சப்தரிஷிகளின் சித்து நிலை

சப்தரிஷிகளின் சித்து நிலை

 

கூடு விட்டுக் கூடு பாயும் நிலை என்பது…
1.தன் நிலை வளராத
2.ஆத்ம பலமின்றி
3.ஆரம்ப ஆவி நிலைத் தொடர்பு நிலையில் பெற்ற
4.பக்தி வாய்ந்த… மந்திர… தந்திர.. செயல் கொண்ட
5.உடலின் ஆத்மாவைக் காட்டிலும் பிறிதொரு சக்தி வாய்ந்த வலுவான இயக்கத்தின் செயலாகும்.

சக்தி வாய்ந்த… என்பது அதற்கு மேல் வலுக் கொண்ட ஆத்ம அலையின் தொடரின் ஈர்ப்புப் பிடி… ஞானச் சித்து பெற்ற… இயக்க வழிச் சித்தில்தான்… இக்கூடு விட்டுக் கூடு பாயும் செயல் செயல்படுவது.

அதாவது தன் சரீர இயக்கத்தைச் செயல்படாத வண்ணம் அந்தச் சரீரத்தை ஓரிடத்தில் நிறுத்தி விட்டுத் தன் ஆத்ம உயிரைப் பிறிதொரு சரீரத்தின் பாலோ.. மற்ற ஜீவ ஜெந்துக்களின் பாலோ செலுத்தி… அதற்குள் நின்று இயக்குவது.

அப்படி இயக்கப்படும் தன்மையில் சிறிது இசகு பிசகான நிலை கொண்டு மாறுபடும் தன்மை ஏற்பட்டாலும் மீண்டும் சரீர இயக்கத்திற்கு வந்து செயல்பட முடியாத நிலை ஆகிவிடும்.

அது மட்டுமல்ல…!

1.இப்படிப் பிரிந்த ஆத்ம உயிர் வேறு ஒரு பிடிப்பலையில் சிக்கிச் செயல்படுத்தப்பட்ட ஈர்ப்புப் பிடியின் செயலினால்
2.மீண்டும் சரீர நிலையும் பிறப்பும் அற்று ஆத்ம வளர்ச்சியே இல்லா நிலையாக
3.தான் வளர முடியாத வேறு ஒரு ஈனமான விஷம் கொண்ட ஈர்ப்பு நிலைக்குச் சென்று விடுகின்றது.

ஆனால் சப்தரிஷிகளின் வளர் சித்து நிலை எல்லாம் எப்படிப்பட்டது…?

தன்னைத் தான் உணர்ந்து… இச்சரீர பிம்பச் சேர்க்கை அமிலக் கூட்டின் வலுவிலிருந்து ஆத்ம வலுவைக் கூட்டி… இவ்வாத்மாவைச் சரீர பிம்பத்திற்கு மேல் சக்திவாய்ந்த செயலாகச் செயல் கொள்ளும் தன்மைக்கு இவ்வாத்ம வலுவை வலுவாக்கிக் கொண்டவர்கள் தான் சப்தரிஷிகள்.

1.தன் ஆத்மாவைத் தானே இயக்கக்கூடிய இயக்கச் செயலின் செயல் சித்தாக
2.ஜீவ பிம்ப சரீர இயக்கத்தின் தொடர்புடனே இவ்வாத்மாவைத் தனித்து நிறுத்தி
3.தன் ஆத்ம அலையை எவ் அலைக்கும் செலுத்தும் திறன் பெற்றவர்கள்.

எவ்வலைக்கும் என்பது என்ன…?

1.சரீர பிம்ப தொடர் கொண்டவர் அலைக்கும் சக்தி வாய்ந்த சித்தர்களின் அலைக்கும் செயல்படுத்தவும்
2.இவ்வாத்மாவின் ஈர்ப்பு சக்தியைக் கொண்டு எந்நிலையையும் அணுவுக்குள் அணுவாக இவ்வாத்ம அலையை அனுப்பி
3.அணு வளர்ச்சியின் உண்மையையும் உருவாகும் சக்தி அனைத்தையுமே உணரக்கூடிய அலைத் தொடர்பு யாவைக்குமே
4.இச்சரீர பிம்ப நினைவு மாறாமலும்…
5.இஜ்ஜீவத் துடிப்போ மற்றெந்தத் தன்மையும் மாற்றம் கொள்ளாத் தன்மையில்
6.இவ்வாத்மாவைத் தனித்து எச்செயலுக்கும் செலுத்திச் செயல் சித்தைச் செயல்படுத்துபவர்களே சப்தரிஷிகள்.

அந்த நிலையை நீங்கள் பெற என் ஆசிகள்…!

Leave a Reply