இனி நமக்கு இந்த உடல் தேவை இல்லை… உணர்வின் “ஒளியே போதுமானது”

இனி நமக்கு இந்த உடல் தேவை இல்லை… உணர்வின் “ஒளியே போதுமானது”

 

உயிரியல் தத்துவத்தில் நமது உயிர் நுகர்ந்த உணர்வை அணுக்களாக மாற்றுகிறது. அணுவின் மலம் நம் உடலாகி உணர்வின் அறிவாக நம்மை இயக்கச் செய்கின்றது.

உயிரணுவாகத் தோன்றியதிலிருந்து எத்தனையோ உடல்களைக் கடந்து மனிதனாக வந்த நாம் இன்று விஷத்தன்மை கொண்ட உலகில் வாழ்ந்து கொண்டுள்ளோம்.
1.இந்தப் பிரபஞ்சமே இந்தச் சூரியனே விஷத்தன்மையால்… விஞ்ஞானத்தின் கதிரியக்கத் தன்மையால்
2.சீக்கிரம் அழியப் போகின்றது… திசை மாறப் போகின்றது.
3.வாழும் இந்தக் குறுகிய காலத்தில்… சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்…
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் உங்களுக்குள் நல்ல சிந்தனைகள் வரும்
5.கஷ்டங்களை எண்ணாதீர்கள்… உடலில் வேதனையோ நோயோ இருந்தால் அதை மறந்து விடுங்கள்
6.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன் என்று இந்த ஒரு பழக்கத்திற்கு வாருங்கள்.

வீட்டிலே பூஜை அறையிலையோ அல்லது இருக்கும் மற்ற இடங்களிலோ இது போன்று செயல்படுத்திப் பாருங்கள்.

உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்வதற்கு எம்முடைய (ஞானகுரு) உபதேசங்களைக் கேட்டும் படித்தும் வாருங்கள். அடிக்கடி அதை ஞாபகப்படுத்திக் கொண்டே வாருங்கள். அருள் சக்திகள் உங்களுக்குள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். தீமைகளை அகற்ற முடியும்.

கஷ்டம் என்ற வார்த்தையைத் தூக்கி எறிந்து விடுங்கள்…!

1.“யார்…” எந்த நிலையில் இருந்தாலும் கூட இந்த உடலுடன் இருப்பவர் யாரும் இல்லை
2.உடலுக்காக வேண்டி வேதனைப் பட வேண்டிய அவசியமும் இல்லை.
3.இந்த உடலிலிருந்து வேதனையை நீக்கிவிட்டு வேதனை நீக்கிடும் அருள் சக்தியைப் பெற்றால் தான்
4.உலகில் வரக்கக்கூடிய விஷத்தன்மைகளை நீக்க முடியும்.

பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சிப் பல உயிரினங்களை உணவாக உட்கொண்டு அதிலுள்ள விஷத்தையும் சேர்த்து எப்படி நாகரத்தினமாக மாற்றுகின்றதோ அதே போன்று தான் அகஸ்தியன் அகண்ட அண்டத்தில் வரும் இருளை வென்று… உணர்வை ஒளியாக மாற்றி… ஒளிச் சரீரமாக ஆனான்.

அந்த அகஸ்தியனின் உணர்வுகளை எடுத்து நம் உடலில் வளர்ப்போம்.
1.இனி நமக்கு இந்த உடல் தேவை இல்லை
2.உணர்வின் ஒளியே போதுமானது
3.உயிருடன் ஒன்றி… அவனுடன் அவனாக வாழ்வதே கடைசி நிலை.

அகண்ட அண்டத்தில் எத்தகைய பிரளயங்கள் வந்தாலும் துருவ நட்சத்திரமும் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அழிவதில்லை.

சூரியன் ஒரு காலம் அழியலாம்… அப்படி அழியும் காலம் வந்துவிட்டது. அழிந்து… இந்தப் பிரபஞ்சத்தில் விஷத்தின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது பூமியில் வாழும் மனிதனின் நிலையும் செயலற்றாக மாறிவிடும்.

“அதற்கு முன் நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றடைய வேண்டும்…!”

Leave a Reply