காலம் காலமாக ஞானிகள் மக்களுக்குக் கொடுப்பது “அருள் ஞானப் பொக்கிஷம் தான்”

காலம் காலமாக ஞானிகள் மக்களுக்குக் கொடுப்பது “அருள் ஞானப் பொக்கிஷம் தான்”

 

ஏற்கனவே சொன்னது போன்று அருணகிரிநாதரைக் காக்க வேண்டும் என்று அவருடைய சகோதரி
1.தீமைகளை அவர் உடலில் ஏற்றுக் கொள்ளாதபடி திருமூலர் உணர்வுகளைத் தனக்குள் ஏற்று
2.தன் சகோதரன் அவன் திருந்த வேண்டும் என்று அவனுக்குள் சென்று அவனையும் திருத்தி
3.மெய் உணர்வுகளைப் பெறச் செய்து இந்த உடலுக்கு பின் சகோதரனும் ஒளியானது… தானும் ஒளியானது.

திருமூல மந்திரம் என்பது சாதாரணமானதல்ல…!

இந்த உலகம் தோன்றிய நிலையிலிருந்து சூரியன் எப்படி உருவானது…? பிரபஞ்சம் எப்படி உருவானது…? பிரபஞ்சத்தில் இருந்து உயிரணுக்கள் எப்படி உருவானது…? மனித உடலுக்குப்பின் நாம் என்ன செய்ய வேண்டும்…? என்ற தத்துவத்தை அன்று அகஸ்தியன் கண்ட உண்மைகள் அனைத்தையும் திருமூலர் கண்டார்.

அதே காலத்தில் தான் வியாசகர் கண்டார் அதே காலத்தில் தான் வான்மீகியும் கண்டார். ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பின்
1.உலகில் ஒரு சோதனை என்று வரப்படும் பொழுது
2.அறிந்திடும் ஆற்றலைப் பெற்ற அந்த அருள் ஞானிகள் தான்
3.அகஸ்தியன் பெற்ற பேருண்மை எல்லாவற்றையும் அறிந்து
4.மக்களுக்கு அதை ஒரு பொக்கிஷமாகக் கொடுத்தனர்.

அந்த அருள் ஞானிகள் அகஸ்தியன் பெற்றதைத் தங்களுக்குள் வளர்க்கப்பட்டு வெளிப்படுத்திய உணர்வுகள் எல்லாம் நமக்குள் இனி இயங்கத் தொடங்க வேண்டும்.

விஞ்ஞானத்தால் வரும் பேரழிவிலிருந்து நம்மை காக்க வேண்டும். காரணம் விஞ்ஞானத்தின் அழிவு எப்படி வரும்…? என்று சொல்ல முடியாது.

காற்று மண்டலம் நாளுக்கு நாள் விஷத்தன்மையாக மாறினாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைய வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கப்படும் பொழுது விஞ்ஞானத்தால் வந்த விஷத்தின் தன்மை நம்மைத் தாக்காது. இந்த உடலுக்குப் பின் ஒளி என்ற நிலையை அடைய முடியும்.

என்றும் மாறாத நிலையாக நாம் பெறுவதற்கு வலிமையான உணர்வுகளை நமக்குள் சேர்த்துப் பழகுதல் வேண்டும் அதற்குத் தான் இங்கே அருள் ஞானச் சக்கரத்தைக் கொடுத்துத் தியான பயிற்சியையும் கொடுக்கின்றோம்.

நான் (ஞானகுரு) கொடுக்கும் அருள் ஞானச் சக்கரத்தைத் தெய்வீக நிலையாக குரு காட்டிய அருள் வழியில் பேரின்ப நிலை என்ற நிலையில் அருள் சக்கரமாக எண்ணிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அதன் முன் அமர்ந்து தியானித்தாலே உயர்ந்த சக்திகள் கிடைக்கும் கவலையுடனும் சஞ்சலத்துடனும் இருந்தால் அந்தச் சந்தர்ப்பத்தில் சக்கரத்தை உற்றுப் பார்த்துத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணினால்
1.சக்கரத்தில் இருந்து உயர்ந்த உணர்வு வரும்…
2.நம்மைத் தெளிவாக்கும்… தெளிவான மனம் கிடைக்கும்… சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும்…
3.வாழ்க்கையை எப்படி வழி நடத்த வேண்டும்…? என்ற உணர்வும் வரும்
4.பிறருடைய தீமைகள் நம்மை இயக்காதபடி தடைப்படுத்தி வாழவும் முடியும்
5.இந்த உடலுக்குப் பின் என்றும் நிலையான அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்
6.மகிழ்ந்து வாழ முடியும்… மன நிறைவும் கிடைக்கும்.

ஆனால் வேதனை என்ற உணர்வு வளர்க்கப்படும் பொழுது இன்னொரு உடலுக்குள் சென்று மீண்டும் அதே வேதனையைத் தான் வளர்க்க முடியும். மனிதனல்லாத உருவாக மாற்றிவிடும் உயிர். இது போன்ற நிலையில் இருந்து விடுபட்டு அருள் வழி வாழ்வோம்… மெய்ப்பொருளைக் காணுவோம்.

1.இந்த உடலுக்குப் பின் பிறவில்லா நிலை அடைய
2.வாழ்க்கையில் தொழில் வளம் பெருகவும் மன அமைதி பெறவும் அருள் வழி வாழவும்
3.அருள் வழி வாழச் செய்யும் அருள் சக்தி பெறவும் இது உதவ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply