“ரிஷித் தன்மையின் வலுவுடன் நாமும் கலந்து” மனித வித்துக்களை அழியாத் தன்மைப் படுத்தலாம்

“ரிஷித் தன்மையின் வலுவுடன் நாமும் கலந்து” மனித வித்துக்களை அழியாத் தன்மைப் படுத்தலாம்

 

தன் பெருமைக்காகவோ… புகழுக்காகவோ… சித்து நிலை வளர்ப்புப் பெற்ற ரிஷித் தன்மையின் ஆக்கத் தன்மை செயல்படவில்லை.

மனித இனத்தின்… வளர்ப்பின் ஞான வித்தின் வழித் தொடரை அந்த வித்து அழியாமல் செயல்படும் செயலுக்காகத் தன் சக்தி நிலையைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

1.மனிதக் கரு உயர் ஞானம் பெற வல்லமை பெற்ற
2.அத்தகைய செயல் கொள்ளும் கோளங்களில் எல்லாம்
3.அவ்வித்தின் நிலை வளர்ந்திட சப்தரிஷிகளின் செயல் முறை செயல்படும் தன்மை தான்
4.ரிஷித் தன்மை பெற்ற வளர் குணத்தின் வளர்ப்பு நிலை.

நம் பூமியைக் காட்டிலும் ஞானத்தில் உயர்ந்து மனித குண வீரிய உயர் சக்தி கொண்ட ஞான வளர்ச்சி பெற்ற மக்கள் நம் சூரியக் குடும்பமல்லாதபடி பேரண்டத்தில் மற்ற இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களில் உண்டு.

ஆனால் விஞ்ஞானத்தைக் கொண்டு செயற்கையின் ஞானம் பெற்ற இனத் தன்மை நம் பூமியில் உள்ள மனிதனுக்குத்தான் உண்டு.

மற்ற கோளங்களில் உள்ள மனித இனங்கள் எல்லாம் ஞானத்தால் உயர்ந்து… “பறக்கும் தன்மை கொண்ட” சரீர உடல் வளர்ந்த பக்குவ வளர்ப்பாகச் செயல் கொள்கின்றனர்.

நம் பூமியில் தன் ஞானத்தை இயந்திரங்களில் செலுத்திப் பழக்கும் நிலையை இன்று கொண்டுள்ளான் மனிதன்.

இந்தப் பூமியில் ஆதியிலே உயிரணு தோன்றி வளர்ச்சி கொள்ளும் வளர்ப்புத் தன்மையில் மோதுண்டு… மோதுண்டு வளர்ச்சி பெறும் வளர்ச்சி நிலையில் கனி வளங்களும் தாவர இனங்களும் வளர்ச்சி கொண்டு… வளர்ச்சி கொண்டு வளர்ச்சியின் முற்றிய தன்மை கொண்ட பிறகு தான் “மனித இனங்களே” உருவானது.

தன் உணர்வின் எண்ணத்தால் செயல்படும் அங்க அவயங்களும் சொல்லாற்றும் திறமையின் வளர்ச்சியும் பெற்று வளர்ந்து வந்தாலும்
1.அத் தொடரின் வளர் தன்மை
2.அடுத்த உயர்ந்த நிலைக்கு மனித இன வர்க்கம் செல்லாதபடி தடையாகி விட்டது.

இப்பூமியில் கிருஷ்ணாவதாரக் காலம் தொட்டே (3000 – 4000 ஆண்டுகளுக்குள்) பேராசைப் பிடி உல்லாச வாழ்க்கை எண்ண உரு வளர்ப்பு வளர்ச்சி பெற்றதனால் மனித வளர்ப்பின் சரீர செயல் எண்ண வளர்ப்பும் தடைப்பட்டு தன் ஞானத்தில் செயல்படும் நிலை மாறி விட்டது.

கல்வி என்பதும் அடிமை கொண்ட குண போதனை ஆகி விட்டது. குரு சிஷ்யன் என்ற குரு குலத் தொடர்பு நிலையில்
1.மனிதனின் எண்ணத்தில் தன் உயர்வின் பெருமையில்
2.பிறரின் நிலையை அடக்கி ஆளும் வழித் தொடரில்
3.ஞானிகளால் கொடுக்கப்பட்ட உண்மைகள் அனைத்தும் மறைக்கப்பட்ட போதனையாகி
4.இந்தப் பூமியில் வளர்ச்சி கொண்ட அந்த ஞான வித்தின் வித்தகத் தன்மையே
5.சூழ்ச்சி கொண்ட சூட்சம நிலையில் மறைக்கப்பட்டு விட்டது.

ஆனால் அதே சமயத்தில்…
1.சூட்சமத்தால் வெளியிடப்பட்ட சில சுவடிகளின்படி
2.உண்மையைக் காவியக் கதை கற்பனை ரூபமாக காட்டிய தொடர் கொண்டு
3.விஞ்ஞான ஆராய்ச்சியின் செயல் திறமையினால்
4.மனித உருவக வளர்ச்சியும் ஞான வளர்ச்சியும் தடைப்பட்டு விட்டது.

விஞ்ஞான வளர்ச்சியினால் இன்று சூரிய அலையுடன் சில அலைத் தொடர்களைப் பாய்ச்சி தன் விஞ்ஞானச் செயலுக்காக சில சக்தி அலைகளைப் பிரித்தெடுத்துக் கொண்டேயுள்ளார்கள்.

அதனால் மனித ஞானத்தை வளர்க்கவல்ல காந்த மின் அலையின் ஒளி அலையில்… “வெண்மை அணு சக்தியின் வளர் சக்தியே” தடைப்பட்டு… ஞான வளர்ச்சியும் தடைப்பட்டு விட்டது.

இதிலிருந்தெல்லாம் எண்ணத்தின் வீரிய குணம் கொண்டு இந்தப் பூமியின் பிடிப்பிலிருந்து விடுபட்டு ஒவ்வொருவரும் விண்ணுலக மகரிஷிகளின் அலைத் தொடர்பைப் பெற வேண்டும்.

இன்று பலவாக உள்ள எண்ண குண ஈர்ப்பின் சரீர உணர்வை… நல் அணு வளர்ப்பின் குணத் தன்மை கொண்டு… மகரிஷிகளின் அருள் சக்தியை எண்ணத்தின் ஞானத்தால் “நேராக எடுக்கும்” பக்குவத்திற்கு வர வேண்டும்.

அப்படிப் பெற்றால்…
1.தன் ஆத்ம பலம் பெற்ற தன்மையில் எவ்வீர்ப்புப் பிடியிலும் இந்த ஆத்மா சிக்காமல்
2.இந்தப் பூமியின் மாற்றத் தன்மை எதுவாக இருந்தாலும்
3.வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் ரிஷித் தன்மையின் வலுவுடன் நாமும் கலந்து
4.மனித வித்துக்களை அழியாத் தன்மைப் படுத்தலாம்.

அதற்குத்தான் ஈஸ்வரபட்டனாகிய யான் இதை உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

Leave a Reply