“ஆதி சக்தியின் சக்திக்கே…” துணை சக்தி கொள்ளும் வடிவெடுக்கும் உருவம் தான் மனித உடல்

“ஆதி சக்தியின் சக்திக்கே…” துணை சக்தி கொள்ளும் வடிவெடுக்கும் உருவம் தான் மனித உடல்

 

தன் உணவைத் தான் எடுக்கப் போகன் செய்த செயல் முறைதான் “முருகா” என்ற சிலை.
1.ஒவ்வொரு சக்திக்கும் (அது) எந்தச் சக்தியாக இருந்தாலும்
2.தன் சக்தி வளர உணவு தேவை.

உணவை எடுக்க அவரவர்கள் உணர்த்திய முறை கொண்டு தான் போகனால் சீனாவில் பல மருத்துவங்களையும் வெடி குண்டுகளையும் முகம்மது நபியின் உடலை எடுத்து முஸ்லீம் நாடுகளில் தன் உணர்வைப் பதித்து உணர்வின் எண்ணமுடன் தன் உணவை எடுத்தார்.

இப்படி… தான் வளர தனக்குகந்த வளர்ச்சியில் ஆகாரமாகப் பல நிலைகளை உணர்வின் எண்ணமுடன் பதியச் செய்த முறை கொண்டு தான் அன்றிலிருந்து இன்று வரை பக்தி முறை தொடர் கொண்டுள்ளது.

பக்தியின் உண்மையான உணர்வின் எண்ணத்திற்கு அவர்களின் சக்தியைக் கொண்டு பக்திக்குகந்த பலனை அளித்துத் தனக்கு உணவை எடுக்கின்றார்.

கவிதைகளையும் பல காவியங்களையும் எழுத்தில் பதியச் செய்து பல சித்தர்கள் அதைப் படிப்பவர்களின் எண்ண உணர்வைத் தனக்குகந்த உணவாக எடுக்கின்றனர் “இன்றும்…!”

அன்றெழுதிய இராமாயணம் கீதை பைபிள் குரான் இவை எல்லாம் காலப் போக்கில் உருக்கள் மாறினாலும் அன்றெழுதிய உணர்வின் சக்தித் தொடரில் படிப்பவருக்கும்… எண்ணுபவர்க்கும்… அவ்வுணர்வின் சுழற்சியைக் கொண்டு…
1.இன்றளவும் அதனை எழுதியவருக்கு உணர்வின் எண்ணத்திற்கு
2.அவர்களுக்கு உணவு கிடைத்துக் கொண்டேயுள்ளது.

இந்தப் பூமியில் பல கோடிச் சித்தர்கள் பல உணர்வுகளில் இருந்தாலும் அவரவர்களின் வளர்ச்சிக் குணத்திற்கு உகந்தபடி எல்லாம் தன் எண்ண உணர்வை என்றும் அழியாத் தொடரிலும் சில சொல் ரூப மந்திரங்களிலும் பதியச் செய்துள்ளான் அந்தச் சித்தன்.

ஐயப்பனை எண்ணும் பொழுது ஒரு கோஷம். முருகனை எண்ணும் பொழுது வேறு ஒரு கோஷம். இப்படி இயேசு கிறிஸ்துவுக்கும் முகம்மது நபிக்கும் புத்தருக்கும் கொங்கணவருக்கும் அவர்கள் பதிய வைத்த இக்கோஷத்தால் இன்றளவும் தன் உணர்வுக்குகந்த உணவை எடுத்து தான் வாழ்ந்து… வளர்ந்து… பலவற்றையும் வாழ வைத்திருக்கின்றார்கள் “சக்தி கொண்ட சக்திகளை…!”

உணவில்லாமல் எதுவுமே வளர்வதில்லை…!

பிம்ப உடல் கொண்ட ஜீவத் துடிப்பு உருவங்களுக்குத் திடமான உணவு தேவை. ஆனால்
1.பிம்ப உடல் கொண்ட திட உணவை உட்கொள்ளும் இந்த மனித சக்தியில் இருந்து தான்
2.உணர்வின் எண்ண உணவையும் உட்கொள்ளும் சக்தி நிலை வளர்கின்றது.

தாவரங்கள் நீரையும் சில எருக்களையும் உணவாக உட்கொண்டாலும் உணர்வுடன் கூடிய எண்ண உணவெடுக்கும் முறை மனித ஞானத்திற்குத்தான் உண்டு. மனித ஞான உணர்வின் உயர் சக்தியில் ஊன்றியுள்ள உண்மைதனை உணரல் வேண்டும்.

மனித நிலையிலிருந்து மாறி மிருக நிலையிலும் மற்ற பட்சிகளின் புழு பூச்சிகளின் நிலையிலும் உணர்வின் எண்ண ஞான உணவெடுக்கச் சக்தியில்லை.

1.ஞானத்தின் உணவை எடுத்துச் சித்தன் என்ற செயலாகிச் சப்தரிஷியின் செயலாக்கி
2.ஆதி சக்தியின் சக்திக்கே துணை சக்தி கொள்ளும்
3.வடிவெடுக்கும் உருவங்கள் தானப்பா… இந்த மனித பிம்ப உடல்…!

பல கோடி ஆண்டுகளாகவே நற்சக்தியின் விதைகள் விதைக்கப்பட்டுப் பலனை எடுத்து… மீண்டும் மீண்டும் பலன் கொண்டு… தான் எடுத்த உயர் ஞானத்தைக் கொண்டு… பல ஞானங்களின் உணவு எடுத்துக் கருவாகி உருவாகி… தனியோரு மண்டலமாக உருவாகிச் சுழன்று கொண்டேயுள்ள சக்தியில் “முதல் எது… கடைசி எது…?”

Leave a Reply