அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனான்.. ஏன் நாம் ஆக முடியாதா…?

அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனான்.. ஏன் நாம் ஆக முடியாதா…?

 

வான் வீதியிலே ஜீவ அணுக்கள் உருவாகி இருக்கிறது… நிறைய இருக்கின்றது என்று சுமார் 40 வருடங்களுக்கு முன்பே சொல்லி இருந்தேன் (ஞானகுரு).

பூமிக்குள் வரும் பொழுது அது எதன் எதன் வழிகளில் எந்தெந்த நட்சத்திரத்தின் நிலைகளில்,,, அதன் உணர்வின் தன்மை மோதப்பட்டதோ வியாழன் கோளுக்குள் வரும்பொழுது ஜீவனுள்ள அணுவின் தன்மையாக மாறுகின்றது.

இன்று விஞ்ஞானிகளும் சொல்கின்றார்கள் வான் வீதியில் வைரஸ் என்ற அணுக்கள் இருக்கிறது… அங்கே ஜீவிக்க முடியும் என்று.

ஆனால் தாவர இனங்கள் இல்லாது மேலே (வான்வீதியில் மற்ற மண்டலங்களில்) வாழ முடியாது.

1.எல்லாக் கோள்களிலும் “வைரஸ்கள்…” அந்த அணுக்களுக்குள் இருக்கத்தான் செய்கின்றது.
2.அங்கிருக்கக்கூடிய உணர்வுகளை எடுத்தாலும் மாற்றிடும் உடலின் நிலைகள் இல்லை… உடல் பருமனம் இல்லை.
3.விஷ அணுக்களின் தன்மை வைரஸ்களாக மாறுமே தவிர உடல் அமைப்புகள் இல்லை.

காற்று மண்டலமாக மாறும் தன்மை… திடப்பொருளாக உருவாகும் தன்மை… சில கோள்களில் தான் உயிரணுக்கள் தோன்றி மடிகின்றது… தோன்றி மீண்டும் மடிகிறது. சிறிது காலம் இருக்கும். எந்த மண்ணை எடுத்ததோ வளர்கிறது… மீண்டும் மடிகிறது.

1.பூமி ஒன்றிலே தான் தாவர இனங்கள் இருப்பதனால் அதன் வழி கொண்டு
2.உயிரணுக்கள் அந்தச் சத்தினைக் கவர்ந்து ஒவ்வொரு உணர்வும் உணர்ச்சி கொண்டு
3.தாவர இனத்திற்கு ஒப்ப எண்ணங்களாகி உணர்வின் சத்தை எடுத்து உடலுக்கொப்ப அணுக்களும் வருகின்றது

இதையெல்லாம் இன்று விஞ்ஞான அறிவு கண்டு கொண்டு தான் உள்ளார்கள். இந்தப் பூமியை விடுத்து “மற்ற மண்டலங்களுக்குச் சென்று அங்கே வாழலாம்…” என்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் ஞானிகள் காட்டிய வழியில் செல்லும் நிலைகள் இல்லை. உடல் பற்றே வருகின்றது. சொர்க்கலோகமாக இருக்கும் இந்த மனித உடலிலிருந்து என்றுமே அழியாத நிலை பெற முயற்சிக்கவில்லை.

ஏனென்றால்
1.சொர்க்கத்தை அடையும் தகுதி பெற்றது தான் இந்த மனித உடல்.
2.கார்த்திகேயா… என்று ஆறாவது அறிவின் துணை கொண்டு உயிருடன் ஒன்றி என்றும் ஒளியின் உடல் பெறுவது தான் சொர்க்கம் என்பது.
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் (நாம்) செல்லப்படும் பொழுது என்றும் ஒளியின் உடலாக மாறுகின்றது

இந்தச் சூரியக் குடும்பத்திற்குள் பிறந்தது தான் உயிரணு. அந்த உயிரணு பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சியாகி… மனிதனாக ஆன பின் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிச் சென்றது தான் அந்தத் துருவ நட்சத்திரம்.

1.சூரியனிலிருந்து வரக்கூடிய விபத்துக்களோ அல்லது விபரீதங்களோ…
2.இந்தப் பிரபஞ்சத்தில் வரக்கூடிய மற்ற எதுவாக இருந்தாலும்
3.துருவ நட்சத்திரம் அந்த விஷங்களை எல்லாம் மாற்றித் தன்னைச் சீர்படுத்தி ஒளியாக மாற்றிக் கொள்ளும் திறன் பெற்றது.

அது எப்படி அந்த நிலை பெற்றது…?

இந்த மனித உடலில் இருந்து தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.
1.இந்தப் பூமியில் தோன்றிய மனிதர்களில் விண் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன்
2.துருவத்தில் நிலை கொண்டு “அவன் தான் துருவ நட்சத்திரமாக உள்ளான்…”

நம்மைப் போன்ற மனிதன் தான் அகஸ்தியன்… அவன் துருவ நட்சத்திரமாக ஆனான். ஏன்… நாம் ஆக முடியாதா…?

Leave a Reply