ஓமுக்குள் ஓம் நாம்…! ஒ..ம் ஆக நாம் வளர்க்க வேண்டியது எதை…?

ஓமுக்குள் ஓம் நாம்…! ஒ..ம் ஆக நாம் வளர்க்க வேண்டியது எதை…?

 

சப்த கோடிகளே….
சகல நாத விந்துக்களே…
மணமாகி ஒளியாகி நீராகி நிகழுகின்ற உருக்கோல ஜீவ திட சக்தி தொடர் நிலைகளே…
“கல்கி நிலை உருவாக உருத்தாருங்கள்…!”

ஒலி கொண்டு ஒளி பெற்று… ஒலிக்கின்ற “ஓ…ம்” என்ற இப்பூமியின் நாத சுழற்சியில்… ஓ…ம்ம்ம்ம்… என்ற நாதத்தில் தான் நம் பூமி ஜெனித்து ஓடிக் கொண்டுள்ளது.

பூமியின் நாதத்தில் வளர்கின்ற பல கோடி நாதத் தொடர்பால் ஒலி கொண்டு ஒளி பெற்ற இச்சரீர (நம் உடல்) கோள நாதமாக
1.ஓமுக்குள் ஒமாக… நாதத்திலிருந்து நாதமாக
2.நம் நாத ஒலி சுழற்சியில் ஓம் என்ற கோளமாக
3.பிறிதொரு கோளத்தை உருவாக்கும் நாத விந்து வளர்ச்சியை நாம் பெற வேண்டும். (அது தான் மண்டலப் படைப்பு)

அதைப் பெற்றோமானால் ஓ…ம் என்ற நாதத்துடன் உருளுகின்ற உலகைப் போல் இம்மனித சரீர பிம்பத்தில் ஒலி கொண்டு ஒளி பாய்ச்சி சுவாச நாதம் வளர்க்கும் விந்துவின் இந்திரிய வலுவைக் கொண்டு உடலை இயக்கும் ஆத்மாவின் ஈர்ப்பு வட்டத்தில் ஜோதி நிலை (ஓளி நிலை) அடையலாம்.

சூரியன் தன் ஒளியின் நாத சுழற்சியைக் கொண்டு சூரிய வட்டத்தில் உள்ள பல கோள்களுக்கும் “ஒளி தந்து…” ஒலி பெற்று… தன் சுழற்சியின் கூட்டமைப்பின் சக்தியுடன் ஒன்றித் தானும் வளர்கின்றது.

அதே போல் நம் பூமியும் ஓ…ம் என்ற நாதத்துடன் “ஒளி பெற்று” ஒளியாக்கிச் சுழலும் தொடர்பைப் போன்று தான் மனித சரீரம் பல கோடி ஒலித் தொடர்புடன் ஒளி பெற்றுள்ளது.

அவ்வாறு உருவான இந்த ஆத்மாவிற்கு வலு கூட்டிக் கொள்ள சூரியனின் நிலையை ஒத்த குண சமைப்பைப் போன்று சரீர உணர்வின் எண்ண சமைப்பு பிறிதொரு ஆத்மாவின் மேல் “ஒளி பாய்ச்சி” ஒலி பெற்று வலுக் கூட்ட வேண்டும்.

“ஒளி பாய்ச்சி” என்பது என்ன…?

இந்தப் பூமியின் சுழற்சியில் திடம் பெற்ற பல கோடிச் சரீரங்களும் ஒன்றை ஒத்து ஒன்று இல்லை. இருந்தாலும்… ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சக்தி நிலை “உயர்வு” கொண்டு இயங்குகிறது.

அவ்வாறு இயங்கக்கூடிய ஒலி… ஒளி… ஞானம்… செயல் திறன்… பொருந்திய சரீர உணர்வு கொண்ட எண்ண உணர்வுடன் தான் நாம் மனிதர்கள் செயல் கொள்கிறோம்.

சரீரத் தொடர்புடன் நம்முடைய உணர்வின் எண்ணம் செலுத்தும் வழிதனில்…
1.ஒருவரை நாம் பார்க்கும்… ஒளி பாய்ச்சும் நிலையிலேயே…
2.விழி படமெடுத்து…
3.நாசி சுவாசம் எடுத்து
4.ஒளியின் ஒலியாக நாத விந்துக்கள் உடலின் இந்திரிய அணு வளர்ப்பாக வளர்ந்து விடுகிறது.

இப்படி… “ஒளி பாய்ச்சி” ஒலி பெறும் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் சரீர சமைப்பு சுழற்சி சுழன்று கொண்டேயுள்ள இத்தொடரில்
1.நம்முடைய உணர்வின் எண்ணத்தைப் பிறிதொரு ஈர்ப்பில் சிக்காமல்
2.நம் ஆன்ம வளர்ப்பு நிலையின் வலுத்தன்மை கொண்டு
3.ஞான குண ஒளி பாய்ச்சும் தன்மையினால்
4.எந்த உயர்ந்த எண்ணத்தைக் கொண்டு பிறிதொருவரின் மேல் நாம் ஒளி பாய்ச்சுகின்றோமோ
5.அதன் தொடர் காந்த மின் அலை ஒளி ஈர்ப்புடன்
6.இச்சரீர ஈர்ப்பிற்கு சுவாச ஒலி எடுத்து… வித்துக்கள் வளர்ந்து
7.”ஆத்மாவின் வலு” ஒலி “ஒளியாகப் பதிவு கொள்கின்றது…”

Leave a Reply