உயிராத்மாவுக்குத் தேவையான உணவைக் கொடுப்பது எப்படி…? ஈஸ்வரபட்டர்

உயிராத்மாவுக்குத் தேவையான உணவைக் கொடுப்பது எப்படி…? ஈஸ்வரபட்டர்

 

ஜீவன் கொண்ட ஒவ்வொரு செயலுமே தன் ஜீவித உணவை எடுத்து எப்படி வளர்கின்றதோ அதைப் போன்றே இவ் ஆத்ம வலுத் தன்மைக்கு வலுக்கூடிய பிறகு… அதுவே ஒளிரும் தன்மையில் தனித்து இயங்கக்கூடிய வழித் தொடருக்கு “உணவு நிலை தேவை…!”

அதைப் பெறும் வழி முறை எப்படி…?

கல் மண் தாவரங்கள் உலோகங்கள் திரவகங்கள் ஜீவராசிகள் ஒவ்வொன்றுக்கும் ஜீவ சக்தியுடன் வாழும் காலத்தில் அது அதற்குகந்த உணவு நிலையை உட்கொண்டு ஜீவத் துடிப்புடன் வாழ்கின்றது.

கல்லும் மண்ணும் உலோகமும் திரவகமும் தாவர இன வர்க்கங்கள் எல்லாமே வளரும் பிடிப்பிலிருந்து எடுத்தவுடன் அதனுடைய வளர்ச்சி நிலை நின்று விடுகின்றது.

இப்படி அதனை உருமாற்றிச் செயல்படுத்தும் ஜீவனற்ற மாற்று நிலைக்கு உட்படுத்தியவுடன் அதன் வளர்ப்பு நின்று ஜட பிம்பப் பொருளாக கரையும் ஆவி நிலைக்கு உட்படும் வழித் தொடருக்குச் சென்று விடுகின்றது.
1.இதே போல் தான் ஜீவராசிகளின் உயிர்ச் சக்தியும்
2.உயிர் ஆத்மா பிரிந்தவுடன் திடப் பொருளாகி உணவு உட்கொள்ளும் நிலை மாறி ஆத்மா பிரிந்து செல்கிறது.

ஜீவ சக்தி கொண்ட ஒவ்வொன்றுமே தன் வளர்ப்பின் வளர்ப்பிற்கு உணவை உட்கொண்டு வாழ்வதைப் போன்று அழியாத நிலை என்னும் பிறவி இல்லா நிலை பெறும் சக்திக்கும் அதன் வளர்ச்சி வளர் கொள்ள உட்கொள்ளும் (உணவு) வழித் தொடர் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

வளர் தன்மைக்கு ஆண் பெண் அமிலச் சேர்க்கை ஜீவத் துடிப்பு எப்படி அவசியமோ அதைப் போன்றே
1.ஆத்மாவைச் சரீரத்திலிருந்து பிரித்துச் செயல்படுத்தும் வழி முறைக்கு
2.உடலுக்கு வேண்டிய உணவை உட்கொள்வது போன்றே
3.ஆத்மாவிற்கான உணவைச் செயல்படுத்தும் வழி முறை செயல் தான் “அஷ்டமா சித்து” கொண்ட வளர் நிலை.

பலவற்றில் இருந்து விளைந்து உயர்வின் முற்றிய தன்மையான மனித சக்தியின் எண்ண உணர்வு சொல் செயல் ஆற்றல் கொண்ட ஆத்ம சரீர சக்தியில் இருந்து தான் மனிதச் சக்திக்கு அடுத்த வளர்ப்பு சக்தியான தன் ஆத்மாவைப் பிரித்துச் செயல்படுத்தும் வழி முறை வளர்ச்சி நிலைக்குச் செல்ல முடியும்.

அதற்குரிய ஆரம்பத் தொடர் உணவு நிலையாக… ஆத்மா பெறும் நிலை எண்ணத்தைச் செலுத்திக் காற்றலையின் தொடர்பிலிருந்து தன் சுவாச ஈர்ப்பிற்கு நறுமண அலைத் தொடர்பையும் கனிகளின் சுவை அலையையும் பெற்று அச்சுவைகளை உணவாக எடுக்கும் வழித் தொடரை ஆத்மா பெறுகின்றது.

1.காந்த மின் அலையின் வார்ப்பு சக்தியை ஜெபத்தால் எடுக்கும் ஞான சக்தியில்
2.தன் ஆத்மாவைத் தானே காணக்கூடிய வழி முறை பெற்றவுடன்
3.சரீர இயக்கத்திலிருந்தே உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி உணவு எடுக்கும் வழி முறை பெற்று
4.அவ்வழி முறைத் தொடர்பில் இருந்து ஆத்மா தனித்து இயங்க
5.ஆத்மாவுக்கந்த ஆத்ம அலைத் தொடரில் தொடர்பு கொண்டு
6.ஆத்மாவிற்கும் ஆத்மாவிற்கும் உள்ள தொடர்பலையின் ஈர்ப்பலையின் ஈர்ப்பிலிருந்தே தன் ஆத்மாவிற்கு உணவெடுத்துக் கொள்கின்றது.

வலுக் கொண்ட நிலையில் தனித்து இயங்கும் ஆத்மாவின் செயல் ஒன்றை அறிய… அணுவுக்குள் அணுவாக… இச்சரீர பிம்ப இயக்கத் தொடர்புடன்…
1.சரீரத்தில் இருந்து எண்ணத்தை வெளிப்படுத்திய ஆத்மா செயல் கொள்ளும் வழித் தொடரில் மோதும் பொழுது…
2.இச்சரீர சுவாச ஈர்ப்பிற்கு அவ் அணு அலை வளர்ச்சி கொண்ட
3.சேமித காந்த நுண் அலை சுவாசத்தின் உணர்வில் சமைத்து
4.எலும்புகளின் உராய்வு கொண்டு – ஆத்மாவின் செயலுடன் ஒன்றுகின்றது… “உணவாக…!”

இத்தகைய நிலை பெற்றால் ரிஷிகளின் தொடர்பலையுடன் ஒன்றிட முடியும். அவர்கள் பெற்ற வளர்ச்சியையும் பெற முடியும்.

Leave a Reply