வியாழன் பனிப் பாறையாக ஆனது போல்… பூமியும் பனிப் பாறையாக மாறலாம்…!

வியாழன் பனிப் பாறையாக ஆனது போல்… பூமியும் பனிப் பாறையாக மாறலாம்…!

 

நம் நாட்டிலே தோன்றிய மகரிஷிகள் இந்த உலகம் உய்ய எத்தனையோ நிலைகளில் உயர்ந்த சக்திகளை இங்கே படரச் செய்துள்ளனர்.

“தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…” என்பது போல தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன் தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பூமியைச் சமப்படுத்தினான்.

பூமியின் துருவத்திலே பனிப் பாறைகள் உறைய உறைய… எடை கூடிக் குடை சாயும் நிலைகளுக்குச் சென்றதை
1.துருவத்தில் உறையும் பனிகளை… வெப்பத்தின் தணல் கொண்டு உருகச் செய்து
2.பூமியிலே நடு மையமாக மனிதனாக உயிர் வாழச் செய்யும் நிலையாக அவன் செயல்படுத்தினான்.

இல்லை என்றால் வியாழன் கோள் பனிப் பாறைகளாக எவ்வாறு பெரிதாக ஆகி இருக்கின்றதோ அதைப் போல சிறிதளவு ஒரு நொடி மாறினாலும் நமது பூமியும் பெரும் பனிப்பாறையாக மாறி உயிரினங்கள் வாழ முடியாத நிலை ஆகிவிடும்.

அப்படியே வாழ்ந்தாலும் பனிப் பிரதேசங்களில் மீன் இனங்களும் மற்ற உயிரினங்களும் வாழ்வது போல
1.மனித இனமே அல்லாத மற்ற உயிரினங்களாக மாற்றிவிடும்.
2.பனிக்குள் வாழும் உயிரினமாகத்தான் நாம் திரிய முடியும்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள வியாழன் கோளும் நம்மைப்போல மனிதர்களாக வாழ்ந்த இடம்தான்.

அங்கே விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியாகி அதற்குண்டான செயற்கைக் கருவிகளை அதிகமாகச் செயல்படுத்தப்பட்டு அதன் வழிகளிலேயே பெரும் பனிப்பாறையாக மாறிச் சுழற்சியின் வேகம் கூடி இன்று ஓடிக் கொண்டுள்ளது.

இப்போது எப்படிப் பனிப்பிரதேசங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவோ அதே போல
1.மனிதனாக இருப்பவரும் வளர்ச்சியற்ற நிலைகள் கொண்டு
2.உயிரினங்களாக இன்றும் வியாழனில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் சில உணர்வலைகள் இன்றும் இந்த பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டு வருகின்றது. பிரபஞ்சத்தில் மிதந்து வந்தாலும் அவ்வாறு வந்த அந்த நிலைதான் நம் பூமியில் உயிர் அணுக்களாக தோன்றி உயிரணுவின் நிலையிலிருந்து மனிதனாக உருப்பெரும் நிலைகளை நாமும் பெற்றிருக்கின்றோம்.

1.இந்தப் பூமியில் மனித இனம் இன்று வந்ததல்ல
2.வியாழன் கோளின் நிலைகளில் இருந்து நாம் வந்திருக்கின்றோம்.
3.இதை அறிந்து கொள்வதற்குத் தான் நம் பிரபஞ்சத்திலேயே சூரியன் இயக்கச் சக்தியாக இருந்தாலும்
4.வியாழன் கோளைக் “குருவாக…” வைத்தது.
5.உயிரணுவின் ஆற்றலை உயிர் அணுவாக உடலின் தன்மை பெறச் செய்தும் வியாழனின் நிலை தான்.

இங்கே நம் பூமியில் இன்று இருக்கும் விஞ்ஞான அறிவைக் காட்டிலும் பல கோடி ஆண்டுகளுக்கு முன் அன்று வியாழன் கோளில் விஞ்ஞான அறிவின் வளர்ச்சியால் தான் மனித இனங்கள் முழுமையாக அழிந்தது.

இங்கே இப்போது அணு ஆயுதங்களைச் செய்து வைத்திருப்பது போல பல கோடி ஆண்டுகளுக்கு முன் வியாழன் கோளில் வாழ்ந்த மனிதர்கள் அதைச் செய்து தான் இருள் சூழச் செய்து விட்டனர். பனிப் பாறைகளாகிக் பெரும் கோளாக மாறி விட்டது.

அங்கிருந்து தான் உயிரினங்கள் கடக்கப்பட்டு இந்தப் பூமியில் மனிதனாக உருவாகி இருக்கின்றோம். அன்று வியாழனில் மனிதர்கள் உருவானாலும் உயிரணுவின் தோற்றங்கள் இதே சூரியனின் இயக்க நிலைகள் கொண்டு வளர்ந்ததனால் மாற்றம் இல்லாதபடி இதே பிரபஞ்சத்தில் பூமியில் இன்று மனிதனாக வாழ்கின்றோம்.

அது போக… நம் பிரபஞ்சத்தில் உள்ள கார்த்திகை நட்சத்திரம் போன்ற ஏனைய பல நட்சத்திரங்கள் தனித்தன்மை கொண்டு தனக்கென்று ஒரு பிரபஞ்சமாக இயக்கும் நிலைகளில் சிறுகச் சிறுக (சுமார் 25 வருடங்களுக்குள்) பிரிந்து விட்டது.

பிரிந்ததனால்…
1.இந்தப் பிரபஞ்சத்தில் உருவான மனிதர்களுக்குக் கிடைக்கும் அறிவின் சிந்தனைக்குரிய நிலைகளும்
2.அனைத்தும் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் குறைந்து கொண்டே இருக்கின்றது.

அதனின் விளைவால் விஞ்ஞான அறிவால் இருள் சூழ்ந்த நிலைகளாக மாறி
1.நம்மையே அழித்துக் கொள்ளும் நிலையும்
2.நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் உணர்வாக இன்றைய விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்டது.

குடிபோதையில் உள்ளவர்களை என்ன தான் அவர்களை அதை நிறுத்தச் சொன்னாலும் அது தான் அவருக்கு ரசனையாக இருக்கும்… கேட்க மாட்டார்கள்.

உடலின் இன்பத்திற்காக மதுவை அருந்துபவர்களும் மற்ற சிந்தனையற்றுத் தன் நிலைகளில் அதையே தான் செய்து கொண்டிருப்பார்கள்.

அதே போல் விஞ்ஞான அறிவிலே சிக்கிய நாமும் இந்த உடலின் சுகத்திற்காக மற்றதை மறந்து தன் செயலை மறக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.

போதைப் பொருளை உபயோகிப்பது போலவே நாமும் விஞ்ஞான உணர்விலே சிக்குண்டு மனித உணர்வின் செயலைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கின்றோம்.

மனித இனமே பூண்டோடு அழிந்திடும் நிலை வளர்ந்து கொண்டிருக்கின்றது…!

Leave a Reply