மாதா பிதா குரு…!

மாதா பிதா குரு…!

 

இவ்வுலகம் தோன்றி உருளும் உணர்வில் ஒவ்வொரு அணுவும் தோன்றி வளரவும் உணர்வின் ஈர்ப்பு அமிலம் கொண்டே உருவாகி உணர்வாகி வந்த நிலையை நம் சித்தர்கள் காட்டிய வழியில் இராமாவதாரத்தில்
1.தந்தையின் குணத்தை உயர்த்தியும்
2.தந்தைக்குப் பின் தான் தாயின் நிலை காட்டப்பட்டுள்ளது.
3.அதே போல் உலகின் தெய்வமான சிவசக்தி என்ற சிவனை முதலிலும்
4.சக்தியின் நிலையைப் பிறகும் தான் உணர்த்தினர்.

ஆனால் நாம் வணங்கும் தெய்வத்தில் தாயை முதலிலும் தந்தையைப் பிறகும் தான் உணர்த்திக் காட்டி வணங்குகிறோம். இதன் உண்மை என்ன…?

எல்லாமே ஆதிசக்தியின் படைப்புத்தான்…!

1.ஆதிசக்தியின் படைப்பில் – “ஆவியான சக்தி நிலை”
2.திடம் பெறும் நிலைக்குச் “சிவன்” என்ற நாமத்தைச் சூட்டி
3.திடப்பட்ட பிம்ப நிலையின் ஈர்ப்புத் துடிப்பிற்குச் “சக்தி” என்ற பெண்ணின் நாமத்தைச் சூட்டினர்.

சிவ பிம்ப ஈர்ப்பு சக்தி நிலையை நம் சித்தர்களினால் ஆவியான அமிலம் திடம் கொள்வதை சிவன் என்ற நாமம் சூட்டி அதன் ஈர்ப்பு நிலைக்குச் சக்தி என்ற பெண்பாலை உணர்த்தினார்கள்.

அவ்வீர்ப்பின் சுழற்சி அலைத் தொடர் வளர்ப்பின் நிலையில் வழி கொண்ட ஜீவ சக்தியின் படைப்பில் “தாய் தந்தை” என்ற உண்மை நிலை உருப்பெறுகின்றது.

1.படைப்பின் படைப்புத் தான் சிவ சக்தியின் படைப்பு.
2.படைக்கப்பட்டவனின் படைப்பு தான் அனைத்து ஜீவாத்மாக்களின் படைப்பெல்லாம்.
3.இந்நிலையில் சக்தி கொண்டு ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று வளர “ஜீவ சக்தி கொண்ட குரு நிலை தேவை…!”

இராமாயண மகாபாரதக் காவியங்களில் எல்லாம் குருவின் நிலையை ஆண்டவனுக்கு முதலில் காட்டிய நிலை என்ன..?

ஞான சக்தி பெற… ஆரம்பத் தொடர் நிலைக்கு நம்மைக் காட்டிலும் சக்தி கொண்ட குரு நிலை தேவை.
1.நீரான சக்தி ஈர்ப்பில் (மனித பிம்ப உடலில்) காந்த மின் அலையின் தொடர் நிலையை
2.நேராக நாம் பெறுவது என்பது கடினமாகின்றது.
3.நம்மை ஒத்த ஜீவ உடல் கொண்ட ஞான சக்தியின் வழி பெற்ற குரு அமைந்தால்
4.நம் எண்ணத்தை அவர்பால் செலுத்த
5.அவர் எடுக்கும் அலையின் நிலையிலிருந்து
6.நம் ஞானத்திற்குகந்த அலையினைத் திருப்பி அனுப்பிட முடியும்.

ஜீவனற்ற சக்தியின் தொடர்பைக் காட்டிலும் ஜீவனுடன் கூடிய குரு நிலை அமைந்து அவர்பால் நாம் செலுத்தும் எண்ண நிலைக்கொப்ப காந்த மின் அலையின் தொடரை நாம் ஆரம்பக் காலத்தில் எடுப்பதற்கு உதவி நிலை கிட்டுகிறது.

குருவின் உண்மை நிலை 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் இந்நிலை தான் இருந்தது. காலப் போக்கில்…
1.குருவானவர்களே தன் ஞானத்தின் வழியைப் பிறர்பால் செலுத்தி
2.“அவர்கள் தன்னைக் காட்டிலும் உயர் நிலை கொண்டு விடுவார்கள்…!” என்ற எண்ண ஓட்டத்தினால் எல்லாமே மாறிவிட்டது.

அதுவுமல்லாமல்…
1.சிலர் எடுத்துச் செயல்படுத்திய வழி நிலையை
2.உணர்ந்தெடுக்கும் ஜீவாத்மாக்களும் செயல்படுத்தவில்லை.

மனித உரு கரு வளர்ந்த காலம் முதல் கொண்டே “குரு சிஷ்யன்” என்ற வழித்தொடர் இருந்து கொண்டு தான் இருந்தது, இன்றும் உண்டு.

ஆனால் பக்தி நிலை கொண்டு பணிந்து வணங்கும் நிலை தான் உண்டே தவிர ஞானத்தின் நிலையின் ஈர்ப்பு வழித் தொடருக்குக் குருவின் செயலை எடுப்பாரில்லை.
1.குருவின் தொடர்பால்…
2.தானே கிட்டும் என்ற நிலை தான் இன்றும் உள்ளது.

ஆனால் சக்தி வாய்ந்த சக்தியிலிருந்து தான் பல சக்திகள் உருப்பெறுகின்றன.
1.உருப்பெற்ற நிலையிலிருந்து மாறி மாறி வழித் தொடர் கொண்டு
2.உயர் சக்தியின் படைப்பில் தான் சக்தி வாய்ந்த சக்திக்கு மேல் சக்தி கொள்கின்றது இந்தச் சக்தி.

இது தான் உண்மை…!

Leave a Reply