முதுமை என்பது உடலுக்குத் தான்… நமக்கு இல்லை…!

முதுமை என்பது உடலுக்குத் தான்… நமக்கு இல்லை…!

 

“மகரிஷிகள்…” அவர்கள் வாழ்ந்த காலத்தில் எதனை இனிமை கொண்டு வளர்த்தார்களோ அதைப் போன்று
1.நம்முடைய இந்த மனித உடல் வாழ்க்கை – முதுமையிலும்
2.அருள் ஞானிகளின் உணர்வின் தன்மை உடலிலே வளர்த்திடல் வேண்டும்.
3.ஒளியின் சிகரமாக வளர்த்து “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெறுவோம்…” என்று அந்த மன உறுதி கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் அத்தகைய நிலைகள் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அண்ட அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் விளைய வைத்து ஒளிச் சரீரம் பெறும் அந்த மூச்சலைகளைப் பூமியில் பரவச் செய்வோம்.

தானியங்களின் வித்தைம் விளை நிலைங்களில் ஊன்றி பல பல தானியங்களாக விளைய வைத்து எல்லோருடைய பசியைப் போக்குவது போல மெய் ஞானிகளின் அருள் ஞான வித்தை நமக்குள் ஊன்றி வளர்த்து அந்த வித்தின் தன்மை பல மகசூலாகப் பெருக்குவோம்.

அதன் மூலம்…
1.பிறருடைய ஆனந்தப் பசியை ஆற்றும் நிலையாக…
2.பேரானந்தப் பசியை ஆற்றும் அருள் வித்தாக நமக்குள் விளைய வைத்து இந்தப் பூமி முழுவதும் பரப்புவோம்.
3.அனைவரும் அதைப் பருகி பேரானந்த பெரு நிலை பெறச் செய்வோம்… அதனை வளர்த்திடுவோம்.

முதுமை என்பது உடல் வாழ்க்கையில் வெறும் வயதினால் வரும் முதுமை அல்ல. இந்த உடலின் தன்மை அது முதுமை அடையப்படும் போது… அதாவது ஒரு தானியம் அது முதுமை அடையப்படும் பொழுது வித்தின் தன்மையை அது முதுமையாக்கி அந்த உணர்வினை வித்தாக (பலன்) உருவாக்குகிறது.

அதைப் போல நம் உயிரின் தன்மை மனித உடலை உருவாக்கிய பின்… அறிந்திடும் உணர்வு கொண்ட ஒளியின் சரீரம் பெற்ற அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து
1.இந்த உடலை முதுமையாக்கி… (பாம்பு தன் சட்டையைக் கழற்றுவது போல்)
2.உணர்வின் தன்மை என்றும் இளமையாக்கும் நிலைகள் நமக்குள் வளர வேண்டும்.

காரணம்…
1.ஒவ்வொரு சரீரத்திலும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் அது இளமைப் பருவமே பெறுகின்றது.
2.இளமை பெற்று… அது உடலிலே முதுமை பெறும் போதுதான் முதுமையின் வித்தாக உரு பெற்று
3.உணர்வின் அறிவாக உயிருடன் ஒன்றிய நிலையாக அடுத்த அறிவின் ஞானச் சுடராக உணர்வின் சரீரத்தை வளர்க்கின்றது.

ஆகவே மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு… உயிருடன் ஒன்றி முழுமையின் நிலைகள் பெற்று… முழுமை அடையும் தன்மையாகப் பேரானந்தப் பெரு நிலையை நமக்குள் வளர்த்திடுவோம்.

அனைவரும் பேரானந்த நிலை பெறும் சக்தியாக நமக்குள் விளைவித்த அந்த அருள் உணர்வின் சத்தான வித்துக்களை உலகமெங்கும் பரப்புவோம்.

அதை நுகர்ந்தறிவோர் உணர்வுகளிலும் அந்த வித்துக்கள் படர்ந்து அவருக்குள் பேரானந்தப் பெரு நிலை அடையும் நிலையை அடையட்டும்.

அருள் ஞானிகளின் அரும்பெரும் சக்தியை அனைவரையும் பெறச் செய்வோம் என்று நாம் வாழ்த்தி வளர்த்திடுவோம்… வளர்ந்திடுவோம்…!

Leave a Reply