவாக்கி அந்த உடலையும் வீழ்த்தத்தான் செய்யும். அந்த உடலை விட்டு வந்தபின் பரமாத்மாவிலே கலந்து எந்த விஷத்தன்மையுடன் வந்ததோ அதனுடைய ஈர்ப்புக்கு அழைத்துச் சென்று மனிதனல்லாத உருவை உருவாக்கி விடும் நமது உயிர்.
இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும். ஆகவே
1.அடிக்கடி துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை சேர்த்துக் கொண்டே வந்தால்
2.பற்று கொண்ட மற்றவர்களின் தீமையான உணர்வுகளும் நமக்குள் நோயாக மாறாது.
அந்த ஆன்மாக்களை விண் செலுத்தி விட்டால் அந்தத் தீமை நமக்குள் இயங்காது மாறி விடுகின்றது. உடல் ஈர்ப்புக்குள் வராதபடி நம் ஆன்மாவிலிருந்து தள்ளிப் பழகுதல் வேண்டும்.
அதற்குத் தான் ஆத்ம சுத்தி அந்த ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம். எப்பொழுது மனக்கலக்கமோ சோர்வோ சலிப்போ சஞ்சலமோ வேதனையோ நம்மை அறியாமலே வரும் அந்த மாதிரி நேரங்களில் அதை நாம் தடுத்துப் பழகுதல் வேண்டும்.
1.தீய அணுக்கள் கண் வழி அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றது.
2.இழுத்து ஆன்மாவாக மாற்றிச் சுவாசிக்கும்படி செய்து… அப்போது அந்த எண்ணங்கள் வருகின்றது.
3.இரத்த நாளங்களில் கலந்து நம் உடலில் உள்ள தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைத்து அதன் படி தீமைகளை உருவாக்கி விடுகின்றது.
இது போன்று எப்பொழுதெல்லாம் தோன்றுகின்றதோ அப்போதெல்லாம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணுங்கள். துருவ நட்சத்திரத்தின் பால் நினைவச் செலுத்துங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று சிறிது நேரம் வலுப்படுத்துங்கள்.
இந்த உணர்வுகள் வலுப்பெற்ற பின் சோர்வடையச் செய்யும் சஞ்சலப்படச் செய்யும் கவலைப்படச் செய்யும் வெறுப்படையச் செய்யும் அணுக்களுக்கு ஆகாரம் செல்லாதபடி இந்தத் துருவ நட்சத்திரத்தின் அவைகளைத் தள்ளி விடுகின்றது.
1.நாம் ஆன்மாவை விட்டுத் தீமைகள் கடக்கப்பட்டு பரமாத்மாவிலே கலந்து விடுகின்றது.
2.அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் வலுப்பெறும் போது நல்ல அணுக்களுக்கு இது உணவாகச் சென்று
3.உடலுக்குள் நல்ல அணுக்களாக வளரத் தொடங்குகிறது.
மனிதனாக இருப்பவர் தான் இதைச் செயல்படுத்த முடியும்.
தீமை செய்யும் அணுவாகிவிட்டால் அது உந்தி தன் உணவை எடுக்கின்றது… அறியாதபடி நோய்களும் வந்து விடுகிறது… நம் மனநிலையும் வித்தியாசமாகி விடுகின்றது.
அன்பு கொண்டு மற்றவரிடம் பழகினாலும் அந்த அன்பு மறைந்து விடுகிறது… பகைமையை ஊட்டுகின்றது. பகைமையான அணுக்கள் உடலுக்குள் உருவாகும் பொழுது உடலுக்குள்ளேயே பகைமை உணர்ச்சிகள் வளர்ச்சி அடைந்து விடுகின்றது.
இதைப்போன்ற கொடுமைகளிலிருந்து விடுபட துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஒவ்வொரு நாளும் வாழ்க்கையையே தியானம் ஆக்குங்கள்.
சலிப்பு சஞ்சலம் வேதனை வெறுப்பு போன்ற செயலற்ற நிலைகள் வரப்படும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.
அது எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும். எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் வலுப்படுத்தினால் தீமைகளைத் தள்ளி விடுகின்றது… ஆன்மாவைத் தூய்மையாக்குகின்றது… மன வலிமை பெறச் செய்கின்றது.
வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் தீமையிலிருந்து விடுபடும் சக்தியும் பெறுகின்றோம். அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றுடன் பற்றுகின்றோம். ஆகவே
1.இந்த வாழ்க்கையில் பிறவி இல்லா நிலை அடைய முயற்சி எடுங்கள். 2.இந்த உடலுக்குப் பின் நாம் இன்னொரு உடல் பெறக் கூடாது.

சப்தரிஷிகளின் செயல் நிலை
ஆதி சக்தியின் ஜீவ சக்தி தான் அனத்துமே. அஜ்ஜீவ சக்தியை அவ் ஆதி சக்தி வளர விடுகின்றாள். அவ்வளரும் பக்குவத்தில் அவை அவை எடுக்கும் சுவாச நிலை கொண்டு தான் பலவும் உருப்பெறுகின்றன. ஆதி சக்தியின் அருள் சக்தியின் அச்சக்தியுடனே ஐக்கியப்படும் நிலை பெற வேண்டும்.
இன்று நம் உலகினில் மனித ஆத்மாக்களின் எண்ண நிலை ஒருவருக்கொருவர் மாறு கொண்டுள்ளது.
1.நல்லவர் தீயவர் என்பதெல்லாம் ஆண்டவன் படைப்பு அல்ல,
2.அவரவர் எடுத்து சுவாச நிலை ஒன்று அமையப்பெற்றது.
நல்லவரின் எண்ணத்தை அச்சக்தியின் நிலையுடன் சக்தியை ஈர்த்து அந்நிலையில் மென்மேலும் நற்பயனைச் செயல்படுத்தி அதன் வழித் தொடரிலேயே ஆத்மாவிற்கு நற்சக்தி கூடி பரம்பொருளான ஆதி சக்தியுடன் ஐக்கியப்பட்டு ஆண்டவனின் அருள் பெற்றவனாய் ஆண்டவனாய் இன்று சப்தரிஷி நிலை பெற்ற பக்குவம் பெற்ற மகான்கள்.
இவ்வுலகில் உள்ள ஆத்மாக்களையும் நல் உணர்வு பெற்று நல் ஆத்மாக்களாக தன் வட்டத்திற்குள் அச்சக்தியை ஈர்ப்பதற்காக மனித ஆத்மாக்களின் அவ்ஈர்ப்பு நிலை கொண்ட எண்ணங்களுடன் கலந்து மற்ற மனித ஆன்மாக்களை நற்பயன் பெறச் செய்யும் பக்குவ சக்தியை ஊட்டி நல் உணர்வுகளைப் பக்தி என்னும் நிலையில் வளர விடுகின்றனர்.
அந்நிலை பெற்று வழி வந்த பல மனித ஆன்மாக்கள் எந்நிலை கொண்டு பிறகு செயல்படுகின்றன…?
முந்தைய பாடங்களில்
1.இயேசுநாதரும் முகமது நபியும் ஐயப்பனும் இந்நிலையில் பக்தி கொண்டு வெளி வந்தவர்களின் நிலை எல்லாம் உணர்ச்சி வந்தேன்.
2.இவர்களின் உடலை ஒரு சப்தரிஷி கொண்ட முனிவரின் ஆத்மாவின் செயலினால் வழி நடத்தப்பட்டவர்கள் என்று.
பிற உடலில் அவ்ஆதி சக்தியின் அருள் பெற்ற சப்தரிஷியின் நிலையினால் இவ்வுலகிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடல் கொண்ட ஆத்மாவை அச்சப்தரிஷி வழி நடத்தி அருள் புரிந்த பிறகு அந்த உடலின் ஆத்மாவின் நிலை என்ன…?
ஒவ்வொரு உடலுக்கும் உகந்த உயிரணுவும் உயிராத்மாவும் உள்ள நிலையில் ஒரு சில உடல்களை அவ்உடலில் இருந்து அந்த உயிராத்மா பிரிந்த பிறகு கட்டையான ஜீவனற்ற உடலுக்கு அந்த ரிஷிகளின் ஆத்மா செயல் கொண்டு சில நிலைகள் நடக்க வைக்கின்றனர்.
உயிராத்மாவுடன் உள்ள உடலில் அந்த ரிஷிகளின் நிலை செயல்படும் நிலையில் அந்த உடலில் உள்ள ஆத்மாவின் நிலை எந்நிலை கொள்கின்றது…?
இராமகிருஷ்ண பரமஹம்சர் உயிருடன் உள்ள நிலையிலேயே அவரைத் தன் செயலுக்கு உகந்த ஆத்மாவாகத் தேர்ந்தெடுத்து அவர் வழியில் இவ்வுலகிற்குப் பல வழிகளைப் புகட்டிய அந்த ரிஷியின் அருள் இவருக்கு எப்படிச் செயல்பட்டது…?
அதற்குப் பிறகு இவரின் உயிர் ஆத்மாவின் நிலை என்ன…?
இவரின் உடலில் இருந்து அந்த உடல்நிலை கெட்ட பிறகு அந்த உடலில் இருந்து கொண்டு அவர் உயிராத்மா செயல்படாது என்ற நிலையில்
1.அவர் உயிருடன் உடல் பெற்று வாழ்ந்த காலத்தில் அவர் நிலையிலிருந்து செயல்படுத்திய அந்த ரிஷியின் சக்தி
2.அவர் உடலில் உள்ள அனைத்து அமிலத்தையும் புனிதமாக்கும் பக்குவத்தை அவர் சுவாசமுடனும் எண்ணமுடனும் கலக்கச் செய்து
3.அவ்ஆத்மாவுக்கும் அந்த ரிஷியின் ஆத்மாவுடன் கலக்கும் பக்குவத்தை அந்த உயிராத்மாவே ஏற்படுத்திக் கொண்டு
4.அந்த ரிஷியின் சக்தி வட்டத்திற்குள் இவரின் சக்தியும் ஒன்றி விடுகின்றது.
5.இவர் வேறல்ல அந்த ரிஷி வேற இல்லை என்ற நிலையில் ஐக்கியப்பட்டுச் செயல்நிலை கொள்கின்றது.
இப்படித்தான் இச்சப்தரிஷி நிலை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் தன் வட்டத்திற்குள் சேமிக்கும் சக்தியாய்ப் பலரை ஈர்த்துச் செயல்படுத்துகின்றனர்
போகருக்குக் குருவாக அருள் பெற்ற காளிங்கராயச் சித்தரின் நிலையும் இன்று அவரின் வட்டத்திற்குள் அவரின் ஒளியுடனே ஒளியாகக் கலக்க போகருக்கு தீட்சை தந்து அவர் நிலையில் முருகா என்ற மந்திரத்துடன் அவருடன் ஐக்கியப்படும் ஆத்மாக்களை ஒளிவட்டமாகத் தனதாகப் பல சக்தியை ஈர்த்து “இன்று ஒரு மண்டலமாகும் நிலையுடன் ஒளிக்கதிர்களைச் சேமித்து செயல் கொண்டு வருகின்றார்…”
மனித ஆத்மாக்களில் மட்டும் எண்ண நிலை மாறு கொண்டு செயல்படவில்லை.
1.சப்தரிஷியின் நிலையிலும் மாறு கொண்ட நிலை உண்டு.
2.ஆனால் அவர்களின் நிலையில் நற்பயனைப் போதிக்கும் நற்சக்தி நிலைதான் கூடிச் செயல்படுகின்றது.
மனித ஆத்மாக்களுக்குத் தான் இப்பேராசையின் நிலையிலிருந்து விடுபடத் தெரியவில்லை. நல் உணர்வை ஊட்டினாலும் ஏற்பதற்கு எண்ணத்தில் ஆசை இல்லை. அன்பென்னும் நிலையைச் சிதற விட்டு வாழுகின்றனர்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).
உதாரணமாக இங்கே தியான மண்டபம் இருக்கிறது என்றால் அடிக்கடி இதில் குப்பைகளும் தூசிகளும் வரத்தான் செய்கின்றது அதை உடனுக்குடன் தூய்மைப்படுத்தித் துடைத்தால் தான் மண்டபம் தூய்மையாக இருக்கும்.
அது போன்று நம்முடைய உடலில் ஏற்கனவே பதிவான அழுக்குகள் எத்தனையோ உண்டு.
1.நம் உடலில் உள்ள அணுக்கள் அதனதன் உணவுக்காக ஏங்கும் பொழுது
2.அந்த மணம் குவிந்து அதைச் சுவாசிக்கும் பொழுது அத்தகைய குணங்களே நமக்குள் வரும்.
தியானம் செய்கின்றேன் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை… என்னால் தியானிக்க முடியவில்லை என்ற நிலையை எண்ணாது
1.எப்படியும் அருள் ஒளியை நான் பெறுவேன்…
2.வலு கொண்டு நான் தியானிப்பேன்…
3.தியானித்து அருள் சக்தியை எனக்குள் சேர்ப்பேன்… என்று
4.வலுக்கட்டாயமாகத் தனக்குள் உள் செலுத்திக் கொண்டே வர வேண்டும்.
எப்படி இந்தத் தியான மண்டபத்தை அடிக்கடி தூய்மைப்படுத்துகின்றோமோ அதைப் போல நாம் திரும்பத் திரும்ப எண்ணி அருள் சக்திகளைச் சேர்த்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
காரணம்… நமது வாழ்க்கையில் அன்பும் பண்பும் பரிவும் கொண்டு தான் வாழுகிறோம். பிறர் வேதனைப்படுவதைப் பார்த்து அவர்களைப் பண்புடன் அணுகிக் கேட்டறியும் போது அவர்படும் வேதனைகளை நாம் நுகர்ந்தறிந்தாலும் நம் உடலில் அவை “அணுக்கருக்களாக…” மாறி விடுகின்றது.
குடும்பத்திற்குத் தேவையான செல்வத்தையும் சொத்தையும் சேர்த்தோமே… நோயினால் உடலை விட்டுப் பிரியப் போகிறோமே… என்ற ஏக்கத்துடன் அவர்கள் கடைசியில் வாழ்ந்தாலும் அவரின் உணர்வைக் கேட்டறிந்த நமக்குள் அந்த அணுவின் தன்மை வளர்ந்திருந்தால் அவர் இறந்தால் அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடும்.
அவர் வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தும் நமக்குள் அணுக்களாகத் தோன்றி மன வேதனையைக் கொடுக்கும் நிலையாக மாறிவிடும்.
அதே சமயத்தில் அந்த ஆன்மா நம் உடலுக்குள் இருந்து மீண்டும் மீண்டும் அதே வேதனையான உணர்வை உணவாக எடுத்து அதன் இனங்களை நம் உடலிலே பெருக்கிவிடும்.
1.ஞானிகளைப் பற்றி இங்கே யாம் (ஞானகுரு) சொல்லும் போது நல்ல உணர்வுகளை நுகர விடாது அது தடுக்கும்.
2.தடைப்படுத்தும் நிலை வரும் பொழுது உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது.
3.தியானத்தில் அமர்ந்தாலும் எழுந்து ஓட வைக்கும்.
காரணம் அதனுடைய விஷத்தன்மை வீரியம் கொண்டதாக இருப்பதால் அதன் படியே வெளிப்படுத்தும். நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அதை அதை அடக்கப் பழகுவதே யாம் சொல்லும் தியானம்.
அதை நாம் அடக்கப் பழகவில்லை என்றால் அதன் வழியே நம்மை அழைத்துச் சென்று மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலையாகப் பெறச் செய்துவிடும்.
உடல் பெறும் உணர்வுகள் இருந்தாலும் மன வேதனை வரும் பொழுது மன நோயாக வருகின்றது. பின் உடல் நோயாக மாறி மனித உடலையே மாற்றி அமைக்கும் சக்தியாக வந்து விடுகிறது.
இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?
எத்தகைய நிலைகள் இருந்தாலும் சரி… நல்லதை எண்ண விடவில்லை என்றாலும்
1.கண்களைத் திறந்து நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்
2.அந்த அருள் ஒளி எனக்குள் படர வேண்டும்
3.இருள் மறைய வேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்
4.மெய் ஒளியுடன் ஒன்றிட வேண்டும் என்று இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
1.என் உடலில் உள்ள ஆத்மாக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று…
2.அது அடங்கி… உயர்ந்த நிலைகளை என்னுள் இருந்து பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்.
இதனால் நம் உடலில் உள்ள அந்த ஆன்மாக்களுக்கும் ஒரு நற்பயன் ஏற்படுகின்றது. நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் ஒளியாக மாறும் சந்தர்ப்பம் உருவாகின்றது.
இதை மறவாது நாம் செய்து பழக வேண்டும்.
தியானத்தில் உட்கார்ந்தால் என்னால் முடியவில்லை… வெறுப்பாக இருக்கின்றது… எங்கெங்கோ நினைவுகள் போகின்றது…! என்று நிறையப் பேர் சொல்வார்கள்.
தியானத்தில் கண்ணை மூடிய பின் இப்படிப் பல உணர்வு வந்தால் உடனே கண்ணைத் திறந்து விண்ணிலே நினைவைச் செலுத்தி மகரிஷிகளை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால்
1.தன்னிச்சையாகவே நம் கண்களை மூட வைக்கும்.
2.நம் நினைவுகளைத் தன்னிச்சையாகத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்லும்.
3.அப்பொழுது துருவ மகரிஷியின் உணர்வுகள் துருவ நட்சத்திரத்தின் வழி வருவதை
3.துருவப் பகுதி வழியாகப் பூமிக்குள் வருவதை நாம் நுகரும் பருவத்தைப் பெறுகின்றோம்.
தொடர்ந்து இதை வழிப்படுத்தி வாருங்கள்… நல்லதாக அமையும்.


எம்முடைய உபதேசத்தின் சாரம்
இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வெல்லாம்
1.துருவ நட்சத்திரத்துடன் உங்களைத் தொடர்பு கொள்ளச் செய்து
2.இந்த உணர்வினை நீங்கள் நுகரப்படும் பொழுது அந்த உணர்வின் கருவாக உங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்பது.
3.இதை நீங்கள் ஏங்கி சுவாசித்தாலே போதுமானது
4.ஓம் நமச்சிவாய என்று உங்கள் உடலாக மாற்றிக் கொண்டே இருக்கும்.
நமது வாழ்க்கையில் தவறு செய்தவரையும் தீமை செய்பவரையும் உற்று நோக்கி… அவர்கள் பேசும் உணர்வைச் செவிகளிலே கேட்கப்படும் பொழுது அதே உணர்வு கொண்டு “இப்படிப் பேசுகின்றார்கள்” என்று நுகர்ந்தால் அதுவும் தியானம்தான்.
இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் தீமை செய்யும் நிலையாக அந்த உணர்வுகளை நம் உடலுக்குள் அணுவாக மாற்றிவிடும்.
ஆனால் இந்த உபதேச வாயிலாக உங்களைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அந்த மகரிஷிகள் பெற்ற உணர்வினைச் சொல்லாகச் சொல்லும் பொழுது
1.செவிகளில் இந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு கண் வழி அதைக் கவர்ந்து
2.கண்ணின் காந்தப் புலனறிவு கொண்டு அதை நம் ஆன்மாவாக மாற்றி உயிரான ஈசனிடம் கொடுக்கப்படும் பொழுது
3.இந்த உணர்வின் தன்மை அதாவது பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா ஆக நமக்குள் மாறி அதன் உணர்வு கொண்டு நம் உடலாகிறது.
இதனின் உணர்வை வளர்த்துக் கொண்டால் உயிரான்மாவுடன் சேர்த்து அருள் மகரிஷிகள் பெற்ற உணர்வின் தன்மை பேரருள் என்ற உணர்வின் ஆன்மாவாக அந்த உணர்வின் அணுத் தன்மை அடைகின்றது.
அவ்வாறு அடையச் செய்யத்தான் இந்த உபதேசத்தை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு எப்படிக் காட்டினாரோ… அதே வழிப்படிதான் உங்களுக்குள் அது பெருகவும் அதே உணர்வினைச் செவி வழி உணர்ச்சிகளை உந்தும்படி செய்து கண் வழி அருள் மகரிஷிகளின் உணர்வை நுகரச்செய்து ஜீவான்மாவாக மாற்றி அதன் உணவுக்காக அதே உணர்வுகள் தூண்டப்படும் பொழுது அதை ஏங்கி வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி நஞ்சினை வென்று பேரருள் பெற வேண்டும் என்பதற்காக குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் உணர்வாகச் சொல்கின்றேன்.
செவி வழி உணர்ச்சிகள் உந்தப்பட்டு கண் வழி அந்த அரும்பெரும் சக்தி அதை நீங்கள் நுகர்ந்து பேரானந்த நிலை பெறும் அந்த ஆற்றல் பெற வேண்டும் என்று தான் உபதேசிக்கின்றேன்.
1.கருத்தினைக் கூர்ந்து கவனித்து அந்த உணர்வுகளை நுகர்ந்தறிந்து அறிவதோடு மட்டுமல்லாதபடி
2.அறியச் செய்யும் மகரிஷிகளின் பேராற்றல் மிக்க உணர்வினை உங்களுக்குள் உருவாக்கவே இந்த உபதேசம்.

தீய எண்ணங்கள் மனதில் ஏன் தோன்ற வேண்டும்…? எப்பொழுதும் நல்லெண்ணமே ஏன் இருக்கக் கூடாது…?
கேள்வி:-
சர்வ ஜீவ ஜெந்துக்களும் ஆண்டவனால் படைக்கப்பட்டவை. மனிதனும் அவ்வண்ணமே படைக்கப்பட்ட பொருள்களில் ஒருவன். மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆண்டவன் இருக்கிறார் என்பது சான்றோர்கள் வாக்கு.
அந்நிலையை நாம் அனுசரித்து வருகிறோம். அப்படி இருக்கத் தீய எண்ணங்கள் மனதில் ஏன் தோன்ற வேண்டும்…? எப்பொழுதும் நல்லெண்ணமே ஏன் இருக்கக் கூடாது…?
எண்ணத்தை வைத்துத் தான் செயல்படுகிறோம். ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் நல்ல எண்ணங்களே ஏற்படுமானால் நற்செயல்களே செய்வார்கள் அல்லவா…? தீய செயல்களுக்கு இடமில்லாமல் போய்விடும் அல்லவா…? ஏன் அப்படி நடப்பதில்லை…?
ஈஸ்வரபட்டரின் விளக்கம்:-
இறைவன் படைத்த படைப்பே நாம்… நாம் மட்டுமல்ல சகலமுமே ஐக்கியப்படும். இந்நிலையில் இயற்கையிலேயே பல மாற்றங்கள் உண்டு.
1.நீர் மனிதராய்ப் பிறந்துள்ளீர். நாயுமுள்ளது, பாம்பும் உள்ளது, மாங்கனியும் வளர்கின்றது. நச்சுச் செடியும் வளர்கின்றது.
2.மனித ஆத்மாக்களின் நிலையை மட்டும் கேள்வியாக்கினீர்…?
3.இவ்வுலகில் உதித்த உயிரணுக்கள் யாவுமே ஏன் ஒன்றைப்போல் ஒன்றில்லை. எண்ண நிலையும் மாறு கொள்கிறது.
4.உருவ நிலை மற்ற எல்லா நிலைகளுமே தான் மாறு கொண்டுள்ளது.
5.ஒன்றைப் போல் ஒன்றில்லை ஆண்டவன் படைப்பில் ஏன் இவ் ஏற்றத்தாழ்வு…? என்ற எண்ணம் தானே உம் எண்ணம்…?
சூரியனிலிருந்து வெளிப்படும் அணுக்கதிர்கள் நம் பூமியின் மேல் படும் நிலையில் ஒவ்வொரு நொடிக்குமே மாறு கொண்ட அணுக்கதிர்கள் தான் நம் பூமியில் வீசுகிறது.
நம் பூமிக்கும் மேல், நம் பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள காற்று மண்டலத்திற்கும் மேல் உள்ள பால்வெளி மண்டலத்திற்கும் ஜீவனுண்டு, இயற்கைத் தன்மை உண்டு. பால்வெளி மண்டலத்தில் பல நிலை கொண்ட அமிலங்கள் உண்டு.
எல்லாவற்றுக்கும் பொது மண்டலம் பால்வெளி மண்டலம். சுழலும் நிலையில் அப்பால்வெளி மண்டலத்தில் உள்ள அமிலங்கள் பல நிலை கொண்டதாகப் படர்ந்து சுழன்று அதன் ஜீவ சக்தியில் விளையாடுகின்றது.
நம் பூமி சுழலும் வேகத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் அப்பால்வெளி மண்டலத்தில் உள்ள அமிலத்தில் பட்டுப் பூமியின் காற்று மண்டலத்திற்கு வருகிறது.
1.இக்காற்று மண்டலம் சுழலும் நிலையில் பூமியின் ஈர்ப்பு சக்திக்குகந்த அமிலத்தன்மை அவ்வொளிக்கதிர்கள் வீசிப் படர்ந்தவுடன்
2.அந்தந்த நிலையில் அந்நிலைக்குகந்த அமிலங்கள் படர்ந்து அதைப் பூமி ஈர்த்து பூமி விடும் சுவாசத்தைக் கொண்டு, அந்நிலையின் உயிர் அணு பிறக்கின்றது.
3.அதன் தன்மையில் ஏற்படும் அமில சக்தி நிலை கொண்டுதான் பூமியின் இயற்கையில் வளர்ந்திடும் தாவரங்கள் மற்றக் கனிவளங்கள் எல்லாமுமே.
4.எவ்வமிலத்தை பூமி ஈர்த்ததோ அந்நிலைக்கொப்ப சக்தி நிலை வெளிப்படுகிறது.
பூமியிலேயே உயிரணுவாய் உதித்து உயிராத்மா நிலை பெறுவதற்குள் மனித ஆத்மாக்களுக்குப் பல எண்ண நிலைகள் கூடி விடுகின்றன. எவ்வெண்ணத்தை அச்சுவாச நிலையுடன் ஈர்த்து வாழ்ந்து பழக்கப்பட்டதோ அந்நிலை கொண்ட அமிலத்தையே ஒவ்வோர் உடலுமே சேமித்துக் கொள்கின்றது.
1.பல ஜென்மங்கள் எடுத்தாலும் உயிரணுவாய் உதித்து உயிர் ஆத்மாவாய் உருப்பெறும் நிலையில்
2.அமில சக்தியைக் கொண்ட தொடர்பின் எண்ணமும் அதன் தொடர்ச்சியின் குண நிலையும் தான் அவ்வாத்மாவுக்கு உண்டே ஒழிய
3.அப்பரம் பொருளான ஆண்டவன் அனுப்புவதல்ல “நல்லவளையும் கெட்டவளையும்…”
இயற்கையின் ஆதி சக்தியின் நிலை பொதுவான சக்தி தான். அவளிலிருந்து உதித்த உயிரணுக்கள் எடுக்கும் வளர்ச்சி நிலை எல்லாம் அதனதன் சக்திதான்.
பரம்பொருள் ஒன்றே அப்பரம்பொருளின் பொருட்கள் தான் நாமெல்லாம். அப்பரம்பொருளின் நிலையுடனே ஐக்கியப்பட்டு ஜெபப்படுத்தும் நிலையினால் நம்மையே அப்பரம்பொருளாக்கிடலாம்.
“அவரவர்கள் எண்ணும் எண்ணத்தைக் கொண்டுதான் வாழ்க்கை…”
இக்காற்றுடன் பல நிலைகளும் கலந்துள்ளன.
1.நல்லெண்ணத்தின் சுவாசமும் இக்காற்றினால் தான்
2.துவேஷ எண்ணத்தின் மூச்சுக் காற்றும் இக்காற்றினால் தான்.
நம் வாழ்க்கையுடன் மோதுண்டு வாழும் நிலையில் பல செயல்கள் நடக்கின்றன. அந்நிலையில் எடுக்கும் சுவாசத்தைக் கொண்டு பல நிலைகள் நடக்கின்றன.
நம் ஆத்மாவுடன் நாம் மட்டும் வாழவில்லை பல கோடி உயிரணுக்கள் வாழ்கின்றன. ஆனால் நமக்குத் தான் நம் ஆத்மா சொந்தம். நம் உடலில் தான் மற்ற உயிரணுக்களும் இருந்தாலும் அதற்கு நம் உடலும், நம் ஆத்மாவும் சொந்தமல்ல.
அதைப்போல் நாம் எடுக்கும் எண்ணமுடன் இக்காற்றில் உள்ள பல அலைகளும் நம் எண்ணமுடன் மோதுகின்றன. இதனால் நம்மை அறியாமலேயே நம்முள் பல எண்ணங்கள் மோதுண்ட நிலையில் பல செயல்கள் நடக்கின்றன.
1.மனித ஆத்மாவாய் வாழ்வதுவே பெரும் பொக்கிஷம்.
2.நம்மையே நாம் மற்றத் தீய அணுக்களுக்கு அடிமைப்பட்டு வாழ்வதினால் தான் நல்லவன் கெட்டவன் என்று நிலை வருவது.
ஐந்தறிவு ஆறறிவு என்பதெல்லாம் நம்மால் ஏற்படுத்திய நிலைதான். மனிதனிலிருந்து நம் அறிவின் நிலையைச் சிதறவிடுவதினால் மிருக ஜென்திற்குச் செல்கின்றோம். நம்மைக் காட்டிலும் நுண்ணிய அறிவு மிருகங்களுக்கு உண்டு.
ஆறறிவு ஐந்தறிவு என்பதல்ல வாழ்க்கையே…!

அருள் ஞான வித்து என்ற “மதுரம்”
நாம் ஒரு செடியை வைத்து விட்டால் அது செழித்து வளர்ந்து அதிலே மலர்கள் உருவாகின்றது.
1.மலருக்குப் பின் அதிலே மதுவான இனிமை கொண்ட தேன் இணைந்து
2.அதற்குள் மதுரத்தைத் தனக்குள் நுகர்ந்து… அதனின் நிலை கொண்டு கருவுற்று
3.கருவுற்ற நிலைகள் கொண்டு அது தன் வித்துக்களை உருவாக்குகின்றது.
இதைப் போல
1.நாம் எடுத்து வளர்த்துக் கொண்ட மெய் உணர்வுகளின் தன்மை மலர்ந்து
2.அதனின் மணத்தைத் தனக்குள் நுகர்ந்தறியும் உணர்வின் தன்மை “மதுரம்”
3.மகிழ்ச்சியான அலைகளாக… நம் ஆன்மாவாக அது மாறுகின்றது.
4.அப்படி மாறும் உணர்வுகளை நாம் சுவாசித்து “அந்த அருள் ஞான ஒளியின் வித்தாக”
5.முழுமை பெறும் தன்மையை நாம் அவசியம் அடைதல் வேண்டும்… அடைய முடியும்.
ஆகவே ஏனோ தானோ என்று “எமது உபதேசங்களை” அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.
நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… என் குருவின் அருளை “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை” நீங்கள் பெற வேண்டும். அவரின் அருளால் நீங்கள் தெளிந்திடும் நிலை பெற வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் ஒளியுடன் உங்களுக்குள் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று தான் உங்களை எண்ணி நான் பிரார்த்திக்கிறேன்.
என் குருவை உங்களிடம் நான் பார்க்க விரும்புகின்றேன்.
ஆகவே உங்களை அறியாது வந்த இருளை நீங்கள் போக்கிடல் வேண்டும் அதிலே மகிழ்ந்து பேரானந்த நிலை பெற வேண்டும்.
1.உங்களில் வரும் அந்த உணர்ச்சிகள் எனக்குள் மதுரமாகி அதை நுகரும் பொழுது
2.உயிரான ஒளியுடன் ஒன்றி என்றும் நிலைத்திருக்கும் நிலையாக நான் பெறுகின்றேன்.
சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு தனக்குள் வரும் நஞ்சினைப் பிரித்து உணர்வின் ஒளியாக எப்படி மாற்றுகின்றதோ இதைப் போன்று தான் நமது குருநாதர் ஆற்றலைப் பெருக்கினார்.
1.அவர் வழிகளிலே நானும் பெற முடிகின்றது,
2.அதன் வழிகளில் நீங்கள் அனைவரும் பெற முடியும்… இதில் கடினம் எதுவும் இல்லை.
3.உங்களைப் பார்க்கும் அனைவரும் இந்த நிலை பெறுதல் வேண்டும்… அந்த நிலைக்கு நீங்கள் வளர வேண்டும்.
துயர்படுவோரைக் கண்டாலோ அல்லது அதைக் கேட்டறிந்தாலோ அடுத்த கணம் ஒரு 50 முறையாவது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். அவர் உடலில் பட்ட இருள் உங்களை மறைத்திடாது துடைத்துப் பழகுங்கள்.
பின் அவரிடம்… மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவீர்கள் உங்கள் பிணிகள் அகலும் மகரிஷியின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்வீர்கள் உங்கள் நோய்கள் நீங்கும் உங்கள் குடும்பம் நலமாக இருக்கும் உங்கள் தொழில்கள் வளமாக இருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வளரும் என்று
1.இது போன்ற அருள் ஞான வித்தாக வாக்காக அவருக்குள் பதிவு செய்யுங்கள்.
2.இதைப் போன்று வழி தொடர்ந்து வழி தொடர்ந்து நீங்கள் செய்து வாருங்கள்
3.தீமைகள் அகன்று தீமை அகற்றும் உணர்வுகள் நமக்குள் விளைந்து அலைகளாகப் படரும்.
4.அதை எல்லாம் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாகப் படரச் செய்யும்.
அப்பொழுது அந்த தீமைகளை அகற்றும் அலையின் தொடர்கள் நாம் எண்ணியவுடன் உடனடியாகக் கிடைக்கப் பெற்றுத் “தீமைகளை அகற்றும் அந்தக் கடவுளாக… அந்த மகரிஷியின் உணர்வுகள்” நமக்குள் சிருஷ்டிக்கும் தன்மையாக வரும்.
ஆனால் இன்றைய மக்கள் பரமாத்மாவிலே எதைப் பரவச் செய்து கொண்டிருக்கின்றார்கள்…? பயத்தையும் வேதனையையும் தான்…!
பஸ்ஸிலே சென்றால் பயம் வீட்டில் இருந்தால் பயம் காசைக் கொண்டு சென்றால் பயம் எதையாவது சத்தமாகப் பேசினால் பயம் என்று அஞ்சியே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உணர்வுகள் இந்த காற்றிலே அலைகளாகப் படர்ந்து கொண்டுள்ளது.
அந்த உணர்வுகள் மகரிஷிகள் உணர்வலைகளைப் பெறாது தடைப்படுத்துகின்ற நிலையாகவே வளர்ந்து கொண்டுள்ளது.
சூரியனின் காந்த சக்தி அதையெல்லாம் கவர்ந்து பரவச் செய்யும் பொழுது நமக்குள் அச்சுறுத்தும் நிலையே வருகின்றது. அத்தகைய கடவுளாகத்தான் இன்று மாற்றி வைத்திருக்கின்றோம்… பரமாத்மாவாக அதைத் தான் மாற்றுகின்றோம்.
அதிலிருந்து நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் சென்ற பின் நம்முள் நின்று அதுவே இயக்கச் செய்கின்றது
இதைப் போன்ற நிலைகளை அகற்ற
1.உலகம் உயர்ந்த நிலைகள் பெற அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நாம் நுகர்ந்து
2.இனி வரக்கூடிய காலங்களில் பூரண பௌர்ணமி போன்று உலக மக்கள் அனைவரும் ஒளியின் சுடராக மாறி
3.தெளிந்த நிலைகள் கொண்டு எல்லோரும் மனிதன் என்ற முழுமை அடைந்து
4.இந்த உடலை விட்டு அகன்றால் நிலை கொண்ட ஒளியான சரீரம் பெற வேண்டும் என்று
5.ஏகோபித்த நிலையில் எண்ணி நாம் வாழ்வோம்… வளர்வோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அணுவின் ஆற்றலை அறிந்து துருவத்தின் ஆற்றலைப் பெற்று அகஸ்தியன் ஒளியின் சரீரமாககித் துருவ நட்சத்திரமாக நிலை கொண்டுள்ளான்.
அவனைப் பின்பற்றிச் சென்றோர் அனைவரும் அவன் உணர்வைக் கவர்ந்து துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக ஒளியாக வாழுகின்றனர்.
இதை எல்லாம் கேட்கும் நீங்கள்… சாமி (ஞானகுரு) என்னமோ சொல்கிறார் அர்த்தமாகவில்லை…! எதை எதையோ பேசுகிறார்…! என்று எண்ண வேண்டியதில்லை.
காரணம்… படிக்காதவன் தான் இத்தனையும் நான் பேசுகிறேன். எம்முடைய பேச்சைக் கேட்பவர்களில்…
1.படித்தவர்கள் சிந்திக்கும்போது அவர்கள் படித்ததை வைத்து… “சாமி என்னமோ சொல்கிறார்…!” என்ற நிலைகளில் விட்டு விடுகின்றார்கள்
2.மிகவும் படிக்காதவர்கள் “சாமி என்ன சொல்கிறார்…?” என்று கூர்மையாக உற்றுக் கவனிக்கின்றார்கள்.
படிக்காதவர்களுக்குள் யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின் தன்மை கருவாகி விட்டால்
1.தன்னையும் அறிகின்றனர்… அண்டத்தையும் அறிகின்றனர்… அகண்ட அண்டத்தையும் அறிகின்றனர்.
2.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆகி
3.எப்படி ஒளியின் தன்மையாக மாற்றுகின்றானோ அந்த நிலையை அவர்கள் அடைகின்றார்கள்.
உதாரணமாக ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார் என்று கண்டறிந்த பின் அந்த உணர்வின் தன்மை நமக்குள் கருவாக உருவாகி விட்டால் அதே நோயின் தன்மை நமக்குள் உருவாகின்றது.
நோயாளியைப் பார்த்துத் திரும்பத் திரும்ப அவனை எண்ணும் பொழுது
1.கோழி கேறுவது போன்று அந்த உணர்வின் தன்மையாகி
2.நோயை உருவாக்கும் கரு முட்டையாகி அந்தக் குஞ்சாக ஆன பின் அதே நோயின் தன்மையை ஊட்டி
3.இரத்த நாளங்களில் கலந்து உயிருக்கு எட்டி
4.அந்த நோயின் உணர்வைக் கண் காது மூக்கு என்று அனைத்திற்கும் இழுத்துக் கொண்டு வரும்.
வேதனையாக இருக்கும் பொழுது உங்கள் மேலே யாராவது தொட்டால் உடனே சுருக்… என்று கோபம் வரும். வேதனையாக இருக்கும் பொழுது ஒருவர் நம்மிடம் மகிழ்ச்சியாக ஒரு சொல்லைச் சொன்னால் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது… அந்த மணம் நம்மைத் தடுத்துவிடும்.
ஆனால் வேதனையைப் பற்றிச் சொன்னால் இந்த உடல் மிகவும் ரசிக்கும். ஆகவே… வேதனையாக இருக்கும் பொழுது
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் ஆன்மாவிலிருந்து இதைத்தான் பிரித்தெடுத்து உயிருக்குக் கொடுக்கும்.
2.அந்த உணர்வின் தன்மை தான் உடலுக்குள் சென்று அந்த அணுவிற்கு ஆகாரமாகப் போய்ச் சேரும்.
இதைப் போன்று…
1.நோயை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
2.அதைத் திரும்பத் திரும்ப நீங்கள் எண்ணினால் போதும்
3அந்தக் கரு முட்டை உங்களுக்குள் வளர்ச்சி அடைந்து அணுக்களாகப் பெருக்கப்படும் பொழுது அது உணவுக்காக உந்தும்.
4.அந்த உணர்வின் தன்மை உந்தும் போது அந்த அருள் ஒளியின் உணர்வுகள் உங்களுக்குள் பெருகும்.
ஞானிகளின் உனர்வை இப்படித்தான் நமக்குள் பெருக்கிக் கோண்டு வர முடியும்..


அதிகக் கோபம் நமக்கு ஆகாது
நாம் எண்ணியபடி வாழ்க்கையில் நடக்கவில்லை என்றால் கோபம் வருகிறது.
1.அந்தக் கோபத்தினால் உண்டாகும் ஆத்திரமான வெறி உணர்வு,
2திலிருந்து விடும் சுவாசத்தினால் ஏற்படும் உடலின் அமில சக்தி மாறுபட்டு
3.அதிலிருந்து பல உபாதைகள் நாமே நம் உடலுக்கு ஏற்றிக் கொள்கிறோம்.
4.கோபம் ஏற்பட்டவுடன் நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் துரிதம் கொள்கிறது.
5.அந்நிலையில் நாம் எடுக்கும் சுவாசமே கடினமாய் நம் உடலில் ஏறுகிறது
6.இக்கனமான சுவாசத்தை ஈர்க்க ஈர்க்க, நம் உடலில் உள்ள அனைத்துப் பாகங்களும் ஒரு நிலைப்படாமல் துடிக்கும் நிலை கொள்கிறது.
7.அந்நிலையில் இருந்து, நம் உடலில் உள்ள இரத்த நாளங்கள் துரிதமாகச் செயல்பட்டு
8.மனிதனின் உடல் நிலைக்கே மூலகாரண வித்தாய், பல வியாதிகள் ஏற்படும் நிலைக்கு ஆளாக வேண்டி உள்ளது.
மனச் சஞ்சலத்திலிருந்து நாம் ஏற்றிக் கொள்ளும் நிலைதான் நமக்கு ஏற்படும் இத் தொடர் நிலையெல்லாம்.
சஞ்சல நிலை ஏற்பட்டவுடன் மனநிலையை அமைதிப்படுத்தி… அதனால் ஒரு நிலை கொண்ட சுவாசத்தை ஈர்த்தால் இச்சஞ்சலத்திற்குத் தெளிவு பெறலாம்.
தெளிவை நாமேதான் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
நம்மையே நாம் செய்யாத தவறுக்காக ஏசும்பொழுதும்…
1.அடுத்தவர் ஏசலைக் கொண்டு இப்படிச் செய்கின்றாரே… நாம் என்ன தவறு செய்தோம்…?
2.நம்மிடம் தவறில்லாத பொழுது… நம்மை ஏசுபவனை அவனே தண்டனை அனுபவிக்கட்டும் என்று அவன் தவறை என்றெல்லாம் எண்ணி
3.தவறு செய்பவன் இருக்க நம்மையே நாம் தவறாக்கிக் கொள்கின்றோம்.
நம் எண்ணத்தில் அவ் ஏசும் சொல்லை ஏன் அண்டவிட வேண்டும்…?
1.அவர்கள் நல்லுணர்வு பெறட்டும் நல்வழி படட்டும் என்ற எண்ணத்தில்
2.நம்முடன் அச்செயலை மோதவிடாமல் எண்ணும் பொழுது நம் உணர்வே நலம் பெற்று
3.நம் எண்ணத்தில் பிறரின் தீட்சண்ய சொல் தாக்காமல் நம்மைப் புனிதப்படுத்திக் கொண்டால்
4.நம்மையே நாம் பல இன்னல்களில் இருந்து காத்துக் கொள்கின்றோம்.
வினை செய்தவன் இருக்க வினை பயனை நாம் ஏன் ஏற்க வேண்டும்…? பிறரை ஏமாற்றியோ வஞ்சனை செய்தோ, துவேஷித்தோ வருபவன் எல்லாம் தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கின்றான். பிறரை ஏமாற்றுவதாக எண்ணி தன்னையே நான் ஏமாற்றி வாழ்கின்றான்.
மன நிலையை ஒருநிலைப்படுத்திச் சமமான வரையறை கொண்ட வாழ்க்கைதனை வாழும் பக்குவத்திற்குப் “பல நெறி முறைகள் உண்டப்பா…!”

பேய் ஓட்டுகிறார்கள் என்றால் “இன்னொரு பேயை உள்ளே ஏற்றுகின்றார்கள்” என்று தான் பொருள்
எண்ணற்ற காலம் முதற்கொண்டே இவ்வாவிகளை வசியப்படுத்தி செயல்படுத்திடும் பல நிலைகள், பல ஆயிரம் காலங்களாகவே இருந்து வருகின்றன. நற்காரியங்களுக்காகவும் தன் பேராசையின் நிலைக்காகவும் இந்நிலையைச் செயல்படுத்தி வந்தார்கள்.
மந்திரம் மாயம் செய்வதெல்லாம் ஒரு கலையாகவும் வம்ச வழியாகவும் நிலைப்படுத்தி செயல் கொண்டு வருகின்றனர். நம் நாட்டில்தான் பேய் ஓட்டுதல், மந்திரித்தல் என்பன போன்ற பல நிலைகள் நடக்கின்றன.
1.எண்ணத்தில் சோர்வு கொண்டவரின் உடலில் அவர்கள் எந்த எண்ணத்தைக் கொண்டு உள்ளனரோ
2.அவ்வெண்ண நிலைக்கொப்ப ஆவிகள் அவர்கள் உடலில் ஏறி விடுகின்றன.
உதாரணமாக பல ஆசை நிலையுடன் வாழும் ஒருவன் தன் இல்லத்தில் குழந்தைகளின் பற்றைக் கொண்டு, பல நினைவுகளுடன் இல்லத்தில் இருந்து வெளி இடங்களுக்குச் செல்லும் நிலையிலும், இல்லத்தில் இருந்த நிலையின் எண்ண ஆசையுடன், தன் குழந்தைகளுக்கு வேண்டிய பொருள் வாங்கும் ஆசையில், அதே எண்ண நிலையில் செல்லும் பொழுது அவ்வாசை நிலை கொண்ட நிலையில், மற்ற போக்குவரத்து இடையூறுகள் கவனிக்கப்படாமல் விபத்து ஏற்பட்டு, அந்நிலையில் அகால மரணம் எய்தி குருதி (இரத்த) வெள்ளத்தில் அடிபட்டு ஆத்மா பிரிந்த பிறகு
1.அவ்வாத்மா அவ்வாசை நிலையுடன் அங்கேயேதான் சுற்றிக் கொண்டிருக்கும்.
2.அதே நிலை கொண்ட எண்ண நிலை உடையவன் அந்நிலைக்குச் செல்லும் பொழுது
3.இவ்விரண்டு எண்ணங்களும் ஒரு நிலைப் பட்டவுடன் இவன் உடலில் அவ்வாவி ஏறிக்கொள்கின்றது.
இவனுடைய செயலுடன் அவ்வாவியின் செயலும் ஒன்றுபட்ட பிறகு இவன் உடல் நிலையில்… அவ்வுடலில் அவ்வாவி மனிதனாய் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலையெல்லாம் “இவன் உடலிலும் ஏறிக்கொள்கின்றது…”
தன் நிலையே, தான் மறந்து உடலில் உள்ள ஆவிக்குத் தன்னை அறியாமல் அடிமைப்பட்டு வாழும் நிலை ஏற்பட்ட நிலையில்… சோர்வு கொண்ட நிலையுணர்ந்து உள்ளவர்கள் மந்திரவாதிகளிடம் செல்லும் நிலை மிகுந்து விட்டது.
இந்நிலை கொண்டவன் மந்திரவாதியிடம் சென்றால்…
1.அவனுக்கு இவன் உடலில் ஏறியுள்ள மற்றொர் ஆவி ஆத்மாவின் நிலை புரிந்து பேய் ஓட்டுவதாகச் சொல்லி
2.மீண்டும் இதற்கு மேல் சக்தி கொண்ட மற்றும் ஒரு குட்டிச்சாத்தானை இவன் உடலில் ஏற்றி
3.அதன் சக்தியைச் செயல்படாமல் செய்து “பேய் ஓட்டுவதாய் அவ்வாத்மாவைப் பல இம்சைகள் செய்து” அவன் பொருளீட்டிக் கொள்கின்றான்.
இவன் உடலில் ஏறிய குட்டிச்சாத்தான் ஏவலிலிருந்து, “இவன் உடல் அழியும் வரை தப்புவது இயலாக் காரியம்…” இப்பேயோட்டும் நிலையினால் ஒவ்வொருவரையும் என்றென்றைக்கும் அதற்கே அடிமைப்படுத்துகின்றனர்.
இந்நிலையிலிருந்து தப்புவதற்கு நம் உடலில் எவ்வாத்மா எவ்வாவி நிலைகள் ஏறி இருந்தாலும்
1.அதன் பாதிப்பால் வரும் சஞ்சலம், சோர்வு, சோர்வில் இருந்து விடுபட
2.எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி மகரிஷிகள் உணர்வின் ஆற்றலைப் பெருக்கி
3.அந்தச் சக்தியை அந்த ஆன்மாவுக்கும் அன்பு கலந்த நிலையில் பெறச் செய்ய வேண்டும்.
அப்படித் தான் அதன் செயலைக் கட்டுப்படுத்த முடியும்.

மெய் ஞானிகளின் அறிவை நாம் பெறுதல் வேண்டும்
டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட வகையில் இன்ஜினியராகப் போக வேண்டும் என்றால் அதனைப் படித்தவுடன் “இஞ்சினை எப்படி ஓட்டுவது…?” என்று நீங்கள் படித்துக் கொள்கின்றீர்கள்.
விஞ்ஞானி ஒவ்வொரு பொருளின் உணர்வையும்…
1.அதனதன் இயக்கத்திற்கு எதை எதை இணைக்க வேண்டும்…? என்று அவர் கண்டுபிடித்துச் சொல்கின்றார்.
2.இன்ஜினியரோ அதற்குத் தகுந்த சாதனங்களை உருவாக்கி அதனதனைச் செய்கின்றான்.
3.மெக்கானிக்கலோ இதனை இந்த வலுவில் செய்தால் இதனுடைய எடை கூட இப்படி இருக்கும் என்று.
இப்படி அவரவர்கள் உணர்வுக்கொப்பதான் அதைச் செய்கின்றோம்.
அதைப் போல் தான் “மெய் ஞானிகள் அன்று சொன்னதை” உங்களுக்குப் பாட நிலையாக இப்போது கொடுக்கின்றோம்.
பள்ளியில் சென்று நீங்கள் எதனெதன் வழிகளில் பாடங்களைப் பதிவு செய்கின்றீர்களோ அது நினைவு வரப்படும் பொழுது இப்படி வருகின்றது.
இதைப்போல விஞ்ஞான அறிவுப்படி… தான் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை எதிலே எண்ணங்கள் செல்கின்றதோ அது பதிவாகின்றது.
வக்கீல் என்று வைத்துக் கொண்டால் “பதிந்த பின்” சட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்கின்றோம். இதிலே சட்டத்தின் நுணுக்கங்களை அறிந்து கொண்டாலும் “பிழைகள் எது…?” என்ற நிலைகளை அறிந்து நீக்கக் கற்றுக் கொள்ளுகிறோம்.
ஆனால் கற்றுக் கொண்டாலும்
1.தனது நிலைகளில் “தன் நண்பன்” என்று வந்து விட்டால், அவன் தவறு செய்தால் கூட
2.சட்டத்தில் எங்கே குறை இருக்கின்றது…? என்று நண்பனைக் காக்கத் “தவறும் செய்கின்றோம்…”
3.(கோபித்துக் கொள்ளாதீர்கள்… இப்படிச் சொல்கின்றேன் என்று…!) சட்டங்கள் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலைகளில் இப்படி…!
அதே மாதிரி ஆடிட் (AUDIT) அதன் வழியிலே கற்றுணர்ந்தாலும் அவர் கற்றுணர்ந்த நிலைகள் “தன் வாடிக்கையாளரை” எப்படிக் காப்பாற்றுவது…? என்பது தான் அவர்களுடைய தத்துவம்.
ஆக தனக்குள் பற்றிக் கொண்ட… சர்க்கார் நிலைகளில் இருந்து தன்னை மாற்றிக் கொள்ளும் நிலை தான் இங்கு வருகின்றதே தவிர
1.பொது விதியான நிலைகள் நம் தவறும் இங்கே வரக்கூடாது.
2.இங்கேயும் நாம் தவறான நிலைகள் செய்யக்கூடாது என்ற நிலைகளில்
3.அதிலே எது மையமாக இருக்கின்றதோ அதை உணர்ந்து அதை ஏற்றுக் கொண்டு செயல்படும் இந்த நிலையும் இல்லை,
அப்படிப் போனால் “அவர்களுக்குப் பிழைக்கத் தெரியாது” என்று பட்டமே வந்துவிடும்.
இந்த ஆறாவது அறிவால் வரக்கூடிய நிலைகள். இவர் எதற்கும் லாயக்கே இல்லை இவர் எதற்கு இங்கே வந்தார்…? என்று சொல்வார்கள். நியாயத்திற்காகப் போராடினால் அவரைப் பைத்தியக்கார வக்கீல் என்று சொல்வார்கள். நியாயத்திற்காக வேண்டி ஆடிட்டர் சொன்னால் “இவர் பிழைக்கத் தெரியாதவர்” என்று சொல்வார்கள்.
தவறு செய்தவரின் நிலைகள் “நான் தவறு செய்து விட்டேன்” என்றால் அந்தத் தவறைச் சாதகமாக வைத்து… சட்டத்தில் எங்கே ஓட்டை இருக்கிறது என்று அதைப் பிடித்துக் கெட்டிக்காரராகும் நிலை தான். அப்பொழுது “எங்கள் வக்கீல் கெட்டிக்காரர்” என்று சொல்வார்கள்.
குற்றவாளி ஆக்குவதில் முதன்மையாக வந்து விடுகின்றான்.
1.இவர் செய்யக்கூடிய தப்பை வக்கீல் ஏற்றுக் கொண்டு அவர் குற்றவாளியாக ஆக வேண்டும்.
2.இவர் குற்றத்தைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலைகளில் வாதிடுகின்றார்.
இன்றைய கல்வியின் ஞானங்கள் வரப்படும் பொழுது இதுதான் வருகின்றது. இந்த விஞ்ஞான அறிவால் மனிதனால் கற்றுணர்ந்த நிலைகள்.
ஆனால் மெய்ஞானியின் உணர்வுகளை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு சமயமும் நமக்குச் சரியான பாதையை அது காட்டும். ஏனென்றால் இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்,
1.இயற்கை உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றது…?
2.அந்த உணர்வின் ஆற்றல் மனிதனை எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையை மெய் ஞானிகள் அறிந்து காலத்தால்
3.சந்தர்ப்பத்தால் இணைந்த அந்த நிலைகளை இதை எவ்வாறு முறியடிப்பது…? என்று செயலாக்கியவர்கள்.
4.மெய் ஞானிகள் யாரையும் குற்றவாளி ஆக்குவதில்லை. (ஆனால் இண்றைய கல்வியறிவு மற்றவர்களைக் குற்றவாளியாக்கும்)
சந்தர்ப்பத்தால் தான் குற்றங்கள் ஏற்படுகின்றது. அதை மாற்றும் வழிக்குத் தான் மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குத் தொடர்ந்து போதித்துக் கொண்ட வருகின்றேன் (ஞானகுரு).

நம் நிலையில் ஒரு நிலைப்பட்டுவிட்டால் எத்தீய தன்மைகளும் நம்மை வந்து தாக்காது
ஏவல், குட்டிச்சாத்தான், மையிட்டு மந்திரம் செய்து பிறரை வசப்படுத்தி நம் ஆத்மாவை நாம் இந்நிலையிலிருந்து செயல்படா வண்ணம் நம்மைக் காத்திடும் நிலையை அறிந்து வாழ்ந்திடல் வேண்டும்.
அழியாச் சக்தியுள்ள நம் சக்தியை
1.நம்முள் ஊன்றியுள்ள நம் சக்தியை பல எண்ணங்களின் நிலையிலிருந்து காத்திடல் வேண்டும்.
2.சோதனை கொண்ட காலங்களில் சோர்வு நிலை கொண்டு முடங்கிடல் ஆகாது.
3.ஏவல்களின் தன்மை எல்லாம் சோர்ந்தவர்களை அதிவிரைவில் அண்டிக் கொள்ளும்.
இத்துர் ஆவிகள் நடமாட்டத்தைப் பல மிருக ஜெந்துக்கள் எப்படி உணர்கின்றன…?
ஏவலும் சூனியமும் மிருக ஜெந்திற்குச் செயல் கொள்ளாது. அதன் உடலிலேயே உணரும் தன்மை கலந்துள்ளது. இச்சுவாச சக்தி நாய்க்கு அதிகம். புலிக்குத் தன் பார்வையிலேயே கண்டிடும் சக்தி உண்டு.
இவ் ஏவலின் நடமாட்டம் உள்ள இடங்களை எல்லாம்… இவற்றை அறியும் தன்மை கொண்ட மிருகங்கள் உணர்ந்துவிடும்.
முந்தைய காலங்களில் வீடுகளில் நாய், பூனை இவற்றைத் திருடர்களிடமிருந்து காப்பதற்காக மட்டும் வளர்க்கவில்லை….
1.துர் ஆவிகளிடமிருந்து அவற்றின் ஏவல் இல்லங்களில் உட்சென்று செயல்படாமல் காக்கவும் இம் மிருகங்களை வளர்த்தனர்.
2.ஏவல்காரனையும் குட்டிச்சாத்தான் செயல் உடையவனையும் கண்டால் இந்நாய், நரி, பூனைகள் குரைத்துச் சப்தமிட்டு உணர்த்திவிடும்.
அக்கால இல்லங்களில் இல்லத்தின் முன் வாயிலுக்கு மேல் “நிலைக் கண்ணாடியைப் பதித்திருப்பார்கள்…” நாம் சாதாரண நிலையில் இருக்கும் நிலையில்… நம் கண்ணிற்குத் துர் ஆவிகளின் நடமாட்டம் தெரிந்திடாது.
நிலைக் கண்ணாடியில் தெரியும் நிலை என்ன…?
நிலைக் கண்ணாடியில் பூசி உள்ள அவ்வமில சக்தி இத் துர் ஆவிகளின் சக்திக்கு எதிர்கொண்டது. நாயின் உடலில் உள்ள அமில சக்திக்கும் நிலைக் கண்ணாடியில் உள்ள அமிலத்திற்கும் தொடர்பு உண்டு.
இத்துர் ஆவியின் நிலையைப் பலர் காண்கின்றனர். பேயின் நடமாட்டத்தைக் கண்டேன் என்பவர் பலர். பேயல்ல… குட்டிச்சாத்தானின் உருவ நிலை அது.
சிலருக்கு மட்டும் புலப்படும் நிலை என்ன…?
ஒவ்வோர் உடலுக்கும் அவரவர்களின் அமிலத்தன்மை ஒன்று உண்டு என்று உணர்த்தினேன் அல்லவா…? இவற்றைக் காணும் அமிலத்தன்மை கூடியவர்கள் உடல் இந்நிலையை அறியலாம்.
சிலரின் நிலையில் அவர்களின் உடலில் உள்ள அமிலத் தன்மையே அபூர்வத் தன்மையில் இயற்கையிலேயே கூடிப் பிறந்திருப்பர்.
எண்ணத்தில் ஞானசக்தி நிறைவு கொண்ட அபூர்வப் பிறவி எடுத்தவர் பலர் உள்ளனரே. அவர்களுக்கு இயற்கையின் அமிலமே தன்னுள் கூடி பிறவி எடுத்து பிறந்து வளர்பவர்கள்.
பல பிறவியில் சேமித்த அமிலத்தின் கூட்டு நிலையினால் பல ஞானிகள் மற்ற ஏவலின் சக்தி இல்லாமல் வாழ்கின்றனர்.
1.நம்முள் உள்ள நிலையையே நாம் நல் நிலையில் வளரும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்
2.நமக்காக ஏவாமல் பிறருக்காகச் செய்த மந்திர நிலையும் தாக்கும் நிலையும் நமக்கு உண்டு.
3.இருந்தாலும்… நம் நிலையில் ஒரு நிலைப்பட்டுவிட்டால் எத்தீய தன்மைகளும் நம்மை வந்து தாக்காது.

தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வை வளர்ப்பதற்குத் தான் “சாஸ்திரங்களை உருவாக்கினார்கள் ஞானிகள்”
மனித வாழ்க்கையில் நாம் நுகரும் ஒவ்வொரு உணர்வுகளையும் சித்திரை (சிறு திரை) மறைத்துக் கொள்கின்றது. புது வருடத்தில் (வெளிச்சத்தை மறைக்கும் இருளைப் பிளந்து ஆறாவது அறிவின் துணை கொண்டு இருளைப் போக்கிப் பொருள் காண வேண்டும் என்பது
புது வருடம் தமிழ் வருடப் பிறப்பு என்று சொல்வார்கள். ஒவ்வொரு மாதத்திலும் விசேஷத்தை வைத்ததின் நோக்கங்கள் 12 ராசி என்றும் வைப்பார்கள்.
1.இந்தப் 12 மாதத்திலும் ஒவ்வொரு உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது…?
2.ராசியின் தன்மை எவ்வாறு விளைய வேண்டும் என்று நான் 12 மாதத்திலும் 12 ராசிகள் என்று சொல்வார்கள்.
ஒவ்வொரு மாதத்திலும் நாம் எதை எதைச் செய்ய வேண்டும்…? என்ற நிலையில் சித்திரை பிறக்கும் பொழுது நாம் எதைச் செய்ய வேண்டும்…? என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.
வருடம் பிறந்து விட்டது… நமது வாழ்க்கையில் பிறர் செய்யும் தவறைக் கண்டுனர்ந்தாலும் அச்சித்திரையை…
1.உத்தராயணம் என்ற இந்த ஒளி கொண்டு இருளைப் போக்கிப் பொருள் கண்டு
2.புது வருடம் நாம் நடக்க வேண்டும் என்பதற்குத்தான் வரிசைப்படுத்தி நமக்குத் தத்துவத்தைக் கொடுத்தார்கள் மாதங்களையும் அமைத்தார்கள்.
ஆனால் அதை எல்லாம் யாரும் நமக்கு விளக்கமாகச் சொல்வதற்கு இன்று இல்லை. யாம் இப்பொழுது இதைச் சொன்னால் “புதிதாக ஏதோ சொல்கிறார்…” என்று எம்மைச் சொல்கின்றார்கள்.
ஏனென்றால் இன்று ஒவ்வொரு மாதத்திலும் இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் என்று எத்தனையோ ஐதீகங்களையும் சாங்கியங்களையும் தான் நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.
காரணம்… காலத்தால் இந்த உண்மைகள் மறைந்து விட்டது… மறைத்து விட்டார்கள்.
சித்திரை – ஒரு கனி விளைந்த பின் அது எப்படித் தன் வித்தாக ஆகின்றதோ இதைப் போன்று
1.பல கோடி உணர்வின் தன்மை தனக்குள் கனியாகும் பொழுது
2.அதனின் வித்து ஒவ்வொன்றும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வாக விளைந்தது.
இதைப்போல்
1.ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வே விளைந்தது
2.அந்த விளைந்த நிலைகள் கொண்டு உயிரான நிலைகள் மனிதனின் நிலைகள் வரும் பொழுது கனியாகின்றது.
ஒரு மாங்கனி தன் இனத்தின் வித்தை அது உருவாக்கிக் கொள்கிறது. இதைப் போல் தான் உயிரான நிலைகள் கொண்டு பல கோடி உணவை உணவாக உட்கொண்டாலும்… அவை அனைத்திலும் ஒருக்கிணைந்து “ஒவ்வொன்றும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வாக வந்த… இந்த ஒளியின் சுடராக ஆறாவது அறிவின் தன்மை கொண்டு விளைந்த நிலைகள் “கார்த்திகேயா…”
அதனின் உணர்வு கொண்டு மனித வாழ்க்கையில் வரும் சித்திரையை (குறைகளை) புது வருடம் நீக்க வேண்டும்
1.இருளை நீக்கி மறைந்த பொருளைக் காண வேண்டும்…
2.எவ்வாறு தீமையிலிருந்து மீள வேண்டும்…?
3.எவ்வாறு ஒளியாக மாற வேண்டும்…? என்ற தத்துவத்தைத் தான் மெய் ஞானிகள் நமக்குத் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனைப் பற்றி இங்கே உபதேசிக்கும் பொழுது… அவன் கண்ட உணர்வுகளை நீங்கள் நுகர நுகர… அந்த அணுக்கருக்களாகப் படிப்படியாக உங்கள் உடலுக்குள் மாற்றம் ஆகும்.
அதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த உணர்வின் சத்தாக உங்களுக்குள் மாறி அதன் வழி கொண்டு தீமைகளை அகற்றிடும் அணுக்கள் பெருகும்.
அத்தகைய அணுக்கள் பெருகினால்…
1.பிறவியில்லா நிலை அடைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்தியரிடம் அழைத்துச் செல்லும்
2,அடுத்து நாம் பிறவியில்லா நிலையை அடையலாம்.
உதாரணமாக ஒரு நண்பர் வேதனைப்படுவதை நாம் பார்க்கின்றோம். அந்த வேதனையை அதிகமாக நாம் நேசித்து விட்டால் அவரின் உனர்வு நமக்குள் விளையத் தொடங்குகிரது.
ஆனால் நண்பர் உடலில் வேதனை அணுக்கள் பெருகி வளர்ந்த நிலையில் நோயை விளைய வைத்த அந்த உயிரான்மா வெளி வந்துவிடுகிறது.
வெளி வந்தபின் நம் உடலில் புகுந்து விடும். ஏனென்றால் அவருடைய உணர்வு நம் உடல் வலிமையாக இருக்கும் பொழுது நமக்குள் வந்துவிடுகின்றது
உதாரணமாக ஒரு ஆடு நரியைப் பார்த்து அதனுடைய வேக உணர்வைக் கண்டு அஞ்சி… அதையே சுவாசித்தது என்றால் நரியின் உணர்வை ஆடு நுகர… நுகர… அந்த நரியின் வலுவான உணர்வு ஆட்டின் உடலுக்குள் வந்த பின் நோயாக மாறுகின்றது.
பின் நரியை எண்ணி எண்ணி இந்த உடலின் தன்மை வலுப் பெற்று விட்டால் ஆடு மடிந்த பின் உடலை விட்டு வெளி வரும் ஆட்டின் உயிரான்மா நரியின் உடலுக்குள் சென்று பரிணாம வளர்ச்சியில் நரியாக விளைகின்றது.
இப்படித் தான் நாம் பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களைப் பெற்று மனிதனாக இன்று வந்துள்ளோம். ஆனால் நோயுற்றவரின் உணர்வுகளை நமக்குள் அதிகமாகப் பெருக்கிய பின் அதே நோயின் தன்மை நமக்குள்ளும் வளர்கிறது.
நோயினால்…
1.நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களின் வளர்ச்சி குன்றி… விஷத்தின் தன்மை அதிகமாகப் பெருகி
2.எந்த மனிதன் பாசத்துடன் நம்மை அதிகமாக நேசித்தானோ
3.நாம் இறந்தபின் அந்த உடலுக்குள் தான் செல்வோம்… நம் இருப்பிடம் அதுதான்.
ஆனால் இந்த மனிதனின் வாழ்க்கையில் முழுமை பெற்ற ஞானிகளும் மகரிஷிகளும் பிறவியில்லா நிலையை அடைந்து அகண்ட அண்டத்தில் இன்றும் ஒளியின் சுடராக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
1.இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை என்று முடிவடைந்த அந்த உயிர்கள்
2.அகண்ட அண்டத்தில் எங்கே… எது… உருவானாலும்
3.அதனின் உணர்வை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளனர்.
3.இப்படி ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஒளியாக ஆனவர்கள் உண்டு.
நம் சூரியக் குடும்பம் மட்டும் இந்த அண்டத்தில் வாழவில்லை. எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்கள் உண்டு ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் நம் பூமியைப் போன்று ஒரு பூமி உண்டு.
அதிலே வடித்த உணர்வுகள்… அதிலே உருவான உயிர்களுக்கு ஒளியாக மாறும் ஆற்றலும் உண்டு, அத்தகைய நிலையை நாமும் பெறுவதற்குத் தான் இந்த உபதேசம்.


உத்தராயணம்
உயிரணுவாகத் தோன்றிய பின்… ஒரு உணர்வின் சத்து உயிருடன் ஒன்றிச் சிவம் ஆகின்றது. இவ்வாறு பல கோடித் தாவர இனங்களை உணவாக உட்கொள்கின்றது.
பல கோடித் தாவர இனங்களை உணவாக உட்கொண்டது… இருந்தாலும் அதனுடைய தசைகளை மற்றொன்று கொன்று புசிக்கிறது. அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் உணர்வின் தன்மை வருகின்றது.
1.தன்னைத் தெளிந்து கொள்ளும்… தன்னைக் காத்திடும் உணர்வின் அறிவின் தன்மை அதற்குள் வந்து
2.இவ்வாறு தான் ஒவ்வொரு உடலிலும் இணைத்து இணைத்து
3.நமது உயிர் மனிதனாக நம்மை உருவாக்கியது என்ற நிலைகளில் மகா சிவன் ராத்திரி…!
உடலில் இருந்து வரக்கூடியதை ஆறாவது அறிவின் தன்மை ஒன்றிலிருந்து ஒன்றை மீட்டிடும் நிலைகள் கொண்டு அறிந்திடும் ஆற்றல் பெற்றது கார்த்திகேயா.
ஒரு வெளிச்சத்தைப் போட்ட பின் அங்கிருக்கக்கூடிய பொருள்கள் தெரிகின்றது ஆறாவது அறிவின் தன்மை கொண்டு இருளைப் போக்கிப் பொருள் காணும் நிலைகள் வரும் பொழுது “கார்த்திகேயா” என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள்.
1.முதலிலே வரக்கூடியது அனைத்தும் தட்சிணாயணம்
2.இந்த உடலின் நிலைகளிலிருந்து அறியும் ஆற்றல் வரப்படும் பொழுது மகா சிவன் ராத்திரி என்றும்
3.பங்குனி மாதம் வரப்படும் பொழுது உத்தராயணம்.
4.இதற்கு முன் மாசி மாதம் வரையிலும் தட்சிணாயணம் நடக்கின்றது… உடலுக்குள் இருள்
5.ஆறாவது அறிவு கொண்டு தட்சிணாயணம் திசை மாறி வெளிச்சம் அதிகமாகின்றது – அது உத்தராயணம்
அறிவின் ஆற்றல் அறிந்திடும் உணர்வு கொண்டு ஆறாவது அறிவால் உத்தராயணம் தேரை வைத்து இழுப்பார்கள்… பல ஆயிரம் பேர் சேர்ந்து முருகனை வலம் வரும்படி செய்வார்கள்.
நாம் அனைவரும் எண்ணி
1.இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்
2.உத்தராயணம் இன்னொரு பிறவிக்கு வந்து விடக்கூடாது என்ற நிலைகளும்
3.எதை எடுத்தாலும் உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளியாக அவனுடன் இணைய வேண்டும் மாற வேண்டும் என்பதற்குத்தான்
4.நமது சாஸ்திர விதிகள் இப்படிக் காட்டுகின்றது.
பங்குனி உத்திரம் அன்று உத்தராயணம் என்ற நிலைகளை வைத்து ஆறாவது அறிவை வளர்த்துப் “பிறவா நிலை பெறும்” வழியைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூடநம்பிக்கையின் வித்தே “சூனியக்காரர்களினால் வந்த நிலை தான்”
குருவி ஜோதிடம், எலி, அணில் இப்படிப் பல நிலைகளைச் செப்புவது எந்நிலை கொண்டு…? என்பதனை விளக்கிடுவேன்.
இவை எல்லாமே கரு வித்தையின் செயல்தான்.
அப்பிராணிகளின் உடலில் (மந்திரவாதிகள்) கருவின் மையை ஏற்றி விடுவார்கள். அந்நிலையில் இவர்கள் சொல்லும் பெயர் நாமத்தைக் கேட்டு, இப்பிராணிகளை வைத்து ஜோதிடம் செப்பிடும் நிலையில் உள்ளவர்களுக்கு, அவரின் பழக்கப்பட்ட பரிபாஷைகள் இப்பிராணிகளுக்குத் தெரிந்திடும்.
இப்பிராணியின் உடலில் உள்ள இக்குட்டிச்சாத்தான் தான்… நாமகரணத்திற்குகந்த செயல் கொண்ட எந்நிலை பெற்ற குண நிலைக்குகந்த ஏடுகளை ஓதிட வேண்டுமோ அதனையே சரியாக எடுத்துத் தரும் இவர்கள் மனநிலைக்குகந்த சொல்வாக்கே அதிலும் காணப்படும்.
அவ்வெண்ணமுடனே இவர்கள் செயல்பட்டால் அதன் தொடர்ச்சி நிலையில்தான் அவர்களின் வாழ்க்கை நிலையும் இருந்திடும்.
1.இவ்வுலகினில் பல பாகங்களில் இச்சூனிய வேலை நடக்கின்றது
2.பிறரைத் தன் வசியப்படுத்தவே இக்கரு வித்தை வேலையெல்லாம் செய்யப்படுகின்றன.
3.ஆவியின் தொடர்புபடுத்தி தன் உடலிலேயே பல ஆவிகளை துர் ஆவிகளை ஏற்றுக் கொண்டு அதனை ஏவிச் சூனியம் செய்வார்கள்.
சூனியத்திற்கு அடிமைப்பட்டவன் அச்சூனியத்தினால் தான் அவனுடைய ஆத்மாவும் பிரியும்.
1.பிற இடத்தில் ஜெபம் செய்து பல பொருட்களை வைத்து விட்டு
2.இக்குட்டிச்சாத்தானின் தொடர்புடைய நாமத்தை இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜெபித்தால்
3.அவ்வாவியான குட்டிச்சாத்தானே அப்பொருளை இவர்கள் “வா…” என்றவுடன்
4.இவர்களின் கையில் அப்பொருள் கிடைக்கும் நிலையில் அக்குட்டிச்சாத்தான் செய்து தரும்.
5.இவர்கள் வைத்த பொருள் தான் அங்கிருந்து வருமே ஒழிய
6.ஆகாயத்தில் இருந்து ஆண்டவனால் செய்விக்கப் பெற்ற உருவச் சிலையோ விபூதியோ, புஷ்பமோ எவையுமே
7.இவர்களிடத்திற்கு மாறுபட்டு வராது.
இந்நிலையில் உள்ள எச்சாமியார்கள் ஆகட்டும் மந்திரவாதிகள் ஆகட்டும் அவர்கள் தன் புகழ் உயர தன் நாமத்தினால் பொருள் ஈட்டி இச்செயலையெல்லாம் செய்வித்து… மக்களை மட்டும் அவர்கள் ஏமாற்றவில்லை, “தன் ஆத்மாவையே… தானே ஏமாற்றி வாழ்கின்றார்கள்…”
சொந்தமில்லா இவ்வுடலின் வாழ்க்கை எத்தனை நாட்களுக்குச் சொந்தம்…?
இருக்கும் ஒரே சொந்தம் நம் ஆத்ம சக்தியை இயற்கை என்னும் சொந்தமுடன் சொந்தமாக்கி, நம் ஆத்மாண்டவனை நல்வழியில் செயலாக்குவதை விட்டு சாமியார்கள் என்ற நாமத்தில் ஏன் ஆண்டவனின் நாமத்தையே அடிமைப்படுத்திடல் வேண்டும்…?
இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூடநம்பிக்கையின் வித்தே இச்சூனியக்காரர்களினால் வந்த நிலை தான். நம் பூமியில் நாம் வாழும் இக் கண்டத்தில் நம்மை அறியாமலே நம்மில் பலர் இதற்கு அடிமை கொண்டு வாழ்கின்றனர்.
நமக்கும் மேல் சீனாவிலும் ஜப்பானிலும் இன்னும் சில ஆப்பிரிக்கக் கண்டங்களிலும் அரேபிய நாடுகளிலும் இந்நிலை அதிகம். ஒவ்வோர் இடத்திலும் வாழும் மனிதர்களின் எண்ண நிலைக்கொப்ப அங்கு வாழும் கருவித்தை வேலைகளும் நடக்கின்றன.
1.நம் பூமியில் இவ் இந்திய தேசத்தில்தான் பல ரிஷிகள் சப்தரிஷி பெறும் நிலையெய்திட வாழ்ந்த பூமி இது
2.அவர்களின் எண்ண ஓட்டமும் (சப்த அலைகள்) அவர்கள் விட்ட சுவாசத்தின் சப்த அலையையும் தாங்கி வாழும் நிலைதான் இப்பூமியின் நிலை.
இக் கரு வித்தையின் குட்டிச்சாத்தான் ஏவலில் உள்ளவர்கள் இதை உணர்ந்து நல் ஆத்மாவாய் இப்பொருள் என்னும் பேய்க்கு அடிமைப்படாமல் வாழ்ந்திட வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்றைய விஞ்ஞான உலகம் மிகவும் விஷத்தன்மையாகச் சென்று கொண்டிருக்கின்றது. எவ்வளவுதான் சம்பாதித்து வைத்து இருந்தாலும் கூட… அதை என் பணம் என்று உறுதியாகச் சொல்வதற்கு முடியவில்லை.
1.ஏதோ ஒரு வகையில் வலு கொண்டவன்
2.நம் பணத்தைத் தட்டிப் பறிக்கும் நிலையில் தான் உலகமே இன்று உள்ளது.
ஓரளவுக்கு பணம் வசதியாக இருப்பவர்கள் வசதி இல்லாதவர்களை ஏமாற்றிக் கொஞ்சம் தள்ளி விட்டு விடுவார்கள். ஏதாவது ரொம்பவும் மீறி விட்டால் அடுத்து சண்டைக்குச் செல்கின்றார்கள். இன்னும் கொஞ்சம் சிக்கலாகின்றது.
உன்னால் என்ன செய்ய முடியும்…? என்று கடைசியில் கோர்ட்டுக்குச் செல்கின்றார்கள். அங்கே சென்றால் வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் பண வசதி உள்ளவர்கள் காசைக் கொடுப்பார்கள்.
1.காசு தான் அங்கே வேலை செய்யும்… நீதி இப்படித்தான் இருக்கின்றது
2.வலு இருக்கும் பக்கம் தான் அந்த நீதி செல்லுபடியாகும்.
3.இல்லாதவர்கள் வேதனைப்படத்தான் செய்வார்கள்.
வசதியும் அதிகாரமும் உள்ளவர்கள் மற்றவரை அடித்துப் பறிக்கும் அந்த ராட்சஸ உணர்வாகத் தான் செயல்படுகிறது. அவர்களுக்கே அது சாதகமாகப் போய்ச் சேருகின்றது.
பொருளை இழந்தவர்களோ…
1.இப்படிச் செய்கின்றார்களே… இப்படி ஆகிவிட்டதே…! என்று எண்ணப்படும் பொழுது
2.அதே ராட்சஸ உணர்வு அவர்களை அழித்துவிட வேண்டும் என்று கூறுகின்றது.
கடைசியில் எல்லை கடந்தது என்றால் உன்னைச் சுட்டுப் பொசுக்கி விடுவேன்…! என்று வருகின்றது.
நீ வா…! நானும் உன்னை இரண்டில் ஒன்று பார்க்கிறேன்…! என்று இந்த அசுர குணங்கள் தான் ஓங்குகிறது. அழித்துவிடும் நிலையே வருகின்றது.
1.இந்த உணர்வுகள் உடலிலே விளைந்ததும் ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்… என்று
2.”அழிக்க வேண்டும்” என்ற உணர்வுகள் இருவருக்குமே மாற்றி விடுகின்றது.
இதையெல்லாம் அன்றே ஞானிகள் மிகவும் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.
காரணம்… யாரும் தவறு செய்யவில்லை… தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை. சந்தர்ப்பத்தில் நுகர்ந்த உணர்வுகள் இத்தகைய தீமையின் விளைவுக்குக் கொண்டு செல்கிறது.
இதையெல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா. அந்தத் தீமையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இந்தத் தியானம் அவசியம் தேவைப்படுகிறது.
1.இந்த மனித உடலை வைத்துத் தான் அந்த மெய் ஒளியை நாம் பெற முடியும்.
2.அந்த மெய் வழியைப் பெறுவதற்குத் தான் மகரிஷிகளும் ஞானிகளும் எத்தனையோ முயற்சி செய்தார்கள்.
அந்த அருள் சக்திகளை நீங்கள் எண்ணி எடுத்தீர்கள் என்றால் இந்த வாழ்க்கைக்குத் தேவையான செல்வமும் ஓரளவுக்கு நமக்கு வந்து சேரும். மனமும் அமைதி பெறும்… குடும்பமும் நலமாக இருக்கும்.
நோயோ துன்பமோ வந்தால் அந்தத் துன்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்…
1.அது பாட்டுக்கு வரும் போகும்…
2.அது வந்து விட்டது என்றால் அது பாட்டுக்குப் போகும்
3.நாம் அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும்
4.என் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்
5.எனக்குள் அந்த அழுக்கு சேராத நிலையில் நிற்க வேண்டும்.
6.என் சொல்லைக் கேட்பவர்களுக்கு அந்த இனிமையான நிலை வரவேண்டும்
7.என் பார்வை அனைவருக்கும் நல்லதாக இருக்க வேண்டும்
8.இந்த சக்தி எனக்குள் விளைந்து கொண்டே இருக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று
9.உங்கள் உயிரிடம் சொல்லி முறையிடுங்கள்.
10.அவன் அதைப் பதிவு செய்து அதையே இயக்குவான்.
எப்படி ஒரு செடி அதனுடைய சத்தைச் சேர்க்கின்றதோ… அதை இழுத்து வளர்க்கிறதோ… அதைப் போன்று இந்த மனித வாழ்க்கையில் நாம் இருந்தாலும் அந்த ஞானிகளை எண்ணி நம் ஆன்மாவை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.
இந்த மாதிரியே எண்ணிக் கொண்டிருந்தால்
1.மகரிஷிகளின் அருள் சக்திகள் நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா உணர்வுகளிலும் விளையும்.
2.உடலை விட்டுச் சென்றால் அந்தச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் செல்கின்றோம்.


மகரிஷிகளை… “எண்ணத்தால்” நாம் எண்ணி எடுக்க வேண்டிய சரியான முறை
இயற்கையின் உண்மை நிலைகளை எல்லாம் உணர்த்தியது யார்…? அந்த மகரிஷிகள் தான். அவர்கள் அறிந்துணர்ந்த அறிவின் ஆற்றலை அவரில் விளைந்ததை தங்களுக்குள் உருவாக்கி அதை வெளிப்படுத்துகின்றார்கள் இந்த உண்மைகளை.
அவருக்குள் விளைந்த உணர்வின் எண்ண அலைகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நம் பூமியில் படர வைத்துள்ளது
1.எதையெல்லாம் அவர்கள் உணர்த்தினார்களோ
2.அந்த மகரிஷிகளை நாம் எண்ணி அவரிலிருந்து விளைந்த உணர்வை நுகர வேண்டும் என்றால்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று நம் உயிரிடம் வேண்டுதல் வேண்டும்.
ஏன் அவனிடம் வேண்ட வேண்டும்…? எப்படி வேண்ட வேண்டும்…?
கண்ணின் நினைவு கொண்டு அந்த சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தை நம் கண்ணிலே கொண்டு வருகின்றோம்.
1.முதலில் கண்ணிலே பார்த்து… பின் சொல்வதை எல்லாம் காதிலே கேட்டாலும்
2.நினைவை… கண்ணின் நினைவுக்குக் கொண்டு வருகின்றோம்… அப்போது அந்த உணர்வின் சக்தி நமக்குள் பதிவாகின்றது.
பதிவானதை மீண்டும் நாம் எண்ணி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உள்முகமாக நினைவினைச் செலுத்தி நம் உயிரிடம் வேண்டிடல் வேண்டும்.
உயிர் தான் ஈசன்… அவனை நாம் மதித்தல் வேண்டும். நாம் எண்ணியது எதுவோ அதை இயக்குகின்றான்
ஆகவே நாம் உயிரை “ஈஸ்வரா…!” என்று வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
1.கண்ணின் நினைவு கொண்டு இந்த நினைவினை உயிருடன் ஒன்ற வேண்டும் ஈஸ்வரா என்று…!
2.இப்படி இணைத்துப் பழகுதல் வேண்டும்.
உதாரணமாக மேக்னட் எந்த அளவிற்கு இருக்கின்றதோ அதற்குத் தகுந்த சுழற்சி ஆகும் பொழுது மோட்டார் ஓடுகின்றது ஆனால் மோட்டாருக்கு ஓடக்கூடிய கரண்டை வீட்டில் உபயோகிக்கும் ஃபேனுக்கு செலுத்தினோம் என்றால் ஃபேனில் உள்ள காயில் எரிந்து விடும். இதைப் போல
1.மிக சக்தி வாய்ந்த அந்த மகரிஷிகளை நாம் எண்ணத்தால் எண்ணி எடுக்க வேண்டும் என்றால்
2.அதற்குத் தகுந்த காந்த புலனறிவு தேவை… ஈர்க்கும் சக்தி,
அப்பொழுது… முதலிலே நாம் எதைப் பதிவு செய்து உள்ளடக்கமாக வைத்திருக்கின்றோமோ அதனை நினைவு கொண்டு வந்து உயிருடன் ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று
1.நினைவினை அவனிடம் ஒன்றி… அவன் மூலமாக நாம் அறிய வேண்டும்.
2.அப்படி நாம் எடுக்கப்படும் பொழுது இந்த உணர்வின் இயக்கங்கள் வேகமாக இயக்கப்பட்டு
3.நம் உடலுக்குள் மீண்டும் அது சுழல்கின்றது.
உடலுக்குள் செலுத்திய பின் என்ன நடக்கிறது…?
தங்கத்தில் இரண்டறக் கலந்த செம்பு வெள்ளி இவைகளைப் பிரிக்க திரவகத்தை ஊற்றினால் எவ்வாறு அதைப் பிரித்து விடுகின்றதோ இதைப் போல நமது வாழ்க்கையில் தீமைகளைக் கண்டு உணர்ந்தாலும் அந்த ஞானியின் உணர்வின் தன்மையை நாம் எண்ணும் பொழுது உடலுக்குள் சென்று நம் நல்ல எண்ணங்களில் கலந்த அந்தத் தீமைகளை அகற்றுகின்றது.
ஆகவே… எந்தக் கோவிலுக்குச் சென்று வணங்கினாலும் இதை முறைப்படி நீங்கள் எண்ணினால்தான் நல்லது நடக்கும்.
இந்த உண்மையை உணர்த்திய அந்த மகரிஷிகள் “அவர்கள் யார்…?” என்று தெரியவில்லை என்றாலும் மகரிஷிகள் என்பவர்கள் சிருஷ்டிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் தங்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள். அவர்கள் அறிந்தது தான் இந்த உண்மைகள்.
அதை எண்ணாமல் எந்த ஆலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்தாலும் நல்லதாகும் நிலைகள் இல்லை.
அங்கிருக்கக்கூடிய பூசாரியோ அல்லது வழிகாட்டுவர்கள் யாரோ அவர்களை எண்ணினால் “அந்த மந்திரம் தான்” நினைவுக்கு வரும்.
கோவிலில் யாகம் செய்து இன்னார் சக்தி ஏற்றுகிறார் என்று அவர்களை எண்ணினால்
1.அவர்கள் என்னென்ன மந்திரம் செய்து பதிவு செய்து வைத்திருக்கின்றார்களோ
2.அந்த மந்திரங்களைக் கேட்டு யார் யாரெல்லாம் இறந்தார்களோ
3.அந்த மந்திர உணர்வு கொண்டு அதை மீண்டும் எண்ணப்படும் பொழுது
4.அந்த மந்திரத்தை அதிகமாக ஜெபித்தவரின் உயிரான்மா தான் இங்கே (நமக்குள்) வரும்.
5.பின் அவருடைய ஆசை எதுவோ அதைத்தான் நமக்குள் இயக்கும்
இதெல்லாம் இயற்கையின் உண்மை நிலைகள். இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே
1.இயற்கையின் உண்மைகளை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
2.தெய்வீக நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்.
அதற்குத் தான் இவ்வளவு விளக்கமாக உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகிறேன் (ஞானகுரு).

மாரியம்மனோ காளியம்மனோ “எனக்கு ஆடு கொடு…!” என்று கேட்கிறதா…?
இவ்வுலகினில் பில்லி, சூனியம், ஏவல், மையிடுதல், கருவித்தை இப்படிப் பல நிலைகள் உள்ளன. இவற்றில் இருந்து நம் நிலை மீளும் நிலையை அறிந்திடல் வேண்டும்.
பல காலமாய் சூனியம் செய்தவர்களின் நிலையையும் மற்றத் தீய சக்தியின் செயலைத் தன் பிழைப்பிற்காக ஏவியதின் நிலையையும் வரும் பாடங்களில் உணர்த்திடுவேன்.
மலைப் பிரதேசங்களில் வாழ்ந்திடும் மந்திரவாதிகள் பல மண்டை ஓடுகளை வைத்து பூஜிப்பர். அதுவும் அல்லாமல் அம் மண்டை ஓட்டின் சொந்தம் கொண்ட உடலின் நிலையிலிருந்து, மை எடுத்து அதனையும் இம்மண்டை ஓட்டையும் வைத்து, பூஜித்து இம்மையை யார் யாருக்கெல்லாம் தாயத்துகளாய்த் தருகின்றார்களோ அவர்களின் நிலையும் மந்திரவாதியின் நிலைக்கும் தொடர்பு பட்டு, சில நிலைகளை அறிந்திடத் தான் இவர்கள் பூஜையில் அம்மண்டை ஓட்டை வைப்பது.
இவர்கள் மை தயாரிப்பது எந்நிலையில்…?
மயானத்தில் அர்த்த ஜாமத்தில் சில உடல்களைk கூடியவரை கருச் சிசுக்களைத் தான் (இறந்த சிசுக்களை) இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். வளர்ந்து ஆசைப்பட்டு குடும்பப் பற்றுடன் நீத்தாரின் உடல்கள் இவர்கள் செயலுக்கு செயல்பட்டு வராது.
அவர்களின் ஆத்ம எண்ணமே தன் குடும்ப நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும். அதனால் தான் இக்கருவித்தை மந்திரவாதிகள் எல்லாரும் தாயின் கர்ப்பத்தில் தோன்றும் முதல் சிசுவை அது இறந்துவிட்டால் (தலைச்சன்) அதனுடைய உடலைப் புதைத்துச் சென்ற பிறகு அதைத் தோண்டி எடுத்து இவர்களின் செயலுக்காக அவ்வுடலை ஈடுபடுத்துகின்றனர்.
நம் மூதாதையர் காலத்தில் முதல் தலைச்சன் சிசுக் காலமானால் அதன் உடலை சிறிது பின்னப்படுத்தித் தான் அடக்கம் செய்வார்கள். பின்னப்படுத்திய அச்சிறு சதையை இவர்கள் தாயத்தாக்கி பூஜிப்பார்கள்.
அந்நிலையில் அச்சிசுவின் ஆவி இங்கு செயல் கொள்ளும் ஏவலின் நிலைக்கு ஒத்து வராது. இப் பின்னப்பட்ட இறந்த சிசுவை எடுத்துச் சென்று பெரிய மண் பானையில் அச் சிசுவின் உடலை இட்டு அப்பானைக்கும் கீழ் இரண்டொரு பானைகளை வைத்து பெரும் நெருப்பிட்டு எரியவிட்டு கீழ் எரியும் நிலையிலிருந்து மேல் பானைக்கு அவ்வுஷ்ணம் பட்டு அச்சிசுவின் உடலில் இருந்து கசியும் அதன் அமில நீர் சக்தி எல்லாம் எரிய எரிய வடிந்து இக்கீழ்ப் பானையில் மெழுகு போன்ற மை பதத்தில் ஒட்டிக் கொள்ளும்.
சிசுவை இட்டுள்ள பானைகளில் துவாரம் வைத்திருப்பார்கள். இச் சிசுவின் மைக்கு வேண்டிய அமில நீர் சக்தியெல்லாம் ஈர்த்த பிறகு அச் சிசுவின் சக்கை உடலை அதே நெருப்பிலிட்டு அதன் அவயவங்களையும் சேகரித்து அதன் அவயவத்தை வெந்த நிலையில் வைத்து மண்டை ஓடுகளுடன் அங்கங்களையும் சேர்த்துப் பூஜிப்பார்கள்.
இவ்வமில நீரில் அவ்வுடலின் வெந்த சாம்பலையும் சேர்த்து மை போல் மசிய வைத்து பூஜித்து இப் பில்லி, சூனியம், ஏவல், மையிடுதல் போன்ற நிலைக்கெல்லாம் இச் சிசுவின் நிலையை ஏவுவார்கள்.
இக்கருப்பு நிறம் கொண்ட இம் மையையே தன் நெற்றியில் இட்டுக் கொண்டும் தாயத்துகள் செய்து இம்மையை அதனில் வைத்து தன் உடலிலும் அணிந்து கொள்வார்கள்.
இவர்களின் பொருள் ஆசைக்குகந்த நிலைப்படுத்திட இக்குட்டி சாத்தானை ஏவுவார்கள். ஒவ்வொரு மந்திரவாதியும் ஒரு சிசுவில் இருந்து மட்டும் ஏன் தன் ஏவலைச் செயல்படுத்துவதில்லை. பல சிசுக்களையும் இந்நிலையில் செயல்படுத்துகின்றார்கள்.
இவர்கள் ஏவிய நிலைக்கெல்லாம் அக் குட்டிச்சாத்தான்கள் ஆவி உருவில் சென்று பல உண்மைகளை அறிந்து வரும்.
1.மாரியம்மாள், காளியம்மாள் என்று மனிதர்கள் மத்தியில் இச்சக்தியின் நாமத்தைச் செப்பியே பேய் ஓட்டுவதைப் போலவும்
2.மாரியாத்தா ஆடு கேட்கிறாள், கோழி, முட்டை கேட்கின்றாள் என்றெல்லாம் சொல்லி
3.இக்குட்டி சாத்தான்களின் ஆசைக்கு உகந்த உணவுகளைப் படைத்து இவர்களின் செயலை முடித்துக் கொள்கின்றனர்.
இவர்களிடமிருந்து நாம் ஒவ்வொருவரும் விலகி இருக்க வேண்டும்… விடுபடவும் வேண்டும்… நாம் சிக்கி விடக் கூடாது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உயிரை ஈசனாக வணங்குங்கள். உடலைச் சிவனாக மதியுங்கள். கண்ணைக் கண்ணனாக மதியுங்கள்.
காரணம்… நல்லது கெட்டதைக் கண்ணன் உணர்த்துகின்றான். அவன் காட்டிய நெறியின் படி கெட்டது என்று வரும் பொழுது புறப்பொருளை நீக்கும் வழிகள் கொண்டிருக்கின்றோம்.
ஆகவே
1.நம்மை அறியாது புகும் தீமைகளைப் புறப் பொருளை அகற்றுவது போன்று
2.அந்த மகரிஷியின் அருள் ஒளியால் துடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்… துடைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
உடலான சிவத்திற்குள் தீய குணங்கள் பட்டபின் நோயாக மாறுகின்றது. அதைத் துடைப்பதற்கு… சிவனுக்கு அந்தத் தீமைகள் வராத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.யாரோ உடல்…! என்று எண்ண வேண்டாம்
2.உங்களுடைய உடல் என்றும் எண்ண வேண்டாம்
3.நம் உயிரான நிலைகள் தான் இத்தனையும் படைத்திருக்கின்றான்
4.நமக்குள் செயலாற்றும் நிலைகள் கொண்டு அதை இயக்கும் சக்தியாக அதுவே இருக்கின்றது.
அதை உணர்ந்து இந்தப் பொறுப்பினை நீங்கள் எடுத்துக் கொண்டால் மனித வாழ்க்கையின் புனிதத் தன்மையை அடையலாம்.
1.தான் யார்… நான் யார்…? இந்தப் பிள்ளை யார்…? என்று பிள்ளையார் சுழி போட்டுக் காட்டிய நிலைகளை
2.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு எல்லாம் நாயகனாக மனித உடலைக் கொடுத்து
3.உடலில் இருக்கக்கூடிய கணங்களுக்கெல்லாம் ஈசனாக உயிரே இயக்குகின்றது என்ற நிலைகளை உணர்ந்து கொள்ளுங்கள்.
மூஷிகவாகனா…! எந்தெந்த குணங்களை நாம் சுவாசித்தோமோ இந்த உணர்வின் தன்மை கொண்டு அதே வாகனமாக அன்றைய செயலும் இன்றைய சரீரமாக வைத்திருக்கின்றது உயிரான ஈசன்.
கணங்களுக்கு அதிபதி கணபதி ஆகவும் அவனே இருக்கின்றான். நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அதை அதிபதியாக்கச் செய்து அதன் வழியே மற்றதை ஒடுக்கும் நிலைகளைக் கொண்டு வருகின்றது.
1.உயிரான ஈசனிடம் ஒன்றி ஒளியாகப் பெறுவோம்…
2.என்றும் நிலையாக இருக்கக்கூடிய அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டுமென்று
3.அதைப் பெறும் நிலையாகச் சபதம் எடுத்துக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையில்
1.எந்தத் துன்பங்கள் வந்தாலும் நோய்கள் வந்தாலும் அதை எல்லாம் நீக்க
2.மகரிஷிகளின் அருள் ஒளி சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நான் வெறும் வாக்காகச் சொல்லவில்லை… வெறும் சொல்லாகச் சொல்லவில்லை… அருமருந்தாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
நீங்கள் எண்ணி எடுத்து உங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். குருநாதர் எனக்கு இப்படித்தான் அருளினார். உங்களுக்கும் அதே உணர்வின் தன்மையைத் தான் பதிவு செய்கின்றேன்.
பதிவை மீண்டும் எண்ணி
1.வாழ்க்கையில் துன்பத்தைத் துடைக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவேன்
2.என்னை அறியாது வந்த இருளை நீக்குவேன்
3.மெய் ஒளியைக் காண்பேன்… மெய் வழி செல்வேன்
4.அந்த மகரிஷியின் அருள் ஒளி வட்டத்தில் என்றும் நிலையான அழியாத பெரு வீடு பெறுவேன்
5.பத்தாவது நிலையான ஒளி நிலை பெறுவேன் என்று
6.உங்கள் எண்ணத்தில் அதை எல்லாம் எடுத்து வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் நீங்கள் அதுவாக ஆகின்றீர்கள்.
அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) பிரார்த்திக்கிறேன்.


நம் உடல் உறுப்புகளுக்குச் சக்தி கொடுக்கும் சரியான முறை
அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அவர் வழியில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
2.அதனின்றி வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
இப்பொழுது கண்ணின் கருமணிகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அதை ஈர்க்கும் சக்தி பெறும் பொழுது “கருமணிகளில் கனமான உணர்வுகள்” வரும்.
இப்பொழுது உங்களுக்குள் புருவ மத்தியில் ஈசனாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும்
1.“உயிரை எண்ணி” அங்கே கண்ணின் நினைவினைச் செலுத்துங்கள்… கண்களை மூடுங்கள்.
2.உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
உயிர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈர்க்கும் பொழுது
1.உயிரின் இயக்கம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவைப் பெறும் போது உங்களில் ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் புருவ மத்தியில் மோதும் பொழுது உணர்ச்சிகள் அழுத்தமும் ஒளிக் கற்றைகளும் தெரிய வரும் “வெளிச்சமாக…”
இவ்வாறு ஏங்கித் தியானித்தால் நம் உடலில் தீமை விளைவிக்கும் அணுக்களுக்குத் தீய உணர்வுகள் உள் புகாது தடைப்படுத்துகின்றோம். உடலுக்குள் தீய உணர்வுகள் சென்று தீய அணுக்களாக வளராது தடுக்கின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து அதில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை இரத்தத்தில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
இப்பொழுது கண்களால் இந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் போது
1.இரத்தங்களில் உள்ள கருமுட்டைகளோ தீய அணுக்களோ எது இருப்பினும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும் பொழுது “நல்ல அணுக்களாக” மாறும் சக்தி பெறுகின்றது நம் இரத்தத்தில்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.கண்ணின் நினைவினை உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவரும்படி ஏங்கித் தியானியுங்கள்.
இப்பொழுது உடல் உறுப்புகளில் உள்ள அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரொளி பெறும் பொழுது உங்கள் உடல் முழுவதற்கும் “ஒரு புது நல்ல உணர்ச்சிகள் ஏற்படும்… இதை நீங்கள் உணரலாம்…”
1.உங்கள் உடல் உறுப்புகளில் உள்ள அணுக்களில்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் சந்தர்ப்பத்தை நீங்கள் இப்பொழுது உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள்
இவ்வாறு துருவ நட்சத்திரத்தின் உணர்வை இரத்தத்தின் வழி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில்… படிப்படியாக எல்லா உறுப்புகளிலும் தசை மண்டலம் தோல் மண்டலம் வரை பெறச் செய்யும்போது… அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான சக்தி காற்று மண்டலத்தில் படர்ந்துள்ளதைக் கவர்ந்து… “நம் ஆன்மா வலுப்பெறுவதற்கும் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெறுவதற்கும்” இது ஏதுவாக இருக்கும்.
காலையில் ஒரு ஆறு மணிக்குள் “ஒரு அரை மணி நேரமாவது” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலில் உள்ள அணுக்களுக்கு இந்தச் சக்தியைக் காலையில் எடுத்துப் பழகுங்கள்.
1.“அந்த வலுவின் துணை கொண்டு” அன்றாட வாழ்க்கையில் வரும் தீமைகளை நாம் போக்கிக் கொள்ள முடியும்
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றிக் கொள்ள முடியும்.
பிறவி இல்லா நிலையும் அடைய முடியும்.

எண்ணிலடங்கா இயற்கையின் பொக்கிஷ ஆதி மூலத்தை அறிந்திட ஆதி சக்தியின் சக்திக்குத் தான் முடியும்
ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்கிக் கொண்டு ஓடும் நிலையில் ஒவ்வொன்றிற்கும் அதற்குகந்த ஈர்ப்புத் தன்மையுடன் ஓடுகின்றது மண்டலங்கள்.
சூரியனை மையம் கொண்டு ஏழு பெரிய கோளங்கள் உள்ளன. இவ் ஏழின் ஈர்ப்பில் இவ் ஏழிற்கும் தாண்டிய நிலையில் இவ் ஏழிற்கும் சிறிய கோளங்கள் 48 மண்டலத்தில் சூரியனும் நாம் நம் பூமியைச் சேர்த்து ஏழு கோளமும் இவ் எட்டும் போக பாக்கி 40 கோளங்களும் இவ் ஏழின் ஈர்ப்புடன் சுழலுகின்றன.
ஒவ்வொன்றின் அமில சக்தியும் மாறு கொண்டுள்ளது. சூரியனை மையப்படுத்தி அதன் ஈர்ப்பின் வட்டத்துக்குள் வந்துள்ள மண்டலங்கள் தான் இந் நாற்பத்தி ஏழும்.
அவற்றிற்கு இச்சிறிய கோளங்களுக்கு நம் இன்றைய விஞ்ஞானிகள் நாமகரணம் சூட்டவில்லை. தெய்வீக அருள் நெறியில் சித்தர்களினால் உணரப் பெற்று அவர்கள் இட்ட நாமகரணங்கள் இவற்றுக்கு உண்டு.
ராகுவும் கேதுவும் சுக்கிரனும் சனியும் குருவும் இவர்கள் பிடியில் சிக்குண்ட மண்டலங்கள். மற்ற மண்டலங்களை நட்சத்திர மண்டலமாக்கி அதன் நாமகரணத்தைச் சூட்டினார்கள்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்…
1.நம் சித்தர்களால் இயற்றப்பட்ட எண்ணத்தில் பதிவு செய்த இக்கோளங்களின் நிலையே
2.பல நிலையில் உருமாறி வெளி உலகிற்குச் செப்பிடும் நிலையே அற்று விட்டது.
3.அக்காலத்தில் எழுத்து வடிவங்களோ கற்பாறையில் ஓலைகளில் உணர்த்தச் செய்யும் வழி முறையோ இல்லை.
சித்தர்களால் மனித ஆத்மாவுக்கு வளர்ச்சியூட்டி அவ்வளர்ச்சியின் தொடரில் இவ்வுலக மனித ஆத்மாக்கள் வளர்ந்த நிலையில் சிறுகச் சிறுகத்தான் இவ்வாத்மாக்களின் அறிவு வளர்ச்சியைப் பெருகச் செய்து அதன் வழித் தொடரில் எண்ணத்தைப் பதித்திடும் நிலை வந்தது.
அதற்குப் பிற்பட்ட பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தான் இப்பதிவு செய்யும் “எழுத்து நிலையே” உதயம் பெற்றுச் செயலாக்கிட முடிந்தது.
இந்நிலை வளர்வதற்குள் மனித ஆத்மாவின் அறிவு நிலை வளர்வதற்குள் மண்டலங்களின் வளர்ச்சி நிலை பெருகிவிட்டது.
1.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அன்றுணர்த்திய சித்தர்களின் சக்தி நிலைக்கும்
2.இன்றைய இயற்கையின் சக்தி நிலைக்குமே பெரும் மாற்றம் உள்ளது.
ஒவ்வொரு கோளமுமே அதன் ஈர்ப்பில் பல சக்திகளைச் சேர்த்துக் கொள்கின்றது. சில நாட்களில் சந்திர மண்டலத்திற்கு அருகாமையில் நட்சத்திர மண்டலங்களைக் காண்பீர்கள். ஒரு நாள் காணும் நிலை மற்றொரு நாளும் காண முடிந்திடாது.
அதன் ஈர்ப்பில் சிக்குண்டு அதன் செயலுடன் ஆவியான அமிலமாய்ச் செயல் கொண்டாலும் செயல் கொண்டிடும் இதன் ஓட்டத்தினால் இதன் வேக நிலை கொண்டு சந்திரனின் ஈர்ப்பில் சிக்காமலும் தப்பிவிடும்.
நம் பூமியே ஒவ்வொரு நாளும் பல நட்சத்திர மண்டலத்தைத் தன்னுள் ஈர்த்தே சுழன்று ஓடுகிறது.
1.சில நாட்களில் வானத்தில் எரி நட்சத்திரமாய் எரிந்து விழுவதைப் போல் காண்பீர்கள்.
2.சுழற்சியில் சிக்கி ஆவியான அமிலமாய் நம் பூமியின் ஈர்ப்பில் பல நட்சத்திர மண்டலங்கள் கலப்பதைப் போல்
3.ஒவ்வொரு மண்டலத்திலும் அதற்குகந்த அமில சக்தியுடைய மண்டலங்கள் கலக்கின்றன.
வளர்ச்சியும் பல கொள்கின்றன…! சில நாட்களில் வான மண்டலத்தில் நம் பார்வைக்கு மிக அதிகமான நட்சத்திர மண்டலங்கள் தெரிவதைக் காண்பீர்கள். சில நாட்களில்… “ஒன்றிரண்டு காண்பது கூட அரிதாக இருந்திடும்…”
இம்மண்டலங்களின் ஈர்ப்பிலும் நம் பூமி ஓடும் நிலையில் நாம் சந்திக்கும் நிலை கொண்டு நிகழ்பவைதான் இவையெல்லாம்.
எம்மண்டலமும் ஓரிடத்தில் இருந்து சுழல்வதில்லை.
1.ஓடிக்கொண்டே உள்ள நிலையில்
2.நம் பூமி காணும் நிலை கொண்டு தெரிபவை தான் இந் நட்சத்திர மண்டலங்கள் எல்லாம்.
நம் பூமி ஓடும் நிலையில் நம் பூமியின் ஈர்ப்புடனும் பூமியில் சிக்காமலும் நம் பூமியுடனே ஓடி வரும் நட்சத்திர மண்டலங்களும் பல உள்ளன. அங்கங்கு நம் பூமியின் ஓட்டத் துரித நிலையுடன் ஓட முடியாத குறுகிய ஓட்ட நிலை கொண்ட நட்சத்திர மண்டலங்களும் பல உள்ளன.
எண்ணிலடங்கா இயற்கையின் பொக்கிஷ ஆதி மூலத்தை அறிந்திட அவ்வாதி சக்தியின் சக்திக்குத் தானப்பா செயல் சக்தியுண்டு.
சக்தியின் செயல் வேண்டியே நாம் அறிந்தே “எழுத்தின் வடிவிற்கு வருவோம்…”
எழுத்தின் வடிவமைக்கும் அறிவு சக்தி வளர்ந்தே நம் ஆத்மாவின் சக்தியையே எச்சத்திக்கும் நம் சக்தியைச் செயல் ஆக்கிட முடியும் என்ற வளர்ப்பு எண்ணம் கொண்டு… நம் எண்ணத்தையே சகல சித்து நிலைகளை அறிந்திடும் பக்குவப்படுத்தியே நம் செயல் இருந்திட வேண்டும்.
1.நம் எண்ண சக்தியைச் செயலாக்கிட எந்நிலைக்கும் நம்மை அடிமைப்படுத்திடாமல்
2.இவ்வுலகில் இம்மனித ஆத்மாக்களினால் காலம் காலமாய் அடிமை கொண்ட ஜாதி வேறுபாட்டில் சிக்குண்டு இருந்திடாமலும்
3.ஆண்டவனை ரூபப்படுத்தி தான் வாழ பிறரை ஏமாற்றும் நிலையில் சிக்கிடாமலும்
4.எண்ணத்தையே சூதாக்கி பிறரை வஞ்சிக்கும் எண்ணக் கடலில் அமிழ்ந்திடாமலும்
5.நம் ஆத்ம பொக்கிஷத்தைப் பிற சூனிய நிலையில் மாட்டிக் கொள்ளாமலும் செயல் கொண்டு
6.எண்ணத்தையே ஜெபமாக்கித் தப்பும் வழியை நாம் அறிந்து வாழ்ந்திடல் வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
விஷ்ணு நரசிம்ம அவதாரமாக எடுத்து இரண்யனை மடி மீது வைத்து அவனைப் பிளந்தான் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்..
1.விஷ்ணு என்பது நம் உயிர்
2.மடி என்பது நம் இருதயம்
3.இரண்யன் என்பது தீமை செய்யும் உணர்வுகள்.
இருதய வாயிலில் இருக்கும் “மேக்னட்…” புறத்தால் ஒரு பொருளைப் பார்க்கப்படும் போது அவர்கள் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வலைகளை இழுத்து அலையாகக் குவிக்கும் இடம் அது.
அது தான் மடியாகின்றது.
இங்கே தேங்கி நிற்கும் நிலைகளில் கெட்டவரின் நினைவுகளை எடுத்து இங்கிருந்து மறுபடியும் சுவாசித்து உயிரிலே பட்ட பின் எதுவோ அது இயக்குகின்றது.
ஒரு நாடாவிலே எதைப் பதிவு செய்கின்றோமோ அதை மீண்டும் ஓட்டப்படும் போது அந்த நாடாவில் உள்ளதைத்தான் ரேடியோவோ மற்ற இயந்திரங்களோ பேசுகின்றது. ட்ரான்சிஸ்டர் அந்த அலைகளை எடுத்துக் கொடுக்கின்றது.
இதைப் போல்
1.கூர்ந்து பார்க்கும் போது நம் கண்கள் அதை எடுத்து
2.அந்த உணர்வின் அலைகளை நமக்குள் அலைகளாகக் குவித்துக் கொடுப்பதைச் சுவாசித்து
3.அந்த அலைகளுக்குள் இருக்கும் உணர்வைத் தான் சொல்லாகவும் செயலாகவும் அது நம்மைப் பேசச் செய்கிறது.
ஆகவே இந்த உணர்வின் சக்தியை நாம் அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தான் என்றால் நம் உயிர் இங்கே நரசிம்மனாக மாறி அதன் வழியில் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்று காவியங்களில் காட்டப்பட்டது.
ஒருவன் கெடுதல் செய்கிறான் என்று எண்ணும் போது அந்த உணர்வின் சக்தியை நாம் எடுத்து அவர்களைக் கவரப்படும் போது அந்த உடலிலிருந்து வந்த எண்ணங்கள் எல்லாம் நமக்குள் தெரிகின்றது.
அந்த உணர்வு நமக்குள் இயக்கி அவனை உதைக்க வேண்டும் என்று சொல்கிறது.
1.அதே உணர்வு என் உடலுக்குள் சென்றவுடனே என் நல்ல குணத்துடன் சண்டையிடுகின்றது.
2.நீ இரு நான் பார்த்துக் கொள்கிறேன்… என்று.
என் உடலுக்குள் நல்ல குணங்களுடன் கலந்தவுடனே நீ இரு… நான் பார்த்துக் கொள்கிறேன்..! என்று சொல்லப்படும் போது நல்ல குணங்கள் இந்த உணர்வைத் தாங்காது
1.மேல் வலிக்கிறது தலை வலிக்கிறது
2.கை குடைகிறது கால் குடைகிறது
3.நெஞ்சு வலிக்கிறது இரத்தக் கொதிப்பு வருகிறது வாத நோய் வருகிறது என்று
4.சீராக இயக்கக்கூடிய நிலைகள் அனைத்தையுமே நிறுத்தி விடுகின்றது.
இதை மாற்றுவதற்குத் தான் நரசிம்மா…!
கெடுதல் செய்தவர்களை எண்ணும் போது என்னை அந்தத் தீமை எப்படி இயக்குகிறதோ அதைத் துடைப்பதற்குத் துடைத்துப் பழகிய அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுதல் வேண்டும்.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் மனித உடலில் உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டான்.
துருவத்தை அறிந்தான்… துருவத்தை அடைந்தான்… துருவத்தின் உணர்வைத் தனக்குள் சேர்த்தான்… துருவ மகரிஷியானான். சிருஷ்டிக்கும் நிலை பெற்றான்… அந்த உணர்வு கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் ஒளியாக உள்ளான்…!
அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவரும் ஏழாவது அறிவு கொண்டு சப்தரிஷிகளாக ஒளியாக மாறிச் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள்.
அந்த அருள் சக்திகளைப் பெற்றால் நரசிம்மா..! தீமைகளை நீக்கி விட்டு ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும். இந்த உடலிலிருந்து தான் அதை நாம் பெற வேண்டும்.


இன்றைய உலகம் மிகக் கொடுமையான நிலைகளில் போய்க் கொண்டிருக்கின்றது
விஞ்ஞான உலகில் இன்று வாழுகின்றோம்… ஆனால் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு நாட்டில் மாட்டு வண்டியிலே சாமான்களை ஏற்றிச் செல்கின்றார்கள் சந்தர்ப்பத்தில் அந்த வாகனம் விபத்துக்குள்ளாகி விட்டால் மாடுகள் இறந்து விடுகின்றது.
1.ஆனால் அங்கே அருகில் இருக்கக்கூடிய மக்கள் ஓடிச்சென்று
2.உணவுக்காக அந்த மாட்டினுடைய தசைகளை இரக்கமற்று அறுத்து எடுத்துச் செல்கின்றார்கள்
3.அதிலே அடிபட்ட மனிதனின் தசைகளையும் கூட அறுத்து எடுத்துச் சாப்பிடச் செல்கின்றார்கள்.
இன்றைய உலகம் மிகக் கொடுமையான நிலைகளில் இப்படிப் போய்க் கொண்டிருக்கின்றது,.
இத்தகைய நேரத்தில் இராமாயணத்தில் கூறியது போல நாம் சிறிது காலமே வாழ்க்கை வாழ்கின்றோம்.
1.இதற்குள் நாம் மனதை ஒன்றாக்கி உடலுக்குள் ஒன்றென இயக்கி
2.இந்த உடலில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தி
3.உயிருடன் ஒன்றும் உணர்வை ஒன்றாக சேர்த்து
4.அந்த உண்மையை நமக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.
கூட்டுத் தியானங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்தும் போது நமக்குள்ளும் வளர்கின்றது… தீமைகளை அகற்றும் சக்தி இந்தப் பூமியிலும் பரவுகின்றது… நம் உடலுக்குள்ளும் அது பெருகுகின்றது.
கடவுளின் அவதாரத்தில் வராகன் எப்படித் தீமைகளைப் பிளந்ததோ அதே போன்று மனிதர்களாக இருக்கக்கூடிய நாம்
1.துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி இந்தப் பூமியில் கலந்திருப்பதை அந்த உணர்வைப் பெருக்கி
2.தீமையை நீக்கும் அந்தச் சக்தியை நாம் சுவாசித்து
3.நமக்குள் தீமை புகாது தடுத்து உணர்வின் தன்மை ஒளியாக்கி
4.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைதல் வேண்டும்.
விஷ உலகமாக மாறிவரும் வேளையில் இன்று இருக்கக்கூடிய மனிதர்கள் இனிமேல் எப்படி எல்லாம் செயல்படுத்துவார்கள்…? என்று சொல்ல முடியாது.
இந்த உலகையே அழிக்கக்கூடிய அணுகுண்டுகளை ஒவ்வொரு நாட்டுகளையும் சேகரித்து வைத்துள்ளார்கள் எதிர்பாராதபடி ஒருவருக்கொருவர் ஏவினால்
1.அந்தக் குண்டுகள் வெடித்தால் இந்தப் பூமியில் பரவத்தான் போகின்றது
2.விஷக் கதிரியக்கங்கள் அதிகமாகப்படும் பொழுது சூரியனின் ஒளிக்கதிர்களைத் தடுக்கத்தான் போகின்றது.
அப்படித் தடுத்து நிறுத்தி விட்டால் சூரியனின் ஒளிக்கதிர்கள் பரவவில்லை என்றால் துருவத்தில் எப்படிப் பனிப்பாறைகள் உறைகின்றதோ அதைப் போன்று
1.நாம் இருக்கும் இடங்களில் பனிப் பாறைகள் உறைந்து
2.உயிரினங்களே அனைத்தும் மறைந்து போகும் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.
அப்போது பூமி சூரியனைக் கடந்து விலகிச் சென்றுவிடும். இயக்கச் சக்தி கடந்தால் இந்தப் பிரபஞ்சமே சுக்குநூறாகிவிடும்… பின் பிரபஞ்சம் இல்லை
ஆனால் இங்கே உயிரணுவாகத் தோன்றி
1.வளர்ச்சியில் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழும் நிலை பெற்றவர்கள்
2.எக்காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் அழிவில்லாதபடி அவர்கள் வாழுகின்றார்கள்.
அதை நீங்கள் பெற விரும்பினால் அது எளிதில் பெறக்கூடிய சக்தி தான் கடினமில்லை கடும் தவம் இருக்க வேண்டிய அவசியமில்லை
1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டே வந்தால் போதுமானது.
2.அதன்படி வாழ்க்கையே நீங்கள் தியானம் ஆக்கிக் கொள்ளுங்கள்.

பூமியிலிருந்து சூரியனுக்குச் செல்லவும் முடியும்
சூரிய மண்டலத்திற்குச் சென்றிட முடியாது. உஷ்ணக் கோளம் என்று விஞ்ஞானத்தில் உணர்த்துகின்றனர்.
சூரியனின் கோளம் பெரியது. அதில் நிறைந்துள்ள அமில சக்தியின் தன்மையும் எம் மோதும் அமிலத்தையும் தன்னுள் ஈர்க்கும் நிலை உடையது. உருவ நிலையிலும் வளர்ந்து கொண்டே சுழன்று ஓடும் பெரிய மண்டலமாம் நம் சூரிய மண்டலம்.
முந்தைய ஆராய்ச்சியில் சூரியன் மையம் கொண்டு ஒரே இடத்தில் சுழன்று கொண்டுள்ளதாகவும் அதனைச் சுற்றியுள்ள சூரியக் குழந்தைகள் தான் அதனைச் சுற்றி ஓடுவதாகவும் உணர்த்தினர்.
சூரியனின் யாம் அறிந்த உண்மை நிலை…
1.அது தன்னைத்தானே சுற்றி ஓடிக்கொண்டு அதன் ஈர்ப்பில் உள்ள இந்த 47 மண்டலங்களையும் தன்னுடனே தன் ஈர்ப்பில்
2.அது அது சுழன்று கொண்டும் ஓடிக்கொண்டே உள்ளன.
3.இவ்வண்டமும் மற்ற எல்லா அண்டங்களுமே ஓடிக்கொண்டே தான் உள்ளன. எதுவும் நிற்பதில்லை
ஒரு நிலையில். ஜீவன் பெற்று திடப்பொருள் கொண்ட பிறகுதான் ஓடும் நிலை ஒவ்வொன்றிற்கும் வருகின்றது.
இம்மனித மண்டலமே ஓடிக்கொண்டே தான் உள்ளது. பிம்ப உடல்தான் ஒரு நிலையில் எண்ணம் கொண்டு செயல் கொள்கின்றது. மனித மண்டலத்திற்குள்ள எல்லா அவயங்களுமே தன்னிச்சை நிலையில் செயல்பட்டுக் கொண்டேதான் உள்ளன.
இதே போல் ஜீவனுள்ள எல்லா ஜீவராசிகளும் மண், கல், நீர் அனைத்திற்கும் ஜீவத் துடிப்பின் ஓட்டம் இருந்து கொண்டே உள்ளது.
பல பல ஆராய்ச்சிகளைச் செய்விக்கின்றனர். மனிதனுக்கும் ஜீவராசிகளுக்கும் உயிர்த்துடிப்பு நிலையை உணருகின்றனர்.
1.ஆனால் கல்லிற்கும் மண்ணிற்கும் உயிர்த்துடிப்பும் ஜீவன் உண்டு.
2.ஜீவன் இல்லாவிட்டால் கல்லிற்கும் மண்ணிற்கும் வளர்ச்சி இல்லை.
3.அததற்குகந்த உஷ்ண அலையும் உண்டு.
மண்ணாய் உள்ள நிலையிலிருந்து மணலாகி, உருண்டு கல்லாகி, பெரும் பாறையாய் உருப் பெறுகிறது. அந்தந்தப் பூமியின் நிலைக்கொப்ப மண்ணின் நிறங்கள் மாற்றம் கொள்கிறது அல்லவா…?
நீர் நிலைகள் பாய்ந்து வரும் வேகத்தில் எவ்விடத்தில் அந்நதி உற்பத்தியாய் பாய்ந்து வந்தாலும் அந்தந்த நிலைக்கொப்ப பூமியின் மேல் படும்பொழுது இப்பூமியின் சுவை குணத்தை ஈர்த்தே ஓடுகிறது. இந்நீருக்கு ஜீவன் பூமியின் நிலையில் இருந்து பெற்ற ஓடுகிறது.
நம் பூமியிலேயே பல பாகத்தில் பல நிலைகள் உண்டு. ஒன்றின் கலப்புடன்தான் தொடர்நிலை கொண்ட அமில சக்தியை வளர்த்த நிலை கொண்டு வாழ்கின்றது நம் பூமியே.
1.நம் பூமியிலிருந்து வெளிப்படும் மணம் ரம்மியமான ஆனந்தமான மணமாய்ப் பரிமளித்த காலம் ஒன்றிருந்தது.
2.இன்று நம் பூமியின் மணமே மாறு கொண்டு விட்டது.
3.இந்நிலையில் விஷத்தன்மை பரவிடும் நிலையும் வந்துள்ளது.
4.பல காலம் வாழ்ந்த பெரியோர்கள் இம் மணத்தின் மாறுபட்ட நிலையை அறிவர்.
நம் பூமியில் உறையும் தன்மை உப்புக் கலந்ததாய் உள்ளதினால் கரையும் நிலையும் துரிதமாய்ச் செயல் கொள்கின்றது. நம் பூமியைக் காட்டிலும் சூரியனின் சக்தி மிகவும் அதிகம் கொண்டது.
சூரியனின் நிலைத்தன்மையை முன் பாடத்திலேயே உணர்த்தியுள்ளேன்.
1.இன்று சூரியனுக்குச் செல்லவும் முடியும்
2.சூட்சுமத்தில் மட்டுமல்ல விஞ்ஞானத்தாலும் சூரியனுக்குச் சென்றிடலாம்.
நம் பூமிக்கும் நம் பூமியைக் காட்டிலும் சிறிய மண்டலமான சந்திரனுக்கும் உஷ்ண அலையை ஆராய்ந்து நம் பூமியிலிருந்து காற்று மண்டலத்தைத் தாண்டி உஷ்ண அலைப் பகுதியைத் தாண்டி அதைப் போலவே சந்திரனுக்குச் செல்லும் ஏவுகணையை அனுப்பி உள்ளார்கள்.
நம் பூமியில் இருந்து இக்காற்று மண்டலத்தைத் தாண்டி உஷ்ண அலை மண்டலத்தைத் தாண்டி பிறகு இவர்களுக்கு வேறு செலவினங்கள் இல்லாமல் எவ்அலையை வைத்து சந்திரனின் உஷ்ண அலை வரை தானாகவே இவ் ஏவுகணை ஓடுகின்றது…?
1.இவ் உஷ்ண அலை மண்டலம் (சந்திரனுக்குச் சொந்தமானது) வந்த பிறகுதான்
2.இவர்கள் ஏவுகணையை இயக்கச் செய்யும் சாதனத்தின் ஜீவன் செயல்திறன் கொள்கின்றது.
பொதுவானது பால்வெளி மண்டலத்தின் உஷ்ண அலை. இந்நிலை இருக்க நம் பூமியிலிருந்து சந்திரனுக்கு ஏவுகணையை அனுப்பியவர்கள்… நம் சூரிய மண்டலத்திற்கு… நமக்கு அருகாமையில் உள்ள அந்த மண்டலத்திற்கு அருகில் சென்று இவர்கள் விஞ்ஞானத்தை ஏன் செயலாக்கவில்லை…?
சூரியன் நம் பூமியைக் காட்டிலும் இரண்டு மடங்கு சுழற்சி சக்தி கொண்டது. இங்கு ஒரு நாள் 24 மணி நேரம்; அங்கு 12 மணி நேர விகித நிலையில் தன்னைத்தானே சுழன்று ஓடுகிறது.
விகித நிலை என்பது கூட அதன் சுழலும் சக்தி கொண்டு யாம் அறிந்த நிலை தானே ஒழிய அதற்கு இரவு பகல் என்ற மாறுபட்ட நிலை இல்லை.
அதைச் சுற்றி ஓடும் 47 மண்டலங்களின் ஈர்ப்பின் சக்தியையும் தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்திச் சுழன்றிடும் நிலையில் அதன் உஷ்ண அலையின் (47 மண்டலங்களின்) நிலை பெற்றுச் சுழலுகின்றது.
இந்த 47 மண்டலமுமே சூரியனைச் சுற்றி வட்டமாய்த் துரித கதியில் ஓடவில்லை. இவற்றிலுமே ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று பங்கு பெற்று அச்சக்தியின் அமிலத் தொடர் அதற்குச் சென்றடைகிறது.
உதாரணமாய்:-
இங்கு இந்நிலையில் காட்டியுள்ள நிலைப்படுத்தி இம்மண்டலங்களின் தன்மை உள்ளது. இதற்கும் தாண்டிய நிலையில் இவ் ஆறு மண்டலம் அல்லாமல் 48 மண்டலத்திலேயே பாக்கியுள்ள மண்டலங்கள் இதற்கும் சிறியவை…. உஷ்ண அலைகளைக் குறைவாய் பெற்றுள்ள மண்டலங்கள்.
இவர்கள் நாமகரணத்தில் உள்ள சனி மண்டலத்திற்குக் குளிரும் நிலை அதிகம். உறையும் தன்மை கொண்ட அமிலத்தை வளர்த்துள்ள மண்டலம் சனி மண்டலம்.
சனியின் நிலையில் இவ்வமில சக்தி நிறைந்துள்ளதினால் அது சுழலும் நிலை கொண்டு அதன் பக்கத்திற்கு இப் பெரிய மண்டலம் செல்லும் காலங்களில் அதன் அமில நிலையின் சக்தி இவற்றிற்கு அதிகமாய்க் கிடைக்கின்றது.
நம் பூமியில் இக்கால நிலை மாற்றம் கொண்டு
1.கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் குளிர் அதிகமாய்க் கிடைக்கப் பெறுவதும்
2.நம் பூமி சனியின் கோளத்திற்கு அதன் ஈர்ப்பின் நிலையில் வரும் கால நிலையில்தான் இக்குளிர் அமில சக்தியும் நம் பூமிக்கும் கூடுகின்றது.
இதைப்போல் தான்
1.பங்குனி, சித்திரை மாதங்களில் கடும் வெயிலைக் காணுகின்றோம்.
2.சூரியனின் உஷ்ண அலையுடன் நமக்கு அருகாமையில் நம் பூமியின் ஈர்ப்பிற்கு ராகுவின் நிலைக்குச் செல்கின்றது.
ஒரு வருடத்திற்குள் சூரியனை மையப்படுத்தி ஓடிடும் நிலையில் நம் மண்டலத்துடன் ஈர்ப்பிற்கு வரும் இந்த 48 மண்டலங்களின் தொடர்பைக் கொண்டு நம் பூமிக்குக் காலநிலை உருவாகிறது.
அதைப் போன்றே ஒவ்வொரு மண்டலத்திற்குமே இக்கால நிலையும் செயல்படுகின்றது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று அடிக்கடி தியானியுங்கள்.
1.கண்களைத் திறந்து ஒரு நிமிடம் எண்ணுங்கள்
2.கண்களை மூடி ஒரு நிமிடம் அந்தச் சக்திகளை உடலுக்குள் செலுத்துங்கள்.
இங்கே யாம் (ஞானகுரு) கொடுக்கும் உபதேச வாயிலாகப் மகரிஷிகளின் அருள் சக்திகளை இங்கே பதிவு செய்து வைத்திருக்கின்றோம்… காற்றிலேயும் பரப்பி வைத்திருக்கின்றோம்.
அதைப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணி எடுக்கும் பொழுது உங்கள் உடலுக்குள் தன்னாலே வந்து சேருகிறது.
1.கண்களை மூடி… பின் திறந்து
2.மறுபடி கண்களை மூடி… திறந்து அந்தச் சக்திகளை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
3.கண்களைத் திறந்த பின் “வீட்டில் கஷ்டம்…” என்று சொல்வதை விட்டு விடுங்கள்
4.உங்கள் வார்த்தையில் கஷ்டம் என்ற சொல்லை நீக்கி விட்டு
5.அதனை நீக்கும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும். எங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரது உடல்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். சகோதர உணர்வுகள் வளர வேண்டும் நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று இப்படித் தொடர்ந்து எண்ணுங்கள்.
இதைத் தான் நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகின்றேன். “சாமியார் சொன்னார்” என்றால் அதை மட்டும் நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் நீங்கள் எண்ணி எடுக்கலாம் அல்லவா…!
மிகவும் கஷ்டமாக இருக்கிறது… என் பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை… தொழில் சீராக இல்லை… என்று இங்கே வந்து இப்படித்தான் என்னிடம் கேட்கின்றார்கள்.
காற்றிலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பரவியுள்ளது. வீட்டில் அமர்ந்தபடியே அந்த அருள் சக்திகளைப் பெற்று நீங்களே எடுத்து உங்கள் வீட்டிலே பரப்பிக் கொள்ள முடியும்.
இதை நீங்களே செய்யலாம்.
1.என்னை நம்பி என்னிடம் எதிர்பார்க்கின்றார்கள்.
2.ஆனால் தன்னை நம்பி நான் சொன்ன உணர்வுகளை நீங்களே எண்ணி எடுக்க முடியும்.
3.அதற்குத் தான் இங்கே தியான மண்டபம் அமைத்தது.
உயர்ந்த சக்திகளை அவரவர் எண்ணி எடுப்பதற்குத் தான் இந்த மண்டபமே தவிர அது எனக்காக அல்ல. இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்…?
உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று நான் எண்ணி எடுக்கும்போது நான் அங்கே செல்கின்றேன்.
அந்த மகரிஷிகள் அருள் சக்தியைப் பெறுகின்றேன். என்னை நாடி வருபவர்களுக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக நீ ஆகின்றாய் என்று கீதையிலே சொல்வது போல் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணும் போது “நான் அதுவாக ஆகின்றேன்…”
ஆகவே…
1.உங்களை அறியாது இருள்கள் நீங்க வேண்டும்
2.மெய்ப் பொருள் காணும் திறன் நீங்கள் பெற வேண்டும்
3.எல்லோரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்
4.தொழில் நன்றாக இருக்க வேண்டும்… செல்வச் செழிப்பாக வாழ வேண்டும்
5.உங்களுடைய மூச்சுகள் எல்லாம் பரமாத்மாவில் கலந்து அனைவரையும் நலமுடன் வாழச் செய்ய வேண்டும் என்று
6.நான் உங்களுக்குச் செய்வது போல் நீங்களும் மற்றவர்களுக்கு இப்படி எண்ணினால் நீங்களும் ஞானியாக முடியும்.
ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மக்கள் பெற வேண்டும் என்று முதலில் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பின்…
1.எங்கள் வீடு முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
3,எங்கள் தாய் தந்தையின் அருளாசி எங்களுக்குக் கிடைக்க வேண்டும்
4.எங்கள் மூதாதையர்களின் நல்லாசி கிடைக்க வேண்டும்
5.எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்
6.எங்களுக்கு நல்ல மனதும் எங்களைப் பார்ப்பவர்களுக்கு நல்ல மனதும் வர வேண்டும் என்று
7.உங்கள் உயிரிடம் கேட்டால் அவன் அதை எல்லாம் உருவாக்கித் தருவான்…!
இதை நீங்கள் கேட்டுப் பெறலாம் அல்லவா.


அகஸ்தியன் காட்டிய வழிப்படி “வேதம்”
வேப்பமரம் என்றால் ரிக்… வேப்ப மரத்திலிருந்து வெளிப்படும் மணம் சாம இசை…
1.அந்த மணத்தை நுகர்ந்தால் ஓய்… என்ற இசை வருகின்றது
2.வாந்தியாக வருகின்றது.
ஒரு ரோஜா பூ ரிக் அதிலிருந்து வெளிப்படும் மணம் சாம
1.அந்த மணத்தை நுகர்ந்தால் ஆகா…கா என்று
2.ஆனந்த உணர்ச்சிகளை எழுப்புகின்றது நாதங்களை.
ஒரு விஷச்செடி ரிக் அதிலிருந்து வெளிப்படும் மணம் சாம இசை.
1.அந்த மணத்தை நாம் நுகர்ந்தால் உச்… உச்… என்று
2.அரிப்புத் தாளாது அந்த ஓசையை எழுப்புகின்றோம்.
இதைத் தான் ரிக் சாம என்று காட்டுகின்றார்கள்.
சந்தர்ப்பவசத்தால் வேதனைப்படும் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் நம்முடைய சாந்தமான உணர்வுக்குள் புகுந்து விட்டால் அந்த அணுக்கள் அதர்வண… சாந்தத்தை அடக்கி விடுகின்றது… ரிக் சாம.
விஷத்தின் தன்மை சாந்தமான அணுக்களுக்குள் சேர்ந்து விட்டால் அதை அடக்கி விஷத்தின் தன்மையாக மாற்றி அதை ஓங்கச் செய்து அதர்வண… யஜூர்… விஷத்தன்மை கொண்ட அணுவின் உடலாக மாற்றும் திறன் பெறுகின்றது என்று காட்டுகின்றான் அகஸ்தியன்.
இப்படி… மனித உடலில் உருவான வேதனை என்ற நாதத்தை உணர்கின்றான் அகஸ்தியன்.
1.அதை அடக்கும் தாவர இனத்தின் உணர்வை அவன் நுகர்ந்து அதைத் தனக்குள் விளைய வைத்து
2.அந்த மனித உடலில் விளைந்த வேதனையான நாதத்தை தணிக்கும்படி…
3.வேதனைப்பட்டவருக்கு அந்த ஆற்றலை நுகரும்படி செய்கின்றான் அன்றைய அகஸ்தியன்.
விஷத் தன்மையான அணுக்கள் இதைச் சுவாசித்த பின் ஒடுங்கி… இதனுடைய வலிமை கூடி
1.அந்த உடலில் தீமையை நீக்கும் அணுக்களை உருவாக்குகின்றான்…
2.இயற்கையில் விளைந்ததை வைத்து அன்றைய மெய்ஞானியான அகஸ்தியன்.
விஞ்ஞானியோ மற்ற பொருள்களைக் கலந்து இணைத்து புறப்பொருளின் நிலையின் இயக்கத்தை அந்த அணுக்களாகத்தான் மாற்றுகின்றான்.
ஆனால் அகஸ்தியன் இயற்கையின் உண்மையின் உணர்வு சாகாது… மற்ற மனித உடலுக்குள் அந்த இயக்க அணுவாக ஜீவ அணுக்களாக மாற்றுகின்றான்.
இப்படி…
1.மனித உடலில் தீமைகளை நீக்கும் உணர்வுகளை வளர்த்து
2.எதுவும் வெல்ல முடியாத நிலைகள் வேகா நிலை என்று முழுமை பெற்றவன் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாக ஆனது.
அந்த மெய்ஞானி இந்த உண்மையைப் பெற்றான் என்பதை நாம் அறிவதற்காகத் தான் விநாயகத் தத்துவத்தைக் கொடுத்தார்கள்.

சூரியனை மையப்படுத்திச் சுழன்றோடும் 48 மண்டலங்களுக்கும் “தனித்தனித் தன்மையுண்டு”
ஓடிக்கொண்டே உள்ள இம் மண்டலங்களின், ஒன்றின் ஈர்ப்பும் அதன் அமில சக்தியும் மற்றொன்றின் நிலைக்கு மோதுவதால் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அவ் ஈர்ப்பின் சக்தி நிலை கூடுகின்றது.
1.அனைத்து மண்டலங்களுமே சுழன்றே ஓடிக்கொண்டுள்ளன
2.ஒன்றுக்கு உகந்த சக்தி மற்றொன்றுக்கில்லை
3.சூரியனை மையப்படுத்திச் சுழன்றோடும் இந்த 48 மண்டலங்களுக்கும் தனித்தனித் தன்மையுண்டு.
நம் பூமியில் இன்றுள்ள சப்த அலைகளும், சுவையும் மற்ற இயற்கையில் தோன்றிடும் தாவரம், கனிவளம் இப்படிப் பல நிலைகள் வேறு மண்டலங்களில் மாற்றம் கொண்டுள்ளன.
நம் பூமியின் சக்தி நிலை போன்ற அதிக சக்தி கொண்ட மண்டலம் சூரியனை மையப்படுத்திச் சுழன்றிடும் இந்த 48 மண்டலங்களுக்குமே இல்லை.
நம் பூமிக்கு வியாழனிலிருந்து இன்று எப்படி நீர் நிலைகள் வந்திடும் சக்தி கிடைத்தது…?
1.வியாழனிலிருந்து அதன் சுழலும் வேகமும், சூரியனின் சுழலும் வேகத்திற்கும்
2.இரண்டின் ஈர்ப்பில் ஏற்படும் நிலை அதன் நேர் நிலை கொண்ட நம் பூமிக்குக் கிடைக்கின்றது.
3.வியாழனின் நிலை இல்லாவிட்டால் நம் பூமிக்கு நீரில்லை.
இதே நிலைபோல் செவ்வாயின் சக்தி நம் பூமிக்கு எந்நிலையில் பாய்கின்றது…?
நம் பூமியிலிருந்து செவ்வாய் மண்டலமும், வியாழன் மண்டலமும் காணுவதற்கு நட்சத்திர மண்டலம் போல் இன்றும் தெரிந்து கொண்டுள்ளன.
பல கோடி நட்சத்திரங்களில் ஒன்றாய்க் காண்கிறோம். செவ்வாயில் நிறைந்துள்ள சக்தி நம் பூமிக்கு “சப்த அலைகளைப் பாய்ச்சும் சக்தி…”
உம் சப்தமே வெளிவராத நிலைக்கான காற்றில்லா அடைப்பில் இருந்தால் கேட்டிடுமா…? அதைப் போல் பூமிக்கும் மையமான சூரியனுக்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள செவ்வாயின் நிலையினால் செவ்வாயின் சக்தியையும் நேர்படுத்தி நம் பூமி பெறுகிறது.
அதே சமயம் சூரியனின் சக்தியினால் செவ்வாயின் சக்தியும் மோதுண்டு அதன் ஒளி அலையையும் நாம் பெறுகின்றோம்.
செவ்வாயின் சுழலும் தன்மை கொண்டு அதன் அமிலத் தன்மையும் சூரியன் ஈர்த்து வெளிப்படுத்தும் அமிலத் தன்மையும் கலவை பெறும் இடத்திலிருந்துதான் சப்த ஒலி பிறக்கின்றது.
இதே நிலை கொண்டு நம் பூமிக்குத் தொடர்பு கொண்ட சந்திரனின் ஈர்ப்பு நிலை அமில நிலை வேறு. சந்திரனின் நிலையில்லா விட்டால் “நாம் காணும் இவ்வண்ணங்களே இல்லை…”
பல சக்தியை நம் பூமி ஈர்த்து, நம் பூமியின் சக்தியைச் சந்திரன் பெறுவதினால் சந்திரனுக்கும் நம் பூமிக்கும் அதிகத் தொடர்பு உள்ளதினால் நம் பூமியின் நிலையைக் காட்டிலும் சந்திர மண்டலம் உருவில் சிறிதாகவும் அதே நிலையில் பல சக்திகளைத் தன்னுள் அடக்கிய வளரும் தருவாயில் உள்ள மண்டலம்.
இம் மாற்ற நிலையினால் சந்திரனுக்குச் சப்த அலையும் இன்று ஒரே நிலையில் இரவு பகல் என்ற மாறுபட்ட குண நிலை பெறாமல் சுழன்றிடும் சந்திர மண்டலத்தில் இந்நீர்நிலை சப்த ஒளியின் நிலையும் ஏற்பட்ட பிறகுதான் பல வளர்ச்சி நிலை ஏற்பட்டு… பல நட்சத்திர மண்டலங்களின் ஈர்ப்பு சக்தியையும் சந்திரன் பெற்ற பிறகு… அதன் வளர்ச்சியில் ஊரும் உயிரினங்கள் உள்ள சந்திரனின் தன்மையே… “ஜீவ உடல் கொண்ட உயிராத்மாக்கள் தோன்றிடும் காலம் வரும்…”
வரப்போகும் இக் கிரகண கால நிலைக்குப் பிறகு
1.நம் சூரிய கிரகமுடன் பல நிலைகள் மாற்றம் கொண்டு நடக்கப் போகின்றது
2.சூரிய கிரகணம், சூரிய கிரகணம் என்று பல முறை கிரகணம் பிடிக்கின்றது சூரியனை.
3.ஒவ்வொரு நிலையிலும் இதனால் சூரியனுக்கும் சூரியனை நேர் கொண்டு
4.எம்மண்டலத்தை எக்கிரகணம் தாண்டிச் செல்கின்றதோ அம்மண்டலத்திற்கும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
வட்டமிட்டுக் கொண்டே உள்ள இம்மண்டலங்களும் நட்சத்திர மண்டலங்களும் இப்பால்வெளி மண்டலத்தில் வளர்ச்சி கொண்டுள்ள சில நிலைகளும் ஒன்றைத் தாண்டி ஒன்று ஓடும் நிலைக்கும் “ஜீவன் வேண்டும்…”
அதே போல்
1.உஷ்ண அலைகளைக் கொண்ட நிலையில்தான் அது அதற்கு உயிர்த் துடிப்பே வருகின்றது
2.அதி உஷ்ணத்தை எதுவும் ஏற்பதில்லை… அதி குளிர்ச்சி… பனிக்கட்டி போன்ற நிலையிலும் தாவர வளர்ச்சி வளர்வதில்லை.
இன்று நம் பூமியின் நிலை எந்நிலையில் அது சூழலும் தன்மை கொண்டு, காற்று மண்டல வட்டத்திற்கு மேல் உஷ்ண அலைகளை நம் பூமி வெளிப்படுத்துகிறதோ… அந்நிலையில் தான் ஒவ்வொரு கோளங்களுக்கும், அதன் சுழற்சியில் காற்று மண்டலமும், அம்மண்டலம் கக்கும் உஷ்ண அலையும் செயல் கொள்கின்றது.
1.இம்மனித உடலுக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் அதனைச் சுற்றி சப்த அலை உண்டு
2.சப்த அலைக்குச் சிறிது தள்ளி உஷ்ண அலையும் உண்டு
3.எல்லா ஜீவன்களுக்குமே மனிதனின் உடல் வெப்பநிலையும் அம்மனிதனைச் சப்த அலையின் வெப்பக் காற்றும் ஒன்றாய்த் தான் இருந்திடும்.
தாவரங்களுக்கும் இந்நிலை உண்டு. இதைப்போல் இவ்வுலகம் மற்ற எல்லா மண்டலங்களுக்குமே இந்நிலை கொண்ட உஷ்ண அலைகள் உண்டு.
சந்திரனின் நிலை குளிர்ந்த நிலை என்று உணர்த்தினேன். ஒவ்வொன்றிற்கும் அதனதன் சுழலும் வேகம் கொண்டு இவ்வுஷ்ண அலைகள் மாறுபடுகின்றன.
1.இவ்வுஷ்ண அலை கக்கும் நிலையே எம் மண்டலத்திற்கும் ஓர் இடத்தில் இருக்கும் நிலை மற்றோரு இடத்தில் இருந்திடாது
2.எல்லா ஜீவராசிகள் தாவரங்களின் நிலைக்கும் இந்நிலை உண்டு.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அகஸ்திய மாமகரிஷி தனக்குள் ஒளியான உணர்வின் ஆற்றல் பெற்று விண்ணிலே சென்றபின் அங்கிருந்து வெளிப்படும் அலைகள் வானிலே மிதந்து கொண்டிருக்கின்றது.
பிரபஞ்சத்துக்குள் மிதந்து கொண்டிருக்கக் கூடிய, அந்த உணர்வின் சக்தியை நாம் நினைவு கொள்ளும் பொழுது…
1.அன்று அகஸ்திய மாமகரிஷி மனிதனாக வாழ்ந்த காலத்தில்
2.அவர் உடலில் விளைவித்த மூச்சின் உணர்வு அலைகள்
3.எண்ண ஒலிகளாக ஒலிபரப்பப்பட்டிருப்பதை நாம் அனைவரும் பெற முடியும்.
இப்பொழுது நாம் எந்தக் குணத்தை எண்ணிப் பேசுகின்றோமோ இதைப் போன்று அகஸ்திய மாமகரிஷி
1.தன் உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகளை வெளிப்படுத்திய நிலையும்,
2.வளர்ந்த நிலையும்… தான் வளர்ந்து கொண்ட நிலையும்… வளர வேண்டிய நிலையும்,
3.தன் உணர்வாற்றலால் வெளிப்படுத்திய அந்த நிலைகள்
4.இங்கே நமக்கு முன் பரவிக் கொண்டிருக்கின்றது.
அந்த வளர்ந்த நிலை… வளர வேண்டிய நிலை… இவை அனைத்துமே எவ்வாறு…? என்ற நிலைகளைத் தான் விநாயகத் தத்துவத்தில் கேள்விக் குறியாகப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.
விநாயகனைப் பார்க்கும் பொழுது… மேற்கே பார்த்து அந்த விநாயகனை வைத்திருப்பார்கள். நீர் நிலை இருக்கும் பக்கம்தான்,
ஏனென்றால்… அது ஜீவ நீர், ஆக அந்த ஜீவ நீர் நிலைகள் பக்கம் அதை நிலை நிறுத்தி நாம் நீரிலே மூழ்கி வந்தபின் இந்த விநாயகரைப் பார்த்ததும் நம் கண்ணுக்குள் இந்தக் கதையாக உணர்த்திய நினைவலைகள் வருகின்றது.
நாம் இந்த உடலை… மிருகத்திலிருந்து வளர்ச்சியாகி மனிதனாகப் பெற்றோம் என்ற உண்மையை உணர்த்திய அந்தத் துருவ மகரிஷியின் எண்ணத்தை நாம் எண்ணி வானை நோக்கி எண்ணி ஏங்கும்படி செய்கிறார்கள்.
அப்படி எண்ணும் பொழுது… கிழக்கிலிருந்து வரும் அந்தச் சூரியனின் கதிர் அலைகள் நமக்குள் காந்த அலைகளாகப் பட்டபின் அந்த உணர்வின் அலைகள் நமக்குள் ஈர்க்கப்பட்டு எந்த மகரிஷி உணர்த்தினாரோ, அவரின் உணர்வின் ஆற்றலைப் பெறும் நிலைகள் பெறப்படுகின்றது.
அப்பொழுது
1.அகஸ்திய மாமகரிஷி உணர்த்திய உணர்வின் ஆற்றல்
2.அவர் வெளிப்படுத்திய உணர்வின் தன்மைகள் இந்த பூமியிலே மிதந்து கொண்டிருப்பதினால்
3.அந்த உணர்வின் ஆற்றல் ஈர்க்கப்படுகின்றது.
அப்பொழுது அந்தச் சந்தர்ப்பம் நமக்குள் உயர்ந்த ஒளியின் தன்மையைப் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகின்றது.
ஆக… எந்த மனிதன் (அகஸ்திய மாமகரிஷி) தன் ஒளியின் தன்மையிலே விண் சென்றானோ அவன் வழியைத் தான் உணர்த்தியிருக்கின்றான்.
1.அவன் வழியை நாம் பின்பற்றிச் செல்லும் பொழுது
2.அவன் சென்ற இடமே நாம் போய்ச் சேர முடியும்.
ஆகவே… நாம் அனைவரும் அந்த அகஸ்தியன் சென்ற பாதையில் நடந்து… அருள் வாழ்க்கை வாழ்ந்து… இந்தப் பிறவியிலேயே பிறவியில்லா நிலை என்னும் நிலையாக அழியா ஒளிசரீரம் பெற்று… மகிழ்ந்து வாழ்ந்து… என்றும் பதினாறு என்ற நிலையை அடைவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
27 நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய சக்திதான் விண்வெளியில் இருந்து வரும் நஞ்சினை வென்று நம் பூமிக்குள்ளும் அந்தச் சக்திகள் பரவிக் கொண்டு வருகின்றது.
27 நட்சத்திரங்களின் உணர்வுகளைப் போன்றது தான் மனிதனுடைய எண்ணங்களும். மனிதனின் எண்ணங்கள் அனைத்துமே நட்சத்திரம்தான்.
நட்சத்திரங்களுடைய ஆற்றல்கள் மற்ற பாறைக்குள் புகுந்து தாவர இன சத்தாக அது விளைகின்றது. அந்தக் கதிரியக்கம் தான் மற்ற மணத்தைத் தூண்டி இயக்கச் செய்கின்றது.
அந்த 27 நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு குணங்கள் கொண்டது. ஒவ்வொன்றுடன் அவை இணையும் பொழுது பல கோடிப் பிரிவுகளாக அது பிரிகின்றது.
1.அந்த 27 நட்சத்திரங்கள் எத்தகைய ஆற்றல் பெற்றதோ அதைப் போல அந்த உணர்வின் சக்தி நமக்குள் பெற வேண்டும் என்று
2.அந்த மெய் ஞானிகளின் சக்தியை நாம் பெறுதல் வேண்டும்.
நம் உடல் அனைத்தும் கோள்தான். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உயிரிடம் வேண்டுகிறோம்… உயிர் சூரியன்.
உயிர் வழி அந்த ஞானியின் உணர்வை எண்ணும் பொழுது அந்த எண்ணம் வலுப் பெறுகின்றது. மகரிஷிகளின் அருள் சக்தி நம் ஆன்மாவாக மாறுகின்றது. அந்த உணர்வின் துணை கொண்டு தான் நஞ்சினை வென்றிடும் ஆற்றலைப் பெறுகின்றோம்.
ஆகையினால்தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று எண்ணி அந்த 27 நட்சத்திரங்களைப் பற்றி எண்ணச் சொல்கிறோம்.
1.அந்த 27 நட்சத்திரங்களைப் பற்றி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டி
2.அதை எப்படி நீ தொட வேண்டும் என்ற பக்குவத்தைக் கொடுத்துள்ளார்.
3.அந்த 27 நட்சத்திரங்களின் சக்திகளை எதனுடன் இணைக்க வேண்டும்…?
4.அதை எடுத்தால் உன்னை எப்படி அது சுடாது இருக்கும்…?
5.அந்தக் கதிரியக்கங்கள் உன்னைப் பாதிக்காது எப்படி இருக்கும்…? என்ற நிலையைக் காட்டினார்.
ஆகவே குருவின் துணை கொண்டு அதனை நான் (ஞானகுரு) கவர்கின்றேன். அப்படிக் கவர்ந்த நிலைகள் கொண்டு
1.27 நட்சத்திரங்ளின் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று உங்களை எண்ணச் சொல்லி விட்டு
2.இந்த இணைப்புடன் ஊழ்வினையாகப் பதிவு செய்கின்றேன்.
சிறுகச் சிறுகப் அந்த 27 நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் கிடைக்கப் பெறச் செய்கிறோம். அந்த 27 நட்சத்திரங்கள் சக்தி கொண்டு சமப்படுத்தும் நிலையை நீங்கள் முழுமையாகப் பெற முடியும்.
1.அந்த 27 நட்சத்திரங்களின் உணர்வுகளை எடுத்துத்தான் மகரிஷிகள் அனைத்தும் தனக்குள் ஒன்றாக்கி
2.உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றியுள்ளார்கள்.
அதாவது
1.எதுவுமே இயக்கம் அல்லாது அதனின் உணர்வின் இயக்கமாக மாற்றி
2.நெகடிவ் பாசிடிவ் என்று கரண்ட் எப்படி உண்டாகின்றதோ இதைப்போல சமநிலைப்படுத்தி…
3.ஒரு நிலை கொண்டு ஒன்றைத் தனக்குள் இரையாக்கி… உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றியவர்கள்.
அந்த மகரிஷிகள் பெற்றது போன்று நீங்களும் பெற வேண்டும் என்பதற்குத் தான் இருபத்தியேழு நட்சத்திரத்தையும் நவக்கோளின் சக்தியையும் பெறச் சொல்வது.
மகரிஷிகள் இதையெல்லாம் வடித்துக் கொண்டவர்கள். அதனால்
1.அந்த உணர்வின் சத்தை இதனுடன் கலந்து புது எண்ணங்களாக உருவாக்கி
2.அதனை நீங்கள் பருகும் நிலைக்குத் தான் இதைச் செய்வது.
எதை எண்ணினாலும்…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் நீங்கள் இருப்பீர்கள் என்றால்
2.அது ஊழ்வினையாகப் பதிவாகி அதனின் செயலாக உங்கள் உணர்வுகள் இயங்கி
3.மெய்ஞானியின் உணர்வை ஒளியாக நீங்கள் பெறக்கூடிய தகுதி பெறுவீர்கள்.
ஆகவே அடிக்கடி உங்கள் உயிரை ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று எண்ணி மேலே சொன்ன மாதிரி நினைவுக்குக் கொண்டு வந்து அந்த ஆற்றல்களைச் செயல்படுத்த வேண்டும். எமது அருளாசிகள்.


உயிரினங்கள் வாழ… சந்திர மண்டலத்தில் நீர் உள்ளது
விஞ்ஞானத்தில் தான்… அவர்களின் கண்டுபிடிப்பில் இருந்து சந்திர மண்டலத்தில் உயிரணு இல்லை… நீர் நிலையும் இல்லை. நீர் இருந்தால் அல்லவா உயிரினம் வாழ…? என்ற வினா எழுப்பப்பட்டது.
அதன் விடை.
1.காற்றுடன் நீர் இல்லாவிட்டால் அம்மண்டலத்தின் சுழற்சியில் ஒளி ஏது…?
2.உயிரணு இல்லாவிட்டால் மண்டலத்திற்கு வளர்ச்சி ஏது…?
3.அம்மண்டலமே உருப்பெற உயிரணுக்களை உண்டல்லவா அதன் கழிவை உஷ்ண அலையாய் வெளிப்படுத்தி
4.அதன் வழியில் தொடர் கொண்டு, வளர்ச்சி கொண்டு வளர்கின்றது.
பால்வெளி மண்டலத்தில் காற்றுமுண்டு நீருமுண்டு உயிரணுக்களும் உண்டு.
1.வானமாய்ப் பரந்துள்ள பால்வெளி மண்டலத்திற்கே ஜீவன் உண்டு என்ற நிலையில்
2.சந்திரனுக்கு ஏனப்பா நீரும் உயிரணுவும் இல்லை என்று விஞ்ஞானத்தில் செப்புகின்றனர்…?
3.காற்றுடன் கலந்துள்ள ஜீவனான நீர் இல்லாவிட்டால் அம் மண்டலத்திற்கு சுழற்சி ஏது…?
4.அதிலிருந்து பௌர்ணமி நிலவாய்க் காண்கின்றோமே அவ் ஒளியும் ஏது…?
நம் பூமியைப் போல் அடர்ந்த கடல் நிலைகள் நிறைந்த நீர் நிலை இல்லை. நீர் நிலையில் இருந்து வெளிப்படும் அமில சக்தியினால் இப்பூமி முழுவதுமே செயல் கொண்டு ஆங்காங்கு பெய்திடும் பருவ மழையினால் உண்டான நீர் நிலைகள், ஆறு, ஏரி, குளம், குட்டைகள் இப்படி உள்ள நீர் நிலைகளும் அங்கில்லை.
விஞ்ஞானத்தில், சந்திரனில் கண்டுபிடித்த நிலை போல் நம் சூரியனிலும் எந்நிலையில் நீர்நிலை உள்ளது…? என்று உணர்த்தினரா…?
இவ் வரப்போகும் மாற்றத்திலிருந்து, அடர்ந்த நீர்நிலைச் சக்தி சந்திரனுக்குக் கூடப் போகின்றது. நம் பூமியைப்போல் பருவ மழைகளைக் காணாத மண்டலம் அது. சந்திரனில் இன்றளவும் மழை பெய்ததில்லை.
சந்திரனில் நீர் இல்லாவிட்டால் சந்திரனிலிருந்து தோண்டி எடுத்து வந்தார்களே அக்கல் எப்படி வளர்ந்தது…?
பனியான நிலை என்றுமே சந்திரனுக்குண்டு… குளிர்த்த மண்டலம் அது. அதன் சுற்றலில் பனித்துளி போன்ற நீர் நிலைகள் படிந்து அதன் கசிவில் உறைந்து பிறகு அப்பனி நிலை தொடர்பு கொண்டு நசநசப்புத் தன்மையில் சுழன்று கொண்டுள்ள குளிர்ந்த மண்டலம்தான் சந்திரனின் இன்றைய நிலை.
நம் பூமியில் கிணறுகள் தோண்டி நீரை எடுப்பதைப் போல் சந்திரனுக்கு சக்தி நிலையில்லை. நீர்நிலை அடர்ந்து உள்ள மண்டலத்தில்தான் அம் மண்டலத்துடன் கூடிய எந்த இடத்திலும் நீரைக் கண்டிட முடியும்.
1.நம் பூமியிலிருந்து விண்கலத்தை ஏவி இம்மனித சுவாசத்தை அங்கு விட்டு வந்துள்ளானே…
2.அச்சுவாச நிலையின் வெக்கையில் தோன்றிடும் உயிரணுவிற்கு இப்பூமியில் இருந்து சென்ற சக்தி நிலைதானே வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை “நாம் ஏங்கிப் பெற வேண்டும்”
உங்களுக்குள் அரும்பெரும் சக்தியான துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறும்படி செய்து கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).
1.அகஸ்தியன் எப்படித் தாய் கருவிலிருந்தே தீமைகளை நீக்கினானோ அதை நுகர்ந்தறியப்படும் பொழுது
2.நீங்கள் நுகரும் உணர்வுகள் உங்கள் இரத்தத்திலே கருத்தன்மையாக உருவாகி உடல் முழுவதற்கும் பரவச் செய்து
3.உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு இருளை நீக்கும் அருள் ஒளியைப் பெருக்குவது தான் இது.
அடிக்கடி நாம் சேர்த்து இதைப் பெருக்கிக் கொண்டு வந்தோம் என்றால் எல்லா உறுப்புகளிலும் தீமையை நீக்கும் உணர்வுகள் “அந்த ஒளி என்ற உணர்வின் அறிவுகள்” பெருகுகின்றது.
இந்தத் தியானத்தை கற்றுக் கொண்டவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் கஷ்டப்படுவரையோ சங்கடப்படுபவரையோ வேதனைப்படுவரையோ அவர்கள் உணர்வு நம்மை இயக்காதபடி தடைப்படுத்த வேண்டும். உடனுக்குடன் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
காரம் புளிப்பு உப்பு அதையெல்லாம் சேர்த்துச் சமைத்துச் சுவையாக எப்படி மாற்றிக் கொள்கின்றோமோ அதைப் போன்று சமப்படுத்திக் கொள்ள முடியும்.
நமக்குச் சம்பந்தமே இல்லை என்றாலும்… ஒருவர் கோபப்படுகிறார் என்று பார்த்தோம் என்றால் நமக்கும் அதே உணர்வு தோன்றுகின்றது அவன் மேல் வெறுப்பு வருகின்றது… ஆத்திரம் வருகின்றது.
அந்தக் கோபத்தால் வேதனைப்படுபவரைப் பார்க்கும் பொழுது அந்த வேதனையும் கலந்து வருகின்றது. அந்தக் கோபமும் வேதனையும் நம் இரத்தத்திலே கலக்கப்படும் பொழுது அத்தகைய உணர்வின் அணுக்கள் உருவாகி விடுகின்றது.
இது உடல் முழுவதும் பரவப்படும் பொழுது நம் உறுப்புகளையும் வீணாக்குகின்றது. இதைப் போன்ற நிலைகள் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரப் பழகிக் கொண்டால்
2.உங்கள் இரத்தங்களிலே விளைந்து வரும் அந்தத் தீமையான நிலைகளை அடக்க முடியும்.
ஏனென்றால் வேதனைப்படுவோரையோ சங்கடப்படுவோரையோ நுகர்ந்தால் அவைகள் எல்லாம் இரத்தத்தில் முதலில் கருவாகி முட்டையாகின்றது.
தொடர்ந்து அவர்களை நினைவுக்குக் கொண்டு வந்தால் பருவம் அடைந்து வெடித்துக் குஞ்சாக மாறுகின்றது அதற்குண்டான கருத்தன்மை இல்லை என்றாலும் கூட அந்த விஷத்தின் தன்மை ரத்தத்துடன் கலந்து மற்ற உறுப்புகளுக்குச் சென்று அதை வீணாக்குகின்றது.
1.அணுவாக ஆனாலும் சரி அணுவாக ஆகாதபடி அந்த முட்டை அழுகிச் சென்றாலும்
2.அழுகிய உணர்வு ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து எந்த உறுப்புகளில் அது சேர்கின்றதோ அதைப் பாழாக்குகின்றது.
3.இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலுக்குள் பல விதமான தொல்லைகளைக் கொடுக்கும் அணுக்களாக விளைந்து விடுகின்றது.
அதிலிருந்து விடுபடுவதற்கு உங்களுக்கு துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேசித்து அதை உடல் முழுவதும் பரவச் செய்து உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைப் பெறச் செய்து உணர்வினை நினைவூட்டி அதை ஈர்க்கும் சந்தர்ப்பத்தை உங்களுக்கு இப்போது ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.
உங்கள் உடல் உறுப்புகள் அனைத்திலும்
1.கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தினுடைய சக்திகளை நேரடியாகச் செலுத்தும் பொழுது உடலுக்குள் அந்த சக்திகள் செல்கின்றது
2.கண் வழி அந்த நரம்பு மண்டலங்கள் வழி சென்று உடல் உறுப்புகளை இயக்குகின்றது
3.அதன் வழி துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை நமக்குள் பெருக்கிக் கொள்வதற்குப் பழகிக் கொள்ளுதல் வேண்டும்.
தீமைகள் எப்படி உடலுக்குள் ஊடுருவி இயக்குகின்றதோ இதைப் போன்று “கண்ணின் நினைவு கொண்டு அருள் உணர்வுகளை நமக்குள் எல்லா அணுக்களுக்குள்ளும் ஊடுருவச் செய்து” அதைப் பெருக்கிக் கொண்டே வரவேண்டும்.
1.எந்த அளவிற்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குகின்றீர்களோ
2.நிச்சயம் உங்கள் உடலிலே தீமையை நீக்கும் உணர்வின் அணுக்களாக விளைந்து
3.இந்த வாழ்க்கையில் தீமையை நீக்கும் ஞானத்தின் வழி கொண்டு அருள் உணர்வைப் பெருக்கி
4.இந்த உடலுக்குப் பின் பிறவில்லா நிலை நிச்சயம் அடைய முடியும்
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கொடும் செயல்கள் நடப்பதையும்… கொடும் தவறு செய்பவர் உணர்வுகளையும்… கேட்டுக் கொண்டே இருந்தால் அதை நுகர்ந்து அறிந்தபின்
1.ஒரு பத்து நாளைக்குத் தொடர்ந்து கேட்டால் நம் உடலுக்குள் அந்தக் கொடூர உணர்வுகள் விளைந்து விடுகிறது.
2.நம்மையும் அந்தத் தவறு செய்யும் நிலைகளுக்கே இயக்கி நம்மையும் தவறுள்ளவர்களாக மாற்றி விடுகின்றது.
இதைப் போன்ற நிலையிலிருந்து மனிதர்கள் நாம் விடுபட வேண்டும் என்று செயல்பட்டவர் தான் நம் காலத்தில் வாழ்ந்த மகான் காந்திஜி.
அவர் பெற்ற ஞானத்தை நாம் தெரிந்து கொள்வது மிகவும் நலம். அவருடைய வழிகளை நாமும் கடைப்பிடிக்க வேண்டும்.
1.தீமை இல்லாத உடலாக நாம் உருவாக்க வேண்டும்
2.தீமை செய்யும் எண்ணங்கள் நமக்குள் உருவாக்காதபடி தடுக்க வேண்டும்
3.தீமையற்ற உலகம் உருவாக வேண்டும்
4.தீமையற்ற நாடாக உருவாக வேண்டும் என்று
5.தீமையற்ற மக்கள் உருவாக வேண்டும் என்று அவரை நாம் நினைவு கொண்டு
6.காந்திஜி வழியில் அரும்பெரும் சக்திகளைப் பெறும் நிலையாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்
அவருக்குள் பிறக்கச் செய்த ஞானத்தின் நிலைகளை அந்த அருள் உணர்வுகளை நமக்குள்ளும் உருவாக்குவோம்… அதைப் பிறக்கச் செய்வோம்… அருள் ஞானச் செல்வத்தை வளர்ப்போம்.
ஏனென்றால் பிறருக்குத் தீங்கு விளைவிக்காத நிலையை நாம் பெற வேண்டும். எதை வைத்து..?
சாந்தமான குணத்தை வைத்து…!
கோபத்தால் உடனடியாக ஒன்றைச் செய்து விடலாம்.
1.ஆனால் அதே உணர்வின் வேகம் நம்மை இயக்காது நிறுத்த வேண்டும் என்றால்
2.மன பலம் தேவை… சாந்தம் அவசியம் தேவை.
அத்தகைய சாந்தத்திற்குண்டான வலிமை வேறு எதற்கும் இல்லை. சாந்தத்தின் வலிமை கொண்டு தான் எதையும் சாதிக்க முடியும். சாந்தத்தால் சாதித்தவர் காந்திஜி. அவருடைய வலிமை எவருக்கும் இல்லை.
எல்லோரும் சொல்வார்கள்…
1.வீர தீரத்துடன் ஒருவரை அழித்து விடலாம்… நான் அழித்து விட்டேன்… அழித்துவிடுவேன்… என்று
2.ஆனால் அது வலிமை அல்ல… கோழைத்தனம் தான்
3.ஒருவரை ஏசிவிடலாம்… இதுவும் கோழைத்தனம் தான்
4.ஒருவருக்குத் தீங்கு செய்யலாம்… இதுவும் கோழைத்தனம் தான்.
மன வலிமை வேண்டும் என்றால் அந்தச் சாந்தம் நமக்கு வேண்டும். வரும் தீமைகளை அறிந்து அந்தத் தீமைகளை அகற்றும் வலிமை பெறுவதே சாந்தம் என்பது.
எத்தகைய தீமையும் தன்னைச் சாராது காந்திஜி அந்தச் சாந்தத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டார். காந்திஜி தான் சாந்தத்தால் வலிமை பெற்ற அந்த அரும் பெரும் சக்திகளை நாம் அனைவரும் பெற்றோம் என்றால் நம் குடும்பத்திலும் சரி… தொழிலிலும் சரி… வரும் சிறு குறைகளையும் மாற்றி அமைக்க முடியும்.
அந்த வலிமை கொண்ட சாந்தத்தை வைத்து நம்மை இயக்கும் தீமையான உணர்வின் வலிமையை அடக்க முடியும். குடும்பப் பற்றும் வரும்.
காந்திஜி நாம் வாழும் இந்தக் காலகட்டத்தில் இதைச் செயல்படுத்தியவர். அவர் மக்களுக்காக அரசியல் நிலைகளை எடுத்தாலும் அரசு என்ற நிலைகளுக்குச் செல்லவில்லை.
அருள் ஞானிகள் உணர்வைத் தனக்குள் நுகர்ந்தார். அந்த அருள் உணர்வுகளைத் தான் அனைவரும் பெற வேண்டும் என்று அரசியலில் புகுத்தினார்… அதை அவர் செயல்படுத்தினார்.
ஆகவே இத்தகைய சாந்தமே மிகவும் வலிமை கொண்டது.
1.சாந்தத்தின் உணர்வு கொண்டே நமக்குள் வரும் தீமையை அடக்கி
2.ஞானத்தின் வழியில் செல்லும் பொழுது நல் ஒழுக்கங்கள் நமக்குள் ஓங்கி வளரும்.
3.தீமைகளை அடக்கி ஆட்சி புரியும் சாந்த நிலைக்கு ஒவ்வொருவரும் வந்தால் இனி வரும் சமுதாயமும் சீர்படும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய நிலைகளை யாம் (ஞானகுரு) மீண்டும் மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது
1.அதுவே அந்த உணர்வின் இயக்கமாக இங்கே என்னைப் பேச வைப்பதும்… பேசுவதும்…!
2.உணர்வலைகளை ஒலி பரப்புவதும்… அதை நீங்கள் கேட்டு உணர்வதும்
3.அந்த குரு அருள் உங்களுக்குள் பதிந்து கொண்டிருப்பதும்…!
நஞ்சு பரவிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் யார் எதுவாக இருப்பினும் இந்த உடல் எவ்வாறு ஆனாலும் உடல் நமக்குச் சொந்தமல்ல… இந்தப் பூமியும் சொந்தமல்ல.
1.குரு காட்டிய வழியில் நாம் நடக்கும் போது விண்ணுலக ஆற்றல் நமக்குச் சொந்தம் ஆகின்றது…
2.இந்தப் பூமியும் சொந்தமாகிறது… இந்த உடலும் நமக்கு இன்று சொந்தமாக இருக்கின்றது.
ஆகவே… மனிதனான பின் சொந்தமாக்க வேண்டியது எது என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
என்றுமே “அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குச் சொந்தமாக்கி” அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகி
1.அவர் விண்ணுலகம் சென்றது போன்று நாமும் அந்த விண்ணுலக ஆற்றலைப் பெற்று
2.ஒளியின் உணர்வாக மாற்றுவதே நமக்குச் சொந்தம்.
பேரின்பப் பெரு வாழ்வாக என்றும் அழியா ஒளிச் சரீரம் பெறுவதே நமது கடைசி நிலை. அதன் வழிகளில் “குரு காட்டிய பேரன்பை” உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
இது அனைத்தும் நான் பேசுகிறேன் என்று எண்ண வேண்டாம். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குள் உரு செய்து பதிவாக்கினார். அவர் தனக்குள் எதைப் பெற்றாரோ அதைப் பெறும் பாக்கியத்தை எனக்கும் ஏற்படுத்தினார்.
அவர் காட்டிய உணர்வு வழி செல்லப்படும் பொழுது அந்த அருள் உணர்வினை உணர முடிகின்றது.
1.அதே உணர்வின் ஒலிகள் தான் இங்கே எழுப்பப்படுகின்றது
2.உணர்வின் அலைகள் உங்களுக்குள் படுகின்றது
3.அந்த அலையின் தன்மையை நீங்கள் ஈர்க்கின்றீர்கள்
4.குரு அருளின் உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவாகின்றது
5.அந்தப் பதிவின் நிலைகள் உங்களுக்குள் குருவாகின்றது
6.குருவின் தன்மை நினைவாக்கப்படும் பொழுது அந்த அலையின் தொடர் கொண்டு
7.பேரின்பப் பெரு வாழ்வு வாழும் நிலையை நீங்களும் அடைகிறீர்கள்.
நீங்கள் அதை அடைய வேண்டும் என்று தான் எனது பிரார்த்தனையே. அந்த எண்ணத்துடன் தான் குருவை வேண்டுகின்றேன். அவரை வேண்டி அந்த உணர்வுகளை எடுக்கப்படும் போது நீங்களும் அதைப் பெற்றால் உங்களுக்குள் மகிழ்ச்சி தோன்றும்.
நீங்கள் மகிழ்ச்சியானால் எனக்கும் அந்தப் பேரின்ப வாழ்வு கிடைக்கும்.
ஆகவே குருநாதர் பெற்ற நிலைகளைத் தியானித்து அந்த அருள் உணர்வுகளை எனக்குள் சேமித்து நீங்கள் எல்லாம் அதைப் பெற வேண்டும் என்பதற்காக நான் (ஞானகுரு) சதா தவமிருக்கின்றேன்.
அந்த தவத்தின் பலனை நீங்கள் பெற்று
1.மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நீங்கள் சொல்லும் பொழுது
2.அது எனக்கும் சொந்தம் ஆகின்றது உங்களுக்கும் சொந்தமாகிறது.
3.நாம் அனைவரும் அந்த மகரிஷிகள் வாழும் அருள் வட்டத்திற்குள் செல்வோம்.
அவர்களின் அருள் வட்டத்திற்குள் நாம் செல்ல வேண்டுமென்றால் நம் முன்னோர்களின் உயிரான்மாக்களை விண்ணில் செலுத்த வேண்டும்… செலுத்துவோம்…!


வரப் போகும் மாற்றத்திலிருந்து மீளுவதற்கும் வழி உண்டு
சக்தியின் சக்தி பெற்று இப்பூமியில் மனித ஆத்மா அறிவு நிலை பெற்று… ஆக்கத்தின் செழிப்பினால் அகிலத்தையும் ஆளும் செழிப்பை இப்பூமியில் பிறப்பெடுத்து வாழ்ந்து வழி பெற்ற சக்தி மட்டுமல்ல… இன்றுள்ள எண்ண வளர்ச்சியின் மனித ஆத்மாவாய் வாழும் பக்குவம் பெற்று… உயிரணுவிற்குத் தொடர்நிலை கொண்ட அமில சக்தி கூடப் “பல கோடி ஆண்டுகள் ஆயிற்று…”
பெரும் பாக்கிய சக்தி மனிதனாய் வாழும் சக்தியே…!
இயற்கையின் செழிப்பில் அன்பு கொண்ட இதயமாய் வாழ்ந்திட்ட நிலையையே அறிவில் மிஞ்சிய நிலை என்ற கணிப்பில் ஒவ்வோர் இடத்தில் வாழ்பவர்களும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர்களின் ஒருவரைத் தலைவனாக்கி… அரசாளும் நிலைப்படுத்தி, அவ்வட்டத்தின் வழியிலேயே சேர்ந்த இனத்தவரை எல்லாம் தனி ஓர் இனமாய்ப் பிரித்து ஜாதி வெறியூட்டி… ஒருவரின் உயர்வில் ஒருவர் பொறாமை கொண்டு இதன் தொடர்ச்சி நிலையிலேயே இன்றளவும் மனிதனின் எண்ண வளர்ச்சியுடனே இக்கலப்பான சக்தி நிலையை ஊட்டி,
1.இன்றைய மனிதன் ஒவ்வொருவனும் தனக்குள் உள்ள ஆண்டவனை மறந்து
2.தானும் இந்நாட்டின் மன்னன் என்றும் ஒவ்வொருவரின் மனப்பாங்கே இம்மதிப்பின் பேராசை வெறியில் வழி வந்துவிட்டது.
இன்று நம்முடன் வாழ்ந்திடும் மனிதர்களால் ஏற்படவில்லை இன்றைய இந்நிலை.
அன்றாண்ட 2000 ஆண்டுகளுக்கு முதலே ஆட்சி என்னும் வித்திட்டு “அழிவிற்கு மனித எண்ணங்களுக்குப் பாதை வகுத்துத் தந்தவர்கள் அன்றாண்ட அரசர்கள் தான்…”
இன்றைய செயற்கையில் இம்மனித எண்ணங்களின் நிலையே இன்று பிறப்பில் வந்திட்ட நிலை அல்ல. நற் சக்தியின் பயனும் சொல்லில் செயலும் மாறிவிட்டது.
இச் செயற்கையில் நம் பூமியின் பொக்கிஷத்தை உறிஞ்சி எடுத்ததல்லாமல் இப்பூமியிலிருந்து ஏவிவிட்ட விஷத்தன்மை கொண்ட ஊசிகளும் (இராக்கெட் – செயற்கைக் கோள்கள்) இன்றல்ல நேற்றல்ல இவ் ஏவுகணை அனுப்பும் நிலையே இப்பூமியில் பல நூறு ஆண்டுகளாகச் செயல்படுத்தி நம் பூமியின் வட்டத்திற்கு மேல் பால்வெளி மண்டலத்திற்கும் மற்ற கிரகங்களுக்கும் அனுப்புவித்த ஏவுகணைகள் எல்லாம் இப்பூமியில் ஏற்படும் இயற்கையின் மாற்றத்தினால் ஒவ்வொரு மண்டலத்திற்கும் இதன் தொடர்பினால் மாற்றம் ஏற்படப் போகின்றது என்பதனை உணர்த்தினேன்.
1.பால்வெளி மண்டலத்தில் ஏவச் செய்த விஷ ஊசிகளும் ஏவுகணைகளின் நிலையில் நிறைந்துள்ள அணுவிசை சக்திகளும்
2.இம்மாற்றத்தினால் அங்கங்கு செயலிழந்து அதனின் சுற்றலுக்குகந்த அருகாமை கொண்ட மண்டலங்களில் மோதி
3.அவற்றின் நிலையிலிருந்தும் பல தீய சக்திகள் ஏற்படப் போகின்றன.
இம்மனித ஆத்மாக்களின் சக்தியினால் இயற்கையின் சக்தியே மாற்றம் கொள்ளும் சீற்றம் கொள்ளும் நிலையெல்லாம் இம்மனித ஆத்மாவினால்தான் நடக்கப் போகின்றன.
1.இம்மனித ஆத்மாவினால் மண்டலமாய் உருக்கொண்டு சுழன்றிடவும் முடியும்
2.சுழற்சியின் சக்தியில் பல கோடி மண்டலங்களை வளர்த்திடவும் முடியும்.
ஆக்கத்தின் அறிவு சத்தியாய் ஒளிரும் ஆத்மாவையே அழிவின் சக்திக்கு அடிகோலும் பேராசைப் பேயின் நிலையில் சிக்குண்டு… தன் சக்தியைத் தானே இழந்து… கலியின் மாற்றத்தில் படப்போகும் இன்னலை உணர்ந்து “இங்கே உணர்த்திடும் இச்சக்தி நிலையை உணர்ந்து… உங்கள் ஆத்மாவின் சக்தியைச் செயலாக்கிடுங்கள்…”
நம் ஆத்மாவின் சக்தியைச் செயலாக்கினால் எந்நிலை பெறுவோம்…? சந்திரனின் நிலையை அன்று கேள்விக்குறியாக்கி நிறுத்தியுள்ளோம்.
இக்கலியின் மாற்றத்தினால் சந்திரனுக்கு நம் பூமியின் தொடர்பும் ஈர்ப்பு சக்தியும் பழக்கப்பட்டு வந்திட்ட நிலையினால் “இவ்வரப்போகும் சூரிய கிரகண நாளிலிருந்து சந்திரனுக்குச் சில சக்திகள் கூடப்போகின்றன…”
எந்நிலை…? என்ற வினா எழும்பலாம்.
சூரியனைத் தாண்டிக் கேது செல்லும் நிலையில் நம் பூமிக்குக் கேதுவின் விஷ அணுக்கள் கூடும் தருவாயிலும் நம் பூமி இன்று சுழன்று ஓடும் வட்டத்திலிருந்து கீழ் இறங்கிச் செல்லும் நிலையில்
1.நம் பூமியின் ஈர்ப்பு சக்தி நம் பூமியின் பொக்கிஷ அமில சக்தியின் இயற்கைத் தன்மை
2.சந்திரனின் வட்டத்திற்கு அதிகமாகச் செல்லும் நிலையில்,
3.இவ்வரப்போகும் சிறிய மாற்றத்தின் நாளிலிருந்தே
4.சந்திரனில் இன்றுள்ள நிலையைக் காட்டிலும் நீர்நிலைகள் அதிகரிக்கும் தன்மை கூடுகின்றது.
நம் பூமியின் பொக்கிஷ சக்தியே இந் நீர்நிலைகள் தான். சந்திரனும் நம் பூமியின் ஈர்ப்பால், இச்சக்தி நிலை கூடி, அதன் ஈர்ப்பில் அதன் சுவாசத்திற்கும், இதன் ஈர்ப்பின் சக்தியினால் அது ஈர்த்து வெளிப்படுத்தும் நிலையிலிருந்து, “ஒவ்வொரு நொடிக்கும் சந்திரனுக்கு வளர்ச்சி சக்தி கூடப்போகின்றது…”
இந்நிலையின் தொடர் வளர்ச்சி நிலை சந்திரனுக்கு உண்டு. மனித ஆத்மாவினால் மாறப் போகும் தன்மை நிலையிலிருந்து மீளுவதற்கும் இயற்கையில் சக்தி உண்டு.

நம்மைக் காப்போம்… ஊரைக் காப்போம்… உலகைக் காப்போம்… என்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்
மனிதனால் விடப்பட்ட தீய அணுக்களின் தன்மை தாவர இனங்களில் பட்டிருந்தால் அதிலே விஷ கிருமிகள் உருவாகித் தாவர இனங்களைத் தின்றுவிடும்.
ஆனால்
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் மேகங்களில் கலக்கச் செய்து அது மழையாகப் பொழிந்து
2.அந்த நீர் பூமியிலே பொழிந்து செடிகளில் பட்டால் செடியில் வரும் மணத்தை நுகர்ந்து அணுவாகி
3.அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்து அதனுடைய மலம் செடிகளில் படும்பொழுது உரமாகும்.
ஆகவே அடிக்கடி நாம் மகரிஷியின் அருள் சக்திகளை மேகங்களுடன் கலக்கச் செய்து நல்ல மழை பெய்ய வேண்டும் என்று நாம் தியானித்து வருதல் வேண்டும்.
தியான வழிகளில் எடுத்து நாம் இதைச் செய்தோம் என்றால் மற்ற விஷக் கிருமிகள் தாவர இனங்களுடன் படரப் படும்பொழுது அதைச் செயலற்றதாக்க முடியும்.
ஏனென்றால் மனிதனால் உருவாக்கப்பட்ட தீவிரவாதம் சங்கடம் சலிப்பு வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகள் தொடர்ந்து இந்தக் காற்றிலே படரப்படும் போது தான் அத்தகைய கிருமிகள் உருவாகின்றது.
1.நீங்கள் வேதனையுடன் ஒரு செடிக்கு நீரை ஊற்றிப் பாருங்கள்… இந்தச் செடி கருகிவிடும்
2.நீங்கள் வேதனையுடன் தொழில் செய்தால் அது வீணாகிவிடும்.
ஆனால் வேதனை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளையும் மேகங்களில் கலக்கச் செய்து மழை நீராகப் பொழியச் செய்தோம் என்றால் இந்தக் காற்றில் உள்ள நச்சுத் தன்மைகள் குறையும்.
தாவர இனங்களில் படும் பொழுது நல்ல அணுக்களாக உருவாகும் தாவர இனங்கள் செழித்து வளரும் அதனுடைய மலங்கள் செடிகளுக்கு நல்ல உரமாகும்.
இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும். அப்படி வந்துவிட்டால் நம் நாடும் செழிக்கும்.
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது போன்று
1.தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் பெற்ற அருள்
2.இன்று துருவ நட்சத்திரமாக இருப்பதை நாமும் பெற்று நமக்குள் வரும் இருளை நீக்கி
3.நமது மூச்சும் பேச்சும் புவியில் உள்ள இருளை நீக்கி கேட்போர் உணர்வுகளில் இருளை நீக்கி
4.தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வுகள் பெறச் செய்ய முடியும்.
அந்த அருள் ஞான சக்தி நீங்கள் பெற குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெற்று இருளை நீக்கி உலக இருளை நீக்கி… அருள் வழி வாழச் செய்யும் அருள் ஞான உலகைச் சிருஷ்டிக்கும் சக்தியாக “உங்கள் மூச்சலைகள் படரட்டும்…”
உங்கள் குடும்பத்தில் வளரும் குழந்தைகள் அந்த அருள் வழி வளரட்டும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் உலகமாக சிருஷ்டியுங்கள்.
1.இன்றைய விஞ்ஞான உலகில் அஞ்ஞான நிலையாக இருள் சூழச் செய்யும் நஞ்சிலிருந்து விடுபட்டு
2.அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்து மெய் ஞானத்தின் உணர்வின் தன்மை பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து
3.நம்மைக் காப்போம்… ஊரைக் காப்போம்… உலகைக் காப்போம்… என்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்.
இந்த உடலுக்குப்பின் நாம் பிறவி இல்லை என்ற நிலையை அடைவோம்.

அகஸ்தியரின் அருளைப் பெறச் செய்யும் தியானப் பயிற்சி
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி தாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்தியன் தன் வாழ்நாளில்…
1.நஞ்சினை வென்று இருளினை அகற்றி உண்மையின் உணர்வை அறிந்து
2.அவனில் விளைந்து வெளிப்படுத்திய அந்த உணர்வினைப் பெற வேண்டும் என்று
3.புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் வேண்டி
4.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
கண்களை மூடி கண்ணின் நினைவை புருவ மத்தியில் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி அகஸ்தியன் அவன் வாழ்நாளில் நஞ்சை வென்று இருளை அகற்றி உண்மையின் உணர்வை அறிந்த… “அந்த அரும்பெரும் சக்தியைப் பெற வேண்டும்” என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.அந்த அரும்பெரும் சக்தியைப் பெறவேண்டும் என்று
2.“இப்பொழுது எத்தனை நேரம் இதை எண்ணுகின்றீர்களோ”
3.ஓ…ம் நமச்சிவாய என்று அதை உங்களுக்குள் சிவமாக்குகின்றது உயிர்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப உங்கள் நினைவாற்றலை உயிரான ஈசனிடம் ஒன்றி… ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.நாங்கள் என்றால் நம் உடலுக்குள் இருக்கும் அனைத்தும் சேர்த்து நாங்கள் என்று ஆகின்றது
2.நாம் என்ற நிலையில் ஒன்றிணைந்து அந்தச் சக்தியைப் பெற வேண்டும்.
நஞ்சினை வென்ற இருளை அகற்றிய அந்த அரும் பெரும் சக்தியை நுகரப்படும் பொழுது உங்கள் உடலில் நோய் இருந்தாலும் மன நோய் இருந்தாலும் வேதனைப்படும் நிலையோ நுகர்ந்தது இப்படிப் பல விதமான விஷத்தன்மையாக இருந்தால்
1.அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுது
2.உங்கள் உடலில் உள்ள அந்த நஞ்சின் தன்மை பலவீனமடையும்… இந்த உணர்வினை நீங்களும் அறியலாம்.
3.இப்பொழுது நல்ல சிந்தனையின் உணர்வுகள் உங்களில் உருவாகும்.
4.உடலில் மகிழ்ச்சி என்ற உணர்வுகளை ஊட்டும்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்களில் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
காவியத் தொகுப்பில் “கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…” என்று காட்டியிருப்பார்கள். அதாவது…
1.இப்பொழுது நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும்
2.நம் உடலுக்குள் உருப்பெறுகின்றது குழந்தைகளாக.
அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குப் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவு கொண்டு பாய்ச்சப்படும் பொழுது அருள் உணர்வுகளை நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் இந்த உணர்வினை அது பெறுகின்றது… இந்த உணர்ச்சி உடலுக்குள் அது உருப்பெறுகின்றது.
அது தான் கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்பது.
கண்ணின் நினைவை அகஸ்திய மாமகரிஷியின் பால் செலுத்தி அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்தநாளங்களில் கலந்து உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்தியன் திருமணம் ஆகி கணவன் மனைவி இரு மனமும் ஒன்றெனெ இணைந்து… பேரருள் பெற்று இருளை அகற்றி நஞ்சினை வென்றிடும் அந்தப் பேரருள் பெற்ற… “இருவரில் விளைந்த அருள் உணர்வுகளை” நாமும் நுகர்ந்தறிந்து நம் உடலில் உருவாக்குவோம்.
துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி உயிரான ஈசனிடம் வேண்டி “துருவ மகரிஷி பெற்ற அந்த அரும்பெரும் சக்தி” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று… கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி துருவ மகரிஷி பெற்ற அருள் சக்தி உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்தியனும் அவர் மனைவியும் துருவத்தையே எல்லையாக வைத்து இருவரும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றித் துருவ நட்சத்திரமாக நிலை கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவினைப் புருவ மத்தியில் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி உயிருடன் இணைந்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
அதனின்று வரும் உணர்வுகளை ஏங்கி நீங்கள் தியானியுங்கள்.
1.நுகர்ந்த உணர்வுகளை உங்கள் உயிர் ஓம் நமச்சிவாய என்று உங்கள் உடலுக்குள்
2.தீமைகளை அகற்றிடும் பேரருள் பெறும் அருள் ஞானத்தை உங்களுக்குள் அணுவாக உருவாகச் செய்யுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி… “உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தில் இணைத்து” அதனின்று வரும் பேரருளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்துவிட்டு
2.அதன் உணர்வை நாம் பெற வேண்டும் என்று ஏங்கி இதைத் தியானியுங்கள்
உங்கள் உடலில் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

மகரிஷிகளுக்கும் ஆசை உண்டு
ஒன்றின் துணையுடன் ஒன்றியே மற்றொன்றின் செயல் உள்ளது. தொடர் நிலை இல்லாத செயல் எதுவுமே இல்லை. பால்வெளி மண்டலத்திற்கும் மற்ற சக்தியை ஈர்த்துச் செயலாக்கும் சக்தி உண்டு.
வானமும் பூமியும் எதுவுமே ஒன்றின் தொடரில்லாமல் ஒன்றில்லை. வியாழனின் நிலையை அன்று கேள்விக்குறியாக்கி… வியாழனில் இருந்து நம் பூமிக்கு எப்படி அணுக்கள் வந்து தோன்றின…? என்பதனை உணர்த்தத் தொடர் கொண்டு நிறுத்தியுள்ளேன்.
1.நம்மை ஒத்த மனித ஆத்மாக்கள் வாழ்ந்த பூமிதான் வியாழன் மண்டலம்.
2.ஆனால் இன்று மனித உடல் கொண்ட அறிவு நிலையும் செயல் திறமையும்
3.எண்ணத்தின் வளர்ச்சி சக்தி கொண்ட மனித ஆத்மாக்கள் அங்கில்லை.
4.ஆனால் அங்கிருந்து வந்தவர்கள்தான் நாம் எல்லோரும்.
இம்மனித உடல் எய்தி வாழ்ந்திடும் ஆத்மாக்களில் முதலில் தோன்றிய உயிரணுக்களின் தொடர் சக்தி வியாழனிலிருந்து வந்ததுதான்.
நம்மை ஒத்த மனித ஆத்மாக்கள் அங்கு வாழ்ந்த காலத்திலேயே… தன் அறிவினால் எண்ணத்தில் ஜெயம் கொண்டு சூட்சுமம் கொண்டோரின் சக்தியினால் வியாழனின் சக்தித் திறனை நம் பூமி ஈர்த்து வாழப் பழகிக் கொண்டவுடன்
1.சூட்சுமத்தில் உள்ளோரால் (வியாழனிலிருந்து சூட்சுமம் கொண்டவர்கள்) நம் பூமியின் இயற்கையின் வியாழனின் சக்தித் தன்மை கூடி
2.நீர்நிலைகள் பெருக்கம் கொண்டு மனித ஆத்மாக்கள் வாழ்ந்திடும் பக்குவ நிலை வந்தடைந்த பிறகு
3.இச் சூட்சுமத்தில் அங்கிருந்து வாழ்ந்து வந்தவர்களால் அவர்களின் தொடர் சக்தியை இப் பூமியில் வளர விட்டு
4.அதன் தொடர் நிலையிலிருந்து வந்ததுதான் இக் கலிகாலம் வரை.
இச்சூட்சுமம் கொண்டு செயல்படுபவர்களிலும் தன் இனப் பெருக்கத்தைச் செயலாக்கும் ஆசை நிலையுண்டு.
எப்படி இன்று நம் பூமியில் வந்து வாழ்ந்து சூட்சுமம் கொண்ட முருக ஜெபத்துடன் ஒன்றிய போகரினால் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது செயலைக் கொண்டு பல மருத்துவ நிலைகளையும் பக்தி நூலையும் ஏடுகளையும் இப் பூமியில் பதியச் செய்தார்.
தன் நிலை உணரவும் தன் சக்தியின் சக்தியைப் பலருக்கும் பரப்பும் ஆசையுடன் செய்திட்ட நிலை போகரின் நிலை.
முருகரின் பக்தி கொண்டு முருகருடன் ஒன்றிய எண்ணம் கொண்டோருக்கெல்லாம் போகரின் சக்தியில் ஈர்த்து செயல்படுத்தி அவ்வட்டத்தின் வளர்ச்சியையே ஓங்கச் செய்கின்றார்.
1.மனித ஆத்மாக்களுக்கு மட்டுமல்ல ஆசை நிலை… ரிஷிகளுக்கும் அவ் ஆசை உண்டு… ஆசையில்லா விட்டால் எதுவுமே இல்லை
2.பேராசைப் பிடியில் சிக்குண்டு அடிமைப்படாமல் அன்பான ஆசையில் தான் அனைத்துமே செயல் கொள்கின்றது
3.வியாழனில் வாழ்ந்தவரின் ஆசையினால் நம் பூமி சக்தி பெற்றது.
4.நம் பூமியில் வாழ்ந்து செயல் கொண்டு சூட்சுமம் கொண்டோரினால் சந்திரனில் சக்தி நிலை கூடப் போகின்றது
5.சந்திரனுக்கு நம்மை ஒத்த உயிராத்மாக்கள் சென்று வாழ்வதற்கே இச் சூட்சுமம் கொள்வோரின் சக்தியினால் தான் செயல்படுத்திட முடிந்திடும்.
இப்பொழுது செப்பிடும் சந்திரனில் மனித ஆத்மாக்கள் வாழப்போகும் நாட்களின் நிலை, ஒரு வருடம் அல்ல… இரண்டு வருடம் அல்ல… ஆயிரம் ஆண்டு காலம் ஆனாலும் ஆகலாம்.
பல கோடி ஆண்டுகளாய் பல நற் சக்திகளை ஈர்த்து இயற்கையிலே பல பொக்கிஷங்களைப் பெற்றிட்ட நம் பூமியே… இக்கலியினால் கலியில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களினால் மாற்றம் கொள்ளப் போகின்றது.
நம் பூமியின் மாற்றத்தினால் இக்கலியினால் வந்த மனித ஆத்மாவினால் நிகழப் போகும் இயற்கையின் கொடுமையான மாற்றத்தினால் நம் பூமி மட்டுமல்ல… இதன் தொடர்பினால்
1.ஒவ்வொரு மண்டலத்திற்கும் இம்மாற்ற நிலை ஏற்பட்டு
2.பால்வெளி மண்டலமும் நம் சூரியனும் பல கோடி நட்சத்திர மண்டலங்களும்
3.எழுத்திலும் எண்ணத்திலும் எண்ணத்தகா மாற்ற நிலை இக்குறுகிய காலத்தில் நிகழத்தான் போகின்றது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இரண்யன் தனக்கு எதிலேயும் தனக்கு இறப்பு வரக்கூடாது என்றுதான் வரம் கேட்டான்.
1.ஆகையினால் அவனைக் கொல்லவில்லை.
2.ஆனால் தீமைகளையும் பகைமைகளையும் உள்ளே போகாதபடி தள்ளி விடுகின்றது… (நரசிம்மா) தீமைகளை வளர்க்கவில்லை.
நன்றாக இதைக் கவனித்துப் பாருங்கள். காவியத்தை ஞானிகள் எப்படிப் படைத்துள்ளார்கள்…? தெளிவாக நமக்கு எப்படிக் காட்டி இருக்கிறார்கள்…? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
விஷ்ணு அவனைக் கொன்றானா… இல்லை…! மடி மீது வைத்து இங்கே உள்ளே வராதபடி தடுத்து விட்டான். “இரண்யனைப் பிளந்தான்…” என்றால் தனக்குள் இருக்கக்கூடிய பல விதமான தீமை செய்யும் உணர்வுகளை விலக்கித் தள்ளி விடுகின்றது.
1.அருள் உணர்வுகள் எதை நாம் அரவணைத்தோமோ அதை உயிருடன் சேர்த்துக் கொள்கிறது.
2.அந்த அறிவின் தன்மை நமக்குள் பெருகுகின்றது.
அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து ஒவ்வொரு நாளும் நாம் வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் நாம் ஈர்க்க மறுத்த தீமைகளைச் சூரியன் கவர்ந்து மேலே கொண்டு சென்றுவிடுகிறது
ஏனென்றால் நம் கண்ணின் நினைவு உயிருடன் ஒன்றி அங்கே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செல்கின்றது. அந்த உணர்வின் தன்மை நமக்குள் வரும் பொழுது பகைமை உணர்வுகளை எல்லாம் அகற்றி விடுகின்றது.
வைரத்தைப் போன்று சொல்லில் ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிக்கும் நாங்கள் எல்லோரும் பெற வேண்டும். எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் என்று எல்லோரும் எண்ண வேண்டும்.
அப்படி எண்ணும் பொழுது அந்தப் பகைமைகளையும் அசுர குணங்களையும் தள்ளிவிட்டு விடுகின்றது. நாம் யாரும் அதை ஈர்க்கவில்லை என்கிற போது சூரியன் காலையில் ஆறு மணிக்கெல்லாம் கவர்ந்து மேலே இழுத்துச் சென்று விடுகின்றது.
அது இறப்பதில்லை… அதனால் தான் எனக்கு எதிலுமே இறப்பில்லை என்று இரண்யன் கேட்டான் என்று சொல்வது. ஆக… வெளியிலே வந்தபின் நாராயணன் (சூரியன்) அவனைக் கவர்ந்து கொள்கின்றான்.
காரணம் அவன் கொடுத்த வரம் தானே அது.
1.இந்த விஷம் இல்லையென்றால் அந்த்ச் சூரியனே இயங்காது.
2.ஒவ்வொரு அணுவிலும் இந்த விஷம் இல்லை என்றால் அதனின் உணர்ச்சிகள் இயங்காது… எந்தக் குணமும் அது இயங்காது.
எல்லாவற்றையும் இயக்குவதற்கு நானே தான் மூலம்… அதே சமயத்தில் அதை அடக்குவதற்கும் நானே தான் மூலம்… “என்னால்தான்…” என்று இரண்யன் சொல்கின்றான்.
விஷத்திற்கு வலு கூட்டக் கூடாது என்று தான் அந்த அசுர சக்திகளைக் கண்ணன் வீழ்த்தினான் என்று தீப ஒளித் திருநாளாகக் காட்டுகின்றார்கள்.
மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும். அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நம் ஆன்மாவில் புத்தாடையாக அணிய வேண்டும்.
ஒளியை எடுத்த பின் வேதனைப்படுத்தும் உணர்வுகள் உள்ளே செல்லாதபடி நீக்கி விடுகிறோம். நமக்குள் அதை வளர விடுவதிலலை.
1.விஷ்ணு இதைச் செய்கிறான்… இரண்யனோ அங்கே நாராயணனிடம் சேர்ந்து விடுகின்றான்.
2.அவன் கேட்டபடி வரப்படி அவனைக் கொல்லவில்லை… அழிக்கவில்லை.
3.ஆனாலும் அந்த தீமையை வளர்க்க விடாதபடி தள்ளி விடுகின்றான் – நரசிம்மா…!
துருவ நட்சத்திரம் ஆகும்போது தனது பங்காக ஒளியாக மாற்றுகின்றது. பாசிட்டிவ் நெகட்டிவ் பாசிடிவ்…! சுழற்சியின் மோதலில் தான் ஒளியே வருகிறது சூரியனுக்கு. அதே உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கும் போது ஒளியாக மாற்றுகின்றது.
விஷம் இல்லை என்றால் அந்த உணர்ச்சியின் ஒளி அலைகள் பரவாது. இருளுக்குள் அடங்கி ஒளியாகப் பரவும். காரணம்…
1.ஒரு பொருளுக்குள் அந்த விஷத்தின் தன்மை இல்லை என்றால்
2.அந்தப் பொருளின் சக்தியை ஒளியாகக் காட்டாது… அந்த அறிவால் இயக்காது.
3.எந்தப் பொருளில் விஷம் கலக்கிறதோ அந்தப் பொருளின் மணத்தை வீரியமாக அதனின் உணர்ச்சியை ஊட்டுகிறது.
இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அந்த ஞானிகள் கண்ட மூலங்களை உங்களுக்குப் பிரித்துக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).


போகாப்புனல்
நாம் எடுக்கும் தியானத்தின் வலுகொண்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் அனைத்தையும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடலில் பெற்ற நஞ்சினை கரைக்கச் செய்து பிறவில்லா நிலையை அடையச் செய்வோம்.
உடலை விட்டுச் சென்ற அந்த ஆன்மாக்கள் துயர்படும் உணர்வினைக் கரைத்து விட்டு துயரற்ற உணர்வாக என்றும் ஏகாந்த நிலை வாழ முடியும். இது மனிதனின் கடைசி நிலை பிறவி இல்லா நிலை.
1.எத்தனையோ கோடித் துன்பங்களை அனுபவித்தோம்… மனிதனான பின் துன்பத்தை அகற்றிடும் அருள் சக்தி பெற்றோம்
2.துன்பத்தை அகற்றி நஞ்சினை வென்று உணர்வினைப் பேரருளாக மாற்றிய
3.துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த அருளை நாம் பெற்று நமக்குள் உருவாக்கிக் கொண்டால் ஏகாந்த நிலை அடையலாம்…
4.இருளை மாற்றி ஒளியின் உணர்வாக நமக்குள் உருவாக்குதலே மனிதனின் ஆறாவது அறிவின் தன்மை.
அது தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான்.
தீமை அகற்றிய அருள் ஞானிகள் உணர்வை நுகந்து பகைமை என்ற உணர்வோ நஞ்சு என்ற உணர்வோ இருள் என்ற உணர்வோ அறியாமை போன்ற நிலைகளையோ மாற்றிப் பேரருள் உணர்வுகளை நமக்குள் வளர்த்திடல் வேண்டும்.
வாழ்க்கையில் நமது ஆசைகள் எவ்வாறு பக்தி கொண்டோ மற்றவர் அன்பு கொண்டோ நமக்குள் வளர்த்தாலும் பக்தியின் நிலைகள் கொண்டு வேதனை என்ற உணர்வுகள் கலந்தால் அன்பு கொண்டு அந்த உணர்வின் தன்மை அரவணைத்தாலும் அதனுடன் இணைந்து அந்த உணர்வின் தன்மை விஷத்தன்மையாக வரப்படும் பொழுது சாகாக் கலை.
இந்த உடலில் எதனை வளர்த்தோமோ இந்த உணர்வின் தன்மை மற்ற மனிதனின் உடலுக்குள் சென்று சாகாக்கலையாக இதையே உருவாக்கும்.
ஒரு மனிதன் நெருப்பிலே குதித்தால் உடல் கருகுகின்றது உயிர் வேகுவதில்லை. ஆகவே
1.இந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் வலுவாகத்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் நாம் ஒன்றிவிட்டால் வேகாநிலை அடைகின்றது.
3.பிரபஞ்சத்திலும் அகண்ட அண்டத்திலும் வரும் நஞ்சு இதை அழித்து விட முடியாது.
இதைத் தான் சாகாக்கலை வேகாநிலை போகாப்புனல் என்று அன்று வள்ளலார் பாடியது.
இந்த வாழ்க்கையில் நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் சாகாக் கலையாக மாறுகின்றது அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றினால் வேகாநிலை என்ற நிலை பெறுகின்றது.
போகாப்புனல்…! பேரருள் என்ற உணர்வின் தன்மை நமக்குள் பெருக்கிக் கொண்டால் இன்னொரு உடலுக்குள் புகுவதில்லை நாம் பிறவியிலா நிலை அடைய முடியும்.
இந்த வாழ்க்கையில் சாகாக்கலை என்ற நிலையிலிருந்து
1.உணர்வுகளை உயிருடன் ஒன்றி வேகாநிலை அடைந்தால்
2.இன்னொரு உடலுக்குள் போக முடியாது என்று அன்று வள்ளலார் தெளிவாகப் பாடியுள்ளார்.
அவர் சொன்ன மூலக்கூறை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அருள் பெறும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை… நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த அருளைப் பெறுகின்றது உயிர். அது தனிப் பெரும் கருணையாக வளர்கின்றது
நாம் எண்ணியது எதுவோ அதன் உணர்வின் அறிவாக நம்மை இயக்குகின்றது என்ற நிலையினை தெளிவாக அவர் கூறியுள்ளார் இராமலிங்க அடிகள்.
1.அவர் பெற்ற உண்மையின் உணர்வுகளும் அவர் வெளிப்படுத்திய நிலைகளும் இங்கே உண்டு
2.அவர்கள் பெற்ற அருள் ஞானத்தைப் உணர்வினை நாமும் நுகர்ந்தறிய முடியும்.
3.வாழ்க்கையில் வரும் இருளை அகற்ற முடியும் என்றும் பேரானந்த நிலை கொண்டு வாழ முடியும்.
அந்த நிலையை நாம் அனைவரும் பெறுவோம்.

உணவில்லாமல் எச்சக்தியும் செயல்படுவதில்லை
இவ்வுலகமே…
1.இக்காற்றுடன் பால்வெளி மண்டலத்தில் உள்ள அமில சக்தியையும்
2.இப்பூமியின் மேல் மட்டத்தில் இப்பூமி சுழலும் வேகத்தில் அதன் ஈர்ப்பில் சூரியனிலிருந்து வெளிப்படும் அமில சக்தியையும்
3.மற்ற மண்டலங்களின் சக்தியையும் தன் சுவாசமுடன் உணவாய் ஈர்த்து
4.அதன் சக்தியைத் தன் மண்டலத்திற்கு வேண்டிய அமிலத்தைச் சேமித்துத் தான்
5.பூமியின் கழிவான உஷ்ண அலைகள் வெளிப்பட்டுப் பல நிலைகள் ஏற்படுகின்றன.
இம்மனித உடலுக்கு நாம் உண்ணும் உணவு எப்படி அமிலமாய், ஆவி நிலை கொண்டு நம் உடம்பில் உள்ள இரத்த நாளங்களில் அச்சக்தி மோதி இவ் ஆவியான அமில உணவே உதிரமாய் உருப்பெற்று நம் உடலில் உள்ள அனைத்துப் பாகங்களின் செயலுக்கும் அவ் உதிரமே பல அணுக்களாய் அவற்றிலிருந்து எடுக்கும் சக்தியைக் கொண்டுதான் நம் உடலிலுள்ள ஒவ்வோர் உறுப்பும் அததற்கு வேண்டிய அமில உணவை உண்டு எலும்பாகவும் மயிர்க்கால்களாகவும் நகங்களாகவும் வளர்ந்து கொண்டே உள்ளன.
எலும்பின் வளர்ச்சி வளர்ந்து கொண்டே இருந்தால் நம் உருவ அமைப்பும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா…? ஆனால் குறிப்பிட்ட கால வயதுக்குப் பிறகு இவ்வளர்ச்சியின் நிலை மாறு கொள்ளுகின்றது.
குழந்தையின் எலும்பின் உறுதித் தன்மைக்கும் வளர வளர முதியோர்களான பிறகு உள்ள எலும்பின் உறுதிக்கும் மாற்றம் உள்ளது.
1.எப்படி யானையின் தந்தம் வயதான பிறகு அதனுடைய உறுதி கூடுகிறதோ
2.அந்நிலை போன்று தான் எலும்பின் வளர்ச்சி நிலையும்.
குறிப்பிட்ட வயது வரம்பிற்குப் பிறகு உடல் வளர்ச்சி மாற்றம் கொள்ளும் நாளிலிருந்து வெளி வளர்ச்சிக்கு மேல் நம் (மனிதனின்) உள் உறுப்புகளில் ஏற்படும் வளர்ச்சியில் மாற்றங்கள் உண்டு.
நாம் உண்ணும் உணவிலிருந்து சுரக்கும் “அமில சக்தியின் ஆவி நிலைதான்” நம் உடலிற்கு சக்தி தரும் நிலை.
நம் பழக்க வழக்கப்படி நம் உடலை எந்நிலையின் உணவை உண்டு பழகியுள்ளோமோ அவ்வமில சக்தியின் வளர்ச்சியின் நிலைகொண்ட நிலையைத் தான் நம் உடல் ஏற்கிறது.
பட்டுப்புழு முசுக்கொட்டைத் தளையை மட்டும் உண்டு அதிலிருந்து எடுத்த ஆவியின் அமிலத்தினால் எப்படிப் பட்டை எடுக்கின்றோம்…?
1.அப்பட்டுப்புழுவிற்கே முசுக்கொட்டைத் தளையைத் தவிர வேறு உணவை உண்டால் அதன் நிலையில் இப்பட்டை நாம் எடுத்திட முடிந்திடாது.
2.அதைப்போல் தான் ஒவ்வொன்றின் நிலைக்கும் செயல்நிலை நடக்கின்றது.
3.மனிதனின் நிலையும் அதுவே… மற்ற எல்லா மண்டலங்களின் நிலையும் அதுவே.
உணவில்லாமல் எச்சக்தியும் செயல்படுவதில்லை.
ஒன்று உண்டு அது வெளிப்படுத்தும் கழிவில் இருந்து மற்றொன்றின் வளர்ச்சி ஏற்படுகின்றது.
இவ் உடல் கோளத்திலேயே பல உயிரணுக்கள் வாழ்கின்றன. அவை அவை உண்டு வெளிப்படுத்தும் அமிலத்தில் இருந்து தான் மற்ற நிலைகள் ஏற்படுகின்றன.
நாம் உண்ணும் உணவு ஆவியாய் அமிலமாய் உதிர சக்தி பெறுகின்றது. அவ்வாவியான பிறகு நாம் உண்ட உணவின் தன்மை அதன் சக்கை மலமாய் வெளிப்படுகின்றது.
இவ்வாவி அமில உதிர சக்திதான் அதில் வளரும் உயிரணுக்களின் நிலையைக் கொண்டு நம் உடம்பில் உள்ள மயிர்க்கால்கள் வளர்ச்சி பெறுகின்றன.
ஒவ்வொரு முடியும் வளர்வதற்கே அவ் உயிரணுக்களின் நிலையில் இருந்தால்தான் வளர்ந்திடும்.
1.இந்நிலையை வைத்துத் தான் முன் பாடத்தில் நம் ஆத்மாவுடன் நம் உயிர் மட்டுமல்ல
2.பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தீமையை அகற்றும் வல்லமையை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
1.ஒவ்வொருவரும் நம் குருநாதரைப் போன்று ஆகவேண்டும்… குருநாதராக மாற வேண்டும்.
2.சாமி (ஞானகுரு) தான் பக்கத்திலிருந்து கொடுப்பார்… என்று எண்ணாதீர்கள்.
குருநாதர் கொடுத்த ஞான வித்தை உங்களிடம் விதைக்கின்றேன். நீங்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். “சாமி செய்வார்…” என்று எண்ணி அதை வளர்தது விடாதீர்கள்.
எல்லாவற்றையும் சாமி பார்த்துக் கொள்வார்… எல்லாமே சாமி செய்வார்… நாங்கள் வளர்ந்து விடுவோம்…! என்று எண்ணினால் அது எப்படி வளர முடியும்…?
எல்லாமே சாமி பார்த்துக் கொள்வார் என்று உங்களுக்குப் பதிலாக நான் சாப்பிட்டால்… நீங்கள் பட்டினியாக இருந்தால் யார் பார்ப்பது…?
1.நம்பிக்கை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
2.தன்னை நம்புவதில்லை… சாமியைத் (ஞானகுரு) தான் நம்புகிறார்கள்.
ஆனால் “சாமி சொன்ன அருளை நமக்குள் வளர்த்துக் கொண்டோம்…” என்றால்
1.அது எவ்வளவு பெரிய வேலை செய்யும்…? என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
2.யாம் சொல்லும் அருள் ஞானிகளைப் பற்றிய உபதேசங்களை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
3.அப்போது தான் உங்களுக்குள் இது பெருகி விளையும்.
உதாரணமாக ஒருவரைப் பார்த்து “அவர் மோசமான ஆள்… ரொம்பவும் மோசமான ஆள்…!” என்று பேசிக் கொண்டே இருங்கள். உங்களுக்குள் அது அதிகமாக விளையும்… பார்க்கலாம் நீங்கள்.
வீட்டிற்குள் நுழைந்தால் சண்டை நிச்சயம் வரும்… உங்கள் வியாபாரம் மந்தமாகும்… இப்படிச் செய்கிறார் என்று யாருடனாவது வம்புக்கு இழுத்துக் கொண்டு போகும்.
ஆக எதைப் பேசுகின்றோம்…? குறைகளைத் தான் பேசுகின்றோம்.
1.அதை எல்லாம் நீக்குவதற்குண்டான மார்க்கங்களை நீங்கள் பேசிப் பாருங்கள்.
2.யாம் சொல்லும் இந்தப் பேருண்மைகளை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
குறை என்று தெரிகின்றது. அடுத்த கணம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைத் தனக்குள் எடுத்து அவர்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்களை அறியாது சேர்ந்த இருளை நீக்க வேண்டும்..! என்று இதனைக் கலந்து நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
குறை நமக்குள் வளரவே வளராது…! அவர்களுக்குள்ளும் வளராது தடுத்துவிடும்.
அருள் வழியில் இப்படி நடக்க வேண்டும் என்று இதனை எடுத்துச் சொல்லுங்கள். தீமைகள் பாதிக்காது என்றும் எடுத்துச் சொல்லுங்கள். இதை எல்லாம் தெளிவாகவே ஞானிகள் நமக்குக் கொடுக்கின்றார்கள்.
ஆனால் குறைகளைச் சொல்லிச் சொல்லி அதையே ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் போது அது என்னையும் தாக்குகின்றது. என்னை நான் பாதுகாத்துக் கொள்ளவே பெரிய கோட்டை கட்ட வேண்டி இருக்கின்றது. அமைதியாக உட்கார வேண்டி இருக்கின்றது.
உங்களுக்குச் சக்தியும் கொடுத்து அதே சமயத்தில் நீங்கள் அறியாது ஏதாவது செய்தாலும் அந்தத் தீமை வராது காக்கக்கூடிய சக்தியாகவும் நான் இருக்கின்றேன்.
“குருநாதர் ஒளியாகி விட்டார்…” என்று அவரை விட்டுவிட்டு நான் தனியாக இருந்தால் என்ன ஆகும்…?
1.அவர் என்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னால்…
2.அவர் சொன்னபடி அந்த எண்ணத்தை எடுத்தால் என்னைக் காப்பாற்றும்.
கடையிலிருந்து சரக்குகளை வாங்கிக் கொண்டு வந்தாலும் அதை சமைத்துச் சாப்பிட்டால் தானே சரியாக இருக்கும். சமைக்காமல் சாப்பிட முடியுமா…?
ஆகவே அந்த அருள் ஒளியை எடுத்து நமக்குள் சமைக்க வேண்டும். உயர்ந்த சக்திகளை எடுத்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுத்துப் பழக வேண்டும்.
குருநாதர் எனக்குக் கொடுத்த அதே வழியில் தான் உங்களுக்கும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.


துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்
அகஸ்தியன் தான் கண்ட உண்மைகள் அனைத்தையும் தன் மனைவி பெற வேண்டும் என்று தன் மனைவிக்குச் சொல்கிறான். அதன் வழி கொண்டு
1.இருவருமே துருவத்தை உற்று நோக்கி அந்த ஆற்றலை நுகரும் பொழுது துருவ மகரிஷியாகின்றார்கள்.
2.துருவத்திலிருந்து வரக்கூடிய உணர்வை தங்களுக்குள் உருவாக்கும் சக்தி பெறுகின்றார்கள்.
துருவத்தின் வழியாக நுகரும் தன்மை வரும் போது 27 நட்சத்திரங்களின் மின்னணுக்களை அது பரப்புகின்றது. அதை உற்று நோக்குகின்றனர். அந்த மின் கதிர்களைத் தங்களுக்குள் அடங்கச் செய்கின்றனர் அவர் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைப் பெறுகின்றது.
ஒரு நட்சத்திரமும் இன்னொரு எதிர்நிலையான நட்சத்திர உணர்வும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது தான் அதனுடன் சேர்ந்து வியாழன் கோளின் கதிரியக்கப் பொறி தாக்கப்பட்ட பின் அனைத்தும் ஒன்றாகக் கலந்து துடிக்கும் நிலை வருகின்றது. அப்போது தான் உயிரணு என்ற நிலை வருகின்றது.
ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது மின் கதிரியக்கங்களை உருவாக்குகின்றது உயிர் எதனை நுகர்கின்றதோ உணர்வுக்கொப்ப கதிரியக்கங்களாக மாற்றுகின்றது அந்த உணர்வை உடலாக மாற்றுகின்றது.
அந்த உணர்வின் தன்மை உறையும் தன்மை பெற்று ஜீவ அணுவாகி அந்த அணுவின் மலம் அந்தந்த உணர்வுக்கொப்ப உடலின் அமைப்புகளாக உருவாகின்றது.
இதை எல்லாம் கண்டுணர்ந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி தனக்குள் உருவாக்கும் தன்மை பெறுகின்றான். உண்மையின் இயக்கத்தை அறிந்தான். இந்த உணர்வின் ஆற்றலைக் கணவன் மனைவி இருவருமே தங்களுக்குள் பெருக்கிக் கொண்டார்கள்.
எந்தத் துருவத்தில் இருந்து வருகின்றதோ
1.அதன் வழி வரும் நட்சத்திரங்களின் உணர்வனைத்தும் நுகர்ந்து
2.தன் உடலுக்குள் இருக்கும் அணுக்களை இந்த உயிரைப் போன்றே
3.எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் உணர்வின் அணுக்களாக ஒன்றாக இணைத்தான்.
(மின்னல்) மின் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அளவில்லாத தூரங்களுக்குப் பரவிச் செல்கின்றது. பல லட்சம் மைல்களுக்கு அப்பால் கூடச் செல்கிறது. அந்த ஒளிக்கற்றைகளை நாம் காண நேருகின்றது உலகம் முழுவதும் பரவுகின்றது.
அதை எல்லாம் வானளாவிய நிலைகள் கொண்டு இருளை நீக்கி பொருள் காணும் நிலையாகக் காணுகின்றனர் அகஸ்தியனும் அவன் மனைவியும். அகண்ட அண்டம் அது எப்படி உருவானது…? என்பதையும் கண்டறிகின்றனர்.
1.நஞ்சினை நீக்கி ஒளியாக மாற்றிடும் அந்த சக்தி இருவரும் பெற்றபின்
2.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் உயிரைப் போன்று
3,ஒத்த நிலைகள் கொண்டு ஒன்றாக ஒளியாக இணைக்கின்றனர்.
சூரியன் பல மண்டலங்களில் இருந்து எடுக்கும் விஷத்தன்மைகளை உணவாக எடுத்துக் கொண்டாலும் தனக்குள் உருவாகும் பாதரசத்தால் மோதப்பட்டு விஷத்தின் தன்மையைப் பிரித்து இந்தப் பிரபஞ்சத்தை ஒளிமயமாக ஆக்கச் செய்கின்றது.
இதைப் போன்று தான் மனிதனான பின் ஆறாவது அறிவு கொண்டு விஷம் என்ற உணர்வு தனக்குள் சாடாது தீமைகளை நீக்கி விட்டால்… உயிர் என்ற நிலையில் ஒளி என்ற நிலையை அடையும் பொழுது… இருள் என்ற நிலை வராது தடுத்து ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குகின்றது.
அப்படிப் பெற்றது தான் துருவ நட்சத்திரம்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கலந்து அலைகளாக மாற்றிப் படரச் செய்கின்றது. “அதை மனிதர்கள் நுகர்ந்தால்” இருளை நீக்கி விட்டுப் பொருள் காணும் அருள் சக்தி பெறுகின்றார்கள்.
அந்த அகஸ்தியனைப் போன்ற இவர்களும் வளர்ச்சி பெற்றுப் பிறவி இல்லாத நிலை அடைகின்றார்கள்.
துருவ நட்சத்திரம் சர்வ தீமைகளிலிருந்தும் விடுபட்டது. அதிலிருந்து வெளிப்படும் உணர்வைத் தான் உபதேசத்தின் வாயிலாக
1.உங்கள் நினைவாற்றலைத் துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்வதும்
2.உணர்வின் ஒலிகள் உங்கள் செவிக்குள் உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது
3.கண் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களை நுகரச் செய்வதும்
4.நுகர்ந்த உணர்வை உங்கள் உயிர் அத்தகைய உணர்வைப் பெற்று அதைக் கவரும் அணுக்களாக உங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான்
5.குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களை நுகரச் செய்து கொண்டுள்ளேன் (ஞானகுரு).
அவ்வாறு நீங்க: நுகரும் உணர்வை உங்கள் உயிர் ஓம் நமச்சிவாய என்று இருளை அகற்றி ஒளி என்ற உணர்வாக மாற்றும் தகுதி பெறுகின்றது.
துருவ நட்சத்திரம். எத்தகைய மின்னல்கள் வந்தாலும் ஒளியின் கதிராக அது மாற்றிக் கொள்கின்றது… இருளை அகற்றுகின்றது.
சூரியன் ஒரு காலம் மங்கினாலும் துருவ நட்சத்திரம் என்றுமே மங்காது சூரியன் அழிந்தாலும் அதே சமயத்தில் துருவ நட்சத்திரம் அழியாது… அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அழியாது.
அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றிக் கொண்டு வேகாநிலை கொண்டு எதிலும் அழியாத நிலை கொண்டு ஒளியின் சரீரமாக இருக்கின்றது.
இவை எல்லாம் பல கோடி உணர்வுகளைக் கலந்து கலந்து மனிதன் ஆன பின் இருளை அகற்றி ஒளி என்ற நிலைகள் பெற்ற முதல் மனிதன் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி உள்ளான்.
அதை நாம் நுகர்ந்து வளர்த்துக் கொண்டால்
1.அகஸ்தியன் கண்ட உணர்வு நமக்குள் இனணந்து
2.இருள் சூழா நிலைகள் கொண்டு நம்மை நாம் காத்து
3.இந்த உடலுக்குப் பின் அதைப் பற்றுடன் பற்றி நாம் அங்கே செல்கின்றோம்… பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

ஏற்கனவே இரண்டு பிரளயங்களை நம் பூமி சந்தித்துள்ளது
நம் பூமியில் முதல் பிரளயத்தில் ஏற்பட்ட நீர் நிலைகளின் வளர்ச்சி… நம் பூமி சேமித்து வளர்த்த அமில சக்தியின் ஈர்ப்பிலிருந்து “நாம் பெற்ற பொக்கிஷம்…”
முதல் பிரளய காலத்திற்கு முன் இன்று எப்படி சூரியனைக் கேது கிரகணம் பிடிக்கின்றதோ அதைப் போன்றே சூரியனுக்கும் நம் பூமிக்கும் இடைப்பட்ட நிலையில் “வியாழனின் கிரகணம்” பிடித்தது.
நம் பூமிக்கு மேல் வியாழன் மண்டலம் பெரியது. சூரியனின் நிலை மிகவும் பெரியது. இந்நிலையில் சூரியனை வியாழனின் கிரகணம் பிடித்தவுடன் சூரியனைத் தாண்டி வியாழன் செல்லும் நிலையில்
1.நம் பூமிக்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட நிலையில் பால்வெளி மண்டலத்தில்
2.வியாழனின் சக்தி நம் பூமியின் மேல் நேர் பார்வையில் பட்டவுடன் பால்வெளி மண்டலத்தில் உள்ள அமில சக்திகள் உறைந்து
3.வியாழனின் இயற்கைக் குணமான அதிக நீரைக் கொண்ட சக்தியுடைய அமில உப்பு
4.இப்பால்வெளி மண்டலத்தில் கலந்து வேகமாய்ப் படர்ந்து உறையும் தன்மை கொண்டு இவ்வியாழன் சூரிய கிரகணத்தைத் தாண்டிய நிலையில்
5.உப்புக் கலந்த உறைந்த அமில சக்தியானது சூரியனின் ஒளி பட்டவுடன் கரைந்து
6.நம் பூமிக்கு எப்பொழுதும் இருந்த இயற்கை நிலையுடன் அதிக சக்தி கொண்ட இவ்உப்புக் கலந்த அமில நிலை மோதுண்டவுடன்
7.நம் பூமியின் நிலை ஏற்காமல் பிரளய நிலை ஏற்பட்டு
8.அதன் சுழற்சி வட்டத்தில் சிக்கிக் கொண்ட நீர்நிலைகள்தான் நம் பூமிக்கு இரண்டு பக்கமும் வட துருவ தென் துருவ நீர்நிலைகள் அடர்ந்த கடல்களே.
அதன் தொடர்ச்சியில் இருந்து சுழன்ற நிலை கொண்டு நம் பூமி முதலில் சேமித்துப் பழக்கப்படுத்திய இயற்கைத் தன்மை மாறி… இத்தாவர வர்க்கங்களும் முதல் பிரளயத்திற்கும் பிறகு நீருடனே நீர்நிலைகள் உள்ள இடத்தில், நீருக்கடியில் ஆரம்ப காலத்தில் வளர ஆரம்பித்தன.
அதன் தொடர்ச்சியில் இருந்து ஏற்பட்ட இன வர்க்கங்கள் தான் “கொசுக்களைப் போன்று நுண்ணிய உடல்களைக் கொண்ட உயிரணுக்கள்” இந்நீர் நிலைகளில் தோன்றி நீர்நிலைகளின் மேல் படர்ந்து வந்த்து,
அதன் தொடர்ச்சியில் அதன் சுவாசத்தில் அதன் கழிவின் உஷ்ண நிலையிலிருந்து சிறு சிறு முட்டைகள் தோன்றி அதிலிருந்து எறும்பின் தலையை ஒத்த தலையுடைய “சிறு வால்” நீண்ட உயிரணுக்கள் வளர்ச்சி கொண்டன.
அந்நிலையின் தொடரிலிருந்து நீரிலிருந்து வளர்ந்த இவ்வுயிரணுவே… சிறு சிறு மாற்றம் கொண்ட நிலையில் ஜீவ உடல் கொண்ட உயிர்ப் பிராணி வர்க்கத்திற்கு வந்ததின் தொடர் நிலையில் இருந்து தான் பல நிலைகள் மாறி… பல ஆயிரம் கோடி ஆண்டுகள் அந்நிலையின் வளர்ச்சிக்குப் பிறகு “மற்றும் ஒரு பிரளயம் ஏற்பட்டது…”
அந்த மாற்றத்திற்குப் பிறகுதான் இவ்வளர்ச்சி நிலையில் உயிரணுவாய் ஜீவ உடல்களைக் கொண்ட ஜீவன்களின் நிலை அதன் வளர்ச்சியில் அது சேமித்த சக்தியின் நிலை கொண்டு அடுத்த பிரளயத்தில் அவ்வுயிரணுக்களே தோன்றிய நிலையில் தான்…
1.இம்மனித உடல் கொண்ட அறிவு வளர்ச்சியுற்ற ஆத்மாக்களின் வளர்ச்சி நிலை வந்தது.
2.இவ்விரண்டாவது பிரளயத்தினால் நம் உலகிற்கு எந்நிலை கொண்ட மாற்றம் வந்தது…?
3.இவ் இரண்டாவது பிரளயத்திற்கும் வியாழனிலிருந்து தான் நம் பூமிக்கு மனிதர்கள் வாழும் நிலையின் தொடர் வந்தது.
நம் பூமியில் இன்று எப்படி நமது நிலை உள்ளதோ அதைப் போன்றே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வியாழனிலும் நம்மை ஒத்த மனித இன வர்க்கமும் அடர்ந்த நீர் நிலைகளும் இருந்தன.
அறிவின் வளர்ச்சி கொண்ட மனித ஆத்மாக்களின் ஆசையின் நிலையினால்…
1.அன்று வியாழனில் ஏற்பட்ட பிரளயத்தினால் இன்று வியாழனில் மனித ஆத்மாக்கள் இல்லாத நிலை.
2.ஆனால் நம் பூமிக்கு வியாழனிலிருந்து தான் அதன் தொடர் சக்தியின் உருவிலிருந்துதான்
3.உயிர் ஆத்மாக்கள் தோன்றி இன்று இங்கு நாம் வாழும் நிலை உள்ளது.
இராமாவதார காலத்தில் இருந்து இக்கலி வரை ஏழு ஜென்மங்களில் இன்று மனிதராய் வாழ்பவரில் பலர் உள்ளனர். இக்கால நிலையிலேயே மனித உடல்களில் இருந்து மாறு கொண்ட மிருக வர்க்கத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகளாகவே பல உயிர் ஆத்மாக்கள் சென்றுவிட்டன.
மிருக உடலில் இருந்தும் மாறிக் கொசுவாகவும், ஈ எறும்பு புழு பூச்சியாகவும் பல ஆத்மாக்களின் நிலை சென்றுவிட்டன.
இம்மண்டலத்தில் வந்து வாழக் குடியேறிய உயிராத்மாக்களுக்கு வந்த சக்தி ஏழு உடல்களை ஏற்கும் சக்தி தான் உண்டு. அதிலிருந்து மாறுபட்டுத் தோன்றிப் பல நிலைகள் கொண்ட உடல்களை ஏற்று எண்ணிலடங்கா உயிரணுக்கள் வாழ்கின்றன.
ஓர் உயிரணு தோன்றி அதன் வளர்ச்சியில் உயிராத்மாவாய் பல ஜென்மங்கள் மாறு கொண்டு பல நிலைகளைப் பெற்று வாழும் தருவாயில் ஒவ்வோர் உயிர் ஆத்மாவும் “பல உயிரணுக்களை உண்டு பண்ணியே தான் வாழ்கின்றது…”
எவ்வுயிரணுவும் உணவில்லாமல் வாழ்ந்திட முடியாது. அது எடுக்கும் ஆகாரத்தில் அதன் சக்தியை வளர்த்த பிறகு அது வெளிப்படுத்தும் மலத்திலிருந்து பல உயிரணுக்கள் தோன்றுகின்றன.
1.உண்டு கழித்து வாழ்ந்திடும் உயிராத்மாக்களினால் எண்ணிலடங்கா உயிரணுக்கள் தோன்றி
2.அவை அவை தோன்றிய நிலைக்கொப்பப் பல நிலைகளில் வளர்ச்சி கொள்கின்றன.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக நம் மீது தெரிந்தோ தெரியாமலோ சாக்கடையைப் பூசிக்கொண்டு இருந்தால் அந்த நேரத்தில் அடுத்தவர்கள் நம்மைப் பார்த்தால் யாராக இருந்தாலும் விலகித் தான் சென்று கொண்டிருப்பார்கள.
அதைப் போல் சங்கடத்தையும் வெறுப்பையும் எடுத்து அடுத்தவரிடம் அதே எண்ணத்துடன் பேசிக் கொண்டிருந்தால் நம் மீது அவர்களுக்கு “வெறுப்பு” தான் வரும்.
இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால்
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் புத்தாடையாக அணியும் பழக்கத்திற்கு வரவேண்டும்…
2.அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நம் ஆன்மாவாக மாற்ற வேண்டும் அது தான் தீப வழி (தீபாவளி).
ஒருவர் மட்டும் செய்வதல்ல. எல்லோரும் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை எண்ணி எடுக்கும் பழக்கம் வரவேண்டும்.
அதிகாலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோரும் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணி எடுக்க வேண்டும்.
அடுத்து வெளியில் எங்கே சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி எங்கள் தொழில் முழுவதும் படர வேண்டும்… நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும் என்று அவசியம் எண்ண வேண்டும்.
வைரத்தைப் போன்று சொல்லில் ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிப்பும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் வாடிக்கையாளர் அனைவரது வாழ்க்கையும் வைரத்தைப் போன்று ஜொலிக்க வேண்டும்… எங்கள் வியாபாரம் செழிக்க வேண்டும் என்று இப்படி எண்ணி நாம் செயல்பட வேண்டும்.
அன்றாட வாழ்க்கையில் அழுக்குத் துணியை மாற்றி விட்டு நல்ல உடையை மாற்றுக் கொள்கிறோம் அல்லவா. அது போல் நம் ஆன்மாவில் படும் அழுக்கைத் துடைக்கும் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.
உதாரணமாக மான் இருக்கின்றது. புலியைப் பார்த்தபின் தப்ப எண்ணுகின்றது. ஆனால் புலியின் உணர்வை நுகர்ந்தபின் உடலை விட்டுச் சென்ற பின் அடுத்துப் புலியாகப் பிறக்கின்றது.
மான் என்ற அந்தச் சட்டையைக் கழட்டிவிட்டு புலியின் உணர்வை ஆடையாக மாற்றுகிறது… புலியாக மாறுகிறது.
அது போல் ஒவ்வொரு நிமிடமும்…
1.நமக்குள் அந்த அருள் சக்தியைப் பெருக்கினால் இருளை நீக்கும் அணுக்கள் உடலிலே விளைகின்றது.
2.அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நாம் எண்ணி எடுக்க வேண்டும்.
மற்றவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று பார்த்தால் அதை நுகர்ந்தால் நம் உணர்வுகள் அழுக்காகி விடுகின்றது. சாக்கடை நம் ஆடையில் பட்டு விட்டால் உடனே அந்தச் சட்டையை கழட்டி விடுகின்றோம் அல்லவா.
அழுக்கான அந்தச் சட்டையைத் துவைக்காமல் மீண்டும் போடுவோமா…?
அதைப் போன்று தான் பிறிதொருவர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அடுத்த கணம்
1.அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்துத் தூய்மைப்படுத்தி
2.சட்டையை மாற்றுவது போன்று உடனே அந்த அருள் ஒளியின் சுடராக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இப்படி மாற்றினாலும் கூட மீண்டும் அழுக்கு சேரத்தான் செய்யும்.
1.தினமும் எப்படி அழுக்குச் சட்டையை கழட்டிவிட்டுத் தூய்மையான ஆடையாக மாற்றிக் கொண்டிருக்கின்றோமோ
2.அதே போன்று நம் வாழ்க்கையில எத்தகைய தீமை வந்தாலும்
3.உடனுக்குடன் நாம் மாற்றிக் கொண்டே இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுவது தான் தீபாவளி.
உதாரணமாக வேதனைப்படுகிறார்கள் என்றும் தெரிகின்றது வேதனைப்படுத்துகிறார்கள் என்றும் தெரிகிறது.
1.வேதனைப்படுபவர்கள் வேதனைப்படுத்துபவர்கள் இரண்டு பேர் உணர்வையும் நாம் நுகர்கின்றோம்
2.வேதனைப்படுபவர் மீது நான் பிரியமாக இருந்தால் இப்படிச் செய்கிறான் பார்… என்று அவரின் வேதனையை நுகர்கின்றோம்
3.வேதனைப்படுத்துவோரைப் பார்த்தபின் உலகத்திற்கே தீங்கு விளைவிக்கின்றான் என்று
4.இந்த இரண்டையுமே நமக்குள் வளர்க்கின்றோம்.
இரண்டையும் நுகர்ந்து நம் எண்ணத்துடன் சேர்த்து உடலுக்குள் சேர்க்கும் பொழுது இது ஒரு பகுதியில் வளரும் அது ஒரு பகுதியில் வளரும்.
அவர்களுக்குள் அங்கே எப்படிப் பகைமையானதோ அதே போன்று பகைமை ஊட்டும் அணுக்களே நம் உடலில் விளையும். எதிரிகளைப் போன்று உடலுக்குள் அந்த இரண்டும் சண்டை போட ஆரம்பிக்கும்.
1.வீட்டிற்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் நிம்மதியாகச் சாப்பிட முடியுமா…? சமையல் செய்ய முடியுமா…?
2.வேறு எந்த வேலையையும் சீராகச் செய்ய முடியுமா…?
3.அந்த மாதிரி நம் உடலுக்குள் சண்டை நடக்கும்.
இப்படி எல்லாம் ஆனால் நமக்குள் வேதனையும் நோயும் வருகின்றது என்று தெரிகிறது. இத்தகைய இருளை எல்லாம் நீக்கியது அந்தத் துருவ நட்சத்திரம். அந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


ஓம் ஈஸ்வரா குருதேவா…! – “என்னை நீ ஏற்றுக் கொள்…!”
ஓம் ஈஸ்வரா என்றால் நமது உயிர் ‘ஓ’ என்று இயங்கிக் கொண்டே உள்ளது. நாம் நுகர்வது அனைத்தையும் ‘ஓ’ என்று ஜீவ அணுவாகக் “கருவாக” உருவாக்கிக் கொண்டே உள்ளது.
ஆகவே நாம் எதைக் கேட்கின்றோமோ… எதைப் பார்க்கின்றோமோ… எதை நுகர்கின்றோமோ… இவை அனைத்தையும் நாம் நுகரப் படும்போது நாம் அந்தந்தக் குணங்களை அறிய முடிகின்றது.
அதை எல்லாம்
1.நமது உயிரோ ஓ… என்று ஜீவ அணுவாக கருவாக மாற்றி விடுகின்றது.
2.அவ்வாறு கருவாக மாற்றி விட்டால் நம் ரத்த நாளங்களில் அது கலந்து விடுகின்றது
3.இதற்கு இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைத்துள்ளார்கள்.
ஏனென்றால் இந்திரலோகம் என்றால் இந்திரீகம்… “ஒரு அணுவின் கருவாக” உருவாக்கும் தன்மை பெற்றது ஆகவே இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.
அதே சமயம் நம் உடலுக்குள் அது இரத்த நாளங்களில் சுழன்று வரும் பொழுது
1.கோழி எவ்வாறு முட்டையை அடைகாத்துக் குஞ்சினை வெளிப்படுத்துகின்றதோ இதைப் போல
2.நாம் நுகர்ந்த உணர்வுகளை நம் உடலுக்குள் நமது உயிர் அடைகாக்கின்றது.
3.அதனுடைய பருவம் வரும் பொழுது அந்த முட்டையை விட்டு வெளி வருகின்றது.
நாம் எந்தக் குணத்தின் தன்மையை நுகர்ந்தறிந்தோமோ அந்த அணுவின் தன்மை வெளிப்படும்போது நமது உயிர் ஈசனாக இருந்து இயக்குவதனால் உயிரின் இயக்கத்தை ஈசன் என்றும்… இயக்கத்தால் ஏற்படும் வெப்பம் விஷ்ணு என்றும்… இயக்கத்தால் ஈர்க்கும் காந்தம் லட்சுமி என்றும்… அதனதன் சந்தர்ப்பத்திற்க்கொப்ப நாம் அறிந்துணர்வதற்கு இவ்வாறு காரணப்பெயர் வைத்து அழைக்கின்றார்கள்.
அதே சமயம் நாம் நுகரும் உணர்வுகள் கருத்தன்மை அடைவதனால் அதை இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.
1.அந்தக் கருமுட்டைக்குள் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு கருவானதோ அது அணுவாக மாறுகின்றது.
2.எந்த குணத்தின் தன்மையோ அதனுடைய அணுவாக உருவாக்கப்படும் போது அதனுடைய இயக்கம் ஈசனே.
3.அதில் துடிப்பின் நிலை வரும் பொழுது வெப்பம் விஷ்ணுவே
4.அதே சமயத்தில் ஈர்க்கும் காந்தம் வரும் பொழுது லட்சுமி.
5.எக் குணத்தின் தன்மை கொண்டு அந்த அணுவின் தன்மை பெற்றதோ அது பிரம்மம்.
6.அதனின்று வரக்கூடிய உணர்வின் மணங்கள் ஞானம் சரஸ்வதி.
ஆகவே எந்தக் குணத்தின் தன்மையால் அந்த அணு உருவானதோ ஆக அது பிரம்மமாக இருந்து தன் இனத்தை அது உருவாக்கும் என்று பொருள். பிரம்மா உருவாக்குகின்றான், விஷ்ணு வரம் கொடுக்கின்றான், சிவன் அரவணைக்கின்றான்.
ஆக நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இந்த உடலுக்குள் அது அணுவின் மலமாகும் போது சிவலோகம் ஆகின்றது.
உயிர் உருவாக்கப்படும் பொழுது ஈஸ்வரலோகம். அணு கருவாகும் பொழுது இந்திரலோகம் அணுவாகும் போது பிரம்மலோகம் அது தன் இனத்தை உருவாக்கும் என்று பொருள்படும்படி காரணப்பெயர் வைத்து அழைக்கின்றார்கள். அதன் உணர்வின் மலம் உடலாகும் போது சிவலோகம்.
இதுதான் “ஓம் ஈஸ்வரா குருதேவா…! கருணைஸ்வரூபா… என்னை ஆட்கொண்டருள்வாய் குருதேவா…!”
நீ எப்படி ஒளியாக நின்று உணர்வின் தன்மை அணுவாக மாற்றுகின்றாயோ இதைப் போன்று
1.நீ உயிராக நின்று ஒளியாக இருப்பது போல் என் உணர்வின் தன்மை தெளிவான ஒளியான நிலைகளில் எனக்குள் உருவாக வேண்டும்.
2அந்தக் கருணை உன்னில் வர வேண்டும் என்பதைத்தான் நமது உயிரான ஈசனிடம் வேண்டிப் பாடுவது.
அது தான் “ஓம் ஈஸ்வரா…” எடுப்பது (சுவாசிப்பது) எல்லாவற்றையும் உருவாக்குகின்றாய் “கருணைஸ்வரூபா…”
1.என்னை கருணை கொண்டு ஏற்றுக் கொண்டு
2.நான் எடுக்கும் நல்ல எண்ணங்களை அந்த அணுவின் தன்மையாக உருவாக்குகின்றாய்
3.ஆகவே நீ என்னை ஏற்றுக் கொள்…! என்று தான் பொருள்.
ஓம் ஈஸ்வரா குருதேவா… கருணைஸ்வரூபா… என்னை ஆட்கொண்டு அருள்வாய் குருதேவா.
அப்படி என்றால் இந்த உடலுக்குள் அது உருவாக்கிவிட்டால், எந்தக் குணத்தின் தன்மை உருவாக்கியதோ இவை அனைத்திற்கும் நமது உயிரே குருவாக இருக்கின்றது…. ஈசனாகவும் இருக்கின்றது. குருவாகவும் இருக்கின்றது.

பூமி வலு இழந்ததற்குக் காரணம்
நம் பூமி வளர்ந்த தொடர் நிலையின் பாடத்தில் நம் பூமியில் தோன்றிய உயிரணுவின் தாவர வர்க்க நிலையையும் அதிலிருந்து ஜீவன் கொண்ட உயிரணுக்கள் தோன்றிய தொடர் நிலையையும் உணர்த்தி வந்தேன்.
அந்நிலையில் ஓடுகள் கனத்து நத்தை போன்றும் ஆமை போன்றும் தோன்றிய ஜீவ அணுக்களின் வளர்ச்சி நிலை பல ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆனது.
அதன் பிறகு இப்பூமியின் முதல் பிரளய நிலையில் இருந்து ஜீவ உயிரணுக்கள் விட்ட நிலையில் இருந்து தொடர் நிலையாய் அவற்றின் அமில சக்தியிலிருந்து தோன்றிய உயிரணுக்களின் தன்மையையும்… முதல் பிரளய நிலைக்குப் பிறகு தான் நம் பூமிக்கு இன்று பொக்கிஷமாய் உள்ள வட துருவ தென் துருவ நீர்நிலைகள் பெறும் சக்தி கொண்ட நிலையையும் இதன் தொடர் நிலையிலேயே விளக்கிடுவேன்.
இப்பூமி ஒரு மண்டலம். இப்பூமியில் தோன்றி வளர்ந்திடும் உயிரணுக்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு மண்டலம்.
நம் உடலுக்கு நம் பழக்க வழக்கப்படி ஒரே மாதிரியான உணவு நிலைகளை உண்டு வாழ்ந்திடும் பக்குவத்தில்… நாம் உண்ணும் உணவில் மாற்றம் கொண்டால் நம் உடல் என்னும் இம்மண்டலம் ஏற்காமல்… எப்படி வாந்தியாகவோ அல்லது வாயுவாகவோ மற்ற நிலையில் பல இன்னல்களை இம் இண்டலத்தின் மையமான நம் வயிற்றில் வலியும் மற்றத் தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.
அதிலிருந்து நம் உடல் மண்டலம் சரிப்பட்டுப் பழைய நிலையில் வருவதற்குச் சில நாட்கள் ஆகின்றன… அல்லது அதன் தொடர் நிலையில் ஒவ்வொரு தொந்தரவுகளும் ஏற்பட்டு நம் ஆரோக்கிய நிலையே மாறு கொள்கின்றது.
இந்நிலை போன்றுதான் மண்டலங்களின் ஒவ்வொரு நிலைக்கும் அதன் மாற்ற நிலை வருகின்றது.
பிரளயம் ஏற்படுவதுவும் இச்சுழற்சியின் நம் மண்டலத்துடன் எம் மண்டலத்தின் தாக்குதல் ஏற்படுகின்றதோ அதன் நிலை ஏற்காமல்… அதிலிருந்து பல மாற்றங்கள் ஏற்படும்.
1.நம் உடல் மண்டல நிலையில் ஆரோக்கிய நிலை கல்லைத் தின்றாலும் ஜீரணிக்கும் நிலை போலவும்
2.எதைச் சாப்பிட்டாலும் ஜீரணித்து விடும் நிலையும் கொண்ட ஆரோக்கியமான உடல் நிலை கொண்ட மண்டல மனிதனாய் உள்ள நிலையில்
3.உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியினால் மற்றத் தீய அணுக்கள் வந்து நம் ஆரோக்கியத்தை தாக்கிடாது.
4.அந்நிலை போல் நம் பூமி மண்டலத்தின் ஆரோக்கிய நிலை இருந்திட்டால் இப்பிரளய நிலையிலும் சக்தி கூடும்.
சூரியனைத் தாண்டிக் கேது செல்லும் நிலையிலும் நம் பூமியின் நிலை ஆரோக்கியமாய் இருந்திட்டால் அவற்றின் தாக்குதலை நம் பூமி ஏற்காது.
நம் பூமியில்தான் இன்று நம் செயற்கைக்காக பூமியின் பொக்கிஷத்தையே பிரித்தெடுத்து ஆரோக்கியம் குன்றிய பூமியாக நாம் செய்து வைத்துள்ளோமே…!
இந்நிலையில் ஏற்படும் இயற்கைக்கு நாம் தான் பொறுப்பு ஆகின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
1.துருவத்தின் ஆற்றலைப் பெற்று ஒளியின் சரீரமாக இருப்பவன் அகஸ்தியன்.
2.இருளை நீக்கி மகிழ்ச்சி என்ற உணர்வை எடுத்து ஒளியாக மாறிவன் தான் அவன்.
அந்த அகஸ்தியன் பெற்ற உணர்வுகளை உங்களிடம் இப்பொழுது உபதேசிக்கப்படும் போது உங்களுக்குள் என்னென்ன வாசனைகள் எல்லாம் வருகிறது…? என்று பாருங்கள்.
ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி
1.பச்சிலை வாசனைகள் வரும்… ரோஜாப்பூ மணம் வரும்
2.தீமை நீக்கிய… விஷத்தை நீக்கிய… மூலிகைகள் வாசனைகள் வரும்.
ஏனென்றால் அந்த அகஸ்தியனைப் பற்றிச் சொல்லப்படும் போது உங்கள் நினைவாற்றல் அவன்பால் செல்லும் போது காற்றிலிருக்கக்கூடிய பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் வெளிப்படுத்திய அந்த உணர்வலைகள் உங்களுக்குள் வந்து சேரும்.
சிலரால் அந்த மணத்தை அறிய முடியவில்லை என்றாலும் கூட அதை நுகரும்போது உணர்ச்சிகளால் அறிய முடியும். புது விதமான உணர்ச்சிகள் உங்கள் இரத்தத்தில் கலப்பதும் உடலில் ஊடுருவுவதையும் காணலாம்.
1.சிலர் மணத்தால் அறியலாம்
2.சிலர் உணர்வால் அறியலாம்
3.சிலர் உணர்ச்சிகளால் அறியலாம்
இது போன்ற அகஸ்தியனின் உணர்ச்சிகளை நம் உடலில் உள்ள இரத்தத்தில் உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுது அது இயக்கச் சக்தியாக மாறும். அதைப் பெற வேண்டும் என்ற உணர்வுகளும் மீண்டும் மீண்டும் வரும்.
உதாரணமாக ஜாதகக்காரனோ ஜோசியம் பார்ப்பவன் சொல்வதையோ நாம் கேட்டுப் பதிவாக்கி விட்டால் மீண்டும் அது தான் இயக்குகின்றது.
அதே போல் தீமையை நீக்கிய அந்த மெய் ஞானி தன் உணர்வை ஒளியாக மாற்றிய அந்த உணர்வுகளை நாம் பதிவாக்கி ஒவ்வொரு நிமிடமும் அதை மீண்டும் மீண்டும் எண்ணினால் அது நமக்குள் இயக்கத் தொடங்கும்.
கஷ்டத்தையோ நஷ்டத்தையோ பார்க்கும்போதெல்லாம் இது போல் எண்ணும் பழக்கம் வந்துவிட வேண்டும்.
1.கஷ்டத்தைக் கேட்டு முடிந்ததும் ஈஸ்வரா… என்று
2.நம் புருவ மத்தியில் எண்ணி உடனே அதை நிறுத்திவிட வேண்டும்.
மற்றவர்களிடம் “என்னிடம் கஷ்டத்தைச் சொல்லாதே…” என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அப்படி வேகமாகச் சொல்லி விட்டால் இந்த உணர்வுகள் அவருக்குள் இயக்கப்பட்டு நமக்கு எதிர்மறையாக வரும்.
இவர் எதையோ செய்து கொண்டிருக்கின்றார்… ஏதாவது சொன்னால் கேட்க மாட்டார்…! இவருக்கு மட்டும் என்ன…? ஒரு காலத்தில் அவருக்குக் கஷ்டம் எதுவும் வராதா…? என்று நம்மைப் பற்றிக் கூடிப் பேசுவார்கள்.
இப்படி நான்கு பேர் கூடிப் பேசினால் அது நமக்குள் பகைமை ஊட்டும் உணர்வாக ஊடுருவி நம் நல்ல உணர்வுகளை மாற்றிவிடும். ஆகவே மற்றவர் கஷ்டத்தைச் சொன்னாலும் நம் செவியோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலிமையாக்கி உடலுக்குள் போகாமல் தடுக்க வேண்டும். அது தான் முக்கியம்.
பின்… அவர்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி
1.துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளியால் நீங்கள் உடல் நலம் பெறுவீர்கள்
2.உங்கள் வியாபாரம் செழிக்கும் உங்கள் வாழ்க்கையில் எல்லாம் நலமும் வளமும் பெறுவீர்கள் என்று
3.அவர்கள் உணர்வு நமக்குள் வராதபடி மாற்றியமைத்துச் சொல்லாகச் சொல்லப்படும் போது
4.அவர் கஷ்டத்தை நீக்கும் நிலை ஆகிவிடுகின்றது.
ஜோதிடம் சொல்பவன் உங்களுக்கு ஏழரை நாட்டான் பிடித்திருக்கின்றான் என்று சொன்னால் அதைப் பிடித்துக் கொள்கிறீர்கள்.
அதன் பின் நீங்கள் எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் “போகும் போதே இந்தச் சந்தேகம் வரும்…” வியாபாரம் செய்தால் நஷ்டம் ஆகி விடுமே…! என்ன செய்வது…? பணத்தை பேசாமல் வைத்துக் கொள்வோம்.
மாமன் மச்சானைப் பார்க்கக் கூடாது… நல்ல நண்பர்களாக இருந்தாலும் கூட ஏமாற்றி விடுவார்கள்… ஏழரை நாட்டான் பிடித்திருப்பதால் ஒதுங்கி நில்…! என்று இப்படிப்பட்ட பதிவு தான் நம்மை இயக்குகிறது.
தக்க நேரத்தில் உதவிக்கு வரக்கூடிய நல்ல நண்பனாக இருந்தாலும் கூட அதைப் பார்க்க விடாதபடி இப்படித் தடையாகி விடும்.
ஆக மொத்தம் ஜாதகக்காரர்கள் சொல்வதைப் பதிவாக்கி அந்த பதிவின் நிலைகளிலேயே தான் இயங்கி நாம் வாழ்கின்றோம். இது போன்ற சாஸ்திர நிலைகள் மனிதனுக்கு இல்லை.
1.ஞானிகள் காட்டிய அருள் உணர்வுகளை நமக்குள் பெறும் பொழுது தான் இருளை நாம் போக்க முடியும்.
2.வெறும் வான இயல் சாஸ்திரத்தைப் (ஜாதகம்) பார்த்து என்ன பலன்…?
மனிதனில் உயர்ந்த அந்த அகஸ்தியன் இருளை நீக்கி ஒளியாக இருக்கின்றான். பிரபஞ்சத்தின் ஆற்றலை அறிந்தான்… ஒளியாகப் பெருக்கும் உணர்வுகளை வளர்த்தான். பேரருளைப் பெற்றுப் பேரொளியாக மாறி இன்றும் ஒளியாக இருக்கின்றான்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் வானிலிருந்து பருகினால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும் அடக்க முடியும்… ஒளியாக ஆக்கவும் முடியும்.


“கேதுவின் கிரகணத்திற்குப் பின்” பூமியில் மாற்றம் ஆரம்பித்தது
16.1.1980 ஆம் தேதியில் ஏற்படும் சூரிய கிரகணத்தில் நம் சூரியனைத் தாண்டி “கேதுவின் ஓட்டம் செல்வதினால்” கேது மண்டலத்தில் உள்ள விஷ அணுக்கதிரின் தாக்குதல் நம் பூமிக்குத் தாக்கப் போகின்றது. கேதுவின் தன்மையில் விஷத்தன்மை அதிகம்.
நம் பூமியில் எப்படி சில தாவரங்கள் விஷத்தன்மை கொண்டதாகவும் சில நல்ல தாவரங்களாகவும் வளர்கின்றனவோ அவை போல் இம்மண்டலங்களின் வளர்ச்சியிலும் ஒவ்வொரு தன்மையில் வளர்கின்றது என்றேன் அல்லவா…?
கேது மண்டலம் இல்லாமல் இருந்திருந்தால் பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியின் தன்மையில் இவ்விஷ அமிலமும் நிறைந்தே சுற்றிக் கொண்டிருக்கும்.
நட்சத்திர மண்டலங்களிலும் இவ்விஷமான அமில சக்தி கொண்ட பல நட்சத்திர மண்டலங்கள் உண்டு.
எண்ணத்தில் கூடக் கேதுவின் சக்தியை எண்ணிலடங்கா வண்ணம் நச்சுத்தன்மை கொண்ட அமில சக்தி நிறைந்த மண்டலமாய் கேது மண்டலம் வளர்ந்துள்ளது.
சூரியனின் ஈர்ப்பிற்கு இந்த 48 மண்டலங்களின் சுழற்சியுடன் கூடிய மண்டலம் தான் கேது மண்டலமும்.
1.கேதுவின் கிரகணம் பிடிப்பதினால் நம் பூமியின் மேல் இதன் அதன் ஈர்ப்பு சக்தி தாக்கி
2.நம் பூமியின் இயற்கையுடன் இவ்விஷ அணுக்களின் தாக்குதல் பட்டு
3.அத்தாக்குதலினால் நம் பூமியின் நிலையே சிறிது இறக்கம் (கீழ்) இறங்கப் போகின்றது.
4.அந்நிலையில் இருந்து சூரியனுக்கும் நம் பூமிக்கும் இடைப்பட்ட தூர விகிதமும் அதிகப்படப் போகின்றது.
5.இதிலிருந்து இன்று இப்பூமிக்குக் கிடைக்கும் சூரியனின் உஷ்ண அலையின் சக்தி குறைவு கொண்டு குளிர்ந்த நிலை அதிகப்பட போகின்றது.
இந்நிலையின் தொடர் நிலையாலும் நம் பூமியின் “மாற்ற நிலை ஏற்படப்போகும் நிலைக்கு” இக்கேதுவின் நிலை சாதகப்படுத்தி செல்கின்றது.
நல்வழியின் சாதகமல்ல கேதுவின் கிரகணத்தினால்.
நம் முன்னோர்கள் எக் கிரகணம் பிடித்ததோ இந்நிலையில் வாழ என்று தெரிந்தோ தெரியாமலோ செபினர்.
1.நம் பூமி பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு
2.இக்கேதுவின் கிரகணத்தினால் சில தன்மைகளில் மாற்றம் கொள்ளப் போகின்றது.
சுழன்று கொண்டே உள்ள இம்மண்டலங்களின் ஓட்டத்தில் ஒன்றைத் தாண்டி ஒன்று செல்லும் நிலையிலும்… ஒன்றுக்கொன்று ஒன்றின் சக்தியை ஒன்று அதன் ஓடும் நிலையில் பார்த்துக் கொண்டே செல்லும் நிலையிலும்… இப்பாடத் தொடர்ச்சியின் ஒவ்வொரு மண்டலத்தின் வளர்ச்சியின் நிலையில்… பல ஆண்டுகள் ஒன்று போல் உள்ள இயற்கையின் நிலையில் மாற்றம் கொண்டு…
1.இயற்கையில் உள்ள அம்மண்டலத்தின் சக்தியே
2.மற்ற மண்டலத்திலிருந்து அதன் ஈர்ப்புப் பட்டவுடன் மாறும் நிலை கொள்கின்றது.

எல்லா நினைவையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் ஈஸ்வரா…!
நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா.
இந்த உயிர் உடலில் இல்லை என்றால் நாம் இருக்க முடியுமா இந்த உயிர் இல்லை என்றால் இந்த உடலில் நாம் இல்லை. “உயிரின் இயக்கமாகத் தான் நாம் இருக்கின்றோம்…”
உயிர் பூமியிலே தோன்றி புழுவில் இருந்து பல கோடிச் சரீரங்களில் பட்சியாக பறவையாக மிருகமாக பாம்பாக தேளாக யானையாக புலியாக நரியாக நாயாக எத்தனையோ உடல்கள் பெற்ற நிலையில்
1.ஒவ்வொன்றிலும் தன்னைக் காத்துக் கொள்ள அதன் வழி கொண்டது… காத்திடும் உணர்வே விளைந்தது.
2.அந்தக் காத்திடும் உணர்வு கொண்டு மனிதனாக உருவாக்கியது உயிர்.
ஆகவே எத்தகைய தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்றும்
1.தீமையிலிருந்து விடுபடும் நிலையாக என் உடலாக எப்படி ஆக்கினாயோ
2.இந்தத் தீமையை நீக்கிய உணர்வின் நினைவெல்லாம் எனக்குள் வர வேண்டும்.
நான் எத்தனை துன்பங்களை பட்டேனோ… “துன்பங்களிலிருந்து விடுபடும் உணர்வைப் பெற்றேனோ” இதைப் போல எனது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகள்
1.எனக்குள் துன்பத்தையும் துயரத்தையும் வேதனையும் வெறுப்பையும் ஊட்டாது
2.அந்த நினைவெல்லாம் எனக்குள் துன்பத்தை நீக்கிய உணர்வின் சக்தியாக நான் பெற வேண்டும்.
அதைத் தான் “எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா என்று சொல்வது…”
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ துன்பத்தைக் கடந்து என்னை மனிதனாக உருவாக்கினாயோ “அந்த நினைவெல்லாம் எனக்குள் வரவேண்டும்” என்று தான் நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் என்று பாடலைப் பாடுவது.
அதாவது
1.தீமைகளை நீக்கிடும் இந்த உடலான நிலைகள் இருந்து அந்த நினைவெல்லாம்
2.தீமைகளை நீக்கிடும் அந்த அருள் சக்தியாக என்னிலே வளர வேண்டும் என்று நம் உயிரிடம் வேண்டுதல் வேண்டும்
உலகை எல்லாம் அறியக்கூடிய சக்தியை நீ எப்படிக் கொடுக்கின்றாயோ நான் நுகர்ந்த உணர்வை எனக்குள் அறிவிக்கின்றாயோ இதைப்போல
1.உன் உணர்வின் தன்மை எதுவோ உன் ஒளியின் தன்மை எதுவோ
2.என் உடலின் அணுக்களும் அவ்வழியே ஆக வேண்டும் என்று
3.எல்லா நினைவையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் என்று உயிரிடம் வேண்டி கேட்கின்றோம்
நான் அதைச் செய்வேன். இதைச் செய்வேன் என்ற நிலையில் எண்ணம் கொண்டு உண்மைகளை உணராது பல எண்ணங்களில் தனது ஆசையைக் கூட்டினால் அதன் வழி வளரப்படும்பொழுது
1.எனக்குள் தீமை வராது தடுத்துக் கொள்ள ப
2.ல நினைவுகள் நமக்குள் வராதபடி நீயே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அதைத்தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாத பரிபக்குவமான நிலைகளை நான் பெற எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா…! என்று நாம் வேண்டுகின்றோம்.
இவ்வாறு எண்ணும்பொழுது நமது உயிர் ஓம் நமச்சிவாய இத்தகைய நிலைகளை நமக்குள் உருவாக்கி விடுகின்றது.
நாம் பக்குவ நிலை பெற வேண்டும் என்று ஏங்கினால் அந்த உணர்வின் அணுவாக்கி அதன் உணர்வை உணவாக்கி அந்த உணர்வின் தன்மை நாம் நுகரப்படும் பொழுது
1.சிந்தித்துச் செயல்படும் திறனும்
2.தீமையிலிருந்து விடுபடும் உணர்வும்
3.நாம் பக்குவப்படும் நிலையும் நமக்குள் உருவாகின்றது.
ஆகவே தான் பரிபக்குவ நிலையை எனக்கருள் செய்வாய். ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டச் சொல்கிறோம்.
நாம் எண்ணும் உணர்வின் தன்மை ஓம் நமச்சிவாய என்று உடலாக்கினாலும் அதன் உணர்வின் தன்மை அணுவின் கருவாக அணுவாகும் போது… அது உணவுக்காக உந்தப்படும் பொழுது… அந்த நினைவு பக்குவப்படும் உணர்வின் எண்ணங்கள் எனக்குள் உருவாகி… அதன் வழி “என்னைக் காத்திடும் அந்த அருள் நிலை பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று நாம் எதை எண்ணுகின்றோமா அதை நமது உயிர் உருவாக்குகின்றது என்று நாம் அறிவதற்குத் தான் ஈசனிடம் இந்த உணர்வினை வேண்டுகின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்ற எண்ணத்துடன் தான் நாம் தியானம் செய்கின்றோம்.
அம்மா அப்பா அருளால் என்கிற பொழுது தாய் தந்தையரைப் பரிபூரணமாக எண்ண வேண்டும்.
ஏனென்றால் தாய் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்ற நிலையையே எண்ணி நம்மை வளர்த்தது. குழந்தையாகப் பிறந்த பின் அந்த அறியாப் பருவத்தில்
1.தெரியாமல் அசிங்கமான பொருளைத் தொடச் சென்றாலோ
2.நெருப்பு என்று அறியாமல் தொடச் சென்றாலோ
3.அதிலிருந்து காப்பாற்றக்கூடிய எண்ணமாக அவர்கள் உணர்வுகளைப் பதிவு செய்து நம்மைக் காக்கின்றார்கள்.
அதே போன்று கல்வியில் நாம் சிறந்து இருக்க வேண்டும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தையும் நமக்குள் பதிவு செய்கின்றார்கள்.
அவர்கள் பேசிய பேச்சுகள் அனைத்தையும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமியில் அலைகளாகப் பரவி வைத்துள்ளது. அதே சமயத்தில் அவர்கள் எண்ணிய எண்ணம் நமக்குள் பதிவாகி ஊழ் வினையாகவும் இருக்கின்றது.
நாம் என்ன குறும்புத்தனம் செய்திருந்தாலும் அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு
1.என் குழந்தை நன்றாக இருக்கவேண்டும்
2.அவன் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணிய
3.இந்த உணர்வுகள் அவர்கள் உடலிலும் ஆழமாகப் பதிந்து இருக்கின்றது.
4.அந்த உணர்வலைகள் பூமியிலும் படர்ந்து கொண்டிருக்கின்றது
5.அதே சமயத்தில் நமக்குள்ளும் அது பதிந்து இருக்கின்றது
இப்படிப் பதிந்துள்ளதைத் தான் நாம் அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம். இப்படி எண்ணினால் உடனே அந்தச் சக்திகளை இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகிறது.
எப்படி…?
1.நம் உடலில் இருக்கக்கூடிய விலா எலும்பு பக்கம் இருக்கக்கூடிய காந்த சக்தி (மேக்னட்) அந்த அலைகளைக் குவித்துக் கொடுக்கின்றது.
2.அதைக் குவித்தவுடன் நமது உயிரான மேக்னட் இழுக்கின்றது.
உயிருக்குள் பட்ட உடனே நாம் எதை எண்ணினமோ அந்த உணர்வு ஓ…ம் பிரணவம் ஜீவன் உண்டாகின்றது. அது தான் ஓ… என்பது. அந்த உணர்வின் சத்து நம் உடலாக இணைந்து விடுகின்றது… ஓம் நமச்சிவாய.
நாம் எண்ணக்கூடியது அனைத்தும் நமக்குள் ஜீவனாகி அந்த சக்தி நம் உடலாகின்றது. ஏற்கனவே அம்மா அப்பா பதிவு செய்த இந்த உணர்வுகள் உடலில் இருப்பதால் அது உடலுடன் ஐக்கியமாகச் செய்கிறது.
நலம் பெற வேண்டும் என்று சொன்ன அவர்களின் உணர்வின் சக்தி நமக்குள் வலு கூடுகின்றது. அம்மா அப்பா அருளால் என்று எண்ணி அதைச் சொல்லும் பொழுது அந்தத் தகுதி நமக்குக் கிடைக்கின்றது.
அதே போன்று ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்கிற போது வாழ்க்கையில் எதையெல்லாம் நாம் எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சக்தி ஓ… என்று பிரணவமாகி ம்… என்று உடலாக மாறுகிறது. நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து எண்ணங்களுக்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது.
1.நம் தாய் தந்தையர் நாம் நலம் பெறுவதற்காக எத்தனை உணர்வுகளை எடுத்தார்களோ
2.ஊழ் வினையாக நமக்குள் பதிவு செய்த அந்த உணர்வுகளை மீண்டும் நாம் எண்ணும் பொழுது
3.அந்த வலுவான சக்தியை நாம் பெறுகின்றோம்.
அதே போன்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற இந்த நோக்கத்தில்தான் நான் (ஞானகுரு) இப்பொழுது பேசுகின்றேன்.
அந்த மகரிஷிகளை எண்ணி குரு வழியில் அந்த சக்தி பெற வேண்டும் என்று நான் முதலில் எண்ணுகின்றேன். அது உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற இந்த நினைவுடனே பேசுகின்றேன்.
ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று உயிரை எண்ணி… அம்மா அப்பாவை எண்ணி… அவர்கள் நாம் நலம் பெற வேண்டும் என்று சொன்ன அந்த உணர்வின் தன்மையை முன்னணியில் கொண்டு வந்து அவர்கள் அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.நாம் நன்மை பெற வேண்டும் என்று உளளப்பூர்வமாக அவர்களுக்குள்
2.இந்த உயர்ந்த எண்ணங்கள் கொண்டு வந்ததை நினைவுக்குக் கொண்டு வந்து ஜீவனூட்டி
3.அவர்கள் பெற்ற அருள் ஞான நிலை பெற வேண்டும் என்று எண்ணும்போது
4.நம் ஆன்மாவை அது வலுக் கொண்டதாக மாற்றுகின்றது
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ண உணர்வைக் கூட்டும் போதெல்லாம் அதை நாம் பருகுவதற்கு நம் அன்னை தந்தையின் அருள் உறுதுணையாக இருக்கும்.
அதற்குத் தான் இதைச் சொல்லிக் கொடுப்பது.


“துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த மரபணுவை” நாம் பெற வேண்டும்
விவேகானந்தர் இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் செல்லும் பொழுது கடவுளை இப்பொழுது நீ காட்ட வேண்டும் என்று கேட்கின்றார்,
கடவுளைக் காட்ட முடியாது… நீ உணரலாம் என்று தான் அப்போது இராமகிருஷ்ணர் சொன்னார்…!
1.நீ நுகர்வது உன் உடலுக்குள் நின்று… அது உள் நின்று இயக்கும் கடவுள்தான்
2.அந்த உணர்ச்சியை ஊட்டுவது கடவுள்.
3.கடவுளை நீ உணர்ச்சி மூலமாகத் தான் பார்க்க முடியும்… நீ கண்ணில் பார்க்க முடியாது என்றார்.
அப்பொழுதுதான் விவேகானந்தர் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய பாடத்தையே திருப்பி எடுத்து இவர்களுடைய சுகபோகங்களுக்கு இப்பொழுது மாற்றிக் கொண்டு உள்ளார்கள்.
ஒவ்வொரு ஞானிகளும் தத்துவத்தை உரைக்கின்றனர்.
1.ஒவ்வொரு உயிரையும் நீ கடவுளாக எண்ணு
2.பண்பு கொண்ட நிலைகள் உயர வேண்டும் என்று எண்ணு அந்த உணர்வே உனக்கு வழிகாட்டும்
3.அதன் வழியில் உனக்கு நல்வழி காட்டி அன்பை வளர்க்கச் செய்யும்… கடவுளை நீ அங்கே பார்க்கலாம்.
அவர்கள் நலம் பெற வேண்டும் என்று நீ எண்ணினால் அதே உணர்வு உனக்குள் உள் நின்று இயக்குகின்றது. அது கடவுளாக உன் எண்ணத்தைச் சீர்படுத்துகின்றது… நல்வழி காட்டுகின்றது பகைமை உணர்வுகளை மாற்றுகின்றது… பகைமையற்ற வாழ்க்கையை வாழுகின்றது.
தன் குடும்பத்தில் எப்படிப் பற்று வைக்க வேண்டும் என்றும் அரசியல் வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் பக்தி மார்க்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் ஆலயத்தில் நீ எப்படி பண்புகளை சேர்க்க வேண்டும் என்றும் விவேகான்ந்தர் சொன்னார்.
அதையெல்லாம் படிக்கின்றார்கள் ஆனால் மூலையில் போட்டு வைத்து விடுகின்றார்கள்.
1.கோயிலுக்குச் சென்றால் கடவுளை நீ எப்படி வணங்க வேண்டும்…?
2.தெய்வத்தை நீ எப்படிப் பார்க்கின்றாய்…?
3.கடவுளை ஏப்படி நேசிக்கின்றாய்…?
4.எதன் வழி கடவுள் உன்னை இயக்குகின்றார்…? என்று தெளிவுறக் கூறியுள்ளார் விவேகானந்தர்.
அதையாவது நாம் இன்று எடுத்துள்ளோமா என்றால் இல்லை…!
அவரைப் பற்றிய புத்தகங்கள் பல வரும்… அதன் வழி பிழைப்புக்கு. விவேகானந்தரைப் பற்றிப் பெருமையான பேச்சுகளைப் பேசுவோம் ஆனால் உண்மை நிலைகளில் நாம் கடைபிடிக்கும் தன்மையை இழந்துள்ளோம்.
ஆகவே விஞ்ஞான உலகில் இன்று எங்கோ சென்று விட்டது. மரபு அணுக்களை வைத்து எப்படி எப்படிப் புதிது புதிதாக உருவாக்கலாம் என்று.
ஆனால் தீமையை அகற்றிய உணர்வின் தன்மை
1.துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த மரபின் அணுவை நாம் நுகர்ந்தால்
2.அந்த உணர்வினை நமக்குள் உருவாக்கிப் பகைமையை மாற்றி
3.பிறவியில்லா நிலைகள் அடைய முடியும் என்று விநாயகர் தத்துவத்தைக் கூட்டினான் அன்று அகஸ்தியன்.
அந்த மரபணுவை நாம் பெற முடியும்… ஏன் உங்களுக்கு இந்த நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது…?
இந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் இந்த பௌர்ணமி நாளன்று ஆன்மாக்களை மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும்படி சொல்கிறோம்.
1.மூதாதையர்கள் அங்கே செல்லப்படும் பொழுது “நம்மைக் காத்திட வேண்டும் என்ற மரபணு” நம் தீமையை அகற்றி நம்மைக் காக்கும்.
2.ஒளி நிலை அடைந்த நிலைகள்… பாசத்துடன் பற்றுடன் வளர்ந்த இந்த உணர்வுகளை நமக்குள் வளர்க்க முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.
ஆனால்… சுட்ட சாம்பலைக் கரைத்து விட்டு மோட்சத்திற்கு அனுப்பிவிட்டேன் என்று விநாயகர் கோயிலுக்குச் சென்று மோட்ச தீபம் காட்டிவிட்டு வருவது அல்ல.
மனித உடலுக்குள் வந்த பகைமை உணர்வை மாற்றிவிட்டு ஒளி என்ற உணர்வினை உருவாக்கி அந்த ஒளியின் சரீரமாக நிலை கொண்டுள்ளான் துருவ நட்சத்திரமாக…!
1.அனைவரும் இதை எளிதில் பெற முடியும்
2.அருள் ஞானத்தை நமக்குள் பெற முடியும்
3.மனிதனுக்குள் வரும் இருளை அகற்ற முடியும்
4.மெய்ப்பொருள் காண முடியும்… இந்த உடலுக்கு பின் பிறவியில்லா நிலை அடைய முடியும்.
ஏதோ சாதாரணமாகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம்.
உணர்வின் அழுத்தத்தால் நுகரச்செய்து உணர்வின் அணுக்களை உங்களுக்குள் உருவாக்கிய நிலை கொண்டு அதை வளர்த்துக் கொண்டால் உங்களில் வரும் பகைமையை மாற்றிப் பேரருள் என்ற உணர்வை ஊட்டி, இனி பிறவியில்லா நிலை அடையலாம்,
குடும்பத்தில் பற்றும் பண்பும் ஓங்கி வளர்க்கச் செய்யலாம். பரிவுடன் ஒன்றி வாழச் செய்யலாம். பரிவான நிலைகளில் வாழவும் முடியும். பரிவால் வரும் தீமை அகற்றும் வல்லமையும் பெறுகின்றீர்கள்.
ஆகவே…
1.அந்த அகஸ்தியனின் மரபு அணுக்களைப் பெறுவதற்குத் தான்
2.அன்று விநாயக தத்துவத்தைக் காட்டினார்கள் ஞானிகள்.

கிரகணம்
மண்டலத்தில் ஜீவன் தோன்றி வாழ்ந்திடும் கால நிலைக்கு இச்சக்திகள் உருப்பெறவே பல கோடி ஆண்டுகள் ஆகி விடுகின்றன.
இஜ்ஜீவராசிகள் ஊரும் பக்குவம் எம் மண்டலத்தில் தோன்றியதோ அம்மண்டலத்தின் வளர்ச்சியுடனே இதே நிலையில் தான் பல ஆயிரம் கோடி ஆண்டுகளானாலும் சுழன்று கொண்டே இருக்கும்.
இம்மண்டலத்துடன் இதன் ஈர்ப்பு சக்தியின் அமில சக்தி கூடும் நிலையில் தான் இம்மண்டலத்தில் வளர்ந்திடும் மற்ற சக்திகளும் கூடுகின்றன.
இந்நிலையில் சுழலும் மண்டலத்திற்கு “மாறிக் கிடைக்கும் சக்தி” எப்பொழுது எல்லாம் ஏற்படுகின்றது…?
இன்று நம் சூரியனைச் சுற்றிச் சுழன்றிடும் 48 மண்டலமுமே சூரியனைச் சுற்றிவரச் சில காலங்கள் கொள்கின்றன. இந்நிலையில் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் என்றெல்லாம் சூரியனைச் சுற்றி வரும் இக்கோளங்கள் சூரியனுக்கும் நம் பூமிக்கும் மத்தியில் ஓடும் பொழுது குறுக்கே வருகின்றது.
அந்தச் சமயத்தில்
1.சூரியனின் ஒளிக்கதிர் வீச்சுகள் நம் பூமிக்கு நேராய்த் தாக்கிடாமல்
2.சூரியனைத் தாண்டி எக்கோளம் செல்கின்றதோ அந்தக் கால நிலைக்கொப்ப
3.நம் பூமிக்கு எப்பொழுதும் கிடைத்திடும் ஒளி அலையின் மாற்றத்தினால்
4.சூரியனைத் தாண்டிச் செல்லும் அக்கோளத்தின் மறைப்பினால்
5.நம் பூமிக்கும் சூரியனுக்கும் இடைபட்டுள்ள பால்வெளி மண்டலத்தில் கலந்துள்ள இவ்வொளி அலைகளை
6.இரவில் உள்ள நிலை போல் குளிர்ச்சி கொண்டு மேகங்களாய் கனம் பெற்று
7.எம்மண்டலம் தாண்டிச் செல்கிறதோ அதிலிருந்து வீசிடும் அணுக்களின் சக்தி நிலை கொண்டு
8.பூமியின் சக்தி நிலை இரண்டு நிமிடம் ஒரு நிமிடம் அக்காலக் கெடு நிலையிலேயே “பூமியின் சக்தி நிலையிலும் மாற்றம் கொள்கின்றது…”
நம் பூமிக்கு மட்டும் கிரகணம் பிடித்துத் தாக்கும் நிலை வருவது என்பதல்ல, எல்லா மண்டலங்களுக்குமே இந்நிலையின் தாக்குதலில் “வளர்ச்சியும் உண்டு… வீழ்ச்சியும் உண்டு…!”
ஒவ்வொரு மண்டலத்திலும் அது அது சேமித்த தனித்தனி சக்தி நிலை உண்டு.
1.ஒரு மண்டலத்தைத் தாண்டி ஒரு மண்டலம் செல்லும் நிலையிலும்
2.அது அது சேமித்து வளர்த்த அமில சக்தியின் ஈர்ப்பு மற்ற மண்டலத்தின் செயலுடன் தாக்கும் நிலையிலும்
3.ஒவ்வொரு மண்டலத்திற்குமே பல காலங்கள் ஒரு நிலையில் சேமித்த சக்தியின் தன்மை
4.இம்மண்டலங்களின் சுழற்சியில் ஒன்றைத் தாண்டி ஒன்று செல்லும் நிலையில் அது நிமிடக் கணக்காய் இருந்திட்டாலும்…
5.அதன் ஈர்ப்பில் இதன் ஈர்ப்பின் நிலையும் மோதுண்ட நிலையில்
6.இவ்விரண்டிற்கும் இடைப்பட்டுள்ள பால்வெளி மண்டலத்திலும் அதன் அமிலத்தன்மை மாறு கொள்கின்றது.
7.அதிலிருந்து ஒவ்வொரு மண்டலத்திற்குமே அதனுடைய இயற்கைக் குணத்தில் சில மாற்றங்கள் வருகின்றன.
சூரியனைத் தாண்டி ஓடும் மற்ற மண்டலம் சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட நிலையில் தாண்டி ஓடும் சக்தியினால்… “எம்மண்டலம் சூரியனைத் தாண்டி ஓடுகின்றதோ” அம்மண்டலத்தின் குண நிலை கொண்ட இயற்கை நிலையின் தாக்குதல் “நம் பூமிக்கு ஏற்பட்ட அதிலிருந்து” இயற்கையிலேயே நற் சக்திகளும் வளர்கின்றன… பல தீய அணுக்களும் வளர்கின்றன.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மிருக நிலையிலிருந்து என்று மனிதனாக ஆனோமோ அன்றே “முழு முதற் கடவுள் என்று மனிதனைப் பாடியுள்ளார்கள்…” சிருஷ்டிக்கும் வன்மை கொண்டது தான் மனித உணர்வின் எண்ணம்.
அத்தகைய ஆற்றல் பெற்ற நாம்… நம் நினைவை இழந்து விடாதபடி இதன் எண்ணத்தைக் கொண்டு ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நமக்குள் தியானத்தின் சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
ஞானிகள் அருள் வாக்குடன் கலந்து அவர்களுடைய அருள் சக்தியை நம் உடலுக்குள் சேர்த்து
1.நம்மை அறியாது சுவாசித்த சலிப்பு சங்கடம் சஞ்சலம் கோபம் பயம் வேதனை இதைப் போன்ற குணங்கள்
2.நமக்குள் நோயாக உருவாக்கச் செய்யும்… சிந்தனைகளைக் குறைக்கச் செய்து கொண்டிருக்கும் இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.
ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி தியானத்தை மேற்கொண்டு இருளை நீக்கி ஒளியின் சரீரம் பெறுவோம். ஞானிகள் காட்டிய அந்த நிலையை நாம் எல்லோரும் அடைவோம்.
விண்ணிலே தோன்றியது தான் உயிர்.
1.அருள் ஒளியின் சுடராக தீப வழிப்படி விண்ணுக்குச் செல்லும் தகுதி பெற்ற நாம்
2.இந்த உடலில் இருக்கும் ஆறாவது அறிவின் துணை கொண்டு
3.அந்த மெய் ஒளியுடன் ஒளியாக… உயிருக்குள் உணர்வு அனைத்தையும் ஒளியாகச் சேர்த்து
4.அழியா ஒளிச் சரீரமாக அதனுடன் இணைந்து விஜயதசமி…
5.பத்தாவது அவதாரமான கல்கி என்ற நிலையை நாம் அடைதல் வேண்டும்.
ஆறாவது அறிவு கொண்ட நாம் “ஏழாவது நிலையான” ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணைக்கும் திறன் பெற்றவர்கள்.
ஒருவன் திட்டி விட்டால் தியான வலு கொண்டவர்கள் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைக்கப்படும் பொழுது
1.அந்த இடைஞ்சல் செய்தவனின் உணர்வுகள் தனக்குள் இயக்காதபடி
2.அதைத் தடுத்து நிறுத்தச் செய்யும்… சிந்திக்கச் செய்யும்.
இவ்வாறு அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைச் சேர்த்து நம் உடலுக்குள் விளையச் செய்யும் போது “எட்டாவது நிலை…” உடலுக்குள் விளைந்த பின் உயிருடன் அது சேரும் போது “ஒன்பதாவது நிலை” ஆகின்றது.
ஒருவன் நமக்கு இடைஞ்சல் செய்தான் என்று மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது அவன் பேசிய பேச்செல்லாம் நாமும் பேசுவோம். அவருடைய பேச்சு நமக்குள் இயங்காத வண்ணம் தடைப்படுத்துவதற்குத் தான் ஞானியின் அருள் சக்தி இதனுடன் இணத்துச் சேர்க்க வேண்டும் என்று சொல்வது.
அந்த இருளான உணர்வுகளைத் தடைப்படுத்தி அந்த உணர்வை ஞானமாக்கி அந்த ஒளிச் சுடராக ஒளி பெறும் நிலைக்கு இட்டுச் செல்வதால் உயிர் ஒளியாக இருப்பது போன்று அந்த உணர்வின் தன்மை கொண்டு ஒளியாகி உடலை விட்டுச் சென்றபின் தசமி “பத்தாவது நிலை…” கல்கி.
1.உடலுடன் வாழும் போது செடி கொடி தாவரங்கள் விளைய வைத்ததைத் தான் உணவாக உட்கொள்கிறோம்.
2.ஆனால் இந்தப் பூமியிலிருந்து நாம் விண் சென்ற பின்
3.நம் சூரிய குடும்பமான பிரபஞ்சத்திற்கு வெளியே தான் நம் உயிராத்மா செல்கின்றது.
இந்தச் சூரிய குடும்பத்திற்குள் விளைந்த அனைத்தையும் ஒளியின் உணர்வாக எடுத்துக் கொண்டு பிரபஞ்சத்தின் ஈர்ப்பை விட்டு வெளியில் என்றும் பதினாறு என்று செல்லும் நிலையில்
1.மற்ற பேரண்டத்தில் இருவரும் சக்திகளை அந்த விஷத்தன்மையைத் தனக்குள் கவர்ந்து ஒளியாக்கி
2.எந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து இதை எல்லாம் பெற்றோமோ
3.அந்த ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் உயர்ந்த சக்திகளை அனுப்பி
4.இந்த சூரிய குடும்பத்திற்கே ஒளி காட்டும் வழியாகவும்
5.பேரண்டத்திலிருந்து வரக்கூடிய உணர்வின் சக்திகளையும் ஒளியாக்கி
6.அந்தப் பேரண்டத்திற்கே வழி காட்டும் உணர்வின் ஒளி அலைகளாக நாம் வளர முடியும்.
அந்த தீபத்தின் வழி செல்வோமேயானால் இது தான் மனிதனின் கடைசி நிலை…! தீப வழி… தீப ஒளி. உயிர் விண்ணிலே தோன்றினாலும் மீண்டும் விண்ணுக்கே ஒளியாகச் செல்கின்றது.


ஞானிகளின் ஆற்றல்கள் காலத்தால் எப்படி மாற்றி அமைக்கப்பட்டது…?
காட்டுக்குச் சென்று தவம் இருக்கச் செல்வோரை எல்லாம் வாதாபி என்ற அரக்கனும் அவருடைய சகோதரனும் சேர்ந்து விருந்து கொடுப்பதாகச் சொல்லிக் கொன்று புசித்தவர்கள்.
“விருந்து கொடுப்பது” எங்களுடைய வழக்கம் என்று சொல்வார்கள். அதிலே ஒருவன் ஆடாக மாறி விடுவான். அடுத்தவன் அதை அறுத்துச் சமைத்து இந்த மாமிசத்தைச் சாப்பிட வேண்டும் என்று வந்தவருக்குக் கொடுப்பார்கள்.
சாப்பிட்டு முடிந்த பின் “வாடா வாதாபி” என்றால் வயிற்றைப் பிளந்து வெளி வருவான். இப்படிக் கொன்று… வருவோரை எல்லாம் அவர்கள் சாப்பிட்டுப் பழகியவர்கள்..
அகஸ்தியன் காட்டுக்குள் செல்லும் போது இதே முறைப்படி அவர்கள் வரவேற்கிறார்கள். அகஸ்தியனோ, “நான் மாமிசத்தை சாப்பிடுவதில்லை” என்கிறான்.
இல்லை…! எங்கள் முறைப்படி விருந்தில் நீங்கள் அதைஸ் சாப்பிட்டுதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றான்.
நாங்கள் வருபவருக்கு மரியாதை செலுத்துகின்றோம், நீங்கள் சாப்பிடுங்கள்…! என்று கூறி வாதாபி ஆடாகப் போய்விட்டான். அறுத்துச் சமைத்து இவனுக்கு கொடுத்தான்.
அகஸ்தியனும் நன்றாக ருசித்து சாப்பிட்டான்…! அகஸ்தியனுக்குத் தெரியும்… தெரிந்ததனால் சாப்பிட்டான்…!
“வாடா வாதாபி” என்கின்றான் அவன் அப்பொழுதே ஜீரணம் ஆகிப் போய்விட்டான் என்கின்றான் அகஸ்தியன்.
ஆகா… அப்படி ஆகிவிட்டதா…? பாருடா… உன்னைக் கொன்று நான் விழுங்கப் போகின்றேன் என்றான்.
அப்பொழுது அகஸ்தியன் கண்ணிலே பார்த்தான்… அவனை எரித்து விட்டான்.
ஆனால் அதற்கு முன்னாடி தவ யோகிகள் தவம் செய்தவர்களை எல்லாம் இரையாக்கி ரொம்ப பேரைத் தின்றுவிட்டார்கள்.
அப்பொழுது இதற்காக வேண்டி இராமாயணம் மகாபாரதம் எழுதுபவர்கள் சொல்கின்றார்கள், “அகஸ்தியன் கணபதியைத் தொழுது கொண்டு இருந்தான்…” அதனால் அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று…!
கணபதி என்றால் எது…?
1.இந்த பிரபஞ்சத்தின் உணர்வுகள் அனைத்தையும் கணங்களுக்கு அதிபதி ஆக்கி
2,அவன் எண்ணத்தைக் கொண்டு ஆட்சி செய்து தீமைகளை அடக்கும் வல்லமை பெற்றவன் என்று
3.அதற்குக் “கணபதி” என்று காரணப் பெயரை வைக்கின்றான்.
ராஜாஜி எழுதிய நூலிலும்… கணபதியை வணங்கிக் கொண்டிருப்பதனால், அகஸ்தியனை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று வெளிப்படுத்தியுள்ளார்.
கண ஹோமம் செய்தோம் என்றால் உங்களுக்கு எல்லாச் சக்தியும் கிடைக்கும். கண ஹோமம் செய்தால் உங்களுக்கு வல்லமை கிடைக்கும் உங்கள் பாவம் அனைத்தும் நீங்கும். யாரும் ஒன்றும் தீங்கு செய்ய முடியாது என்று “இதற்குக் காரணம் காட்டுவதற்காக” இப்படி எழுதுகிறார்கள். ராஜாஜி படித்தவர் அரசியல்வாதி தான் உலக ஞானத்தைப் பெற்றவர் தான்.
ஆனால் அதே சமயத்தில் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் பல நூல்களில் வடிவமைத்து உலக ஞானத்தைக் கற்றவர் நேரு.
பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர் தான் நேரு. அந்த நிலைகளில் வளர்ந்தாலும் இந்த உலக உண்மையின் உணர்வின் தன்மையை அறிந்தவன்.
1.இது எல்லாம் பொய்… இப்படிச் செயல்படுத்த கூடியது அனைத்தும் பொய்யானது
2.இவையெல்லாம் தவறான செயல் என்று சுட்டிக்காட்டினார் நேரு.
ஆனால் ராஜாஜி ரொம்ப சாணக்கியமாகச் சொல்கின்றார். ராமாயணத்திற்கும் மகாபாரத்திற்கும் ஜீவன் ஊட்டி மக்கள் இதைப் பின்பற்றினால் இப்படி இருக்கும் என்று ஜீவன் கொடுத்தவர் ராஜாஜி… ஆனால் வக்கீல்… வல்லமை பெற்றவர்.
இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொண்டால் இயற்கையின் உண்மையின் நிலைகளைத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
அறியாமை என்ற நிலையில் தன் இனம் என்ற நிலைகள் கொண்டு…
1.இனத்தை பிரித்து வாழும் தன்மை தான் வந்ததே தவிர தன் உயிரை மதித்து நடக்கும்…
2.அருள் ஞானிகள் கூட்டிய நிலைகள் இங்கே வருவதில்லை.
3.அதைத்தான் அன்று சொன்னான் நேரு.
கடவுள் எப்படி இருக்கின்றான் என்ற நிலைகள் கொண்டு… என்னை யாரும் வணங்கிட வேண்டாம் இறந்த பின் என் சாம்பலைத் தூவி… விழிப்புணர்வு வர வேண்டும் என்ற நிலைகளில் விமானத்தில் கொண்டு போய் இதையெல்லாம் தெளிக்கச் சொன்னார்.
ஏன்…?
1.கங்கையில் கொண்டு போய்க் கரைத்தால் அங்கு பாவம் சேர்ந்து விடும்…
2.அங்கே கரைக்க வேண்டாம்..
3.மாணவர் படிக்கக் கூடிய இடங்களில் நீங்கள் தூவினீர்கள் என்றால் இந்த அருள் ஞானமாவது அவர்களுக்குக் கிடைக்கும் என்பதை
4.“கற்றுணர்ந்தவன்… தெரிந்து கொண்டவன்…” இதைச் சொன்னான்.
நேரு தன் சாம்பலைக் கங்கையில் கரைக்கச் சொல்லவில்லை. அங்கே கரைத்தால் பாவம் வந்துவிடும் என்று சொன்னார். சாம்பலை வயல் வெளியில் தூவப்படும் போது உரமாகி அந்த உணர்வு கொண்டு மற்றவர்களுக்கு ஞானம் வரட்டும்… வயல் வெளியில் தூவுங்கள் என்று கூறுகின்றார்.
நேரு அரசியல் பண்புகளைக் கற்று உணர்ந்தாலும் நாட்டினை மீட்டு தன் சொத்தை இழந்தவன் தான்.
1.கடவுள் என்ற நிலையில் உண்மையை உணர்ந்தான்
2.ஒருவருக்கொருவர் நேசிக்கும் பண்பு வரவேண்டும் என்றான்.
பஞ்சசீலக் கொள்கையில் கம்யூனிசத்தை மாற்றி அமைத்தார். ஏனென்றால் அதிலே இராஜ தந்திரமாகச் செய்யப்படும் பொழுது “தப்பான நிலைகளில் வருகின்றார்கள்” என்று உணர்ச்சியின் வேகப்பட்டு கை கால் அங்கங்கள் இழக்கப்பட்டான்… மடிந்தான்.
அவனைப் பற்றி சிந்திப்போர் யாருமில்லை. அவன் பெயரையே எடுக்க வேண்டும் என்கின்றார்கள் இன்று.
பண்டிட் மோதிலால் நேரு அவ்வளவு பெரிய சொத்தை வைத்திருந்தார். அப்பா கூடச் சண்டை போட்டான். நீங்கள் செய்வதெல்லாம் அதர்மம் என்று. யார்..? நேரு. நீ கோடி கோடி சொத்துக்களை கொள்ளை அடிக்கின்றாய்… இது எல்லாம் ஆகாது என்றார்.
நாட்டிற்கு செய்யக்கூடிய சேவைக்காகத் சகல சொத்தையும் இழந்தார்.
அன்று விவேகானந்தர் சொன்னது போல்
1.கடவுளை நீ எங்கேயும் பார்க்க வேண்டாம்
2.ஒவ்வொரு உயிரையும் நீ கடவுளாக மதி
3.அவன் அமர்ந்திருக்கும் அந்த ஆலயம் என்று நீ எண்ணு… ஆகவே நீ அவனை மதி என்று நேரு சொன்னார்.
அவர் சொல்லை யாரும் மதிக்கவில்லை.

மண்டல வளர்ச்சி
மண்டல வளர்ச்சி நிலை தோன்றிய நிலையை ஆரம்ப பாட வரிசையில் உணர்த்திட்டால்தான் இன்றளவு உணர்த்திய பாட நிலைக்கு ஜீவன் அளித்த நிலை தோன்றிடும்.
1.எறும்பைக் காட்டிலும் சிறிய நுண்ணிய உயிரணு கொண்ட உயிராத்மா
2.அவ்வுயிரணுவுடன் மற்றோர் உயிராத்மாவின் சேர்க்கையில் ஒன்றுடன் ஒன்று ஜீவ சக்தி பின்னிய நிலையில் இரண்டும் ஐக்கியப்பட்டு
3.தன் ஆவி நிலையுடன் பால்வெளி மண்டலத்தின் பல நிலைகள் கொண்ட ஆவியான அமில சக்திகள்
4.இவ்விரண்டு ஆத்மாவுடன் இதன் சேர்க்கையுடன் ஆவியாய் மோதுண்டு
5.இதன் ஈர்ப்பு நிலையுடன் இதன் வட்டத்திலேயே இவ்வாத்ம அமிலமுடன் பல சக்தி நிலைகள் கூடி
6.இவ் ஆவியான அமிலமே உறைந்த நிலையில் திடப்பொருளாய்ச் செயல்படுவதற்கு முன்
7.இவ்வாத்மாவின் ஈர்ப்பில் அமிலமுடன் கலந்து வந்த உயிர்த்துடிப்புக் கொண்ட மற்ற உயிரணுக்களின் இவ் ஈர்ப்பு நிலையில் சிக்கி
8.இதன் வட்டத்திற்குள் வந்த பிறகு இதன் ஆவி அமிலமும் இச் சுழற்சியில் காற்றும் நீரும் படும் நிலையில்
9.திடப்பொருளாய் கெட்டிப்பட்ட உயிர்த்துடிப்புக் கொண்ட திடமாய் ஆகின்றது.
இதன் வளர்ச்சியே அமிலத்தின் ஈர்ப்பாய் அதிகப்படுகின்றது. அமிலத்தை ஈர்க்கும் சக்தி இவ்விரண்டு ஆத்மாவின் உயிர் சக்தியுடன் உட்சென்ற உயிரணுக்களின் பெருக்கமும் இச்சிறிய கோளமாய் உருப்பெற்ற இதன் ஈர்ப்பின் வட்டத்தில்… இதற்கு உணவாய் “இவ்வுயிரணுக்களின் சக்தி தான்” இது வளரும் நிலைக்கு உதவுகின்றது.
உயிரணு இவ்வட்டத்திற்குள் வந்தவுடன் அதன் சக்தியை உணவாய் ஈர்த்து அதன் சக்தியை உண்டு அதில் வெளிப்பட்ட அழிவு நிலை ஆவியாய் இச்சிறிய மண்டலமாய் வளரப் பெறும் மண்டலம் வெளிப்படுகிறது.
இதன் தொடர்ச்சியிலேயே ஆரம்பத்தில் எவ்வுயிரணுவின் சக்தியை உண்டு மலமாக்கி அதன் ஆவியை வெளிப்படுத்திப் பழக்கப்பட்டு வாழ்ந்ததோ அதே நிலையில் இம்மண்டலம் கக்கும் உஷ்ண அலையைப் பொறுத்த அமிலங்களை ஈர்த்து ஈர்த்து அதன் தொடர்ச்சியிலேயே சிறுகச் சிறுக வளர்ச்சி கொள்கிறது.
வளர்ச்சியில் தன் சுழலும் வேகத்தினால் பால்வெளி மண்டலத்தில் இச்சேமித்த அமில கோளமுடன் இது சுழலும் வேகத்தில் இதன் ஈர்ப்பில்
1.இதன் அமிலத்தன்மையுடைய இதன் வர்க்க அமிலமும் மோதி மோதி
2.ஆவியாய் அமிலமாய் திடமாக வளர்ந்து கொண்டே கோளமாய் உருக்கொள்கின்றது.
இதன் நிலையில் உயிரணுக்களின் சேர்க்கையும் ஏற்பட்ட நிலையில் இவ்வுயிரணுக்களின் நிலையும் மற்ற அமில சக்தியின் நிலையும் இதனுடன் மோதுண்டு வளர்ச்சி பெறும் நிலையில் “இக்கோளத்தின் துடிப்பு நிலை துரிதம் கொள்கின்றது…”
இக்கோளம் உண்டு கழிக்கும் கழிவின் உஷ்ணத்தினால் ஒன்று நூறாய் நூறு ஆயிரமாய் ஆயிரம் கோடியாய் பல கோடி உயிரணுக்கள் இக்கோளம் பந்து நிலைக்கு வருவதற்குள் வளர்ச்சியில் பெருகி விடுகின்றன.
ஒன்றிற்கு உணவு ஒன்று அளிக்கும் சக்தியின் கூட்டினால் இக்கோளத்துடன் உயிரணுக்களின் வளர்ச்சியினால் தான்… அதனதன் ஆகாரத்தை அது அது எடுத்து உண்டு வெளிப்படுத்தும் சுழலில் இருந்து… அதன் உஷ்ண அலையில் அதன் சுவாச நிலைக்கொப்ப அக்கழிவிலிருந்தே பல உயிரணுக்கள் தோன்றி… இந்நிலையின் தொடர் வளர்ச்சியினால் இக்காற்றுடன் கலந்த நீரும் இவற்றிற்கு உரமாய் அமைய… இதன் தொடர்ச்சியிலேயே இக்கோளம் இன்று நாம் காண்கின்றோமே நட்சத்திர மண்டலமாய்… அவற்றிற்கும் மேல் பெரிய கோளமாய் உருப்பெற்ற பின்பே “தாவர வளர்ச்சி” நிலை இக்கோளங்களில் வளர்கின்றது.
இன்றைய விஞ்ஞானத்தில் கண்டுணர்ந்த நிலைபோல் தான் ஆரம்ப கதியில் இக்கோளத்திற்கு மேல் “பாசி படிந்த நிலைபோல் பச்சையான அமிலத்தில்” இக்கோளத்துடன் ஆங்காங்கு படர்ந்து அந்நிலையின் வளர்ச்சித் தொடரில் அதன் சக்தி உருப்பெறும் மண்டலத்திற்கு உணவாய்ச் சென்று… அதிலிருந்து வெளிப்படும் கழிவின் நிலையிலிருந்து “மாறு கொண்ட காளான் நிலைக்கு” வளர்ச்சி பெறுகிறது.
அந்நிலையின் தொடரில் அதனின் நிலையும் மாறு கொண்டு உள்ள தாவர நிலை அழுகிய நிலையில் அக்கோளத்துடன் படிந்து அதிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலையினால் மற்ற தாவர இன வர்க்கமான புல் பூண்டு தோன்றி… இதன் வளர்ச்சி நிலையிலேயே இதன் ஆவியின் சுவாச நிலைக்கொப்ப மாறு கொண்ட… ஒவ்வொரு தாவர வர்க்கங்கள் வளரும் பக்குவ நிலையை அக்கோளம் பெறுகின்றது.
இந்நிலைக்கு வருவதற்குள் இக்கோளத்தின் சுழற்சி வேகம் உயிரணுக்களின் பெருக்கத்தினால் சேமிக்கும் அமில சக்தியின் உறையும் நிலையும் கூடிக்கூடி… இக்கோளத்தின் வளர்ச்சியை சக்தி கொண்ட மண்டலத் தன்மைக்கு உருப்பெற்று விடுகின்றது.
இன்று சந்திரனாய் நாம் காணும் சந்திர மண்டலத்தின் அளவு விகித நிலைப்படி உருக்கொள்கின்றது.
1.இந்நிலையில் உருப் பெறவே பல ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆகின்றன.
2.இந்நிலையின் வளர்ச்சிக்குப் பின் தான் ஜீவராசிகள் தோன்றும் நிலை பெறுகின்றது.
ஜீவராசிகள் தோன்றி வாழ்ந்திட தாவர வர்க்கங்களின் சுவாச நிலைக்கு வேண்டிய நீரின் சக்திக்கு மேல் “ஜீவராசிகளுக்கு அதிக சக்தி தேவை…”
இத்தாவர வளர்ச்சியின் நிலையிலுள்ள மண்டலமே பல உரு நிலைகள் மாறி மாறிப் பல ஆயிரம் காலங்கள் சென்ற பிறகுதான் அதன் இன வர்க்கத் தொடர்ச்சியில்
1.ஒவ்வொரு தாவரம் தோன்றி அது வளர்ந்து வாழ்ந்து அழுகிய நிலையில் பூமியில் படிந்து
2.அதன் வெக்கையில் தோன்றிய மற்ற உயிரணுவின் சக்தியினால் மாறு கொண்ட தாவர வர்க்கம் உருப் பெறுகின்றது.
ஓர் இன வர்க்க வளர்ச்சியிலிருந்து அது வளர்ந்து அதன் சக்தி மக்கி அதையே உணவாய் இப்பூமி ஈர்த்து அது கக்கும் கழிவிலிருந்து அதன் சுவாச நிலையில் பல காலம் அதே இன வர்க்கத் தொடர்தான் வளர்ச்சி கொண்ட நிலையில் வாழ்ந்த பிறகு…
1.இத்தொடருடன் மற்ற உயிர் அணுக்களின் சக்தி அம் மண்டலத்தின் காற்றுடன் மோதுண்ட பிறகு
2.மாறு கொண்ட வளர்ச்சி நிலை பெற்ற தாவரம் மற்ற இடத்தில் தோன்றுகின்றது.
இதே தொடரில் தோன்றும் நிலையில்தான் தாவர வர்க்கத்திலிருந்து உயிரினமாய் இக்கோளமுடன் கோளம் சேமிக்கும் அமிலத்தினால் கல்லும் மண்ணும் வளர்ச்சியுற்ற நிலையில் இருந்து
1.கல்லாய் உருப்பெற்ற திடப்பொருளாய் உறைந்த அமிலம் கொண்ட அதன் உஷ்ண நிலை அலையும்
2.தாவரத்தின் உஷ்ண அலையும் மோதுண்ட சக்தி நிலையில்
3.உருப்பெறும் உயிரணுவான ஜீவத்துடிப்புக் கொண்ட ஜீவராசியாய் ஓடுகள் போன்ற நிலை கொண்ட
4.நத்தை ஆமை இந்நிலை கொண்ட ஜீவராசிகள்தான் இப்பூமியில் முதலில் தோன்றிய ஜீவராசிகள்.
கல்லில் இருந்தும் மண்ணிலிருந்தும் அதன் உஷ்ண அலையின் வெக்கையில் இஜ்ஜீவராசிகள் தோன்றிச் சில தாவர நிலைகளை உணவாய் உண்டு… இவை கழித்த மலத்தில் இருந்து பல உயிரணுக்கள் ஜீவன் கொண்ட நிலையில் தவளையாய் மற்றும் சில நிலை கொண்ட ஜீவராசிகள் தோன்றின.
ஒன்று உண்டு அது வெளிப்படுத்தும் கழிவிலிருந்து பல உயிரணுக்கள் அதன் சுவாச நிலைக்கொப்பப் பல ஆயிரம் ஆண்டுகள் ஒத்த நிலையின் வளர்ச்சியிலேயே வளர்ந்து கொண்டே வருகின்றது.
இதன் தொடர்தான் எல்லாமே…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சாமி (ஞானகுரு) இந்நேரம் வரை உபதேசம் செய்தார்…
1.எனக்கு அர்த்தம் தெரியவில்லையே…! என்று இருக்கவே வேண்டாம்.
2.”என்ன உபதேசிக்கிறார்…” என்று கேட்டுப் பதிவாக்கிக் கொண்டிருந்தால் மட்டும் போதும்.
ஒரு டேப்பிற்கு ஒன்றுமே தெரியாது. அதில் உள்ள நாடாவில் தான் முலாம் பூசப்பட்டு இருக்கின்றது. ஆனால் பேசுவது எல்லாம் அதிலே பதிவாகின்றது. வேறு எண்ணம் அதற்கு இல்லை.
உதாரணமாக சிறிய குழந்தைகளுக்கு “அங்கே செல்ல வேண்டும்… இங்கே போக வேண்டும்…” என்ற எண்ணங்கள் இல்லை.
ஒரு பாடல் நன்றாக இருக்கிறது என்றால் குழந்தை அதைச் சும்மா கவனித்துக் கொண்டே இருந்தால் போதும். அதே பாட்டை அதே மெட்டில் அந்தக் குழந்தை பாடத் தொடங்கும்
ஆனால் பெரியவர்கள் ஆயிரம் தடவை கேட்டாலும்… அந்தப் பாடலை அதே மெட்டைப் பாட முடிகிறதா…? என்றால் இல்லை. ஏனென்றால் பல எண்ணங்கள் நமக்குள் இருக்கின்றது.
பல ஆயிரம் புத்தகங்களைப் படித்துக் கொண்டு வந்து
1.நாம் இத்தனை புத்தகங்களைப் படித்து இருக்கின்றோம்… சாமி சொல்வது அர்த்தமில்லை…! என்று
2.படித்த நிலைக்கு ஒப்பிட்டுப் பார்த்தால் நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகாது.
ஆகவே அந்த மெய் ஒளியின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்து… நாம் அந்த வழியில் பெற வேண்டுமென்று ஏக்கத்துடன் இருந்தால் இது பதிவாகும்.
அந்தப் பதிவான நிலைகள் கொண்டு மீண்டும் தியானத்தில் எண்ணி எடுத்தால்
1.படித்துக் கொண்டு வந்த அனைத்திற்கும் விடைகளை உங்கள் உள்ளத்திலிருந்து கொடுக்கும்
2.இந்த தியானத்தை முறைப்படி எடுத்தால் படித்தது அனைத்தையும் நீங்கள் அர்த்தம் தெரிந்து கொள்வீர்கள்.
காவியங்களைப் பற்றி எல்லாம் உங்களுக்குச் சிறுகச் சிறுகத் தான் பதிவு செய்து கொண்டு வருகின்றேன். சில நேரம் முழுவதும் சொல்கின்றேன்…. சில நேரம் சுருக்கமாகச் சொல்கிறேன்.
முழுவதும் சொன்னாலும் கிரகிக்கும் சக்தி உங்களிடம் இல்லை… கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்னாலும் கிரகிக்கும் சக்தி இல்லை.
இராமாயணமும் மகாபாரதமும் பல மொழிகளில் பாடல்களாகத் தான் எழுதி வைத்திருக்கின்றார்கள். திருவள்ளுவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
அவர்கள் சொல்வதெல்லாம் படித்துவிட்டு “அர்த்தமாகிறது” என்று எப்படிச் சொல்கிறார்கள்…! என்று தெரியவில்லை. அர்த்தம் தெரிந்து எல்லோருக்கும் தெரிவதில்லை.
குழந்தைப் பருவத்தில் ஒன்றாம் வகுப்பில் பாடம் படிக்கிறோம். தெரிந்து கொண்ட பாடத்தை அங்கே பள்ளியில் சொல்லிக் கொடுப்பதில்லை.
அந்த வகுப்பில் படித்த பின்பு அடுத்த வகுப்பிற்குச் என்றால் ஏற்கனவே தெரிந்த ஒன்றாவது வகுப்புப் பாடத்தை அவர்கள் சொல்லித் தருவதில்லை.
இப்படி ஒவ்வொரு வகுப்பிலும் கற்றுக் கொடுத்துத் தேர்ந்த பின்புதான் அடுத்த நிலைக்குப் போகின்றோம். இப்படி வரிசையாகப் போய்ப் பனிரெண்டாம் கிளாஸ் வரை போகின்றோம்.
அத்தனையும் படித்தாலும் அதற்குப் பின் இன்ஜினியருக்கு போகிறாயா…? மருத்துவத்திற்குப் போகிறாயா…? என்று கேட்கின்றார்கள். படித்ததற்குத் தகுந்த மாதிரித் தேர்வு வைத்து டாக்டராகவோ இன்ஜினியராகவோ செல்லலாம் என்று அங்கே பிரிக்கின்றார்கள்.
பிரித்த பிற்பாடு அப்புறம் படித்துத் தான் கல்லூரியில் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர படிக்காமல் அதைத் தெரிந்து கொள்ள முடியாது.
1.நான் பல புத்தகங்களை ஏற்கனவே படித்திருக்கிறேன் என்று படித்த நிலையைச் சொல்லிக் கொண்டு
2.கல்லூரிப் பாடத்தைப் படிக்க வேண்டும் என்று இல்லாதபடி
3.“இச்ச்….” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டால் அந்தப் பாட நிலை ஏறாது.
கல்லூரிப் படிப்பைச் சீராகப் படித்துப் பதிவாக்கி அந்த உணர்வின் சக்தியை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அங்கே தேர்வாக முடியும்.
சிலர் நிறையப் படித்து விட்டு வந்து…
1.என்னமோ இந்தச் சாமி சொல்கிறார்…
2.வேண்டுமென்றால் கேட்டு விட்டுப் போவோம் என்ற நிலையில் இருக்கின்றனர்.
3.படித்த நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்படித்தான் வரும்.
ஏனென்றால் இந்த வாழ்க்கை… இந்த இயற்கை… எப்படி நிகழ்ந்து கொடுக்கிறது…? என்ற நிலையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது தான் முக்கியம்.
ஆகவே…
1.“குழந்தை உள்ளங்களாக” இருந்து
2.அந்த மெய் ஒளியைப் பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் இருந்தால்
3.யாம் உபதேசிக்கும் அனைத்தும் நிச்சயம் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகும்.


“ஞானிகள் காட்டிய தத்துவப்படி” அருள் உணர்வுகளை நுகர்ந்து பழக வேண்டும்
துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உடலுக்குள் சேர்த்து அதைக் கணங்களுக்கு அதிபதியாக மாற்றிப் பழகுதல் வேண்டும். இது மனிதன் ஒருவனால் தான் முடியும்.
1.அதிகாலையில் நாம் படுக்கையிலிருந்து அதை எண்ணி எடுத்தாலே போதுமானது.
2.குளித்துவிட்டு நான் பூஜை அறையில் போய் உட்கார்ந்து என்னமோ எடுக்கப் போகிறேன் என்று எல்லாம் நினைக்க வேண்டியது இல்லை.
3.கண் விழித்தவுடனே தியானத்தைச் செய்யுங்கள்.
முடிந்த பிற்பாடு… அப்புறம் வேண்டும் என்றால் கொஞ்ச நேரத்துக்கு நீங்கள் பூஜை அறையில் உட்கார்ந்து பழகுங்கள். அங்கே நல்ல நல்ல படங்களை வைத்திருப்போம். அந்தக் குணத்தின் சிறப்புகளை எண்ணிப் பாருங்கள்.
1.இலட்சுமி என்றால் எல்லாவற்றையும் வளர்க்கக்கூடிய நிலைகள்
2.காளி என்றால் சர்வத்தையும் உருவாக்கக்கூடிய சக்தி பெற்றது
3.சரஸ்வதி என்றால் சர்வ ஞானத்தையும் பெருக்கக்கூடியது,
4.முருகன் என்றால் தீமையை அகற்றி மெய்ப்பொருளை காணும் வல்லமை பெற்றது.
இந்த மாதிரி நற்குணங்களை எண்ணிப் பழகுதல் வேண்டும்.
ஆனால் பூஜை செய்து சூட தீப ஆராதனை எல்லாம் காட்டிவிட்டு… நான் உனக்குத் தினமும் சூட தீபாராதனை காட்டுகின்றேன்… என்னை ஏன் நீ இப்படி சோதிக்கின்றாய்…? என்று உங்கள் கஷ்டத்தை எல்லாம் சொன்னால் எது உருவாகும்…?
சாமி படங்கள் எதற்காக வீட்டில் வைத்திருக்கின்றோம்…?
1.அந்த தெய்வ குணங்களின் உணர்வை நாம் நுகர்வதற்குத் தான்.
2.அங்கு போய் சூட தீப ஆராதனையைக் காட்டி விட்டு இப்படி எல்லாம் இருக்கின்றது என்று வேதனைப்படுவதற்கல்ல.
அதே சமயத்தில் சிறு குறைகள் வந்துவிட்டால் போதும் கர்ப்பிணிகளுக்கு. அந்த படத்தை பார்த்து இதே போல் அரும்பெரும் சக்தி என் கருவில் இருக்கக்கூடிய குழந்தை பெற வேண்டும் என்று நினைப்பதற்கு மாறாக… நான் இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து என் குழந்தை என்னை இப்படிப் பேசுகின்றான்… எங்கள் மாமியார் இப்படி பேசுகின்றார்… என் கணவர் இப்படி பேசுகின்றார்… இப்படி எல்லாம் தொல்லையாக இருக்கின்றதே…! என்று அழுது கொண்டு இருப்பார்கள் படத்தைப் பார்த்து.
அப்பொழுது அந்த கருவில் வளரக்கூடிய குழந்தைக்கு எப்படி இருக்கும்…? படம் எதற்காக வேண்டி வைக்கின்றீர்கள்…?
ஆக மறைமுகமாக இயக்கும் குணங்களின் சிறப்புகளைக் காவியமாகப் படைத்து சரஸ்வதியின் நிலை இப்படி… இலட்சுமியின் நிலை இப்படி… முருகனின் நிலை இப்படி… கணபதியின் நிலை இப்படி… சிவனின் நிலை இப்படி…! என்று கதைகளாக எழுதி வைத்துள்ளார்கள்.
அதையெல்லாம் படித்துவிட்டு நீங்கள் அங்கே போய் அழுது வரம் கேட்டால் என்ன செய்யும்…?
1.அழுகும் உணர்வே இங்கே வரும்…
2.எல்லோரையும் அழுக வைத்துக் கொண்டுதான் இருப்பீர்கள். வேறு ஒன்றும் செய்ய முடியாது.
நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதைத்தான் உயிர் உருவாக்கும். ஆகவே நாம் எதை செய்ய வேண்டும்…?
நமது ஞானிகள் கொடுத்த தத்துவத்தின் முறைப்படி நாம் நுகர்ந்தால் அத்தகைய உணர்வின் அணுக்களாகி நமக்குள் தெளிவான நிலையும் அடுத்து… பிறவியில்லா நிலையும் அடைய முடியும்.
இந்த நம்பிக்கைகள் வரவேண்டும்.
இன்றைய பழக்கத்தில் நாம் எதற்கெடுத்தாலும் சாமியாரைப் பார்க்க ஓடுகின்றோம், ஜோசியம் பார்க்க ஓடுகின்றோம்… ஜாதகத்தைப் பார்க்க ஓடுகின்றோம்.
ஜாதகமும் ஜோசியமும் மனிதருக்கு அல்ல.
ஆகவே
1.மதி கொண்டு விதியை மாற்றி அமைக்க வேண்டும்
2.நாம் வேதனை வேதனை என்று பார்த்துக் கொண்டு அதை விதியாக மாற்றிடாதபடி,…
3.அருள் ஞானியின் உணர்வைக் கொண்டு அந்த மதி கொண்டு விதியை மாற்றி அமைக்கலாம்.
எல்லோரும் அருள் ஞானம் பெற்று “ஒற்றுமையுடன் வாழ்வார்கள்” என்ற உணர்வினை நாம் நமக்குள் வளர்த்துப் பழக வேண்டுமே தவிர தீமைகளை வளர்த்துவிடக் கூடாது.

மெய்ஞானச் சுடர்
“மனதின் சக்தியே” பல கோடி ரிஷிகளின் மெய்ஞானச் சுடராக இன்று இந்தப் பிரபஞ்சத்தில் எண்ணிலடங்காச் செயல் திறன் செய்விக்கும் ஆற்றல் கொண்ட “மாமகரிஷிகளின் மெய்ஞானச் சுடரொளியாகும்…”
மலர் மலர்ந்து மணம் பரப்புகின்றது… காய் கனிந்து மணம் வீசுகின்றது. மலர்ந்த நாள் மலருக்கு மணம்… அடுத்த நாள் வாடிய மலரின் துர்வாடை வீசுகின்றது… கனியின் நிலையும் அதுவே.
செயல்பாட்டின் தன்மையில் ஒவ்வொரு செயலிலும் பருவம் பக்குவமாகி மணமாகவும் அடுத்து அதன் கதி துர்நாற்றமாகவும் ஆகிவிடுகின்றது.
1.நமது மனம் மலரின் நறுமணத்தை ஏற்கின்றது… துர்நாற்றத்தை வெறுக்கின்றது
2.நிகழும் செயல் யாவும் இரு நிலை கொண்ட செயல்பாடு தான்.
என்றாலும்… ஏற்கும் நிலைக்காக மனிதன் பக்குவமாக மலரின் வாசனைகளைத் திரவமாகச் (ESSENCE) செயல்பாட்டிற்கு எடுத்துப் பக்குவ கதிக்கு உட்படுத்திக் கொள்கின்றான்.
மனித ஆற்றலின் செயல்பாட்டில்… தனக்கொத்ததைச் செய்விக்கும் திறன் ஆய்வின் மூலக்கருவே தன் “ஆத்மாவின் விழிப்பின் சுடர்தான்…”
1.மனித சக்தியின் உண்மையை உணர்ந்து
2.மகரிஷிகளின் விழிப்பின் சுடர் ஒளிச் சுடர்களாக மண்டல இயக்கத்தில் செயலாகும் ஒளி சக்தி
3.எப்படி பூமியின் இயக்கத்திற்குச் செயலுக்கு வருகின்றது என்பதை
4.மெய்ஞானச் சுடரிலிருந்து ஒவ்வொரு ஆத்மாவும் விழிப்பெய்தல் வேண்டும்.
சில வகை மீன்கள் அதனுடைய உயிர் சக்தியின் அமைப்பில் மூலத் தொடரிலேயே ஒவ்வொரு செதிலிலும் “மின் காந்த ஒளியை வெளிப்படுத்தும் ஒளி மீன்களாக” பல வகையில் சில இடங்களில் உண்டு.
நீரிலிருந்து மின்சாரம் எப்படிப் பெறப்படுகின்றதோ அதைப் போன்றே
1.இம்மீன்களின் உயிரணுக்கள் பெற்ற ஒளி காந்த மிகுதியால்
2.மின் ஒளியைப் போன்று மின்னக்கூடிய தன்மை அதற்கு ஏற்படுகின்றது.
அதைப் போன்று மனித உணர்வின் எண்ணத்தில் நறுமணத்தை மனம் ஏற்பது போன்று
1.நற்குணமான நற்சக்தியை மட்டும் எண்ணத்தின் செயல் ஏற்று
2.தீய உணர்வு எண்ணத்தை இச்சரீர உணர்வு எண்ணத்தில் இருந்து அகற்றி
3.கோள்களின் தொடர்புடன் தெய்வ குணமுடன் ஞானத்தின் ஒளியை மனதின் எண்ணம் செலுத்தும் பொழுது தான்
4.எண்ணத்திற்கொப்ப ஈர்ப்பின் அமிலம் சரீரத்தில் பாயும்.
உணர்வின் எண்ணத்தைச் செலுத்தும் “மெய் ஞான குணமுடன்” தன் ஞானத்தை வெளிப்படுத்தும் ஆற்றலாக “விழிப்பெய்திட” இங்கே கொடுக்கும் பாடநிலையை எடுத்துக் கொள்ளுங்கள்.
பல ரிஷிகளின் செயல் தன்மை தான் “மெய்ஞானச் சுடராக” இங்கே சுடர்ந்து கொண்டிருக்கின்றது.
1.இத்தத்துவத்தின் உண்மை அறிந்து அந்த மகரிஷிகளுக்கு ஏற்பட்ட அனுபவ வளர்ச்சியை
2.மகரிஷிகளின் ஒளிச்சுடர் கொண்டு அவர்கள் ஒளிபெற்ற உண்மைதனை ஒவ்வொரு
3.மனித அறிவின் விவேகத்தால் ஜெபம் கொண்ட தியானத்தால் ஒளிச்சுடர் பெறலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஜோசியரிடம் சென்று கேட்கின்றோம்.. மந்திரக்காரனிடம் கேட்கின்றோம்… என்னிடமும் (ஞானகுரு) வந்து கேட்கிறீர்கள் அல்லவா.
ஆனால் யாம் சொன்ன முறைப்படி
1.ஞானிகள் கொடுத்த வாக்கினைப் பயன்படுத்திப் பாருங்கள்.
2.கணவன் மனைவி உங்கள் இருவருடைய சக்திகளையும் ஒன்று சேர்க்கும்.
ஒரு உயிர் விண்ணிலே ஒளியாகத் தோன்றுகின்றது. சந்தர்ப்பத்தில் புவியின் ஈர்ப்புக்குள் வருகிறது. வந்த பின் என்ன செய்கிறது…?
உதாரணமாக நம் புவிக்குள் இருக்கும் மரங்கள் வெளிப்படுத்தும் சத்துகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கிறது. அது எல்லாம் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.
1.ஆனால் விண்ணிலிருந்து வந்த உயிர் இதிலே மோதி
2.இரண்டும் சேர்ந்து உறைந்த பின் கவர்ந்த சத்தை உயிர் உடலாக மாற்றுகின்றது
3.சக்தி சிவம் ஆகின்றது.
ஆண் பெண் இருவரும் சேரும் போது உருவாகுவதுதான் குழந்தைகள். அதைப் போல் இருவருடைய எண்ணங்களும் ஒன்று சேர்த்து உயர்ந்த எண்ணங்களை எண்ணி ஒருவருக்கொருவர் அந்த அருள் உணர்வைப் பரப்பிக் கொண்டால் அது வலுக் கொண்டதாக மாறுகிறது.
1.அப்படி வலுக் கொண்டதாக மாற்றி விட்டால் பிறிதொருவரின் எண்ணங்கள் நம்மைப் பாதிப்பதில்லை.
2.அவசியம் இதைச் செய்து பாருங்கள்.
3.இது இருவருக்குமே ஒரு பாதுகாப்புக் கவசமாக ஆகின்றது.
உதாரணமாக ஒரு இராக்கெட்டை ரஷ்யாவில் இருந்து விடுகின்றார்கள். அமெரிக்காவிலும் இராக்கெட்டை விடுகின்றார்கள்
1.ரஷ்யாவில் இராக்கெட் வெளியிலே கிளம்பிய உடனே
2.சூரியனுடைய காந்தப் புலனுக்குள் உராய்ந்த உடனே அமெரிக்காவில் இருப்பது இதை அறிந்து கொள்கின்றது
3.அது அந்த வேக அலையினை எடுத்துக் கொள்கிறது.
அதைப் போல கணவனும் மனைவியும் யாம் சொன்ன முறைப்படி இந்தத் தியானத்தை எடுத்து இருவரும் சேர்ந்து அந்த உயர்ந்த சக்தியினைப் பரப்பிக் கொண்டீர்கள் என்றால் பாதுகாப்பாக வரும்.
1.ஒரு சங்கடமான நிலையோ அல்லது
2.நீங்கள் போகும் பாதையில் ஒன்றைக் குறி வைத்துச் செல்லும் பொழுது ஏதாவது விபத்துகள் ஏற்படக்கூடிய நிலை இருந்தது என்றால்
3.கணவன் மனைவி உங்கள் எண்ணத்தை ஊடுருவி அங்கே பாய்ச்சும்போது இது உராய்ந்தவுடனே
4.அங்கே எதிர்ப்பு சக்தி இருந்தது என்றால் உடனே டக்… என்று கம்ப்யூட்டர் மாதிரி உங்களை அங்கே போக விடாதபடி தடுத்துவிடும்
ரேடாரை (RADAR) வைத்தவுடன் எப்படி அதிலே மற்ற நிலைகள் தெரிகின்றதோ அதே மாதிரித் தெரிய வரும். விபத்துக்களிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள இது உதவுகிறது.
கணவன் மனைவி இரண்டு பேரும் ஆத்ம சுத்தி செய்து விட்டு ஒரு காரியத்திற்குச் சென்றீர்கள் என்றால்
1.உங்களுக்குத் தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாராவது வந்திருந்தாலும்…
2.இந்த உணர்வு அங்கே பட்டு அந்த நிமிஷத்தில் எண்ணத்தை மாற்றி விட்டு
3.உங்கள் பாதையில் நீங்கள் சீராகச் சென்று கொண்டிருப்பீர்கள்…
4.அவர்கள் எண்ணம் மாறிப் போகும்… அவர்களை ஏதாவது ஒரு பக்கம் திசை திருப்பும்
5.அல்லது உங்களை வேறு பக்கம் அழைத்துச் சென்றுவிடும்
இதை எல்லாம் உங்கள் அனுபவத்திலே பார்க்கலாம்.


அகஸ்தியன் நுகர்ந்த மின்னலின் ஆற்றல்கள்
நஞ்சினை முறித்திடும் பல பல தாவர இனச் சத்துக்களைத் தாய் தன் உடலில் பூசிக் கொண்டதால் அந்தத் தாய் கருவில் இருக்கக்கூடிய குழந்தை (அகஸ்தியன்) நஞ்சை வென்றிடும் சக்தி பெற்றது.
1.அது பிறந்த பின் சூரியனைப் பார்த்து அந்த உணர்வினை நுகர்கின்றது.
2.சூரியனிலிருந்து வரக்கூடிய விஷத்தன்மை இந்தக் குழந்தையைப் பாதிப்பதில்லை.
அதே சமயத்தில் 27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது. ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் அந்தத் தூசிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது மின்னலாக மாறுகின்றது.
அந்த மின்னலின் தன்மை வேகமாக வந்தாலும்
1.அந்தக் குழந்தை கண்களுக்கு அது அடங்கி மகிழ்ச்சியூட்டும் நிலைகளாக அமைகிறது
2,மேலும் அந்த மின்னலின் செயலாக்கங்களைப் பற்றியும்
3.எந்த நட்சத்திரம் எது எதிலிருந்து வருகின்றது…? எது எதனுடன் மோதுகின்றது என்ற நிலையையும்
3.அறியும் தன்மை பெறுகின்றான் குழந்தைப் பருவத்திலேயே அகஸ்தியன்.
உதாரணமாக… குளவி ஒரு புழுவை எடுத்துத் தீண்டி தன் இனம் என்ற நிலையில் அதைப் பெருக்கச் செய்கின்றது. தனக்குள் ஊறும் உமிழ் நீரைக் கூட்டி மண்ணை எடுத்து வந்து ஒரு கூட்டை அமைக்கின்றது.
ஒரு புழுவை எடுக்கின்றது தன் விஷத்தைப் பாய்ச்சுகின்றது, கூட்டுக்குள் அடைத்து விடுகின்றது.
1.இந்த உணர்வின் தன்மை தாக்கிய பின்
2.புழுவின் “உயிரின் துடிப்பு” அதிகரிக்கின்றது.
புழுவின் உணர்வுகள் அது துடிப்பின் தன்மை கம்மி ஆனது. ஆனால்
1.குளவி கொட்டிப் புழுவின் உயிர் துடிப்பு அதிகமாகப்படும் போது
2.அந்த விஷத்தன்மை புழுவின் அணுக்களை அதிகமாகத் துடிக்கச் செய்யும் பொழுது சுருங்கி விடுகின்றது.
3.சுருங்கிய உணர்வு கொண்டு (விஷத்தைக் கொடிய குளவி எப்படி முதலில் உருவானதோ) அந்தக் குளவியின் ரூபமாக மாற்றி விடுகின்றது
4.குளவியின் விஷத்தின் தன்மை இதனுடைய கலவையை இப்படி மாற்றி விடுகின்றது.
இதைப் போல தான் விஷத்தின் தன்மை கொண்டு தனக்குள் அடக்கிடும் நிலை பெற்ற இந்த அகஸ்தியன்
1.மின்னலின் ஒளிக் கற்றைகளை அவன் நுகர்கின்றான்
2.ந்த உணர்வின் தன்மை தனக்குள் வரப்படும் பொழுது இந்த உடல் பெறும் உணர்வுகளைச் சுருக்குகின்றது… உணர்வின் தன்மை வளர்க்கின்றது.
ஆகையினால் தான் அந்த அகஸ்தியனை மிகவும் குள்ளமாகப் போட்டு காட்டி இருப்பார்கள்…!
1.தசைகள் வளர்ச்சி கம்மி…
2.”உணர்வின் அணுக்களின் சக்தி வீரியமடைந்தது…!” என்ற நிலையை இங்கே தெளிவாகக் காட்டியிருப்பார்கள்.
ஆகவே நட்சத்திரங்களிலிருந்து மின்னல்கள் வருவதைத் தனக்குள் நுகரப்படும் பொழுது… அந்தச் சக்தியால் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் வீரியத் தன்மை பெறுகின்றது.
எதனை நுகர்ந்தால் அதை மாற்றி அமைக்கும் சக்தி கிடைக்கின்றது என்பதை அறிந்து கொள்கின்றான். இப்படிப் பெற்றவன் தான் அகஸ்தியன்.
(தாய் கருவிலிருக்கும் போது) அவன் எத்தகைய விஷத்தன்மையை எந்தத் தாவர இனங்களிலிருந்து நுகர்ந்தானோ அதனின் இயக்கச் சக்திகளை எல்லாம் அறிந்துணர்ந்தவன் ஆகின்றான்.
அந்த அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை எல்லாம் நாமும் பெற வேண்டும்.

நம் பூமியில் இன்றுள்ள மூல சக்தியே நம் பூமிக்குள்ள கடலும் நீரும்தான்
நம் பூமிக்கு இரண்டு பக்கமும் வடதுருவ, தென்துருவக் கடல்களின் நிலையினால் இப்பூமி முழுவதற்குமே ஆங்காங்குள்ள நீர்நிலைகளும், ஆறு குளங்களும் இப்பூமியில் பெய்திடும் மழையின் நிலையும் கடல்களினால் தான் இப்பூமி முழுவதற்குமே நீர் நிலை பெறும் சக்தி வந்தது.
1.காற்றுடன் நீர் இல்லா விட்டால் தாவரங்கள் மட்டுமல்ல
2.இப்பூமியில் வளர்ந்திடும் எக்கனி வளங்களும் எவ்வுயிரணுவும் இன்றைய நிலை கொண்ட வளர்ச்சிக்கு வந்திருக்க முடியாது.
எவ்வமிலமும் இந்நீருடன் தன் சக்தியைச் சேமிக்கும் சக்தி கொண்ட பூமி இது. இன்று நம் பூமியில் கடல்கள் உள்ள இடங்களில் கடல்களில் உள்ள நீர் பகலில் குறைந்தும் இரவில் அதிகப்பட்டும் உள்ளது.
அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களிலும் மற்ற நாட்களைவிட இந்நீர் அதிகமாகப் பொங்கி வரக் காண்கின்றோம்.
பகலில் சூரியனின் நேர் ஒளி படும் நிலையில் பூமியின் கோளத்தின் அக்கடலின் நீர் உள்ள நிலையில் நேராய் சூரியனின் ஒளி பட்டவுடன் அந் நீரிலிருந்து ஆவியான அமிலங்கள் காற்றுடன் கலந்துவிடுகிறடு.
பின் பூமி சுழலும் நிலைகொண்டு இரவில் சூரியனின் ஒளிக்கதிர் அந்நீர் நிலையில் படாமல் அக்கடல் நிலையுள்ள இடமும் இச்சுழலும் தன்மையில், நம் பூமியின் அசைவைக் கொண்டு இக்கடல் நீரும் வட துருவமோ அல்லது தென் துருவமோ இந்நிலையில் இரவு நேரத்தில் அக்கடல் நீர் அந்நிலையில் மோதி,
1.பூமியின் சுழலும் வேகத்தில் இரவின் அசைவினால் வட துருவத்தில் மோதப்பட்டு
2.பகலில் ஆவியான இவ்வமிலமும் குளிர்ச்சி கொண்டு வட துருவ பூமியில்
3.படிவமாய்க் குளிர்ந்த நிலையில் பனிக்கட்டியாய் உறைந்து விடுகின்றது.
இப்பூமியின் வட துருவத்திலும் தென் துருவத்திலும் பாறை போல் உறைந்து குளிர்ச்சியான உப்புக் கலந்த அமில சக்தியைக் கொண்ட நீராய் உறைந்துள்ளது.
சூரியனின் ஒளி இரவில் இல்லாததினாலும், அவ்வுஷ்ண அலைகள் இக்கடலில் தாக்காததினாலும்
1.பகலில் ஈர்த்து ஆவியான நீர்களே
2.இரவில் அவ்வுறைந்த நிலை கொண்ட பகுதியில் இக்காற்றாலைகள் மோதி நீராய் வடியப் பெற்று
3.இரவில் கடல்களில் நீர் நிலைகளின் பெருக்கத்தைக் காண்கின்றோம்.
4.வட துருவம் தென் துருவம் இரண்டு பக்கத்திலுமே இந்நிலை கொண்ட சக்திதான் உள்ளது.
அமாவாசை அன்றும் பௌர்ணமி அன்றும் ஏற்படும் இவ்வணுக்களின் மாற்றத்தினால் இக்காற்று மண்டலத்தின் சக்தியில் சந்திரனிலிருந்து கிடைக்கப் பெறும்
1.குறைந்த அமாவாசையின் அணு சக்தியும் பௌர்ணமியில் கிடைத்திடும் அதிக அணு சக்தியும்
2.இவ்விரண்டு பக்கத்திலும் உறைந்துள்ள நீரின் அமில சக்தி மாற்றம் கொள்ளும் நிலையில் இக்கடல் நீர் “பொங்குகின்றது…”
இன்று இப்பூமிக்கு ஜீவனாய் பொக்கிஷமாய் அமைந்துள்ள இந் நீர் நிலைகள் வட துருவமாயும் தென் துருவமாயும் இப்பூமி சுழல்வதற்கே சக்தி கொடுத்து நிறைந்திருக்கா விட்டால் :நம் பூமிக்கு இம்மழையும் மற்ற நீர் நிலைகள் எவையுமே கிடைத்திருக்காது…”
ஜீவனாய் இப்பூமிக்கு இருக்கும் இச்சக்தி ஒவ்வொரு மண்டலத்திலும் மாறு கொள்ளுகின்றது.
சந்திரனில் நம் பூமியில் பெய்யும் மழையும் மற்ற நீர் நிலைகளும் இங்கு தேங்கியுள்ளதைப் போல் அங்கு மாறு கொண்ட நிலையில் சந்திரனின் நிலை கொண்டு இன்றுள்ளது.
இதுவே இப்பூமியின் மாற்றத்தினால் நம் பூமியின் சக்தியைப் போல் நம் பூமிக்கு அருகாமையில் பூமியுடன் அதிகத் தொடர்பு கொண்ட சந்திர மண்டலம் இருப்பதினால் “இப்பூமியின் நிலையைப்போல் சக்தியை வளர்க்கப் போகிறது…”
1.நம் பூமியைக் காட்டிலும் சுழலும் வேகம் குறைவு
2.ஆனால் மாற்றத்தில் சந்திரனின் சக்தி கூடி துரித வேகம் அதிகபடப்படுகின்றது.
துரித சக்தியின் வளர்ச்சியினால்… ஈர்ப்பு சக்தியின் இன்று செழித்து வளரும் நிலையில்லாமல் காற்றும் மழையும் குறைந்துள்ள நிலையில்… மழையென்றால்… நம் பூமியில் பெய்வதைப் போல் பூமி ஈர்த்து ஆங்காங்கு வெளிப்படுத்தும் பருவ மழைகளும் இக்கடலில் புயலால் ஏற்பட்டு உருக்கொண்டு வீசிடும் காற்றில் இருந்து… இங்கு பெய்யும் மழையின் நிலையும் இரவு பகல் என்ற மாற்றம் கொண்ட நிலையும் சந்திரனில் இல்லாமல் உள்ள இன்றைய நிலையே… இக்கலியின் மாற்றத்தினால்…
1.இப்பூமியின் சக்தியின் நிலையே
2.சந்திரனின் சக்தி நிலையுடன் செயல் கொள்ளப் போகின்றது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம்மை அறியாமலே எத்தனையோ வேதனைகளை உருவாக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அன்றாட வாழ்க்கையில் வருகிறது. அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும்.
நம் உடலுக்குள் அவை புகாதபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொண்டால் வாழ்க்கையில் வரும் இருளை மாற்றுகின்றோம். அசுர சக்திகள் நம்மை அணுகாது மாய்க்கின்றோம்.
இதைக் கணவன் மனைவி இருவருமே தனக்குள் வளர்க்கப்படும் போது தீயது வராதபடி தடுக்கவும் செய்கின்றது.
கருணைக் கிழங்கை வேக வைத்த பின் அதில் உள்ள விஷம் நீங்குவது போன்று… தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றியபின் செம்பும் வெள்ளியும் ஆவியாக மாறுவது போல்… தீமைகளை அகன்று செல்ல வைக்க வேண்டும்.
1.தீமைகள் என்பது அறிவதற்கு நமக்கு உதவியது.
2.ஆனாலும் அது அணுவாக நமக்குள் உருவாகி விடக் கூடாது.
உதாரணமாக வெள்ளியும் செம்பும் தங்கத்துடன் சேர்த்துச் சூட்டிலே காண்பித்தவுடன் உடனே அவைகள் உருகி நகையாக ஒட்டிக் கொள்கின்றது
1.ஆனால் தங்கம் உருக வெகு நேரமாகும்
2.இதைப் போன்றுதான் நல்ல குணம் உடனடியாக இயங்காது.
ஒரு பாலைக் குடித்தோம் என்றால் நாற்பத்தி எட்டு நாட்கள் கழித்துத் தான் உடலுக்குள் அதனின் சத்து கூடுகின்றது. ஒரு நல்லதைச் செய்ய வேண்டும் என்றால் மெதுவாகத்தான் பேசுகின்றோம். ஆனால் ஒரு கோபம் வருவது உடனே இயக்குகின்றது.
ஒருவர் ஏதாவது சொல்லி விட்டார் என்றால்
1.ஒரு நொடிக்குள் நாம் கோபப்பட்டுப் பேசி விடுகின்றோம்… உடனே அதை அழுத்தி விடலாம்
2.ஆனால் அடுத்துச் சாந்தமாக பேச வேண்டுமென்றால் வெகு நேரமாகிறது.
அதாவது சாந்தமாகச் சொல்லி ஒருவருக்கு அந்த அர்த்தத்தைப் புரிய வைக்க வேண்டுமென்றால் வெகு நேரமாகிறது.
சுருக்… என்று சொல்லி விட்டால் உடனே அங்கே கோபத்தை உண்டு பண்ணிவிடலாம்.
1.என்ன சொன்னாய்…?
2.பார்… உன்னை என்ன செய்கிறேன் என்று… உடனே எதிர்த்துப் பேச வந்துவிடும்.
ஆனால் அதற்குப் பதிலாக ஒரு நல்லதைச் சொல்வதற்குக் கேட்பதற்கு ரொம்ப நேரம் ஆகிவிடும்.
ஆகவே நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் அந்தச் சக்தியை நாம் தடைப்படுத்த வேண்டுமல்லவா. ஒரு நொடிக்குள் நம்மை உணர்ச்சிவசப்படச் செய்ததை மாற்ற
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.கணவன் மனைவியும் இருவரும் சேர்ந்து இந்த ஆத்ம சக்தியை
3.சிறிது நேரம் அதிகமாக எடுத்துக் கொண்டோம் என்றால் அதைச் சுத்தப்படுத்த உதவும்.
உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
உயிர் ஒளி பெற்றது… அது ஒளியாக இருப்பது போல்
1.உணர்வுகளை ஒளியாக மாற்றிச் சென்ற அந்த மெய் ஞானிகள் சென்ற பாதையில் நாம் சென்றோம் என்றால்
2.வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய இருளையும் நாம் மாற்றி விடலாம்.
3.அந்தத் தீப வழியாக அருள் உணர்வுகள் வரும்.
தொழிலும் சீராக இருக்கும் உங்கள் வாழ்க்கையும் சீராக இருக்கும். கணவன் மனைவி இதே மாதிரி செய்து பாருங்கள்.
1.சரியில்லை என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்…
2.சரியாக வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.


விண் சென்றவர்களின் “நினைவு நாளை” எப்படிக் கொண்டாட வேண்டும்…?
நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்தவர்களை குருநாதர் காட்டிய அருள் வழியில் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்கின்றோம்.
இணையச் செய்தாலும் அடுத்து நினைவு நாள் கொண்டாடுகின்றோம். அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒளி நிலை பெற்ற அந்த நினைவு நாள் தான் இன்று என்றால்…!
1.நாம் கூட்டுத் தியானத்திலிருந்து அவருடைய உயிரான்மாவை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தோம்.
2.அந்த உடலில் பெற்ற நஞ்சுகள் அனைத்தும் கரைந்து விட்டது.
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு ஏழாவது நிலையில் வாழ்ந்து வருகின்றார்.
4.என்றும் அவர்கள் பேரருளாக இருத்தல் வேண்டும்.
5.எங்கள் குடும்பத்தில் இருளை அகற்றும் அருள் சக்தியாகப் படர்ந்திட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
ஏனென்றால் அவர் ஒளியின் சரீரமான நாள். இன்றைய தினம் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குடும்பங்களில் படர்தல் வேண்டும்.
அந்தந்த குடும்பத்தைச் சார்ந்தோர் உடலை விட்டு பிரிந்து சென்ற ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து கொண்ட பின் அந்த உணர்வை எடுத்து
1.நம் குடும்பத்தில் எங்களை அறியாத தீய வினைகள் நீங்கிட வேண்டும்.
2.குடும்பத்தில் பற்றும் பாசமும் வளர்த்திட வேண்டும்.
3.எங்கள் குலதெய்வங்களாக என்றும் நிலைத்திருந்து இருளினை அகற்றி நஞ்சினை வென்று
4.உணர்வினை பேரருளாக மாற்றிடும் அருள் சக்தியாக அது வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
அதே சமயத்தில் அவர்கள் நம்முடன் வாழ்ந்த காலத்தில் அவருடன் பற்று கொண்ட நாம்… அவரின் உணர்வுகள் நமக்குள் பங்கு உண்டு.
விண் செலுத்தத் தவறினால் அவரின் நோய் இங்கே வளர்கின்றது. அப்படி நமக்குள் வளராது தடுக்க இம்முறைப்படி தான் அந்த நினைவு நாளைக் கொண்டாட வேண்டும். இதை
1.அவர்கள் பேரொளி பெற்ற நாள்
2.என்றும் இருளை அகற்றிய நாள்.
3.சப்தரிஷிகளாக ஆன நந்நாள்.
4.சப்தரிஷி மண்டலத்துடன் ஒன்று சேர்த்த அந்த உணர்வின் தன்மை எங்கள் குடும்பத்தில் படர வேண்டும்
5.குடும்பத்தில் தெளிவான நிலைகளை எங்களுக்கு ஊட்ட வேண்டும்.
உடலை விட்டுப் பிரிவதற்கு முன் அவர்கள் வீட்டில் வாழ்ந்த உணர்வலைகள் நம் உடலில் அது பதிவாகி இருப்பினும் ஆக நாம் குடியிருக்கும் வீட்டில் பதிவாகி இருப்பினும் மேலே சொன்னபடி நாம் செய்தோம் என்றால் அந்த்த் தீமைகள் மறைகின்றது.
1.அருள் ஒளி என்ற நிலைகள் நமக்குள் பெருக்கப்படுகின்றது.
2.நாம் நினைவு நாள் இப்படித் தான் கொண்டாட வேண்டும்.
மாறாக… அமாவாசையன்று அவர்களுக்கு உணவுகள் கொடுத்து அவர்களை அழைத்தோம் என்றால் ஆவியின் நிலை அடைந்து விடும். பின் இது சில தீமையின் நிலைகளுக்குத் தான் செல்லும். மீண்டும் பிறவிக்கே நாம் அழைக்கின்றோம் என்று பொருள்.
ஆகவே… உடலை விட்டுப் பிரிந்டு சென்றவர்களை நாம் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துப் பேரொளி என்ற உணர்வினை ஆக்கிய பின்
1.அவர் விண் சென்ற அந்த அருள் ஒளி என்ற நிலைகள் நம் வீட்டிலே படர்ந்து
2.அறியாத இருளை அகற்றிடல் வேண்டும் என்ற உணர்வினில் தான் நாம் வாழ்ந்திட வேண்டும்.
என்றுமே ஏகாந்த நிலைகள் கொண்டு பத்தாவது நிலை அடைந்த அந்த அருள் உணர்வுகள்…
1.குடும்பத்தில் இருளை அகற்றி அனைவருக்கும் தெளிந்த மனம் கொண்டு வாழும் அருள் சக்தியை எங்களில் என்றும் பரப்புதல் வேண்டும்.
2.நம் குடும்பத்தை நீங்கள் காத்திடல் வேண்டும்
3.இருளை அகற்றிடும் அருள் சக்தியாக எங்களில் வளர்த்திட வேண்டும்.
4.உங்கள் அருள் என்றும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று
5.அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் இத்தகைய நிலைகள் எண்ணுதல் வேண்டும்.
இதனை எண்ணினால் அவர் உடலில் வாழ்ந்த காலத்தில் நாம் கேட்டறிந்த நோயின் தன்மை வராதபடி மாற்ற முடிகின்றது. ஆகவே நமக்குள் அருள் ஒளியாக மாற்றியமைத்தல் வேண்டும்.
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நமது மூதாதையர்களை இந்த முறைப்படி பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்… பேரின்பம் பெறச் செய்வோம்.

சந்திரனில் “இனி” ஏற்படப் போகும் மாற்றங்கள்
கலியின் மாற்றம் கொண்டு நம் பூமியின் நிலை மாற்றம் கொள்ளப் போகிறது என்று உணர்த்தினேன். அந்நிலை கொண்டு அனைத்து மண்டலங்களின் நிலையும் மாறுவதை உணர்த்தியுள்ளேன்.
இன்று நம் பூமியின் இயற்கை சக்தியைப் போல் சந்திரனின் இயற்கை வளமும் கூடப் போகின்றது. நம் பூமியில் கடல்கள் உள்ளதைப் போல் ஆழ்ந்த நீர் நிலை அங்கு இல்லை.
பூமியில் வட துருவ, தென் துருவ நீர் நிலையின் சக்தியினால்
1.இப்பூமி சுழலும் நிலையில் காற்று மண்டலம் இந் நீர் நிலையிலிருந்து வருவதினால்
2.இவ்விரண்டு பக்க நீர் நிலையில் ஒன்றை ஒன்று உலகம் சுழலும் நிலையில் ஈர்க்கும் சக்தியும் ஏற்படுவதினால்
3.நம் பூமிக்குக் காற்று மண்டல சக்தியுடன் நான்கு நிலை கொண்ட கால நிலையினால்
4.இங்கு ஏற்படும் மழையும் மற்றச் சீதோஷ்ண நிலைகளின் மாறு கொண்ட சக்தியும் நம் பூமியின் பொக்கிஷமாய் உள்ளது.
அதைப் போல்… இக்கலி மாறும் தருணத்தில் சந்திரனின் ஈர்ப்புடன், சந்திரனுக்கு அருகாமையில் நீரை ஏற்படுத்தும் அமில நிலை கொண்ட உப்புக் கலந்த அமில சக்தி கொண்ட நட்சத்திர மண்டலங்கள் அதிகமாய் உள்ளன.
1.மாறும் தருவாயில் இன்று இம்மனிதன் சந்திரனுக்குச் சென்று அவனது சுவாச அலையை அங்கு விட்ட நிலையிலும்
2.இப்பூமியிலிருந்து ஆத்மாக்களில்லா ஏவுகணைகள் பல அந்நிலைக்குச் சென்று, இப்பூமியின் சக்தி சந்திரனில் இன்று செயல்படும் நிலையிலும்
3.நம் பூமியின் பார்வை நிலையில் நம் பூமியின் ஈர்ப்பு சக்தியும் சந்திரனில் நிறைந்துள்ள நிலையிலும்
4.தெரிந்தோ தெரியாமலோ சந்திர நிலவை, அப்பௌர்ணமி நாளை நம் ஆத்மாக்களில் பலர் ஆண்டவனாய் வழிபட்டதின் நிலையில்
5.நம் பூமியின் ஆத்மாக்களின் எண்ண சக்தியின் அலையும் சந்திரனில் இன்று குடி கொண்டுள்ள நிலையில்
6.நம் பூமியில் இருந்து ஈர்த்து அமிலப்படுத்திய நீர் நிலை கொண்ட அமில சக்திகளெல்லாம் சந்திரனுடன் சேரும் நிலையில்
7.இன்று சந்திரனில் நாம் காணும் அப்பள்ள நிலைகளே நம் பூமியின் நிலை போல் சந்திரனில் இரண்டு பக்கங்களிலும் நீர்நிலை கூடப் போகின்றது.
நம் பூமியில் உள்ளதைப் போல் தாவர வளர்ச்சி நிலையும் செயல் கொண்டு… நம் பூமியின் சக்தி நிலைகொப்ப வளரும் நிலை சந்திரனுக்குக் கூடப் போகிறது.
அந்நிலையில் இருந்து நம் பூமியில் உள்ள ஆத்மாக்கள் நம் பூமியின் இக்கலி மாற்றத்தில்… நம் பூமியின் சுவாச நிலையின் சக்தி கொண்ட சந்திரனில் வாழப் போகின்றார்கள்.
எந்நிலை கொண்டு…?
நம் பாட நிலையில்தான் இப்பூமியில் வாழ்ந்த ஆத்மாக்கள் மாறு கொண்ட சுவாச நிலையில் வாழ்ந்திட முடியாது என்று உணர்த்தியுள்ளோம்.
இப்பூமியின் ஆத்மாக்கள் எப்படிச் சந்திரனுக்குச் சென்று வாழ்ந்திடும்…? என்ற எண்ணம் இதைப் படிப்பவருக்குத் தோன்றிடலாம். தொடர் நாளை…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக… ஒரு பெரும் பாறையாக இருக்கிறது என்றால் கடப்பாரையை வைத்தோ அல்லது உளியைக் கொண்டோ சம்மட்டியால் அடித்து நாம் அந்தப் பாறைகளைப் பிளக்கின்றோம். அவ்வளவு வலு இருக்கின்றது அந்த இரும்பிற்கு…!
ஆனால் மனித உணர்வுக்குள் அதே இரும்பின் சத்து அதிகமாகச் சேர்ந்து விட்டால் அந்த வலுவின் தன்மை அதிகமாகி…
1.இரும்பு எப்படி மற்றொன்றைப் பிளக்கின்றதோ
2.மனித உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல உணர்வின் சத்துகளைப் பிளக்கும்.
3.இடி மின்னல்களைப் போல உடலிலே வலியும் பல நோய்களும் ஏற்படுகின்றது.
ஏனென்றால் ஒவ்வொரு தாவர இனங்களுமே ஒவ்வொரு உலோகத்தின் தன்மையை அதிகமாகக் கொண்டு வளர்ந்து வந்தது தான்.
நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் அந்தத் தாவர இனச் சத்துக்களை நுகர்ந்து… உணவாக எடுத்து… அந்த உணர்வின் மணத்தால் மனிதனுடைய எண்ணங்கள் ஓங்கி வளர்ந்து… இன்று மனிதனாக நம்மை உருவாக்கி இருக்கின்றது
சந்தர்ப்பவசத்தால்…
1.இரும்பு சத்து அதிகமாகக் கொண்ட காய்கறிகளையோ அல்லது எண்ணத்தால் பல நிலைகளை அதைப் போன்று சுவாசிக்கும் பொழுதோ
2.அந்த இரும்பின் சக்தி நம் நல்ல குணங்களுக்குள் கலந்து விட்டால் கடுமையான நோய்களாக வந்துவிடுகின்றது.
மனித உடலில் இப்படிப்பட்ட நோய்களாகித் தொல்லை கொடுக்கும் நிலைகளை “அதை எப்படி நீக்குவது…?” என்று அன்றைய சித்தர்கள் என்பவர்கள் சிந்திக்கின்றனர்.
அதற்குண்டான உபாயத்தை அவன் சிந்தித்து அதன் வழி தான் நுகர்ந்து எடுத்துக் கொண்ட நிலைகள் கொண்டு இதை நீக்க முடியும் என்ற உணர்வுகள் அது அவனுக்குள் வலு பெறுகிறது.
அப்படி வலுப் பெற்ற நிலைகள் கொண்டு பல தாவரங்களைப் பறித்து அந்த இரும்புடன் அதைக் கலந்து புடம் போடுகிறான். புடம் போடும் போது
1.இரும்புக்குள் இருக்கும் அந்தக் கடினமான பாறையை உடைக்கச் செய்யும் கடுமையான சத்தின் வலு இழந்து
2.அந்த இரும்பே கரைந்து போகும் நிலைகளை உருவாக்குகின்றான் சித்தன்.
அப்படி உருவாக்கிப் பஸ்பமாக்கிய அந்த உணர்வின் சத்தை ஒரு மனித உடலுக்குள் கொடுக்கப்படும் போது
1.உடலிலே கடினமான வேதனைகள் கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த சக்தி நீங்கி அதைக் கரைத்து விடுகின்றது
2.உடல் நலம் பெறும் சக்தியாக அது வருகின்றது.
ஒரு மனிதனின் உடலில் இப்படித் துன்பங்களை ஊட்டும் இந்த உணர்வின் சத்தைத் தன் எண்ணத்தால் இதையெல்லாம் கலந்து இதை நீக்க முடியும் என்று செயல்படுத்தியவர்கள் தான் அன்றைய சித்தர்கள்.
“புடமிட்டுப் பஸ்பமாக்கும் உணர்வுகள்” சித்தனின் உடலில் சக்தி வாய்ந்த உணர்வாக விளைகின்றது. அவர் கண்டறிந்த மருந்தோ மனித உடலில் இருக்கும் நோயை மாற்றுகின்றது.
அதே சமயத்தில் மனித உடலிலே சாடும் அந்தக் கடுமையான வேதனைகள் தனக்குள் வளரவிடாத நிலைகளிலே அந்தச் சித்தன் எடுத்துக் கொண்ட ஞானம் அவன் உடலிலே அணுக்களாகப் பெருகுகின்றது.
1.இப்படிக் கடின சக்திகளை வென்ற அந்த உணர்வின் ஆற்றல் அவன் உடலில் விளைந்து
2.எந்தக் கடினமான நிலைகள் வந்தாலும் அவனுடைய சிந்தனைகள் அனைத்தும்
3.அதை நிவர்த்திக்கும் உணர்வின் ஞானமாக அங்கே உருவாகின்றது.


“நஞ்சினை வென்றிடும் அணுக்களை” அகஸ்தியரிடமிருந்து நாம் பெற வேண்டும்
மனிதனான பின் அகஸ்தியன் “நஞ்சினை வென்று” இருளினை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியைப் பெற்றான். அவன் வளர்ச்சியில் அவன் பருவ நிலை வரும்பொழுது திருமணம் ஆனது.
அவன் கண்ட உண்மையைத் தன் மனைவிக்கு எடுத்துப் போதித்தான். மனைவியும் அதன் கணவனின் சொல் படி உணர்வை நுகர்ந்தறிந்து அதுவும் நஞ்சினை வென்றிடும்… இருளை அகற்றிடும்… மெய்ப்பொருள் காணும் சக்தியினைப் பெற்றது.
அவர்கள் இரு மனமும் ஒன்றி வாழ்ந்தது
1.இருவருமே “நஞ்சினை வென்றிடும் உணர்வினை” அவர்கள் நுகர்ந்து
2.நஞ்சினை வென்றிடும் அரும்பெரும் சக்தி… பேரருள் என்ற ஒளியின் உணர்வினை அவர்களுக்குள் இருவருமே வளர்த்தனர்
3.இரு உடலிலும் ஒன்றென இணைத்தனர்.
எந்தத் துருவப் பகுதியின் வழியாக நுகர்ந்து அந்த உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இருக்கின்றனரோ…
1.அதனின்று வரும் உணர்வினை யாம் இப்போது சொல்லும் போது உங்கள் காதிலே அந்த உணர்வுகளைக் கேட்கின்றீர்கள்.
2.கண்ணிற்கே அந்த நினைவு வருகின்றது
3.இந்த நினைவினை உயிருடன் ஒன்றச் செய்து அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நீங்கள் நுகர நேர்ந்தால்
4.அந்த உணர்வு உங்கள் உடலுக்குள் சென்று நஞ்சினை வென்றிடும் அந்த அணுவின் கருவாக உயிர் உருவாக்குகின்றது
5.அது நாளடைவில் நஞ்சினை வென்றிடும் அணுவாக உருப்பெறுகின்றது.
6.அடிக்கடி இந்த நிலையை நாம் அதிகமாகப் பெருக்கிக் கொண்டால்
7.நமது உடலில் அறியாது சேர்ந்த “நஞ்சினை அடக்கிடும்” அணுக்களின் பெருக்கமாகின்றது.
இந்த உடலை விட்டு இந்த உயிரான்மா சென்றால் “நஞ்சினை வென்றிடும் அரும்பெரும் சக்தியாக” இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல முடியும்.
நமது உயிர் எதனை உற்று நோக்கி உணர்வினை நமக்குள் வலுப்பெறச் செய்கின்றதோ இந்த உடலை விட்டுச் சென்ற பின் அங்கே அடைய முடிகின்றது.
ஆகவே நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலே சிவலோகமாக இருப்பினும் “சொர்க்கலோகமாக” மாற்றுகின்றது.
“உயிரின் வழி” இந்த உடலிலே மகிழ்ச்சி என்ற உணர்வுகளை உருவாக்கப்படும் பொழுது
1.நாம் இந்த உயிரின் வழியே துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தறிந்ததனால்
2.உயிர் வழி நாம் சொர்க்கத்தை அடைய முடியும்… பிறவி இல்லா நிலை அடைய முடியும்.
அதுதான் சொர்க்கவாசல் என்பது நமது உயிரின் இயக்கத்தை இப்படித் தெளிவாக உணர்த்துகின்றனர் ஞானிகள்.
“நஞ்சினை வென்று” உணர்வினைப் பேரருளாக மாற்றிய இன்று துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அதனின்று வெளிப்படும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து இதை அலைகளாக மாற்றுகின்றது.
நமது குரு காட்டிய அருள் வழிப்படி அதனைத்தான் நாம் பெற இப்போது ஏங்கித் தியானிக்கின்றோம். நாம் எண்ணி ஏங்கும் உணர்வுகள் அனைத்தையும் நமது உயிர் அது ஈசனாக நின்று “ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய…” என்று நமது உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.
இப்படி இந்த உடலில் சொர்க்க லோகமாக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நாம் மாற்றுதல் வேண்டும். இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற வேண்டும்.
1.உயிரான ஈசன் வழி நாம் கேட்கும் போது அந்த உயிரான ஈசனின் வழி தான் சொர்க்கவாசல் அமைகின்றது.
2.ஆகவே நாம் இதனை இப்போது ஏங்கிப் பெறுவோம்.

பூமியில் உயிரணுக்களின் தோற்றம் எங்கிருந்து வந்தது…?
இப்பாட நிலைக்கொப்ப இந்நிலையில் உணர்த்தி வரும் இம்மண்டலங்களின் சக்தி நிலையும் இன்றுள்ள இம்மண்டலங்களின் சுழற்சியின் வேகத்தைக் காட்டிலும் இப்பூமியின் சுழற்சி சக்தி அதிகபப்டுவதாகவும் இந்நிலை ஒத்தே மற்ற மண்டலங்களின் துரித நிலையும் அதனதன் விகித நிலைப்படி அதிகப்படுவதாக உணர்த்தியுள்ளேன்.
இன்று இப்பூமியின் ஈர்ப்பு சக்தி நிலையும் ஓட்ட நிலையும் இந்த 24 மணி நேரம் 18 மணிக்கணக்கில் வரும் நிலையில் இன்று இப்பூமியில் திடப்பொருளாய் உள்ளவற்றின் நிலை எல்லாம் எந்நிலையில் செயல்படும்…?
இன்றுள்ள மலைகளும் நீர் நிலைகளும் இயற்கை சக்திகள் அனைத்துமே இப்பூமியின் அசைவின் தொடர்நிலை கொண்டு மாற்றம் கொள்ளப் போகின்றன. அந்நிலையில்
1.இப்பூமியில் இவ்வசைவின்போது ஏற்படும் இயற்கையின் தாக்குதலின் நிலையில்லாமல் தப்பிவிடும் பூமியில் வாழ்ந்திடும் உயிரினங்களின் நிலையும்…
2.இப்பூமியின் சுவாச சக்தியே மாறு கொண்ட பிறகு தப்பி வாழ்ந்திடும் ஜீவராசிகளின் சுவாசத்தின் நிலையும் மாறு கொள்வதால்…
3.இவ் இயற்கையில் இருந்து தப்பிடும் எந்த ஜீவராசிகளும் பல காலங்கள் வாழ்ந்திட முடிந்திடாது.
4.ஆக… இப்பூமியின் இயற்கை சக்தியே மாற்றம் கொள்ளப் போகின்றது.
இப்பூமியில் இப்பூமி தோன்றிய நாள் தொட்டே உதித்த உயிரணுக்கள் எவையுமே… உயிரணு அழிந்திடாது மாற்றம் தான் பிம்ப நிலையில் மாறும் என்று உணர்த்தியுள்ளேன்.
அதே சமயத்தில் இப்பூமியில் தோன்றி… இப்பூமியின் சுவாசத்தையே சுவாசித்துப் பழக்கப்பட்ட எவ்வுயிராத்மாவும் இப்பூமியில் இருந்து… மற்ற மண்டலத்திற்கு “மாறு கொண்ட சுவாச நிலையில்” சென்று வாழ்ந்திட முடியாது என்றும் உணர்த்தியுள்ளேன்.
இக்கலி மாறி கல்கியில் சுவாச நிலை மாறிக்கொண்ட இப்பூமியில் கலியின் காலம் வரை வந்திட்ட உயிர் ஆத்மாக்களின் பிறப்பிடம் எதுவாய் இருந்திடும்…?
இக்கேள்வியின் நிலை இந்நிலையிலேயே இருந்திடட்டும்.
1.நம் பூமிக்கு உயிரணுக்கள் தோன்றி உயிராத்மாவாய் அறிவு நிலை பெற்ற மனிதர்களாய் வாழும் சக்தி எந்நிலையில் வந்திட்டது…?
2.இன்று நம் சந்திரனின் நிலை என்ன…?
3.நம் பூமியில் மனித உயிரணுக்கள் தோன்றிடும் வித்து எங்கிருந்து ஆரம்பித்தது…?
நம் சூரியனின் ஈர்ப்புடன் கூடிய 48 மண்டலங்களில் நம் பூமியைக் காட்டிலும் வியாழன் மண்டலத்தின் அளவு விகித நிலை அதிகம்.
ஆனால் இன்று வியாழன் மண்டலத்தின் சக்தி நிலை கூடியிருந்தாலும் உயிராத்மா பிம்ப நிலை கொண்ட மனித இனங்களில் இல்லை. அங்கும் இன்றும் உயிரணுக்களுண்டு. நம் பூமியைக் காட்டிலும் செழிப்பும் பல நிலைகொண்ட கனி வளங்கள் அனைத்தும் உண்டு.
ஆனால் நம் பூமி இன்றுள்ள மனித ஆத்மாக்களை வளர்க்கும் நிலை நம்மை விட சக்தி கொண்ட வியாழனிலும் இல்லை. ஆனால் நம் பூமிக்கு உயிராத்மாவின் நிலைபெறும் சக்தி வியாழனிலிருந்து தான் வந்தது.
1.ஒரு கோடி இரண்டு கோடி நிலையிலல்ல பல கோடி ஆண்டுகளுக்கு முன்
2.நம் நிலைக்கொப்ப அறிவு நிலைப்பட்டு வாழ்ந்த ஆத்மாக்களைக் கொண்ட மண்டலம்தான் வியாழன் மண்டலம்.
இன்று நம் அறிவின் வளர்ச்சியில் மற்ற மண்டலத்திற்குச் செல்லும் ஆசை நிலையின் செயற்கை நிலைக்கொப்ப நம் பூமியிலிருந்து சந்திரன் செவ்வாய் இப்படியுள்ள மண்டலங்களுக்கு ஏவுகணையின் மூலமாய்ச் சென்ற ஆத்மாக்களின் சுவாச நிலை அங்கு இவர்கள் இருந்து வாழாவிட்டாலும் இவர்கள் விட்டு வந்த சுவாச நிலையின் சக்தியிலிருந்து தோன்றிடும் உயிரணுக்களின் வளர்ச்சி நிலையில் வித்திட்டு வந்துள்ளார்கள்.
அந்நிலை போன்றே
1.பல கோடி ஆண்டுகளுக்கு முன் வியாழனில் தோன்றிய உயிராத்மாக்கள் நம் பூமிக்கு வந்து சென்ற நிலையினால்
2.நம் பூமியில் உயிராத்மாக்களின் தொடர்நிலை கொண்டது.
3.இங்கு எப்படி இக்கலியில் ஏற்படும் பிரளயத்தைச் செப்புகின்றோமோ அந்நிலை போன்றே
3.அன்று வியாழனில் ஏற்பட்ட பிரளையத்தினால் நம் பூமிக்கு உயிராத்மாக்கள் தோன்றும் நிலை வந்தது.
வரப்போகும் இப்பிரளய நிலையினால் நம் பூமியின் விகித அளவு நிலை கூடுவதைப் போல் சந்திரனின் நிலையும் கூடப்போகின்றது.
இன்று சந்திரனில் நம் பூமியைப் போல் மழையும் இங்குள்ள காலை பகல் இரவு என்று சூரியனின் ஒளி வீச்சில் கிடைத்திடும் மாற்ற நிலை அங்கில்லை.
சந்திரனில் சூரியனின் ஒளிக்கதிர் வீச்சின் நிலை ஒரே நிலையில் ஒளி பாய்ச்சிடும் சக்தி நிலையாய்ச் சுழற்சி கொண்டு… இம்மூன்று குமிழ் நிலை கொண்ட சக்தியில் சந்திரனின் நிலை உள்ளதினால்… மையப் பகுதியில் உள்ள இப்பள்ளத்தின் நிலையினால் ஒரே நிலையில் சூரியனின் அணுவீச்சுகள் இருந்தாலும் “மையப் பகுதியின் பள்ளத்தினால்” சந்திரனின் நிலை சிதறாமல் சுழன்று கொண்டுள்ளது.
இக்கலியின் மாற்றத்தில் சந்திரனின் நிலையென்ன…? என்பதனை அடுத்து விளக்கிடுவேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஈஸ்வரபட்டாய குருதேவர் எம்மைப் (ஞானகுரு) பதினான்கு வருடம் பல காடு மேடெல்லாம் அலையச் செய்தார். என்னை அறியாது எனக்குப் பல துன்பங்களை அங்கே ஊட்டினார்.
அந்தத் துன்பத்தை நான் நுகர்ந்து பார்க்கும் போது அது எல்லாம் எனக்குள் வந்து விடுகின்றது. அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று அனுபவபூர்வமாக நான் தெரிந்து கொள்வதற்காகவே அதை எல்லாம் கொடுத்தார்.
அதற்காக வேண்டி மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படியும் செய்தார். அதை நான் வேடிக்கை பார்க்கும் பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தில் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
1.ஒருவருக்கொருவர் சண்டை போடுவது… ஒருவருக்கொருவர் தகாத நிலையில் பேசுவது…
2.இது போன்ற எத்தனையோ உணர்வின் தன்மைகளை நுகர்ந்து பார்க்கப்படும் பொழுது
3.சுவாசித்தது உயிருடன் மோதும் பொழுது ஏற்கனவே நான் எடுத்துக் கொண்ட நல்ல குணங்களுக்குள் இது கலந்து
4.அந்த விஷத்தின் தன்மை எனக்குள் இருக்கும் நல்ல குணத்தைச் செயலாக்க விடாதபடி
5.என் எண்ணங்கள் எப்படி எல்லாம் மாறுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும்
6.என்னை அறியாமலே உடலுக்குள் பல கவலையும் பல சஞ்சலமும் ஏற்படச் செய்து
7.எவ்வளவு திடசாலியாக இருந்தாலும் பலவீனப்படுத்துவதையும் குருநாதர் காட்டினார்.
ஏனென்றால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருக்கும் போது அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வைக் கூர்மையாகக் கவனிக்கப்படும் பொழுது அந்த உணர்வின் அலைகள் இங்கே பதிவாகி விடுகின்றது.
அந்த அலைகள் உடலுக்குள் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் இரவில் படுத்திருக்கும் போது
1.அந்த உணர்வுகள் தன்னை அறியாமலேயே சுவாசிக்கச் செய்து
2.“பயப்படச் செய்வதையும்… தூங்கவிடாமல் எப்படிச் செய்கிறது…? என்பதையும்”
3.நேரடியாக அனுபவபூர்வமாக குருநாதர் காணும்படி செய்தார்.
அங்கே பார்த்த உணர்வுகள் உடலுக்குள் அது எதுவாக இணைகின்றது…? அது மீண்டும் மீண்டும் தன்னிச்சையாக உணர்ச்சிகளை ஊட்டி உடலில் அணுக்களாக வளரச் செய்து நோய்களாக எப்படி உருவாகிறது…?
காரணம்…
1.ஒவ்வொரு நாளும் எந்தெந்தக் குணங்களை எடுக்கின்றோமோ…
2.அந்தக் குணங்களுக்குத் தக்கவாறு… ஒவ்வொரு உணர்வுக்குத் தக்கவாறு தான் உடலும் உடல் உறுப்புகளும் அமைந்தது.
3.ஈரல் கல்லீரல் மண்ணீரல் கிட்னி சிறுகுடல் பெருங்குடல் இருதய வால்வுகள் சிறு மூளை பெரு மூளை என்று
4.அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு எதனெதனை அது சேர்த்ததோ
5.அந்த மிருதுத் தன்மைக்குத் தக்கவாறு தான் அதனுடைய செயல்களும் இருக்கின்றது.
அந்த உறுப்புகளின் இயக்கங்களையும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஒலிகளுக்கொப்ப அது எப்படி இயங்குகிறது..? என்ற நிலையையும் உடலுக்குள்ளேயே வைத்துக் காட்டினார் குருநாதர்.
மருத்துவம் படிப்பவர்கள் படிப்பு (PRACTICAL) மூலமாகத் தெரிந்து கொள்வதற்காக பிறருடைய உடல்களை எப்படி எடுத்துப் பரீட்சித்துப் பார்ப்பார்களோ அதே போல
1.எத்தகைய உணர்வை நீ சுவாசிக்கின்றாய்…?
2.எடுக்கும் எண்ணங்கள் அனைத்தும் உடல் உறுப்புகளை எப்படித் தாக்குகின்றது…?
3.அந்த உணர்வின் வேகத் துடிப்பு இரத்தத்துடன் கலந்து சுழன்று வரப்படும் போது
4.ஒவ்வொரு உறுப்புகளிலும் இது எதிர்மாறாகும் போது அது எப்படி எரிச்சலாகின்றது…
5.அது எந்தெந்த வேதனையாக உருவாக்குகின்றது…? என்று காட்டினார்.
உடலிலே சர்க்கரைச் சத்து அதிகமாகி விட்டால் எந்த அளவிற்குச் சர்க்கரை அதிகமாக இருக்கின்றதோ அதற்குத் தகுந்த மாதிரி சிறு நீரின் கலர் மாறுகின்றது… பார்க்கலாம்…!
அதைப் போல் பிறருடைய செயல்களை நாம் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தாலும்… இந்த உணர்வுகள் அது சுவாசித்து உடலுக்குள் செல்லும் போது இரத்தமாக மாறி… உடலில் இருக்கக்கூடிய உறுப்புகளுக்குள் ஊடுருவி… இதற்கும் அதற்கும் எதிர்மறையாகும் போது
1.அந்த உறுப்புகள் எப்படிப் பின்னமாகின்றது…?
2.உனக்குள் வலி எப்படி வருகிறது…? என்ற நிலையையும்
3.”என்னையே முன்னிறுத்தி” என் உடலின் இயக்கங்களைப் பார்க்கச் சொல்கிறார்.
எக்ஸ்ரே படங்களிலும் மற்ற ஸ்கேன் படங்களிலும் பார்ப்பது போல் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி அது எவ்வாறெல்லாம் உன் உடலில் விளைகிறது…? என்பதை குருநாதர் ஒவ்வொரு நிலைகளிலும் இதைக் காட்டினார்.
பின் அதை எல்லாம் மாற்றும் உபாயமாக “மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்க வேண்டிய முறைகளையும்” கொடுக்கின்றார். அதை எல்லாம் கண்டுணர்ந்த பின் தான் உங்களுக்குள் இதை உபதேசிக்கின்றேன்.
1.நீங்கள் சாதாரண நிலையில் இருந்தாலும்
2.சிறு குழந்தையாக இருந்தாலும் அல்லது படிக்காதவர்களாக இருந்தாலும்
3.யாம் உபதேசிப்பதைக் கூர்மையாகப் பதிவு செய்யப்படும் போது
4.குருநாதர் காட்டிய அருள் ஞானிகளின் சக்திகளை நீங்களும் பெற முடியும்.
அந்த மெய் ஞானிகள் தீமையை நீக்கும் ஆற்றல்களைப் பெற்று எவ்வாறு விண்ணுலகம் சென்றார்களோ அந்த உணர்வின் சத்தை உங்களுக்குள் நினைவு கூர்ந்து இங்கே உபதேசமாகக் கொடுக்கும் போது உற்றுக் கவனித்தால் அது உங்களுக்குள் பதிவாகிவிடுகின்றது.
அந்தப் பதிவை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அவர்கள் பெற்ற சக்தியை நீங்களும் பெற முடியும்… விண் செல்லவும் முடியும்…!


தியானம் எடுக்க வேண்டிய முறை
நமது கண் ஒரு ஆண்டனா…! ஏரியல்…! அதைப் பயன்படுத்தித் தியானத்தில் வெளியிலிருந்து எடுக்கின்றோம்…
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வருகின்றது அந்த அலைகள்.
2.உங்களிடம் இந்நேரம் வரையிலும் அதைப் பதிவு செய்துள்ளேன் (ஞானகுரு)
3.நீங்கள் கூர்ந்து கவனிக்கும் பொழுது கண்ணான ஆண்டனா மூலமாக உங்கள் உடலுக்குள் அதைச் சேர்த்துப் பதிவாக்குகின்றது.
மீண்டும் இதே மாதிரி இந்த எண்ணத்தை எண்ணி வரப்படும் பொழுது அந்தக் காற்றில் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இழுத்து நமது கண் ஆன்மாவாக மாற்றிச் சுவாசித்து நம் உயிரிலே மோதச் செய்கின்றது.
இந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு உமிழ் நீராக மாறி நம் உடலில் இந்தச் சத்தைச் சேர்க்க வேண்டும்.
1.இப்படி ஒவ்வொரு உடலிலும் உள்ள அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்குத்
2.தனித்து இயக்கச் செய்வது தான் இப்பொழுது நம்முடைய வழி.
ஏனென்றால் இன்றைக்கு இருக்கும் விஷத்தன்மையான உலகில் சீக்கிரம் இதைக் பெற்றுக் கொண்டீர்கள் என்றால்… உங்கள் உடலும் நன்றாக இருக்கும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்கும்… உங்கள் ஊரும் நன்றாக இருக்கும்… உலகமும் நலம் பெறும்.
உலகமே என்றால்… அந்த உணர்வுகள் எல்லாமே நம் உடலுக்குள் அடங்கி இருக்கின்றது… யாரும் பிரிந்து இல்லை…!
1.அந்த உலக இயல்பு நமக்குள் கேட்டறிந்த உணர்வு பதிவாகி மீண்டும் நமக்குள் இயக்கிக் கொண்டிருப்பதனால்
2.அதை மாற்றுவதற்காக என் குருநாதர் எப்படி எனக்குச் செய்தாரோ அதே மாதிரி உங்களுக்குச் செய்கின்றேன்.
உங்களைக் கட்டுப்பாட்டுடன் கொண்டு வரவில்லை. நீங்கள் எல்லாம் தெளிவாக வேண்டும் என்று தான் கொண்டு வருகின்றோம். அதை நீங்கள் நல்ல வழிக்குப் பயன்படுத்த வேண்டும்.
நல்ல வழியில் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கி இனி பிறவியில்லா நிலையை அடையலாம்.
ஆனால் ஆசையை எங்கேயோ வைத்து என் தொழில் இப்படி இருக்க வேண்டும் நான் இப்படி இருக்க வேண்டும் நான் பேரும் புகழும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் அந்த ஆசை எங்கேயோ போய்விடும்…!
1.அது ஒன்றிலேயே போகும்… நமக்குள் சிந்திக்கும் ஆற்றலை இழந்து விடுவோம்.
2.கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகவே ஆவாய் சொன்னது போன்று
3.எதன் மேல் ஆசைப்படுகின்றோமோ அதன் வழியில் “படுபாதாளத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்…”
ஆகவே… நமது ஆசையினுடைய உணர்வுகள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் கொண்டு சென்றால் அங்கே இணைந்து இருளை நீக்கி ஒளியின் உணர்வாக மாற்றிவிடும்.
அந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் மீண்டும் மீண்டும் உங்களிடம் சொல்லி வருகின்றேன்.
முதலில் உங்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணுங்கள். அம்மா அப்பாவின் அருளால் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் பெற வேண்டும்” என்று அடுத்து ஏங்குங்கள். (என் குரு தான் எனக்கு இந்த வழியைக் காட்டினார்).
அன்னை தந்தை என் உடலை உருவாக்கியது… எனக்கு ஒரு நல்ல வழியையும் உணர்த்தியது… அது குருவாகவும் இருக்கின்றது. அதனால் அவர்களை முதலில் எண்ண வேண்டும்.
அதே சமயத்தில்
1.இந்த மனித உடலுக்குப் பின் எங்கே என்ற நிலையில் இருளை நீக்கி ஒளி பெறும் உணர்வுகளை உபதேசித்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
2.அந்த உணர்வை அவர் சொன்ன வழியில் நாம் பின்பற்றினோம்.
3.அவர் நுகரச் சொன்னதை நுகர்ந்தேன்… அந்த உணர்வு என் உடலில் என்ன செய்தது…? என்று அறிந்தேன்.
4.அதைப் போல் நுகர்ந்த உணர்வுகள் என்ன செய்யும்…? என்று உங்களுக்கும் உணர்த்துகின்றேன்.
5.இதை உணர்ந்தால் உங்கள் தீமையை நீங்களே போக்கிக் கொள்ள முடியும்.
பன்றி எப்படிச் சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பிளந்து நல்லதை எடுத்ததோ அதைப் போல் சாக்கடையான இந்தக் காற்று மண்டலத்திலிருந்து அந்த அருள் ஞானியின் உணர்வை நீங்கள் சுவாசித்து “உயிரை ஒளிமயமான நிலைகள் பெற முடியும்….”
இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவியும் நீங்கள் தெய்வீகப் பண்பும் தெய்வீக அன்பும் தெய்வீக சக்தியும் பெற வேண்டும். உங்கள் சொல்லிலே வைரத்தைப் போன்று ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிப்பும் பெற வேண்டும்.
தங்கம் எப்படி மங்குவதில்லையோ அதை போன்று மனது மங்காத நிலைகளை நாம் கொண்டு வர வேண்டும். மலர் எப்படி நன்றாக நறுமணங்கள் கொடுக்கின்றதோ உங்கள் சொல் மற்றவரை நல்ல மணங்களாக மாற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும்.
அந்தச் சக்தி பெறுவதற்குத் தான் இப்பொழுது நாம் இதைச் செய்கின்றோம். ஆகையினால் நீங்கள் இதைப் பெற வேண்டும் என்ற ஆசையில் இருங்கள். இது பேராசையும் கூட…!
1.உங்கள் உடலில் உள்ள எல்லாவற்றிற்கும் பெற வேண்டும்…
2.எல்லோருக்கும் இந்த மாதிரிச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பேராசையாக மாறுகின்றது.
3.நானும் பெறுகின்றேன்… நீங்களும் பெறுவீர்கள்.
4.எல்லோரும் பெற வேண்டும் என்ற பொழுது இந்தப் அந்தப் பேராசை நமக்குள் வளரும்.
ஆனால் நான் சொல்லிவிட்டு உங்களை ஏமாற்றினேன் என்றால் அது பேயாசை. சாமி பெயரைச் சொல்லி அடுத்தவரை ஏமாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்றால் அது பேயாசை. அவர்களையும் கெடுத்து நீங்களும் கெட்டு மற்றவர் பெறக்கூடிய நல்ல உணர்வைத் தடுக்கும் நிலை வந்துவிடும்.
ஏனென்றால் ஒவ்வொரு உடலில் ஒவ்வொரு விதமான தீமைகள் உண்டு.
1.அந்தத் தீமைக்கு நாம் சிறிது இடம் கொடுத்தால் அதன் வேலையைச் செய்ய ஆரம்பித்து விடும்.
2.நாம் செல்லும் நல்ல பாதையைத் திசை திருப்பி வேறொரு வழிக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
3.முதலில் தெரியாது… பின் சிக்கலான பிற்பாடு… அந்த வேதனை வந்த பின் தான் நாம் உணர முடியும்.
இதைப் போன்ற தீமைகள் சந்தர்ப்பத்தால் எத்தனையோ வகையில் உருவாகின்றது. அதிலிருந்து நாம் தப்புவதற்காக வேண்டி மீண்டும் மீண்டும் இதை “எச்சரிக்கை செய்கின்றேன்…”
உங்கள் உணர்வனைத்தையும் உங்கள் அம்மா அப்பாவின் மேல் செலுத்துங்கள். அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இச்சைப்படுங்கள்.
1.குருதேவர் அறிந்துணர்ந்த சக்தியான துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டுமென்று
2.உங்கள் ஏக்கத்தைக் கண்ணான கருமணியில் செலுத்துங்கள்.
ஏனென்றால் எதுவாக இருந்தாலும் கருமணியில் தான் படமாகின்றது. அந்த உணர்வு தான் நரம்பு வழி எல்லாவற்றிற்கும் உணர்த்துகின்றது.
ஆகையினால் இதைக் கருமணியில் எடுத்து கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றினால்
1.இந்த உணர்வுகள் உயிர் வழி இழுக்கச் செய்து அந்த உணர்வை நம் உடலுக்குள் பரப்ப முடியும்.
2.கொஞ்ச நாட்கள் இப்படிப் பழகி விட்டால் எல்லா அணுக்களுக்கும் இந்த வீரிய சக்தியை ஊட்டும் பொழுது நமக்குள் தீய சக்தி குறையும்.
மனித வாழ்க்கையில் தீயவர்களைப் பார்த்து அந்த உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது நமக்குள் இருக்கும் நல்ல சக்திகள் தணிந்து தீய சக்தியே நமக்குள் விளைகின்றது.
1.அந்தத் தீய சக்தியை நீக்கி அதைக் குறைத்து நல்ல சக்தியை வளர்ப்பது தான் நம் தியானத்தின் நோக்கம்.
2.ஆக உங்களுடைய மனதை இதைப் போல் தெளிவாக்கித் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி
3.அதனின்று வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்களுக்குள் வலுப் பெறச் செய்யுங்கள்.

பிரளய மாற்றம்
பூமி சுழலும் வேகத்தை… ஒரு நாளைக் குறிக்க 24 மணி நேர விகிதப்படுத்தி இவ்வுலகம் முழுவதுமே அக்கணக்குப்படி ஒரு நாள் என்று நிலைப்படுத்தி உள்ளார்கள்.
இந்த 24 மணி நேர விகிதக் காலம் குறித்து… பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றளவும் அந்நிலையை வைத்தே அந்நிலையின் செயலுக்கொப்பக் கால நிலை குறிக்கும் அளவைச் செயலாக்குகின்றனர்.
இந்த 24 மணி நேரம் குறித்த காலத்திற்கும்… “இன்று” இப்பூமி சுழலும் நிலை துரிதம் கொண்டுள்ளது… வினாடி விகிதத்தில். ஆனால் பல நூறு கோடி ஆண்டுகளில் சில வினாடி நேரம்தான் அதிகத் துரிதத்துடன் இன்று நம் பூமி சுழல்கின்றது.
ஆனால்
1.இக்கலி முடிந்து கல்கியில் இவ்வுலகப் “பிரளயம் தோன்றி” இவ்வுலக நிலை மாறிச் சுழலும் தருவாயில்
2.நம் பூமி சுழலும் வேகம் இப்போதைய நேரத்தில் நான்கில் ஒரு பாகம் எடுத்த நிலையில் மூன்று பாகங்கள் கொண்ட துரித கதியில்
3.இன்று 24 என்பது 18 மணி விகிதத்தில் சுழலப் போகின்றது.
நம் பூமியில் இவ் அசைவின் பிரளயத்தின் போது நம் பூமியுடன் பல நட்சத்திர மண்டலங்களும் சேரப் போகின்றன. நம் சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களின் சக்தி நிலையும்… அளவு நிலையும் அதிகப்படப் போகின்றன.
நம் சூரியனின் விகித நிலையும் கூடப் போகின்றது.
சூரியனும் 48 மண்டலக் கோளங்களும் ஒரே சமயத்தில் வளர்ச்சி கொள்ள… இவற்றிற்குச் சக்தி நிலை கூடும் அமிலங்கள் யாவும் நம் கண்ணிற்குத் தெரியாத நிலை கொண்டு… பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியே இம்மாற்றம் கொள்ளும் தருவாயில் மண்டலங்களின் ஈர்ப்பில் வந்து சேர்ந்து… மண்டலங்களின் வளர்ச்சி நிலை கூடப் போகின்றது.
இன்று நம் பூமியில் வட துருவம் தென் துருவ நிலை கொண்டு பூமியின் சுழற்சியில் பகலும் இரவும் இக்கால நிலைகள் நான்கும் ஒத்த நிலையில் உள்ளன.
ஆனால் மழைக்காலம் மற்றும் அந்தந்தப் பிரதேசங்களின் பூமி ஈர்த்து அப்பூமி கக்கும் உஷ்ண அலைகளுக்கொப்ப மழையின் நிலை அந்தந்த நிலைகளில் மாறு கொண்டு வருகின்றது.
ஆனால் நம் பூமியின் மாற்றம் கொள்ளும் கல்கியின் காலத்தில் இன்று இவர்கள் குறித்துள்ள 365 நாள் விகிதக் கணக்கு வருடச் சுற்றலில் குறைவுபடப்போகிறது.
சூரியனைச் சுற்றியுள்ள அனைத்துக் கோளங்களின் சுற்றலின் நிலையும் துரிதப்படுவதினால் சூரியனின் நிலையும் துரிதம் கொள்ளப் போகின்றது.
நம் சூரியனுடன் தொடர்பு கொண்ட மண்டலங்களின் விகித நிலை கூடும் பொழுது பால்வெளி மண்டலத்தின் ஈர்ப்பு சக்தியில் அமில சக்தியை எல்லாம் இம்மண்டலங்கள் உறிஞ்சிய பிறகு நம்மைச் சார்ந்துள்ள இம்மண்டலங்களின் நிலையில்லா மற்ற மண்டலங்கள்
1.நம் சூரியனைக் காட்டிலும் சக்தி கொண்ட சூரியனின் சுழற்சியின் ஈர்ப்பிலுள்ள ஒரு மண்டலம்
2.ஆவியாய்ப் பிரியும் நிலை கொண்டு தன் ஜீவனை இழக்கப் போகின்றது.
3.பல நூறு கோடி ஆண்டுகளாய் வாழ்ந்த மண்டலம் அது.
4.நம் பூமிக்கு மட்டும் மாற்ற நிலை வரப்போகின்றது என்பது அல்ல.
5.இவ்வண்டத்தில் உள்ள அனைத்து மண்டலங்களின் நிலையிலுமே இந்நிலை செயல்படப் போகின்றது.

அதிகாலையில் நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டிய “சார்ஜ்”
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் காலையில் எடுத்து
2.நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களுக்காகச் சக்தி ஏற்றிக் கொடுக்க வேண்டும்… அதாவது பேட்டரியைச் சார்ஜ் செய்ய வேண்டும்.
ஒரு இன்ஜினை முதலில் ஓட்ட வேண்டும் என்றால் என்ன செய்கின்றார்கள் என்று தெரியுமா…?
மோட்டாரில் பேட்டரியை வைத்துள்ளார்கள் அதை வைத்து “எர்த்” ஐக் கொடுத்த உடனே ஓட ஆரம்பிகிறது. அடுத்து இஞ்சின் பெட்ரோலை எடுத்து ஆவியாக மாற்றித் தன்னிச்சையாக ஓடுகிறது.
இதே மாதிரிக் காலையில் எழுந்தவுடன்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் போட்டுச் சார்ஜ் செய்து
2.அந்த நல்ல உயர்ந்த உணர்வுகளை எடுத்து உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு எல்லாம்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று யாம் (ஞானகுரு) சொன்ன பிரகாரம் நன்றாகச் சார்ஜ் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
அதற்குப் பின் இந்த்த் தினசரி வாழ்க்கை நடப்பில்… ஒருவன் அந்தத் தவறு செய்கின்றான் இந்தத் தவறு செய்கின்றான் என்று நாம் இதை எல்லாம் கேட்க நேர்கின்றது. அப்போது கொஞ்சம் கொஞ்சமாக நல்ல அறிவு மங்கிக் கொண்டே வருகின்றது.
அப்போது அதை மங்காமல் தடுப்பதற்கு…
1.காலையில் சார்ஜ் செய்த அந்தச் சக்தியின் துனை கொண்டு
2.அந்தந்த நிமிடத்தில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
4.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று “சுருக்கமாக எண்ணி முடித்து விட்டால்” அப்படியே ஒடுங்கிவிடும்.
5.அவர்களுடைய கஷ்டமோ துன்பமோ தீமைகளோ நமக்குள் வராது.
அதற்குப் பின்… அவர்கள் சிந்தித்துச் செயல்படும் அந்த திறன் பெற வேண்டும்… அவர்களுக்கு எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்… அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்… அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்… அவர்கள் நோய் நீங்க வேண்டும்… அவர்கள் பிள்ளை நல்லவனாக இருக்க வேண்டும் என்று “இதைத்தான்” நாம் சொல்ல வேண்டும்.
இப்படிச் சொல்லிவிட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.
நாம் சொல்கின்றோம் அவர்கள் காதுகளில் கேட்கின்றது. நாம் வெளியிட்ட உணர்வு அவர்கள் கண்கள் பதிவாக்குகின்றது. திருப்பி எண்ணினார்கள் என்றால் அவர்களுக்கு லாபம். இல்லையென்றால்… அவர்கள் சொன்ன அந்தக் கஷ்டம் நமக்குள் வராமல் துடைத்துக் கொள்ளலாம்.
மற்றவர்கள் கஷ்டம் என்று சொல்லும் பொழுது நீங்கள் அதைக் கேட்காமல் இருக்க முடியாது. கேட்காமல்… கஷ்டத்தைச் சொல்லாதீர்கள் என்று சொன்னால்..
1.என்ன…! பெரிய இவர் மாதிரி நடக்கின்றார்…! என்று நம்மைக் குற்றமாகச் சொல்லிக் கொண்டு வருவார்கள்.
2.ரொம்ப அகராதி பிடித்தவர்… ஏதோ சாமியார் சொன்னாராம்… எதையும் கேட்கக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்று
3.என்னையும் சேர்த்து இரண்டு திட்டு இழுத்து விட்டுப் போய் விடுவார்கள். இதுதான் நடக்கும்.
அதனால் அதைக் கேட்டு உணர்ந்து நல்ல வழி சொல்ல வேண்டும்…!
நீங்கள் நன்றாக இருப்பீர்கள் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் உங்கள் தொழில் நன்றாக இருக்கும். மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள் ஒன்றுபட்டு வாழ்வீர்கள் என்று “நம் சொல்” அங்கே சென்று அவர்களை நல்லதாக்க வேண்டும்.
இப்படிச் செய்யவில்லை என்றால் அந்த வேதனை என்ற உணர்வு நமக்குள் வரும் பொழுது நம்மை இயக்கி விடுகின்றது. அது உமிழ் நீராக மாறுகின்றது நல்ல குணங்களை மயங்கச் செய்கின்றது… நம் சிந்தனையைக் குறைக்கச் செய்கின்றது.
ஆகவே அது ஒரு சந்தர்ப்பம்…!
ஏனென்றால் சந்தர்ப்பத்தால் தான் மனிதனாக வரும் வரையிலும் தீமையை நீக்கும் உணர்வு கொண்டு பன்றியாகப் பிறந்து சுத்தமாக தீமையை நீக்கி நல்ல அணுக்களை உருவாக்கி வந்தது.
பன்றியின் உடலில் இருந்து தான் நாம் மனித உடலைப் பெற்றோம்.
இந்த மனித உடலில் நாம் நஞ்சினை மலமாக மாற்றி நல்லதை உடலாக மாற்றித் தெரிந்து கொள்ளக்கூடிய அறிவாக நமது ஆறாவது அறிவு உள்ளது.
அதைச் சீராகப் பயன்படுத்தி… ஞானியர் கண்ட அந்த உண்மையை நமக்குள் செலுத்தி இந்த உடலுக்கு பின் நாம் பிறவில்லா நிலை அடைய வேண்டும். இதை நீங்கள் ஒவ்வொரு நொடியிலும் உடலுக்குள் செலுத்திப் பாதுகாக்க முடியும்.
எப்படித்தான் இருந்தாலும் தேடிய செல்வம் நம்முடன் வருகின்றதா…?
இத்தனை ஞானத்தை பேசும் ஞானிகள் உயிரோடு இருக்கின்றார்களா…?
1.ஆனால் உயிரோடு இருக்கின்றார்கள் “ஒளியின் உடலாக” இருக்கின்றார்கள்
2.அதாவது உயிரோடு சேர்ந்து ஒளியாக விண்ணிலே நிலையாக இருக்கின்றார்கள்.
இந்த நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால்… அடுத்து என்ன ஆகும்…?
இங்கே இப்பொழுது நமக்குள் எடுத்துக் கொண்ட வேதனை, வெறுப்பு, சங்கடம், எந்தெந்தக் குணங்களோ அதற்குத் தகுந்த மாதிரி நமது உயிர் உடலை அமைத்து மாற்றிக் கொள்கின்றது.
அப்புறம்… வலுவானது தாக்கும் போது அதைக் காட்டிலும் வலுவான உணர்வைக் கொண்டு தப்பிக்க வேண்டும் என்ற உணர்வு ஆகிப் பரிணாம வளர்ச்சி அடையும்.
இருந்தாலும்
1.இதற்கு முதலில் எப்படி நாம் வேதனைபட்டோமோ அந்த வேதனைப் பட்டு மனிதனாக மீண்டும் வருவதற்குக் காலம் இல்லை
2.அதற்குள் நம் பூமி எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது… அந்த அளவிற்குப் பூமியினுடைய மாற்றங்கள் போய்க் கொண்டுள்ளது.

பூமியில் ஏற்படும் பகல் இரவு… நான்கு பருவ கால மாற்றங்கள்
இப்பூமியும் இப்பூமியைப் போன்ற இப்பூமியைச் சார்ந்த 48 மண்டலங்களும் நம் சூரியனின் குழந்தைகளான நம் மண்டலங்கள் சுற்றி ஓடும் விகித நிலைப்படுத்தி ஒரு வருடம் என்ற நிலையில் 365 நாள் விகிதக் கணக்குப்படுத்தியும் நான்கு வருடத்திற்கு ஒரு நாள் அதிகப்படுத்தி லீஃப் வருஷம் என்றும் சூரியனைச் சுற்றி ஓடும் நிலை உணர்ந்து இவ்வான சாஸ்திரத்தில் வருடம், நாள், வாரம் இப்படி நிலையுணர்ந்திடப் பல நிலைகளை இவ்வுலகின் நிலையில் உணர்த்தியுள்ளார்கள்.
இப்பூமிக்கும் நம் சூரியனுக்கும் உள்ள தொடர்பு நிலை எந்நிலை கொண்டுள்ளது…? காலங்களில் நான்கு வகைக் காலங்களும் ஒரு நாளில் காலை, பகல், இரவு என்ற மூன்று நிலைகளும் ஒவ்வொரு நொடியும் ஒரு நொடியைப் போலில்லாமல் இவ்வுலக ஓட்டமும் சூரியனின் ஓட்டமும் சுழன்று கொண்டே உள்ளன.
உதய காலத்தில் நாம் காணும் சூரியனின் விகித நிலை உருவமே பெரிதாகவும், பகல் ஏற ஏற நம் பூமிக்கு நேர் மையத்தில் சூரியனின் நிலையைக் காணும் பொழுது உதய காலத்தில் கண்டிட்ட சூரியனின் உருவ அமைப்பைவிட உச்சிக் காலத்தில் சிறிய கோளமாகவும் பகல் மாறி மாலை சூரியனின் அஸ்தமத்தில் உதய காலத்தில் கண்ட நிலைப்படி உருவ அமைப்புப் பெரிதாகவும் காண்கின்றோம்.
எந்நிலை கொண்டு…?
உதய காலத்தில் சூரியனின் நிலை நம் பூமியின் நிலைக்கும் இடைப்பட்ட தூரம் குறைவு. நமக்கு அருகாமையில் சூரியனின் நிலை உள்ளது.
ஒவ்வொரு நொடியும் உச்சிப்பகல் வருவதற்குள்
1.நம் பூமியின் ஓட்டமும் சூரியனின் ஓட்டமும் ஓடும் நிலையில்
2.“நாம் உள்ள இடத்தில்…” சூரியனின் நிலை நமக்கும் நேர் மேலே வரும் பொழுது
3.உதய காலத்திற்கும் பகல் உச்சி நேரத்திற்கும் “நம் பூமிக்குச் சூரியனின் தூர விகிதம் மிகவும் அதிகமாகி விடுகிறது…”
உதய கால தூர விகிதப்படி உச்சிக் காலத்தில் இருந்திட்டால்… நம் பூமி சுழற்சி வேகமும் சூரியனின் சுழற்சி வேகமும் சூரியனிலிருந்து வந்திடும் ஒளிக்கதிர்களின் வெப்பநிலை நம் பூமியின் நேர் மையத்தில் பட்டுப் “பூமியே வெடிப்பு நிலையில் சிதறுண்டிருக்கும்…”
உச்சி நிலையில் நம் பூமிக்கும் சூரியனின் நிலைக்கும் தூர விகிதம் அதிகப்படுவதினால் சூரியக் கோளின் உருவ அமைப்பைச் சிறிதாகக் காண்கின்றோம்.
பகல் மாறி மாலை வர வர நமக்கு அருகாமையில் சூரியனின் நிலை வருவதினால் மாலையிலும் இந்நிலை போன்ற சூரியனின் உருவ நிலையைப் பெரிதாகக் காண்கின்றோம்.
ஆனால் உதய காலத்தில் நமக்கு அருகாமையில் உள்ள சூரியனின் வெப்பநிலை நமக்குக் குறைந்தும் பகல் நேரத்தில் நம் பூமிக்கும் சூரியனின் நிலைக்கும் தூர விகிதம் நீண்டுள்ள நிலையில் வெப்பத்தை அதிகமாக எடுக்கின்றோம்/ எந்நிலை கொண்டு…?
நம் பூமிக்கு உள்ள நான்கு திசைகளில் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என்ற நிலையில்
1.வட துருவத்திலும் தென் துருவத்திலும் நம் பூமியின் அச்சாய் நிறைந்துள்ள
2.நம் பூமியின் பொக்கிஷக் கடல்களான அந் நீர்நிலைகளின் மேல் இவ்வுதய கால சூரிய அலைகளின் வெப்பம் பட்டு
3.அவ்வொளிக் கதிர்களின் எதிர் வீச்சின் சக்தி தான் காலையும் மாலையும் உள்ள கால நிலைகள்.
நம் பூமியின் இவ்வட துருவ தென் துருவ நிலைகளில் அமைந்துள்ள இக் கடல்களின் சக்தியினால்தான் நம் பூமியின் சக்தியே இந்நிலையில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு மண்டலத்தின் நிலையும் ஒவ்வொரு தன்மை கொண்ட சக்தி நிலையில் உருப்பெற்ற மண்டலமாய்ச் சுழல்கின்றது.
நம் பூமியின் இயற்கை தந்த பொக்கிஷ நிலைதான் இன்று நான்கு வகைக் காலங்களை அடைந்த நிலை.
சூரியனின் விகித தூரத்திற்கும் மற்ற மண்டலங்களில் இருந்தும் நம் பூமிக்கு ஏற்படும் ஈர்ப்பு சக்தியின் நிலைக்கொப்பத்தான் கோடை காலம், வசந்த காலம், இளவேனிற் காலம், குளிர் காலம் இப்படி நிலை பிரித்து நாமமிட்டு நாம் அழைக்கும் இக்காலங்கள்.
நம் பூமியின் வட துருவ தென் துருவ நீர்நிலைகளின் மேல் சூரியனின் தூர விகிதமும் நம் பூமிக்கு அருகாமையில் உள்ள சந்திரனின் தூர விகிதமும் உள்ள நிலையில் வட துருவ, தென் துருவ நீர்நிலைகளின் மேல் அம்மண்டலங்களில் இருந்து தாக்கிடும் அணு சக்திகளின் நிலை கொண்டுதான் இப்பூமிக்கு ஏற்படும் காற்று மண்டலங்களின் சக்தி நிலைக்கொப்ப நம் பூமியின் கால நிலைகள் மாறு கொள்ளுகின்றன.
ஒவ்வொரு நொடியும், இப்பூமி தோன்றிய நாள் தொட்டே மாற்றம் கொண்டேதான் சுழன்று கொண்டுள்ளது.
1.நொடிக்கும் குறைவான நிலையிலேயே ஒவ்வொரு நிலையும் மாறி மாறியேதான் இன்றளவும்
2.இனி நடந்திடும் பல ஆயிரம் கோடி ஆண்டுகளும்
3.இப்பூமியின் நிலையும் மற்ற எல்லா மண்டலங்களின் நிலையும் ஒரு நொடியைப் போல் ஒரு நொடி இல்லாமல் சுழன்றே ஓடிடும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குருநாதர் காட்டிய வழியில் பல அதிசயங்களைச் செயல்படுத்தலாம். எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இது எல்லாம் எதற்கு உதவும்…?
1.இந்த உடலுக்குப்பின் என்ன…? என்பதை இங்கே உடைத்துச் சொல்கின்றேன் (ஞானகுரு).
2.பிறவியில்லா நிலை அடையும் அதற்குண்டான சக்தியை நாம் பெற வேண்டும். அது தான் முக்கியம்.
உடலை விட்டுப் பிரிந்தால் நாம் கொண்டு போவது என்ன இருக்கின்றது…? அந்த அருள் ஒளியின் தன்மையை நீங்கள் பெற வேண்டும். நீங்கள் தயாராக வேண்டும்… அதன் வழி தான் எல்லோரும் தயாராக முடியும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நீங்கள் வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும்.
2.அதை நீங்கள் வலுவாகப் பெற்றால்தான் மற்றவர்களுக்கும் அதைப் பாய்ச்ச முடியும்.
3.அவர்கள் இந்த உணர்வைப் பெற… ஒன்றன் பின் ஒன்றாக அவர்கள் மூலமாக… மற்ற எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய முடியும்.
ஒரு நோயாளியைப் பார்த்தபின் அவருடைய நோயைக் கேட்டறிகின்றோம். அதை விசாரித்த பின் அதே நோய் எப்படி வருகின்றதோ இதைப்போல
1.அருள் உணர்வைக் கேட்டபின்
2.அருள் உணர்வைப் பெறச் செய்யக்கூடிய தகுதி
3.நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
எல்லோரும் மகிழ வேண்டும் என்ற உணர்வை நான் எண்ணும் பொழுது அந்த மகிழ்ந்த உணர்வுகள் எனக்குள் விளைகின்றது. அதே போன்று நீங்களும் செயல்படுத்தி அந்த மகிழ்ச்சியான உணர்வுகள் உங்களுக்குள்ளும் தோற்றுவிக்க வேண்டும்.
ஆகவே எது பதிவோ அது மீண்டும் நினைவுக்கு வரும். அதன் வழி இந்த அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கி மீண்டும் நினைவு கொண்டால் இதை நீங்கள் வளர்க்க முடியும்.
உதாரணமாக ஒரு வித்தை உருவாக்குகின்றனர். எந்த வித்தை உருவாக்குகின்றார்களோ அதன் ஊன்றப்படும் போது அது விளைச்சலாகிப் பல வித்துகளாக வரும்.
அதைப் போன்று தான் இந்த ஞான வித்தை உங்களுக்குள் உருவாக்குகின்றேன். அதை நீங்கள் பெற வேண்டும்… வளர்க்க வேண்டும்.
ஆனால் தொழிலுக்கும் குடும்பத்திற்கும் இதைச் செய்தேன்… கஷ்டம் நஷ்டம்…! என்று சொல்வதை விடுத்து விட்டு
1.நாங்கள் அந்த அருள் சக்திகளைப் பெறுகிறோம்
2.அதை வைத்துச் சீர்டுத்துவோம் என்று இந்த உணர்வை வலுப் பெறுங்கள்.
3.இந்த வாழ்க்கையை உங்களால் செம்மைப்படுத்த முடியும்.
ஆசை ஒரு பக்கம்… எண்ணம் ஒரு பக்கமாகச் சென்றால் நிறைவேறுவது கஷ்டமாகி விடுகிறது.
அதே சமயத்தில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பதிலும் ஒரு சிலர் குறை காணுவதிலேயே இருப்பார்கள். குறையை ஊன்றும் தன்மை தான் அவர்களுக்கு வருகின்றது.
குறையிலிருந்து மீட்க வேண்டும் என்ற உணர்வு வருவதில்லை அப்போது அந்த வளர்ச்சியும் குன்றுகின்றது.
இதைப் போன்ற நிலையெல்லாம் மாற்றி அருள் வழியில் நாம் வளர்த்துக் காட்டும் தன்மைக்கு வரவேண்டும். இருளைப் போக்கும் அருள் சக்திகளைப் பெற வேண்டும். அருள் வழியில் நாம் வாழ வேண்டும்.
இந்த உணர்வை நாம் வளர்த்தால் நிச்சயம் அந்த ஆற்றலைப் பெறுகின்றோம்.
1.குறை கூறுவது எளிது
2.குறையை நிவர்த்தி செய்வது மிக மிகக் கடினம்
3.அது நம்மை அடிமையாக்கக் கூடாது… அதை அடிமையாக்கி அந்த அருள் உணர்வைப் பெருக்குதல் வேண்டும்.


நம்முடைய மோப்பம் எதிலே இருக்கிறது…?
அதை யாராவது நாம் சிந்திக்கின்றோமா என்றால் இல்லை. நன்றாக யோசனை செய்து பாருங்கள். கோவில் என்பது எவ்வளவு பெரிய புனிதமான இடம் அதே சமயத்தில்
கருப்பணசாமியைக் காட்டி அதன் பக்கத்தில் மோப்ப நாயை வைத்துள்ளார்கள். மோப்ப நாயை வைத்ததன் பொருள் என்ன…?
“எனக்கு இப்படி தவறு செய்தார்…” என்று மோப்பத்தைப் பிடிக்கின்றோம். அப்பொழுது தவறு செய்தான் என்று சொன்னவுடனே…
1.உதாரணமாக நாய் என்ன செய்கின்றது…? யார் வளர்க்கின்றார்களோ அவர்களைத் தான் பாதுகாக்கின்றது,
2.நாம் மோப்பம் பிடிப்பதே… “எனக்குத் தீங்கு செய்வார்கள்” என்று நினைத்து நுகர்ந்தவுடன் என்ன செய்கின்றது…?
3.நம் நல்ல குணங்கள் இருண்டு போகின்றது.
அந்த நேரத்தில் அவனுக்கு எப்படியும் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம். தீங்கு செய்யக்கூடிய அந்த உணர்வுகள் நமக்குள் வருகின்றது..
1.அவன் நன்றாக இருந்தால் நமக்கு எப்படியும் கெடுதல் செய்வான் என்ற வகையில் நாம் நினைக்கின்றோம்… ஆயுதத்தை கையிலே கொடுக்கின்றார்கள்.
2.எதை…? அரிவாளைக் காட்டுகின்றார்கள்.
3.எங்கே…? எப்படியும் அவனிடம் இருந்து தப்புவதற்குத் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்று அரிவாளை எடுக்கின்றான்.
ஆனால் அவன் செய்த தீங்கான உணர்வை நுகர்ந்து கொண்ட பின் என்ன செய்கின்றது…? எதை மோப்பம் பிடித்தோமோ அது நம் உடலுக்குள் வந்து அவன் செய்த தீங்கான எண்ணங்கள் நமக்குள் விளைகிறது. அது நம் நல்ல குணங்களைக் கொல்கின்றது.
நாம் நுகர்ந்தது நம் உடலுக்குள் சென்று நமக்குள் என்ன செய்கின்றது? அதற்கு நீ எப்படி நுகர வேண்டும்…? என்பதற்காக வேண்டி இப்படிப்பட்ட உருவங்களை வைத்துக் காட்டுகின்றார்கள்… நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் கொல்கின்றது என்று…!
ஏனென்றால் நாம் சுவாசித்த அந்த விஷமான உணர்வுகள் நம் நல்ல குணங்களைக் கொல்கிறது. அந்த இடத்தில் நாம் எதை எண்ண வேண்டும்…?
துருவ நட்சத்திரம் இந்த விஷத்தை நீக்கியது. இப்பொழுது உங்களிடம் அதைத்தான் பதிவு செய்கின்றேன்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அதை நாம் நுகர வேண்டும்
2.அதை ஆசைப்பட்டு நுகர்ந்தவுடன் உயிரிலே படுகின்றதுல்… அருள் உணர்வுகள் தோன்றுகின்றது.
3.இரத்தத்தில் கலந்த பின் தீங்கு செய்வதை அது குறைக்கின்றது.
(தங்கத்தில் திரவகத்தை ஊற்றியவுடன் இரண்டற இணைந்திருக்கும் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுவது போல்).
நாம் இதற்கு முன்னாடி வேதனை என்ற உணர்வுகள் இரத்தத்தில் கலந்திருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் அது வீரியத் தன்மையைக் குறைத்து நல்லதாக மாற்றக்கூடிய சக்தி பெறுகின்றது. இதை உருவம் அமைத்து நமக்குக் காட்டுகின்றார்கள்.
கருப்பணசாமி கோவிலுக்குப் போய்… விவசாயத்தில் நல்ல வெள்ளாமை வந்தால் நான் உனக்கு ஆட்டைக் கொடுக்கின்றேன் கோழியைக் கொடுக்கின்றேன் என்று நேர்த்திக்கடன் வைத்து அதை வைத்துக் கும்பிட்டவுடன் ஜெயித்து விட்டால் கொடுக்கின்றார்கள்
ஜெயிக்கவில்லை என்றால் நேர்த்திக் கடனை மனதில் ஏற்றுக் கொண்டாய். ஆனால் நீ செய்யவில்லை அதனால் சாமி உனக்குத் தண்டனை கொடுக்கின்றது. என்று சொல்வார்கள்.
வியாபாரம் ஆரம்பித்தேன்… அவன் எனக்குத் தொல்லை கொடுத்து கொண்டு இருக்கிறான். நான் கடன் கொடுத்தேன் அவன் கொடுக்காமல் என்னை ஏமாற்றிக் கொண்டுள்ளான்…! என்று இந்த உணர்வுகளை எல்லாம் சாமியை நினைத்து என்ன செய்கின்றோம்…? நான் உனக்கு காணிக்கை கொடுக்கின்றேன், எனக்குப் பணம் வர வேண்டும் என்று.
1.பணம் வரவில்லை என்றால் கடைசியில் வேதனையைத் தான் எண்ணுகின்றோம்.
2.அப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்…? நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் கொல்கின்றோம்.
ஆனால் நல்ல குணங்களைக் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். அவர்கள் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும், அவர்கள் சொல் வைரத்தைப் போன்று சொல் ஜொலிக்க வேண்டும், அவர்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும். நல்ல தெய்வப் பண்பும் தெய்வீக குணமும் அவர்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் இந்த நல்ல சக்திகள் உங்கள் உடலில் விளைகிறது.
பிறரின் செயலைப் பார்க்கும் போது தீயது என்று காட்டுகின்றது இங்கே கோவிலுக்கு வந்தால் இந்த தெய்வம் நல்லது செய்யும் என்று காட்டுகின்றார்கள்.
1.எனவே அந்த நல்லதை எண்ணி நமக்குள் வளர்க்க வேண்டும்.
2.தெய்வ குணமும் நல்ல செயலும் நாம் பெற வேண்டும் என்று கோவிலில் எண்ணி எடுக்கச் சொல்கின்றார்கள்.
அதாவது கெட்டது வருவதையும் அதை நல்லதாக்க வேண்டிய வழியையும் காட்டி நமக்கு உண்மையை உணர்த்துகின்றார்கள்.

நம் தியானமே “ஈசனின் நினைவுடன் இருந்திட்டால்” மற்றத் தீய சக்திகள் நம்மை எப்படித் தாக்கும்…?
பாம்பின் விஷத்தையும் போக்கிடலாம்.. மற்றத் தீய சக்திகளையும் நம்முள் அண்டவிடாமல் போக்கிடலாம்…! ஆனால்
1.நம்முள்ளே நாம் ஏற்றிக் கொண்ட இவ்வெண்ணத்தின் சுமையை
2.ஒருநிலைப்படுத்தி ஜெபம் பெறுவதுதான் நம் சக்திக்கும் மேம்பட்ட சக்தி.
இவ்வுலகச் சூழ்ச்சியிலிருந்தும் மற்றவர்களின் நிலையின் தாக்குதலில் இருந்தும் இன்றுள்ள இவ்விஷமான இவ்வுலக நிலையில் இருந்து மீண்டு செயல் கொள்ளுவது மிகவும் கடினம்.
1.ஆத்மீக நெறியின் வழிமுறைக்கு நம் வழி அமைந்த பிறகு
2.நாமேதான் நமக்குகந்த நெறி முறையை அமைத்துக் கொண்டு செயல்படல் வேண்டும்
3.அச்செயல் வழியில்தான் நம் சக்தி நிலையே கூடி வழி வந்திடும்.
இந்நிலையின் தொடர் நிலை வந்த பிறகு பிறரின் எண்ண நிலையை நம்முடன் மோதவிட்டு ஆத்மீக நெறி முறையில் செல்லுவதும் அழகல்ல. போற்றலும் தூற்றலும் ஒருநிலை போன்ற சம நெறியின் வழியாக்கிடல் வேண்டும்.
இவ்வண்ணத் தொடரின் வழி பெற்ற பிறகு ஞானத்தின் சக்தி நிலை கூடும் நிலையில் நம் உடலில் உள்ள முன்பு வாழ்ந்த வாழ்க்கையில் உள்ள தீய சக்திகளும் செயலற்றதாய் நற்சக்திகளின் நிலை வளர்ந்து விடும்.
ஆனால் வாழ்க்கையுடன் உள்ள நிலையில் ஏற்படும் சிக்கலை நம் எண்ணத்தில் ஏற்றி அந்நிலை கொண்ட கவலையை வளரவிடும் பொழுது நம் உடலில் உள்ள தீய சக்திகளுக்கு நாம் உரம் இட்ட நிலை போல் வளர்ந்திடும்.
1.நற்சக்தியின் நிலை கூடுவதற்குப் பல காலம் ஜெபம் பெற்று ஞானத் தொடரை வழி பெற்ற பிறகு
2.ஒரு சில நொடியில் இவ்வெண்ண மோதலினால் விரையப் படுத்திடலாகாது.
பக்திமானாய் சக்திமானாய் ஆண்டவனின் சக்தியாய் ஒளிர ஒரு நாளில் இரண்டு நாளில் அந்த ஞானத் தொடரும் சக்தித் தொடரும் வந்திடாது.
உயிரணுவாய் உயராத்மாவாய் பிறப்பெடுத்து நாம் நம் உடலுடன் சேமிக்கும் அமில சக்தி அனைத்துமே நற்சக்தியாய்க் கலந்து ஒளி பெறும் நிலையில்தான் நம் நிலையும் உயர்ந்திடும்.
இவ்வாத்மீக நெறிக்கு வழி பெற்றிட
1.தீய சக்திக்கு நாம் அடிபணியாமல் நம்மள் தீய சக்தியை விட்டகற்றினாலன்றி
2.நூறாண்டு காலம் அல்ல 100 கோடி ஆண்டானாலும் நம் ஆத்மாவை ஆண்டவனின் சக்தியின் சக்தியாய் ஒளிரச் செய்வது கடினமே.
சொத்தும் சுகமும் அல்ல சக்தியின் செல்வம். இவ் அல்ப ஆசைகளுக்கு நம் எண்ண சக்தியில் துறக்கும் நிலை பெற வேண்டும். துறவியாய் ஆண்டிக் கோலம் பூண்டு செல்வது துறவறம் அல்ல.
ஒன்றை எண்ணிய நிலையில்
1.அடைந்தே தீருவோம் என்ற பேராசையின் பிடியில் சிக்கிடாமல்
2.வாழ்க்கைக்குகந்த அன்புச் செல்வங்களைத் தன் நிறைவு பெற ஆசையுடன் செயல் கொள்ளுங்கள்.
உண்ணும் எவ்வுணவையும் அமுதாய் உண்டிடும் பக்குவ நிலையில் வாழ்ந்திடுங்கள். உண்ணும் உணவே ஒவ்வோர் உடலையும் எண்ண நிலைக்கொப்பை அமில சக்தியின் சேமிப்பையும் நம் உடல் பெறுகின்றது.
எண்ணத்தையே அமுதமாக்கி உண்டிடுங்கள்.
எவ்வுணவை உண்டாலும் அமிர்தமாய் நம் உடலில் செயல் கொள்ளும் வழிமுறையும் செயல் நிலையும் நாமாய் வழி வகுத்துத்தான் நம் ஆத்மா செயல் கொண்டிடும்.
நாம் வாழ்ந்திடும் இனி வரப் போகும் ஒவ்வொரு நொடியையுமே இவ்வழித் தொடரின் ஜெப சக்தியை வளரவிட்டே
1.நம்முள்… நம் ஆத்மாவாய் அவ் ஈஸ்வரனே குடி கொண்டுள்ளான் என்பதனை உணர்ந்து
2.நாம் எடுத்திடும் நாம் விட்டிடும் சுவாசமே அவ் ஈஸ்வரனின் ஜெபத்துடனே
3.ஓம் ஈஸ்வரா என்ற நிலையிலேயே எந் நிலையில் எச் செயலில் இருந்திட்டாலும்
4.நம் எண்ண ஜெபம் முழுவதுமே அவ் ஈசனின் நினைவுடன் இருந்திட்டால் மற்றத் தீய சக்தியின் நிலை நம்மை எப்படித் தாக்கும்…?
5.நம்மை அத்தீய சக்தியிலிருந்து காக்கத்தான் அவ் ஈசனே ஜெபம் கொண்டு நம்முள் உள்ளானே.
6.நம் ஆத்மாவே ஈசன் தான்
7.ஈசனின் சக்தி இல்லாமல் எச் சக்தியும் இல்லை.
8.ஈசனே குடி கொண்டுள்ள நம் ஆலய ஆத்மா கொண்ட நம் உடலை
9.ஈசனின் சக்தியாய் வாழ்ந்திடும் நெறிமுறையின் வழித்தொடர் கொண்டே வாழ்ந்திடுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
யாம் கொடுக்கும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் உயிரையும் துருவ நட்சத்திரத்தையும் இணைக்கும்படி செய்கிறோம். துருவ நட்சத்திரத்துடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். துருவ தியானத்தின் மூலமாகவும் ஆத்ம சுத்தி மூலமாகவும் அந்த அருள் சக்திகளைப் பெறும்படி செய்கிறோம்.
இருந்தாலும்…
1.இத்தனை நாள் தியானம் செய்தேன்… என் தொழில் சீராகவில்லையே…
2.நான் இவ்வளவு தியானம் செய்கின்றேன்… என் குடும்பத்தில் இப்படி இருக்கிறதே…! என்று
3.இப்படித்தான் கலந்து கொண்டு போகின்றோம்.
ஆக பல கேள்விகளை எண்ணிக் கொண்டு “நான் தியானம் செய்தேன்… என் கஷ்டம் என்னை விட்டுப் போகவில்லையே…!” என்று மீண்டும் கலந்து கொண்டே வருகிறோம்.
நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிய பின்பு அதே நஞ்சை மீண்டும் சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்ட மாதிரித்தான் பெரும்பகுதியானவர்கள் இருக்கின்றார்கள்.
1.நஞ்சைக் கழிக்கின்றோம்.
2.ஆனால் மீண்டும் எண்ணத்தால் நஞ்சைச் சேர்க்கின்றோம்.
பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்த நிலையில் நம் உடல் தன்னிச்சையாக நஞ்சை நீக்குகின்றது. ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…?
வெறுப்பு சலிப்பு சங்கடம் சஞ்சலம் என்று இந்த வாழ்க்கையில் வருவதை எண்ணி மீண்டும் இந்த உடலில் நஞ்சாக அதை எல்லாம் சேர்த்துக் கொள்கிறோம். இந்த உடல் எத்தனை நஞ்சைத்தான் கழிக்கும்…?
சொல்வது அர்த்தம் ஆகிறதல்லவா…!
நல்ல உணவுடன் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து நல்ல உணர்வுகள் எல்லாம் பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
எத்தனையோ கோடிச் சரீரங்களிலிருந்து மனிதனாக ஆன நிலையில் நம் உடல் நஞ்சை மலமாக மாற்றுகின்றது. ஆனால் நாம் நல்ல உணர்வுகளை இன்று நஞ்சாக மாற்றுகின்றோம்.
ஏனென்றால் ஆசையின் நிமித்தம்… உடல் பற்று என்று வரப்படும் பொழுது
1.இது கிடைக்கவில்லையே… அது கிடைக்கவில்லையே…! எல்லாம் செய்தேனே…
2.என் பையனை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று நினைத்தேன்…
3.அவன் சொன்னபடி கேட்கவில்லையே…! காசையெல்லாம் செலவழித்து விட்டானே…! என்ற இந்த உணர்வுகளை வளர்த்து
2.வேதனையைக் கூட்டி நஞ்சாகச் சேர்த்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் மாற்றி விடுகின்றோம்.
விஞ்ஞானிகள் சொல்கிற மாதிரி எத்தனை வகையான வேதனைகளை இணைத்தோமோ வைரஸ் என்ற கிருமியாகத் தான் நமக்குள் மாற்றுகிறோம்.
மூஷிகவாகனா…! நாம் சுவாசித்த உணர்வுகள் தான் வாகனமாக அமைகிறது. அதன் வழிப்படித் தான் இந்த வாழ்க்கை நடத்துகின்றது. அடிக்கடி கோபப்படுகிறோம் என்றால் நம்மைக் கோபக்காரராக மாற்றுகின்றது. கணங்களுக்கு அதிபதி ஆகி நம்மைக் கோபக்காரனாக மாற்றுகின்றது.
1.கோபக்காரனாக மாற்றினாலும் பரவாயில்லை.
2.கடைசியில் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.
3.எதன் வழியில் கோப உணர்வுகளை நாம் சேர்த்தோமோ அதன் வழி இந்த உடலை மாற்றுகின்றது.
இந்த இரத்தக் கொதிப்புடன் சாகிறவர்கள் எல்லாம் பெரும்பகுதி அடுத்துப் புலியாகத்தான் பிறப்பார்கள். வேறு எங்கும் போக முடியாது. அல்லது இன்னொரு மனித உடலுக்குள் சென்றாலும் அங்கேயும் இரத்தக் கொதிப்பாக மாற்றி அவனை வீழ்த்தி விட்டு வெளி வந்துவிடும்.
அதாவது கொஞ்ச நஞ்சம் தொக்கி இருந்தது என்றாலும் இன்னனொரு மனித உடலில் யார் கோபமாக இருக்கின்றார்களோ அந்த உடலுக்குள் சென்று அங்கேயும் கோபத்தை உண்டாக்கி… எல்லாவற்றையும் முழுமையாக்கி உயிர் வெளியில் வந்த பிற்பாடு புலியின் ஈர்ப்புக்குள் சென்று புலியாகப் பிறக்கச் செய்யும்.
நாம் ஏதாவது ஒன்றை எண்ணுகின்றோம். அது நடக்கவில்லை என்றால் இப்படி ஆகிவிட்டதே… இப்படி ஆகிவிட்டதே… இப்படி ஆகிவிட்டதே…! என்று வேதனையைத் தான் அடைகிறோம்.
எந்தெந்த வேதனை உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்த வேதனைக்குத் தக்க அடுத்த உடலை உயிர் அமைத்துவிடும்.
கை கால் குடைச்சல் வரும் மூட்டு வாதம் கீழ் வாதம் வரும். இது எல்லாம் நமக்குள் சேர்த்துக் கொண்ட வினைகள் தான் இந்த வினைக்கு நாயகனாக நம்மை இயக்கிய தீரும்.
இப்படி ஆகிவிட்டால் அது சொன்னபடி தான் (நடக்க முடியவில்லை… அசைக்க முடியவில்லை… வலிக்கிறது) நாம் கேட்க வேண்டும் வேதனை அதிகமாகி உடலிலே அனைத்தையும் முழுமையாக்கிவிடும்.
ஆனால் இப்படி நோயாக ஆன பின்பும் கூட மருத்துவரிடம் சென்று நோயை நீக்கினாலும் ஆசை (உடல்) யாரை விட்டது…?
இவன் இப்படிச் செய்கின்றான்… அவனுக்குப் பணம் கொடுத்தேனே…! அவன் ஒன்றும் செய்யவில்லையே…! என்று வேதனை உணர்வை எடுத்து மீண்டும் உடலுக்குள் பல மாற்றங்கள் ஆகின்றது.
கடைசியில் எந்த மருந்து கொடுத்தாலும் அடுத்து ஒன்றுமே வேலை ஆகாது. இதையும் பார்க்கலாம்.
அதற்குத் தான் ஞானிகளைப் பற்றி இங்கே உணர்த்துகின்றோம்.
1.அந்த அருள் ஞானியின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து…
2.அதை வலுக் கூட்டினால் இந்த உணர்வின் தன்மை நம்மை வாழ வழிவகுக்கும்…. அமைதி பெறச் செய்யும்.
3.மன வலிமை கிடைக்கும்… சிந்திக்கும் ஆற்றல் கொடுக்கும்… சிந்தித்து செயல்படும் தன்மையும் வரும்.


தியானம் செய்யும் போது “உயிரின் காந்தத்தைப் பயன்படுத்த வேண்டிய” சரியான முறை
அகஸ்தியனும் அவன் மனைவியும் பூமியின் துருவத்தின் எல்லையை கடந்து அதிலிருந்து ஒளியாக மாற்றும் சக்தியைப் பெற்றனர்.
ஒளியான பின் இரு உயிரும் ஒன்றி அங்கே துருவ நட்சத்திரமாக நிலையாக இருக்கின்றனர். நம் பூமிக்கு வருவதை எல்லாம் ஒளியின் உணர்வாக மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.
1.இது எல்லாம் வேத நூல்களில் நாதங்கள் என்ற நிலைகளில் எழுதியுள்ளார்கள்.
2.ஆனால் சிற்றரசர்களுக்குள் போர்கள் வரும் பொழுது காலத்தால் மறைந்து விட்டது… கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.
ஆனால் இந்தக் காற்றில் இருக்கின்றது.
அதைப் பெறச் செய்வதற்குத்தான் நமது குருநாதர் அனுபவரீதியாக 20 வருடம் காடு மேடு நகரம் எல்லாம் எம்மை அலையச் செய்து
1.நீ நுகர்ந்த உணர்வுகள் உன் உடலில் என்ன செய்கின்றது…?
2.நீ அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று பக்குவப்படுத்தி
3.எனக்குள் துன்பத்தை உண்டாக்கி… எது துன்பத்தை உண்டாக்குகின்றது…?
4.எந்த சந்தர்ப்பத்தில் உண்டாகிறது…? அதை நீ எப்படி மாற்ற வேண்டும்…? என்ற உபாயத்தைக் கண்டறிந்து
5.அந்த இருபது வருட அனுபவத்தைத் தான் இப்பொழுது நான் உங்களிடம் சொல்கின்றேன் (ஞானகுரு).
ஒருவருக்கொருவர் சண்டை போடுகின்றார்கள். அதைக் கேட்டவுடன் அந்தச் சந்தர்ப்பத்தில் அது உங்கள் உடலில் அது விளைகின்றது. ஆனால் இப்பொழுது உங்களுடைய சந்தர்ப்பம்
1.எனக்கு குருநாதர் காட்டியதை எல்லாம் தெரிந்து உங்களிடம் சொல்கின்றேன் நீங்கள் கேட்கின்றீர்கள்… இது நல்ல சந்தர்ப்பம்.
2.என்னை நீங்கள் கண்ணால் பார்க்கின்றீர்கள்… இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகின்றது
3.நுகர்கின்றீர்கள்… உங்கள் உயிரில் அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. நான் சொல்லும் உணர்வை எல்லாம் தெரியச் செய்கின்றது.
நீங்கள் அதை நுகரப்படும் போது உங்கள் உமிழ் நீர் மாறும். அப்பொழுது உங்கள் சாப்பாட்டுடன் கலந்து சிறு குடலுக்குப் போய்ச் சேரும்… இப்படி சிறுகச் சிறுக பெருங்குடலுக்குப் போய்ச் சேரும்.
இப்பொழுது நீங்கள் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது வாயில் உள்ள ருசியெல்லாம் வித்தியாசமாக மாறும்.
1.உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது உங்கள் உடலுக்குள் அப்படியே ஜிலு…ஜிலு…வென்று இருக்கும்
2.விஷத்தன்மை இருந்தால் அதெல்லாம் குறைந்து போவதை உங்களால் உணர முடியும்.
ஏனென்றால் மணிக்கணக்கில் உட்கார வைத்து எப்படியும் இந்த நல்ல சத்தை உங்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத் தான் இதைச் செய்கின்றேன்.
சண்டை போடுவதை வேடிக்கை பார்த்தீர்கள் என்றால் அந்த உணர்வெல்லாம் உமிழ் நீராக மாறி உடலுக்குள் குடல் உபாதைகள் கல்லீரல் மண்ணீரலில் வலி நெஞ்சு வலி என்று இதெல்லாம் வந்துவிடும்.
ஆனால் இப்போது இந்த உபதேசங்களைக் கேட்கும் போது இந்த சந்தர்ப்பம் ஞானிகள் உணர்வை நீங்கள் நுகர நேருகின்றது… அந்தச் சத்து உங்கள் சிறுகுடல் பெருங்குடலுக்குப் போய்ச் சேருகின்றது, ஆகாரத்துடன் கலந்து நல்ல இரத்தமாக மாற்றிக் கொண்டு வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கின்றது.
இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் பொழுது ஒவ்வொரு நிமிடமும் நல்ல உணர்வுகள் பதிவாகின்றது. என்னுள் விளைந்தது உங்கள் உடலில் பதிவாகிறது.
1.ஆனால் காற்றிலேயும் இருக்கிறது
2.எந்தக் கண் வழி பதிவு செய்தீர்களோ உடனே இழுத்து உங்களுக்குள் கவர்ந்து கொள்ள முடியும்.
உதாரணமாக சங்கடமாக இருக்கின்றார்கள்… கஷ்ட்த்தைச் சொல்கின்றார்கள் நீங்கள் கேட்கின்றீர்கள். கேட்கும்போது அதே உணர்வுகள் நமக்குள் என்ன செய்கின்றது…? அவர் மேல் பற்று இருந்தால் நமக்குள் ஏதோ தலை சுற்றுவது போல் வரும்… நல்ல மனிதருக்கு இப்படி ஆகிவிட்டது…! என்று.
இப்பொழுது இந்த மாதிரி நேரத்தில் அவர்கள் உணர்வு நம்மை பாதிக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்…?
இப்பொழுது நீங்கள் கேட்டுக் கொண்ட முறைப்படி
1.ஈஸ்வரா…! என்று சொல்லிவிட்டு கண்ணிலே ஏங்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவினைச் செலுத்துங்கள்
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வந்தது இந்தப் பூமியில் இருக்கின்றது.
3.அதை நமது கண்ணில் இருக்கக்கூடிய கருமணிகள் இழுக்கின்றது
4.கண்ணின் நினைவை உயிரோடு கொண்டு விட்டவுடன் இதிலே கொண்டு பாய்ச்சி விடுகிறது.
5.அப்போது அந்த உயிரான காந்தம் என்ன செய்கின்றது…?
6.இங்கே மூக்கு வழியில் செல்வதை நிறுத்தி விடுகின்றது… புருவ மத்தி வழி கூடி இழுக்கிறது.
7.அப்பொழுது கெட்டதை எல்லாம் நிறுத்திவிடுகின்றது.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் என் உடல் முழுவதற்கும் படர்ந்து என் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று சொல்லிக் கட்டளையிட்டால் இங்கே வந்துவிடுகிறது.
அப்பொழுது முன்னாடி உஷாராகிக் கொள்கின்றது, கெட்டதை உள்ளே போக விடாமல் தடுக்கின்றது,
1.உடலுக்குள் வலிமையாகி அழுத்தமான பின்பு ஆன்மாவில் இருப்பதைத் தள்ளி விடுகின்றது
2.தள்ளி விட்டவுடன் பிறகு நமக்கு சங்கடம் என்று எதுவும் வராது.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றி சிந்திக்கும் ஆற்றல் அங்கே வரும்…!
இந்த முறைப்படி செய்ய வேண்டும்.
திட்டியவர்களை எண்ணும் பொழுது எப்படி உங்கள் வாழ்க்கையில் குறை நிலைகளுக்கு அழைத்துச் செல்கின்றதோ… அதைக் கேட்டறிந்தாலும் அடுத்த கணம் அது உங்களுக்குள் வராமல் இப்படித் தடுத்துப் பழக வேண்டும்.

இன்னல்கள் பல மோதினாலும் “தெளிவு பெறும் ஞான வளர்ச்சியை” நீங்கள் பெறுவீர்கள்
நம் உடலை விட்டு நம் ஆத்மா பிரிந்து செல்வதைச் சிவபதவி அடைந்து விட்டார் தெய்வீக பதவிக்குச் சென்றிட்டார் என்றெல்லாம் நம் ஆத்மா பிரிந்த பிறகு… நம்முடன் வாழ்ந்தவர்கள் நமக்களிக்கும் பதவிதானே தவிர… எப்பதவியும் அச்சிவனால் நமக்கு அளிக்கப்படுவதில்லை.
வாழ்ந்த காலத்தில் நாம் இருக்கும் நிலையைக் காட்டிலும் ஆவி உலகில் அல்லல்படும் நிலை “மிக மிகக் கொடிய நிலை…”
நல் ஆத்மாவாய் நற்செயலைச் செய்வித்து நல்லுணர்வு கொண்டு அமைதி கொண்டு இவ்வுலக வாழ்க்கையில் உள்ள பற்று, பாசம், ஆசை அனைத்து நிலைகளையுமே வாழ்ந்த நிலை கொண்டு பூரிப்பில் சஞ்சலத்தில் விட்டுச் செல்வதைப் போல் எண்ணாமல்
1.அமைதியுடனே இவ்வுலகப் பற்றற்றுப் பிரிந்து செல்லும் ஆத்மாக்களினால் தான்
2.ஆண்டவனாயும் அக்குடும்பத்தின் தெய்வமாயும் தான் வாழ்ந்த குடும்பத்தைச் செழிக்கச் செய்திடல் முடிந்திடும்.
குடும்பத்தில் உள்ளோரும் அக்குடும்பத்தில் வாழ்ந்திடும் பெரியோர்களை அன்புடன் வணங்கியே அவர் வாழ்ந்த காலத்தில் நாம் செய்யும் சேவைதான், அவர் ஆத்மா பிரிந்த பிறகு நம் குடும்பத் தெய்வமாய் நம்மைக் காப்பார்.
1.அவ்வழியின் தொடர் தான் குடும்பத் தொடராக…
2.பெரியோரை தாய் தந்தையரை பக்தி கொண்டு வணங்கிடும் பக்குவ நிலை என்பதனை உணர்ந்து
3.ஒவ்வொரு குடும்பத்தையும் அக்குடும்பங்களே கோயில்களாய்த் திகழும் வண்ணம் வாழ்ந்து வழி நடந்திடல் வேண்டும்.
பல கோயில்களுக்குச் சென்று அபிஷேக ஆராதனை செய்வித்துப் பக்தியை வளர்த்து வேண்டும் முறையைக் காட்டிலும்… நம் இல்லக் கோயிலை அன்பு கொண்டதாய் இனிமையை வளர்க்கும் இன்ப இல்லமாய்… இல்லத்தில் உள்ளோர் அனைவரின் எண்ணக் கலப்பும் ஒன்றுபட்டதாய் வாழ்ந்திடும் வழி பெறுங்கள்.
1.வாழ்க்கையுடன் மோதிடும் பல இன்னல்களுக்கும்
2.தெளிவு பெறும் பக்குவத்தில் நம் ஞான வளர்ச்சியின் தொடர்பினை வளர விடுங்கள்.
செல்வமும், செழிப்பும் தானாய் வளரும். பக்தி என்னும் அன்பு கொண்ட வாழ்க்கையின் நெறியறிந்து ஞான வழியின் தொடரைப் பின்பற்றி வழி நடந்து வாழ்ந்திட்டாலும் நம் எண்ணத்தில் நம் வாழ்வின் நிறைவில்
1.”நான்” என்ற எண்ண நிலையை என்றென்றும் மோத விடாமல்,
2.செழிப்பின் வழியிலே தான் நம் எண்ணத் தொடர் சென்றிடல் வேண்டும்.
நல்லோருடனே பழகியும் நற்பயன் கொண்ட காரியத்தைச் செய்தும் பக்திமானாய் அன்பு கொண்ட வாழ்க்கை வாழ்ந்தும் இவ்வாழ்ந்திடும் வழித்தொடரில் நம்மைக் காட்டிலும் நம் வழித் தொடர் பெறாமல்
1.பிறரின் வாழ்க்கை நிலை, நெறிமுறை இவற்றின் தன்மை நம்முடன் ஒட்டாமல் சத்துரு மித்திரு கொண்டவரின்
2.தீய சக்தியின் பிடியில் சிக்கி அப்பழக்கத்திற்கு அடிமை கொண்டவரின் நிலையையும் நம் நிலையையும் ஒப்பிட்டு
3.நம் நிலையின் பெருமையை நாம் எண்ணினால் நான் என்ற நிலையினால் நாம் வளர்ந்த இந் நற் சக்தியிலேயே கரைபடுகின்றது.
பல தீய வழிகளில் அடிமை கொண்டு அந்நிலையிலிருந்து மீள வழியில்லாமல்… நல்லுணர்வு கொண்டோரை தீய நிலையில் உள்ளவரின் எண்ணம் அன்புப்படுத்தி பக்திப்படுத்தி
1.நமக்கு அப்பாக்கிய வழி சென்றிடும் வழித்தொடர் இல்லாமல் இந்நிலையில் உள்ளோம் என்ற எண்ணத்திலேயே
2.அவர்களின் ஆத்மாவில் நற்சக்தி பெற்றோரை எண்ணத்தில் ஈர்த்த சக்தி கூடி வலுப் பெறுகின்றது அவ்வாத்மாக்களுக்குமே.
நாம் வாழ்ந்திடும் நம் நினைவுடன் கலந்திடும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவற்றுக்குண்டான சக்தி நிலை நம்முள் சேமிக்கப்படுகின்றது.
இவற்றை உணர்ந்திடாமல் வாழ்ந்தோம் என்ற நிலை கொண்ட சாதாரண நிலையில் வாழ்ந்து… நாம் இம்மனித ஆத்மா கொண்ட உடலைப் பெற்று வாழ்ந்திடும் இப்பாக்கியத்தைச் சிதற விடாதீர்கள்.
இன்றளவும் நம்மில் தோன்றி சப்தரிஷி நிலைகொண்ட ஜோதிகளும் இன்னும் பக்தியென்ற தொடர் நிலை கொண்ட தனக்கு மேல் உள்ள உயர்ந்த சக்தியான இயற்கையின் ஆதி சக்தியையே ஒவ்வொரு சப்தரிஷிகளும் ஜெபப்படுத்தி பூஜைப்படுத்தி “நான் என்ற நிலைப்படாமல்” மென்மேலும் அவ் இயற்கை ஜெபத்துடன்தான் செயலாற்றுகின்றார்கள்.
அனைவருக்கும் முருகனாய் ஜெபப்படுத்தி வணங்கிடும் அப்போகநாதரே அச்சிவசக்தியின் ரூப ஜெபத்தை இன்றளவும் அம்முருகரின் விக்கிரகத்தை ஜெபப்படுத்திக் கொண்டே உள்ளார்.
முருக ஸ்தலமே… அம் முருகரின் அச்சிலையே அவர் ஜெபிக்கும் ஜெபத்தை ஈர்த்து சக்தியை வளர்த்துக் கொண்டே அருள் புரிகின்றது.
நம் பாட நிலையில் இவ்வுலகில் வளர்ந்த கனி வளங்களை இப்பூமியிலிருந்து பிரித்த பிறகு ஜீவனற்றுப் போகின்றது என்று உணர்த்தியுள்ளோம்.
ஆனால் போகர் ஸ்தாபிதம் செய்த முருகரின் சிலைக்கு அப்போகர் ஜெபித்த ஜெபத்தினால் அம்முருகரின் சிலையே ஜீவன் கொண்ட நிலையில், அம்மலையில் ஐக்கியப்பட்டுவிட்டது.
1.ரிஷிகளும் சப்தரிஷிகளும் அவர்களின் நிலையினால் நட்ட கல்லையும் ஜீவன் கொண்டிட முடிந்திடும்.
2.சப்தரிஷியின் நிலை எவ்வண்டத்தையும் எப்பிண்டத்தையும் சுழலிலிருந்து நிறுத்திடவும் முடியும்
3.பிண்டத்தையே அண்டமாக்கிச் செயல்படுத்திடவும் முடியும்.
சப்தரிஷியின் சக்தியில் அனைத்து உலக சக்தியையுமே செயலாக்கிடும் நிலை கொண்டு தான் செயல் புரிகின்றனர்.
உயிரணுவாய் உயிராத்மாவாய் வளர்ச்சி கொண்டவர்களே சப்தரிஷியாய் சகலத்தையும் அறிந்திடும் சக்தி கொண்ட நிலையிலும் இயற்கையின் சக்தியை பூஜித்தே “அவ் ஆதிசக்தியின் சக்திக்கு அடிபணிந்தே செயல் ஆக்குகின்றனர்…”
நாம் வாழ்ந்திடும் இக்குறுகிய கால வாழ்க்கையை நம் சக்தியின் ஞானத்தொடர் வழியைச் செயல்படுத்தி வழி வந்து
1.நம் சக்திக்கும் அனைத்துச் சக்தியையும் ஈர்க்கும் சக்தி உண்டு என்ற
2.ஒரு நிலை கொண்ட எண்ண நிலை கொண்ட வழித்தொடர் பெற்றிடுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பால் சத்தானது தான்… அதிலே விஷத்தைக் கலந்தால் என்ன செய்யும்…? குடிப்போரை மாய்த்துவிடும்.
இதைப் போல எவ்வளவு அழகான நிலைகளில் எவ்வளவு பரிமாணம் எடுத்துக் கொண்டாலும் வேதனை வேதனை என்ற நிலைகள் வந்தாலே அந்த அழகே போய்விடுகிறது.
பெரிய குடும்பமாக இருக்கின்றது… தொழில் செய்கின்றோம்… எல்லாச் செல்வங்களும் வந்துவிட்டது. பையன் மீது பிரியமாக இருக்கின்றோம்.
ஆனால் அவன் ஏதாவது தவறு செய்தாலோ… “இப்படிச் செய்கின்றானே… இப்படி இருக்கின்றானே…” என்று எண்ணும் பொழுது வேதனை.
வேதனை என்றாலே விஷம்…!
1.தொழில் செய்கின்றோம்… அதில் நஷ்டம் வந்தால் வேதனை.
2.ஒருவருக்கு உதவி செய்கின்றோம்… கேட்கவில்லை என்றால் வேதனை.
இப்படி இந்த விஷமான சத்துக்கள் நம் உடலில் இருக்கும் நல்ல குணங்களுக்குள் பட்டு விட்டது என்றால் நம் உடலிலே அது நோயாக மாறிவிடுகிறது.
எவ்வளவு உயர்ந்ததற்குக் கொண்டு போக வேண்டும் என்று எண்ணினோமோ அங்கே போகாதபடி
1.வேதனை என்ற நிலையைக் கொண்டு வந்து சிந்திக்கும் திறனை இழக்கச் செய்து
2.மனித உடலை இழக்கச் செய்து இழிநிலையான சரீரத்திற்குக் கொண்டு விட்டு விடுகின்றது.
அப்படி வந்தாலும் மீண்டும் அந்தக் கெட்டதை நீக்கி விட்டு நல்லதைப் பெறும் நிலைகள் வந்தால்தான் உயர்வு பெற முடியும் என்ற நிலைகளை வைகுண்ட ஏகாதசி அன்று இரவு முழுவதும் முழித்துக் கொண்டிருக்கும்படி ஞானிகள் அதைச் சாஸ்திரத்தில் காட்டுகிறார்கள்.
“விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தன்மை என்ன…?
ஒரு சூரியனின் தன்மையே என்றுமே விழித்த (பிரகாசமான) நிலை கொண்டது. அதைப் போன்று சப்தரிஷி மண்டலம் தனக்குள் என்றுமே அது ஒளி கொண்டது.
1.என்றைக்குமே விழித்த உணர்வு கொண்டு தான் பெற வேண்டுமென்று
2.விழித்திருந்தே பொருளறிந்து தனக்குள் செயல்படும் ஆற்றலைப் பெற வேண்டும் என்று
3.பரமபதத்தின் தத்துவத்தை “வைகுண்ட ஏகாதசி – சொர்க்கம்…” என்று காட்டி
4.உடலை விட்டுச் சென்றபின் நாம் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டுமென்று என்ற தெளிவைக் காட்டுகின்றார்கள்.


கருவுற்ற தாய் “அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது”
ஒரு சமயம் ஒரு குடும்பத்தில் கல்யாணம் செய்து கொடுத்தார்கள் அங்கே மாமனாருக்கும் மகனுக்கும் சண்டை.
வீட்டிற்கு வந்த மருமகளோ அது கர்ப்பமாக இருக்கக்கூடிய காலத்தில் இதையெல்லாம் கேட்டு “மாமனாரே பாவம்” என்று சொல்லிவிட்டு எல்லா உதவிகளையும் பணிவிடைகளையும் செய்து வந்தது… முறைப்படி அந்த மாமனாரைக் கவனித்து வந்துள்ளது.
கணவனோ… யார் என் அப்பாவிற்குச் சோறு போடச் சொன்னது…? என்று கேட்கின்றான். கணவன் தன் மனைவியைச் சத்தம் போட்டுக் கடுமையாகப் பேசி உள்ளார். இது நடந்த நிகழ்ச்சி.
1.அப்பொழுது நான் (ஞானகுரு) அந்தப் பெண்ணிடம் சொன்னேன் இதை எல்லாம் சுவாசிக்காதே நல்லதையே எண்ணு என்று…!
2.எங்கேங்கே நல்லதை நினைக்க விடுகின்றார்கள்…?
3.மாமனாரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. இங்கே கணவர் விரட்டிக் கொண்டு உள்ளார்…! என்று சொல்லி
4.வேதனைப்பட்டு வேதனைப்பட்டு அந்த அழுகையிலிருந்து மாறவே இல்லை.
நான்கு ஐந்து மாதம் ஆகிவிட்டது. கருவிலிருக்கும் குழந்தையை ஸ்கேன் எடுத்துப் பார்த்துக் கொண்டு வருகின்றார்கள். இப்பொழுதுதான் நவீன கருவிகள் உள்ளனவே…! கை கால் எல்லாம் சரியான வளர்ச்சி இல்லை… குறுகி விட்டது. பிறகு அபார்ஷன் செய்து அந்தக் குழந்தையை எடுத்துள்ளார்கள்.
ஆனால் மருமகள் தவறு செய்யவில்லை சந்தர்ப்பம் இரக்கப்பட்டு நல்லது தான் செய்தது. ஆனால் கணவரும் மற்றவர்களும் உனக்கு என்ன அக்கறை..? என்று திட்டுகிறார்கள்.
1.இந்த உணர்வைக் கேட்டு நல்லது செய்ய முடியாமல் அந்த வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்கின்றது
2.அந்தக் கருவிலே இருக்கக்கூடிய குழந்தையை அது பாதிக்கின்றது.
3.கருவில் இருக்கக்கூடிய குழந்தை தவறு செய்ததா…? அல்லது இந்தத் தாய் தான் தவறு செய்ததா…?
4.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் அந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைகிறது.
காரணம்… இன்று டிவி பெட்டி வீட்டிற்குள் வந்துவிட்டது. எங்கோ நடக்கும் சமாச்சாரம்… தலையை வெட்டுவது போன்று டிவியிலே காட்டுகின்றார்கள். அந்த கர்ப்பிணி அதனைப் பார்த்தால்… குழந்தை பிறந்தவுடன் அந்த வேலையைச் செய்வான்.
அசுர உணர்வை நீக்குவதற்கு அந்தக் காலத்தில் வளர்ச்சி பெற்று வளர்ந்து வந்தார்கள். ஆனால் இன்றோ… மனிதருக்குள் அசுர உணர்வு தான் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
மனிதனுடைய ஆசை இந்த உடல் இச்சை வரப்படும் பொழுது… கொடூர மிருகங்கள் மற்ற ஆடு மாடுகளை எப்படிக் கொன்று சாப்பிட்டதோ இதே மாதிரி மற்றதைத் துன்புறுத்தியே வாழும் உணர்வுகள் நாடு முழுவதும் நாளடைவில் வளர்ந்து விட்டது.
நாட்டிலே நிலவும் சண்டையும் சச்சரவும் வெளியில் நடப்பதைக் கேட்ட உடனே அந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தை பிறந்தவுடன் என்ன செய்கின்றது…?
அம்மா அப்பாவை உதைக்கின்றது… இருப்பதையெல்லாம் ரகளை செய்கின்றது… திருடப் போகின்றது, எந்தெந்த குணங்களோ அதற்கு தகுந்தாற்போல் குழந்தைகள் மாறிக்கொண்டே இருக்கின்றது.
ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியனுக்குப் பூர்வ புண்ணியமாக எது கிடைத்த்து…?
கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு (அகஸ்தியனுக்கு)
1.மின்னல்கள் தாக்கினாலும் அந்த மின்னலுடைய வேகத்தைத் தணித்து
2.அதைச் சுவாசித்துத் தனக்குள் ஒரு ஒளிமயமான உணர்ச்சிகளை தூண்டும் சந்தர்ப்பமாக
3.கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகக் கிடைக்கின்றது.
அவன் பிறந்த பிற்பாடு அவன் பக்கத்தில் எந்த விதமான விஷத்தன்மைகள் வந்தாலும் அவனைத் தாக்குவதில்லை… யானைகளோ புலிகளோ போன்ற எந்த மிருகங்களும் வரவில்லை.
அப்பொழுது இவன் உடலில் நடந்தது யாருக்கும் தெரியாது. “கடவுளின் அவதாரம்” போல் இருக்கிறது என்று மற்றவர்கள் எண்ணுகிறார்கள்.
இந்தக் குழந்தையைக் கண்டால் மற்றதெல்லாம் விலகிச் செல்கின்றது. ஈ, எறும்பு கொசு போன்ற எதுவும் வரவில்லை. அவனை சுற்றியே பக்கத்தில் வரவில்லை என்கிற போது அவன் கடவுளின் பிள்ளை என்றே நேசிக்க ஆரம்பிக்கின்றார்கள்.
அவன் வளர்ச்சியில் இதைப் போன்று செடி கொடியின் மணங்களை எளிதில் நுகர்ந்தற்கின்றான்.
1.ஒன்று அல்லது ஒன்றரை வயது ஆனவுடன் எதிர் நிலையான செடி கொடிகளின் மணங்களை நுகர்ந்து என்ன செய்கிறான்…?
2.யாருக்காவது தலைவலி வருகிறது என்றால் ஒரு செடியின் இலையைக் கொடுத்து நுகரச் செய்தால் தலைவலி போகின்றது.
3.அகஸ்தியன் இளமையிலே இப்படி எதையாவது பறித்து கொண்டு வந்து கொடுத்து
4.அந்த வாசனையை நுகரச் செய்தால் நோய்கள் அனைத்தும் அகன்று விடுகின்றது.
இப்பொழுதும் கூட தியானத்தில் இருப்பவர்கள் அந்த முறைப்படி செய்யும் பொழுது வீட்டில் உள்ள குழந்தை ஓரளவுக்கு விவரம் தெரிந்து சிரித்து நம்மிடம் பேசினாலே உங்கள் நோய் போகும்…!
தலைவலியே இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்
1.அந்தக் குழந்தையின் கையில் சிறிதளவு விபூதியைக் கொடுத்து
2.”நன்றாகிவிடும் என்று சொல்லப்பா…” என்று சொல்லி அந்த குழந்தையிடம் கொடுத்து வாங்கி நீங்கள் சாப்பிட்டுப் பாருங்கள்…
3.தலைவலி குறைகின்றதா இல்லையா என்று தெரியும்.
உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

முதல் பாதம் இரண்டாம் பாதம்
ஆதியில் இருந்து இன்றளவும் நமக்குக் கதைகளாகவும் பாடல்களாகவும் போதனை நிலைகளாகவும் இத்தெய்வீக நிலைகளை நமக்கு உணர்த்தியவர்கள் எல்லாம், சூட்சுமப்படுத்தி மறைக்கப்பட்டு அதிலுள்ள ஜீவநிலையை மக்களுக்குப் புரியும் நிலையில் கதைகள் ரூபத்திற்காக அன்று வெளியிட்ட முனிவர்களின் ரிஷிகளின் நிலையையே காலப்போக்கில் பல வடிவங்களைச் சேர்த்து “இன்றைய நிலைக்கு நம்பா நிலைப்படுத்தி விட்டார்கள்…”
அவரவர்கள் வாழும் நிலைப்படுத்தி அவரவர்களின் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதமுண்டு.
முதல் பாதம் இரண்டாம் பாதம் இப்படி வரிசைப்படுத்தி எல்லாவற்றிற்கும் மேல்பாதம் சென்ற பிறகுதான் அவ் ஆண்டவனுடன் ஐக்கியப்பட்டிடலாம் என்ற நிலையில் உணர்த்தி வருகின்றனர்.
இப்பாத நிலைபெறும் நிலையென்ன…?
ஒவ்வொரு பாதத்தில் இருந்தும் முதல் படி, இரண்டாம் படி, மூன்றாம் படி இப்படிப் பள்ளியில் படித்திடும் நிலைக்கொப்ப கடைசிப் படியில் பட்டம் வாங்குவதைப் போலல்ல அவ்வாண்டவனிடம் ஐக்கியப்படும் நிலை.
எங்கும் நிறைந்துள்ள நம்முள்ளும் கலந்துள்ள நம் ஆத்மாண்டவனின் சக்தியை நமக்கு அளித்த இவ்வேழு பிறவியில் நாம் வாழ்ந்த நிலை கொண்டுதான்… நம் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு நமக்குகந்த அபிலாஷைப்படி இவ் ஏழு பிறப்புகளை நம் எண்ண நிலையில் நாம் மேம்படுத்திடாவிட்டால்… நம் ஆத்மாவிற்கு இம்மனித உடலை ஏற்கும் சக்தியிழந்து விடுகிறோம்.
இவ்வேழு பிறப்பிலும் நம் எண்ண நிலைக்கொப்ப நாம் சேமித்துச் செயல்படுத்திட்ட பல தீய சக்திகளின் அமில சக்தியின் நிலை, இவ் ஏழாம் பிறப்பில் அதன் துரித சக்தியினால் இவ் ஏழு பிறப்பில் சேமித்த நற்சக்திகளையும் இத்துரிதம் கொண்ட தீய சக்தியின் நிலையுடன் கலந்து, இவ் ஏழாம் பிறப்பில் நம் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு,
1.நம் எண்ண சக்தியை தீய சக்திக்கு அடிபணிந்திட்ட நிலையில் நாம் ஆவி உலகில் பல காலம் சஞ்சரிப்பதினால்
2.அந்நிலையில், அந்நிலையின் குண நிலைக்கொப்ப மிருகங்கள் உடலில் ஏறியும் அங்ககீனமுற்ற குண நிலையிலும் பிறப்பிற்கு வருகின்றோம்.
நாமாய்ச் சேமித்து வழி சென்றிடும் நிலைதான் இந்நிலை. முதல் பாதம் இரண்டாம் பாதம் என்பது எல்லாம் ஒவ்வோர் உடலை ஏற்று அவ் உடல்களில் நாம் ஏற்படுத்திடும் சக்தி நிலைக்கொப்பத்தான் பிறவி நிலை பெறுகின்றோம்.
சூட்சும நிலைக்குச் சென்ற நிலையில் இந்த ஞான சக்தியின் தொடர்பு நிலை கொண்டு
1/இவ்வுலக நிலையில் “பற்றற்ற நிலைப்படுத்தி…
2.பக்தி நிலையின் சித்து நிலை பெற்ற பிறகுதான்” சூட்சம நிலைக்கே சென்றிட முடியும்.
இவ்வாத்மாவுடன் கூடிய இவ்வுடலில் வாழும் காலத்திலேயே நம் எண்ணத்தில் தீய அணுக்களின் சக்தி நிலையை நாம் அடக்கிப் பழகிடல் வேண்டும்.
கோபத்தையும் குரோதத்தையும் சஞ்சலத்தையும் சலிப்பையும் நம் எண்ணத்தில் வளர விட்டு ஜெபம் கொண்டால் அப்பக்தியில் எப்பலனும் நம் ஆத்மாவிற்குக் கூடுவதில்லை.
நம் ஆத்மாவுடன் அன்பு கொண்ட நல்லுணர்வையே வளரவிட்டால் அன்றி ஞான சக்தியின் தொடர் அறிவதும் கடினமே.
1.முதலில் நம்மையே நாம் உணர்ந்து நற்சக்திகளின் வழித்தொடர் பெற்று
2.ஞான வழியின் தொடரினால் அத்தொடர் நிலை கொண்டோரின் தொடர் சக்தியையும் பெற்று
3.இவ்வழியிலேயே இவ்வழித் தொடரினை அறிந்து சப்தரிஷியின் நிலை பெற்று
4.ஒளியின் ஒளியாய்க் கலந்து செயல்படும் நிலைதான் அவ் ஆண்டவன் நிலை பெறுவது.
இந்நிலையை உணர்ந்திடத்தான் முதல் பாதம் இரண்டாம் பாதம் என்றெல்லாம் வழிப்படுத்தி உணர்த்தி உள்ளனர்.
1.ஆண்டவனேதான் நாம்; அவனே தான் மற்ற எல்லாமுமே.
2.யாரும் நமக்கு அப்பதவி நிலையை அளிப்பதல்ல.
3.நாமேதான் நம் பதவியை அடைந்திடல் வேண்டும்.
ஆவி உலகில் உள்ள ஆத்மாக்களினால்… தன் அறிவு நிலையை வளர்ச்சியில் செயல்படுத்திட முடிந்திடாது. ஆசை நிலை நல்லுணர்வுக்குத் தோன்றினாலும் பிறப்பெடுத்து இவ்வுடல் கொண்ட ஆத்ம வழியில் தான் எச்சக்தியின் தொடரையும் நாம் அறிந்திடல் முடிந்திடும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாம் எந்தெந்தக் குணங்கள் கொண்டு எடுக்கின்றோமோ இவை அனைத்துமே இராமன் தான்.
இலங்கையைத் தாண்டுவதற்கு “ஒரு அணில் இராமனுக்கு உதவி செய்தது…” என்றும் அதனுடைய கடமையாக சிறு கல்களைப் போட்டுப் அந்தப் பாலத்தைக் கட்ட உதவியதாகக் காவியத்திலே காட்டியிருப்பார்கள்.
அதாவது புழுவிலிருந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சியில் வந்த நிலையினை அவ்வாறு சூட்சமமாகக் காட்டுகின்றார்கள்.
நாம் ஒரு அணிலாக உருப்பெற்றிருந்த போது… “தன்னைத் தற்காத்துக் கொள்ளும் சக்தியாக” அந்த உடலிலிருக்கும் போது சேர்த்துக் கொண்ட அந்த வினைகள் தான் மனிதனாக வளர்வதற்குக் காரணமாக அமைந்தது.
அதே சமயத்தில்…
1.மெய் உணர்வின் தன்மையை அந்த மெய் ஒளியைப் பெறக்கூடிய தகுதிக்கும்
2.நல்ல சிந்தனையின் நிலைகள் வளர்வதற்கும்
3.அணிலின் உடலாக நாம் இருக்கும் போது பெற்ற நல்ல உணர்வின் சக்தியின் பங்கும்
4.அதிலே உண்டு என்று காட்டுவதற்குத் தான் காவியத்தில் அதைக் காட்டப்பட்டது.
சீதாவை இராவணனிடமிருந்து மீட்க இலங்கைக்குள் இராமன் போவதற்கு அணிலும் சிறு கல்களைப் போட்டுப் பாதை அமைத்துக் கொடுத்து உதவி செய்தது என்று அந்தக் குட்டிக் கதையின் மூலம் நமக்குத் தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.
இதைக் கவனத்தில் கொண்டால்
1.இராவணனிடமிருந்து சீதாவை மீட்டிக் கொள்ள அணில் உதவி செய்ததென்றால்
2.இந்த உடலான ஆக்கிரமிப்பு சக்திகளிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ள
3.அந்த அணிலின் உடலில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வின் எண்ணங்களாக விளைந்து
4.உயிரின் தன்மை கொண்டு அந்த இராமன் என்று சொல்லுக்கு
5.“ஒரு இயக்கப் பொருளுக்குள் அந்த உணர்வின் சத்துக்கள் அது எப்படி உதவியது…?” என்று தெளிவாகக் காட்டுகின்றனர்.
ஏனென்றால் பல கோடிச் சரீரங்களை எடுத்து நாம் மனிதனாக வந்தாலும் ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வின் ஆற்றலை வளர்த்துத் தான் அது ஒரு குணமாக ஆனது.
குழம்பை வைக்கும் போது பல பொருள்களைப் போட்டு ஒரு சுவையாக அதை மாற்றிக் கொண்டு வருகின்றோம். அதைப் போன்று இந்த மனித உடல் பெறுவதற்கு 1008 குணங்களின் சக்தி தேவை.
சிந்திக்கும் தன்மை கொண்ட படைக்கும் சக்தியான மனிதனை உருவாக்கச் செய்வதும்… எடுத்துக் கொண்ட எண்ணத்தின் நிலைகள் கொண்டு நாம் பேசும் போது அந்த உணர்வின் தன்மையை அறிந்து கொள்ளக்கூடிய நிலைகளையும்… மற்றவர்களுக்குள் அது இயக்கக்கூடிய சக்தியாகப் பெற்றது என்றும் ஞானிகள் காட்டினார்கள்.
1.அதைத் தான் 1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு – ஊன் உடம்பு ஆலயம் என்ற நிலையில்
2.நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் ஊனாக மாறி… உடம்பாக மாறி… இந்த உடம்பு தான் ஆலயம் என்றும்
3.நாம் எடுத்துக் கொண்ட குணங்கள் நமக்குள் சக்தியாக இயங்குவதை
4.ஒவ்வொரு குணத்திற்கும் ஒவ்வொரு பெயரை வைத்து 1008 தெய்வ சக்திகள் என்று வைத்தார்கள்.
இவை அனைத்தையும் உருவாக்கியது யார்…? நம் உயிர் தான். அவன் தான் கடவுள்.


“நல்ல மழை பெய்ய வேண்டும்” என்று தினமும் நாம் தியானிக்க வேண்டும்
இப்பொழுது நாம் “மழை இல்லை… மழை இல்லை…” என்று தான் சொல்லிப் பழகுகின்றோம். காரணம்… பூமிக்கு அடியில் உள்ள நீர் எல்லாம் போய்விட்டது. உறிஞ்சி எடுத்து எடுத்து எல்லாம் போய்விட்டது… “சில பகுதிகளில்…”
ஆயிரம் அடி ஆழத்திற்குப் போர் போட்டாலும் கூட தண்ணீர் காணாமல் போகின்றது. அந்த அளவிற்கு வந்து விட்டது.. இனி இருக்கக்கூடிய காலமோ அணைக்கட்டுகளில் தண்ணீர் இல்லாது போகலாம். அதுவும் இன்னும் கொஞ்சம் இரண்டு மூன்று மாதங்கள் போனால் எப்படியோ தெரியவில்லை.
மாடு கன்றுகளுக்குக் கூட சில இடங்களில் தண்ணீர் இல்லை. நமக்கே தண்ணீர் இல்லை. ஆகவே
1.எது எப்படி இருந்தாலும் மனதை நன்றாக வலுப்படுத்தித் தியானிப்போம்.
2.இதற்காக இரவு படுக்கும் பொழுது ஒரு பத்து நிமிடம் நல்ல மழை பெய்ய வேண்டும் நாடு செழிக்க வேண்டும் என்று சிறிது நேரம் தியானியுங்கள்.
ஓம் ஈஸ்வரா குருதேவா…!
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் கலந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்திட அருள்வாய் ஈஸ்வரா என்று சொல்லி உங்கள் கண்ணின் நினைவை இதே மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர வேண்டும் மேகங்கள் கூடி நல்ல மழை பெய்யக்கூடிய அந்தச் சக்தி பெற வேண்டும் என்று சொல்லி ஏங்கித் தியானியுங்கள்.
1.உங்கள் நினைவனைத்தும் அந்த மேகத்தில் செலுத்துங்கள்
2.இந்த மாதிரி செலுத்தும் பொழுது உங்கள் உடலில் “ஒரு குளிர்ந்த காற்று வரும்…” வந்தது என்றால் ரொம்ப நல்லது.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
உங்கள் நினைவெல்லாம் வான் வீதியில் செலுத்தி…
1.மேகக் கூட்டங்கள் கூட வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
2.அதிலே அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
இந்த மாதிரி நாம் வெளியிடக்கூடிய உணர்வுகள் எல்லாமே ரேடியோக்களில் எப்படி ஒலி அலைகளைப் பரப்புகின்றார்களோ இதே மாதிரி நாம் வெளியிடும் அலைகளைச் சூரியன் கவர்கின்றது.
இதே உணர்வு கூடக் கூட எதிலே செலுத்துகின்றோமோ… அதிலே பதிவாகிவிடும். மழை நீரில் இருந்து தான் எல்லாம் விளைகின்றது.
1.அதனால் இதை அங்கே தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது.
2.நாம் இந்த மூச்சுலைகளை விடப்படும் பொழுது நாம் எதை நினைத்தோமோ அந்த அலைகள் கூடி
3.மழை பெய்யும் பொழுது தாவர இனங்களில் பட்டு நல்ல தாவர இனங்களாக விளைகின்றது.
நம்முடைய உணர்வுகள் மோதி நாம் எந்த இடத்தில் எடுத்துச் செயல்படுத்துகின்றோமோ அங்கே மழை வரும். இதே மாதிரி உங்களுடைய மூச்சும் பேச்சும் நாடு செழிக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
சும்மா இதைக் கேட்டு விட்டுப் போனது என்று இல்லாமல்… “இரவு படுக்கும் போது” ஒரு ஐந்து நிமிடமாவது இதே மாதிரி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் வானில் பரவி மேகங்கள் கூட வேண்டும் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று எண்ணுங்கள்.
முந்திக் காலத்தில் எல்லாம் காடுகளுக்குச் செல்வார்கள். தண்ணீரைக் குட்த்தில் கொண்டு போய் ஊற்றிவிட்டுத் திரும்ப வரும்பொழுது மழையைக் கூட்டிக் கொண்டு வருவார்கள்.
1.முன்னாடி வந்து கொண்டிருப்பார்கள் மழை பெய்யும்.
2.இந்த மாதிரி ஒரு தெய்வீகப் பண்பு கொண்ட நமது நாடு தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி,
அந்தக் காலம் எல்லாம் கடந்து போய்விட்டது.
வரக்கூடிய விஷக்காலங்களில் இனியாவது நாம்
1.நமது வீடு நன்றாக இருக்க நமது ஊர் நன்றாக இருக்க நமது உலகம் நன்றாக இருக்க
2.தினம்தோறும் சிறிது நேரம் பிராத்தனை செய்தால் மிகவும் நல்லது.
வீடும் ஊரும் உலகமும் எல்லாம் நமக்குள் இருக்கின்றது. எல்லாருடைய உணர்வும் நமக்குள் இருக்கின்றது. ஊரில் இருக்கக்கூடிய மக்களின் உணர்வு அனைத்தும் நம் உடலுக்குள் இருக்கின்றது… யாரும் பிரிந்து செல்லவில்லை.
ஆகவே எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக மழைக்காக தியானமிருங்கள். இந்த நாடு நலமாக இருக்க வேண்டும் என்று அ;லைகளைப் பாய்ச்சுங்கள். உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.
1.அருளைப் பெறுங்கள்… இருளை அகற்றுங்கள்.
2.அகஸ்தியன் கண்ட வழியில் நாம் உலகைத் தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ்வோம்
3.உலக மக்கள் அனைவரும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று நாம் தியானிப்போம் தவமிருப்போம்.

அபிராமிபட்டர்
இவ்வுலக நியதியே இக்கலியின் இக்காலத்தில் மாற்றம் கொள்ளப் போகும் உண்மை நிலையை நம் தியான முறைப்படி உணர்த்துகின்றோம்.
1.ஒளியாய் ஒவ்வோர் ஆத்மாவும் எந்நிலையில் ஒளிர்ந்திடலாம்…? என்பதனை
2.ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படும் வழிமுறைகளை நாம் அறிந்த வழியில் உணர்த்துகின்றோம்.
இப்பூமியிலே உயிரணுவாய்த் தோன்றி உயிராத்மாவான இன்றும் தன் உடலை அழியா வண்ணம் ஒளியுடனே நினைத்த நேரத்தில் கலந்து செயல் கொள்ளும் கொங்கணவரும் போகரும் இவ்வழி தொடரை எந்நிலையில் பெற்றார்கள்…?
இப்பூமியில் அபிராமிப்பட்டராய் அபிராமி அந்தாதி இயற்றிய அவ் அபிராமிபட்டர் அம்மாவாசை நாளில் பௌர்ணமி நிலவைக் காண முடியும் என்று உணர்த்தி பூரணச் சந்திரனைக் காணச் செய்தது எந்நிலையில்…?
சந்திர நிலவா அன்று காட்சி அளித்தது…?
அபிராமிப்பட்டராய் வாழ்ந்த அவ்வாத்மா
1.தன் எண்ணத்தைத் தன் உடலில் உள்ள ஒவ்வோர் அணுவையும் அச்சக்தி மாதாவின் செயல் சக்தியின் உண்மைக்கே அடிபணியச் செய்து
2.அவ்வுண்மையின் சக்தியையே அன்பு கொண்டு பூஜித்து,
3.தன் எண்ணத்திலும் உணர்விலும் எவ்வணுவின் சக்திக்கும் அடிபணிய வைத்திடாமல் ஒரே சக்தி ஜெபத்தை ஈர்த்து வழி வந்த நிலையில்
4.அமாவாசையில் பௌர்ணமி நிலவைக் காண முடியும் என்று அவ்வரசரின் எண்ண நிலையில்
5.தெய்வ சக்தியை ஓங்கிக் காட்டிடல் வேண்டும் என்று ஒரு நிலை கொண்ட தீவிர ஜெப சக்தியினால்
6.அவ்அபிராமியின் மேல் அவர் துதித்துப் பாடிய அவரின் ஒரு நிலை கொண்ட எண்ண சக்தியே
7.அவர் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் பிரிந்து ஒளியாகிக் கூடி “பௌர்ணமி நிலவாய் அனைவரும் காணும் சந்திர பிம்பமாய்க் காட்சி தந்தது…”
அபிராமிப்பட்டரின் ஆத்மா பெற்ற சக்திதான் அவ்வாத்மாவே நிலவாய் ஒளிர்ந்தது. அவரின் கூடுதான் அங்கு பிம்ப நிலையில் இருந்தது.
சக்தியின் தேவியையே தன் ஆத்மாவில் ஐக்கியப்படுத்தி செயல்படுத்திக் காட்டினார்.
1.போகரின் நிலை ஒளியுடன் முருகா என்ற உள்ளமுருக ஒலிக்கும் நிலைக்கெல்லாம் ஒளியாய் நல்லருளைச் செலுத்தும் நிலையும் இதுவே.
2.கொங்கணவரின் நிலையும் இந்நிலைக்குகந்ததே…!
3.தன் ஆத்மாவின் சக்தியையே ஒளியுடன் கலந்து ஒளிரும் சக்தி இவர்களுக்கு எல்லாம் உண்டு.
ரிஷிகளும் முனிவர்களும் மந்திரம் செய்யவும் தந்திரம் செய்யவும் தன் நிலையில் சக்தி கொண்டு செயலின் பயனைப் பெறுவதாகவும் மக்களின் எண்ணத்தில் உள்ளது.
ஆனால்… அச்சப்தரிஷிகளின் நிலையினால்தான் இப்பூமியின் சக்தி நிலையே பெருகி வருகிறது.
1.இன்றளவும் மனித ஆத்மாக்கள் இந்நிலை கொண்டு வாழ்வதற்கே நம் சப்தரிஷிகளின் செயலினால் தான் இப்பூமியின் நிலையே இன்றுள்ளது.
2.அவர்களும் நம்மைப் போல் வாழ்ந்தவர்கள் தான்.
3.நாமும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தொடர்பு கொண்டு வாழ்ந்தவர்கள் தான்.
4.நம் நிலையில் வழி வந்த நிலைதான் இன்று வாழ்ந்திடும் நிலை… அவர்களின் தொடர்பை ஏற்றே இனி வழி வந்திடுவோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒருவனைத் தொலைந்து போக வேண்டும் என்று சொன்னால் போதும். அதை அவர் கூர்ந்து கவனித்தால் ஊழ்வினை என்ற வித்தாக அவருக்குள் பதிவாகி விடுகின்றது.
என்னை இப்படிச் சொன்னான் என்ற நிலையில்…
1.அவனைப் பார்… நான் என்ன செய்கிறேன்…? என்று என்ற உணர்வுகள் அங்கே விளைந்து
2.அவன் நல்ல செயல்களை எல்லாம் ஒடுக்கிவிட்டு இவனைத் தாக்க வேண்டும் என்ற உணர்ச்சிகளே வந்துவிடும்.
அவருடைய உடலுக்குள் இருக்கும் நல்ல உணர்வையும் வளர்ப்பது இல்லை. இவன் சொன்ன நிலையை வேதனையாக எண்ணி
1.”இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும்” என்ற உணர்வை அங்கே ஊட்டி
2.அவனுக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளை எல்லாம் இரண்டில் ஒன்று பார்த்துவிடும்.
ஒருவன் “தீங்கே விளைவிக்கின்றான்…” என்றால் இந்த மனித உடலுக்குள் விளைய வைத்த இந்த எண்ணம் அங்கே நுழைந்து விடுகின்றது.
பின்… இவன் உடலிலே விளைந்தது திருப்பி அங்கிருந்து வந்தவுடனே…
1.அவ்வளவு திமிரா…? இரு நான் பார்க்கின்றேன்… என்ற இந்தத் தீய உணர்வலைகளை விளைய வைத்து
2.இந்த உணர்வின் நிலைகள் உடலுக்குள் ஜீவான்மாவாக மாறுகின்றது.
3.சொல்லாக அது வரப்படும் பொழுது பரமாத்மாவாக மாறுகின்றது.
பரம் என்பது பூமி. சூரியனின் காந்த சக்தி… நாம் சொன்ன உணர்வலைகளைக் கவர்ந்து இப்படிப் பரமாத்மாவாக மாற்றுகின்றது.
பரமாத்மாவாக மாற்றிய நிலையில் இது சிறுகச் சிறுக விளைந்து மழை பெய்யும் மேகத்திற்குள் கொண்டு சென்ற உடனே நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தையும் அழிக்கின்றது.
தொலைந்து போகும் மழை இந்த நேரத்தில் தானா வர வேண்டும் என்று மழையைச் சொல்கின்றோம். இதைச் சாதாரணமாக வேடிக்கையாகச் சொல்லலாம். ஆனால் மழை பெய்வதைத் தடுக்கும் சக்தியாக அது மாறுகிறது.
ஏனென்றால் மனிதன் என்பவன் முழு முதற்கடவுள் என்று அதற்குத் தான் விநாயகனைப் போட்டுக் காட்டியுள்ளனர் ஞானிகள்.
1.யானையின் தலையைப் பொருத்தி மனித உடலைப் போட்டு
2.நாம் புழுவிலிருந்து மிருகமாகி மிருகத்திலிருந்து தன்னைக் காத்திடும் உணர்வின் எண்ண வலுவாகி
3.அந்த எண்ணத்தின் வலுக் கொண்டு மனித உருவை உருவாக்கியது நமது உயிர் என்ற நிலையை
4.எண்ண வலு கொண்டு எதையும் சாதிக்கும் அவ்வளவு வல்லமை பெற்ற இந்த நிலையை
5.அதனின் வலு துணை கொண்டு மனிதனைக் காட்டிலும் மிக சக்தி வாய்ந்த உணர்வை ஈர்த்து
6.நம் உடலுக்குள் இணைக்கும் சந்தர்ப்பம் மனித உடல் பெற்ற நிலையில் நம் ஆறாவது அறிவிற்கு உண்டு.
அதனின் துணை கொண்டு மெய் ஞானிகள் இந்த வாழ்க்கையில் வென்று சென்ற அந்த உணர்வை நாம் கவர்ந்து நம் உடலுக்குள் அதை இணைப்போம் என்றால் அந்தச் சந்தர்ப்பம் மனித வாழ்க்கையில் வரும் நஞ்சினை நீக்கும் நிலை வருகின்றது.
நஞ்சின நீக்கும் உணர்வின் ஆற்றலாக நாம் வெளிப்படுத்துவதை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பரமாத்மாவாக மாற்றிக் கொள்கின்றது.
நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஜீவாத்மாவாக விளைந்து அதனின் உணர்வு பெருக அந்த ஆற்றலின் வலிமை கொண்டு
1.நாம் எதைப் பரமாத்மாவில் கலக்கச் செய்தோமோ
2.அதிலே பெருகுவதை எடுத்துத் தனது ஆத்மாவாக மாற்றுகின்றது.
நாம் எண்ணிய உணர்வின் சத்து நம் உடலுக்குள் விளைந்து உயிராத்மாவில் விளைந்து ஒளியாக மாறுகிறது. நாம் ஒளி உடல் பெறுகின்றோம்.

Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.