எம்முடைய உபதேசங்களை “எழுத்து வடிவிற்குக் கொண்டு வரவேண்டியதன்… இரகசியம்”

எம்முடைய உபதேசங்களை “எழுத்து வடிவிற்குக் கொண்டு வரவேண்டியதன்… இரகசியம்”

 

நாம் எப்பொழுது தீமைகளைக் கண்டாலும் பத்திரிக்கை டி.வி.யில் பார்த்தாலும் கேட்டாலும் அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று புருவ மத்திக்கு நினைவைக் கொண்டு போய் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து அதை மாற்றிப் பழகுதல் வேண்டும்.
1ஆனால் பழக்கம் இல்லை என்கிற போது
2.முதலிலே மாற்றும் எண்ணம் வராது.

பிற உணர்வுகளைக் கவர்ந்து கொண்ட நிலையில் அந்தத் தீமையின்பால் நினைவுகள் செல்லப்படும் பொழுது “என்ன உலகம்…?” என்று சலிப்படைந்த உணர்வு கொண்டு தான் பேசுவோம்.

1.அந்த உணர்வு இயக்கும் பொழுது இந்த ஆத்ம சுத்தி செய்யும் எண்ணம் வராது
2.ஆனால் அந்த நினைவைக் கட்டாயப்படுத்தி நாம் கொண்டு வர வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை நாம் எடுக்க வேண்டும்.

நோய் வந்துவிட்டது என்று தெரிந்தால் கட்டாயப்படுத்தித் தான் கசப்பான மருந்தை உட்கொண்டு அதை நீக்குகின்றோம்.

1.நமக்குள் வேதனை என்ற உணர்வுக்கு அந்த ஞானிகள் உணர்வு கசப்பு
2.வெறுக்கும் தன்மை கொண்டு நமக்குள் அதை எடுக்க விடாது

ஆனாலும் நாம் மகரிஷிகளின் அருள் சக்திகளை உள்ளுக்குள் செலுத்தி அந்தக் கசப்பினை மாற்றுதல் வேண்டும்.

1.அப்படி மாற்றுதல் வேண்டும் என்றால் “எடுக்கும் சக்தி” வேண்டும்
2.உங்களுக்கு. எடுக்கும் சக்தி வந்தாலும் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் அதை பயன்படுத்தக்கூடிய நுணுக்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

எப்படி…?

உதாரணமாக துணியில் சாயத்தை ஏற்றும் பொழுது துணியில் ஒட்டுவதற்குண்டான “அமிலத்தின் அளவு…” எப்படிச் சம பங்கு கொண்டு வர வேண்டும்…? என்று அந்த அளவுகோல் தெரிய வேண்டும்.

1.சீக்கிரம் சாயத்தை ஏற்றி நிறத்தைக் கொண்டு வந்து விடலாம் என்று
2.அளவுகோல் தெரியாதபடி அமிலத்தை அதிகமாகப் போட்டுவிட்டால் சாயம் இருக்கும்.
3.ஆனால் துணி சீக்கிரம் நைந்து விடும்.

ஆனால் அதே சமயத்தில்
1.குறைத்துப் போடுவோம்… லாபத்தை அதிகமாகக் கொண்டு வரலாம் என்றால்
2.சீக்கிரம் சாயம் போய்விடும்… துணி அழகு கெட்டுவிடும்

இப்படியும் போகும்… அப்படியும் போகும்…!

ஆகையால் அந்த மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று உங்களுக்குள் திரும்பத் திரும்பச் சொல்வதனுடைய நோக்கமே
1.பல காலமாக நமக்குள் பதிந்த உணர்வுகள் ஏராளம் ஏராளம்
2.ஒவ்வொரு சமயத்திலும் அதனுடைய இரைக்காக வேண்டி உணர்வை உந்தும்.
3.அந்த மணம் வரும்
4.அந்த நினைவு வரும்… இயக்கும்
5.அது வளரும்.

சாமி சொன்னார்… ஆனால் நான் ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருக்கின்றேன் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்…! இருந்தாலும் அடுத்து ஏதோ ஒரு வகையில் இடைஞ்சல் செய்கின்றார்கள் அல்லது இடைஞ்சல் வருகின்றது என்றால் அந்த உணர்வு முன்னாடி வரும்
1.தொடர்ச்சியாக வாழ்க்கையில் இப்படி வந்து கொண்டே இருக்கின்றது
2.அந்த அருள் உணர்வுகள் வரப்படும் பொழுது இந்த இடைஞ்சலும் சேர்ந்தே வரும்
3.இதுவும் வளரும் அதுவும் வளரும்

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

அந்த தீமையின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்றால் முக்கியமாக இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுது ஆத்ம சுத்தி கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்; துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று இந்த அடிப்படையில் நாம் உள்ளே கொண்டு போக வேண்டும்.

இப்படி எண்ணித் தனக்குள் சேர்த்த பின்பு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் என்னைப் பார்ப்போருக்கெல்லாம் கிடைக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று
1.இப்படித்தான் நாம் எண்ண வேண்டுமே தவிர
2.எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்.., கெடுதல் செய்கிறார்… என்று அவர்களை முதலில் எண்ணி விட்டு
3.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்கு அது கிடைக்க வேண்டும் என்று சொன்னால் அவர்கள் உணர்வுதான் முன்னாடி வரும்
4.அந்த நஞ்சு நமக்குள் கலந்து… நாம் எடுத்ததை நஞ்சாகத்தான் மாற்ற முடியும்
5.ஏனென்றால் இந்த உணர்வு… அவரின் எண்ணங்களைக் கொடுத்து இது முன்னாடி வந்து விடும்

ஆகவே… “என்னைப் பார்ப்பவர்களுக்கெல்லாம்” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… “நான் பார்ப்பவர்களுக்கெல்லாம்” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா ஏன்று இப்படி நாம் எடுத்துப் பழக வேண்டும்.

தனித்த நிலையில் இடைஞ்சல் செய்வோரின் உணர்வே நமக்கு நினைவுக்கு வரக்கூடாது ஏனென்றால் அது விஷம்…!
1.நினைவுக்கு வந்தால் மீண்டும் அந்த அணுக்கள் சாப்பாடு எடுத்துக் கொள்ளும்
2.சாப்பாடு கிடைத்த பின் கொஞ்சம் நிமிர்ந்து நிற்கும்… ஆன்மாவிலே அதைப் பரப்பும்
3.தனக்கு வலு கிடைத்தது… என்ற நிலையில் இரு… நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தைரியமாக வளரும்
4.பின் நாம் போகும் பாதையைத் தடைப்படுத்தும்.

இதை எல்லாம் வரிசைப்படுத்தித் தெளிந்து… தெரிந்து தெளிவான நிலைகளில் செய்து பழக வேண்டும்.

அது மட்டுமல்ல…! சாமி மட்டும் சொல்கிறார் என்று இருக்கக்கூடாது. இந்த உணர்வின் ஆற்றலை… யாம் பதிவு செய்ததை… மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நோக்கத்தில் ஒவ்வொருத்தரும் நீங்கள் சொல்ல வேண்டும்.

இதைப் பயன்படுத்திப் பார்க்கும் போது நல்ல சிந்தனை வரும். அப்பொழுது இதை “எழுத்து வடிவிற்குக் கொண்டு வாருங்கள்…”
1.நீங்கள் வளர்ச்சி பெற்றால் தான் குருநாதர் பெற்ற நிலைகளை உலகுக்கே கிடைக்கச் செய்ய முடியும்
2.நான் ஒருவன் சொல்லிக் கொண்டே இருந்தால் சொல்லிக் கொண்டே போக வேண்டியதுதான்
3.சாமி நன்றாகச் சொல்கின்றார் என்ற ஒரே புகழோடு போகும்… பின் அதனுடன் மறைந்து விடும்…!

அந்த நிலை இருக்கக்கூடாது…!

Leave a Reply