மனித வாழ்க்கையின் பொருள் எது…?

மனித வாழ்க்கையின் பொருள் எது…?

 

நம் பூமியின் ஈர்ப்பிற்கு சக்தி தரும் காந்த மின் அலையின் வளர்ச்சிக்கு ஊற்றாக அமையப் பெற்றது தான்
1.உலகின் மூன்று இடங்களில் உள்ள “காந்த மின் கிணறுகள்…!”
2.கடலுக்கடியில் ஒன்று.. பாலைவனத்தில் ஒன்று… மலைப் பகுதியில் ஒன்று…! என்று ஏற்கனவே சொல்லியுள்ளேன்
3.இக்காந்த மின் கிணறுகளின் ஈர்ப்பு அதிகப்பட்டு வளர்ச்சிப்படுமேயானால்
4.நம் பூமிக்கு… பூமியின் ஈர்ப்பு சக்தி அதிகப்படும்.
5.அதனால் அதிகப்படியான ஜீவ இன வளர்ச்சிக்குகந்த சத்து அமில நிலையைத் தர வல்ல தாவரங்களின் இயற்கை வளம் பெருகியிருக்கும்.

நம் பூமியைக் காட்டிலும் வியாழனும் சூரியனும் வளர்ந்துள்ளது. அவைகள் நம் பூமியை விட அதிக ஈர்ப்புக் குணமுடையதாக வளர்ந்து மற்ற எல்லா மண்டலங்களுக்கும் அதன் சக்திக் குணத்தைத் தருகின்றது.

1.அந்த வியாழனைப் போன்று வளர்ந்து பெருக்கும் நிலை நம் பூமிக்கு இப்பொழுது குறைவுபட்டுள்ளது.
2.நம் பூமியும் கன விகிதத்தில் வளர்ந்து தான் வருகிறதேயன்றி
3.தன் ஈர்ப்பின் சக்தியை வளர்க்க முடியாத நிலை ஆகிவிட்டது.

காரணம் இன்றைய கலி மனிதன் தன் விஞ்ஞான செயற்கை மின் அலையைக் காண “சூரியனின் சக்தி அலையை…”
1.நம் பூமி ஈர்க்கும்… பூமியின் இயற்கை வளர்ச்சியைத் தடைப்படுத்தி
2.அதைச் செயற்கை மின்சாரமாகக் கண்டு எடுத்து விட்டான்,

பூமியின் ஈர்ப்புக் காந்த சக்திக்குக் கிடைக்க வேண்டிய ஆகார நிலையை… அது எடுத்து… உண்டு… வளர்ந்து… பலன் காணும் முன்… இன்றைய கலி அறிவு மனிதனால் துரித நிலையில் மின்சாரம் கண்டு பூமியின் வளர்ச்சிக்கும் வருங்கால உயிரினங்களின் வளர்ச்சி நிலைக்கு மாற்றம் தரவல்லவனாகி விட்டான் “இன்றையக் கலி மனிதன் தான்…!”

இக்கலி மனிதனால்… “அவன் அறிவாற்றல்” என்ற மேம்பாட்டில் கண்ட “செயற்கையினால்…!” பல கோடி உயிரணுக்களின் சக்திக் கலவையாகக் கலந்து வாழ்ந்து… தான் வாழ்வதோடு மட்டுமல்லாமல்
1.வளர்ந்து கொண்டே சுழன்றோடும் இந்தப் பூமியின் நிலையைத் தன் செயலுக்காக
2.மின் அலையைப் பாழ்படுத்தியதனால் பூமியின் இயற்கையையே பாழ்படுத்திவிட்டான்.

இதனின் நிலையை மாற்றி நம் பூமி வளரத்தான்… இக்கலி மாறி கல்கியாக வருவதற்குத்தான் பல கோடிச் சித்தர்களும் சப்தரிஷிகளும் செயல் கொள்கின்றனர்.

இக்கலி மாறும் தருணத்திற்குள் இந்தப் பூமியின் அமிலக் குணத்துடன் ஒன்றி வாழ்ந்த மனித இனக் குண சக்தி இருந்தால் தான் மீண்டும் மீண்டும் மண்டல சக்திகளும்… எந்த ஒரு புதிய படைப்பு நிலையும் வளர்க்க முடியும்.

எண்ண சக்தியின் வளர்ச்சி நிலை கொண்ட அமில… குண ஜீவன்.. மனிதனிலிருந்து தான் இந்நிலை வளர முடியும் என்ற உண்மையில் தான் சப்தரிஷிகளும் அவர்களின் ஆசி பெற்ற சித்தர்களும் செயல்படுகின்றனரப்பா…!

கூரை அமைக்கத் தூணோ சுவரோ தேவை, அது போல்
1.இம்மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியின் மேம்பாட்டில் தான்
2.மண்டல வளர்ச்சி உண்டு… மற்றெல்லா வளர்ச்சியும் உண்டு.

இதன் நிலையை உணர்ந்து ஒவ்வொரு மனித ஆத்மாவும் இஜ்ஜீவ உடல் பிம்ப நிலையிலிருந்து தன் உயிரணுவான காந்த உயிர் சக்தியை நல்ல நிலையில் எடுக்கும் எண்ணம் கொண்டு இந்த உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களையும் வீரிய சக்தி பெறும் வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.

தான் எடுக்கும் ஜெப நிலையால் தன் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் ஒளி பெற்றுத் தானாக ஓர் உயிரணு ஆத்மாவுடன் பல கோடி அணுக்களும் ஒன்றுபட்டுச் செயல்படுமானால்
1.அதன் சக்தி ஜெபத்தினால் எடுக்கும் நுண் அலையின் தொடர்பைக் கொண்டு
2.பலவாகப் படர்ந்துள்ள சப்தரிஷிகளின் ஒளி அலையைப் பெற்று
3.அவர்களின் தொடர்பின் மூலம் பல செயல்களை இந்த உயிராத்மாவினால் வளர்க்க முடியும்.

ஏனென்றால் வாழ்க்கையின் பொருள் என்பது வாழும் காலங்களில் பிறர் போற்றித் துதித்து… “மடிந்த பிறகு…. புகழாஞ்சலி பெறுவதல்ல…!”

இம்மனிதப் பிம்ப வாழ்க்கையில் எடுக்கும் ஒளி அலையின் நிலையின் வளர்ச்சி தான் எல்லாவித இயற்கைக் குண வளர்ச்சி மண்டலங்களின் சக்தியும் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது வாழும் குறுகிய கால வாழ்க்கையில்
1.இந்தச் சந்தர்ப்பத்தைக் குறுகிய நிலைப் புகழுடன் மங்க விடாமல்
2.பேரண்டப் பெரு நிலை என்ற உயர்ந்த அண்டமாகும் சக்தி நிலையைப் பெறும் தகுதிக்குத் தான்
3.யாம் இங்கே தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் பாட நிலையின் உண்மை நிலை.

Leave a Reply