பெரும்பகுதியான பெண்களுக்குக் கை கால் குடைச்சல் இருப்பதன் காரணம் என்ன…?

பெரும்பகுதியான பெண்களுக்குக் கை கால் குடைச்சல் இருப்பதன் காரணம் என்ன…?

 

பெண்கள் பெரும்பகுதி இரக்க மனம் கொண்டவர்கள் “அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்…” என்று எத்தனையோ நல்லதைச் செய்வார்கள்.

ஆனால் அவர்களிடம் பார்த்தோம் என்றால் வேதனை… வேதனை… வேதனை… என்று
1.நான் இப்படிச் செய்தேன்… அவர்கள் அப்படிச் செய்கின்றார்கள்…
2.நான் எல்லாவற்றையும் கொடுத்தேன்… ஆனால் என்னை ஏமாற்றுகிறார்கள்…
3.அவர்கள் இப்படி… இவர்கள் இப்படி… என்றும் என் பிள்ளைக்கு இந்த மாதிரி இருக்கின்றது என்றும்
4.இப்படி அடிக்கடி வேதனையாக எண்ணிக் கொண்டிருப்பார்கள்
5.அதனால் அவர்களுக்கு கை கால் குடைச்சலாக இருக்கும் 90% பெண்களுக்கு நிச்சயம் இது இருக்கும்
6.பிடரி வலி… இடுப்பு வலி எல்லாமே இருந்து கொண்டே இருக்கும்.

காரணம் என்ன என்றால் எதை எடுத்தாலும் “வேதனை வேதனை வேதனை வேதனை…” என்று தன்னை அறியாமலே உருவாக்கி விடுகின்றார்கள்.

என்னை குருநாதர் காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அழைத்துச் சென்று பல உண்மை நிலைகளைக் காட்டித் தீமை எவ்வாறு வருகிறது…? நீ அதற்கு என்னென்ன செய்ய வேண்டும்…? தீமை நீக்கக்கூடிய சக்தியை எப்படி எடுக்க வேண்டும்…? என்று பல அனுபவங்களைக் கொடுத்தார்.

தர்மம் எப்படிச் செய்ய வேண்டும்…? தர்மம் செய்தால் அது எந்த நிலையாகும்…? தர்மம் செய்தாலும் நம்மைக் காத்துக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்…? என்றும் காட்டினார். குருநாதர் காட்டிய அந்த அருள் வழியினைத் தான் உங்களுக்கும் காட்டுகின்றோம்
1.தீமை தனக்குள் வராதபடி தடுக்கவும்…
2.தீமை வரும் பொழுது சுகாரித்து… உபதேசித்த அருள் உணர்வுகளை நினைவுக்குக் கொண்டு வந்து
3.அதைச் சமாளிக்கக்கூடிய எண்ணம்… அந்த ஞானம் உங்களுக்குள் வரவேண்டும் என்பதற்குத் தான் இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருவது.

உங்களைத் திட்டியவர்களை நினைக்கும் போது உங்களுக்கு எப்படிச் சங்கடம் வருகின்றதோ… இதே மாதிரி சங்கடம் வரும் போதெல்லாம்
1.சாமி சொன்னார்… சங்கடத்தை இப்படி மாற்ற வேண்டும் என்று சொன்னார் என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் கிடைக்கப் பெற்று அதை மாற்றி அமைக்கக்கூடிய எண்ணம் நிச்சயம் வரும்.
3.அப்படி வரச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே கொடுப்பது.

தனித்து ஒருவரால் அந்தச் சந்தர்ப்பத்தில் எடுக்க முடிவதில்லை. உங்களுக்கு அதை மீண்டும் மீண்டும் இங்கே ஞாபகப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

வாழ்க்கையில் குறைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் அவர் இப்படி.. இவர் இப்படி… என்று பல விதமான நிலைகளில் அதை அதிகமாக்கி… வேதனையை அதிகமாகக் கூட்டி… அன்றைக்கு நாம் செய்ய வேண்டிய நல்ல காரியங்களையும் கெடுத்து விட்டு சும்மா உட்கார்ந்து கொண்டிருப்போம்.

இந்தக் கதையைப் பேசி அன்றையப் பொழுது போய்க் கொண்டிருக்கும்
1.குழந்தை வீட்டிலே சில்… சில்லென்று அழுக ஆரம்பித்தால் அதற்கு இரண்டு அடி கொடுப்போம்.
2.பெரியவர்கள் யாராவது நம்மைக் கூப்பிட்டால் இந்தா வர்ரேனே… என்று இந்தச் சொல் எதிர்மறையாகச் செல்லும்.
3.நான் கூப்பிடுகின்றேன்… என்ன இப்படிப் பேசுகிறாய் என்று எல்லா விதமான வம்பும் வந்துவிடும்
4.அந்தச் சொல்லுக்குள் “தொனி” மாறிக் கொண்டே வரும்… நாம் அல்ல…!

ஏனென்றால் இந்த உணர்வுகள் இந்த வேலையைச் செய்கின்றது இதுகள் எல்லாம் நமக்குள் அறியாமல் இயக்கக்கூடிய நிலைகள். காரணம்…
1.நாம் சாப்பிடக்கூடிய ஆகாரத்தில் நஞ்சு
2.நாம் குடிக்கும் தண்ணீரிலும் நஞ்சு
3.நாம் சுவாசிக்கும் காற்றிலும் நஞ்சு… மழை பெய்தாலும் நஞ்சு.

நாம் விவசாயம் செய்யும் பயிர்களில் பூச்சிகளைக் கொல்வதற்கு என்று பூச்சிக் கொல்லி மருந்துகளைப் போடுகிறோம். “நல்ல உணவுப் பயிர்களை நாம் வளர்க்கலாம்…!” என்று விரும்புகின்றோம்.

பூச்சிகள் சாகின்றது… ஆனால் விஷம் அதற்குள் படுகின்றது. சாகும்போது அந்த உடலில் அது பட்டு அது சுவாசத்திற்குள் போய் பூச்சிகள் இறந்தாலும் “உயிரிலே இந்த நஞ்சு சேர்ந்து கொள்கின்றது…”.

அடுத்து அதே இலையின் சத்தை அதே உயிர் அதிலிருந்து மீண்டும் கவர்ந்து உடல் பெறுகின்றது. எந்தச் சத்துடன் கலந்து… எந்த விஷத்தின் தன்மை இந்த உயிரான காந்தம் அந்த உடலில் தன்மை கவர்ந்து பெற்றதோ… அந்த விஷத்தின் தன்மை பெற்ற பிற்பாடு
1.அடுத்து நாம் பூச்சிகளைக் கொல்ல மருந்தைப் போட்டாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்கின்றது.
2.நீ வா தம்பி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அதையும் சத்தாக மாற்றி கொள்கிறது
3.ஏனென்றால் இது எல்லாம் பரிணாம வளர்ச்சியில் வரக்கூடியது.

ஆனால் மனிதனோ நாம் உயர்ந்த குணங்கள் கொண்டவர்கள். உதாரணமாக பால் நம் உடலுக்குச் சத்து கொடுக்கக்கூடியது அதில் விஷத்தைப் போட்டுக் குடித்தால் நம்மைக் கொல்கின்றது.

அதைப் போல்
1.நம் நல்ல குணத்துடன் வேதனை என்ற விஷத்தையும் சேர்த்து அடிக்கடி எண்ணப்படும் பொழுது நல்ல குணத்தை அது கொன்று விடுகிறது.
2.விஷத்திற்குள் நல்ல குணங்கள் சிக்கிவிட்டால் வேதனையைத் தான் நாம் பட வேண்டி இருக்கும்.
3.நாம் நல்லதை எண்ணினாலும் கூட அந்தக் கடுகடுப்புடன் பேசக்கூடிய நிலை வருகின்றது… கடுகடுப்பாகத் தான் நாம் இருக்கின்றோம்.

அதைச் சுவாசிக்கும் போது கிட்னி இரத்தத்தில் கலந்து வரக்கூடிய இந்த கடுகடுப்பான விஷத்தின் தன்மையை அது வடிகட்ட முடியாது போகின்றது. இந்த உணர்வுகள் இரத்தத்துடன் கலக்கப்பட்டு கை கால் குடைச்சலாக வருகிறது.

விஷத் தன்மைகள் உடல் முழுவதும் பரவினால் உப்புச் சத்தைப் பிரிக்க முடியாது போகின்றது. அதே போன்று சர்க்கரையையும் பிரிக்க முடியாது சென்று விடுகிறது.

இதை எல்லாம் நாம் மாற்ற வேண்டும் அல்லவா…!

Leave a Reply