இரவு தூங்கும் முன்னும்… காலையில் கண் விழித்தவுடனும் “நாம் கட்டாயப்படுத்தி எண்ண வேண்டியது”

இரவு தூங்கும் முன்னும்… காலையில் கண் விழித்தவுடனும் “நாம் கட்டாயப்படுத்தி எண்ண வேண்டியது”

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியையும் அகஸ்தியன் துருவ நட்சத்திரமான அந்தச் சக்தியையும் அனைவரும் பெறும் பாக்கியத்தை ஏற்படுத்தியது. ஆகவே…
1.அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் உணர்வின் துணை கொண்டு
2.நம் வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும் என்ற நிலையில்
3.எத்தகைய இருளானாலும் எத்தகைய வேதனையானாலும்
4.அதை வென்றிடும் அருள் சக்தியை நாம் பெற வேண்டும்.

இரவு தூங்கச் செல்லும் போதெல்லாம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு என்னைப் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… மகிழ்ந்து வாழும் சக்தி கிடைக்க வேண்டும்… அவர்கள் தொழில் சிறந்து விளங்க வேண்டும் என்றுப் படுக்கும் பொழுதெல்லாம் இந்த முறைப்படி எண்ண வேண்டும்.

அடுத்து…
1.எங்கள் குடும்பம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்
3.எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்து நோய்கள் நீங்க வேண்டும்
4.உலக மக்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
5.அவர்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
6.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
7.உலக மக்கள் இன பேதம் இன்றி மன பேதம் இன்றி மொழி பேதம் இன்றி வாழ்ந்திடும் திறன் பெற வேண்டும் என்று அவசியம் படுக்கையில் எண்ண வேண்டும்.

இவ்வாறு எண்ணினால் அதுவாக நீங்கள் மாறுகின்றீர்கள்…!

காரணம்… ஒருவருக்கொருவர் வரும் பேதங்களை எல்லாம் தவிர்த்தால் தான் “மனிதன்… மனிதனாக இன்று நாம் வாழ முடியும்…!” இந்தக் காற்று மண்டலத்தில் படர்ந்திருக்கும் பகைமை உணர்வுகள் அகல வேண்டும் என்றால் மேசே சொன்ன தியானத்தை அவசியம் செய்ய வேண்டும்.

இதை இப்போது பதிவு செய்து கொண்ட நீங்கள்
1.ஆங்காங்கு எந்த ஊர்களில் எந்த இடங்களில் இருந்தாலும்
2.இரவிலே இது போன்று அவரவர்கள் வீட்டில் இதைச் செய்து
3.அந்த அலைகளைப் பரப்பபடும் போது இந்தக் காற்று மண்டலத்தில் இது பரவுகின்றது

காலையில் எழுந்திருக்கும் பொழுது… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தியானித்து விட்டு எங்கள் குடும்பம் முழுவதும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும்… நாங்கள் பார்ப்போர் எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரொளி பெற வேண்டும்… எங்களைப் பார்ப்போருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று செல்வச் செழிப்புடன் வாழும் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் எண்ணுங்கள்.

1.இவ்வாறு செயல்பட்டால் அந்தச் சக்தியை முதலில் நீங்கள் பெறுகின்றீர்கள்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியும் எமது அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

உங்கள் வாழ்க்கையில் எந்த நேரத்தில் எந்த நிலை வந்தாலும்… அதில் உள்ள இருளை நீக்கிப் பொருள் காணும் திறன் பெற்று… மகிழ்ந்து வாழ்ந்திடப் பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).

Leave a Reply