ஞானத்தை வளர்த்துச் “சித்து நிலை பெற வேண்டும்…”

ஞானத்தை வளர்த்துச் “சித்து நிலை பெற வேண்டும்…”

 

இப்பூமியின் பிடிப்பு வாழ்க்கையில் சத்தெடுத்து இவ்வுடல் பிம்ப ஆத்மாவிற்குச் சித்தாக்கி ஒளி பெறும் வளர்நிலையாகி வளரின்பம் நாம் பெற முடியும். இருந்தாலும்…
1.இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் சத்தானது
2.ஞான வளர்ப்பு கொண்ட நிலை பெற்றால் தான்
3.சித்து நிலையைப் பெற முடியும்.

மனித எண்ண ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்த அன்றைய அரசர்கள் காலத்தில் சித்து நிலை பெற்றவர்களின் செயல்கள் எப்படி இருந்தது..?

தான் பெற்ற சித்தைக் கொண்டு அரசைக் காக்கவும்… தன் குடும்பச் சுழற்சியின் ஈர்ப்புப் பிடியிலும்… தன் சித்து நிலையின் சக்தியைச் சிலர் செயல்படுத்தினர். தான் பெற்ற சித்தை இயற்கையை வளர்க்கும் நன்மைக்குப் பயன்படுத்தவில்லை.

இயற்கை என்பது என்ன…?

அதாவது… இப்பூமியின் வளர் நிலைத் தொடர் அணு வளர்ச்சியின் செயலில் எல்லாம் அணுவுக்குள் அணுவாக… உயர் அலைத் தொடரில் சூரிய அலையின் அலைத் தொடர்புடன்.. தன் ஆத்ம அலையைச் செயல்படுத்தவில்லை.

மாறாக… தன் ஜீவ சரீர இயக்கத்திலேயே சித்துக்களைச் செயல்படுத்தினர்.
1.உடலைக் காக்கும் சித்துக்களையும்
2.அதற்குண்டான ஞானங்களையும் தான் செயல்படுத்தினர்.

இன்றளவும் அந்த ஆத்ம உணர்வு ஞானச் சுழற்சியில் தான் அத்தகைய சித்து நிலை கொண்டோரின் நிலையுள்ளது. உயர் ஞானச் சித்தை எட்டிப் பார்க்கும் நிலை இல்லை.

ஏனென்றால்…
1.காரிய சித்துடனே தன் ஞானச் சித்தை இவ்வீர்ப்புப் பிடியில் சுழல விடாமல்
2.அணுவுக்குள் அணுவாக இவ்வுலக வளர்ப்பு வளர்ச்சி அணுவுடனும்
3.இவ்வுலகையே வளர்க்கும் சூரியக் குடும்பமான நாற்பத்தி எட்டு மண்டலத் தொடர்பிலும்
4.இந்நாற்பத்தி எட்டின் வளர்ப்பான வளரும் பன்னிரெண்டு கோள்களிலும்
5.ஒவ்வொன்றின் தொடர் வளர்ப்பிலும் தன் காரிய சித்து ஆத்ம செயலைச் செயல்படுத்தி
6.இதைப் போன்று சுழலுகின்ற ஏனைய எண்ணிலடங்காச் சூரியக் குடும்பங்களில் செலுத்தப்பட்டு
7.அங்கிருக்கும் பல கோளங்களின் உண்மையையும் இந்த ஞானத்தால் பெற்று
8.காரிய சித்தை மேல் நோக்கிய ஈர்ப்பு வட்டத்தில் (இது முக்கியம்) இவ்வுயிராத்மாவை வளர விட வேண்டும்.

சித்தான நிலையில் தான் பெற்ற வளர்ப்பு நிலையை எவ் ஈர்ப்புப் பிடியிலும் நிலைக்கச் செய்யும் செயலாக இக்காரியச் சித்தை நிலை நிறுத்தக் கூடாது.

அதைப் பெறுவதற்காக வேண்டி.. குடும்பத்தை விட்டுவிட்டோ… காட்டிற்குச் சென்றோ… துறவு பூண்டோ… செல்லாமல் இந்தப் பூமியின் வாழ்க்கைப் பிடியின் சத்தெடுக்கும் வழியிலேயே தான் அந்த ஆத்ம சித்தைப் பெற வேண்டும்.

தினசரி வாழ்க்கையில் ஏற்படும் தொடர் நிலைகள் ஒவ்வொன்றிலும்
1.தீயவை… நல்லவை… என்ற தன் ஈர்ப்பின் எண்ணத்தை
2.துவேஷத்திற்கோ புகழுக்கோ செலுத்தாமல்
3.முள்ளை (வேலி முள்) நாம் பாதுகாப்பிற்கு வேலியாக உபயோகித்துச் செயல்படுத்துவதைப் போன்று இருத்தல் வேண்டும்.

அதாவது…
1.தீயவை என்ற நிலையிலிருந்து… அதிலிருந்தே…
2.நாம் அறிந்த முறை கொண்டு… மீண்டும் அதில் போய்ச் சிக்காமல்
3.அதன் செயலின் உண்மையை உணர்ந்து
4.நமக்குப் பாதுகாப்பு வேலியாக – அதை நன்மைப்படுத்தும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்.

இனிமை நிலையிலேயே இவ்வெண்ணத்தின் செயலைச் சுழலவிடாமல்… “செயல்படும் ஒவ்வொரு செயலையுமே… இனிமை ஆனதாக…” இவ்வாத்ம அலை பெறகூடிய தன்மைக்குத் தன் ஞானம் செல்ல வேண்டும்

1,இனிமைக்காக ஏங்கும் ஏக்கத்தின் வார்ப்பாக இவ்வுடலின் அமில உராய்வு இல்லாமல்
2.இனிமையை வளர்க்கும் அமிலமாக
3.இவ்வெண்ணத்தின் உணர்வைச் சுவை கொண்ட சத்தாக இப்பூமி ஈர்ப்பு வாழ்க்கையிலிருந்து சத்தெடுத்து
4.ஞானச் சித்தை வளர்க்க வேண்டும்.

Leave a Reply