மகரிஷிகளுடன் இணைந்து நீங்கள் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்

மகரிஷிகளுடன் இணைந்து நீங்கள் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்

 

மீண்டும் மீண்டும் யாம் (ஞானகுரு) ஞாபகப்படுத்துவது… யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் தான் அந்த நிலையை உருவாக்கி விடுன்றது.
1.அந்தச் சந்தர்ப்ப சூழ்நிலையில் இருந்து விடுபடவே
2.மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களை அடிக்கடி அடிக்கடி பெறச் செய்கின்றோம்.

இதை உறுதுணையாகக் கொண்டு வாழ்க்கையில் அறியாத வந்த தீமைகளை அகற்றிட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

உலகம் காக்கப்பட வேண்டும்… உலக மக்கள் காக்கப்பட வேண்டும். வரும் எதிர்காலக் குழந்தைகள் அருள் ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும். உலகைக் காத்திடும் உணர்வாக விளைய வேண்டும் என்று அந்தந்தக் குடும்பத்தில் இதைக் கடைப்பிடியுங்கள். விஜயதசமி… கல்கி என்ற பத்தாவது நிலையை அடையுங்கள்.

ஒவ்வொரு மாதம் தசமி என்று இருப்பினும் சதுர்த்தி என்று இருப்பினும் அதை எல்லாம் தீமைகளை அகற்றும் நாளாக மாற்றி ஒவ்வொரு மாதத்திலும் இதைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த அருள் ஞானிகள் காட்டிய வழிகளில் முழுமையான நிலைகள் கொண்டு
1.உயிருடன் ஒன்றி நாம் வாழ்வோம்
2.இந்த உணர்வுகளை வலுப் பெறச் செய்து இந்த வாழ்க்கையை வாழ்வோம்… வளர்வோம்.
3.யாரையும் பகைமை கொண்டு பார்க்க வேண்டாம்
4.பகைமைகளைத் தனக்குள் புக விடவும் வேண்டாம்.

மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு நாம் இணைந்திடும் உணர்வை வளர்ப்போம்… உலகைக் காத்திடும் நிலைகள் பெறுவோம்.

கருவில் வளர்ந்து வரக்கூடிய குழந்தைகள் தான் உலகில் வரும் நஞ்சினை அடக்கி உயர்ந்த ஒளியின் சரீரம் பெறும் தகுதியை இனி பெறுவார்கள்.

ஒவ்வொருவரும் நீங்கள் இதைச் செய்யுங்கள் உலகைக் காத்திடுங்கள்… உங்களைக் காத்திடுங்கள். பிறவா நிலை என்ற நிலையை அடையுங்கள். பிறவி இல்லா நிலை அடைந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

என்றென்றும் உயிருடன் ஒன்றி வாழும் அந்த மகரிஷிகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன். அந்த நிலையை நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள் என்று பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).

Leave a Reply