மக்கள் தொகை அதிகமானதன் காரணம்

மக்கள் தொகை அதிகமானதன் காரணம்

 

ஒவ்வொரு பிறவியிலும் பல உயிரணுக்களின் நிலையுடன் வாழ்ந்த நாம் அவ்வுடலை விட்டு நம் ஆத்மா பிரிந்து செல்லும் பொழுது நம் ஆத்மாவுடன் கூடிய “சப்த அலையும்… சத்து நிலையும் தான்…” நம் உயிராத்மாவுடன் இஜ்ஜென்மத்திற்கு வரும் பொழுதும் வருகிறது

இக்காற்றினில் பல நிலைகொண்ட ஆவியான உயிரணுக்கள் சுற்றிக் கொண்டேதான் உள்ளன.

1.பிறவி எடுக்கும் ஆசையிலும்
2.தன் எண்ணத்தைச் செயலாக்கும் ஆசையிலும்
3.குடும்பத்தைக் காக்கும் பற்றுக் கொண்ட ஆசையிலும்
4.பழிவாங்கும் வெறி நிலை கொண்ட குரோதத் தன்மையிலும்
5.வாழும் காலத்தில் அகால மரணமடைந்து அவதியுறும் நிலையிலும்
6.பல நிலைகொண்ட ஆவியான உயிரணுக்கள் சுற்றிக் கொண்டே உள்ளன.

இவ்வுலகில் வாழ்ந்திடும் மனிதர்களைக் காட்டிலும் மற்ற ஜீவராசிகளைக் காட்டிலும் அதிக நிலையில் படர்ந்த நிலையில் பல உயிரணுக்கள் சுற்றிக் கொண்டே உள்ளன.

புதிய புதிய மனிதன் பிறக்கிறானா…? அப்படி என்றால் போன ஜென்மம் என்பதின் நிலையென்ன…? ஆதியில் வந்த உயிரணுக்கள்தான் நாம் எல்லாம் என்றால் ஆதி காலத்தில் மனிதர்களின் ஜனத்தொகை குறைவு…! இப்பொழுது அதிகமல்லவா…?

ஆவி உலகிலும் பல உயிரணுக்கள் சுற்றிக் கொண்டே உள்ளனவல்லவா என்று எண்ணுவீர்.

இவ்வுலகம் கல்கியில் தோன்றிக் கலியில் முடியும் காலத்தில் வந்த உயிரணுக்கள் மட்டும் அல்ல… இவ்வுலகம் தோன்றிய நாள் கொண்டே வந்த உயிரணுக்கள்தான் எல்லாமே.

படர்ந்துள்ள உயிரணுக்கள் எல்லாம் உலகம் மாறுபடும் நிலையிலும் இவ்வுலகுடனே சுற்றிக் கொண்டேதான் வருகின்றன.
1.புதிய புதிய உயிரணுக்கள் வளர்ந்து கொண்டேதான் உள்ளன
2.இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் உஷ்ண அலைகளைக் கொண்டு பல கோடி உயிரணுக்கள் அன்றன்று வளர்ந்து கொண்டேதான் உள்ளன.
3.இம்மனித உயிரணுவில் இருந்து பல உயிரணுக்கள் உதித்து வெளிப்படுத்துகின்றன.
4.ஒவ்வோர் உடலிலிருந்தும் அவ்வுடல் அழிந்து ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் பல உயிரணுக்கள் அவ்வுடலில் இருந்தே வளர்ச்சி பெற்று பல உயிரணுக்கள் உதிக்கின்றன.

ஆதியில் வாழ்ந்த மனித இனம் குறைவாயிருந்தாலும் அம்மனித இனத்தில் ஒவ்வோர் உடலும் அதன் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு அவ்வாத்மாவுக்குச் சொந்தமான ஆவி நிலையான சத்து நிலையும் சப்த அலையும் அதனுடன் சென்ற பிறகு இவ்வுடலை நாம் அடக்கம் செய்யும் நிலையில் இவ் உடலில் இருந்து பூமியில் இருந்து வெளிப்படும் உஷ்ண அலையின் ஈர்ப்பினால் அவ்வுடலில் இருந்து பல உயிரணுக்கள் உயிர் பெற்று புழுவான நிலையில் படர்ந்துள்ளன.

மனித உடலில் இருந்து உயிர் பெற்ற உயிரணுக்கள் அந்நிலைகொண்ட சக்தியையே தன்னுள் ஈர்த்து அதே நிலை கொண்ட சுவாசங்களைப் பெற்று மனிதக் கர்ப்பத்திற்கு வந்து மனிதனுடன் வந்து விடுகிறது.

ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவ் ஒரே மனிதன் மட்டும் பிறவி எடுத்து வந்த நிலையல்ல இப்பொழுது உள்ள நிலை.

1.ஒவ்வொரு மனிதனும் அவன் இறந்த பிறகு
2.அவனிலிருந்து பல உயிரணுக்கள் மனிதனாகப் பிறவி எடுத்து
3.மனித இனமும் வளர்ந்து கொண்டே வருகிறது.

அதைப்போலத்தான் மற்ற ஜெந்துக்களின் உயிரணுவின் நிலையும்.

நம் முன்னோர்கள் இதன் நிலை அறிந்து தான் உடலை அடக்கம் செய்யும் நிலையிலிருந்து எரிக்கும் நிலையை ஏற்படுத்தினார்கள்.
1.உடலை எரிக்கும் பொழுது அவ்வுடலில் உள்ள ஆத்மா மட்டும்தான்
2.அதன் ஆவி நிலையான சத்து நிலையைத் தன்னுள் ஈர்த்துக் கொள்கிறது
3.உடலில் உள்ள நீர்ச் சத்துக்கள் அதை எரிக்கும் நிலையில் ஆவியாகி நீருடன் நீர் கலந்து விடுகிறது
4.தகனம் செய்த உடலிலிருந்து புதிதாக உயிரணுக்கள் தோன்றுவதில்லை.

இதன் உண்மையை அறிந்துதான் நம் முன்னோர்கள் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் அவ்வுடலைப் பல நிலையில் பக்குவப்படுத்தும் வழி காட்டினார்கள்.

உயிரணுக்கள் பெருகும் நிலை புரிந்ததா…?

Leave a Reply