நான் (ஞானகுரு) சொன்ன தியானத்தைச் செய்து என்ன வந்தது…? என்கிறார்கள்

நான் (ஞானகுரு) சொன்ன தியானத்தைச் செய்து என்ன வந்தது…? என்கிறார்கள்

 

மூன்று லட்சம் பேரைச் சந்தித்து குருநாதர் காட்டிய வழியில் பல வருட காலமாக அனுபவபூர்வமாகப் பெற்ற உண்மைகளைத் தான் உங்களிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

இப்பொழுது நல்ல உணவை உட்கொள்கின்றேன்… ஆனால் அன்று அப்படி அல்ல. என் இரண்டு காலிலேயும் 28 ஆணி இருந்தது. ஆனால் நீ செருப்பு போடக்கூடாது என்று குருநாதர் சொல்லி விட்டார்.

ஒரு சின்னக் கல் மீது காலை வைத்தால் போதும்… அ…ஆ…! என்று தலை உச்சி மயிர் நட்டமாக நிற்கும் பாத்ரூமில் சிறிது நேரம் அதிகமாக உட்கார்ந்திருக்க முடியாது… எரிச்சலாகும்.

கால் ஆணி உள்ளவரிடம் கேட்டால் தெரியும் என்ன வலி வேதனை எப்படி இருக்கிறது என்று…!

இத்தனையும் பொறுத்துக் கொண்டு
1.உலகம் எப்படி இருக்கின்றது…? என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்று குருநாதர் சொல்லி விட்டார்
2.ஒவ்வொரு குடும்பமும் எத்தனை பாடு படுகின்றது
3.குடும்பத்தில் உள்ளவர் யாராவது இறந்தால் அங்கே என்ன நிகழ்கின்றது…?
4.இறந்தவரின் ஆன்மாக்கள் எங்கே… எப்படி… என்ன செய்கின்றது…? என்று அனுபவ ரீதியிலே தெரியும்படி செய்தார்.

கஷ்டப்பட்டுத் தான் nhaan எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு வந்தேன். ஆனால்
1.உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது நான் சொல்லும் முறைப்படி செய்து அதை நீக்கிக் கொள்ளுங்கள்
2.உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றேன்
3.அதற்குண்டான முறைகளையும் சொல்லி… வழிகளையும் காட்டி சக்திகளைப் பெறும்படி செய்தாலும் “ஏற்பதற்கு ஆள் இல்லை…!”

“தியானத்தைக் கடைபிடிக்கிறோம்… என்று தியான வழியில் வருகின்றார்கள்…! சக்திகளைக் கொடுத்து… உங்களுக்கு வரக்கூடிய தீமைகளை இப்படி மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்… யாரும் எடுப்பதில்லை.

1.”சாமி (ஞானகுரு) எனக்குச் செய்து தர மாட்டேன் என்கிறார்…” என்ற இந்த உணர்வுடன் தான் இருக்கிறார்கள்
2.சாமி சொன்ன தியானத்தைச் செய்து என்ன வந்தது…? என்று (சாதாரணமாக) கேட்கின்றார்கள்.

ஆக மொத்தம் நான் சொல்வதை… “நீங்கள் எடுத்தால் தானே” அது நடக்கும். உணவைக் கொடுத்த பின் அதைச் சாப்பிடவில்லை என்றால் பசி எப்படித் தீரும்…?

பாதாமைச் சாப்பிட்டால் உடலுக்குச் சத்துதான். ஆனால்
1.சாப்பிட வேண்டும் என்று ஆசையை மட்டும் பட்டுக் கொண்டு
2.சாப்பிட முடியாதபடி (சாப்பிடாதபடி) வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்…?
3.அந்தச் சத்து உங்களுக்குக் கிடைக்காது… விஷம் தான் வளரும்…!

ஒவ்வொரு நொடிப்பொழுதும் இந்த உயர்ந்த சக்தி நீங்கள் பெறுவதற்கு எத்தனையோ வேலைகளைச் செய்கின்றேன்.

யாம் சொன்ன முறைப்படி செய்து ஒரு சமயம் நல்லதாக ஆன பின் மீண்டும் (இன்னொரு) சிக்கல் வந்தால் அதே முறைப்படி செய்து அதிலிருந்து மீண்டு கரையேறுவதற்கு ஆள் இல்லை.

காரணம் அந்தப் பழக்கம் வரவேண்டும் என்பதற்குத் தான் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

எத்தனையோ பேருக்குத் துயரங்களும் துன்பங்களும் வரும் பொழுது… அதிலிருந்து மீட்டி விடுகின்றோம்… அவர்கள் எப்படியும் தெளிந்து வருவார்கள் என்று…! அந்த எண்ணத்தில் தான் இதைச் செயல்படுத்துகின்றோம்

ஆனால் அதற்காக வேண்டி
1.என்னுடைய சக்தியை நான் எல்லா நேரத்திலும் விரயம் செய்ய முடியாது
2.உங்களுக்கு வழி அமைத்துக் கொடுத்தாலும் கரை ஏறி வருவதற்குண்டான தன்னுடைய சுய பலம் வேண்டும் அல்லவா
3.”எல்லாம் சாமி பார்த்துக் கொள்வார்” என்றால் சாமி எதைப் பாப்பார்…?

நீங்கள் கஷ்டப்படுவது துன்பப்படுவது இதையெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருந்தால்… அந்தத் தீமையிலிருந்து தப்புவதற்குத்தான் நான் பார்க்க முடியும். உங்களை எப்படிக் காப்பது…?

யாம் இப்பொழுது கொடுக்கக்கூடிய வாக்கின் பிரகாரம் ஒவ்வொரு நொடிப்பொழுதும் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து ஆத்ம சுத்தி செய்து வாழ்க்கையில் அதைக் கடைப்பிடித்து… அந்தந்த நேரத்தில் சரியாகப் பயன்படுத்தித் தீமையிலிருந்து விடுபடும் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்.
1.துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடையுங்கள்
2.இதிலே ஒன்றும் கஷ்டம் இல்லை
3.சிறிது காலம் செய்து பழகிக் கொண்டாலே போதுமானது.

தொழிலிலே ஆசை மற்றதில் ஆசை என்று அதை எண்ணி ஏங்கி… கடைசியில் அது நிராசையாகி விட்டால் வேதனை தான் வருகிறது வேதனை வளர்ந்தால் சிந்தனை இழக்கப்படுகின்றது.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் கண்டிப்பாக யாம் சொன்ன முறைப்படி நீங்கள் ஆத்ம சக்தி செய்ய வேண்டும். ஆன்மாவைத் தூய்மைப்படுத்திவிட்டு அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன…? என்று சிந்தனை செய்ய வேண்டும்.

அதற்குண்டான உபாயங்கள் நிச்சயம் வரும். அந்த உயர்ந்த சிந்தனைகள் வருவதற்குத் தான் மணிக்கணக்காக உங்களுக்கு உபதேசிக்கிறோம்.
1.குருநாதர் எனக்குக் காட்டிய வழி முறைகளை எல்லாம்
2.உங்களுக்குப் பல வகைகளிலும் எடுத்துக் காட்டிக் கொண்டே வருகின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Leave a Reply