ஆண் பெண் இருவரும் ஆத்ம ஐக்கிய நிலையில் செயல்பட்டால் தான் “ரிஷித் தன்மை பெற முடியும்…”

ஆண் பெண் இருவரும் ஆத்ம ஐக்கிய நிலையில் செயல்பட்டால் தான் “ரிஷித் தன்மை பெற முடியும்…”

 

இந்தப் பூமியில் சகல ஜீவ ஜெந்துக்களும் ஆண் பெண் இனத் தொடரில் இனப் பெருக்கம் வளர்கின்றது.

அதனை ஒத்த தன்மையின் வளர் சக்தியில்தான்
1.ஆண் எடுக்கும் உயர் தொடர்பலை தியானத்தால் கூடக்கூடிய அமிலத்தின் தன்மைக்கு
2.ஜீவன் பெற பெண் இனச் சுவாசத் தொடர் எண்ணப் பரிமாற்றம் தேவை.

ஏனென்றால்
1.தான் பெற்ற சக்திக்கே “ஜீவ சக்தி” இருந்தால் தான் ஆத்ம பலத்தின் வலுத் தன்மையே பெற முடியும்.
2.ஆத்ம பலம் என்பது உடல் பலத்தைக் கொண்டு பயில்வான்கள் எடுக்கும் பளு தூக்கிகளைப் போல் பெறத்தக்கதல்ல.

எண்ணத்தால் எடுக்கும் சுவாச அலையின் ஜெபத் தன்மைக்குக் கூடப் பெறும் அமிலச் சேர்க்கைக்கு ஜீவத் துடிப்பலைகள் பெறவல்ல அணு வளர்ச்சித் தன்மைக்குப் பெண்மைத் தொடர் சுவாச அலை இருந்தால் தான் ஆண் எடுக்கும் ஜெபத்தின் உயர் அமிலத்தின் வார்ப்புத் தன்மையை அணு வளர்ப்பின் சமைப்புத் தன்மை ஆவி நிலையால் ஆத்ம வலுவின் மூலம் பலம் கொள்ள முடியும்.

1.பெண் இனமே இல்லாமல் பல கோடி ஆண்டுகள் கடும் தவமிருந்து
2.பெண்ணின் சுவாச அலையே படாமல் இந்தப் பூமியில் ஜெபம் பெற்றாலும்
3.எந்தப் பூமியிலிருந்து ஜெப நிலைப் பெற்றார்களோ
4.அதே ஈர்ப்புப் பிடிப்பின் சுழற்சி வட்டத்தில் சிக்குண்டு
5.தனித்த நிலை கொண்டு தவத்திலிருந்து செயல்பட முடியுமேயன்றி
6.வளர் சக்தியான தொடர் சக்தியான ரிஷிச் சக்தியின் சுழற்சி வட்டத்தில் சுழலும் தன்மை பெற முடியாது.

ஒன்றுடன் ஒன்று மோதுண்டு சுழல் பெறும் வழித் தொடரில்… ஒவ்வொன்றும் உருவாகுகிறதே அன்றி “தனித்த ஒன்று…” என்பது இயங்காத் தன்மை தான்.

தெய்வ சக்தி கொண்ட ரிஷித் தன்மை பெற வேண்டும் என்றால்
1.ஆத்ம தொடர்பு கொண்ட ஆண் பெண் இனத் தொடர்பு
2.ஆத்ம அலையின் கூட்டு ஐக்கியமான தொடரில் தான் பெற முடியும்.

இத்தொடரில் சில சித்தர்கள் தன் வாழ்க்கைப் பந்தத்தில் பெற முடியாத ஜீவத் தொடர் கிட்டாததனால்… தன் சித்து நிலையில் ஆத்ம வலுவைக் கொண்டு ரிஷித் தன்மை பெற வேண்டிய சக்திக்காக… மிருக அலைத் தொடர்புடனும் ஆத்ம ஜீவ பிம்ப உடல் எண்ணத்தை மிருகங்களின் உணர்வலையுடன் தன் ஆத்மாவைப் பிறிதொரு சரீரத்தின் மேல் செயல்படுத்தியும் அச்சக்தியைப் பெற்றனர்.

அதே போல் பல சித்தர்கள் தாய் இன குணமுடன் தான் பெறும் சக்திக்குப் பல ஆத்மாக்களின் பால் தன் எண்ண உணர்வின் உயர்விற்காக உபதேச நிலையில் பல சக்திகளைப் பெற்றனர்.

ஆகவே… ஆணின் உயர்வுத் தன்மைக்குப் பெண் இன ஜீவ அலைத் தொடர் எப்படி அவசியமோ… அதைப் போன்றே பெண்மையின் சக்திக்கு ஆணினத்தின் அமிலத் தன்மையும் அவசியம் தேவை.

அது இல்லாவிட்டால்…
1.ஜீவ சக்தியின் வழி சக்தியைப் பெருக்க
2.சக்தியின் செயல் தன்மை உயர் ஞானம் பெறவல்ல வழித் தொடருக்குச் செல்லாமல்
3.பெண் இனத்தின் துரித அமிலக்கூறு ஜீவ சக்தியின் வம்சப் பெருக்கத்தில் சோர்வு நிலை ஆகி
4.புழு பூச்சி கரையான் இப்படி பூமியின் கீழ் பிடிப்பில் ஊரும் ஜெந்துக்களின் வளர்ப்பாக
5.உயிரினங்களின் இனப் பெருக்கம் அதிகமாகச் சுழலும் தன்மை ஏற்படும்.

பெண்கள் விடும் சுவாச அலையில்… ஒவ்வொரு மூச்சலையின் தொடரிலும் பல கோடி ஜீவ அணுக்கள் பெருகிக் கொண்டே உள்ளன.

புழுவாகவும் பூச்சியாகவும் தன் சுவாச அலை ஈர்ப்பை வளர்க்கும் தாயினம்… நற்குணத்தின் பால் ஆண் இன குணங்களுடன் தன் எண்ணத்தின் செயலை ஞானத்தால் செலுத்தும் உயர் குணத்தைக் கொண்டு… இந்தப் பூமியின் பிடிப்பலைக்கே ஞான உணர்வைப் பெறவல்ல நற்குண வளர்ப்பாக்கலாம்.

உயர் மின் தொடர்பில்… பூமியின் உயர்வுக்கே பெண் எடுக்கும் சுவாசத்தால் உயர்வு நிலைப்படுத்த முடியும்.

1.பெண்களின் சொல் ஈர்ப்பில்…
2.ஆண் இன உணர்வின் மோதல் எடுக்கப்படும் நிலை கொண்டு தான்
3.ஆண் இன அமில ஜீவ ஆவி வார்ப்பு ஆத்மாவிற்குக் கூடுகின்றது.

ஆனால் பெண் இனம் ஆணின் சொல் ஈர்ப்பிலிருந்து சக்தி பெறுவதில்லை. பெண்ணின் சொல்லும் எண்ணமும் ஆணின் பால் செலுத்தும் உணர்வுக்கொப்ப
1.உணர்வின் ஈர்ப்பிலேயே காந்தமுடன் இரும்பு சேர்வதைப் போன்று
2.தானாகவே சக்தியைப் பெற்றுக் கொள்கின்றது பெண் இனம்.

இதை ஒவ்வொருவரும் தன் வாழ்க்கை நிலையுடன் ஒத்த வழியிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

ஜெபத்தால் எடுக்கும் ஞானத் தொடர்பின் சூட்சமத்தை..
1.ஒன்றுடன் ஒன்று கலந்த உணர்வுத் தொடர்புடன் உள்ள
2.வழித் தொடரை அறிந்து நீங்கள் செயல் கொள்ளுங்கள்…!

Leave a Reply