நம்முடைய உன்னத சக்தியை அறியாமல் அதை விரயப்படுத்தி வாழலாமா….

நம்முடைய உன்னத சக்தியை அறியாமல் அதை விரயப்படுத்தி வாழலாமா….

 

நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் பலவாக உள்ள நினைவின் ஓட்டத்தை ஒரு நிலைப்படுத்திப் பல நிலை கொண்ட அமில குணத்தையெல்லாம் ஒரு வழிக்கு வர பழக்கப்படுத்தித் “திசை திருப்பும் ஞான வழி பெறுதல் வேண்டும்…!”

அப்படிப் பெற்றால்…
1.தான் எடுக்கும் சுவாச ஈர்ப்பினால் எந்த ஒரு நற்சக்தியின் பால் தன் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ
2.அதே நினைவில் சுவாசம் எடுத்து… அதன் வழித் தொடர் நினைவில்…
3.அத்தொடரில் உள்ள உண்மையின் வளர்ச்சியை நிச்சயமாகப் பெற முடியும்.

ஞானத்தின் பால் செலுத்தப்படும் இந்த ஈர்ப்பு குண நலம் அமையப் பெறும் வழித் தொடரில் சென்றால் “எந்த ஒரு நுண்ணிய அலைத் தொடரையும்…” வளர்ச்சி ஞானத்தினால் பெற முடியும்.

அத்தகைய நுண்ணிய அலைத் தொடரிலிருந்து…
1.நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களுடனும் இந்த நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டு
2.இப்பிம்ப உடலிலிருந்து உயிர் ஜீவ சக்தியைத் தனித்துப் பிரித்துச் சென்று எல்லாவற்றையும் அறிய முடியும்.

அதாவது…
1.ஒவ்வொரு அமில குணங்களின் சேர்க்கையையும் அதன் வட்டத்திலிருந்து உயிர் பெறும் ஜீவ நிலையையும்
2.ஒன்றுடன் ஒன்று கலவைப் பட்டு வளரும் நிலையையும்
3.இப்பூமியில் உள்ள கனி வளங்களின் நிலை அறியவும்
4.கனி வளத்திலிருந்து கசிந்து உருகி வரும் திரவ நிலைகளை அறியவும்
5.இப்ப்பூமியின் பூமத்திய ரேகையில் உள்ள உண்மை நிலைகளையும் அறிய முடியும்.

விஞ்ஞான சாதனை கொண்டு செயற்கை மின் அலையின் தொடரினால் செயற்கை மின் அலையிலிருந்து விஞ்ஞானத்தில் கண்டறியும் ஆற்றலைக் காட்டிலும்
1.இஜ்ஜீவ மின் அலையின் சக்தியை வளர்த்துக் கொள்ளும் மனிதனால்
2.தன் உயிராத்மாவை எந்த இடத்திற்கும் சென்று..
3.பூமியின் மேல் மட்டத்தில் உள்ள நிலைகளை அறிவது போல்
4.இந்தப் பூமியின் உட்கோளங்களில் வளர்ந்து வரும் நிலைகளையும் அறியலாம்.

அது மட்டுமல்ல…!

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையும் காற்று மண்டலத்திற்கு அப்பால் உள்ள பால்வெளி மண்டலத்தையும் இந்த நுண்ணிய அலையின் சக்தியை வளர்த்துக் கொண்ட மனிதனால் காண முடியும்.

இந்த உடல் அப்படியே ஒரு இடத்தில் இருந்தாலும்… விட்டுச் சென்ற உடலில் அனைத்து உயிரணுக்களும் இந்த நுண்ணிய மின் அலையின் சக்தியின் ஈர்ப்புடன் இயங்கிடும்.

உடலில் உள்ள தசைகளும் மற்ற எல்லா உறுப்புகளும் அதே நிலையில்… அதாவது…
1.உண்டு கழிக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல்
2.சுவாசம் எடுத்துச் சுவாசம் விட்டு இருக்கக்கூடிய நிலையும் இல்லாமல்
3.இந்த உடல் பிம்பம் எந்த வகைப் பின்னமும் படாமல் அதே நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும்.

இதை எல்லோராலும் பெற முடியும்…!

ஆனால்
1.மந்திரமும்… மாயமும்…
2.தெய்வீகப் பெரும் சக்தி என்றும்…
3.சாதாரண மனிதனால் முடியாத நிலை என்றும்
4.மனிதன் பெற வேண்டிய உயர் சக்தியை மனிதன் எடுக்க முடியாமல்…
5.எட்டாத நிலைப்படுத்தி மறைக்கப்பட்டு விட்ட நிலை தான்…! இன்று நடப்பில் உள்ளது.

செயற்கையின் மின் அலையை விஞ்ஞானப்படுத்திச் செயலாக்கும் மனிதனால்… தன் அலையின் தொடர்பிலிருந்தே அச்சூரியனின் ஒளி அலையின் ஈர்ப்பினால்… தன் உயிராத்மாவால்… எந்த ஒரு நுண்ணிய அலையின் வளர்ச்சியையும் ஜீவ உடல் கொண்டு மனிதனால் எடுக்க முடியும். இது சாத்தியமே…!

மனித உடலில் பல கோடிக் கோடி உயிரணுக்கள் ஜீவ சக்தியுடன் இயங்கும் பொழுது…
1.உயிராத்மாவின் நிலையுடன் நிறைந்துள்ள பல கோடி உயிரணுக்களும்
2.இந்த அலையின் ஈர்ப்பை எடுக்கும் நிலையினால்
3.மனிதனின் சக்தித் திறன் பலவாக உயரும்.

ஆனால் உடலை விட்டுச் சென்ற ஆவி ஆத்மாக்களுக்கு ஜீவ அணுக்களின் ஜீவ சக்தி இல்லாததினால் மனித ஞானத்தில் செயல்படும் திறனில்லாமல் ஆவி உலக வாழ்க்கை இருந்துவிடுகின்றது.

ஜீவ சக்தியில் ஈர்க்கப்படும் ஞானங்களும் இந்த உயர் மின் அலையின் தொடர்பும் ஜீவனற்ற ஆவி ஆத்மாக்களுக்கு முடியாதப்பா…!

சூரியனின் மின் அலையின் சுவாசத்தை ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்து வாழும் நம் வாழ்க்கை அலையில் நாம் உண்டு… கழித்து.. உறங்கி.. நமக்குக் கிடைத்த பல காலமாக நாம் வளர்த்து வந்த இந்த ஜீவ உடல் வாழ்க்கையில் பெற்ற உன்னத சக்தியை அறியாமல்… விரயப்படுத்தித்தான் வாழ்கின்றோம்.

Leave a Reply