மகரிஷிகளால் உருவாக்கப்பட்ட பேருண்மை இது…!

மகரிஷிகளால் உருவாக்கப்பட்ட பேருண்மை இது…!

 

மூதாதையர்கள்… நம் தாய் தந்தையர்கள்… உடலை விட்டுப் பிரிந்திருந்தாலும் அவருடைய உணர்வுகள் நம் உடலுக்குள்ளும் உண்டு.
1.இந்த உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் பரம்பரை நோய் பரம்பரைக் குணம் இது எல்லாமே வரும்
2.பரம்பரையினால் எங்கள் குடும்பத்தில் இது வந்தது என்று சொல்வார்கள்.

உதாரணமாக… காக்காய் வலிப்பு அல்லது சர்க்கரைச் சத்து அல்லது ஹார்ட் அட்டாக் போன்ற உபாதைகளினால் முன்னோர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் குடும்பத்தில் பரம்பரையாக இதே நோய் தொடர்ந்து அப்படியே வந்து கொண்டிருக்கும்… இரத்தக் கொதிப்பு இருந்தால் அதுவும் வரும்.

இத்தகைய பரம்பரை நோயை அழித்திட துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று
1.உடலுக்குள் மூதாதையர்களின் உணர்வுகள் இருக்கும் பொழுது
2.அதற்கு அருள் ஞான உணர்வை நாம் உணவாகக் கொடுக்க முடியும்.

இப்படிக் கொடுத்து… நம் உடலுக்குள் அருள் ஞான உணர்வைச் செலுத்தப்படும் பொழுது அவர்கள் அறியாது சேர்த்த தீமையின் விளைவுகள் நமக்குள் வராது தடுக்க முடியும்.

அதற்காகத்தான் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கும்படிச் சொல்வது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களை அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து விட்டால் உடல் பெறும் உணர்வுகளைப் பாற்கடலில் கரைத்து விடுகின்றது.

1.பின் அந்த உயிர் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணையும் பொழுது
2.ஆறாவது நிலை ஏழாவது ஒளியின் உணர்வாக வளரத் தொடங்குகிறது – அது தான் “சப்தரிஷி” என்று சொல்வது.

அப்படிச் செய்த பின்பு… அவருடைய உணர்வு நம்முடன் இருப்பதால் நாம் அவர்களை எண்ணும் பொழுது நாம் நல்ல உணர்வுகளைப் பெற முடிகிறது.
1.அடுத்து நாம் உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும்
2.நம் மூதாதையர்கள் சப்தரிஷி மண்டலத்தில் இருப்பதால்
3.அதன் வழி நம்மையும் அங்கே அழைத்துச் செல்லும் நமது உயிர்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலுவாகச் சேர்த்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையினுடைய சூட்சும சரீரத்தைத் துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்து விட்டால் (தலையாயக் கடமையாக) “சப்தரிஷி மண்டலத்தின் ஒரு அங்கமாகச் சேர்ந்து விடுகின்றது…”

நம்மை வளர்ப்பதற்காக அவர் உடலில் பட்ட நஞ்சுகள் அனைத்தும் அங்கே கரைக்கப்படுகின்றது. ஒளியின் உணர்வாக உயிர் அங்கே வாழத் தொடங்குகிறது.

அவருடைய உணர்வு கொண்டு தான் நாம் மனிதனாக வளர்ந்தோம்
1.அந்த உணர்வின் துணை கொண்டு நாம் அவர்களை அங்கே உந்தித் தள்ளப்படும் பொழுது
2.இந்த உணர்வின் தொடர் கொண்டு ஒளியான உணர்வை எளிதில் நாம் பெற முடியும்.
3.நமக்குள் வரும் தீமைகளை மாற்றிக் கொள்ள முடியும்… அதைத்தான் நமது குருநாதர் சொன்னார்.

அவ்வாறு விண் செலுத்திய பின்… “48 நாள் இதைத் தொடர்ந்து செய்து வந்தால் நமக்குள் முழுமை பெறுகின்றது…!”

அந்த மூதாதையினுடைய நிலை எத்தனை நிலை இருந்தாலும் துருவ நட்சத்திரத்தோடு ஒன்றாக வேண்டும்… ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அங்கே அந்த ஒளி உடல் பெறும் பொழுது…
1.நம் உடலில் அவருடைய தீயவினைகள் பதிவானது (சங்கடப்பட்டது நோயால் அவதிப்பட்டது) அணுவாக இருப்பது அது கரைக்கப்படுகின்றது
2.பரம்பரை நோய்கள் நம்மிலிருந்து அகற்றப்படுகின்றது.

அவருடைய உணர்வுகளுக்கு நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இவ்வாறு உணவாகக் கொடுக்கப்படும் பொழுது இந்த உடலுக்குப் பின் நம்மையும் அங்கே அழைத்துச் செல்லும் – மூதாதையர்கள் இருக்கும் இடத்திற்கு…!

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்…
1.நம் முன்னோர்கள் முதலில் அவர்கள் மனிதனார்கள்
2.பாம்பாகவோ தேளாகவோ கொசுவாக நாம் இருக்கும் பொழுது
3.அவர்களைப் பாதுகாக்க நம்மை அடித்துக் கொன்றிருப்பார்கள்.
4.நமது உயிர் அவரது உடலின் ஈர்ப்பிற்குள் சென்றிருக்கும்.
5.அதே உயிர் தான் (தாய் தந்தை) நம்மை மனிதனாக உருவாக்கினார்கள்.

அதே சமயத்தில் அந்த அருள் உணர்வுகளை நாம் பெற்று அவர்களை ஒளி உடல் பெறச் செய்தால்… “அந்தத் தாய்ப் பாசம்…” அவர்கள் ஒளியின் உடலான பின் ஏழாவது நிலையாக நம்மையும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும்.

மகரிஷிகளால் உருவாக்கப்பட்ட பேருண்மையின் உணர்வுகள் இது…!

Leave a Reply