சாமி (ஞானகுரு) சொன்னபடி “அருள் சக்தியைப் பெறுவேன்…” என்ற எண்ணத்திற்கு நீங்கள் வர வேண்டும்
ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று அடிக்கடி தியானியுங்கள்.
1.கண்களைத் திறந்து ஒரு நிமிடம் எண்ணுங்கள்
2.கண்களை மூடி ஒரு நிமிடம் அந்தச் சக்திகளை உடலுக்குள் செலுத்துங்கள்.
இங்கே யாம் (ஞானகுரு) கொடுக்கும் உபதேச வாயிலாகப் மகரிஷிகளின் அருள் சக்திகளை இங்கே பதிவு செய்து வைத்திருக்கின்றோம்… காற்றிலேயும் பரப்பி வைத்திருக்கின்றோம்.
அதைப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணி எடுக்கும் பொழுது உங்கள் உடலுக்குள் தன்னாலே வந்து சேருகிறது.
1.கண்களை மூடி… பின் திறந்து
2.மறுபடி கண்களை மூடி… திறந்து அந்தச் சக்திகளை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
3.கண்களைத் திறந்த பின் “வீட்டில் கஷ்டம்…” என்று சொல்வதை விட்டு விடுங்கள்
4.உங்கள் வார்த்தையில் கஷ்டம் என்ற சொல்லை நீக்கி விட்டு
5.அதனை நீக்கும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும். எங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரது உடல்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.
எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். சகோதர உணர்வுகள் வளர வேண்டும் நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று இப்படித் தொடர்ந்து எண்ணுங்கள்.
இதைத் தான் நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகின்றேன். “சாமியார் சொன்னார்” என்றால் அதை மட்டும் நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் நீங்கள் எண்ணி எடுக்கலாம் அல்லவா…!
மிகவும் கஷ்டமாக இருக்கிறது… என் பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை… தொழில் சீராக இல்லை… என்று இங்கே வந்து இப்படித்தான் என்னிடம் கேட்கின்றார்கள்.
காற்றிலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பரவியுள்ளது. வீட்டில் அமர்ந்தபடியே அந்த அருள் சக்திகளைப் பெற்று நீங்களே எடுத்து உங்கள் வீட்டிலே பரப்பிக் கொள்ள முடியும்.
இதை நீங்களே செய்யலாம்.
1.என்னை நம்பி என்னிடம் எதிர்பார்க்கின்றார்கள்.
2.ஆனால் தன்னை நம்பி நான் சொன்ன உணர்வுகளை நீங்களே எண்ணி எடுக்க முடியும்.
3.அதற்குத் தான் இங்கே தியான மண்டபம் அமைத்தது.
உயர்ந்த சக்திகளை அவரவர் எண்ணி எடுப்பதற்குத் தான் இந்த மண்டபமே தவிர அது எனக்காக அல்ல. இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்…?
உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று நான் எண்ணி எடுக்கும்போது நான் அங்கே செல்கின்றேன்.
அந்த மகரிஷிகள் அருள் சக்தியைப் பெறுகின்றேன். என்னை நாடி வருபவர்களுக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக நீ ஆகின்றாய் என்று கீதையிலே சொல்வது போல் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணும் போது “நான் அதுவாக ஆகின்றேன்…”
ஆகவே…
1.உங்களை அறியாது இருள்கள் நீங்க வேண்டும்
2.மெய்ப் பொருள் காணும் திறன் நீங்கள் பெற வேண்டும்
3.எல்லோரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்
4.தொழில் நன்றாக இருக்க வேண்டும்… செல்வச் செழிப்பாக வாழ வேண்டும்
5.உங்களுடைய மூச்சுகள் எல்லாம் பரமாத்மாவில் கலந்து அனைவரையும் நலமுடன் வாழச் செய்ய வேண்டும் என்று
6.நான் உங்களுக்குச் செய்வது போல் நீங்களும் மற்றவர்களுக்கு இப்படி எண்ணினால் நீங்களும் ஞானியாக முடியும்.
ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மக்கள் பெற வேண்டும் என்று முதலில் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பின்…
1.எங்கள் வீடு முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
3,எங்கள் தாய் தந்தையின் அருளாசி எங்களுக்குக் கிடைக்க வேண்டும்
4.எங்கள் மூதாதையர்களின் நல்லாசி கிடைக்க வேண்டும்
5.எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்
6.எங்களுக்கு நல்ல மனதும் எங்களைப் பார்ப்பவர்களுக்கு நல்ல மனதும் வர வேண்டும் என்று
7.உங்கள் உயிரிடம் கேட்டால் அவன் அதை எல்லாம் உருவாக்கித் தருவான்…!
இதை நீங்கள் கேட்டுப் பெறலாம் அல்லவா.
சாமியிடம் தான் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. உங்களாலே அது முடியும்… உங்களை நீங்கள் நம்புங்கள் என்று சொல்கிறேன்.
என்னை நம்புகிறீர்கள்… ஏதோ பெரிய சக்தி படைத்தவர் என்று…!
1.ஆனால் நான் சொன்னபடி நீங்கள் எண்ணி எடுத்துப் பாருங்கள்.
2.உங்களுக்குள் எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
காளி… பராசக்தி… என்று அம்மனை வணங்கும் வழி எல்லாம் அரசர்களால் உருவாக்கப்பட்டது தான் – ஈஸ்வரபட்டர்
ஆதிசங்கரர் காலங்களிலும் அதற்கு முந்தைய காலங்களிலும் இப்பூமியில் பல மகான்கள் வளர்ந்தார்கள். தன் ஞானத்தால் தெய்வசக்தி பெற்று சப்தரிஷியின் தன்மைக்குத் தன் வலுவையும் வலுவாக்கிக் கொண்ட மகான்களை வளர்த்த பூமி தான் “நம் தாய் பூமி…”
1.அதன் தன்மையின் தொடர் வளர்ப்பு நிலையற்று
2.அந்த ஞானச் செயலே விஞ்ஞானச் செயலாக
3.ஞானத்தின் தொடர் அலையின் செயல் “செயற்கை ரூபத்தில்…”
4.ஏட்டுப் படிப்பு வழி முறையிலும் இவ்வொலி அலை மின் சாதனத் தொடர்பலையிலும் சென்று விட்டது.
இதுவல்லாமல் தன் ஞானத்தால் வளர்ந்த சக்தியைச் செயல்படுத்த வந்தவர்கள் எல்லாம் தன் வலுத் தன்மையின் வலுவை எடுக்கவல்ல ஆத்ம வளர்ச்சி ஞானம் குன்றிய தன்மையில்
1. கல்லில் சிலை செய்து ரூப வழிபாட்டு முறைப்படுத்திக் கொண்டு
2.தன் பக்தியைக் காட்ட “வணங்கும் தொடரை” ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அதுவுமல்லாமல் இந்தப் பூமியின் வளர்ப்பில் சுழற்சி ஓட்ட கதியில் மண்டல ஈர்ப்பு சந்திப்பு நிலைகளிலெல்லாம் இப்பூமியின் வளர்ப்புத் தன்மையினால் பல மாற்ற “பிரளய காலங்கள்” ஏற்பட்டது.
ஒவ்வொரு பிரளய மாற்றத்திலும் இப்பூமியின் ஈர்ப்பு வளர்ப்பு செயல் ஓட்டமானது வளர்ப்பின் நிலைக்குகந்த மாற்றச் செயலினால் அந்தந்த மாற்றத்திற்குப் பிறகு வளரக்கூடிய அணு வளர்தன்மையும் மாறியே வந்தது.
1.குண ஈர்ப்பின் அமிலமே பிரளய மாற்றத்திற்கு முன் இருந்த நிலை வேறு…
2.மாறிய பிறகு வளரும் நிலை வேறாக
3.இப்பூமியில் படியும் அமில வலு மாறிவிடுகின்றது.
தங்கத்திலோ மற்ற உலோகத்திலோ செய்யப்படும் பொருள்களை மாறி மாறி அதை அழித்து நாம் மற்றொன்றாக உருவாக்கும் பொழுது அதனுடைய தரத்தில் மாற்றம் ஏற்படுகின்றதல்லவா…!
அதைப் போன்ற நிலை தான் இத்தொடரில் வந்துள்ள ஞான வளர்ப்பு நிலை வளர்ச்சி தொடர் அலையே இப்பூமி வெளிக்கக்கும் அமில வளர்ப்பின் நிலைக்கொப்பத்தான் ஞானமும் வளர்கின்றது இன்றளவும்.
இந்த ஞானத்தின் செயல் முறை வழித் தன்மையே ஆதிசங்கரரின் காலத்திற்கு முந்தைய காலத்திலிருந்து அவரின் காலம் வரைக்கும் ஞான சக்தி வளர்ச்சியின் பாதையில் இருந்தது.
அவருக்குப் பிந்தைய காலத்தில்…
1.அரசர்களின் போற்றலின் பேராசை உணர்வு நிலை அதிகப்பட்டு விட்டதாலும்
2.மனித இன (மக்கள் தொகை) வளர்ச்சிப் பெருக்க நிலையினாலும்
3.மனிதனின் எண்ண ஈர்ப்பே இப்பேராசை உணர்வில் சிக்கி
4.அரசர்கள் ஆண்ட கால உணர்வில் அவர்களின் ஆதிக்க ஈர்ப்புப் பிடிப்பில் சிக்கிய தொடர்பலை வளர்ப்பாக
5.ஒன்றின் தொடர் கொண்ட தொடர் வட்டச் சுழற்சியில் சுழன்று வருகின்றது இன்றளவும்.
அரசர்களின் காலத்தில் தான் இப்பக்தி வழி முறை அதிகமாக வளர்ந்தது.
அதுவுமல்லாமல் இவ்வரசர்களினால் சில அலைத் தொடர்களைச் சில சக்தி வாய்ந்த பக்தி கொண்ட தெய்வ குண சித்து நிலை கொண்ட அலைத் தொடர்புடைய தெய்வ ஆவி அலைகளைத் தன் வசப்படுத்திக் கொண்டார்கள்.
தன் ஆதிக்க அரசு வாழ பிற அரசர்களின் போர்த் தொடர்புகளுக்கு இவ்வாவி அலை தெய்வ குணச் சக்திகளை இவர்களின் பூஜாபலனால் உருவேற்றிக் கொண்டார்கள்,
விக்கிரமாதித்தன் காலத்திலும் அசோக சக்கரவர்த்தி காலத்திலும் அதைப் போன்றே வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்திலும் பல அரசர்களும் இப்பூஜை வழிபாட்டுச் சித்து முறை பெற்று ஆவிகளின் தெய்வ குண தேவதைகளின் தாய் சக்தியை வணங்கி வந்தார்கள்.
1.அவர்கள் நாட்டை அரசாண்ட காலத்தில்
2.அரசர்களின் வலுவுக்கு வலுவாக இச்சக்திகள் தான் ஆண்டன.
புராண இதிகாச நூல்களில் சித்தர்கள் பால் தொடர் கொண்ட காவியங்களில் எல்லாம் ஆண் பெண் குண சக்தியின் தொடர்பில் உணர்த்தித்தான் உண்மை நிலைகளை எல்லாம் காட்டினார்கள்.
சிவ சக்தி… விநாயகன்… முருகன்… விஷ்ணு… என்றும் நாரதர் என்றும் ஆணின் தொடர்பு முறையை வலியுறுத்திய தெய்வ குணங்களாக இராமரையும் கிருஷ்ணரையும் ஒவ்வொரு பிரளய மாற்றத்திலும் இராமரின் குண சக்தியையே பல ரூப அலை ஞான செயல் குண இராமனாக உணர்த்தினார்கள்.
சீதாராமன்… பலராமன்… பரசுராமன்… இப்படிக் கால மாற்றத்தின் குண நிலை வளர்ப்பு அமில எண்ணத்திற்குகந்த செயல் உருவ வளர்ப்பிற்கு அந்தந்தக் காலங்களின் வீரியத் தன்மைக்குகந்த நாமகரணங்களைச் சூட்டி ஆண் குண அமிலத் தன்மைக்குகந்த தெய்வச் செயலைத்தான் “சப்தரிஷிகளின் சித்தர்களின் காலங்கள்” உணர்த்தின.
“அரசர்கள் காலத்தில்” வணங்கிய தெய்வங்கள் யாவையுமே பெண் சக்தியான காளி மாதா… என்றும் அதன் தொடர்புடைய ரூபத்தில் பராசக்தி… என்றும் ஜக்கம்மா… என்ற தாய் சக்தியும் உஜ்ஜயினி காளி சக்தியும்… சௌண்டம்மனின்.. தொடர்பும் இத்தொடரால் வந்தவை தாம்.
1.மனித சக்தியின் தெய்வ சக்தி பெற்ற
2.சித்து நிலை கொண்ட தாய் குணத்தின் பூஜிப்பின் அலைத் தொடர் வசச் செயலினால் தான்
3.அரசர்கள் பலர் அத்தொடர்பினால் தன் வலுவுக்கு வலு கூட்டிக் கொண்டு அரசர்களின் காலம் நடந்தது.
அந்தத் தொடர்பின் வழி முறையில் தான் “இக்கலியே நடக்கின்றது…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஒவ்வொரு நிமிடமும் “மெய்ஞானியின் அருள் ஒளியை…” யாம் உபதேசிக்கும் பொழுது நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு
1.புலனறிவுகள் ஐந்திலும்
2.கண்ணின் பார்வையிலும் உணர்வைச் செலுத்தி
3.உங்கள்பால் யாம் செலுத்துகின்றோம்.
நீங்கள் எந்த ஏக்கத்துடன் வருகின்றீர்களோ அந்த ஏக்கத்திற்குள் நாம் இதைப் பாய்ச்சச் செய்கின்றோம்.
இதைப் போன்ற உணர்வின் வேகம் கொண்டு குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
1.யாம் உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து
2.உங்கள் உயிரான காந்தத்துடன் தொடர்பு கொள்கின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை முதலில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு மெய்ஞானியின் அருள் சக்திகளை யாம் சுவாசிக்கின்றோம்.
அவ்வாறு சுவாசிக்கும் பொழுது எனது புலனறிவான ஐந்திலும் அது பாய்கின்றது. அதே சமயம் எனது உணர்ச்சியின் சொல்லின் வடிவிலும் அது வருகின்றது.
அவ்வாறு வரும் நிலைகளைத்தான் உங்களுக்குள் யாம் எண்ணிப் பாய்ச்சுகின்றோம்.
அதைப் பெற வேண்டும் என்று சமமாக எண்ணும் பொழுதுதான் நீங்கள் அந்த நிலைகளைக் கேட்க முடியும். “கேட்க வேண்டும்” என்ற விருப்ப நிலைகள் வரப்படும் பொழுதுதான் இது உங்களுக்குள் பதிவாகின்றது.
ஆனால் வேறு பக்கம் எண்ண அலைகளைப் படரவிட்டு எண்ணிக் கொண்டிருந்தால் யாம் உபதேசிப்பதைக் கவராது உங்கள் ஈர்ப்பினுடைய நிலைகள் தடையாகும்.
உதாரணமாக பேசும் பொழுது மைக்கை (MIC) அந்தப் பக்கம் திருப்பி வைத்து விட்டால் சப்தம் குறையும். அதைப் போல
1.மற்ற உணர்வின் நிலைகளை நமக்குள் நினைவுபடுத்தும் பொழுது
2.நமது உணர்வுகள் நாம் பேசும் உணர்வலைகள் ஒன்றுக்கொன்று மாறுபடப் போகும் பொழுது
3.”அரத்தங்கள்…” உங்களுக்குள் பதிவாகாது
4.இதைப் படித்திருந்தாலும் கேட்டிருந்தாலும் இதற்குப் பின் “ஞாபக சக்தியும்” வராது.
அதனால் அர்த்தமற்ற உணர்வின் நிலைகளாகிப் போய்விடும். நீங்கள் தியானமிருக்கும் பொழுது இதை எண்ணினாலும் அந்தச் சக்திகள் கிடைப்பதும் அரிதாகிவிடும்.
ஏனென்றால் காற்றிலிருப்பதைச் சமப்படுத்திய நிலைகள் கொண்டு, உங்களுக்குள் பதியச் செய்திருந்தால்தான் நீங்கள் இதை “இயக்க…” முடியும்.
யாம் குருநாதர் மூலம் “அதைத் தெரிந்து கொண்டோம்… இதை அறிந்து கொண்டோம்…” என்று சொல்ல வரவில்லை.
1.அருள் ஞானிகள் தமக்குள் வளர்த்த அந்தச் சக்தி வாய்ந்த ஆற்றல்களை
2.அந்த ஞான வித்துக்களை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்வதற்குத்தான் இந்த உபதேசமே.
அந்த ஞான வித்து உங்களுக்குள் வளர்ந்தால் அந்த ஞானிகள் எதைச் செய்தார்களோ அதை நீங்களும் செய்வீர்கள்.
வாழ்க்கை வேதனையாகவே இருக்கிறது என்று சொன்னாலும் உடலுக்குப் பின் எங்கே செல்வோம் என்பதை அறிந்திருக்கின்றோமா…!
உதாரணமாக… வேதனைப்படுகிறார் என்று ஒருவர் மேல் எண்ணம் கொண்டு “அவரைக் காத்திட வேண்டும்…” என்ற எண்ணங்களைச் செலுத்துகின்றோம்.
ஆனால் அதை அதிகமாகச் சுவாசித்து நமக்குள் வளர்த்தாலே
1.அந்த உடலை விட்டு உயிராத்மா சென்றபின் அவருடைய மணமே நமக்குள் வந்து
2.அவர் இறந்தபின் உயிரான்மா நமக்குள் வந்துவிடும்.
எந்த நோயைத் தனக்குள் விளைய வைத்தாரோ… அதே உணர்வு… அதே புலம்பல்… அதே செயல்… என்று நமக்குள்ளும் வந்துவிடும்.
அவருடைய எண்ணமும் நம்முடைய எண்ணமும் ஒன்றான பின் நமக்குள்ளும் அவர் வளர்த்த அதே நஞ்சினை ஊட்டி இங்கிருந்து உணவாக உட்கொண்டு நம்மையும் வீழ்த்தி விட்டு அந்த உயிரான்மா வெளியே சென்று விடும்.
தன் உடலில் எத்தனை வேதனைப்பட்டதோ அடுத்த உடலிலும் எத்தனை வேதனைப்படுத்தியதோ அந்த வேதனை அதிகமான பின் மனிதனுடைய எண்ண அலைகளே வராது… நஞ்சு கொண்ட எண்ணம் தான் அந்த உயிரான்மாவில் இருக்கும்.
அந்த நஞ்சு உயிருடன் சேர்ந்து வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கும். இதைத் தான்
1.”உன் நிழல் உன்னுடனே தான் இருக்கும்…” என்று நமது சான்றோர்கள் அன்று சொன்னார்கள்
2.இந்த உயிர் உடலில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் நிழல்
3.அதில் எத்தனை வேதனைப்பட்டதோ அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும்
தேள் பாம்பினங்கள் இவை அனைத்தும் நஞ்சினை ரசித்துச் சாப்பிடும் உயிரினங்கள் தான். எந்த இரையைப் பிடித்தாலும் அதற்குள் தன் நஞ்சினைப் பாய்ச்சி அதை உணவாக எடுத்துத் தனக்குள் ஜீரணிக்கும் சக்தி கொண்டவைகள் தான்.
நஞ்சின் வலு கொண்டு அது ஊர்ந்து சென்றாலும் வேதனை அறியாத உடலாகத் தான் அவை பெறுகின்றது.
கட்டுவிரியனுக்கு ஒரு விஷம்… நல்ல பாம்பிற்கு ஒரு விஷம்… கண்ணாடி வீரியனுக்கு ஒரு விஷம்…! இப்படித் தரையிலே ஊர்ந்து செல்லும் பிராணிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான விஷம் உண்டு.
அதைப் போல்
1.மனித உடலில் எத்தனை வேதனைகளை எடுத்துக் கொண்டோமோ
2.எத்தகைய விஷத்தை நமக்குள் ஏற்றுக் கொண்டோமோ
3.அது எல்லாம் நாம் உடலில் கலந்து நம் உணர்வுகளில் கலந்து நோயாகிறது.
நோயின் உணர்வுகள் விளைந்து உடலை விட்டு ஆன்மா பிரிந்து சென்றபின் இன்னொரு உடலுக்குள் சென்றாலும் விஷத்தின் தன்மையை அங்கே பரப்பி அதையே உணவாக எடுத்து அந்த உடலையும் வீழ்த்திவிடும்.
உதாரணமாக நாம் செய்யும் பலகாரத்தில் சிறிதளவு விஷம் பட்டால் சாப்பிட்டால் மயக்கம் வருகின்றது. அதிகமான விஷம் பட்டு விட்டால் சாப்பிட்டவர் நினைவையே இழக்கச் செய்து விடுகின்றது.
அதைப் போன்று தான் மனிதனுக்குள் விளைந்த நஞ்சின் தன்மை மனித உருப் பெறச் செய்யும் நல்ல உணரவுகள் அனைத்தையும் அடக்கிவிடுகிறது.
இத்தகைய உயிரான்மா வெளியே வந்தபின் சிந்தனையற்ற நிலைகள் கொண்டு வேதனையை அனுபவித்துக் கொண்டே தான் இருக்க முடியும்.
1.கடைசியில் நஞ்சினை ரசித்துச் சாப்பிடும் உடல்களின் ஈர்ப்புக்குள் சென்று பாம்பாகவோ தேளாகவோ அது வாழும்.
2.மனித வாழ் நாளில் பெற்ற விஷத் தன்மை அங்கே சென்று தான் அடங்கும்.
அந்த உடலிலிருக்கும் போது ஒரு மனிதன் அடித்துக் கொன்றான் என்றால் மீண்டும் மனித உரு பெறும் வாய்ப்பு கிடைக்கும். அது அல்லாது பருந்தோ கோழியோ மற்ற பிராணிகள் உட்கொண்டால் அந்த உடலாகத் தான் பிறக்கும். மனித உடல் பெற முடியாது.
இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள். நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
உடலை விட்டுப் பிரிந்தவரின் உணர்வு தான் பெரும் பகுதி எல்லோரையும் இயக்கிக் கொண்டுள்ளது – ஈஸ்வரபட்டர்
பெரியோர்களின் வாக்குப்படி மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற சொல் கூற்று உள்ளது… அதன் தொடர் யாவை…?
1.பேயைப் பார்க்க முடியுமா…?
2.பிசாசு உண்டா…?
3.இரத்தக் காட்டேரிகள் வாழ்கின்றனவா..? என்பது யாவையும் உண்மைதான்.
தற்கொலை செய்து கொண்ட ஆவேச அலை உணர்வுடன் ஜீவன் பிரிந்த ஆவி உலக உயிர் ஆத்மாக்கள் சில இல்லங்களிலும் அவை வாழ்ந்த பழக்கப்பட்ட இடங்களிலும் அதன் எண்ண ஆசையைச் செயல்படுத்த வேண்டியவர்களின் தொடர் வட்டமுடன் இந்தக் காற்றலையின் சுழற்சியில் சுழன்று கொண்டே இருக்கும்.
அத்தகைய ஆவி உலக ஆத்ம உயிரின் அமிலக்கூறானது உள்ள இடங்களுக்கு சரீர ஜீவ பிம்ப உடல் கொண்ட எண்ண உணர்வுடைய மனிதன் பயம் கலந்த அச்ச நிலையுடன் பல உணர்வுகளில் செல்லும் பொழுது
1.ஆவி உலக ஆத்மாவின் அலைத் தொடரும்
2.சரீர பிம்ப உடலின் அலைத் தொடரும்
3.இவ் ஈர்ப்பலையில் மோதும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதுண்ட நிலையில்
4.ஜீவ சக்தி கொண்ட துடிப்பு நிலை பெற்ற எண்ண உணர்வுடன் அவ்வெண்ணம் மோதியவுடன்
5.இக்காந்த ஈர்ப்புக் குண மின் அலைத் தொடர்பு கொண்ட இச் சரீர கோள நிலையுடன் மோதியவுடனே
6.எந்தப் பயமுடன் இந்த ஆத்மா சென்றதோ
7.அந்தத் தொடர் அலைக்குகந்த எண்ண குண ஆவி ஆத்மாவின் அமிலக் கூற்றை
8.நிழல் படம் போல் இவ்வொலி நாத் சக்தி கொண்ட சரீர சுவாச மோதல் அதன் அலை மேல் பாய்ந்தவுடன்
9.அது பேசிய நாதத்தையும் (வாழ்ந்த காலத்தில்) அதன் நிழல் உருவை மனிதனால் பார்க்க முடியும். (இன்று காணும் ஒளிக்காட்சி ஒலி அலையைப் போல்)
இதைப் போன்ற தொடர் அலையில் இருந்தெல்லாம் மனித உணர்வுப் பிடி சிக்காவண்ணம் தன் ஆத்ம வலுவை… ஞான ஈர்ப்பு வழித் தொடர்பு கொண்ட “மகரிஷிகளின் தொடர் அலையுடன்…” வலுவாக்கிக் கொள்ள வேண்டும். அத்தகைய வலுக் கொண்ட ஜீவத் துடிப்பு ஆத்ம நிலை பெற்று விட்டால் நம் எண்ணமே நம்மைக் காக்கும் சக்தியாக வரும்.
எண்ணத் தொடர் அலையின் செயல் இல்லா நிலை (மனிதனுக்குள்) ஒரு நொடிப் பொழுதும் இல்லை.
நித்திரை உணர்வுகளிலும்… இச்சரீரச் செயல் நடைபெறும் வழித் தொடரில்… சுவாசமுடன் கூடிய உணர்வு எண்ண அலை ஈர்ப்பில் தொடர் கொண்ட நிலையுடன் தான் எண்ணச் சுழற்சி கொண்ட இயந்திரக் கோளமாக இந்த உடல் உள்ளது.
பிரபஞ்சத்தில் மற்ற கோளங்கள் எல்லாம் எப்படி நிற்காமல் ஓடிக் கொண்டே உள்ளனவோ அதைப் போன்றே
1.ஓடிக் கொண்டே உள்ள இவ்வெண்ண உணர்வு வளர்ப்பு நிலை
2.ஜீவ சக்தி கொண்ட மனித உடலுக்குத்தான் உண்டு.
ஆவி உலக ஆத்மாக்களின் எண்ண ஓட்டத்தின் வலு எப்படி உள்ளது…?
இன்று நாம் எப்படி சில ஒலிப் பதிவுகளை நாடாக்களில் பதிய வைத்து ஒலி பரப்புகின்றோமோ… அதைப் போன்று அவை சரீரக் கூறுடன் வாழ்ந்த காலத்தில்… தன் ஆத்மாவில் பதிய வைத்த அலைத் தொடர் நாதச் சேர்க்கையுடன் தான்… அதே தொடர்பு சுழற்சியுடன் அதே சுற்றலில் சுற்றிக் கொண்டுள்ளது.
அந்த நிலையில்… வளர் நிலை கொண்ட எண்ண சரீர உணர்வு இயந்திர மின் அலைத் தொடர்பு அவ்வலைத் தொடர்புடன் பொருந்தும் பொழுது தான் இவ் இயந்திரக் கோளப் பெட்டியின் (மனித உடல்) செயலைக் கொண்டு அதன் நிலை பெறுகின்றது.
இவ்வாவிகளின் சுழற்சி வலுக் கூடி அதன் தொடர்பு விட்ட செயலாகச் செயல் கொண்டுள்ள வழித் தொடர் ஜீவ ஆத்மாக்கள் தான் “இன்று பிறப்பில் வரும் ஆத்மாக்களின் தொடர் அலையே உள்ளது…!”
1.தன் ஞானத்தை வளர்த்து சித்து நிலை கொண்ட ஆத்மாக்களின் நற்சக்தியின் தொடர் அலையை அறியாவண்ணம்
2.பல வலுக் கொண்ட வெறி கொண்ட பக்தி இயக்க ஆத்மாக்களின் தொடர்பு தான் இன்று வலுவாகியுள்ளது.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
இது வரையிலும் உபதேசித்த உணர்வின் தன்மை கொண்டு நம் குரு அருள் அது உணர்த்தியது. ஏனென்றால்
1.நான் பேசுகின்றேன் என்று யாரும் எண்ணிவிடாதீர்கள்.
2.மகரிஷிகளின் உணர்வலைகளே
3.அந்த உணர்வின் ஒலிகளை அது எழுப்பிக் கொண்டுள்ளது,
நாடாக்களில் “காந்த ஊசியின்…” நிலைகள் கொண்டு எப்படிப் பதிவு செய்து கொள்கின்றோமோ மீண்டும் அதை இயக்கினால் பதிவானது மீண்டும் பேசுகின்றதோ அதைப் போல
1.நமது குரு அருள் எனக்குள் பதிந்த நிலைகளே பேசுகின்றது.
2.அவர் (எனக்குள்) உள் வந்து அல்ல.
சிலர் என்ன நினைக்கின்றார்கள்…? குருநாதர் என் உடலுக்குள் வந்து செயல்படுகின்றார் என்று எண்ணுகிறார்கள்.
அவர் என்ன…! இங்கே நரகலோகத்திற்குள்ளேயா வருவார்…!
அவர் உயர்ந்த நிலை பெற்றதை எனக்குள் பதிவாக்கினார். அந்தப் பதிவைத்தான் மீண்டும் நினைவாக்கி அந்த உணர்வின் தன்மை நீங்கள் பெற வேண்டும் என்று இதைச் செய்கின்றேன்.
அவர் உடலை விட்டு அகன்ற பின் ஒளியின் நிலைகள் பெற வேண்டும் என்றார். ஒளியின் நிலைகள் பெறும் உணர்வின் தன்மை எனக்குள் நாடாக்களில் பதிவு செய்தது போல் என் உடலுக்குள் அதை ஊழ்வினையாகப் பதிவு செய்து அதை நினைக்கும் பொழுது அது வினைக்கு நாயகனாக இயங்குகின்றது.
1.நானும் பெறுகின்றேன்.. உங்களையும் பெறச் செய்கின்றேன்.
2.இது தான் இதில் உள்ள விஷயம்.
இந்த உணர்வுகள் பதிந்த உணர்வுகள் அவர் கண்டுணர்ந்த உணர்வுகள்தான் “இங்கே இசையாக…” மாறுகின்றது.
நான் உங்களிடம் பேசுகின்றேன் என்றால் அந்த அருள் ஞானத்தை எனக்குள் அடக்கி வைத்து விட்டால் நுகரும் தன்மையே இல்லை.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய நிலைகள் 1, 2, 3 என்ற படி வரிசையில் தான் அவர் தொடச் சொன்னார்.
அந்த உணர்வின் தன்மை அந்த இசையை அவர் எந்த வழியில் பதித்தாரோ அந்த உணர்வின் தன்மை தான் இயக்கப்படும் பொழுது நானும் பெறுகின்றேன் உங்களைப் பெறும்படியும் செய்கின்றேன்.
அதில் பெறும்படி செய்த
1.யார் ஒருவர் பெற்று
2.அதில் நீங்கள் மகிழ்கின்றீர்களோ
3.அந்தப் பேரானந்தத்தை நீ நுகரு.., என்றார்
4.அந்த ஆனந்த நிலைகள் உனக்குள் வளரும் என்று சொன்னார்.
என்னைக் குருநாதர் காடு மேடெல்லாம் பல காலம் அலையச் செய்து அப்பொழுது அங்கே எனக்குள் ஆழப் பதிந்த நிலைகள் “கூர்ந்து கவனித்த உணர்வே… எனக்குள் பதிவானது”.
அவரிடம் எல்லாம் “சரி…” என்று சொல்லிவிட்டு “காசுக்காக வேண்டி என் எண்ணத்தை இணைத்திருந்தேன்…,” என்றால்
1.காசு பெறும் தன்மை தான் வந்திருக்கும் இந்த உடலுக்கு.
2.மெய் ஞானத்தை நான் பெறும் தகுதியும் மற்றவர்களைப் பெறச் செய்யும் நிலையும் வந்திருக்காது.
சரஸ்வதி இலட்சுமி பராசக்தி என்ற மூன்று தெய்வங்களையும் வணங்கச் சொல்வதற்குக் காரணம் என்ன…?
காந்தம் வெப்பம் மணம் இந்த மூன்றும் சேர்ந்துதான் ஒரு அணுவாக அதனின் இயக்கமாக இருக்கிறது என்பதனை அதை நாம் அறிந்து கொள்வதற்காகத் தான் காரணப் பெயர் அவ்வாறு வைத்திருக்கிறார்கள்.
நான் (ஞானகுரு) இப்பொழுது பேசுகிறேன் என்றால் மைக் என்றும் ஆம்ப்ளிபையர் என்றும் ஸ்பீக்கர் என்றும் சொல்வது போன்று ஞானிகள் அணுவிற்குள் இயங்கும் ஆற்றலுக்கு அவ்வாறு பெயர் வைத்திருக்கிறார்கள்.
நம் உயிரின் இயக்கத்தால் துடிப்பின் நிலை வரும் பொழுது அந்தத் துடிப்பின் இயக்கத்திற்குப் பெயர் ஈசன்.
சூரியன் பல விஷத்தன்மையான நிலைகளால் தாக்கப்படும்போது அதனின் சுழற்சியின் வேகம் அதிகமாகி வெப்பமாகி… அந்த வெப்பத்தால் அதில் கலந்துள்ள விஷத்தின் தன்மையை வெளியே பிரித்து விடுகின்றது.
அதிலிருந்து வந்த பல நிலைகள் சேர்ந்து ஒரு உயிரணுவாக உண்டாகின்றது. சாதாரண அணுக்கள் சூரியனிலிருந்து வெளிப்படும் போது வெப்பம் காந்தமாக வெளிப்படுகின்றது.
அந்த வெப்ப காந்த அணுக்கள் வெளியேறும் பொழுது சூரியனைச் சுற்றி வெளியே இருக்கக்கூடிய அல்ட்ரா வயலட் என்ற விஷத்தை காந்தம் இழுத்து வெளிவரும் பொழுது மூன்று நிலையாக மாறுகின்றது.
வெப்பம் காந்தம் விஷம் என்ற மூன்று இயக்கச் சக்தியாக மூன்று நிலைகள் கொண்டு இயங்குகிறது.
1.வெப்பம் உருவாக்கக்கூடிய சக்தியாக இருக்கிறது
2.காந்தம் எதனையும் தனக்குள் எடுத்து இணைத்துக் கொள்ளக் கூடிய திறன் கொண்டது
3.தேள் கொட்டினால் நாம் எப்படித் துடிக்கின்றோமோ அதே மாதிரி விஷம் என்பது ஒரு இயக்கச் சக்தியாக இருக்கின்றது.
வெப்பத்துடன் அது இணையப்படும் பொழுது மூன்று நிலையான இயக்கச் சக்தியாக மாறுகின்றது. சூரியனை விட்டு வெளி வரப்படும் பொழுது மூன்று நிலைகளில் இப்படித் தான் வெளிப்படுகின்றது.
அதே போல் ஒரு உயிரணுவும் சூரியனை விட்டு வெளிவரும் பொழுது இந்த மூன்று நிலை கொண்ட ஒரு இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
1.ஞானம் (மணம்) என்பது இயக்கச் சக்தியாகவும் – சரஸ்வதி
2.அது எந்த மணமோ அதனை ஈர்க்கப்படும் போது காந்தம் வளர்க்கும் சக்தியாகவும் – இலட்சுமி
3.ஈர்த்துத் தனக்குள் மோதியவுடன் வெப்பமாகி உருவாக்கும் சக்தியாகவும் – பராசக்தியாகவும்
4.இந்த மூன்று சக்திகளும் இயங்குகிறது.
பூமிக்குள் விஜயம் செய்யும் ஒவ்வொரு உயிரணுவிலும் இந்த மூன்று நிலைகள் கொண்ட இயக்கம் இருப்பதால் தான் பல கோடித் தாவர இனச் சத்துக்களை எடுத்து எடுத்துப் பல உடல்கள் மாறி இன்று நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளது.
1.ஒன்பதாவது நிலையான நவராத்திரியாக இருக்கும் மனிதர்கள் நாம்
2.பத்தாவது நிலையான தசமி என்ற அழியா ஒளிச் சரீரம் எப்படிப் பெற வேண்டும்…?
3.அதைப் பெறுவதற்கு ஞானிகள் உணர்வை எடுத்து எப்படி நமக்குள் அதை வளர்க்க வேண்டும்…? என்று
4.நாம் உணர்ந்து கொள்வதற்குத் தான் வியாசர் இதைக் காட்டியுள்ளார்.
ஆத்ம சுத்தி செய்யச் சொல்வதன் முக்கியமான நோக்கம் என்ன…? – ஈஸ்வரபட்டர்
உயிரணுவாகத் தோன்றிய பின் அவ்வுயிரணுவின் வளர்ப்பு முலாம் ஒவ்வொரு செயலிலும் வளர்ப்பு செயல் மோதுண்டு மோதுண்டு… அவ்வுயிரணுவின் மோதலின் வளர்ப்பு வலுக் கொண்டு… ஆத்ம நிலை பெறும் நிலையை முந்தைய பாடத்தில் உணர்த்தினேன்.
உயிரின் ஆத்ம நிலைக்கு எப்படி அதன் உராய்வுத் தன்மையால் வலுக் கூடுகின்றது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஒரு தென்னை மரத்தின் பலனாக அதன் உச்சியிலே பல காய்கள் வருகின்றது.
1.அந்தக் காய்களில் இளநீர் வளர்ந்து
2.அந்த நீரானது அதன் உஷ்ண அலையில் அம்மட்டையில் உள் பாகத்தில் உராய்ந்து
3.வேடு கட்டி… வேடு கட்டி… நீரின் நிலை சுண்டி… பருப்பு வளர்ந்து… பின் முற்றி…
4.அதன் பலனான எண்ணை வித்தை வளர்க்கின்றது
தென்னை மரத்தின் வேர் நிலையிலிருந்து அது சத்து எடுப்பதில்லை.
மேல் நோக்கிய சுவாசம் கொண்டு தாவர இனத்தின் ஈர்ப்பு நிலையில் மோதலில் ஒளி பட்டு அது ஈர்த்துக் கீழிருந்து மேல் வளரும் வளர்ப்பின் பலனின் தன்மையில் பல வித்துக்களைத் தென்னை மரம் வளர்த்துக் கொள்கிறது.
இதைப் போன்று தான் ஒவ்வொரு வளர்ப்பின் வித்தின் தொடர் வளர்ப்பும். அதாவது ஒரு அணு வளர்ச்சியின் முலாம் ஒன்றில் மோதி வலுக்கொண்ட தன்மை பெறுவது போன்றே
1.இந்த மனித ஆத்ம உயிரின் வளர்ப்பு நிலையின் வலுவை
2.இவ்வாத்மா சேமித்துக் கொள்கின்றது.
சேமித்த வலுவின் தன்மை எத்தகையது…?
1.நீரில் மிதக்கும் மரங்களைப் போன்ற வலுக் கொண்ட நிலையை
2.இந்த ஆத்ம உயிர் பெற்றதென்றால்
3.எவ்வீர்ப்பின் பிடிக்கும் சிக்காமல்
4.இச்சரீர பிம்பமே காந்த மின அலை ஒளி சக்தி பூண்ட உயர்வு நிலை கொண்ட ஆத்மாவாகலாம்.
அன்றைய சித்தர்களும் சப்தரிஷிகளும் தன் சரீர பிம்பத்தையே இந்நிலைக்குகந்த வளர் நிலைக்கு உட்படுத்தித்தான் தன் வளர்ப்பின் வளர் நிலையைப் பெற்றார்கள்.
நல் வழியின் ஒளி நிலை கொண்ட உயர் ஆத்ம வழித் தொடர் பெறாத நிலையில் பல எண்ண நிலையுடன் வாழக்கூடிய தன்மையில் பிரிந்து சென்ற ஆன்மக்கள் அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள இக்காற்றலையில் படர்ந்தே உள்ளது.
அத்தகைய பல எண்ணங்கள் கொண்ட ஆத்மாக்கள் அதற்குகந்த அதன் செயலைச் செய்விக்க அதற்குச் சொல்லாற்றலும் செயல் திறமையும் இல்லாத தன்மையில் அதன் எண்ண ஆசையை நிறைவேற்றிக் கொள்ள உடலுடன் வாழும் மனித உடலில் சாடுகிறது.
1.அப்படிச் சாடும் பொழுது தான் சிலருக்கு வாதத் தன்மையும் இதன் தொடர்பு கொண்ட சில வியாதிகளும்
2.அந்த அலைகள் உடல் மேல் பாய்ந்தவுடன் அதன் தன்மையை உடல் ஏற்காத பட்சத்தில்
3.எந்த இடத்தில் எவ்வலை சாடியதோ அவ்விடத்தில் வளரும் அணு வளர்ச்சி குன்றி
4.பாய்ந்த பிற ஆன்மாவின் குணத் தன்மைக்குகந்த அணுவை வளர்ப்பதனால்
5.அந்த வளர்ப்பின் வலுவை உடலுக்குகந்த ஆத்மா ஏற்காத பொழுது
6.உடலைச் சுற்றியுள்ள ஆத்மாவானது அவ்விடங்களுக்குத் தன் அலையை அனுப்ப முடியாதததனால்
7.அந்த இடங்களில் உள்ள உறுப்புகள் செயலிழந்த நிலை ஆகின்றது
இளம்பிள்ளை வாதங்களில் செயலற்ற தன்மையிருந்தாலும் அங்கங்களின் நரம்பு மண்டலத்தில் உதிர ஓட்டங்களும்… துடிப்பு நிலையும் உள்ளது.
உதிர ஓட்டம் இல்லாவிட்டால் உடல் அழுகிய தன்மையல்லவா பெற்றிருக்கும். உடல் முழுமைக்கும் தொடர்பு கொண்டல்லவா அச்செயல் இருக்க வேண்டும்.
சந்தர்ப்பத்தால் பாய்ந்த மாறு கொண்ட அணு வளர்ப்பின் நிலையினால் இவ்வாதத் தன்மை கொண்ட வியாதியின் வளர்ப்புகள் வளர்ந்துள்ளன.
சமமான வாழ்க்கையற்றவர்களின் வாழ்க்கையில் எல்லாம்… அவரவர்களின் குண நிலைக்குகந்த சுவாசத்தால்… அதற்குகந்த பலனான தொடர் அலை செயலைத்தான்… இந்தக் காற்று மண்டல ஈர்ப்பிலிருந்தும் பெற முடியும்.
அதாவது காற்றில் கலந்துள்ள ஆத்மாக்களுக்கு நாம் தரும் இடத்திற்குகந்த வலுவாகத்தான் நம் சரீர பிம்பத்தின் ஆரோக்கிய நிலையே வளர்கின்றது.
1.எதனையும் செயலாக்கக்கூடிய எண்ண சக்தியின் வலுவைக் கொண்ட மனித ஆத்மாக்கள்
2.ஆவி உலக ஆத்மப் பிடியில் தான் இன்றைய காலத்தில் சிக்கியுள்ளது (இது தான் உண்மை)
3.அதிலிருந்து மீளும் நிலையில்லாத செயலாகத் தான் தொடர்ந்து கொண்டுள்ளது.
இந்த ஆவி உலக ஆத்மாக்களின் பிடியிலிருந்து விடுபடத்தான் ஆத்ம சுத்தி பயிற்சியே கொடுக்கின்றோம்.. இந்தப் பாட நிலைகள் அனைத்துமே அதற்குத்தான்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
“ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…,” என்று நாம் அடிக்கடி எல்லோரும் சேர்ந்து ஐக்கியமாகச் சொல்கிறோம்.
அப்படிச் சொல்லும் பொழுது சிலருடைய குரல் வித்தியாசப்பட்டாலும் சுருதி பேதங்கள் இருந்தாலும் ஏற்ற இறக்கம் இருந்தாலும்
1.அது மற்ற குரலுடன் இணைந்து
2.தனித்துப் பிரித்துக் காட்டாதபடி
3.சிறிது தொனியைக் குறைத்தால் இனிமையாக இருக்கும்.
ஒருவர் பாடுகிறார் என்றால் அதனுடன் இணைந்து மற்ற வாத்தியங்கள் வாசிக்கும் போது பலவிதமான நாதங்கள் வெளிப்படுகின்றது. அவை அனைத்தையும் “ஒருங்கிணைத்து” இனிமையாகக் கேட்க வைக்கின்றார்கள்.
அதைப் போல பலவிதமான நிலைகளில் நாம் வந்தாலும் ஒருமித்த எண்ணங்கள் கொண்டு ஒன்று போல “ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்லும் பொழுதே
1.எல்லோருடைய எண்ணங்களும்
2.நாம் எழுப்பும் குரல் ஒன்றி இருக்க வேண்டும்.
“ஓ..ம்” என்பது நமக்குள் ஜீவனாக இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் உயிரைக் குறிப்பிடுகின்றோம்.
நாம் எண்ணியதை ஜீவனாக்கச் செய்வது உயிர். ஜீவனான பின் உடலாக இணைக்கச் செய்வதும் உயிர். அதனால் தான் ஓ..ம் ஈஸ்வரா.
“ஈஸ்வரா…” என்பது இயக்கச் சக்தி.
“குருதேவா…” நம் உடலில் உள்ள அனைத்து உணர்வுகளுக்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது. எல்லோரும் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நலம்.
ஒவ்வொரு சமயமும் யாம் உபதேசிக்கும் பொழுது இதைச் சொன்னாலும் கூட அடுத்தாற்போல் “ஓ..ம்” என்ற பிரணவத்தின் தன்மை என்ன…? என்று திருப்பிக் கேட்பார்கள்.
“ஓ..ம்” என்றால் எங்கேயோ எண்ணி பிரணவம் என்று எதையோ எண்ணிக் கொண்டுள்ளோம். அப்படிப் பழக்கப்பட்டதால் இப்பொழுது யாம் திரும்பத் திரும்பச் சொன்னாலும் கூட அதை மனதில் பதிய வைக்க முடியவில்லை.
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால்
1.நாம் எதைப் பதிவாக்க வேண்டும்…?
2.எதை நமக்குள் இணைக்க வேண்டும்…? என்பதை அறிந்து
3.அதற்குத்தக்க சரி செய்து கொள்ள இது உதவும்.
யாம் இங்கே உபதேசிக்கின்றோம் என்றால் உபதேசத்தைக் கேட்பதற்கு முன் இந்த “மைக்கைச் (MIC)” சரி செய்து வைத்துக் கொள்கின்றோம். அது சரியாக இருந்தால்தான் பேசுவதை அது கிரகித்து ஒலியைப் பெருக்கிக் காட்ட முடியும்.
இதைப் போலத்தான் “ஓ..ம் ஈஸ்வரா குருதேவா…” என்று புருவ மத்தியில் எண்ணும் பொழுது (அல்லது சொல்லும்போது) நம் உயிரின் இயக்கம்
1.மற்ற இந்த உலகத் தொடர்பு கொண்ட உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கப்படும் பொழுது
2.அந்த நிலைகள் நமக்குள் இயங்காதவண்ணம் அதைத் தடுத்து நிறுத்தவும்
3.நம்முடைய எண்ண ஏக்க அலைகள்
4.உபதேசத்தின் வாயிலாக வரும் ஞானிகளின் உணர்வுகளை
5.எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும்.
ஏனென்றால் ஒருவர் நம்மைத் திட்டினால் அதை நாம் கூர்மையாக எண்ணினால் அந்தத் திட்டக்கூடிய எண்ணம் நமக்குள் பட்டவுடனே வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.
இந்த வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டும் பொழுது அதன் வழிகளில் தான் நடக்கின்றோம்.
அடுத்து அந்த வேதனையான உணர்ச்சிகள் நம் உடலில் அது மற்ற உணர்வுடன் படரச் செய்யப்படும் பொழுது நமது நல்ல எண்ணங்கள் அதைச் சரியாக இயக்க முடியாத நிலைகள் செயல்படுத்திவிடும்.
இதைப் போன்று “எண்ணிலடங்காத உணர்வின் சுழற்சிகள்” நம் ஆன்மாவில் உண்டு.
1,அதையெல்லாம் நம் சுவாசத்திற்குள் வராதபடி தடுத்துவிட்டு
2.மெய்ஞானிகளின் உணர்வை உள் புகுத்துவதற்காகத்தான்
3.நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே உணர்வாக
4.“ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்கிறோம்.
வெறுமனே சொல்வதால் பலன் இல்லை.
இருதய வாயில் என்பது என்ன…?
விஷ்ணு நரசிம்ம அவதாரமாக எடுத்து இரண்யனை மடி மீது வைத்து அவனைப் பிளந்தான் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்..
1.விஷ்ணு என்பது நம் உயிர்
2.மடி என்பது நம் இருதயம்
3.இரண்யன் என்பது தீமை செய்யும் உணர்வுகள்.
இருதய வாயிலில் இருக்கும் “மேக்னட்…” புறத்தால் ஒரு பொருளைப் பார்க்கப்படும் போது அவர்கள் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வலைகளை இழுத்து அலையாகக் குவிக்கும் இடம் அது.
அது தான் மடியாகின்றது.
இங்கே தேங்கி நிற்கும் நிலைகளில் கெட்டவரின் நினைவுகளை எடுத்து இங்கிருந்து மறுபடியும் சுவாசித்து உயிரிலே பட்ட பின் எதுவோ அது இயக்குகின்றது.
ஒரு நாடாவிலே எதைப் பதிவு செய்கின்றோமோ அதை மீண்டும் ஓட்டப்படும் போது அந்த நாடாவில் உள்ளதைத்தான் ரேடியோவோ மற்ற இயந்திரங்களோ பேசுகின்றது. ட்ரான்சிஸ்டர் அந்த அலைகளை எடுத்துக் கொடுக்கின்றது.
இதைப் போல்
1.கூர்ந்து பார்க்கும் போது நம் கண்கள் அதை எடுத்து
2.அந்த உணர்வின் அலைகளை நமக்குள் அலைகளாகக் குவித்துக் கொடுப்பதைச் சுவாசித்து
3.அந்த அலைகளுக்குள் இருக்கும் உணர்வைத் தான் சொல்லாகவும் செயலாகவும் அது நம்மைப் பேசச் செய்கிறது.
ஆகவே இந்த உணர்வின் சக்தியை நாம் அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தான் என்றால் நம் உயிர் இங்கே நரசிம்மனாக மாறி அதன் வழியில் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்று காவியங்களில் காட்டப்பட்டது.
ஒருவன் கெடுதல் செய்கிறான் என்று எண்ணும் போது அந்த உணர்வின் சக்தியை நாம் எடுத்து அவர்களைக் கவரப்படும் போது அந்த உடலிலிருந்து வந்த எண்ணங்கள் எல்லாம் நமக்குள் தெரிகின்றது.
அந்த உணர்வு நமக்குள் இயக்கி அவனை உதைக்க வேண்டும் என்று சொல்கிறது.
1.அதே உணர்வு என் உடலுக்குள் சென்றவுடனே என் நல்ல குணத்துடன் சண்டையிடுகின்றது.
2.நீ இரு நான் பார்த்துக் கொள்கிறேன்… என்று.
என் உடலுக்குள் நல்ல குணங்களுடன் கலந்தவுடனே நீ இரு… நான் பார்த்துக் கொள்கிறேன்..! என்று சொல்லப்படும் போது நல்ல குணங்கள் இந்த உணர்வைத் தாங்காது
1.மேல் வலிக்கிறது தலை வலிக்கிறது
2.கை குடைகிறது கால் குடைகிறது
3.நெஞ்சு வலிக்கிறது இரத்தக் கொதிப்பு வருகிறது வாத நோய் வருகிறது என்று
4.சீராக இயக்கக்கூடிய நிலைகள் அனைத்தையுமே நிறுத்தி விடுகின்றது.
இதை மாற்றுவதற்குத் தான் நரசிம்மா…!
கெடுதல் செய்தவர்களை எண்ணும் போது என்னை அந்தத் தீமை எப்படி இயக்குகிறதோ அதைத் துடைப்பதற்குத் துடைத்துப் பழகிய அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுதல் வேண்டும்.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் மனித உடலில் உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டான்.
துருவத்தை அறிந்தான்… துருவத்தை அடைந்தான்… துருவத்தின் உணர்வைத் தனக்குள் சேர்த்தான்… துருவ மகரிஷியானான். சிருஷ்டிக்கும் நிலை பெற்றான்… அந்த உணர்வு கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் ஒளியாக உள்ளான்…!
அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவரும் ஏழாவது அறிவு கொண்டு சப்தரிஷிகளாக ஒளியாக மாறிச் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள்.
அந்த அருள் சக்திகளைப் பெற்றால் நரசிம்மா..! தீமைகளை நீக்கி விட்டு ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும். இந்த உடலிலிருந்து தான் அதை நாம் பெற வேண்டும்.
உடலைப் பற்றியும்… ஆத்மாவின் இயக்கத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்
மனிதன் எடுக்கும் குண நிலையில்…. அவன் எண்ண உணர்வில் சமைக்கப்பட்ட ஆவியின் வலு தான்
1.ஆத்மாவின் உராய்வுக் கவசமாக உராய்ந்து உராய்ந்து
2.அதன் வலுத் தன்மையைக் காந்த ஈர்ப்பு வளர்ப்பாக
3.இந்தப் பிம்ப உடலின் அச்சான எலும்புகளின் வளர்ப்பின் உராய்வு வலுக்கூடி ஆத்மாவின் வலுவும் வளருகின்றது.
இந்தப் பிம்ப உடலின் நிலை கொண்டு பல செயல்களைச் செயல்படுத்த முடியும். பல கோடி ரூபத்தில் வளர்ப்பின் வளர்ப்பாக… பல கோடி மண்டலங்களை வளர்க்கக்கூடிய… “வளர் நிலைக்குகந்த வலுவான வித்துத்தான் இந்தப் பிம்ப உடல்….!”
சப்தரிஷிகளின் செயலை வளர்க்கவும் இவ்வொளி நாதச் செயல் கொண்ட… “ஜீவத் துடிப்பு உள்ள எண்ணத்தின் சரீரத்தினால் தான்” முடிகின்றது.
1.பல கோடிச் சக்திகளை உருவாக்கும் சப்தரிஷிகளே…
2.இப்பிம்ப உடலின் தொடர்பு கொண்டு தன் வலுவை வளர்க்கின்றார்கள்.
அதனின் உண்மைப் பொருள் தான் நாம் இன்றளவு காணும் இயேசு கிறிஸ்து ஐயப்பன் முகமது நபி ஆதிசங்கரர் போன்ற தெய்வீக வளர் நிலையின் உண்மைத் தன்மை கொண்டவர்கள்.
ஆகவே…
1.ஜீவ சக்தி கொண்ட துடிப்பு ஆத்மாவினால் தான்
2.இச்சரீரம் சமைக்கும் உணர்வின் வலுவைக் கொண்டு
3.பல வலுவான வளர்ப்பின் வளர்ப்பாக இச்சரீரக் கூட்டின் தொடருடன் வளர்க்கலாம் என்ற
4.இச்சரீர பிம்பத்தின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்திடல் வேண்டும்.
ஜீவன் பிரிந்த ஆத்ம உயிருக்குத் துடிப்பு நிலையும் நாத ஒலி வெளிப்படுத்தும் ஜீவத் தொடர்பும் இல்லாததனால் அதன் எண்ணத்தின் ஈர்ப்பைத் தன் எண்ண அலைக்குகந்த ஆத்ம உடலில் ஈர்க்கப்பட்டு தன் ஆத்மாவின் உயிரையே தன் குண நிலைக்கொத்த உணர்வு நிலை கொண்ட ஜீவ சரீர ஈர்ப்பிற்கு (தாய் உடலில்) வந்து பிறப்பெடுக்கும் ஆத்மாவும் உண்டு.
ஆனால் இப்படி
1.இயல்பாகப் பிறப்பிற்கு வரும் ஆத்மாவிற்கு மேல்
2.வலுவான எண்ண வேட்கை கொண்ட ஆத்ம உயிர் பிற உடலுடன் உள்ள ஆத்மாவின் மேல் படரும் பொழுது
3.அதனின் வலுவுக்கு மேல் வலுவான ஆத்மாக இது செயல்பட்டு
4.அதனால் சிலருக்குப் புத்தி பேதலித்த நிலையும்
5.சிலருக்குக் கொடூர எண்ணங்களின் வெறி நிலை கொண்ட குண நிலையும் அமைகின்றது.
இந்தக் குண நலத்தின் எண்ண மாற்ற உணர்வினால் சில அலைத் தொடர்புகளின் ஆத்ம உணர்வின் ஈர்ப்பினால் மனிதன் தன் நிலையையே மறக்கின்றான்.
பேய் பிடித்து விட்டது… பிசாசு பிடித்தது…! என்றெல்லாம் இதைத்தான் சொல்வது…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
மெய் ஞானியின் உணர்வை நமக்குள் செலுத்தி அந்த ஆற்றல்மிக்க உணர்வை நமக்குள் பெருக்கச் செய்வது தான் தீப நாள் – கார்த்திகை ஜோதி என்பது.
கார்த்திகை தீபம்… இந்த நாளில் முருகனுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “முருகு…” நாம் மாற்றியமைக்கும் தன்மை கொண்டவர்கள்.
அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து உணர்வு ஒவ்வொன்றையும் ஒளியின் சுடராக மாற்ற வேண்டும். நம் எண்ணத்தின் நிலைகள் ஒவ்வொன்றையும் ஒளிச் சுடராக மாற்ற வேண்டும்.
நாம் எந்த எண்ணங்களை எண்ணினாலும்.. அல்லது பிறர் குறையின் தன்மைகளைக் கண்டாலும்…
1.எப்படி வெளிச்சத்தைக் கண்டபின் அங்கிருக்கும் இருள் மறைந்து பொருள் தெரிகின்றதோ
2.இதைப் போல கார்த்திகை ஜோதி அன்று நம்முடைய எண்ணங்கள் நாம் எண்ணும் பொழுதே பிறருடைய தீமைகளை அகற்றிடும் சக்தியாக வளர வேண்டும்.
மற்றவர்கள் சொன்னாலும் அதைப் பிளந்து அந்த உணர்வுக்குள் இருக்கும் “மெய்ப் பொருளைக்” கண்டுணர வேண்டும்.
அந்தத் தீமைகள் இயக்காதபடி அதைப் பிளந்து அந்த அருள் ஞானியின் உணர்வுகள் கொண்டு உண்மையை அறிந்து கொள்வதும் அதற்குத் தகுந்தவாறு நாம் செயல்படும் தன்மைதான் திருஅண்ணாமலை தீபம் என்பது.
முருகன் வீற்றிருக்கும் இடங்கள் அனைத்திலும் கார்த்திகை நந்நாளைக் கொண்டாடுகின்றோம். கார்த்திகை மாதத்தில் தீபங்களை வீடு முழுவதும் பரப்பி வைக்கின்றோம்.
1.வெறுமனே இங்கே தீபங்களைப் பரப்புவதில் பயனில்லை.
2.இருளை அகற்றிட அந்த பேரருள் பேரொளியான உணர்வை நமக்குள் பரப்ப வேண்டும்
3.அதை நமக்குள் நினைவு கூறும் நாள் தான் கார்த்திகை ஜோதி என்பது.
தியானம் என்பது… உட்கார்ந்து தியானிப்பது மட்டும் தியானமல்ல. வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்… எப்படி…?
நமக்குள் பெற்ற சக்தியின் தன்மையை நமது நண்பர்களோ மற்றவர்களோ நம்மை அணுகி தொழில் செய்யும் நிலைகள் வரப்படும் பொழுது “நாங்கள் பெற்ற சக்தி அவர்கள் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தை எடுங்கள்.
உதாரணமாக… ஒரு கஷ்டமோ நஷ்டமோ அவர்கள் படுகின்றார்களென்றால் அப்பொழுது நம்மை அணுகி வருவார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் கற்றுணர்ந்த உணர்வை உபதேசமாகச் சொல்லுங்கள்.
1.அப்பொழுது நீங்கள் அதை தியானிக்கின்றீர்கள்
2.அருள் ஒளியை அவர்களுக்குக் கொடுக்கின்றீர்கள்.
ஏனென்றால் அவருடைய கஷ்டத்தையோ துன்பத்தையோ உங்களுக்குள் பதிவாகாதபடி
1.அருள் ஞானத்தின் சக்தியை அவர்களுக்குக் கொடுத்து
2.நீங்கள் இதைச் செய்யுங்கள்… நலமாக இருப்பீர்கள் என்று
3.இந்த அருளைப் பெறவதற்குண்டான வழியைச் சொல்லுங்கள்.
இதைப் படிப்போர் ஒவ்வொருவரும் ஒன்றுபட்டு உங்களுக்குள் கண்டுணர்ந்த இந்த நல் உணர்வின் தன்மை கொண்டு ஒருவருக்கொருவர் இதைப் பரிமாற்றம் செய்து எல்லோரையும் வளர்ச்சி பெறச் செய்யுங்கள்.
இந்த வாழ்க்கையையே… “துன்பங்கள் நுகராது… அருள் வழியின் உணர்வை நுகரச் செய்யும் பண்பாக உருவாக்குங்கள்…!”
நாம் நண்பர்களுடன் பழகும்போது அவர்களின் துன்பத்தைப் பற்றிக் கேட்டுணர்ந்தாலும் அதைப் பக்குவமாக்கிட வேண்டும். இப்பொழுது இருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் “இப்படியெல்லாம் பேசுகின்றார்கள் நியாயமா…?” என்று நம்மிடம் சொல்ல வருவார்கள்.
அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் சண்டை போடுபவர்களிடம் சென்று… கட்டாயப்படுத்தி அந்த நல்லதைச் சொல்லப் போனால் அதற்கு எதிர்ப்பு உணர்வுகள் தான் வரும்.
இப்படிச் சொல்கின்றார்கள் என்று நண்பர் உங்களிடம் அணுகி வரப்படும் பொழுது இந்தத் தத்துவத்தை அந்த நண்பருக்குச் சொல்லுங்கள்.
1.அவருடைய உணர்வை உங்களுக்குள் வளர்க்க வேண்டாம்.
2.எதிரியை உங்களுக்குள் ஒதுங்கிச் செல்ல வழி விடுங்கள்.
3.எதிர்த்துக் கொண்டே இருந்தால் அது உங்கள் நல்ல செயலை எல்லாம் குறைத்துவிடும்…! என்று
4.நண்பரிடம் தெளிவாக இதை எல்லாம் எடுத்துச் சொல்லுங்கள்.
சண்டை போட்டவர் உடலில் விளைந்த தீமையை உங்கள் உடலில் விளையாதபடி தடுக்க
1.“மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்…” என்று எண்ணுங்கள்.
2.உங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்று எண்ணுங்கள்
3.இந்த எண்ணங்களை நீங்கள் ஒரு பாதுகாப்புக் கவசமாக வளர்த்துக் கொள்ளுங்கள்…! என்று உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள்.
இதை எல்லாம் அவர் கடைப்பிடிக்க நேர்ந்தால் அவர்களது எதிரியின் உணர்வுகள்… “இந்த எதிரியான அணுக்கள்” நண்பர் உடலுக்குள் விளையாதபடி தடுக்க இது உதவும்.
அதே சமயத்தில் நண்பர் மூலமாகக் கேட்டறிந்த அந்த உணர்வுகள் நம்முள்ளும் வளராது தடுக்கப்படுகிறது. நண்பருக்குச் சொல்லும் நிலையில் அந்த அருள் ஞானத்தை நாம் நினைத்துச் சுவாசிக்கும் பொழுது இதுவே நமக்குத் தியானமாகி விடுகின்றது.
1.பிறருக்கு நாம் எடுத்துச் சொல்லும் பொழுது
2.நம் நினைவுகள் வேறு எங்கும் (தீமைகளுக்கு) போவதில்லை.
இதைப் போல வாழ்க்கையில் எப்பொழுது எங்கே எதனின் நிலைகளில் தீமைகள் ஏற்பட்டாலும் அப்பொழுது நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு இந்தத் தத்துவத்தைச் சொல்லுங்கள்.
1.தீமைகள் எதனால் வருகின்றது..?
2.நாம் எண்ணியதை நம் உயிர் எப்படி உருவாக்குகின்றது…?
3.அதனால் நம் உடலில் தீமைகள் எப்படி உருவாகின்றது…?
4.தீமையை நாம் எந்த வழியில் அடக்க வேண்டும்…? என்று சிந்திக்கும்படி செய்து
5.ஆத்ம சுத்தி செய்யும் உணர்வுகளை அவர்களுக்குக் கொடுத்து
6.சிறிது நேரம் அந்த மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துச் சொல்ல முற்படுங்கள்.
இதன் மூலம் தீமைகளை அகற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் சுவாசித்து உங்கள் உடலில் சேர்த்துக் கொண்டால் அவர்கள் செய்த தீமைகள் நமக்குள் வருவதில்லை.
இவ்வாறு நாம் தடுக்கும் சமயத்தில் அருள் மகரிஷிகளின் உணர்வு நமக்குள் அதிகமாக இணைகின்றது. அதை நீங்கள் நினைவுபடுத்தும் பொழுது உங்கள் உடலிலுள்ள உணர்வுகளிலும் அணுக்களிலும் அது வளரத் தொடங்கி அதற்கு நல்ல ஆகாரமாகக் கிடைக்கின்றது.
ஆனால் சண்டை போடுபவர்களை நாம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும். அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்து சண்டை போடும் அணுக்களுக்கு (அந்த உணர்ச்சியைத் தூண்டும் அணுக்களுக்கு) ஆகாரமாகக் கிடைக்கும்.
அடுத்த நிமிடமே… மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் எடுக்க வேண்டும். வேடிக்கை பார்த்தாலும்… அவர்களுக்குள் சகோதரத்துவம் வளரவேண்டும்.. எங்கள் பார்வை வைரத்தைப் போல் ஜொலிக்க வேண்டும்.. அவர்கள் வாழ்க்கையை ஜொலிக்கச் செய்யும் ஆற்றல் எங்களுக்குள் வளரவேண்டும்… என்று இப்படி உங்களுக்குள் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
எங்கள் செயல் அனைத்தும் எல்லோரையும் நல்லவராக்கும் செயலாக எங்களுக்குள் உருவாக வேண்டும்.
எங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்வில் மகிழும் சக்தி பெறவேண்டும் என்று இப்படி இதை ஒவ்வொரு நாளும் கூட்டிக் கொள்ளுங்கள்.
1.உங்களை உங்கள் எண்ணமே காக்கும்
2.அதுவே கடவுள் ஆகின்றது.
எண்ணியதை உயிர் ஈசனாக இருந்து உருவாக்குகின்றது. உங்கள் உணர்வின் தன்மையை இப்படி உருவாக்கப்படும் பொழுது அதுவே உங்களுக்குள் அதிகமாக உருவாகும் சக்தி பெறுகின்றது.
இப்படி அந்த உருவாக்கும் ஆற்றலை நமக்குள் பெருக்கிக் கொண்டே வந்தால் என்றும் அருள் ஒளியின் சுடராக இந்த வாழ்க்கையை நாம் நிச்சயமாக வாழலாம்.
உயிர் நெருப்பு… உடல் அடுப்பு… அதிலே சமைக்கப்படும் எண்ணங்களுக்கு ஒப்பத்தான் வாழ்க்கை…! – ஈஸ்வரபட்டர்
1.இந்தப் பிம்ப உடலையே அடுப்பாக்கி
2.இச்சரீர உடல் எதைச் சமைத்து அனுப்புகின்றதோ இதன் சத்தை ஆத்மா எடுத்து
3.அவ்வாத்மாவின் செயலுக்குகந்த நிலையைத்தான் உயிர் செயல்படுத்துகிறது.
சரீரத்தில்… சரீரத்தையே வளர்க்க… வலுவாக்கி.. ஆத்மாவின் அமில வளர்ச்சிக்குகந்த… சுவை கொண்ட உணர்வாகத்தான் இந்தச் சரீரக் கூடு உள்ளது.
ஆத்மா பெற்ற வலுவைக் கொண்டு அவ்வாத்மாவின் உயிரானது
1.எந்த நிலத்தில் (தாய் கருவில்) ஆத்ம உயிரின் அமிலக் கலவைக் கூடு உராய்ந்து
2.இவ்வாத்மாவின் ஆவி நிலை சுழற்சியில்… பிம்பமற்ற முறையில்…
3.தன் அமிலச் சுவைக்கு உணர்வு சொல் நாத சக்தியும் இல்லா நிலையில்…
4.நிலமான தாய்க் கருவில் வளர்ப்பு நிலைக்கு வந்தவுடன்
5.தாயின் உணர்வு சுவாச நாத நிலையினால் இவ்வாத்ம உயிருக்கு உணர்வு எண்ண மோதல் உருவாகும் தருணத்தில்
6.இந்நாதத்தின் துடிப்பு இயக்கத்தால்
7.ஆத்ம உயிரின் உராய்வு சேர்க்கை கொண்ட சரீர அவயங்களின் உருவக வளர்ப்பு நிலை கொண்டு பிறப்பெடுத்து வளரும் தருவாயில்
8.இதில் எடுக்கும் உணர்வுத் துடிப்பு சுவாசத்தில் உண்ணும் உணவை மட்டுமல்லாமல்
9.எந்தெந்த எண்ணக் கலவைகளை எண்ணி எண்ணி இச்சரீரச் சுவாசத் துடிப்பு உள்ளதுவோ
10.அதற்குகந்த அமில இனத்தை இச்சரீரம் சமைத்து வெளிப்படுத்தும் அலை உணர்வைத் தான்
11.ஒவ்வொரு ஆத்மாவும் வலு கூட்டிக் கொள்கின்றது.
இப்பிம்ப உடலின் மோதலினால்… அதாவது “மோதல்…” என்பது இந்தப் பூமியின் பிடிப்பிலும் சூரியனின் அலை வீச்சிலும்… இச்சுழற்சியின் சுழலுடன் இவ்வலை மோதலின் பிடிப்புடன் வாழும் இச்சரீரத்தின் மேல்… இந்தப் பூமியைச் சுழல வைக்கும் இக்காற்றலையின் ஆகர்ஷண சக்தியானது இந்தப் பிம்பத்தின் மேல் மோதுகிறது.
மோதி… அந்தப் பிம்பத்தின் துடிப்பு நிலை செயல்பட்டால் தான் சுவாச நிலை வரும். சுவாசமெடுத்த பின் நெற்றியில் கவன நரம்பிற்குள் மோதும். அடுத்து அதன் தொடர் கொண்ட ஈர்ப்பு சிறு மூளைக்குச் செல்கிறது.
அங்கே சென்ற பின் இந்தச் சரீர பிம்பக் கோளமே இயங்கவல்ல அடுப்பைப் போன்று அதில் போடப்படும் எண்ண உணர்வையும் உண்ணும் உணவும் சரீர அவயங்கள் அதைச் சமைத்து “ஆவியாக்குகின்றது…” அந்த ஆவியின் சக்தியை இவ்வாத்மா ஈர்த்துத் தான் இந்தப் பிம்ப உடல் வாழுகின்றது.
அப்படி வாழ்ந்தாலும்.. உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் குண நிலைக்குகந்த சம நிலை கொண்ட வாழ்க்கை நிலை அமைத்துக் கொண்ட மனிதனால் தான்… ஆரோக்கிய நிலையுடனும் நீண்ட நாள் வாழ்க்கை வாழ முடிகின்றது.
தான் பெற்ற வலுத் தன்மையின் சக்திக்கு உகந்த செயலை அந்த உடலுக்குத் தரும் பொழுது உடல் என்ற இயந்திரக் கோளமானது சீராகச் செயல் கொள்ளும்.
அதை விட்டு மனிதன் தன் எண்ண உணர்வையே இன்று பல ஈர்ப்பின் பிடியில் சிக்கிப் பேராசைப் பிடி அலைக்காகத் தன் எண்ணத்தைப் பல நிலைகளில் மோதவிட்டுத் தனக்கு எண்ணத்தின் சாதகமற்ற நிலை ஏற்படும் தருவாயிலெல்லாம்
1.சலிப்பு… கோபம்… ஆத்திரம்… வேதனை… என்ற இப்படிக் கனமான சுவாச அலையை எடுத்து எடுத்து
2.அக்குணமுடன் உள்ள நிலையில் எண்ணக்கூடிய உணவும்
3.அதே அமிலத்தைத்தான் இந்த உடலுக்குள் வளர்க்க முடிகின்றது.
இச்சரீரத்தில் சமைக்கப்படும் நிலையையே இந்த எண்ணத்தால் கனமாக்கி அதன் வலுவை அவ்வாத்ம உயிருக்குத் தரும் பொழுது ஏற்கனவே பழக்கப்பட்ட வலுவாகி வாழ்ந்திருக்கும் ஜீவத் துடிப்புடன் இது கலந்து… சிறுகச் சிறுக மாறு கொண்டு விடுகின்றது.
1.மாறு கொண்ட எண்ண உணர்வுகளை இந்தச் சரீர பிம்பம் எடுக்கும் பொழுது
2.அதை ஏற்காத நிலை கொண்டு இச்சரீர அமைப்பில் சுகவீனம் காணுகின்றது.
இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஒரு புயல் காற்று எப்படி வீசுகின்றதோ அதைப் போல் தான் சனிக்கோளின் இயக்க நிலைகள்.
1.சனிக் கோளிலிருந்து உமிழ்த்திய ஒவ்வொரு வட்டமும்
2.அது முதுமை அடைந்தவுடன் கழன்று வெளியிலே வரும்.
3.அதனின் அலையின் தொடர் எப்படிச் சக்கரமானதோ எதிர் நிலையாகும் பொழுது சுழற்சியாகின்றது.
ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட பம்பைப் (MOTOR PUMP) போட்டவுடன் (சுழலும்போது) தண்ணீரை எப்படி உறிஞ்சுகின்றதோ இதைப் போல
1.சனிக்கோள் மற்ற உணர்வின் தன்மையைத் தன் இனமான சத்தை அது கவர்ந்து கொள்ளும்போது
2.மற்றதுக்குள் இந்த சுழற்சியின் தன்மை கொண்டு மாற்றங்கள் ஏற்பட்டுவிடும்.
இது தான் “புயல்” என்பது.
ஆகவே அது எந்த அட்சரேகைப் பக்கம் இந்த முழுமையான வட்டச் சுடர்கள் வந்ததோ அந்தப் பகுதியில் இந்தப் புயல் செல்லும். இதை விஞ்ஞான அறிவு கொண்டு இயந்திரத்தின் துணையால் கண்டு கொள்கின்றனர்.
இன்றும் நீங்கள் இதைப் பார்க்கலாம்.
அன்று மெய் ஞானி சனிக் கோளின் இந்த நிலைகள் எவ்வாறு இங்கே மாற்றித் தன் உணர்வின் தன்மை ஒருக்கிணைந்து
1.இதனைச் சுழல் காற்றாக மாற்றி
2.அது மழை மேகங்களை எப்படிச் செயல்படுத்துகின்றது?
3.பெரும் மழையாக எப்படிக் கொட்டுகிறது? என்று தெளிவாக உணர்ந்து கொண்டார்கள்.
அதைப் போலத்தான் மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் அந்த ஞானியின் உணர்வை நமக்குள் எடுத்துப் புயல் போல் பேரருள் பேரொளியைப் பரப்பப்படும் பொழுது
1.தீமை செய்யும் நிலைகள் அனைத்தும் மறைந்து
2.நமக்கு முன் சுழலும் நச்சுத் தன்மைகள் அகன்று ஆன்மா சுத்தமாகின்றது.
ஆகவே அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை மறைக்கும் “நச்சுத் தன்மையைச் செயலிழக்கச் செய்து” அதற்கு உணவு கிடைக்காதபடி தடைப்படுத்துவதே யாம் சொல்லும் நம் குருநாதர் காட்டிய… அந்த மெய் ஞானிகள் காட்டிய உண்மையான சாஸ்திரம்.
இன்றைய மனித வாழ்க்கையில் நம்முடைய சபதம் எதுவாக இருக்க வேண்டும்…?
உயிரை ஈசனாக வணங்குங்கள். உடலைச் சிவனாக மதியுங்கள். கண்ணைக் கண்ணனாக மதியுங்கள்.
காரணம்… நல்லது கெட்டதைக் கண்ணன் உணர்த்துகின்றான். அவன் காட்டிய நெறியின் படி கெட்டது என்று வரும் பொழுது புறப்பொருளை நீக்கும் வழிகள் கொண்டிருக்கின்றோம்.
ஆகவே
1.நம்மை அறியாது புகும் தீமைகளைப் புறப் பொருளை அகற்றுவது போன்று
2.அந்த மகரிஷியின் அருள் ஒளியால் துடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்… துடைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
உடலான சிவத்திற்குள் தீய குணங்கள் பட்டபின் நோயாக மாறுகின்றது. அதைத் துடைப்பதற்கு… சிவனுக்கு அந்தத் தீமைகள் வராத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.யாரோ உடல்…! என்று எண்ண வேண்டாம்
2.உங்களுடைய உடல் என்றும் எண்ண வேண்டாம்
3.நம் உயிரான நிலைகள் தான் இத்தனையும் படைத்திருக்கின்றான்
4.நமக்குள் செயலாற்றும் நிலைகள் கொண்டு அதை இயக்கும் சக்தியாக அதுவே இருக்கின்றது.
அதை உணர்ந்து இந்தப் பொறுப்பினை நீங்கள் எடுத்துக் கொண்டால் மனித வாழ்க்கையின் புனிதத் தன்மையை அடையலாம்.
1.தான் யார்… நான் யார்…? இந்தப் பிள்ளை யார்…? என்று பிள்ளையார் சுழி போட்டுக் காட்டிய நிலைகளை
2.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு எல்லாம் நாயகனாக மனித உடலைக் கொடுத்து
3.உடலில் இருக்கக்கூடிய கணங்களுக்கெல்லாம் ஈசனாக உயிரே இயக்குகின்றது என்ற நிலைகளை உணர்ந்து கொள்ளுங்கள்.
மூஷிகவாகனா…! எந்தெந்த குணங்களை நாம் சுவாசித்தோமோ இந்த உணர்வின் தன்மை கொண்டு அதே வாகனமாக அன்றைய செயலும் இன்றைய சரீரமாக வைத்திருக்கின்றது உயிரான ஈசன்.
கணங்களுக்கு அதிபதி கணபதி ஆகவும் அவனே இருக்கின்றான். நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அதை அதிபதியாக்கச் செய்து அதன் வழியே மற்றதை ஒடுக்கும் நிலைகளைக் கொண்டு வருகின்றது.
1.உயிரான ஈசனிடம் ஒன்றி ஒளியாகப் பெறுவோம்…
2.என்றும் நிலையாக இருக்கக்கூடிய அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டுமென்று
3.அதைப் பெறும் நிலையாகச் சபதம் எடுத்துக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் எந்தத் துன்பங்கள் வந்தாலும் நோய்கள் வந்தாலும் அதை எல்லாம் நீக்க மகரிஷிகளின் அருள் ஒளி சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நான் வெறும் வாக்காக சொல்லவில்லை… வெறும் சொல்லாகச் சொல்லவில்லை… அருமருந்தாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
நீங்கள் எண்ணி எடுத்து உங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். குருநாதர் எனக்கு இப்படித்தான் அருளினார். உங்களுக்கும் அதே உணர்வின் தன்மையைத் தான் பதிவு செய்கின்றேன்.
பதிவை மீண்டும் எண்ணி
1.வாழ்க்கையில் துன்பத்தைத் துடைக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவேன்
2.என்னை அறியாது வந்த இருளை நீக்குவேன்
3.மெய் ஒளியைக் காண்பேன்… மெய் வழி செல்வேன்
4.அந்த மகரிஷியின் அருள் ஒளி வட்டத்தில் என்றும் நிலையான அழியாத பெரு வீடு பெறுவேன்
5.பத்தாவது நிலையான ஒளி நிலை பெறுவேன் என்று
6.உங்கள் எண்ணத்தில் அதை எல்லாம் எடுத்து வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் நீங்கள் அதுவாக ஆகின்றீர்கள்.
அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) பிரார்த்திக்கிறேன்.
உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ளுங்களப்பா…! – ஈஸ்வரபட்டர்
நம்மைச் சுற்றியுள்ள பல ஒலிகளிலும்… நம்முடன் எதிர் கொண்டு கலந்துறவாடிப் பேசுபவர்களின் ஒலி அலையிலும்… நம் எண்ண ஈர்ப்பைச் செலுத்தும் நிலையில்… அதற்குகந்த சுவாச… அணு… வளர்ப்பு… உணர்வு சக்திகளைத்தான்… இவ்வாத்ம உயிர் சேமிக்கின்றது.
நம் வளர்ச்சித் தன்மையின் குணப்பிடியே இதில் தான் உள்ளது.
அது மட்டுமல்லாமல்
1.நாம் வாழக்கூடிய இல்லங்களிலும் நாம் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களிலும்
2.ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ண ஒலி நாதம் வெளிப்படுத்தும் அலைத் தன்மையின் ஈர்ப்புத் தன்மை
3.எவ் ஒலி கொண்ட எண்ணத்தின் செயலாக குண நிலை சுவாசம் பதியப்பட்டதோ
4.அந்தந்த குணங்களின் அலைகளை இல்லங்களின் சுவர்களும் தரையும் ஈர்த்து
5.அவ்வொலி அலையின் எதிர் அலை சுழற்சி அவ் இல்லத்தில் சுழன்று கொண்டே தான் இருக்கும்.
அதை எல்லாம் சீர்படுத்தத்தான் பழங்கால மனையியல் சாஸ்திரங்களில் தெரிந்தோ தெரியாமலோ சில “நிலைக்கற்களை…” இல்லங்களில் பதிய வைப்பதிலிருந்து… சுவருக்குப் பூசும் “கலவை…” முதல் கொண்டு சில விதிமுறை வழி நிலை ஏற்படுத்தினர்.
பூமியின் தன்மை எப்படி அதன் குண ஈர்ப்புக்குகந்த அமில வெக்கையை வெளிப்படுத்துகின்றதோ அதைப் போன்றே
1.எண்ணத்தில் வெளிப்படுத்தும் உணர்வு குண நாத அலைகள்
2.இல்லங்களில் வாழ்பவர்களின் குண அலையின் எதிர் ஒலி ஒளி
3.அங்கே பரப்பிக் கொண்டே தான் இருக்கும்.
தன் வளர்ப்பின் ஞானச் செயலை வளர்க்க இந்த மனித ஆத்மாவானது தான் வளர்ந்து வெளிப்படுத்திய அலைத் தொடர்பிலிருந்தும் தன்னுடன் வாழும் சுற்றத்தின் உணர்வுத் தன்மையின் ஈர்ப்புப் பிடி குண நிலையிலிருந்தும் மீட்டுக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சமம் கொண்ட ஈர்ப்பலை எண்ண உணர்வுடன்
1.உயர் ஞானிகளிடம் தொடர்பு கொண்ட நிலையில்
2.தன் ஜெப ஞானம் அவசியம் இருக்க வேண்டும்.
இதை எதற்காகப் பகர்கின்றேன் என்று அறிந்து கொள்ளுங்களப்பா…!
இன்றைய விஞ்ஞான செயற்கை யுகத்தாரால் இக்காற்று மண்டல முழுமைக்குமே இக்காந்த மின் அலையைப் பிரித்தெடுத்து ஒலி அலையாகச் செயற்கை முறையில் பல செயலுக்காக எடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
ஒளிக் காட்சி… வானொலி… மற்றும் பல ஒலி அலைகளின் அரசியல் ஒலித் தன்மை தொடர்பு நிலைக்கும்… அரசாங்க வழி நிலைக்கு உகந்த சில அலைத் தொடர்பு சாதன நிலையினாலும்… இக்காற்று மண்டலத்தில் பலவிதமான அலைகளைப் படரவிட்டுள்ளார்கள்.
இன்று… இது இல்லாத இடமே இல்லை…! என்று கூடச் சொல்லலாம்.
ஆகையினால் ஜீவ சக்தி கொண்ட மனித உணர்வின் எண்ணமே இவ்வலைத் தொடர்பைக் கேட்பதினால் சுயமாகச் சிந்திக்கும் ஞான நிலையற்று விட்டது.
1.இத்தகைய செயற்கை அலையையே இன்று அனைவரும் சுவாசிப்பதால்
2.தன் உணர்வின் ஞான எண்ண ஈர்ப்பே… தன் ஞானத்தைத் தான் வளர்க்கும் செயலற்ற தன்மையினால்
3.மின் அலைத் தொடர்பு கொண்ட செயற்கை நாத மோதலினால்
4.ஜீவத் துடிப்பு நாதமே தன் நிலை மழுங்கிய உணர்வு செயலாகச் செயற்கையுடன் சிக்குண்ட மனித ஞானம் தான் பேசுகின்றது இன்று,..!
தன் வளர்ப்பின் உண்மை ஆத்ம ஞானத்தை உணர்ந்து இப்பிடி உணர்வின் இறுக்கத்திலிருந்து தன் வளர்ப்பை வளர்க்கும் உண்மை நிலை உணர்ந்து உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
உயிர் தான் சர்வத்தையும் ஆட்சி புரிகின்றான். அவனின்றி அணுவும் அசையாது. இந்த உயிர் இல்லை என்கிற பொழுது ஒன்றும் இயங்காது.
அவனுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு ஒளியான நிலைகள் வரும்போது அவனுக்குள் இருள் சூழாத நிலைகள் துடைக்கும் உணர்வு வருவதே “ஆறாவது அறிவின் ஆற்றல் சரஹணபவா…”
நாம் உணவாக உட்கொள்வதை நம் ஆறாவது அறிவு எப்படி நல்லதை உடலாகவும் கெட்டதை மலமாகவும் மாற்றுகின்றதோ அந்த உணர்வின் நினைவு கொண்டு விஷத்தை மாற்றும் நிலையாக வரும் பொழுது ஆறாவது நிலையை ஏழாக மாற்றச் செய்கின்றோம்.
இது தான் “சப்தரிஷி” என்பது.
ஒலி ஒளி – ஒலியின் தன்மை கொண்டு ஒன்றை இயக்குவது. சிருஷ்டிக்கும் தன்மை பெறுவது. ரிஷி என்ற நிலை எட்டாவது. எட்டுக் கோளின் உணர்வை ஒளியாக மாற்றுவது.
கோள்கள் தனக்குள் வெப்பத்தின் தன்மை எடுக்கும் பொழுது நட்சத்திரமாக மாறுகின்றது.
நட்சத்திரத்தின் தன்மை கதிரியக்கமாக மாறி தனக்குள் வரக்கூடிய விஷத்தின் தன்மையை விண்ணிலிருந்து வரும் தன்மையை வெகு தூரத்திலேயே மாய்த்து விடுகின்றது.
உணர்வின் தன்மை தனக்குள் வெப்பத்தின் தன்மை அதிகமாகக் கூட்டி காந்த அலைகளாகத் தனக்குள் ஈர்க்கும் நிலையாகும்போது சூரியனாக மாறுகின்றது.
இதைப் போலத்தான் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் தசைகளாகக் கோள்களாக மாறினாலும் எட்டுக் கோளின் நிலைகள் நட்சத்திரம் என்ற நிலைகள் அடைகின்றது.
இந்த உணர்வின் தன்மை ஒன்பதாக ஒளி நிலை பெறுகின்றது. நாம் வெளியில் வந்தவுடன் பத்தாவது நிலை விஜய தசமி.
1.விண்ணிலே உயிர் தோன்றி அது பூமிக்குள் விஜயம் செய்து மனித உடல் வரை வளர்ந்து
2.ஆறாவது அறிவு பெற்று ஏழாவதாக மாறி
3.எட்டின் நிலைகளாக விளைந்து
4.உயிருடன் ஒன்றிய நிலைகள் ஒன்பது ஒளியாக மாறி
5.உடலை விட்டுச் சென்றவுடன் நம் உடல் எப்படி விஷத்தைக் கழிவாக மாற்றுகின்றதோ நல்ல உடலாக நாம் எப்படிச் சிருஷ்டிக்கின்றோமோ உயிராத்மா வெளியில் வந்தவுடன் பத்தாவது நிலை கல்கி.
அதே சமயத்தில் இந்த வாழ்க்கையில் யாராவது உதவி செய்திருந்தார்கள் என்றால் இறக்கும்போது…, “நமக்கு ரொம்பவும் உதவி செய்தார்… மகராசன்” என்ற எண்ணத்தில் சென்றால் உயிராத்மா அந்த உடலுக்குள் சென்றுவிடும்.
இந்த உடலுக்குள் புகுந்தவுடன் என்ன செய்யும்…? துன்பத்தையெல்லாம் தனக்குள் சேர்த்துக் கொள்ளும். மனிதனல்லாத உடலாக உருவாக்கிவிடும் உயிர்.
ஆகவே எக்காரணம் கொண்டும்
1.இந்த உடலை விட்டுச் சென்ற பின்
2.நம் உயிராத்மாவை
3.உடலுடன் இருப்பவர்கள் யாரும் இழுத்துவிடக் கூடாது.
அருள் ஒளியின் தன்மைகளை உடலுக்குள் வளர்த்து வைத்திருந்தால் ஒளியின் சுடராகி இன்னொரு உடலுக்குள் போய்ச் சேராது.
இந்த உடலுக்குள் (எட்டுக் கோள் தசைகள்) எட்டானது போல் நாம் வெளியில் சென்ற பின் இந்த உணர்வின் தன்மை என்ன செய்கின்றது?
அதாவது
1.எட்டுத் திக்கிலிருந்தும் தனக்குள் எது வந்தாலும்
2.தன்னை அணுகாத நிலைகள் கொண்டு எட்டாவது
3.அது தான் பதினெட்டு நாள் போர் என்று மகாபாரதத்தில் நிரணயித்திருப்பார்கள்.
வெளியில் வரும் போது பத்தாவது நிலை. எட்டுத் திக்கிலிருந்து வந்தாலும் ஒளியாக ஆக்கும் நிலை “பதினெட்டு…” பதினெட்டாம் படி என்றும் சொல்வார்கள்.
உடலுக்குள் எட்டாகி வெளியில் வந்து எட்டுக் கோளின் தன்மையைத் தனக்குள் ஒளியாக மாற்றி
1.அந்த நிலையான நிலைகள் பெறும் நிலை “ஈரெட்டு பதினாறு”
2.என்றும் பதினாறு என்ற பெருவீடு பெருநிலை.
துன்பம் வரும் போது அதைக் கணக்குப் பார்க்க வேண்டியதில்லை… அது வரும்… போகும்… அவ்வளவு தான்…!
இன்றைய விஞ்ஞான உலகம் மிகவும் விஷத்தன்மையாகச் சென்று கொண்டிருக்கின்றது. எவ்வளவுதான் சம்பாதித்து வைத்து இருந்தாலும் கூட… அதை என் பணம் என்று உறுதியாகச் சொல்வதற்கு முடியவில்லை.
1.ஏதோ ஒரு வகையில் வலு கொண்டவன்
2.நம் பணத்தைத் தட்டிப் பறிக்கும் நிலையில் தான் உலகமே இன்று உள்ளது.
ஓரளவுக்கு பணம் வசதியாக இருப்பவர்கள் வசதி இல்லாதவர்களை ஏமாற்றிக் கொஞ்சம் தள்ளி விட்டு விடுவார்கள். ஏதாவது ரொம்பவும் மீறி விட்டால் அடுத்து சண்டைக்குச் செல்கின்றார்கள். இன்னும் கொஞ்சம் சிக்கலாகின்றது.
உன்னால் என்ன செய்ய முடியும்…? என்று கடைசியில் கோர்ட்டுக்குச் செல்கின்றார்கள். அங்கே சென்றால் வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் பண வசதி உள்ளவர்கள் காசைக் கொடுப்பார்கள்.
காசு தான் அங்கே வேலை செய்யும். நீதி இப்படித்தான் இருக்கின்றது வலு இருக்கும் பக்கம் தான் அந்த நீதி செல்லுபடியாகும். இல்லாதவர்கள் வேதனைப்படத்தான் செய்வார்கள்.
வசதியும் அதிகாரமும் உள்ளவர்கள் மற்றவரை அடித்துப் பறிக்கும் அந்த ராட்சஸ உணர்வாகத் தான் செயல்படுகிறது. அவர்களுக்கே அது சாதகமாகப் போய்ச் சேருகின்றது.
பொருளை இழந்தவர்களோ…
1.இப்படிச் செய்கின்றார்களே… இப்படி ஆகிவிட்டதே…! என்று எண்ணப்படும் பொழுது
2.அதே ராட்சஸ உணர்வு அவர்களை அழித்துவிட வேண்டும் என்று கூறுகின்றது.
கடைசியில் எல்லை கடந்தது என்றால் உன்னைச் சுட்டுப் பொசுக்கி விடுவேன்…! என்று வருகின்றது.
நீ வா…! நானும் உன்னை இரண்டில் ஒன்று பார்க்கிறேன்…! என்று இந்த அசுர குணங்கள் தான் ஓங்குகிறது. அழித்துவிடும் நிலையே வருகின்றது.
1.இந்த உணர்வுகள் உடலிலே விளைந்ததும் ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்… என்று
2.அழிக்க வேண்டும் என்ற உணர்வுகள் இருவருக்குமே மாற்றி விடுகின்றது.
இதையெல்லாம் அன்றே ஞானிகள் மிகவும் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.
காரணம் யாரும் தவறு செய்யவில்லை… தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை. சந்தர்ப்பத்தில் நுகர்ந்த உணர்வுகள் இத்தகைய தீமையின் விளைவுக்குக் கொண்டு செல்கிறது.
இதையெல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா. அந்தத் தீமையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இந்தத் தியானம் அவசியம் தேவைப்படுகிறது.
1.இந்த மனித உடலை வைத்துத் தான் அந்த மெய் ஒளியை நாம் பெற முடியும்.
2.அந்த மெய் வழியைப் பெறுவதற்குத் தான் மகரிஷிகளும் ஞானிகளும் எத்தனையோ முயற்சி செய்தார்கள்.
அந்த அருள் சக்திகளை நீங்கள் எண்ணி எடுத்தீர்கள் என்றால் இந்த வாழ்க்கைக்குத் தேவையான செல்வமும் ஓரளவுக்கு நமக்கு வந்து சேரும். மனமும் அமைதி பெறும். குடும்பமும் நலமாக இருக்கும்.
நோயோ துன்பமோ வந்தால் அந்தத் துன்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்…
1.அது பாட்டுக்கு வரும் போகும்…
2.அது வந்து விட்டது என்றால் அது பாட்டுக்குப் போகும்
3.நாம் அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும்
4.என் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்
5.எனக்குள் அந்த அழுக்கு சேராத நிலையில் நிற்க வேண்டும்.
6.என் சொல்லைக் கேட்பவர்களுக்கு அந்த இனிமையான நிலை வரவேண்டும்
7.என் பார்வை அனைவருக்கும் நல்லதாக இருக்க வேண்டும்
8.இந்த சக்தி எனக்குள் விளைந்து கொண்டே இருக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று
9.உங்கள் உயிரிடம் சொல்லி முறையிடுங்கள்.
10.அவன் அதைப் பதிவு செய்து அதையே இயக்குவான்.
எப்படி ஒரு செடி அதனுடைய சத்தைச் சேர்க்கின்றதோ… அதை இழுத்து வளர்க்கிறதோ… அதைப் போன்று இந்த மனித வாழ்க்கையில் நாம் இருந்தாலும் அந்த ஞானிகளை எண்ணி நம் ஆன்மாவை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.
இந்த மாதிரியே எண்ணிக் கொண்டிருந்தால்
1.மகரிஷிகளின் அருள் சக்திகள் நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா உணர்வுகளிலும் விளையும்.
2.உடலை விட்டுச் சென்றால் அந்தச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்ககுள் நாம் செல்கின்றோம்.
திரைப்படம் போல் நம் மனதிற்குள் எப்படி ஒளி ஒலி வருகிறது…? ஈஸ்வரபட்டர்
நாம் சுவாசத்தால் எடுக்கும் மணத்தைக் கொண்டு தான் இவ்வுயிராத்மா அவ்வலையைச் சேமிக்கின்றது என்று முதல் பாடத்திலிருந்தே சொல்லி வருகின்றேன்.
1.அமிலத்தின் மோதலின் நாத ஈர்ப்பு உயிரணுத் தன்மை
2.எந்தெந்த அமிலமுடன் எவ்வலைச் சேர்க்கை சேர்ந்து அதன் நாதமாகப் பிறக்கின்றதோ
3.அந்த நாதத்திற்குகந்த சேமித அணுத் தன்மை தான்
4.எக்கூட்டுச் சேர்க்கை சேர்ந்ததோ அதன் வளர்ப்பு அணுவாகப் பிறக்கின்றது.
இவ்வுடல் பிம்பத்தின் எண்ண உணர்வில் எடுக்கும் சுவாச நாதத்தின் மோதலின் அணுத் தன்மையால் தான் இஜ்ஜீவ பிம்ப உடல் வளர்ந்து அதன் மூலம் இந்த ஆத்மா வலுக் கொள்கின்றது.
இப்பிம்ப உடலின் உணர்வு அணுக்களின் வளர் தன்மையில்
1.நாதத்தின் இனிமையான இசையின் (சங்கீதம்) தன்மையால் மகிழ்ச்சியானாலும்
2.அதிர்வு… வெடி… இடி.. இவற்றைப் போன்று பயங்கர ஒலி ஏற்பட்டால்
3.ஈர்ப்பின் நிலை செவிக்கு ஏற்கும் மோதலைக் கொண்டு
4.இச்சுவாச அலை உணர்வில் அச்சப்படக்கூடிய அணுக்களைத் தன் ஈர்ப்பில் வளர்க்கின்றது.
இந்த மனித ஆத்ம நாத… ஒலி… ஈர்ப்பு… செவி செயல் தன்மை… மற்றெல்லா ஜீவராசிகளைக் காட்டிலும் ஒலி ஈர்ப்பு விகித வீரியத் தன்மை கொண்டது.
மற்ற ஜீவராசிகள் “ஒளி பாய்ச்சி… சுவாச மண நுகர்வுத் தன்மை கொண்டு தான்” அதன் ஈர்ப்பு நாதத் தன்மை உள்ளது.
பார்வையின் ஒளி பட்டு… சுவாச மணத்தின் நுகர் தன்மை மனிதனைக் காட்டிலும் மிருக நிலைக்கு (சிலவற்றுக்கு) கூடி இருந்தாலும்… மனிதனை ஒத்த செவி ஈர்ப்பு நாத வளர் சக்தி மற்ற மிருகங்களுக்குக் குறைவு.
1.உணர்வால் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப
2.சுவாச மோதல் வளர்க்கும் அணு வளர்ச்சி அலை சக்தியால் தான்
3.இந்த உடலைச் சுற்றியுள்ள ஆத்மா வலுப் பெறுகின்றது.
ஆத்மாவின் நிலைக்கொப்ப உணர்வுகளைத் தான் இந்த உடல் வெளிப்படுத்துகின்றது.
1.ஆத்மாவின் உணர்வையும்
2.உணர்வின் ஆத்மாவையும்
3.இவ்வெண்ணத்தின் ஈர்ப்பு நிலை கொண்டு ஒளி பாய்ச்சி… ஒலி கேட்டு…
4.இந்த மனித ஆத்மா மாற்றி அமைக்க முடியும்.
ஒளி பாய்ச்சி ஒலி ஈர்ப்பின் நிலைக்கொப்ப இவ்வண்ணக்கலவை (படம்) அமில வளர்ப்பு மோதலின் பிம்ப நிலையை எப்படிக் காண்கின்றோமோ அதைப் போன்றே
1.இவ்வொளி பாய்ச்சி ஒலி ஈர்க்கும் எண்ணத்தின் ஓட்ட நிலையை
2.இந்தப் பிம்பமல்லா ஆவி அணுச் சேர்க்கையின் நிலை முறையை
3.பிம்பத் தன்மை மாறிய அமிலக்கூட்டின் ஆத்ம வடிவுகளை
4.அமில உருவாக பிம்பமில்லாத் தன்மையில் நிழல் பட உருவத்தில் காண முடியும்.
இவ்வொளி பாய்ச்சி ஒலி ஈர்த்து இவ்வெண்ண ஓட்ட நிலைக்கொப்ப எதனையுமே அறியும் ஆற்றல் சப்தரிஷிகளுக்கு உண்டு.
எத்தகைய ஜீவ பிம்ப மாற்றம் கொண்ட ஆவி அமிலச் சேர்க்கை ஆத்ம உயிர்களையும்… அருகிலுள்ள இடங்களையும்… அல்லது எண்ணத்தில் செலுத்தும் எந்த இடமாக இருந்தாலும் இவ்வெண்ணத்தைச் செலுத்திச் செயல்முறைப்படுத்தும் நிலையில் காண முடியும்.
ஞானத்தின் வழித் தொடரில் இது சாத்தியமே…!
இதைப் போன்றே அச்ச அதிர்வு நிலையினாலும் ஒலி ஒளி படங்களைக் காண முடியும்…! சில ஆத்மாக்களின் அலைத் தொடர்புடன் இது வரும்.
அதாவது ஒளி ஒலி ஈர்ப்புத் தன்மையில்… அச்ச உணர்வுடன் உடலை விட்டுச் சென்ற ஆவி உலக உயிரின் தொடர்பில்… சில கோவில் விழாக்களில் எழுப்பப்படும் சில மண ஒலி ஈர்ப்புத் தன்மையில் அதே உணர்வு கொண்ட அலை உணர்வு மோதல் எற்பட்டவுடன்… என்ன நடக்கின்றது…?
உடல் இல்லாத ஆத்மாவின் மோதலும் உடலுடன் உள்ள ஜீவ பிம்ப ஆத்மாவின் மோதலும் ஒன்றுபட்டவுடன் அதன் தன்மையில்
1.அது சேமித்து வாழ்ந்த நிலைக்குகந்த தன்மை உணர்வு செயல் எல்லாவற்றையும் இங்கே இயக்கப்பட்டு
2.உடலுடன் உள்ளவர் தன்னையறியாமல் ஆடி அதன் நிலை எல்லாம் பேசத் தொடங்கும்.
3.பல மொழிகளிலும் பேசும்
4.அதன் சுவைக்குகந்த உணவை எல்லாம் கேட்டு அதை உட்கொள்ளும்
5.தெய்வமே வந்து தனக்கு உணர்த்தியதைப் போல் பேசும்.
6.(சாமியாடி அருளாடி மருளாடி வாக்கு சொல்வது எல்லாம் இது தான்)
கடைசியில் இவ் ஈர்ப்பலையின் நிலைக்கொப்ப ஆத்ம எண்ணம் சென்று விட்டால் “தன் நிலை மறந்து…” எவ்வலைத் தொடர் ஆத்மாக்களின் எண்ணத்தையெல்லாம் எடுத்ததோ அவ்வாத்மாவின் நிலைப்படி தான் இந்த ஜீவ ஆத்மா (உடலுடன் உள்ளவர்) வாழ முடியும்.
ஆகவே இந்நாதத்தால் எடுக்கப்படும் உருவங்கள் தான் அனைத்துமே…! இந்நாதச் சேர்க்கை எண்ணத்தை உணர்ந்து மெய் ஒலி பெற்று மெய் ஒளியாக உருவாகுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
கல்வி கற்கும் ஒரு மாணவன் தன் பாட நிலையைப் பொறுமையாகப் படித்தான் என்றால் அந்த உணர்வின் நினைவாற்றல் அவனுக்குள் பதிவாகின்றது.
பதிவான பின் அதே உணர்வின் சத்தைக் கவரும் ஆற்றல் கொண்ட அணுவாக அவனுக்குள் விளைகின்றது.
அணுவாக விளைந்தாலும் அவன் எண்ணத்தில் அவனுக்குள் விளைய வைத்த உணர்வின் ஞானம் அதனின் உணர்வுகளை இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது.
அப்படிப் பரவச் செய்தாலும் தன் இணை சேர்க்கும் உணர்வாகத் அந்தப் பையனின் ஆன்மாவில் இங்கே வந்துவிடும்.
அதே போன்று தான் ஒருவன் வேதனைப்படும் உணர்வின் தன்மையை நுகர்ந்து விட்டால் அதே வேதனையின் உணர்வுகள் இங்கே ஆன்மாவில் அதிகரிக்கின்றது.
இது அதிகரித்துவிட்டால் அதே வேதனையின் உணர்வுகள் சுவாசிக்கப்பட்டு அந்த வேதனைப்படும் நிலையையே உருவாக்குகின்றது.
படிக்கும் அந்த மாணவனின் குடும்பத்தில் தொல்லையோ அல்லது தாய் தந்தையை வெறுப்புடன் பேசியிருந்தாலோ தன் சகோதரன் கோபத்துடன் பேசியிருந்தாலோ அந்த வேதனையின் உணர்வுகள் இவனுக்குள் பட்டுவிட்டால் என்ன ஆகும்…?
அடுத்து இவன் பள்ளிக்குச் சென்றாலும்
1.இந்த வேதனையின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது
2.அவன் பாட நிலையைச் சிந்தித்தாலும் இந்த வேதனை உணர்வுகள் அது கலக்கப்பட்டு
3.அவனுக்குள் சிந்தனையற்ற நிலையை உருவாக்கிவிடுகின்றது.
4.அதனால் அவனுடைய கல்வித்திறன் இழக்கப்படுகின்றது.
ஆனால் சிந்தனையில்லாத நிலையாக அவன் வெளியிட்ட உணர்வுகள் இது அதிகரிக்க அவனைச் சார்ந்தோர்கள் இவன் “இப்படி மக்காக… இருக்கின்றான்… சரியாகப் படிக்க மாட்டேன்…!” என்கிறான் என்பார்கள்.
சரியான பாட நிலை இல்லை என்று அவனின் தாய் தந்தையர்கள் இதைச் சுவாசித்தாலும் அடுத்தவர்கள் இதை உற்றுப் பார்த்து இதனின் உணர்வைச் சுவாசித்தாலும் அடுத்து என்ன ஆகின்றது…?
அந்த விஷத்தன்மை (முதலில் அவன் சுவாசித்த வேதனை) இவன் நினைவாற்றலை மாற்றியது போன்று மற்றவர்களும் அதை நுகர்ந்தறிந்து அவனைக் குற்றவாளியாகச் சொல்லத் தொடங்குவார்கள்.
அப்படிச் சொன்னாலும் இது அவர்கள் உடலில் கூடக் கூட கடைசியில் அவர்களைக் குற்றவாளியாக்கிவிடும்.
உதாரணமாக ஆசிரியர்கள் பள்ளிகளிலே பாடநிலைகளைச் சொல்லிக் கொடுக்கும்போது முதலில் கருத்துடன் சொல்வார்கள். தன்னிடம் படிப்பவன் நன்றாகத் தேற வேண்டும் என்று அந்த உணர்வினைப் பாய்ச்சுவார்கள்.
ஆனால் அவன் செய்யும் செயல்களை உற்றுப் பார்த்து
1.“படிக்க வந்தவன் சரியாக வரமாட்டேன் என்கிறான்…” என்ற உணர்வினைச் சுவாசித்துவிட்டால்
2.சுவாசித்த உணர்வுகள் இவரை அறியாமலே ஞானத்தைப் போதிப்பதற்குப் பதில் அவனை “உதைக்கத் தொடங்கிவிடுவார்கள்…”
இப்படிச் சிந்தனையற்ற உணர்வுகள் வரும் பொழுது இந்த விஷத்தின் தன்மை கொண்டு அந்தப் பையனும் குறும்புத்தனம் செய்யும் நிலையாக வந்துவிடுவான்.
குறும்புத்தனம் செய்வதை ஆசிரியர் பார்த்து விட்டால் அவனின் உணர்வை இவர் நுகர்ந்து அவனை உதைக்கும் தன்மையே வரும்.
உதைக்கும் தன்மை இங்கே வரும் பொழுது ஆசிரியர் உடலிலுள்ள நல்ல குணங்களையும் அவர் உடலிலுள்ள நல்ல அணுக்களையும் இது மாற்றிவிடுகின்றது.
இதைப் போன்ற நிலைகள் சந்தர்ப்பத்தால் ஏற்படுகின்றது. மனிதனின் வாழ்க்கையில் உடலுக்குள் அணுக்களின் மாற்றம் எவ்வாறு அடைகின்றது என்ற நிலையில் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும்.
1.நாம் தவறு செய்கின்றோமா..,? அல்லது
2.நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா…? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஆகவே சந்தர்ப்பவசத்தால் நம் ஆன்மாவிற்குள் நுழைந்த தீமையான உணர்வலைகளை நாம் சுத்தப்படுத்தியே ஆகவேண்டும். அதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.
அன்று ரிஷிகள் நடத்திய யாகம் எது…? ஈஸ்வரபட்டர்
ஏழு வகைக் குணச் சேர்க்கையில் அமிலத் தன்மை கொண்ட இந்தப் புவியின் நாத ஈர்ப்பு வளர்ச்சியின் உண்மையறிந்த ரிஷிகள் தன் ஞானத்தின் தொடர் சித்து நிலை கொண்ட காலத்திலேயே இவ்வொலி நாதத்தின் ஈர்ப்பைத் தன் ஆத்ம உயிர் சேமிதம் கொள்ள யாக பூஜை முறை மேற்கொண்டார்கள்.
இப்புவியின் மணம்.. சுவை… உலோகம்… இவற்றைப் போன்று ஏழு தன்மை கொண்ட வஸ்துக்களை அதிகமாக யாக குண்டத்தில் செலுத்தி அதிலிருந்து வரும் புகையினால் தன் சுவாச ஈர்ப்பிற்கு எடுக்கும் நிலையைப் பக்குவப்படுத்தினார்கள்.
1.இப்புகை மண்டலத்தின் அமில விகித நிலையைக் கொண்டு
2.எந்தெந்த அமிலச் சேர்க்கையின் புகை சுவாச நிலையைத் தன் ஈர்ப்பிற்கு எடுக்கின்றதோ
2.அதே மந்திர ஜெபத்தை ஜெபித்துக் கொண்டே அவ்வலைத் தொடரைக் கவர்ந்து
4.அதன் மூலம் மற்ற மண்டலங்களின் வழித் தொடர் அலை ஈர்ப்பைப் பெறுவதற்கு
5.உடல் பிம்ப இயந்திர அணுக்களின் வளர்ப்பை இயங்கச் செய்து
6.உயிராத்மாவின் செயலைக் கொண்டு அவ்வலைத் தொடரின் சக்தியை
7.தன் ஜீவ சக்தியுடன் கூடிய அணு மண்டல ஆத்ம உயிரின் வளர்ப்பிற்கு வலுவாக்கிக் கொண்டார்கள்.
வீணையின் நாதத்தில் சேர்க்கப்படும் அத்தந்திகளின் நிலையைக் கொண்டு எப்படி ஒலி மாறுபடுகின்றதோ… அதைப் போன்றே இவ் எண்ண ஒலி நாதத்தில் ஜெபிக்கப்படும் ஜெப ஒலியின் தன்மை கொண்ட அதனதன் தொடர் குண வலுவை எல்லாம் இந்த ஆத்ம உயிர் எடுத்துக் கொள்கின்றது.
1.ரிஷிகளும் சித்தர்களும் ஜெபமெடுத்த உண்மைத் தன்மைகளை எல்லாம்
2.பூஜை யாக வழித் தொடரில் நம் முன்னோர்கள் நமக்குச் சுட்டிக் காட்டியிருந்தாலும்
3.அதன் உண்மைகளை அறிய முடியாத விகிதத்தில் தான் இன்று நாம் உள்ளோம்.
இப்புவியின் வளர்ப்பிலிருந்தே தன் ஜீவ பிம்பத்தின் தன் ஞான வளர்ப்பை அறிந்து கொள்ளும் செயல் யாவையுமே இந்தப் பூஜை வழிபாட்டில் இம்மந்திர நாதத்தால் பல சக்திகளைப் பெற்றனர்.
நாற்பத்தி எட்டு நாள் விடாமல் யாகம் செய்தார்கள்…! என்றும்… சில ரிஷிகள் சில குறிப்பிட்ட மரங்களில் நதி ஒரங்களிலிருந்து ஜெபமிருந்தார்கள்…! என்றும் அறிந்திருப்பீர்கள்.
1.அந்த ஞானிகள் தன் வலுவின் சக்தியை வலுப்படுத்திக் கொள்ள
2.தன் உயிராத்மாவின் வளர்ப்பிற்கு பல அலைத் தொடர்புகளை எடுத்து
3.வலுவாக்கிக் கொள்ளும் வளர்ப்புக்குத் தானப்பா இந்த வழிபாட்டுத் தன்மையை ஜெபம் கொண்டு எடுத்தார்கள்.
இஜ்ஜெபத்தால் ஓதிய தியான ஈர்ப்பின் வலுத் தன்மை சேர்க்கையாக தன் உடல் கூறு அமில வளர்ப்பே அவ்வலைத் தொடர்பின் வளர்ப்பாக தன் உயிராத்மா வளர்ந்த பிறகு அவர்கள் சொல் நாதத்தின் வாக்குத் தன்மையின் பலிதமும் இப்பார்வையின் தன்மையிலேயே நினைத்த நினைப்பு நடைபெறும் வலுவைக் கூட்டிக் கொள்கின்றனர்.
அவர்கள் பார்வை பட்டாலே… எந்தக் குணத்தில் அப்பார்வை செலுத்துகின்றனரோ அவ்வமில ஈர்ப்பு… இச்சுவாசத்தின் அலையினால் அந்த இடத்தில் பாய்ந்து அதன் தன்மை தான் அங்கே நடக்கும்.
இஜ்ஜெபத்தால் தியானம் கொண்டு தன் வலுவை வளர்த்துக் கொண்ட ஆத்மாக்களின் (மகரிஷிகள் சித்தர்கள் ஞானிகள்) ஈர்ப்பு நிலையானது
1.நேராக மேலிருந்து வரும் விண்ணின் ஆற்றல் மிக்க அலைத் தொடரை
2.உடலின் மேல் சிரசில் படச் செய்தனர்.
காரணம்… இந்த உயிர்த் துடிப்பின் வளர்ப்பைக் கொண்டு சுவாச இயந்திரம் இயங்குகின்றது. அப்பொழுது பூமியின் ஈர்ப்பு பிடிப்பு குறைந்து விடுகின்றது.
ஆக பூமியின் கீழ் நோக்கிய சுவாச எண்ண அலையுடன் வாழும் தன்மையில் பல எண்ண மோதலின் சிக்கலுடன் இந்தக் கனம் கொண்ட சுவாசம் எடுக்க எடுக்க இப்புவிப் பிடிப்பின் சுழல் பிடிப்பாகத் தன் இருக்க முடியும்.
இதிலிருந்து விடுபடத்தான்… சப்தரிஷிகள் தன் ஞானத்தால் தன் வலுவின் சக்தியைப் பார்வையிலும்… சொல்லாற்றலிலும் எத்தன்மையையும் வளர வைத்தனர்.
இந்தப் புவியில் வாழும் ஆத்மாக்களான நாமும் இந்த வலுத் தன்மையை வலுவாக்கிக் கொண்டோமானால் அதன் வளர் தன்மையில் செயல் வழித் தொடராக அவர்கள் வாழும் இடத்தை அடையலாம்.
1.இந்நாத ஈர்ப்பின் வீரிய சக்தி கொண்ட
2.மனித ஆத்மாவின் செயலினால் மட்டும் தான் (நம்மால்)
3.இந்த வலுவின் வலுவைக் கூட்டிக் கொள்ள முடியும்.
உயிரிடமிருந்து (கடவுளிடமிருந்து) தப்பவே முடியாது…!
உதாரணமாக விஷத்தைக் குடித்து விட்டார்கள் என்றால் அவர்கள் எண்ணம் எல்லாம் போய்விடுகின்றது. நினைவுகள் இழந்து உடலையும் அழித்து விடுகின்றது.
விஷத்தை அருந்தி உடலை விட்டுச் செல்பவர்கள் எங்கே செல்வார்கள்…?
1.அடுத்து பாம்பாகவோ தேளாகவோ தான் பிறப்பார்கள்.
2.வேறு எங்கும் செல்ல முடியாது.
மனித உடலை விட்டுப் பிரிந்த உடனே அடுத்த உடலுக்குள் செல்வார்கள். யார் மீது பற்று இருந்ததோ அந்த உடலுக்குள் செல்லும். அல்லது சாகும் போது யார் நினைவை அதிகமாகக் கொண்டு வருகிறார்களோ அந்த உடலுக்குள் செல்லும்.
அங்கே சென்றவுடன் அந்த உடலிலும் விஷத்தைக் குடிக்க வைத்துச் சாக வைப்பார்கள். கடைசியில் இதிலே விளைந்த அந்த விஷமான உணர்வு உயிரோடு ஒன்றி இணைந்து தான் இருக்கும்.
வேறு எங்கும் தப்ப முடியாது…!
வாழும் போது இங்கே எப்படி இம்சைப்பட்டார்களோ விஷத்தைக் குடித்தபின் சாகும் போது எத்தனை துடிதுடித்தார்களோ உயிர் இழந்த பின்னும் அதே துடிப்பு உயிரான்மாவில் கொண்டே இருக்கும்.
அடுத்த உடலுக்குள் போனவுடன் இதே துடிப்புடன் அவர்களுக்குள்ளும் தற்கொலை செய்யும் உணர்வைத் தூண்டிக் கொண்டே இருக்கும். இந்த வேலையைச் செய்து கொண்டே தான் இருக்கும்.
1.சிலர் நினைக்கலாம்… வாழ்க்கையில் வந்த கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்காக
2.நான் தற்கொலை செய்து கொள்கின்றேன்…! உலகத்தை விட்டுப் போகிறேன் என்று…!
3.எங்கே போவது…? அவனிடம் (உயிரிடம்) இருந்து தப்பவே முடியாது.
4.தப்பு பண்ணினால் தப்பு தான்… ரைட் செய்தால் ரைட் தான்…
5.மார்க் போட்டுக் கொண்டே இருப்பான் இந்த உயிர்.
இதைத்தான் ஞானிகள் கீதையிலே சுருக்கமாகச் சொல்லி உள்ளார்கள். நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகின்றாய் என்று.
அதே போல் பிடிக்கவில்லை என்று… ஒருவரைச் சுட்டுக் கொன்று விடுவேன் என்று நினைக்கலாம்… கொன்றும் விடலாம். அந்த சுட்டுப் பொசுக்கும் எண்ணம் என்னிடம் வருகின்றது.
1.சுட்டவுடன் அவன் துடித்த உணர்வு எல்லாம் இங்கே வந்து விடுகிறது.
2.அந்த ஆன்மாவும் இங்கே வந்து விடும்.
3.அதே எண்ணத்தை கொண்டு எண்ண எண்ண அவனின் உணர்வு எனக்குள் வந்து
4.என்னைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டே இருக்கும்.
5.உயிருடன் ஒன்றி இந்த இம்சையைப் பட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டியதிருக்கும்.
இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.
நாம் நினைக்கின்றோம் உடலை விட்டுப் போனால் ஒன்றும் தெரியாது என்று…! ஆனால் இப்பொழுது நல்லது என்று இருக்கும் போது அதைத் தெரிந்து கொண்டால் திருத்திக் கொள்ளலாம்… திருத்தவும் முடியும்.
ஆனால் உடலை விட்டுச் சென்றால் என்ன நடக்கும்…?
1.உயிருடன் ஒன்றிய அந்த இம்சைப் படுத்தும் உணர்வுகள்
2.நீ செய்தாய் அல்லவா… நீ படு…! என்று உயிர் இந்த வேலையைச் செய்யும்.
ஏனென்றால் அவன் (உயிர்) கடவுள். அவனுக்கு அழிவில்லை. நாம் அவனைப் போன்றே நாமும் அழியாத நிலை பெற வேண்டுமென்றால்
1.அருள் ஞானத்தின் தன்மையை சிருஷ்டித்தால் அதை நமக்குக் கொடுப்பான்.
2.ஞானிகள் அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின் உடலை விட்டுப் போனால்
3.நம்மை அழியாத ஒளிச் சரீரமாகப் படைப்பான்…?
ஏனென்றால் அத்தகைய திறன் வாய்ந்தவர்கள் தான் நாம். முழுமுதற் கடவுளாக நாம் சிருஷ்டிக்கும் உடல் பெற்றவர்கள்.
ஆனால் நாம் மனிதனாகப் பிறந்த இந்த நல்ல சந்தர்ப்பத்தை இழந்து விட்டால் தீர்ந்தது… எல்லாம் போய்விடும்.
ஆகையினால் நாம் அனைவரும் அந்தப் பத்தாவது நிலையான கல்கி என்ற “ஓளியாக மாறும் பாதையில்… ஞானிகள் சென்ற பாதையில்…” செல்வோம். மனித வாழ்க்கையில் அறியாது வந்த இருளைப் போக்குவோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நாம் புறக்கண்ணால் காணுகின்றோம். அந்த உணர்வை நுகர்ந்து உயிரிலே அகக்கண்ணாகப் படுகின்றது. இந்த உணர்வின் தன்மை தான் உடலுக்குள் பரப்பப்படுகின்றது.
இப்பொழுது நாம் சொல்லும் உணர்வுகளைப் புறக்கண்ணால் உங்களுக்குள் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள். மீண்டும் இதை நினைவாக்கப்படும் பொழுது எப்படி எண்ணுவீர்கள்…?
இதை விட்டு வெளியே சென்றால் அடுத்தகணம் நீங்கள் எப்படிச் சிந்திப்பீர்கள்…?
1.சாமி அன்றைக்கு என்ன சொன்னார்..,? என்று
2.உங்களின் நினைவாற்றல் “விண்ணிலே… மேல் நோக்கித்தான் செல்லும்”.
வியாபார ரீதியில் எடுத்துக் கொண்டால் ஒரு தடவை பதிவாக்கி விட்டால் இந்த உணர்வின் தன்மை மீண்டும் உங்கள் நினைவின் ஆற்றலை “அன்றைக்கு என்ன சொன்னார்…?” என்று கீழே பார்க்க மாட்டீர்கள்.
கீழே பார்த்தால் உங்களுக்குக் கவலையும் சிந்திக்கும் திறனும் இழக்கப்படுகின்றது.
இதைப் போல இயற்கையின் நியதி கொண்டு
1.உங்களுடைய சிந்தனையின் தன்மையை அந்த உயிரான ஈசனிடம்
2.உங்களை அறியாமல் இயக்கப்படும் பொழுது தான்
3.பதிந்த உணர்வுகள் உடலுக்குள் இருந்த நினைவைத் திருப்பி உங்களுக்குள் நினைவாகும்.
இதைப் போன்றுதான் இன்றைய நிலைகளில் உங்களுக்குள் உருவாக்கும் உணர்வின் தன்மையை அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை “ஈஸ்வரா…!” என்று நம் உயிருடன் (புருவ மத்தியில்) ஒன்றி அந்த அருள் ஞானத்தைப் பெறவேண்டும் என்று ஏங்கினால் அதை அப்பொழுதே உங்கள் உடலுக்குள் ஊடுருவி உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு அது சேர்ப்பிக்கும்.
அந்த உணர்வுகள் அங்கே உடல்களில் பரவும். அதனதன் உணர்வுகள் அங்கே இயக்கப்படும் பொழுது அந்த நல்ல உணர்வுகளை அது பெறுகின்றது.
1.இதைத்தான் சொர்க்கவாசல் என்பது
2.இது மனிதனால் தான் முடியும்.
மனிதன் தான் சிந்தித்து ஆறாவது அறிவு கொண்டு கார்த்திகேயா என்று அவன் தெரிந்து கொண்ட உணர்வு கொண்டு அவன் புருவ மத்தியை எண்ணும் இந்தப் பாதையை அறிந்து கொண்டவன்.
ஆகவே… இதன் வழி தான் அவன் சொர்க்கம் செல்ல வேண்டும்.
நாம் புறக்கண்ணால் பார்த்த அசுத்த உணர்வுகள் இங்கே இருப்பினும் இதன் வழி சுவாசிக்காதபடி இந்த அகக்கண்ணின் வழி கூடிய நினைவு கொண்டு இதனின் காந்தப்புலனைத் தனக்குள் சேர்த்து அதைப் பிராணாயாமம்.
இந்தப் புருவ மத்தியிலிருந்து மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி உடலில் ஒளியான அணுவாக மாற்ற வேண்டும்.
“ஓ… ம்…” என்ற நாதத்தின் சூட்சம சக்தியின் ரகசியம் – ஈஸ்வரபட்டர்
நாதத்தால் வளர்ந்த விந்துவின் ஜீவ வளர்ப்புத்தான் இப்புவி வளர்ப்பு யாவையுமே…!
பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மை கொண்ட அமில மோதல் நாத முதற் கொண்டு… இப்புவியின் சுழற்சி நாதக் காற்று வளர்ப்பு ஒலி ஒளி நீராகி… இத்திடம் கொண்ட சத்துத் தன்மையின் நாத ஈர்ப்பின் சுழற்சியால் புவியில் இப்புவியின் வெக்கை அலை வெளிப்படுகிறது.
அந்த வெப்ப அலையால் ஈர்க்கப்படும் ஒலி நாதமான ஓ..ம் என்ற நாதத்தின் குணத் தன்மை ஒலியாகி.. ஒளியாகி… நீரான வளர் சுழற்சியில்..
1.ஓ..ம் எனக் கொண்ட நாத ஒலியின் தொடர் நாத விந்து வளர்ப்பு தானப்பா
2.இப்புவி நாத வளர்ப்பு யாவையுமே…!
விளக்கம்:-
இந்தப் புவி வளர்த்த நீரில்… சூரியனின் அலை ஈர்ப்பை இப்பூமி ஈர்த்து…
1.நீரின் மேல் சூரிய ஒளி பட்டு இப்பூமி ஈர்த்து
2.இப்பூமி வெளிப்படுத்தும் ஆவியான வெக்கை நிலை (வெப்பம்) மேல் நோக்கிச் செல்கிறது.
அதைப் போன்றே எரிக்கப்படும் எரி பொருளின் புகையானது மேல் நோக்கிச் செல்கின்றது.
1.இப்புவியில் வளரும் யாவும் மேல் நோக்கி வளர்கின்றது.
2.ஆனால் கனம் கொண்ட வளர்ப்பு யாவும் புவி ஈர்ப்பின் பிடியுடன் கீழ் நோக்கி வளர்கின்றது.
புவி வளர்ப்பா…? பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மையா…? இவ்வளர் நிலை யாவையும்…!
இந்தப் புவியில் வளரும் தன்மையின் வளர் சக்திக்கு நாதத்தின் வித்துத் தன்மையின் செயலுக்கே ஜீவ நாடி… இந்த “ஓ…ம்…” என்ற புவி நாதம் தான்.
இந்தப் பால்வெளி மண்டலத்தின் செயல் தன்மையில்… அந்தந்த மண்டல ஈர்ப்பு ஒலித் தன்மை கொண்டு நாதச் சேர்க்கையின் வளர் உயிரணுக்கள் ஒவ்வொரு மண்டலத் தன்மைக்குகந்த நிலையில் வளர்கின்றது.
மண்டலச் சுழற்சிக்கு மாறுபட்டுள்ள பால்வெளி மண்டலத்தில் காற்றுத் தன்மையே இல்லாத மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் எத்திசை என்ற செயலற்ற நிலையில் உள்ள இடங்களிலும் சில ஜீவராசிகள் பிறந்து மடிந்து வாழ்கின்றன.
காற்றுத் தன்மையே இல்லா நிலையில் ஜீவன்கள் எப்படிப் பிறக்கின்றன..?
இவ்வமிலத்தின் சேர்க்கை நிலையில் சிறு சிறு அமிலக்கூட்டின் மோதலின் ஒலி ஈர்ப்பின் ஜீவனாகி இவ்வொளியின் நாதமுடன் வளர்ச்சி கொண்ட வளர்நிலைக்குகந்த மிகக் குறுகிய கால சில அபூர்வச் செயல் கொண்ட ஜீவத் தன்மைகள் தோன்றி அதன் கனம் உந்தித் தள்ளப்பட்டு பிறப்பெடுத்தவுடன் மடிந்து கனம் கொண்ட அப்பிறப்பு அமிலக் கூட்டுச் சேர்க்கை உந்தித் தள்ளப்பட்ட நிலையில் தான் தனக்குகந்த மண்டல ஈர்ப்பின் வளர்ப்புத் தன்மைக்கு வலு நிலை கொண்ட வளர்ப்பு அமிலச் சத்து கிடைக்கின்றது.
1.இந்தப் பால்வெளி மண்டல செயல் வளர்ப்பு நிலை இல்லாவிட்டால்
2.மண்டல ஈர்ப்பு வளர்ப்பு செயல்படாது.
சூரிய மண்டலம் ஜீவராசிகள் வாழ முடியாத இடம். ஜீவ வளர்ப்பே இல்லாநிலை என்றெல்லாம் உணர்த்துகின்றனர். ஆனால்
1.இந்த அண்டகோடி அனைத்து வார்ப்பு நிலைகளிலும்
2.“இந்நாத விந்தற்ற நிலை இல்லா இடம் எதுவுமே இல்லை…!”
வளர்ப்பின் வளர்ப்புத் தன்மை கொண்ட வளர் வளர்ச்சி செயலுடன் ஒன்றின் செயல் தொடர் வளர்ப்பு “நாத விந்துக்கள் தான்” இம்மனிதனும் இம்மற்றெல்லா மண்டலங்களுமே…!
1.இந்நாத ஈர்ப்பு மோதலில் துடிப்பில்லா விட்டால்
2.எச்செயலின் வளர்ப்பு வளர்படுவதில்லை
வளர்ப்பின் வளர்ப்பே இந்நாதம் தான்…!
எண்ணத்தால் எடுக்கும் நாதத்தை உயர் நாதச் செயலாகச் சேமிக்கும் பொழுது தான் இந்த உயிர் காந்தத் துடிப்பின் சக்தியை இவ்வாத்மா சேமித்து அதன் வளர்ப்பிற்குகந்த அணு வளர்ச்சியின் வலுவைத் தன் வலுவாக்கி ஜீவ சக்தி வாழ முடிகின்றது.
இதன் தொடர்பில்…
1.தனக்குச் சாதகமான வலுத் தன்மையைக் கூட்டிக் கொள்ள
2.இந்த மனித எண்ண நாதத்திற்குத் தான் உண்டு.
இதன் தன்மையை உணர்ந்தவர்கள் தான் நம் ஞானிகளும்.. சித்தர்களும்… மகரிஷிகளும்…!
அந்தத் தத்துவ ஞானச் செயல் மணிகளாகப் பல ஞானிகள் இஜ்ஜெப முறையின் நாத ஒலி கொண்ட சில மந்திர ஒலிச் சேர்க்கையின் செயல் கொண்டு செயல்படுத்தினர்.
அதன் மூலம் அச்செயல் வளர்ப்பின் தன்மை கொண்ட
1.பல கோடி ஆண்டுகளாக வளர்ச்சி கொண்ட…
2.இச்சூரிய குடும்பமல்லா பல சூரியனின் வளர்ச்சி பெற்ற ரிஷி அலையின் தொடர் நிலை பெற
3.இந்த மந்திர நாத யாக ஜெப பூஜை வழிபாட்டில் ரிஷித் தன்மை வளர்ப்பு ஞானிகளாக ஒளிர்ந்தனரப்பா…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஒவ்வொரு உடலிலும் தான் எடுத்துக் கொண்ட விஷத்திற்கொப்ப தன் உணர்வின் தன்மை தன் உயிருடன் ஒன்றி மலம் போன்று உண்டு.
அதன் உணர்வே மற்றதுடன் கலந்து கலந்து செயலாக்கும்.
அது தனது சுழற்சியில் தனக்குள் வந்து பெருகி வைரமாகிவிட்டால் பாம்பிற்கு எப்படி நாகரத்தினமாகின்றதோ மனிதனுக்குள்ளும் இந்த உயர்ந்த உணர்வின் தன்மை “ஒளியாக மின்னும் உணர்வின் சக்தியாக.., ஒன்று” உருவாகின்றது.
யானைக்கும் இத்தகைய நிலை உண்டு. “யானை மதக்கல்” என்பார்கள். நரிக்கும் ஒன்று உண்டு. “நரிக் கொம்பு” என்று சொல்வார்கள்.
உயிரின் இயக்கம் மையத்தில் உறைந்த உணர்வுகள் எதனை நுகர்ந்ததோ அதன் ஆயுள் காலம் நீடித்திருந்ததென்றால் உணர்வின் ஒளி மிகுந்து அதற்குள் அந்த ஒளியின் உணர்வின் உறைவிடத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
இவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு மனிதனுக்கு இது உண்டு.
அக்காலங்களில் முதுமையடைந்து 100-125-200 வயது வரை வாழ்பவர்கள் அவர்களால் நடமாட முடியவில்லை என்றால் “முதுமக்கள் தாழியில்.., போட்டு வைப்பார்கள்”.
அவர்கள் எடுத்து கொண்ட (சுவாசித்து உயிரிலே படும்) உணர்வின் தன்மை அவர் உயிரின் அருகில் உறைந்திருந்த உணர்வின் தன்மை எடுத்து அதிலே பார்த்தால் வைரம் போன்று “ஜொலிக்கும்”.
இது அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உறைந்து ஒரு கல்லாகத்தான் மாறுகின்றது. அது செயலாக்கும் ஜீவனாவது இல்லை.
இதை அறிவதற்காகக் குருநாதர் என்னை மலைப்பாகங்களுக்கு அழைத்துச் சென்று கடந்த காலங்களில் நீடித்த ஆயுள் கொண்டு வாழ்ந்தவர்கள் உடல்களில் “இத்தகைய வளர்ச்சிகள் உண்டு..,” என்பதைக் காட்டினார்.
ஆனால், வைரத்தை அதில் போட்டு வைத்துள்ளார்கள் என்று நாம் நினைப்போம்.
120,130 வயதுக்கு மேல் ஆனவர்கள் எதனின் தன்மையைச் சீராக வைத்துள்ளார்களோ அதன் உணர்வின் வளர்ச்சி கொண்டு அவர் உயிர் அருகிலே ஒரு சுழற்சி வட்டம் இருக்கும்.
இந்த உணர்வின் தன்மை வெளிவிட்ட பின் மறு உடல் பெறும் இந்த உணர்வுக்கொப்ப மீண்டும் மனிதனுக்குள் சென்று இந்த உணர்ச்சியின் நற்குணங்களை உருவாக்கப்பட்டு அதனுள் கருவாகி மீண்டும் மனிதனாக உருப்பெறும் தன்மை உருவாகின்றது.
விண்ணிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து உயிர் வழி நாம் சுவாசித்தால் உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும். ஒளியின் சரீரம் பெற முடியும்.
அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் ஒன்றிட முடியும். சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையலாம்.
“உயிருடன் ஒன்றி..,” எவ்வாறு விண்ணுலகம் செல்ல வேண்டு என்பதைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.
நம்முடைய சாஸ்திரங்களில் காட்டப்பட்டது வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல்.
கோவில் அனைத்திலும் வழக்கமாகப் போகும் பாதையை “விட்டுவிட்டு…, இடைமறித்து.., வேறுவாசல் வழி வந்து.., நாம் அதன் வழி செல்வது – சொர்க்கவாசல்”. சாதாரண மனிதனும் இதை அறிந்து கொள்வதற்காக சாஸ்திரப்படி ஆலயங்களில் காட்டப்பட்டது.
அன்றைய தினம் விரதம் இருக்க வேண்டும் என்று காட்டினார்கள். விரதம் என்றால் என்ன…? இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை அன்றைய தினம் நாம் எண்ணாமல் இருப்பதே விரதம் ஆகும்.
“தீமைகளை எண்ணாமல் இருப்பதே.., விரதம்”. சாஸ்திரம் கூறுகின்றது.
தீமைகளை நாம் எண்ணாது அருள் மகரிஷிகளின் உணர்வுகளைத் தனக்குள் சேர்த்துக் கொள்ளும்படி செய்தார்கள் ஞானிகள். மகரிஷிகளின் அருள் உணர்வை நுகரும் ஆற்றலை அனைவருக்கும் கிடைக்கச் செய்தார்கள்.
தீமை செய்யும் உணர்வுகள் நம்மை இயக்காதபடி அதை வகுந்திட வேண்டும்
நரசிம்ம அவதாரம் என்றால்… ஒருவர் ஏசினாலோ பேசினாலோ அந்த உணர்வை நான் நுகரக்கூடாது. ஆனால் எதிரில் வரும் நிலைகளை நுகராமல் இருக்கவும் நம்மால் முடியாது.
உதாரணமாக நான் ரோட்டில் செல்லும் போது எங்கே போகின்றீர்கள்…? என்று கேட்கின்றார்கள்.
1.இந்தப் பாதையில் தானே செல்வார். வசதியான இடமாக இருக்கின்றது.
2.தட்டி எறிந்துவிட்டு என்னிடம் இருக்கும் பணத்தை பிடுங்கிச் செல்லலாம் என்று வருகின்றார்கள்.
ஆகவே இதை நான் கூர்ந்து கவனிக்கவில்லை என்றால் என்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியாது.
ஆனாலும் திருடும் எண்ணம் கொண்டு தான் கேட்கின்றார்கள். அவர்கள் பேசிக் கொண்டு போகட்டும். நான் ஏன் அதைக் கேட்க வேண்டும்…? என்று இருக்க முடியுமா…!
1.அவர்கள் பேசிய உணர்வின் தன்மை எனக்குள் வரும் பொழுது அதைக் கேட்டு நுகர்கின்றேன்… அறிந்து கொள்கிறேன்…!
2.அது என்னைக் காத்துக் கொள்ள உதவுகின்றது.
இருந்தாலும் என்னைக் கொன்று விட்டுப் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் எண்ணும் பொழுது அதைப் பார்த்தவுடனே எனக்கு பயமாகின்றது.
கொன்று விடுவேன் என்று சொன்னாலும்… சும்மா போகலாம்… சாமி சொன்னார் எனக்கு ஒன்றும் வராது…! என்று அப்படியே இருக்க முடியுமா…!
“என் காரியம்” என்று வரும் போது இந்தப் பாதையில் போகாமல் இருக்க முடியாது. அந்தப் பாதை வழியாகத்தான் நான் செல்ல முடியும்.
அவன் சொல்கிறான் நாம் பாட்டுக்குப் போகலாமே என்றால் அது அசட்டுத் தைரியம் தான்.
நாம் தர்மம் செய்பவர்கள்… எல்லோருக்கும் நன்மை செய்பவர்கள் தான்…! இப்போது ஒரு புலி இங்கே வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். புலி அதனுடைய பசியைப் போக்க நம்மைச் சும்மா விடுமா…? அது நம்மை அடித்துக் கொள்ளத்தான் எண்ணும்.
அது போல் அசுர குணம் கொண்டவர்கள் அந்தத் தவறைத் தான் செய்வார்கள். என்னை அடித்து விட வேண்டும் என்று பயத்தை ஊட்டுகிறார்கள். காதிலே கேட்டவுடன் உடல் நடுக்கம் ஆகின்றது
நாம் நல்லதை எண்ணிச் செயல்பட்டாலும் கூட அசுர உணர்வு கொண்டு பிறர் எண்ணிய உணர்வுகள் இங்கே உடலை இயக்குகிறது. பிறரின் நிலைகளை அறிந்து கொள்ள இது உதவுகின்றது
அறிந்த பின் அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்…?
ஈஸ்வரா…! என்று உயிரை புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று வலு சேர்த்துக் கொண்டு நாம் செல்ல வேண்டும்.
குழம்பு வைக்கும்போது சுவை கெட்டு விட்டால் அதை மாற்றுவதற்கு மீண்டும் எத்தனையோ செய்கிறோம்.
கருணைக் கிழங்கு விஷம் என்று தெரிகிறது. அதனுடைய நமநமப்பைக் குறைப்பதற்குப் புளியைக் கரைத்து அதனுடன் சேர்க்கின்றோம். பின் வேக வைக்கின்றோம். அதை அடக்கி விடுகின்றோம். அப்பொழுது அது சுவைமிக்கதாக மாறுகின்றது.
இது போல்…
1.வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு நிலையிலிருந்தும் நம்மை நாம் மீட்டுக் கொள்ள
2.மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு அடக்கிக் கொண்டே வர வேண்டும்
3.தீமைகளைப் பிளந்து கொண்டே வர வேண்டும்.
அது தான் நரசிம்மா…!
மெய் ஒலியைப் பெறும் வழி முறை – ஈஸ்வரபட்டர்
எங்குமே… எதிலுமே… “எல்லாமே” ஒலியின் தன்மை கொண்டு உருவாக்கப்படுவது தான்…! உருவாக்கப்படும் நற்சக்தியும் தீய சக்தியும் எதுவாக இருந்தாலும்.. இந்த ஒலி கொண்டு தான் பிறக்கப்படுகின்றது.
இவ்வொலி நாதம் கொண்டு அமையப்படுவது தான் உயிரணுக்கள் யாவையுமே.
1.இந்த நாத விந்துச் சேர்க்கை செயலில் எடுக்கப்படும்
2.சுவாசத்தின் நிலைக்கொப்பத்தான் உயிராத்மாவின் செயலும் உள்ளது.
நெற் பயிரில் அந்தப் பலன் தருவாயிலும் “இக்காற்றலையின் நாதச் சேர்க்கையைத் தன் ஈர்ப்பில் சேமிக்கப்படும் நிலைக்கொப்பத்தான்” அக்கதிரின் மணியில் அரிசியின் நிலை வளர்கின்றது.
ஒரு கதிரில் வரும் நெல் விதையில் எல்லாமே மணியாக இருப்பதில்லை… பதர்களும் உண்டு…!
அதைப் போன்றே கனிகளாக உருவாகும் பொழுதும் ஒரு செடியில் பூக்கும் பூக்களிலும் ஒன்றை ஒத்த நிலையில் ஒன்றில்லாமல் ஒரே செடியில் பூக்கும் பூக்களிலும் சில சிறுத்துக் கரடு தட்டிய நிலையில் வரும்.
இதைப் போன்றே உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அது எடுக்கும் நாதத்திற்குகந்த விந்துத் தன்மை தான் வளர்கின்றதப்பா…!
இந்நாதத்தால் எடுக்கும் உருவகத் தன்மையில் நம் சித்தர்கள் காட்டிய செயல் முறையின் “ஆரம்பத் தன்மை தான்…” பக்தியால் ஜெபிக்கும் “ஜெப நாதப் பாடல்கள்…!”
1.அன்பென்ற பக்தி பூண்டு
2.ஆசை என்ற நாத இனிமையைக் கூட்டி ஜெபப்படுத்தும் முறை தான்…
3.இவ்வுயிராத்மாவிற்குச் சக்தியைக் கூட்டும் “ஆரம்பச் சேர்க்கை வழி காட்டி முறை…!”
இப்புவியின் வளர்ப்புடனே நல் வளர்ப்பாக பல நாயன்மார்கள் இப்பாடலின் நாதத்தில் சுழல் விகிதத்தில் செயல்பட்ட முறை தான் பக்தியின் நாத ஜெப முறை.
இஜ்ஜெப முறையின் வளர்ச்சியால் நம் பூமியின் சுழல் நாதமான ஓ…ம் என்ற நாதத்தை உள் நாதமான ஓமுக்குள்.. ஓமாக… நம் உயிராத்மாவின் நாதத்தை… இப்புவிக்கே நாதம் தந்த சகல ரிஷிகளின் நாத அலையுடன் கலக்கவிட வேண்டும்.
1.ஓமுக்குள் ஓமாக இருந்து
2.அவ்வலை நாதத்துடன் தியானத்தில் எண்ணத்தைச் செலுத்தி
3.அவ்வலைத் தொடரின் தொடர்பலையை நம் சுவாசத்தால்
4.எச்சப்தரிஷியின் அலைத் தொடர்புடனும் தொடர் கொள்ள முடியும்.
எண்ணத்தால் செலுத்தும் சுவாச நாதம் கொண்டு அவ்வலையின் தொடர்பை நம் ஆத்ம உயிர் தன் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு எடுத்து அதை வளர்த்துக் கொள்ள முடியும்.
ஒவ்வொன்றின் தன்மையும்
1.“தனித் தன்மை கொண்ட உயர் நாதச் செயலாகத் தான்”
2.ரிஷித் தன்மையின் “வளர் வளர்ப்பு…” செயல் நிலை செயல்படுகிறது.
அவர்கள் வளர்ப்பாக நாம் உருவாக வேண்டும் என்றால்… அது உயிர் வழியாக எடுக்கும் தியானத்தின் சுவாச அலைத் தொடரின் வழி முறைச் செயலினால் தான் முடியும்.
தியானத்தில் எடுக்கும் இந்தச் சக்தியால் இப்பிம்பக் கூட்டின் ஜீவ சக்தி அணு வளர்ச்சிச் சேர்க்கையின் செயல் கொண்டு நம் எண்ணத்தால் எடுக்கும் சப்தரிஷிகளின் அலைத் தொடர்பின் சக்தியை இவ்வுயிராத்மா வளர்த்துக் கொள்ள முடியும்.
“காந்த ஈர்ப்பு சக்தி கொண்டது தான் இவ்வுயிராத்மா…” என்று ஏற்கனவே தெளிவாக்கினேன்.
1.எண்ணத்தின் செயலைக் கொண்டு எடுக்கும் இந்தத் தியான நிலையின் தொடர் நிலைக்கொப்ப
2.இப்புவி ஈர்ப்பின் பிடியிலிருந்து ஞான வளர்ச்சிச் செயலையும் சித்துத் தன்மை வளர்ப்பையும்
3.இவ்வலைத் தொடர்பின் எண்ண நாதச் சேர்க்கையைக் கொண்டு
4.உடல் என்ற இயந்திரத்தின் உதவியால்
5.இவ்வுயிராத்மாவையே உயர் ஞானக் கூட்டு ஆத்மாவாக உயர்த்த முடியும் – “இவ்வெண்ண நாதத்தால்…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன் தன் ஐந்தாவது வயதில் இந்தப் பிரபஞ்சத்தை அறியும் ஆற்றல் பெற்று துருவன் ஆனான்.
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் தனக்குள் மோதும் நிலைகளை அதில் உள்ள விஷத்தை நீக்கிவிட்டு ஒளியாக மாற்றுகின்றது.
இதைப் போன்று துருவன் வான் வீதியில் அவன் உற்றுப் பார்க்கும் உணர்வுகள் அனைத்தையும் விஷத்தை நீக்கும் சக்தியாக அவன் உடலில் விளைகின்றது.
ஆக, எல்லாவற்றையும் அறியும் சக்தி பெறுகின்றான்.
அவ்வாறு தன் வளர்ச்சியில் பதினாறாவது வயதில் திருமணமாகும் பொழுது தன் மனைவிக்கும் தான் கண்டுணர்ந்த பிரபஞ்சத்தின் ஆற்றல்களை எடுத்துச் சொல்கின்றான்.
1.தான் பெற்ற சக்தியை அகஸ்தியன் தன் மனைவிக்குப் பாய்ச்சினான்.
2.அதன் வழி நஞ்சினை வென்றிடும் ஆற்றலை இருவரும் பெற்று
3.உணர்வின் தன்மை ஒளியின் சுடராக ஒளிச் சரீரம் பெற்றார்கள்.
அவர்கள் இரு உயிரும் ஒன்றாகி உணர்வினை ஒளியாக்கி இருவரும் எதை உற்றுப் பார்த்தார்களோ அதே எல்லையாக நிலை கொண்டு நம் பூமிக்குள் வரும் நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
இந்தப் பூமிக்குள் வரும் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். ஒளியின் சிகரமாக வளர்க்கும் தன்மை பெற்றார்கள்.
அகஸ்தியனும் அவன் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இரு மனமும் ஒரு மனமாகி நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றென இணைந்து வாழ்கின்றனர்.
இதைத்தான் “துருவ நட்சத்திரம்” என்பது.
அதில் விளைந்த உணர்வுகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் அலைகளாகப் படரச் செய்து கொண்டுள்ளது. ஆனால், பரவும் பகுதியில் அதன் எல்லைப் பகுதியிலிருந்து நுகர்ந்து ஈர்க்கும் சக்தி பெற்ற நமது பூமி சுழலும் பொழுது துருவப் பகுதியில் கவர்கின்றது.
ஏனென்றால்
1.துருவப்பகுதியின் நேராக துருவ நட்சத்திரம் இருப்பதால் பூமி கவர்ந்து அதிகமாகச் செலுத்துகின்றது
2.துருவ நட்சத்திரம் அந்தத் துருவத்திலேயே தான் இருக்கும்.
நாம் அதிகாலையில் அந்தத் துருவத்தை எண்ணி துருவ நட்சத்திரத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் பேரருள் பேரொளியை எளிதில் பெற முடியும்.
உயிரைப் போன்றே உணர்வுகளை ஒளியாக மாற்றிச் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன். அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமானது.
அதைப் பின்பற்றியவர்கள் அனைவரும் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.
நாமும் அவர்கள் வழியில் செயல்படுத்தினோம் என்றால் இந்த வாழ்க்கையில் வந்த இருளை மாற்றி உயிரைப் போலவே உணர்வுகளை ஒளியாக மாற்றி இனி நாம் இந்த உடலையே ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
மனிதனால் தான் இது சாத்தியமாகும்.
நாம் செய்யக்கூடிய தியானத்தைச் சாதாரணமாக நினைக்காதீர்கள்…!
1,துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி
2.இந்த உணர்வின் தன்மையை நாம் உலகமெங்கும் பரவச் செய்யும் பொழுது
3.இந்தப் பூமியில் இருக்கக்கூடிய நச்சுத் தன்மைகளை நீக்க முடியும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற்று அதை உங்களுக்குள் விளைய வைக்கும் சந்தர்ப்பத்தைத் தான் இந்த உபதேச வாயிலாக ஏற்படுத்திக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க சூரியனுடைய காந்த சக்தி இதைக் கவரப்படும் போது சிறுகச் சிறுக ஒரு அடர்த்தியின் தன்மையாக வரும்.
அதன் மூலம் விஞ்ஞான அறிவால் வரும் விஷத் தன்மைகளோ மற்ற எதிர்ப்பு நிலைகளோ வந்தால் தடுக்க முடியும்.
1.சூறாவளி போன்ற கடுமையான காற்றுகள் வரும் பொழுது நம் பக்கம் அது வராதபடி அதனின் திசைகளை மாற்ற முடியும்.
2.நாம் எடுக்கும் தியானத்தினால் இது முடியும்… உங்கள் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம்
3.யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி எண்ணிப் பாருங்கள்… அது திசை மாறிப் போகும்.
அதே போல் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சினோம் என்றால் நம்முடைய எண்ணமும் அந்தப் பார்வையும் அதில் சேர்கின்றது.
மேகங்களில் அருள் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அங்கே பெய்யும் அந்த மழை நீரால் தீமைகளை அகற்றிடும் சந்தர்ப்பம் உருவாகின்றது.
எந்தெந்த உணர்வுடன் மக்கள் ஆங்காங்கு இருக்கின்றார்களோ அதற்குத்தக்க தான் அங்கே மழை பெய்வதும் இருக்கும். ஊரில் உள்ள மக்கள் நல்ல உணர்வுடன் ஒன்றுபட்டு வாழ்ந்தால் அங்கே சீராக மழை பெய்யும்.
உதாரணமாக அந்த ஊர் மக்கள் வெறுப்பும் சண்டையும் சச்சரவும் குரோதமும் கொண்டிருந்தால் அங்கே மழை பெய்வது அரிதாகின்றது.
1.காரணம் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மோதல் ஏற்படும் பொழுது
2.மற்ற பக்கம் பெய்யும் ஆனால் இங்கே மழையை விலக்கித் தள்ளிக் கொண்டு போய்விடும்.
ஒவ்வொரு நிமிடமும் அன்பு கலந்து அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற உணர்வை வானிலே பரவச் செய்தால் அந்தப் பகுதிகளில் நிச்சயம் நல்ல மழை பெய்ய வைக்கலாம்.
1.உங்களை நம்புங்கள்…
2.மனிதனுக்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு…!
ஒரு பாடலை இனிமையாகப் பாடி அந்த இந்த உணர்வின் ஒலி கொண்டு அதை வைத்து அக்காலங்களில் மழை பெய்ய வைத்திருக்கின்றார்கள்.
மழை இல்லாது ஒரு வறட்சி என்று வந்து விட்டால் பெண்கள் எல்லோரும் கூடி குடங்களை எடுத்துக் கொண்டு ஒரு காட்டுப் பக்கம் செல்வார்கள்.
அங்கே இருக்கக்கூடிய கல்லுக்கோ மற்றதுக்கோ அந்த நீரை ஊற்றிய பின் சிறிது நேரத்தில் மேகங்கள் கூடும், மழையை இங்கே அழைத்துக் கொண்டு வருவார்கள்.
இது எல்லாம் அக்காலங்களில் செயல்படுத்தினார்கள். இன்றும் சில இடங்களில் இது போன்று உண்டு.
முன்னோர்களாகிய நம் ஞானிகள் காட்டிய அருள் வழியில் வழி நடந்தால் இனி வரும் எத்தகைய தீமைகளிலிருந்தும் தப்ப முடியும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.
மனித வாழ்க்கையின் முற்றலின் பலன் ஒளிச் சரீரமே…! – ஈஸ்வரபட்டர்
அணு தோன்றி எத்தகைய வித்தான உயிரின் தாவரமாக வளர்ந்தாலும் அந்த வித்து துளிர் கொண்ட இலை விட்டு அதன் மூலம் ஈர்த்து வளரும் தன்மைக்கு வருகின்றது.
1.அந்த இலை பசுமையாக இருக்கும் அதன் காலத்திற்கு உகந்த அமிலச் சேர்க்கையின் வளர்ப்பு
2.அவ்விலை ஈரப்பசை கொண்ட வளர்ப்பின் முற்றிய நிலையில் தன் சக்தியை
3.தண்டுப் பாகத்தில் வளர்ப்பு வலு எடுத்த பிறகு
4.அந்த முற்றிய இலை உதிர்ந்து விடுகிறது “சருகாக…!”
வித்திட்ட அந்த விதையின் வளர்ப்பு தன் வளர்ச்சியிலே விழுதுகளாகி
1.அவ்விழுதின் வலுவைத் தன் வளர்ப்பின் வலுவாக்கி
2.வித்தின் வளர்ப்பின் வளர்ப்புகளை வளர்க்கின்றது.
ஆக சிறு வித்து பல வித்தாக வளர்ப்பெடுத்து மாறு கொண்ட வளர்ப்பை உருவாக்குகிறது.
இப்படி ஒவ்வொரு அணு வளர்ச்சியின் வளர்ப்பிலும் தொடர் வளர்ச்சி வளர்வதைப் போல் இந்தப் புவி மட்டுமல்லாது… ஒவ்வொரு மண்டலமுமே… தன் வளர்ப்பின் வளர்ப்பை வளர்த்துக் கொண்டே உள்ளது…!
சூரியக் குடும்பத்தின் வளர்ப்பைப் போன்றே ஒவ்வொரு மண்டல வளர்ப்பின் வளர்ப்பு வளர்ந்து கொண்டே தான் உள்ளது. அதாவது
1.மனித இனப் பெருக்க சுழற்சியைப் போன்றே
2.ஒவ்வொரு செயலும் தன் வளர்ப்பின் வளர்ப்பை வளர்த்துக் கொண்டே தான் உள்ளது.
சுழற்சி ஈர்ப்பு வளர்ப்பின் நிலைக்கொப்பச் சுழலவிடும் வளர்ப்பிலேயே
1.வளரும் தன்மை ஒன்றொன்றின் தொடர்ச்சி கூடக் கூட
2.வளர்ச்சியின் தன்மை வலு அதிகமாகின்றது.
தங்கத்தின் வளர்ப்பானது அவை வளரும் இடங்களில் ஆரம்ப இடத்தைக் காட்டிலும் அடுக்கடுக்காக அந்தத் தங்க வளர்ப்பு மண்ணானது சிறிது சிறிதாக வலுப் பெற்று அதன் தொடர்ச்சியில் கிடைக்கப்பெறும் இந்த உலோகச் சேர்க்கை வடிவமைப்பு மிகவும் உயர்ந்ததாகக் கிடைக்கின்றது.
அதைப் போன்றே இந்த உயிராத்மாவிற்கு சேமிக்கப்படும் சேர்க்கையின் தன்மை…
1.இந்த உடல் பிம்ப ஜீவனுக்கு அளிக்கப்படும் உணவிலிருந்தும்
2.சுவாசத்தால் எடுக்கும் எண்ணத்திலிருந்தும்… உணர்வின் தன்மை கொண்டும்
3.வளர்ச்சி பெறும் அணுக்களின் காந்த ஈர்ப்பு நிலைக்கொப்ப இந்த ஆத்மா அது வளர்கின்றது.
எண்ணத்தால் எடுக்கும் ஞான வளர்ச்சியின் வாழ்க்கை நெறி முறைச் செயல் உணர்வுகளில்… “எண்ண ஈர்ப்பை” நாம் செலுத்தும் உணர்வின் வலு அணுக்களைத்தான் இந்தப் பிம்பக் கூடு வளர்த்து “அந்த வளர்ப்பின் வலுவைத்தான்…” இந்த ஆத்மா பெறுகின்றது.
1.செடியின் ஆரம்ப வித்துத் தன்மை வளர வளர அதனின் பலன் பலவாக முற்றித் தருவதைப் போல
2.எண்ண ஈர்ப்பால் நாம் எடுக்கும் வலுத் தன்மையை இந்த ஆத்ம உயிரும் எடுத்துக் கொள்கின்றது.
இந்த ஆத்ம உயிரின் வலுத் தன்மையானது உணர்வின் ஈர்ப்புச் செயல் நிலைக்கொப்ப எல்லாம் வலு ஏறுகின்றது. நாம் சொல்லக்கூடிய ஜெப முறையாலும் தியான முறையாலும் மட்டும் வலு ஏறுவது என்பதல்ல.
இவ்வாத்ம உயிரின் வலு இவ்வுணர்வின் எண்ண ஈர்ப்பின் செயல் வலுவை எதன் வழியில் செலுத்தி வீரிய குணம் பெற்றிருந்தாலும் அதன் குண நிலைக்கொப்பவே வளரும்.
ஆக… தீய வழிகளில் செல்லும் ஆவேச அலை ஈர்ப்பில் உள்ளவர்களின் உயிராத்மாவின் வலுத் தன்மையும்… இதன் ஈர்ப்புப் பிடியில் வலுவாகிச் செயல் கொள்கின்றது.
அதே போல இந்த உணர்வின் ஈர்ப்பு வீரத்தின் செயலைச் சாந்த குண ஞான வழிக்குச் செலுத்தினாலும்… அசுர குண வஞ்சனையில் இவ்வீரத்தைச் செலுத்தினாலும்… இவ்வலை ஈர்ப்பு காந்த சக்தியின் வலுத் தன்மையை இவ்வுயிராத்மா எப்படி வலுவாக்கிக் கொள்கின்றதோ அதைப் போன்ற அசுர குண ஈர்ப்பு நிலைக்கும் வலு கூடுகின்றது.
இதை உணர்ந்து..
1.இந்த மனித உடலில் நாம் வாழும் காலத்தில்
2.நம் ஆத்ம உயிருக்குச் சேமிக்க வேண்டிய உயர் ஞான சக்தியை எடுத்து விளையச் செய்து
3.அந்த முற்றலாக நாம் ஒளி சரீரத்தைப் பலனாக எடுக்க வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
வைகுண்ட ஏகாதசி அன்று விடிய விடிய முழித்திருப்பார்கள். ஏகாதசி அன்று விரதமும் இருப்பார்கள். ஏனென்றால் சொர்க்க வாசலை அப்பொழுதுதான் திறப்பார்கள்.
முன்னாடி இருக்கும் வாசல் வழியாகத்தான் எல்லோரும் வழக்கமாக ஆலயத்திற்குள் செல்வார்கள். ஆனால், வைகுண்ட ஏகாதசி அன்று வடக்கு வாசலைத் திறப்பார்கள்.
அப்படி வடக்கு வாசலைத் திறப்பதில் உண்மை உண்டு.
உயர்ந்த உணர்வுகளைப் பெறக் கூடிய முறைகளை சாஸ்திரங்களின்படி வகுத்திருந்தாலும் நாம் அதை அறியவில்லை. ஆக, விடிய விடிய எதை எதையோ நினைத்துக் கொண்டிருப்போம்.
பெரும்பகுதி பெருமாள் கோவில்களில் தான் சொர்க்கவாசலைத் திறப்பார்கள். பெருமாள் கோவில் என்கிற பொழுது இந்த உடலுக்குள் எல்லாம் பெருமாளாக இருந்து ஆட்சி புரிவது.
விஷ்ணு என்றாலும் பெருமாள் என்றாலும் நாராயணன் என்றாலும் எல்லாமே இந்த உயிர் தான். இதை நாம் “திறப்பது… எப்பொழுது?” என்ற நிலையை அங்கே உருவாக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு கோவிலுக்குள் போனால் சுப்ரபாதம் பாடுவார்கள். ஆண்டாளுடைய திருப்பாவையை அந்த வெண்பாவைப் பாடுவார்கள்.
ஆனால், சாங்கிய சாஸ்திரங்களைத்தான் காட்டுகின்றார்கள். அந்தச் சொர்க்கவாசல் என்பது எது என்ற நிலைகளை யாருக்கும் ஞாபகப்படுத்தவில்லை.
நம் கண்கள் புறக்கண் ஆக இருக்கின்றது. புற நிலைகளைப் பார்க்க முடிகின்றது.
நாம் கண்ணால் பார்த்து அந்த உணர்வை நுகர்ந்து உயிரிலே படும் பொழுது அந்த உயிர் அகக்கண்ணாக இருக்கின்றது. அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் புகுத்துகின்றது.
சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்றும் இதைக் காட்டுகின்றார்கள்.
அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் பதிவாக்கி கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி சக்தி பெறவேண்டும் என்று இந்த உயிருடன் இணைத்து நம் உடலுக்குள் அதைப் பரவச் செய்தல் வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்ற உணர்வினை இவ்வாறு உள் செலுத்தினால் இது “சொர்க்கவாசல்”.
இதன் வழிப்படி நாம் செயல்படுத்த வேண்டும் என்று நினைவுபடுத்துகின்றனர்.
இது எப்பொழுது…?
அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் இந்த நினைவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த வாசல் வழியாக நாம் கொண்டு செல்ல வேண்டும்.
அனுதினமும் இதை வளர்க்க நாம் விண் செல்லும் தகுதியை நாம் பெறுகின்றோம்.
மனிதனுடைய பரம்பரை வழியில் உடலைக் காப்பதா…? ஞானிகள் வழியில் உயிரான்மாவை ஒளியாக மாற்றுவதா…? – நடந்த நிகழ்ச்சி
சுமார் 12 அல்லது 13 வயது பெண் குழந்தை ஒன்று ஆஸ்த்மா நோயினால் மிகவும் வாடிக் கொண்டிருந்தது. எம்மிடம் (ஞானகுரு) அழைத்து வந்து விபரம் கேட்டார்கள்.
நோயின் கடுமையினால் வேதனை என்ற உணர்வையே எடுத்துக் கொண்டால் விஷத்தின் தன்மை அடைகின்றது. அதே சமயத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு
1.விஷத்தின் உணர்வை அதிகமாகச் சேர்த்திருப்பதால்
2.இந்த ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் மனிதன் அல்லாத பிறவியாகத்தான் பிறக்கும்..
3.ஆனால் அந்த உடலிலேயே அருள் மகரிஷிகளின் உணர்வை ஏற்றுக் கொண்டால்
4.இந்த உடலை விட்டுப் பிரிந்தால் அது பிறவியிலலா நிலை அடையும்…! என்று தெளிவாக்கினேன்.
அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மை அந்தக் குழந்தைக்குச் செருகேற்றப்பட்டு உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற உணர்வுடனே தொடர்ந்து அதைச் செயல்படுத்தினார்கள்.
நுரையீரல் பாகத்தில் அதிகமான விஷ்த் தன்மை சேர்ந்து… நரம்பு இழுத்துப் பிடித்திருப்பதனால் அது அவஸ்தைப்படுகின்றது. அவர்கள் பரம்பரையில் அந்தப் பெண்ணின் அப்பாவிற்கு ஆஸ்த்மா இருந்தது.. தாத்தவிற்கும் உண்டு.
இப்படிப் பரம்பரை வழியாக வந்திருப்பதனால் இந்தப் பின்னம் அதிகமாக இருக்கும். இதிலிருந்து (பரம்பரை) விடுபட்டால் தான் நோயிலிருந்து தப்ப முடியும்.
இருந்தாலும்…
1.இந்த ஆன்மா பெண் குழந்தையாக இருக்கும் பொழுது அடுத்துத் திருமணமாகி
2.அதன் பின் இதன் வாழ்க்கையில் மீண்டும் அதீதமாக வேதனைப்பட்டால்
3.மனிதனல்லாத உருவாக உருவாக்கிவிடும்.
அதற்கு முன்னாடி… எம்மைச் சந்தித்த சந்தர்ப்பத்தில் அருள் ஒளியைச் சேர்க்கும் பருவமாக வரப்படும் பொழுது
1.இந்த ஆன்மா அருள் ஒளியின் தன்மை கொண்டு
2.மகிழ்ச்சியின் உணர்வு கொண்டு நஞ்சை வென்றிடும் உணர்வுகள் இதற்குள் பெறப்பட்டு
3.அதனுடைய வளர்ச்சியில் உடலை விட்டுப் பிரிந்தால்
4.அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணையவும்… உடல் பெறும் உணர்வுகள் கரையவும்…
5.பிறவியில்லா நிலையை அடையவும் இது உதவும்.
ஏனென்றால் கடும் நோய்வாய்ப்பட்டவரின் நிலைகளை அது மாற்றி அமைக்க வேண்டும். ஆனாலும் அந்தப் பெண்ணின் தாய் வேதனையை எடுக்கின்றது.
அதிலிருந்து மாற்றி ஒளியின் தன்மையாக மாற்றுவதற்கு “இந்த உடலிலேயே அந்த உணர்வுகளைக் கரைத்திட வேண்டும்…” என்ற நினைவை அங்கே கூட்டச் சொன்னேன்.
1.அதன் வழி பின்பற்றினால் எளிதிலே அங்கே சப்தரிஷி மண்டலம் போய்ச் சேரும்..
2.உடல் பெறும் உணர்வுகள் கரையும்…! என்றும் விளக்கமாகச் சொன்னேன்.
ஆகவே… மனிதன் இந்த உடலுக்கு இச்சையை அதிகமாகக் கூட்டாது அருள் ஒளி பெறவேண்டும்… இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீக்க வேண்டும்…! என்ற உணர்வை வலுவாக எடுத்தால் போதும்.
1.குறித்த காரியங்கள் பெறவேண்டும்…! என்று எண்ணுவதற்குப் பதில்
2.அருள் ஒளியின் உணர்வுகள் வரும் பொழுது தெளிவான உணர்வுகள் வரும்.
3.அப்பொழுது வழி அறிந்து செயல்படக்கூடிய திறன் வரும்.
4.சோர்வென்ற நிலைகள் விடாது தெளிந்த மனதைக் கூட்ட இது உதவும்.
ஆகவே எத்தகைய தொல்லைகள் வரினும் அருள் ஒளி எங்கள் உடலில் பெருக வேண்டும். இந்த உடலை விட்டுச் சென்றால் பிறவில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ண வேண்டும்.
அந்த அரும் பெரும் சொத்தே… நமக்கு மிகப் பெரிய செல்வம் ஆகும்…!
நாம் தேடிச் செல்லும் எந்தச் செல்வங்களும் நம்முடன் வருவதில்லை. அழகான உடலும் நம்முடன் வருவதில்லை. அலங்காரப் பொருள்களும் நம்முடன் வருவதில்லை. ஆடம்பரமாகக் கட்டிய வீடும்… காரும்… நம்முடன் வருவதில்லை.
அருள் ஞானத்தை இந்த உடலில் வளர்த்துக் கொண்டால் உயிருடன் ஒன்றிய ஒள்யின் சரீரமாக நிலை பெறும். ஆகவே எதிலேயும் வேகாத நிலையாகப் பிறவி இல்லா நிலை அடைந்து… “அகண்ட அண்டத்தில் என்றுமே வாழலாம்…!”
1.அகண்ட அண்டத்தில் வாழும் பருவத்தை
2.இந்த உடலிலே சேர்த்தால் தான் அடுத்த நிலை வரும்.
ஏனென்றால் இந்த உடல் எந்த நேரத்திலும் போகத்தான் செய்யும். மிஞ்சிப் போனால்… கூட ஒரு பத்து இருபது வருடம் வாழப் போகின்றோம்… அவ்வளவு தான்…!
பெண் குழந்தை என்று வரப்படும் பொழுது “சீரான உடல் அமைப்பு இல்லை…” என்றால் திருமணம் ஆனாலும் மிகவும் வேதனைப்படும், குழந்தைப் பேறு போன்ற பருவங்கள் வரும் பொழுதெல்லாம் வேதனைப்படும்.
ஆகவே இந்த உடல் தேறாது என்ற நிலை வந்தவுடன் தேறுவது எது…?
1.அருள் உணர்வின் ஒளியே தேறும்.
2.அதுவே என்றும் பிறவியில்லா நிலை
3.இந்தப் பருவத்தில் ஒளியாகி விட்டால் நலமாகும்.
மாறாக… குழந்தை மேல் பாசமாக எண்ணி ஏங்கி விட்டால் அந்தப் பெண்ணின் ஆன்மா தாயின் உடலுக்குள் மீண்டும் வரும். இந்த உடலில் எந்த வேதனையை அது பட்டதோ தாயின் உடலுக்குள்ளும் அதே வேதனையைத் தான் உருவாக்கும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நமது ஆலயப் பண்புகள் சாதாரணமானதல்ல. ஒவ்வொரு நோடியிலேயும் தீமைகளை அகற்றும் சக்தியாகவும் நமக்குள் ஒருவருக்கொருவர் இணைக்கும் சக்தியாகவும் தான் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
உண்மையான விரதம் எது…?
விடிய விடிய நாம் விரதம் இருக்கின்றோம். சாப்பாடு சாப்பிடுவதில்லை. நான் அரிசி சாதம் சாப்பிடுவதில்லை, அதனால் கோதுமை சாதம் சாப்பிடுகின்றேன்.
இல்லையென்றால் அடுத்து வாழைப்பழத்தை மட்டும் சாப்பிடுகின்றேன். ஏனென்றால் இரண்டாவது தரம் அரிசி சாதம் சாப்பிட்டால் விரதத்திற்கு அர்த்தமில்லை…! என்றும் சொல்வார்கள்.
ஆனால் நீங்கள் நலமாக இருக்க வேண்டும்… உங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்… என்று எண்ணுவதுதான் உண்மையான விரதம்.
வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கும் நாளில் விடிய விடிய முழித்துக் கொண்டிருப்பார்கள். “முழித்திருக்க வேண்டும்…” என்ற நிலையில் எதை எதையோ பேசி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
இதுவெல்லாம் சாங்கிய சாஸ்திரம். ஆனால், நாம் எதை நினைக்க வேண்டும்…?
“துன்பங்களை அகற்றும்… துன்பங்களை அகற்றிய அந்த அருள் ஞானிகளின் அருள் சக்திகளைத்” தொடர்ந்து சுவாசிக்க வேண்டும். இந்த உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.
அதே போன்று மகரிஷிகளின் அருள் சக்தி உலக மக்கள் அனைவரது உடலிலும் படரவேண்டும். அவர்கள் இரத்த நாளங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி கலந்து அவர்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.
இத்தகைய நிலைகளை நாம் எண்ணி விடிய விடிய இதே எண்ணம் கொண்டு இருத்தல் வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தியை நாமும் பெற்று மகரிஷிகளின் அருள் சக்தியால் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்ற உணர்வுகளைப் பாய்ச்சுதல் வேண்டும்.
1.“என்னைப் போலவே… பிறரை எண்ணுகின்றேன்”
2.பிறர் “துன்பமில்லாத நிலைகளில் வாழ வேண்டும்” என்று எண்ணுகின்றேன்.
3.அப்பொழுது, “துன்பமில்லாத வாழ்க்கை வாழும் அந்த அணுவின் தன்மை” எனக்குள் விளைகின்றது.
இத்தகையை நிலைகளை எவர் எண்ணுகின்றார்களோ அதுவே தான் உண்மையான விரதம் ஆகின்றது.
ஞானிகளின் உணர்வை ஏன் பற்ற வேண்டும்…? மற்றவைகளைப் பற்றற்றதாக ஏன் மாற்ற வேண்டும்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்
ஒரு தெருவில் வளர்ந்த நாய் அடுத்த தெருப் பக்கம் வரும்போது அந்தத் தெருவில் இருக்கக்கூடிய நாய்கள் இதை விடுவதில்லை. பார்த்தோமென்றால் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும்.
காடுகளிலே வாழும் புலிகளை எடுத்துக் கொண்டாலும் ஒரு பக்கம் உருவான புலிகள் அடுத்த பக்கம் வாழும் புலிகள் இருக்கும் இடத்திற்குச் சென்றால் அங்கிருக்கும் புலிகள் எல்லாம் சேர்ந்து அதைக் கொல்லப் பார்க்கும்.
கூட்டமாக வாழும் மான் இனங்களும் ஒரு பகுதியில் உள்ளது அனைத்தும் இணைந்து வாழ்ந்தாலும் இன்னொரு பகுதிக்கு அவைகள் சென்றால் அங்கிருக்கும் மான்கள் எல்லாம் சேர்ந்து இதை எதிர்த்துத் தாக்கும் நிலை வருகின்றது.
ஏனென்றால்…
1.இங்கே வந்து விட்டால் தனக்குக் கிடைக்கும் உணவு பங்கு போய்விடுமே…! என்று தான்
2.இந்தப் போர் நிலை வருகின்றது… இயற்கையிலிருந்தே இந்த நிலை தான் வருகிறது.
இதைப் போன்றே மனிதனும் மாறுபட்டு வந்தான் என்ற நிலைகள் வரும் பொழுது அன்று வாழ்ந்த காட்டுவாசிகளும் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.
அதற்குப் பின் நாட்டுக்கு நாடு ஆளும் அரசர்கள் என்று வந்தாலும் அடுத்த நாட்டுக்காரன் இங்கே வந்தால் நம்மை அடிமைப்படுத்தி விடுவான் என்றும் இப்படி ஒருவருக்கொருவர் போர் செய்யும் நிலையும் அதன் வழியில் மற்றவரை அடிமைப்படுத்தும் தன்மை வந்தது.
இது வளர்ந்து வளர்ந்து உலகமெங்கும் இந்த உணர்வுகள் பரவி…
1.தன் இனத்தைத் தவிர மற்றது வந்தாலே
2.எதிர்த்துத் தாக்கும் நிலையே உள்ளது.
ஒருவன் தவறு செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தவறு செய்பவன் வெளிப்படுத்தும் உணர்வை ஒரு நல்ல மனிதன் நுகர்ந்தான் என்றால் அந்த உணர்ச்சியின் தன்மை அவனுக்குள் வருகிறது.
நல்ல மனிதன் அதை நுகரும்பொழுது “அவன் தவறு செய்கிறான்…” என்ற எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது. தவறு செய்கிறான் என்று சுட்டிக் காட்டிச் சொன்னால் தவறு செய்தவனுக்கு நம்மைப் பற்றி இவன் தவறாகச் சொல்கிறான் என்ற பழி உணர்ச்சி வருகின்றது.
1.தவறு செய்கிறான் என்று சொன்னால்
2.என்னைப் பற்றித் தவறாகப் பேசுகிறார் என்று அவனை எதிரியாகப் பார்க்கின்றான்.
3.அவனுக்கு எப்படியும் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வு தான் வருகின்றது.
இப்படித்தான் நாம் வெளிப்படுத்தும் உணர்வுகளை மற்றவர்கள் நுகர்ந்தால் அந்த நுகரந்த உணர்வு அவர்களை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்.
நண்பர்களாகப் பழகுகின்றோம்… அன்பாகப் பழகுகிறோம் என்றும் என்று வைத்துக் கொள்வோம். நம்மிடம் பழகிய அந்த நண்பன் இன்னொரு பக்கம் தவறு செய்கிறான்.. பெரிய குற்றங்களை அவன் செய்து விட்டான்.
சம்பந்தப்பட்டவர்கள் ஏன் இப்படிச் செய்கிறாய்…? என்று கேட்கின்றார்கள். நண்பன் என்ற பற்று இருக்கும் போது
1.பாசத்தால் அவன் தவறை மறந்து
2.தவறு செய்ததை மற்றவர் கேட்கப்படும் பொழுது அவர்களைத் தாக்க ஆரம்பிக்கின்றோம்.
இது தான் இன்று இருக்கக்கூடிய உணர்வுகளின் இயக்கங்கள்.
காரணம்… பற்று எதன் மீது இருக்கின்றதா அவன் உணர்வும் இங்கே வந்து விடுகின்றது. அந்த உணர்வின் வழிப்படியே இவருடைய செயலும் மாறுகின்றது.
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் தான் ஞானிகள் காட்டிய பேருண்மைகளை நாம் உணர முடியும்… பகைமை இல்லாது துன்பம் இல்லாது உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
செயற்கையின் பிடியிலிருந்து மீளுங்களப்பா…! – ஈஸ்வரபட்டர்
இப்புவியின் நாதமான ஓ…ம்… என்ற நாத அமிலமானது… சுவை கொண்டு பால்வெளி மண்டலத்தில் மிதந்துள்ள அமிலத்தின் சுவை சேர்க்கையின் கனம் கொண்டு தன் ஈர்ப்பின் சுழற்சி சக்தியிலேயே அந்தச் சுவையின் ஒலி பிறக்கின்றது.
அமிலச் சுவையின் ஒலி ஈர்ப்பாகி ஒளியாகின்றது. உயிர் அணு பிறக்க சுவையின் ஒலி கொண்ட ஒளியான அணு பிறக்கின்றது.
இந்த வழித் தொடரின் நிலைக்கொப்பச் சுவை… குணம் வளர்ச்சியின் ஒலி கொண்டு ஒளியாகி… வழி பெறும் ஒவ்வொரு தன்மையிலுமே… இயற்கை வளர்ச்சி ஒவ்வொன்றின் ஈர்ப்பிற்கும் அந்தத் துடிப்பின் நாதம் பிறக்கின்றது.
சுவையில் எப்படி ஒன்றை ஒத்து ஒன்று இல்லையோ அதைப் போன்றே இவ்வொலியும் ஒன்றுக்கொன்று மாறிய நாதமாகத்தான் பிறக்கின்றது.
செயற்கையின் சேர்க்கைப் பொருள் கொண்டு வாகனங்களில் அதனதன் உலோகச் சேர்க்கையின் நிலைக்கொப்ப மாட்டு வண்டிக்கும் புகை வண்டிக்கும் மிதி வண்டிக்கும் விமானத்திற்கும் நாத ஒலி மாறுபடுகின்றது.
இது ஒவ்வொன்றையும் பிரித்துக் காட்டுவதன் பொருள்…
1.செயற்கைச் சேர்க்கைப் பொருளைப் போன்றே
2.இயற்கைச் சேர்க்கையின் ஒலி நாதமும் மாறுபடுகின்றது.
ஞான வளர்ச்சிக்கு ஆத்ம ஜெபத்தால் உயர் ஞான தியானமாக ஒவ்வொரு சக்தி அலையின் ஒலி அலையையும் இந்த ஆத்ம உயிருக்கு எடுக்க வேண்டியுள்ளது.
அணுவுக்குள் அணுவாக பல சுவை முலாமைச் சித்தர்கள் தன் உயிராத்மாவிற்குச் சேமிக்கின்றனர் என்று ஏற்கனவே சொன்னேன்.
அதே போல் எண்ணத்தால் எடுக்கும் ஒலியின் நாதத்தை தியானத்தில்
1.சப்தரிஷிகளின் அவரவர்களுக்கு உகந்த சூட்டப்பட்ட நாமகரணத்தின் நாதத்தை
2.அகஸ்தியர் போகர் வியாசகர் வான்மீகி கொங்கணவர் கோலமாமகரிஷி இவர்கள் பால் எண்ணத்தைச் செலுத்தி
3.நாம் எடுக்கும் ஜெபத்தால் அவர்களின் நாத ஒலியை நம் ஆத்ம உயிரும் எடுத்துக் கொள்கின்றது.
மேலும் நம் சூரிய குடும்ப வளர்ச்சி கொண்ட உயர் சக்திகளின் மண்டல ஈர்ப்பின் ஒலியையும் எண்ணத்தின் ஈர்ப்பு கொண்டு எடுக்கும் சுவாசத்தால் அந்தந்த மண்டலங்களின் அதற்குகந்த ஒலிகளையும் நம் ஆத்ம உயிர் சேமித்துக் கொள்கின்றது.
1.நாம் எடுக்கும் ஜெபத்தால் இவ்வுயிராத்மாவின் சக்தி கூடினால் தான்
2.எந்த மண்டலத்திற்கும் செல்லலாம் என்று ஏற்கனவே சொன்னேன்.
ஆக எண்ணத்தால் எடுக்கும் ஒலி சேமிப்பின் தொடர் வளர்ச்சி விகிதத்திற்கொப்பத்தான் இந்தப் புவி ஈர்ப்பி பிடியிலிருந்து எந்த மண்டலத்திற்கும் செல்லத்தக்க சக்தி இவ்வொளி ஈர்ப்பினால் (தியானத்தில்) கிட்டுகின்றது.
மெய் ஞான ஈர்ப்பின் பக்தி பூண்ட பெரியோர்களின் ஆத்ம உயிரின் சேமித ஒளி சக்தியினால் தான் சிலரின் சொல்லாற்றல் சக்தியே… உயர்ந்த சொல்லாக வெளிப்பட்டு அந்தச் சொல்லின் செயல் நடப்பது பலிதம் கொள்வது எல்லாமே…!
சுவையின் தன்மைக்கே இவ்வொலிச் சேர்க்கை கொண்டு தான் வலுக்கூடுகின்றது.
1.எந்தெந்த எண்ணத்தில் எல்லாம் சுவாசம் எடுக்கின்றோமோ
2.அச்சுவாசத்தால் பிறக்கும் ஒலி.. ஒளியைக் கொண்டுதான்
3.இவ்வாத்ம உயிரின் நிலை உயருகின்றது.
இதன் நிலைக்கொப்பத்தான்… ஜெப முறை கொண்டு தியானத்தில் எண்ணத்தை எவ்வலை ஈர்ப்பு செயலில் செலுத்துகின்றார்களோ… அதன் ஒலி ஈர்ப்பைச் சித்து நிலை பெற்ற தன்மை கொண்டு… உடலுடன் வாழும் காலத்திலேயே ஒவ்வொரு மண்டலத்தின் ஒலி ஈர்ப்பையும்… தன் எண்ணத்தால் செலுத்தும் தியானத்தால்… ஆத்ம உயிரின் வளர்ச்சிக்கு ஒலி முலாமை ஏற்றார்கள் அன்றைய சித்தர்கள்.
இப்பொழுது உணர்த்தப்படும் முறைகள் எல்லாமே…
1.ஒவ்வொரு மனிதனும் இந்தப் புவி வாழ்க்கைதான் வாழ்க்கை என்ற
2.“இச்செயற்கைப் பிடியிலிருந்து மீண்டிடக் காட்டப்படும் முறைகள் ஆகும்…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
பித்தரைப் போன்று இருந்த குருநாதர் பித்தரைப் போன்று இயங்கும் (இந்த உலக) நிலைகளிகலிருந்து மீண்டிட எமக்குத் தெளிவாக உபதேசித்தார்.
1.ஒவ்வொரு மனிதரின் உயிரையும் கடவுளாக எண்ணு
2.அவன் கட்டிய கோட்டை அந்த உடல் என்ற நிலைகளில் ஆலயமாக மதி
3.அவருக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தெய்வங்களாக நீ மதி
4.அவருக்குள் இருக்கும் நல்ல உணர்வை ஈர்க்கும் நிலையை (காந்த சக்தி) “மகாலட்சுமி” என்று மதி
5.மகாலட்சுமி என்றாலும் அது கவர்ந்தாலும் அந்த உடலுக்குள் சேர்த்து ஞானங்களாக வளர்ந்தது “மகா சரஸ்வதி” சர்வத்தையும் அறிந்து கொள்ளும் மனித உடலுக்குள் இருக்கும் இந்த நிலையை அதை நீ மதி
6.தீமைகளை அகற்றி விண்ணுலகம் சென்ற அந்த அருள் ஞானியின் உணர்வுகளை ஒவ்வொரு மனிதனுக்குள் சேர்க்க வேண்டும்.
7.அந்த உணர்வுகள் அங்கே தீமையற்றதாக வளர வேண்டும்… இந்த உணர்வின் தன்மை ஓங்கி வளர்ந்திட வேண்டும் என்று உன் எண்ணத்திற்குள் நீ சேர்த்துவிடு.
8.உயிரைக் கடவுளாக மதித்து அந்த ஈசன் வீற்றிருக்கும் ஒவ்வொரு ஆலயமும் புனிதமாக வேண்டும் என்று எண்ணி அதை நீ பிரார்த்தனை செய்.
9.அதனை நீ தியானி என்றார்.
அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பித்து உங்களுக்குள் வீற்றிருக்கும் ஈசனுக்குத் துன்பமற்ற நிலைகள் கொண்டு மகிழ்ந்து இயக்கும் உணர்வாக நீங்கள் எண்ணும் எண்ணம் அந்த மகிழ்ச்சியான உணர்வின் அபிஷேகமாக நடக்க வேண்டும்.
நீங்கள் எண்ணிய எண்ணங்கள் எல்லாம் இனிமை கொண்டதாகவும் மலரைப் போன்ற மகிழ்ச்சி கொண்ட நல்ல நறுமணம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
இந்த எண்ணத்தின் நிலைகள் உங்களுக்குள் பதிவாக வேண்டும். அப்பொழுது இந்த எண்ணமே
1.உங்கள் உயிரான ஈசனுக்கு நல்லது செய்விக்கும் நிலையும்
2.அவன் அருள் நீங்கள் பெறும் நிலையாகவும் அமையும்.
மனிதர்களான அனைவருக்கும் அருள் ஞானிகளின் உணர்வுகளைச் சேர்ப்பிக்கும் வண்ணமாக எல்லா மனிதர்களுடைய உணர்வுகளிலேயும் இயக்கும் உயிரைக் கடவுள் என நீ மதித்து நட என்றார் குருநாதர்.
அவர் காட்டிய அருள் வழியில் அந்த அருளாற்றல்களை நீங்கள் பெற வேண்டும் அருள் ஞானிகளின் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
அதனின் துணை கொண்டு உங்கள் குலதெய்வங்களான முன்னோர்களை நீங்கள் விண் செலுத்த வேண்டும்.
ஏனென்றால் மூதாதையர்கள் உங்களை வளர்க்க எத்தனையோ வேதனைப்பட்டிருப்பார்கள். அதன் வழியில் வேதனையான உணர்வு கொண்டு அந்த உடலை இழந்திருப்பார்கள்.
அந்த உடலுக்குள் விளைய வைத்த வேதனையான உணர்வுகள் உயிருடன் ஒன்றி உயிருடன் வேதனையாக விளைந்து கொண்டிருக்கும் அந்த உயிரான்மாக்களை நீங்கள் விண்ணுலகம் செலுத்த வேண்டும்.
இது தலையாக் கடமையாகும்.
பிறிதொருவரின் இயக்கமாக நாம் இயங்கிவிடக் கூடாது
அன்றாட வாழ்க்கையில் கோபமோ வெறுப்போ வேதனையோ போன்ற உணர்வுகளை எல்லாம் நாம் அதிகமாகச் சந்திக்க நேருகிறது… நமக்குள் அது எல்லாம் பதிவாகின்றது.
1.அதன் வழி நாம் சுவாசிக்க சுவாசிக்க
2.நம் உடலிலே அந்தந்த குணங்களுக்குண்டான அணுக்கள் பெருகுகின்றது.
கோபமும் வேதனையும் வெறுப்பும் வளரும்போது நம் நல்ல குணங்களுக்குள் ஊடுருவி உடலுக்குள்ளே பெரும் போராக நடக்கின்றது.
கார உணர்வுகளை உணவாக உட்கொள்ளும் அத்தகைய அணுக்கள் அதனுடைய வளர்ப்புக்குக் காற்றிலிருந்து தன் தன் இனமான உணர்வுகளை நுகரச் செய்து அது உணவாக எடுத்துக் கொள்ளும்போது
1.நம் உயிரிலே பட்டுத் தான் இந்த உணர்வுகள் செல்கின்றது
2.அதனால் நம் உடலுக்குள் குழப்பமும் சிந்திக்கும் தன்மை இழக்கும் சந்தர்ப்பமும் வருகிறது.
நல்ல அணுக்கள் உணவுக்காக உணர்ச்சிகளை உந்தினால் அதற்கு உணவு கிடைக்காதபடி நம்மை அறியாதபடி ஒரு இருண்ட நிலையாக மாறுகின்றது.
உதாரணமாக ஒருவன் அரக்கத்தனமாகத் தாக்கப்படும்போது அவன் உடலில் இருந்து விளைந்த உணர்வுகளை நுகரும் பொழுது அது வாலி.
நாம் அதை நுகர்ந்தோமென்றால் உடனே நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்தும் நடுங்கத் தொடங்குகிறது. அவனுடைய கார உணர்ச்சிகளை நம் உடல் தாங்காது உடல் நடுக்கமாகிச் சிந்திக்கும் செயலும் இழக்கப்படுகின்றது.
சிந்திக்கும் செயல் இழக்கப்படும் போது…
1.அவன் நம்மைத் தாக்கிக் கொல்வவதற்கு முன்
2.அவனைத் தாக்க வேண்டும்…! என்ற உணர்வுகள் நமக்குள் வருகின்றது.
இப்படி… சாந்தமாக இருக்கும் ஒருவன் கொலை செய்ய எப்போது காரணம் ஆகின்றான் என்றால் மற்றொருவன் கொலை செய்யும் உணர்வுகளைப் பார்த்துப் பதிவாக்கி அந்த உணர்ச்சிகளை நுகரப்படும் பொழுது இவனுக்குள் வந்து விடுகின்றது.
தான் வாழ வேண்டும் என்ற நிலையில் அடிக்கடி பிறரைக் கொன்று குவித்து அதன் வழி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒருவன் எண்ணி எடுக்கின்றான்.
1.அதை அடுத்தவர் உற்றுப் பார்த்து நுகரப்படும் போது ஓ…ம் நமச்சிவாய… அவர்கள் உடலாக மாறி
2.சிவாய நம ஓ…ம் நுகர்ந்த உணர்வுகள் அந்த எண்ணங்களாக அவனையும் கொலை செய்ய
3.இந்த உடலிலிருந்து மீண்டும் செயல்படுத்தத் தொடங்குகிறது.
கெடுதல் செய்கிறார் என்ற உணர்வினை நாம் அடிக்கடி நுகர நேர்ந்தால் சிவாய நம ஓ…ம் அவனின் அசுர உணர்வுகள் நம்மை இயக்கி நம் உடலில் உள்ள நல்ல அணுக்களை அது மாற்றி அமைக்கத் தொடங்கி விடுகின்றது.
ஆகவே…
1.எடுத்துக் கொண்ட (சுவாசித்த) உணர்வுக்கொப்ப நாம் எவ்வாறு இயங்குகிறோம்…?
2.பிறிதொரு உணர்வால் எவ்வாறு நாம் இயக்கப்படுகின்றோம்…?
3.இதிலிருந்தெல்லாம் நம்மை நாம் எப்படிக் காத்துக் கொள்ள வேண்டும்…? என்பதனை அறிந்து
4.தீமைகளை வென்ற மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத் தான்
5.இதை எல்லாம் உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.
நம் எண்ணத்தால் எந்த மண்டலத்திற்கும் செல்லலாம் – ஈஸ்வரபட்டர்
விக்கிரமாதித்தனின் கதையில் வரும் நிலை யாவையுமே கதையல்ல… உண்மைத் தன்மை உடையது…! விக்கிரமாதித்தன் பூஜித்த உஜ்ஜயினி காளியானவள்… பெண்ணாகப் பிறப்பெடுத்து ஞானத்தால் வளர்த்த சப்த காளியப்பா அவள்.
அவளின் வழித் தொடரைப் பிடித்தவன் தான் விக்கிரமாதித்த மகாராஜா. அக்கதையில் உள்ள யாவையுமே ஒரு சில மாறியிருந்தாலும் உண்மை நடப்புகள் தானப்பா அவை யாவுமே…!
அரசாண்டவனின் ஞானம்… சித்து நிலை பெற வழி வந்ததின் தன்மை பக்தி பூண்டு… பூஜித்துப் பூஜிப்பின் பலனால் அக்காளியின் ஞான அலைத் தொடர்பைப் பெற்று… அக்காளியின் செயலாகவே சித்து நிலை பல பெறும் தன்மைக்கே விக்கிரமாதித்தன் ஆளானான்.
காடாறு மாதம்… நாடாறு மாதம்… என்ற நிலையில் காடுகளில் வாழ்ந்த காலத் தன்மையில் தன் ஆத்ம உயிருக்கு வேண்டிய வலுத் தன்மையை… ஞானத்தின் வழியான சித்து மார்க்கம் பெறுவதற்காகவும் பல செயல்களை அறியவும் அணுவுக்குள் அணுவாக அணுவின் தன்மை முலாமை எல்லாம் தன் உயிராத்ம வலுவுக்கு ஏற்றிக் கொண்டான்.
இந்தப் பூமியின் கனி வள விகிதமானது ஏழு குணத் தன்மை கொண்டது. அதன் வளர்ச்சி கனி வளங்களின் தன்மை ஒவ்வொன்றில் பலவாக வளர்ந்துள்ளது.
வண்ணமும் ஏழு… சுவை குணங்களும் ஏழு… என்று சொல்கிறோம். இந்த ஏழின் தன்மை எதன் குண நிலை அடிப்படையில் கலவை பூண்டது…?
ஆவியாகிக் கனம் கொண்டு ஜீவனாகிச் சுழலும் இயற்கைத் தன்மையில் இவ் ஈர்ப்பின் இயற்கை நிலைச் செயலுக்கொப்ப
1.பால்வெளியின் கூட்டுக் கலவை அமிலத்தின் “குறிப்பிட்ட செயல் சேர்க்கையின் தன்மையில்”
2.சக்தி பெற்ற சப்தரிஷி மண்டலம் என்று உணர்த்துகின்றார்கள் அல்லவா…!
3.அவர்களின் ஈர்ப்பு வளர்ப்பு நிலை தான் (படைப்பு) இந்தப் பூமியின் தன்மை குணம்.
சுவையும்… வண்ணமும்.. மணமும் ஏழாக… ஈர்ப்புக் கூட்டுக் கலவைச் சேர்க்கை ஜீவன் கொண்ட சிவ சக்தி என்ற ஆண் பெண்ணின் செயல் கொண்டு உருவானது தான் இந்தப் பூமி.
பூமியின் குணத்தைச் சிருஷ்டித்து வழி நடத்தும் ரிஷிக் குணத்தில் ஒவ்வொருவர் பெற்ற தனித் தன்மையின் சக்தியை ஒன்றாக்கி வளர்த்த தன்மை தான் இந்தப் பூமியின் தன்மை.
1.இப்படி எத்தன்மை பூண்டு இந்தப் பூமி உருவானதோ…
2.அதன் கலவைக் கூட்டில் எல்லாம் தன் ஆத்ம உயிரைச் செலுத்தி
3.தன் வலுவை இந்தப் புவி ஈர்ப்பின் வலுவிலேயே தன் வலுவைக் கூட்டி
4.எந்த வலுத் தொடர்பைத் தந்து ஏழு குணச் சேர்க்கையில் இந்தப் பூமி உருவானதோ – அந்த ஏழில் முலாம் பெற்ற சித்தன்
5.இவ்வேழுக்கு மேல் சக்தி கொண்ட வலுச் சக்தியான பிற மண்டலங்களின் சக்தியுடன்
6.எந்தச் சக்தியையும் உருவாக்க வல்ல பத்தாவது நிலையான ரிஷித் தன்மை கொள்கின்றான்.
கங்கைத் தீர்த்தம் புனிதமானது… என்றும் இதை ஒட்டிய ஒவ்வொரு தீர்த்தத்திலும் தான் குளித்தெழுந்தால் புண்ணியம் என்றும்… புண்ணியத் தீர்த்தங்களை நாடி மனிதன் சென்று அங்கே குளித்து இந்த உடல் பிம்பத்திற்குப் புனிதம் என்று நீராடி வருகின்றான். இது பக்தி மார்க்க முறை.
ஆனால் இந்த எண்ணத்தை
1.இந்தப் பூமியின் சக்தி அலையான அமிலத் தீர்த்தத்தில்
2.தன் ஆத்ம உயிரையே குளிக்கச் செய்தானப்பா அன்றைய சித்தன்.
பக்தி மார்க்கமும் ஜெப முறையும் வழி காட்டிகள் தான். வழியின் வலு அறிந்து தியானத்தால் ஞானம் பெற வேண்டும்.
ஆகவே இந்தப் புவியில் பிறந்த பல கோடி எண்ண ஆத்ம உயிர்களின் ஈர்ப்புப் பிடி அலைச் சுழற்சியில் இருந்து…
1.இந்தப் புவி ஈர்ப்பின் உணர்வில் சிக்காத வண்ணம்
2.தன் ஆத்ம உயிரின் ஈர்ப்பிற்குத் தன் உணர்வின் எண்ணமானது
3.நாம் எடுக்கும் தியானத்தால் உயர் ஞானம் கொண்டு மாமகரிஷிகளின் அலை ஈர்ப்பின் செயலாக ஒன்றிட வேண்டும்.
இந்த மனித பிம்ப ஆத்ம உயிரின் நுண்ணிய காந்த ஈர்ப்பின் அலை சக்தி வளர்ப்பினால் இந்தப் புவி ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் மகரிஷிகளின் அலைத் தொடர்பில் வலுத் தொடர்பு கொண்ட பின்
1.தன் எண்ணத்தைக் கொண்டு
2.எந்த மண்டலத்திற்கும் தன் உயிரைச் செலுத்த முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நான் கல்வியறிவு அற்றவனாக இருப்பினும் அண்டத்தின் நிலைகள் இந்தப் பிண்டத்திற்குள் எவ்வாறு உணர்வின் இயக்கங்கள் இயங்குகின்றது என்ற நிலையை குருநாதர் எனக்கு உணர்த்தினார்.
அண்டத்தை அவர் கண்டுணர்ந்து அவருக்குள் விளைந்த நிலையை விளைவித்த உணர்வின் தன்மையை என் செவிப்புலனால் கேட்கச் செய்து உணர்ச்சிகளால் உந்தப்பட்டு அதனைக் கவனித்துக் கூர்ந்து உற்று நோக்கும்படி செய்தார்.
1.நான் அவர் சொல்வதைக் கவனித்துக் கூறவில்லை என்றால்
2.அதற்காக என்னைத் தூண்டுதலாக உணர்ச்சியின் நிலைகளைத் தூண்டச் செய்து
3.அதை எனக்குள் பதியச் செய்யும் நிலையாகப் பதியச் செய்வார்.
மேலும் இயற்கையில் மனிதனுக்குத் துயரங்களும் வேதனைகளும் வெறுப்புகளும் எவ்வாறு ஏற்படுகிறது என்ற நிலையை அனுபவபூர்வமாக எமக்குள் ஏற்படுத்திக் காட்டினார்.
அதனின் துணை கொண்டு அறிந்துணர்ந்த நான் உங்களுக்கும் பதிவு செய்யும் நோக்கிலே இதைச் சொல்கின்றேன்.
சொல்லும் நேரத்தில் உங்கள் நினைவலையை வேறு எங்கோ செலுத்திவிட்டு
1.“சாமி சொல்வது… எனக்குப் புரியவில்லை…!” என்ற உணர்வினைத் தடுத்து நிறுத்திவிட்டால்
2.கேட்டும் பலனில்லாமல் போய்விடும்.
அப்படிப் பயனற்ற நிலைகளில் செல்லாது இந்த மனித வாழ்க்கையில் மெய் ஞானிகளைப் பற்றிய உணர்வுகளைப் பெறும் நோக்குடன் “உங்கள் ஞானக் கதவுகளைத் திறந்து வையுங்கள்”.
ஏனென்றால் விஞ்ஞான உலகில் இன்று மனித எண்ணங்களை அழித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அந்த மெய்ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் “பதியச் செய்து” உங்கள் பொன்னான அருள் சக்தியான மனித உணர்வுக்குள் விளைந்த ஆற்றல்மிக்க உணர்வின் நிலைகள் தீமையை நீக்கிடும் ஆற்றலாகப் பெருக வேண்டும்.
மெய் உணர்வைக் கண்டுணர்ந்த நிலைகள் என்றும் அழியா ஒளியின் சரீரம் பெறும் அவ்வாறு பெற்ற அந்த ஞானியின் உணர்வலைகள் உங்களுக்குள் விளைய வேண்டும் என்ற ஆசையில் தான் இதைப் பதிவு செய்கின்றோம்.
ஆகையினால் உங்கள் கவனங்கள் வேறு எங்கும் செலுத்தாது “எதைச் சொல்கிறோம்…” என்று கூர்ந்து கவனித்து இதைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.
பதிவு செய்து கொண்டபின்
1.உங்களுக்குத் துன்பம் வரும் பொழுது
2.அதை மாற்றிடும் நிலையாக உங்களுக்குள் உள் நின்று இப்பொழுது பதிவு செய்யும் உணர்வுகள்
3.மீண்டும் தன்னிச்சையாகவே உங்களைக் காக்கும்.
அந்த நிலை பெற வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றேன். சொல்லும்போது கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டால் இது வராது.
ஒரு முலாம் பூசிய நாடாவில் அதிலுள்ள காந்தப் புலன் கவர்ந்து மீண்டும் நாம் காந்த ஊசியைச் செருகும்போது அது நமக்குள் அந்த ஒலி அலைகளை அது ஒலிபரப்புச் செய்கின்றது.
இதைப் போல இப்பொழுது பதிவு செய்த நினைவை உயிருடன் ஒன்றச் செய்யும் பொழுது அந்த ஒலி அலைகளைப் பரப்பி மெய் உணர்வை நீங்கள் கண்டுணர்ந்து தீமைகளை அகற்றிடும் சக்தியாக உங்களின் செயலின் ஆற்றல் வரும்.
நாம் அனைவரும் சகோதரர்களே…!
அரசியல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செல்வோர்கள் பகைமை உணர்வை வளர்த்துக் கொண்டால் அதே பகை உணர்வு மக்கள் மத்தியிலும் வளரும்.
ஆனால் பகைமையற்ற உணர்வுகளைத் தான் வளர்க்க வேண்டும்.
அன்றும் சோஷலிசம் கம்யூனிசம் என்று எத்தனையோ விதமான கட்சிகள் இருந்தது. எத்தனையோ மதங்களும் இனங்களும் இருந்தது.
1.மதம் என்ற நிலைகளைத் தூக்கி எறிந்துவிட்டு
2.கட்சி அடிப்படையில் ஒவ்வொருவருடைய கோட்பாடுகளையும் தூக்கி எறிந்துவிட்டு
3.எப்படி வாழ வேண்டும் என்று காந்திஜி சாந்த உணர்வு கொண்டு தனக்குள் செயல்படுத்திக் காட்டினார்.
தாழ்த்தப்பட்ட இடங்களுக்கெல்லாம் சென்று அவர்களைப் பார்த்து
1.தாழ்த்தப்பட்டவன் அல்ல…
2.நீ உயர்த்தப்பட்டவன்…! என்று சொன்னார்.
3.நோயாளியைப் பார்த்து… நீ நோயாளி அல்ல… நீ என்றுமே உயர்ந்த குணங்களை பெற்று உயர்ந்த நிலைகள் பெற்று…
4.நோயற்ற வாழ்வாக வாழ்வாய்…! என்று என்று உபதேசித்தார்.
எதிரி என்று மற்றவர்கள் சொன்னாலும் பாகிஸ்தானுக்குள் சென்றார். சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று இருந்தாலும்…
1.இந்த உடல் சொந்தமல்ல…
2.நண்பன் என்ற நிலை வளர வேண்டும்…! என்று அங்கே சென்றார்.
யாரும் யாருக்கும் பகைமை இல்லை. மதமும் இனமும் நம்மைப் பகைமை ஆக்கக்கூடாது. மதம் இனம் என்ற நிலையில் பிரித்து எண்ணினால் பகைமை என்ற நிலைக்கே நம்மை அழைத்துச் செல்லும் என்று தெளிவாக்கினார்.
“நாம் அனைவரும் சகோதரர்களே…!” என்ற அந்த உணர்வுகளை காந்திஜியைப் போன்று நாம் ஒவ்வொருவருமே வளர்த்த வேண்டும்.
மேலெழுந்தவாரியாக அரசியல் தலைவர்கள் செய்கிறார்கள் என்றால்
1.அவர்களுக்கெல்லாம் அருள் வழியில் நாம் ஒத்துழைப்பு தர வேண்டும்.
2.நல்ல செயல்களை நாம் செயல்படுத்திக் காட்டி அதைப் பார்த்து அவர்கள் பூரிப்படைய வேண்டும்.
“கட்சியில் நான் இருக்கிறேன்…” என்று தவறு செய்தால் கட்சிக்குள்ளேயே இப்படித் தவறு செய்கிறார்களே…! என்று மனம் நொந்து விடுகின்றது. இப்படி வரப்படும் பொழுது தான் தவறின் நிலைகள் வளர்க்கப்படுகின்றது.
இதையெல்லாம் நாம் விடுத்துப் பழக வேண்டும்.
ஆகவே… எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அதை நமது அரசு என்று தான் நாம் ஏற்று வழி நடக்க வேண்டும். ஆனால் கட்சியின் தோரணையில் பார்த்தால் தவறுகள் தான் வரும்.
அரசை நல்வழிப்படுத்த காந்திஜி போன்றவர்களின் வழி முறைகளைக் கடைப்பிடித்தால் அறிவின் ஒளியாக வளரும். அதன் வழியில் நாம் நடந்தால் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
“உயிர் வழி தான்” உயர்ந்த சக்திகளை நமக்குள் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்
அன்ன பிண்ட உடலாக இஜ்ஜீவ உடலை வளர்த்துள்ள மனித இனச் சக்தியின் ஞானமும் அதன் செயற்கைப் பிடிப்புடனே சமைத்துண்டு இயற்கையின் பிடிப்பின்றி காற்று மழை வெயில் எதுவுமே தன்னைத் தாக்காமல் காத்துக் கொள்ள உறைவிடம் அமைத்து வாழத்தக்க வளர்ச்சி நிலையில் தான் இன்றைய (விஞ்ஞானம்) மனிதச் செயலே இருக்கின்றது.
ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதனுக்குகந்த பகுத்தறியும் ஞானத்தில் வளர்ந்து வந்ததையே
1.செயற்கையின் செயலின் வழியில் சில நூறு ஆண்டுகளாக வார்ப்புப் படுத்திவிட்டதனால்
2.இயற்கை உணர்வின் தன்மையைத் தன் ஞான உணர்வால் ஈர்க்க முடியவில்லையப்பா “இன்றைய மனிதனுக்கு…!”
சேவலிலிருந்து சில பட்சிகளும் நாய் நரி பூனை அனைத்துமே உலகச் சுழற்சியின் தன்மையைத் தன் சுவாச உணர்வில் அறிந்து கொள்ளும் திறன் கொண்டது தான். ஜாமக் கோழி கூவுகின்றது. அதே போல் அதிகாலையில் துயில் எழுந்து இரை தேடச் செல்கின்றன பறவை இனங்கள்.
சூரிய ஒளி உதயமாவதற்குள்ளேயே ஒளியின் தன்மையை மழை மேகம் மறைத்திருந்தாலும் இந்தப் பட்சிகள் எப்படி விடியலை அறிகின்றன…?
ஏனென்றால்…
1.இந்தப் பூமி சுழலும் சுழற்சித் தன்மையை மனிதனைக் காட்டிலும்
2.தன் உணர்வின் சுவாசத்தாலேயே அறியவல்ல தன்மை
3.சில தாவரங்களுக்கும் பட்சிகளுக்கும் பிராணிகளுக்கும் உண்டு.
ஐந்தறிவு கொண்ட மற்ற இனங்கள் சொல்லாற்றலும் செயலாற்றலும் இன்றி… இயற்கையுடன் ஒயற்கையாக ஒன்றி… இயற்கை உணர்வை அறிந்து கொள்கின்றன.
ஆறறிவு கொண்ட மனிதன் என்றுரைக்கப்படுபவன்.. செயலாற்றும் திறமை கொண்டவன்… சொல்லாற்றல் உடையவன்… விஞ்ஞான சக்தியைக் கொண்டு மனிதக் கருவையே தாயின்றி வளர்க்கச் செய்பவன்…
1.என்றெல்லாம் சொல்லப்படும் இன்றைய கலி மனிதன்
2.இந்த இயற்கைச் சுழற்சியைச் செயற்கைக் கருவிகள் கொண்டு தான் உணர்கின்றான்.
ஆனால் ஞானத்தால் உயர்ந்த அன்றைய சித்தர்கள் அணுவுக்குள் அணுவாகச் சித்து நிலை பெறத் தன் பிம்ப உடலின் ஆத்ம உயிரைப் பல மிருகங்களின் பல பட்சிகளின் ஆத்மாவுடன் இவ்வாத்மாவைக் கவசம் போல் அதன் ஈர்ப்பில் சென்று அதன் உடல் அமிலக் கூட்டின் முலாமையும் தன் உயிராத்மாவிற்குச் சேமிதம் செய்து வைத்துக் கொண்டார்கள்.
இதை உணர்த்தும் விதமாகத் தான் அந்தத் தெய்வீகக் குணத்திற்காகச் சிலை உருவிற்கு நாமகரணமிட்டு பல பல சிலையின் வடிவங்களைக் காட்டினார்கள்.
1.குண சக்தியின் வழியில் தெய்வ ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு
2.அந்த அவதார மூர்த்திகளுக்குப் பாம்பையும் மயிலையும் சேவலையும் பசு பன்றி சிங்கம் புலி இவைகளையும்
3.இன்னும் பல பிராணிகளையும் வாகனமாகக் காட்டினார்கள்.
தன் உடலுக்குள் விளைந்த அமில முலாம் குண வளர்ச்சியின் ஈர்ப்பு விகித எண்ணச் செயலைக் காட்டிலும் இந்தப் புவி ஈர்ப்பின் வளர்ச்சி பெற்ற பல உயர்ந்த அமிலத் தன்மையின் வார்ப்புடன் தன் செயலைச் செய்விக்க
1.தன் ஆத்ம உயிரை அணுவுக்குள் அணுவாகச் சென்று
2.பிற வார்ப்பில் உள்ள அமிலச் சுவை முலாமையும் எடுத்து
3.தன் உயிராத்மாவிற்கு வலுவாக்கிக் கொள்கின்றான் ஞானத்தில் வளர்ந்த சித்தன்.
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இது நாள் வரை உணர்த்தியதெல்லாம் ஜெப முறையும் தியான வளர்ச்சிக்குகந்த ஞான வளர்ச்சி முறையும் தான்.
ஞானத்தால் உயர் ஞானம் கொள்ள இந்த உடல் முழுமைக்கும் உள்ள ஒவ்வொரு அணுவையுமே தன் ஞான வளர்ச்சியின் வழி செயல் வளர்க்க “ஆத்ம உயிரின் துணை கொண்டு தான்…” செயல்படுத்த வேண்டும்.
இவ்வாத்ம உயிரின் உயர் காந்த மின் அலை ஈர்ப்பு வளர்ச்சிக்கு
1.துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் அலைகளை
2.நேரடியாக உயிராத்மாவிற்குப் பாயத்தக்க செயலாக வழியமைத்தால்
3.அதன் மூலம் இந்தப் பிம்ப உடல் அணு வளர்ச்சியின் செயலாத்மாவாக இந்த உயிராத்மா உட்கொள்கின்றது.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
கார்த்திகை ஜோதி (தீபம்) அன்று பக்தி மார்க்கத்தில் அந்த ஜோதியைப் பார்த்தால் நமக்குப் புனிதம் என்று ஐதீகப்படி எண்ணுவார்கள். ஆனால்
1.விண்ணுலகம் சென்ற அருள் ஞானிகளின் உணர்வை… நாம் பார்க்க வேண்டும்
2.இருளை நீக்கிய அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் பெற வேண்டும்.
அருள் ஞானிகளின் அருள் சக்தியால் நம்மை அறியாது வந்த இருளைப் பிளந்து நமக்குள் அந்த ஒளியின் சுடரைக் காணும் நிலைகளை எண்ணி ஏங்கும் நந்நாளைத் தான் “கார்த்திகை தீபம்” என்று வைத்தது.
திருவண்ணாமலையில் “திரு அண்ணாமலை” என்ற நிலைகள் அங்கே காட்டப்பட்டது.
1.இந்த உடலின் தன்மையில் உணர்வின் தன்மை கொண்டு
2.உயிர் உச்சியிலே நின்று இயக்குகின்றான் “திரு அண்ணாமலை”
3.நாம் மேல் நோக்கிப் பார்க்கும் உணர்வின் தன்மையை
4.அந்த ஜோதிச் சுடர் போல் நம் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றவேண்டும்.
5.நமக்குள் ஜோதியை உருவாக்க வேண்டும் என்று சொன்னால்…
6.நாம் இங்கிருந்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றோம்.
நம் ஆசை இந்த உடலின் இச்சைக்குத்தான் செயல்படுகிறோமே தவிர வேறு எதுவும் இல்லை.
அருள் ஒளியின் சுடராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நன்னாளில் மகிழ்ச்சி பெறும் உணர்வைப் பெற்று, பகைமைகள் மறந்து ஒற்றுமை ஏற்படச் செய்யும் நிலைக்காக இருளை அகற்றும் நாள் என்று ஞானிகள் குறித்தார்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனவரது உடல்களிலும் படரவேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ஈசன் வீற்றிருக்கும் ஒவ்வொரு உடலிகளிலும் படரவேண்டும் என்று எண்ணும்படிச் செய்தார்கள்.
இருள் அகற்றும் நிலைகளை நாம் ஒற்றுமையாக இருந்து தியானித்து அனைவரும் நலம் பெற வேண்டும். வளம் பெறவேண்டும் அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தினை எல்லோரும் சேர்ந்து எடுத்துப் பேரொளியாக உருவாக்கும் நிலைகளுக்குச் செய்தார்கள் ஞானிகள்.
இருண்ட உணர்வின் தன்மையைத் துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளி கொண்டு அனைவருடைய உணர்வுகளும் ஒளி பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது
1.நமக்குள் ஒளி பெறுகின்றது.
2.ஒளியின் உணர்வின் அணுக்களாக மாற்றுகின்றது.
3.இருளை அகற்றிப் பொருளைக் காட்டுகின்றது.
நம் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை நாம் மாற்றியமைக்கும் திறனும் பெறுகின்றோம். இதுதான் “ஜோதி தரிசனம்” (கார்த்திகை தீபம்) என்பது.
கார்த்திகை தீபம் நம் வீட்டு வாசற்படியில் வைப்பது போல நம் உணர்வின் தன்மையை ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று அந்த அருள் ஓளியின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக்கொண்டால் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றும் நன்னாளாக இது அமைகின்றது.
நம்மை உருவாக்கிய முன்னோர்கள் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்தக் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை அவருடைய உணர்வின் தன்மை நம் உயிரான நிலைகள் கொண்டு ஒன்றி பிறவியில்லா நிலைகள் அடைந்த அந்த ஞானிகளின் உணர்வுடன் அங்கே இணைத்தல் வேண்டும்.
1.அந்த ஜோதியின் சுடராக விளைய வேண்டும் என்று
2.மூதாதையர்களின் உயிரான்மாக்களை அந்த ஒளியின் சுடராக மாற்றப்படும் பொழுது
3.அதனின் உணர்வை நாம் நுகரும் ஆற்றலே பெறுகின்றோம்.
சாஸ்திரங்கள் இவ்வளவு தெளிவாக எடுத்துரைத்தாலும் அதை ஐதீகம் என்ற நிலைகள் கொண்டு இவர்கள் காட்டும் நெருப்பைப் பார்த்தால்…, “பாப விமோசனம்” என்று சாதாரண நிலைகளில்தான் நாம் செல்கின்றோம்.
உடல் வலுவைக் காட்டிலும் நம் எண்ணத்திற்கு வலிமை வேண்டும்
1.“அந்நியன் வெளியேறு…!” என்று காந்திஜி அன்று சொன்னாலும்
2.அடிமைப்படுத்தும் அந்நிய குணங்கள் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் வெளியேற வேண்டும் என்று தான் சொன்னார்.
அந்நியர்கள் என்று யாரையும் அவர் கருதவில்லை அந்நியனாக்கும் குணங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று அந்த எண்ணத்தை தான் உருவாக்கினார்.
ஒருவரைத் தாக்கிக் கொன்று விடுவதனால் யாரும் இறந்து விடவில்லை.
1.உடல்தான் மடிகின்றது… அவருக்குள் விளைந்த உணர்வுகள் பரவுகின்றது.
2.அந்தப் பரவும் உணர்வுகள் மற்ற உடலில் சேர்க்கப்பட்டு அவனும் தாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுதான் செயல்படுகின்றான்.
எங்கே மடிகின்றது…?
அவன் செய்த நிலைகள் மீண்டும் தாக்கப்படும் உணர்வுக்கே வளர்க்கப்படுகின்றது. நல்ல குணங்களைக் காக்கும் நிலை எங்கே இருக்கின்றது…?
1.இது வீரியம் (வீரம்) அல்ல…
2.தாக்குவோர் நிலையிலிருந்து மீள வேண்டும் என்று எவர் வலிமை கொள்கின்றாரோ அவர் தான் வீரியத்தில் சிறந்தவராகின்ரார்.
ஆகவே…
1.ஒருவரைத் தாக்குவது என்றால் அது கோழை தான்
2.மீண்டும் பதிலுக்கு அவரைத் தாக்கி அதிலிருந்து நான் மீள்வேன் என்று சொல்வதும் கோழை தான்.
ஆகவே இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.
சாமி ஆன்மீகம் பேசாமல் அரசியல் பேசுகிறார் என்று நினைக்கலாம். ஆனால் காந்திஜி தான் உண்மையான ஆன்மீகம்… அவர் வலிமை பெற்றவர்.
அந்த வலிமை இருந்தால் தான் உயர்ந்த நிலைகளை எண்ணித் தனக்குள் அதை வளர்த்து நம்மையும் காக்க முடியும்… நாட்டையும் காக்க முடியும்… மனிதன் என்ற முழுமையும் அடைய முடியும்.
1.அனைவரையும் ஒன்று சேர்த்து அரவணைத்தால் தான் மகிழ்ச்சி
2.அந்த மகிழ்ச்சியை வளர்க்கப்படும் போது தான் பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.
இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நான் (ஞானகுரு) அந்தத் தேசிய இயக்கத்தில் செயல்பட்டவன். தொண்டனாகச் சேர்ந்தவன். காந்திஜி வழியில் செயல்பட்டு தலையிலே அடி பட்டவன்.
குருநாதர் அருள் சக்திகளைக் கொடுத்தாலும் அந்த அருள் வழி கொண்டு நம்மையறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால் காந்திஜியின் நினைவை நாம் கொள்தல் வேண்டும்.
இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட அந்த ஆன்மீக வலிமை கிடைக்கும்.
1.வலிமை இருந்தால் தான் அருள் ஒளியைப் பெற முடியும்.
2.அது இல்லை என்றால் ஒன்றை நாம் எதிர்பார்ப்போம்
3.அது நடக்கவில்லை (அந்த வலிமை இல்லை) என்றால் கொடுத்த சக்தியை நீங்கள் இழந்து விடுவீர்கள்.
அவ்வாறு ஆகக்கூடாது என்பதற்குத் தான் இதை எல்லாம் உங்களுக்குள் தெளிவாக்குகின்றோம்.
உடல் என்பது ஆத்மாவிற்கு ஒரு வாடகை வீடு தான்…! – ஈஸ்வரபட்டர்
ஞான வளர்ச்சி எண்ணமுடன் செயல் கொள்ளும் உயர் காந்த மின் சக்தியை நாம் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால் வலுப் பெறும் தன்மை கொள்வதினால் வளர்ச்சி பெறும் தொடர் நிலை யாது…?
இந்த உடல் என்ற பிம்பமானது ஒரு அடுப்பைப் போன்றது.
1.அடுப்பில் எதைப் போட்டுச் சமைக்கின்றோமோ அதனை வேக வைப்பது தான் அடுப்பின் வேலை.
2.சேர்க்கப்படும் பொருளின் சேர்க்கையின் சுவை கொண்டு சுவை கொள்வது ஆத்மாவின் வேலை.
மோதுண்டு மோதுண்டு எந்தச் சுவையிலெல்லாம் தன் வலுவைக் கூட்டி இந்த உயிராத்மா வலுப் பெற்று வலுக் கொண்டதோ அந்த ஒவ்வொரு சேர்க்கையிலும் தன் வளர்ச்சி முலாமின் சக்தியை எடுப்பது உடலாக இருக்கின்றது.
அதே சமயத்தில் இஜ்ஜீவ பிம்ப உடலின்… “அணுச் சேர்க்கை சமைத்தனுப்பும் வலுவைத்தான்” இவ்வுயிராத்மா தனக்கு வலுவாக்கிக் கொள்கின்றது,
1.உண்ணும் உணவையும்
2.எண்ணும் எண்ணத்தையும்
3.செய்யும் செயலையும் இந்த உடலானது எடுத்து
4.அவை வளர்க்கும் அணுக்களின் வளர்ச்சியிலிருந்து
5.தன் வலுவை இந்த உயிராத்மா வளர்த்துக் கொள்கின்றது.
இந்த உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களின் தன்மையை நாம் எப்படி உணர்வது…? அதன் செயலை அறிய நம் ஆத்ம பலம் கூடியிருந்தால் தான் உணர முடியும்.
ஏனென்றால் மற்ற (ஒவ்வொரு) உயிராத்மாவின் வலுவைக் காட்டிலும் “ஜீவன் கொண்ட உயிராத்மாவின் சுழற்சி நிலை… ஜீவ சக்தியின் ஈர்ப்புடன் செயல்படுகிறது…”
அந்த வலுக் கொண்டு…
1.இந்த உடலையே காந்த மின் அலை ஈர்க்கக்கூடிய ஆத்மாவின் சுழற்சியாக
2.இந்த உடல் முழுமைக்கும் கவசம் போல் இந்த உடலைச் சுற்றிக் கொண்டுள்ளது.
இந்த உடல் பிம்பமானது இயந்திரச் செயலைத்தான் செய்விக்கின்றதேயன்றி இவ் இயந்திரத்தில் எதை எதைப் போட்டுச் சமைக்கின்றோமோ அதிலுள்ள சக்தியைப் பெறுவது இந்தக் கவசம் போல் அமைந்துள்ள உயிராத்மா தான்.
பசி தூக்கம் தாகம் இவற்றின் உந்தலின் எண்ணமும் இந்த ஆத்மாவின் செயலுக்குகந்த சக்தி நிலைக்கு (வளர்ப்பு நிலைக்கு) தேவைக்குகந்த செயலுக்கொப்பத்தான் பிம்ப உடலின் உணர்வை ஏற்படுத்திக் கொள்கிறது.
அந்தந்த உணர்வைக் கொண்டு எண்ணத் தோன்றல் உந்தப்பட்டு இவ்வெண்ணத்தால் செயல்படுத்துவது தான் இந்தப் பிம்ப உடலின் உடலுக்குகந்த நிலையை இவ்வுடல் எடுக்கும் முறை.
ஜீவாதாரத் தேவை என்பது இந்த உடலின் உந்தலின் செயல் உயிராத்மாவின் உந்தலுக்குகந்த செயல் தான். அதனால் தான் பல பெரியோர்கள்
1.இந்த உடலை வாடகை வீடு என்றும்
2.இந்த உடல் என்பது வெறும் சக்கைதான்… என்றும்
3.இந்த உடல் வேறு ஆத்மா வேறு என்றும்
4.ஆத்ம தியானத்தால் தான் இந்த மனித ஆத்மா வளர முடியும்…! என்று பகர்ந்ததன் பொருளும் இதுவே.
பல மோதலில் வலுக் கொண்ட உயிராத்மா ஜீவாத்மாவின் தன்மைக்கு வந்து வார்ப்பாகி… வார்ப்பில் வலுவைப் பெறும் செயலுக்குத்தான்… ஒவ்வொரு உயிராத்மாவும் “பல பிறப்பிற்கு…” வருகின்றது.
இச்சுழற்சி ஈர்ப்பின் பிடியிலேயே மோதுண்டு மோதுண்டு… வலுப் பெற்ற தன்மை கொண்டு… வலுவான காந்த சக்தி கொண்ட தன்மை கூடிய பிறகுதான்… இந்த உடல் பிம்பம் கொண்ட மனித ஆத்மாவின் எண்ண ஞான வளர்ச்சி செயல் நிலைக்கு இந்த ஆத்மா வலுப் பெறுகின்றது.
1.வலுக் கொண்ட உயிராத்மாவின் கவசம் பூண்ட ஜீவ பிம்ப மனிதன்
2.இந்த ஆத்ம உயிருக்கு மேலும் வலுத் தரக்கூடிய தன்மையை
3.தன் எண்ணத்தால் எடுக்கும் “உயிர் ஞானத்தை” வளர்க்கக்கூடிய தன்மை கொண்டு தான் வளர்க்க முடியும்.
மிருகங்களின் நிலைக்கு எண்ணம் இருந்தாலும்… ஞானம் இருந்தாலும்… பகுத்தறிந்து செயல்படக்கூடிய உயர் ஞானத்தை வளர்க்கும் ஆற்றல் வலு ஈர்ப்புச் செயல் அற்றதனால்… மனிதனை ஒத்த ஆத்ம வளர்ச்சியைப் பெருக்கக்கூடிய சக்தி அதற்கில்லை.
ஆனாலும் ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு தனித் தன்மை வாய்ந்த உயர்ந்த குண வார்ப்பு அமில ஜீவ சக்தித் தன்மை உண்டு.
மனிதன் தன்னுடைய சாதாரண வாழ்க்கை முறைக்கு மிருகங்களை உணவாகவும் தன் செயலுக்குகந்த நிலைக்கும் அதனைப் பயன்படுத்துகின்றான்.
ஆனால் உயர் ஞானம் கொண்ட சப்தரிஷிகள்…
1.தான் உடலுடன் உள்ள பொழுதே தன் உயிராத்மாவின் பலத்திற்கு தன் வலுவைக் கூட்டிக் கொள்ள
2.எந்தப் புவியின் ஈர்ப்பில் தன் உயிராத்மாவானது வலுக் கொண்டு வலுப்பெற்றதோ
3.அந்த வலுவுக்குகந்த வலுத் தன்மை கொள்ள
4.இந்தப் புவியில் வளர்ந்த வளர்ச்சி நிலை ஒவ்வொன்றிலுமே
5.அணுவுக்குள் அணுவாக ஊடுருவி அணுவின் தன்மையிலெல்லாம் மோதுண்டு
6.இந்தப் புவி ஈர்ப்பில் அணு அமிலத் தன்மையின் பலவற்றின் நிலையையும்
7.தன் எண்ண ஞானத்தால் தன் உயிராத்மாவிற்கு வலுக் கொண்டனரப்பா…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
உங்கள் மனக் குழப்பத்தை அகற்ற “ஆத்ம சுத்தி” என்ற ஆற்றல் மிக்க ஆயுதத்தைக் கொடுக்கின்றோம் – அது பனிரெண்டு வருடம் காடு மேடெல்லாம் அலைந்து உருவாக்கப்பட்ட சக்தி வாய்ந்த ஆயுதமாகும்
ஆகவே எத்தகைய குறைகளைக் கண்டாலும் நமக்குள் உட்சென்று நம்மை வேதனைப்படச் செய்யும் செயல்களைத் தடுத்து நிறுத்தத் தான் அந்த “ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
அதை நீங்கள் பயன்படுத்துவதற்கு யாம் பனிரெண்டு வருட காலம் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி காடு மேடெல்லாம் அலைந்து அந்த ஆற்றலைப் பெற்றோம்.
ஒரு மருந்தைத் தயார் செய்து நோய் போய்விடும் என்று வைத்தியர்கள் சொல்கின்றார்கள்.
வைத்தியத்தின் முறைகளில் நோய் நீங்கினால் அவருக்குப் பொருள் கிடைக்கும் என்ற நிலைகளில் வைத்தியர்கள் செய்கின்றார்கள்.
நமது குருநாதர் கொடுத்த நிலைகளோ துன்பங்கள் விளைய வைக்கும் நிலைகளிலிருந்து மீள்வதற்கு என்னைப் பனிரெண்டு வருட காலம் காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.
அவர் சொன்ன முறைப்படி அங்கே அலைந்தோம்.
1.தாவர இனத்தின் உணர்வின் சத்து எவ்வாறு வேலை செய்கின்றது…? என்ற நிலையும்
2.மனித சஞ்சாரமே இல்லாத நிலைகள் அங்கே அமைதி கொண்டிருக்கப்படும் பொழுது
3..மனித உணர்வின் எண்ணங்கள் எவ்வாறு செயலபடுகின்றது…? என்ற எண்ணத்தை எடுத்து
4.அதைப் மனித உடலில் விளைய வைத்துத் துன்பத்தை நீக்கிடும் ஆற்றலை ஞானியர்கள் எவ்வாறு பெற்றார்கள் என்ற நிலையை
5.எம்மைப் பெறச் செய்தார் குருநாதர்.
அதைப் பெறச் செய்தபின் எனக்கு அடிக்கடி துன்பங்களை விளைய வைத்து அந்தத் துன்பத்தை நீக்க… நீ எப்படி எடுக்க வேண்டும்…? என்றும் உணர்த்தினார்.
அவர் காட்டிய வழிப்படி யாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலால்தான் எமக்குள் வரக்கூடிய துன்பத்தையும் எமக்குள் வரக்கூடிய வியாதியையும் நிவர்த்தி செய்ய முடிந்தது.
அப்படி நமது குருநாதர் காட்டிய வழியின் தன்மையை எமக்குள் பதியச் செய்து கொண்டேன்.
அதை ஒவ்வொரு நேரத்திலும் எடுத்து அதிலே வளர்த்துக் கொண்ட “அந்த உணர்வின் எண்ண அலைகளைத்தான்” உபதேச முறைப்படி
1.ஒவ்வொரு உணர்வின் அலைகளுக்கும் (நன்மை தீமைகளை உருவாக்கும்)
2.நன்மையை உருவாக்கும் உணர்வுடன் கலந்து உபதேசிக்கப்பட்டு
3.இந்த உணர்வுகளை உங்களுக்குள் திணிக்கின்றேன்.
4.உங்கள் துன்பத்தைப் போக்க உங்களுக்குள் அந்த நல்ல உணர்வினை பதியச் செய்கின்றேன்.
துன்பத்தை ஊட்டும் உணர்வுகள் உங்களை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளைத் தூண்டச் செய்கின்றது.
நீங்கள் அந்த மனதின் நிலைகளை அடக்கி உங்களைக் காக்கக்கூடிய அந்தச் சக்தியை நீங்கள் பெறுவற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.
அந்தப் பனிரெண்டு வருட கால அனுபவத்தின் நிலையை யாம் சொல்லும் பொழுது அந்தத் துன்பத்தினுடைய நிலைகளை மெய்ஞானியின் அருள் ஒளியுடன் கலந்து திரும்ப உபதேசத்தின் வாயிலாக “வாக்கின் நிலைகள் கொண்டு…, உங்கள் உடலிலே பதியச் செய்கின்றோம்”.
அவ்வாறு பதியச் செய்த அந்த வித்தின் நிலைகளுக்கு மெய்ஞானிகளின் சக்தியைப் பெறுவதற்கு நீங்கள் எந்த நிமிடமானாலும் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி எடுக்க முடியும்.
மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் நினைத்துச் செயல்படுவீர்கள் என்றால் துன்பத்தைப் போக்கக் கூடிய மெய் ஞானியின் அருள் சக்தி உங்களுக்குள் ஊடுருவச் செய்கின்றது.
1.உங்களையறியாமல் ஆட்டிப்படைக்கும் மனக்குழப்பத்தை மனக்குடைச்சலை இது நிவர்த்தி செய்கின்றது
2.உங்கள் எண்ணத்திற்குள் தெளிவாக்கி உங்கள் வாழ்க்கையில் உங்கள் செயலையும் தெளிவுபடச் செய்ய இது உதவுகின்றது.
3.வியாபாரத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
4.குடும்பத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
5.குடும்பத்திலும் ஒற்றுமையாக்கச் செய்கின்றது.
தெளிந்த நீராக இருந்தால் அதற்குக் கீழே இருக்கக் கூடிய பொருளை நாம் காண முடிகின்றது. நீர் தெளிவாக இருந்தாலும் அதே நீரின் தன்மைகள் “அலை பாயும் பொழுது… தெளிவாகத் தெரிவதில்லை”.
நன்மையான நிலைகளை நாம் தெளிவாக்க முடியாத நிலைகளில் இருக்கும் அந்த நேரத்தில் மெய்ஞானியின் உணர்வின் அலைகளை நமக்குள் செலுத்தப்படும் பொழுது
1.பல உணர்வின் அலைகள்
2.அலைந்து கொண்டிருக்கும் நிலையை
3.அது நமக்குள் சமப்படுத்தி நிறுத்தும்.
அந்த அருள் ஒளியின் தன்மை நமக்குள் உயிரான தன்மை கொண்டு “ஒளியாக வீசிக் கொண்டே இருக்கும்… வளர்ச்சியாகும்”.
நம் நல்ல குணங்கள் சீராக இயங்க சுதந்திரம் வேண்டும்
இன்று கோடிச் செல்வங்கள் வைத்திருப்போரும் சரி… அரசியலில் முன்னணியில் இருப்போரும் சரி… அரசியல் தலைவர்களும் சரி… யாரும் நிம்மதியாக இருப்பது இல்லை.
1.உலகம் முழுவதும் உள்ள அரசியல் வாழ்க்கை நடத்துபவர்கள் அனைவருமே
2.நிம்மதியற்ற வாழ்க்கை தான் வாழுகின்றனர்… “சுதந்திரம்” என்ற நிலை இல்லை.
அவர்கள் வெளியே வரவேண்டும் என்றாலும் அஞ்சித் தான் அவர்கள் வர வேண்டியுள்ளது. அவர்களுக்குப் பாதுகாப்பு பின்னாடியே வருகின்றது.
நாமும் இன்று பஸ்ஸில் சென்றாலும் அல்லது ரோட்டில் சென்றாலும் நமக்கும் அந்த முழுச் சுதந்திரம் இல்லை. எவன் பறிப்பான்…? எவன் அடிப்பான்…? அவன் கொல்வான்…? என்ற உணர்வில் தான் செல்ல வேண்டி இருக்கிறது.
சுதந்திரம் என்ற நிலை யாருக்கும் வரவில்லை. அரசியலிலும் சரி… செல்வாக்குடன் வாழ்வோரும் சரி… எல்லாம் ஓங்கி வளர்ந்து வந்தாலும் உடலில் சுதந்திரமான வாழ்க்கை இல்லை.
சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் காந்திஜியை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
1.எத்தகைய தீமையும் அவருக்குள் புகாது “அனைவரும் சகோதரர்களே…” என்று
2.தன் உடலுக்குள் அந்த உணர்வை ஊட்டிக் கொண்டார்
3.அந்த சகோதரத்துவதைத் தான் அவர் தனக்குள் வளர்த்துக் கொண்டார்.
மதக் கலவரங்களும இனக் கலவரங்களும் இந்தியாவில் நடக்கும் போது மக்கள் மடிவதை… அசுர சக்திகள் இங்கே வந்து மாய்க்கின்றது என்று கூட அவர் எண்ணவில்லை. அசுர சக்தி என்ற எண்ணமே அவருக்குள் வரவில்லை.
“அனைவரும் ஒன்று…” என்ற நிலையில் உணர்ந்து சாந்த நிலைகள் கொண்டு நாம் மற்றவரையும் வாழ வைக்கும் போதுதான் இந்த உடலுக்குள் சுதந்திரம் கிடைக்கின்றது.
மனிதன் அழகாக இருப்பான்… செல்வமும் இருக்கும்… செருக்கும் இருக்கும். ஆனால் அவனுக்குச் சுதந்திரமில்லை.
காரணம்… அம்மம்மா…! என்று வேதனை உணர்வுடன் சாப்பிட முடியவில்லையே… படுக்க முடியவில்லையே… படுத்தால் தூங்க முடியவில்லையே…! என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
1.தூங்க வேண்டும் என்ற எண்ணம் கூட வருவதில்லை.
2.ஆனால் செல்வம் இருக்கும்… சுதந்திர வாழ்க்கை வாழ்வதில்லை.
ஆகவே அந்தச் சுதந்திரம் என்பது எது…?
1.தன் அருகில் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் மகிழ வேண்டும்
2.நாங்கள் பார்க்கும் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று கல்யாணராமனாக
3.அந்த அரவணைக்கும் சக்தியாக எண்ணங்கள் ஒன்று சேர்ந்து வாழும்போது தான் நமக்குள் அந்த எண்ணங்கள் வளர்கின்றது
கல்யாணராமன் எப்போது ஆகின்றான்…?
திருமணம் ஆகும் போது நாம் எப்படி மகிழ்ச்சி பெறுகின்றோமோ அது போன்று நம் எண்ணங்கள் எல்லாம் ஒன்று சேர்க்கும் பொழுதுதான் அந்த மகிழ்ச்சி பொங்குகிறது.
பகைமை அற்ற நிலை உருவாகின்றது. இந்த மகிழ்ச்சி பேரானந்தத்தை நமக்குள் கூட்டுகின்றது.
ஒரு நண்பன் “அவன் உயர்ந்த நிலை பெற வேண்டும்” என்ற எண்ணத்தை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அவன் வளர… வளர… நமக்கு அந்த வளர்ச்சி உயர்ந்ததாக வளரும்.
அதே சமயத்தில் “எனக்கு இப்படி இடைஞ்சல் செய்கிறான்” என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நமக்குள் இருக்கும் அந்த நல்ல மனம் சுதந்திரத்தை இழந்து விடுகின்றது.
அந்த உணர்வுகள் வளர வளர உடலுக்குள்ளேயே எதிரியாகி நம் நல்ல செயல்களை அழிதுக் கொண்டே இருக்கின்றது. சுதந்திரம் எங்கே இருக்கின்றது…? சுதந்திரமாக வாழும் தன்மை இல்லை.
காந்திஜி இதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்… மடியவில்லை. உடல்தான் மடிந்தது. அவருக்குள் விளைந்த அந்த அரும் பெரும் சக்தி உலகம் முழுவதும் பரவி உள்ளது.
அவர் வாழ்ந்த காலத்தில் அவருடன் பழகிய நல்ல மக்கள் மத்தியிலும் இது பதிவாகியுள்ளது. ஆகவே…
1.அவர் உடலில் விளைந்த ஞான வித்தை நாம் வளர்த்துக் கொண்டால் அது அரும் பெரும் சக்தியாக மாறும்.
2.சாந்த குணத்தைப் பெறச் செய்யும்… சகோதர உணர்வுகளை வளர்க்கச் செய்யும்.
3.அதன் மூலமாக நாம் சுதந்திரமாக வாழ முடியும்…!
ஆத்ம வலுவின் சக்தியும்… அதன் மூலம் அடுத்த நிலை அடைவதும் – ஈஸ்வரபட்டர்
உயிரானது சிரசின் மேலிருந்தும் ஆத்மாவானது இந்த உடலைச் சுற்றியும் அமைந்துள்ளது. இந்த உடல் பிம்பத்தைக் கவசம் போல் சுற்றியுள்ளது இவ்வாத்மா.
உயிர் பிரியும் பொழுது இந்த உடல் தன்மை ஆரோக்கியம் அற்று செயலிழந்து உடல் மடியும் பொழுது இந்த உடலுடன் கூடிய உயிர் ஆத்மா
1.இந்த உடலிலிருந்து எப்படிப் பிரிகின்றது…?
2.இந்த உடலுடனே சுற்றிக் கொண்டுள்ளதா…?
3.பிம்பத்தை எரித்த பிறகு வெளிப்படுகின்றதா…?
4.புதையுண்ட பிறகு உடல் அழுகி வெளிப்படுகின்றதா…?
சாதாரண அமைதி கொண்ட வாழ்க்கையுள்ள அன்பு நெறியில்
1.வயது முதிர்ந்து உடல் உறுப்புகள் செயலிழந்து ஆத்மா பிரியும் உயிரணுவின் தன்மைக்கும்
2.பல இன்னல்களிலிருந்து வாழ்ந்து முடியும் உயிராத்மாவின் தன்மைக்கும்
3.தற்கொலையின் உயிராத்மா தன்மைக்கும்
4.கொலையுண்டு மடிந்த ஆத்மாவின் தன்மைக்கும்
5.விபத்துக்களில் இறந்த ஆத்மாக்களின் தன்மைக்கும்
6.சில ஈர்ப்பலையில் தன் ஆத்ம பலத்தால் விஞ்ஞானத்தாலோ மருத்துவத்தாலோ கலை உணர்வாலோ வளர்ந்த உயிராத்மாவிற்கும்
7.அவ்வுடல் பிம்ப உயிராத்மாவின் தன்மையில் வலுத் தன்மை ஒவ்வொன்றுக்கும் மாறுபடுகின்றது.
காந்த சக்தியினால் வளர்ச்சி கொண்டத் தான் இந்த உயிராத்மாவின் நிலை.
எப்படி மின்சார சக்தி (POWER) பாயும் பொழுது அதை எந்தெந்த அலை கொண்டு எந்த நிலை கொண்ட மின் அலை சாதனைத்தைச் செயல்படுத்தி எவ்விகித ஒளிக்குகந்த காந்த மின் சக்தி கொண்ட விளக்கைப் பொருத்துகின்றோமோ அதற்குகந்த வெளிச்சத்தைத்தான் அவை அவை எடுத்து வெளிப்படுத்துகின்றது.
அதைப் போன்றது தான்… இவ்வாத்ம உயிர்…
1.அவ்வுடலில் உள்ள அணு வளர்ப்பின் வலுக் கொண்ட சேமிப்பு வலுவை
2.அவ்வுயிராத்மா உடலில் உள்ள பொழுதே வலுக்கூட்டிக் கொண்ட நிலைக்கொப்ப
3.இந்த ஆத்மா பிரிந்த பிறகு இந்தக் காற்றலையின் இந்தப் புவி ஈர்ப்பில் சுழன்று கொண்டிருந்தாலும்
4.சேமித்த வலுத் தன்மையைக் கொண்டு தன் வலுவை மற்றொரு ஈர்ப்பலைக்குச் சிக்காமல்
5.தன்னைத்தானே பாதுகாத்து தனக்குகந்த வளர்ப்புப் பிடியில் தான் பிறிதொரு வார்ப்பு நிலைக்கு வாழ முடியும்,
உதாரணமாக… காற்றடிக்கும் பொழுது காற்றடிக்கும் வேகத்திற்கொப்ப லேசான காகிதங்களும் இலைச் சருகுகளும் கனமற்ற தன்மை கொண்ட பொருள்கள் பறக்கின்றன.
வலுவான காற்றும் வரும் பொழுது அதனைத் தாங்க முடியாமல் இன்னும் சில கனம் கொண்ட பொருள்கள் பறக்கின்றன.
ஆனால் பெரும் சூறாவளி வந்தால் இந்தப் புவியின் ஈர்ப்புடன் வளர்ந்த வளர்ப்புக்கள் அனைத்தையும் அந்தச் சூறாவளி பறக்கச் செய்கின்றது.
அதைப் போல்
1.எந்தெந்த வலுத் தன்மை கொண்டு இந்த உயிராத்ம வலுச் சக்தி கூடுகின்றதோ…
2.அதற்குகந்த வலுத் தன்மையை… இஜ்ஜீவ சக்தி கொண்ட உடல் உறுப்புக்களின் அணுக்களின் வளர்ப்பிலிருந்து…
3.தன் உயிராத்மாவின் வளர்ப்பணுவிலிருந்தே… தன் வலுவை வலுப் பெறச் செய்து கொள்கின்றது இந்த உயிராத்மா.
எண்ணத்தின் நிலைக்கொப்ப நாம் எடுக்கும் சுவாசம் கொண்ட அணுக்களின் வலுவைத்தான் உயிராத்மா சேமித்துக் கொள்ள முடிகின்றது. சேமித்த நிலைக்கொப்பத்தான் ஜீவன் பிரிகின்றது.
1.எந்த முலாமின் வளர்ப்பில் இந்த உயிராத்மா வலுக் கொண்டு வெளிப்பட்டதோ
2.அதன் வலு வித்து வளர்ச்சியில் தான் மீண்டும் சிக்க முடியும்.
நம்முடைய உயிராத்மாவில் எந்த முலாம் வலுவாக இருக்க வேண்டும்…? என்பதை முடிவு செய்து கொள்ளுங்களப்பா…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நமது பூமி சுழலும் பொழுது பிரபஞ்சத்திற்குள் காந்தங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அந்தக் காந்த அலைகள் மோதும் பொழுது தான் நம் பூமிக்குள் காந்தங்கள் உற்பத்தியாகின்றது.
அப்படிப் பிரபஞ்சத்திற்குள் உள்ள காந்தங்களின் அதீத மோதலினால் ஏற்படக்கூடிய வெப்பமும் அதில் ஏற்படக்கூடிய காந்தங்கள்தான் பூமிக்குள் மற்ற அணுக்களை இயக்கச் செய்கின்றது.
இதைப் போலத்தான் பூமி ஓடும் பாதையிலே அதன் இயக்கங்கள் அது ஓடிக்கொண்டே இருப்பதால்… “உராயும் சக்தி” கிடைக்கின்றது.
நாம் காற்றடிக்கும் பம்பை வைத்துக் காற்றடிக்கின்றோம். பெட்ரோல் இன்ஜின் ஓடும் பொழுது அதிலுள்ள பிஸ்டன் இழுத்துத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றது. இதைப் போல
1.நம் உயிரின் ஈர்ப்பு அது துடிக்கும் பொழுது
2.அதனின் “ஈர்ப்பின் சக்தி அதிகமாகின்றது”
அந்த ஈர்ப்புச் சக்திக்குத் தக்கவாறு நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ அந்தக் குணங்கள் ஒரு காந்த அணுவுக்குள் ஒரு வேப்ப மரத்தின் கசப்பின் தன்மை பட்டிருந்தால் அந்தக் கசப்பிற்குத் தகுந்த மாதிரி நம் உணர்ச்சிகள் தூண்டுகின்றது.
அதைப் போல மிளகாயினுடைய காரச் சக்தியினுடைய தன்மையை ஒரு வெப்ப காந்தம் இழுத்திருந்து அந்தக் குணத்தின் நிலைகள் கொண்டு நாம் சுவாசித்தோமேயானால் அது உயிரில் பட்டவுடன் நம் வாயிலே மிளகாயைப் போட்டால் எப்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றதோ இதைப் போன்ற உணர்ச்சிகளை நம் உடலிலே தூண்டச் செய்யும்.
ஏனென்றால் நாம் சுவாசிக்கும் உணர்வினுடைய நிலைகள் நாம் எந்தெந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ அதற்குத் தக்கவாறுதான் இந்த உணர்வின் நிலைகளை நாம் சுவாசிக்க முடிகின்றது.
1.அவ்வாறு சுவாசித்த நிலைகள் நம் உயிருடன் சுழற்சியாகி
2.அந்தச் சுழற்சிக்குள் பட்டவுடன் உயிரின் காந்தத் துடிப்புகளுக்குள் மோதி
3.அதனுடைய நுண்ணிய அணுக்கள்
4.சுவாசித்த உணர்வினுடைய நிலைகளை உணரச் செய்கின்றது.
அந்த உணர்வின் அலைகளை நம் உடல் முழுவதற்கும் பரப்பச் செய்து தன் இனமான நிலைகளை அது இயக்கச் செய்கின்றது.
ஆகவே “ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் துடிப்பின் நிலைகளைக் கூட்டும் பொழுது நம் உயிரின் துடிப்பின் வேகம் கூடுகின்றது.
அப்பொழுது நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை நமக்குள் மோதச் செய்யும் பொழுது
1.ஏற்கனவே இருந்த துடிப்பைக் காட்டிலும்
2.அதிகமான நிலைகளை நமக்குள் சேர்க்கப்படுகின்றது
3.நம் உடலிலே காந்த சக்தி கூடுகின்றது.
4.இந்த வேகத்துடிப்புடன் நம் சுவாசத்தை மேல் நோக்கி எண்ண வேண்டும்.
நம் கண்ணான புலனறிவின் நிலைகளை உயிருடன் ஒன்றி இணைக்கச் செய்து இந்த ஆற்றலை நாம் செயல்படும் பொழுது அந்த உயிருக்குள் அந்த வேகத் துடிப்பின் நிலைகள் அதிகமாகின்றது.
துருவ நட்சத்திரத்தின் அலைகள் நம் சுவாச நாளங்களில் ஊடுருவி உடல் முழுவதற்கும் செல்கின்றது. இவ்வாறு நம் உயிரின் துணை கொண்டு ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெற முடியும். நமக்குள் விளைய வைக்க முடியும்.
துருவ நட்சத்திரம் நஞ்சை ஒளியாக மாற்றுவது போல் நாமும் ஒளியாக மாற்ற முடியும். ஒளியின் சரீரம் பெற முடியும்.
உயிரைப் பற்றி நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது
நாம் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டி சந்தர்ப்பத்தால் ஒருவர் வேதனைப்படுகிறார் என்று அறிவித்தாலும் உயிரில் மோதிய பின் அணுவின் கருவாக உருவாகி விடுகின்றது.
காரணம்…
1.அவன் வேதனைப்படுகிறான்… வேதனைப்படுகிறான்… என்ற எண்ணங்களை
2.மீண்டும் அதிகமாகக் கூட்டும்போது அது கருவாகும் சந்தர்ப்பமாகின்றது.
கோழி குருவி பல்லி போன்ற முட்டை இடும் இந்த உயிரினங்கள் அனைத்துமே “கேரும்…” அதைப் போன்று நாம் திரும்பத் திரும்ப அந்த வேதனைப்பட்ட மனிதனை எண்ணும் பொழுது அந்த மனிதனின் உணர்வு நமக்குள் கருவாக உருப்பெற தொடங்கி விடுகின்றது.
நோய்க்குக் காரணமாக எது அவர் உடலில் இருந்ததோ அதே மாதிரி நம் உடலுக்குள் வந்து கருவான பின் இரத்தங்களில் சுழன்று வரும்.
1.அப்பொழுது அது எந்தெந்தப் பாகங்களில தேங்கி நின்றதோ
2.அங்கே முட்டையாகி அணுவாக வெடித்து வெளி வரும்.
கோழி அடைகாத்துக் குஞ்சு பொரித்த பின் அவை வெளிவந்தபின் கத்துகிறது. தாய்க் கோழி கூப்பிட்டு ஆகாரம் கொடுக்கின்றது. அதே போல் நமது உயிர் கூப்பிட்டு உருவான அந்த அணுக்களுக்கு ஆகாரம் கொடுக்கும்.
எப்படி…?
நம் உடலுக்குள் அணுவின் தன்மை முழுமை அடைந்து விட்டால் அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவும்.
1.நம் சிறு மூளை பாகம் வந்து இந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
2.பின் உயிர் நம் புலனறிவுகளான கண் காது மூக்கு உடம்பு வாய் இவைகளுக்கு ஆணைகள அனுப்பும்.
3.இந்த உணர்ச்சியின் தன்மை வந்தபின் எந்த மனித உடலில் இருந்து வெளி வந்ததோ அதே வேதனைப்படும் உணர்வுகளைக் கவரும்.
காரணம்.. வேதனைப்பட்ட அந்த மனித உடலில் இருந்து வெளிவந்த அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது. அதைத் தான் ஐம்புலன்களும் கவர்ந்து நம் உடலுக்குள் அனுப்பும்.
உடலுக்குள் அனுப்புவதற்கு முன் நாம் நுகர்ந்தது உயிரிலே பட்டபின் அந்த வேதனைப்பட்ட மனிதன் எப்படி வேதனைப்பட்டாரோ அதே போல் அந்த மனிதனின் சோர்வும் வேதனையான உணர்ச்சிகளும் நம்மை அறியாமலே தோற்றுவிக்கும்… இனம் புரியாதபடி நாமும் வேதனைப்படுவோம்.
அவ்வாறு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது
1.நாம் செய்து கொண்டிருக்கும் தொழிலில் இன்ன குறை இருக்கிறது என்று
2.எதையோ ஒன்றை எடுத்துச் சொல்ல ஒருவர் வருகிறார் என்றால் சரி…
3.நம் புலன்களில் அது ஏற்றுக் கொள்ளாது… கவனிக்க முடியாது.
4.அந்த வேதனைக்குண்டான அவருடைய நினைவை ஊட்டும்
அந்தச் சமயத்தில் ஒருவன் மகிழ்ச்சியான நிலையில் இருந்தால் நம் கண் பார்வை அதை ஏற்றுக் கொள்ளாது. கண் பார்வையில் அந்த வெறுப்பின் நிலையையே ஊட்டும். அந்த வேதனைப்படும் உணர்வையே ஊட்டும்.
நாம் பணத்தையோ ஒரு பொருளையோ கணக்குப் பார்க்க வேண்டுமென்றால் சரியான முறையில் பார்த்துத் தான் செயல்படுத்த வேண்டி இருக்கும்.
மேலே சொன்ன இந்த வேதனை உணர்வுகள் பார்வைக்கு வரும் பொழுது அதைச் சீராக இயக்கவிடாது. தப்பும் தவறுமாகச் செய்வோம்.
தொடர்ந்து இத்தகைய உணர்ச்சிகள் உடலிலே இயக்க இயக்க அந்த வேதனை உணர்வுகள் நம் கை கால் அங்கங்களைக் குறைத்துவிடும். காரணம் உடலில் உருவான அந்த அணுக்களுக்குண்டான ஆகாரமாக இதனைச் சுவாசிக்கச் செய்து அதைச் சாப்பாடாகக் கொடுக்கும்.
ஒரு பருந்து வருகிறது என்றால் அந்த இரைச்சல் கேட்ட உடனே தாய்க் கோழி சப்தமிடும். உடனே அந்தக் குஞ்சுகள் அனைத்தும் தாயின் இறக்கைக்குள் அடங்கி விடுகின்றது.
அதே மாதிரித்தான்
1.உடலில் உருவான இந்த வேதனையான அணுக்கள் எல்லாமே உயிருடன் ஒன்றி தன் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
2.உயிர் அதற்குப் பாதுகாப்புக் கொடுக்கின்றது.
மீண்டும் மீண்டும் உணர்ச்சிகளைத் தூண்டி தனது ஆகாரத்தை எடுத்துப் பெருக ஆரம்பிக்கிறது. இப்படி நம் உடலுக்குள் நம்மை அறியாமலேயே வேதனையான அணுக்கள் பெருகி கடும் நோயாக உருவாகின்றது.
எந்த மனிதனைப் பார்த்து அவரின் வேதனையை நுகர்ந்தோமோ அதே நிலை நமக்குள்ளும் உருவாகி நாமும் அவனைப் போன்றே நோயாகி வேதனைப்படுவோம்.
இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
உடல் வாழ்க்கையின் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்
1.இயற்கையுடன் ஒன்றி வளரும் உருமாற்ற வளர்ச்சித் தொடரும்
2.உருவாகும் கால நிலையும்… உருண்டோடும் ஈர்ப்புச் சுழற்சியும்… உருவாகும் தன்மை கொண்டு
3.உருளுகின்ற உயிரணுவின் சேர்க்கை கொண்டு உருவாவது தான்..
4.பிம்ப உடல்களின் அங்க அவயங்களும்… உருவ பிம்ப அச்சும்…!
இந்தப் பிம்ப ஜீவ உடலின் உயிராத்மாவிற்கு எத்தகைய எண்ணங்களை எல்லாம் ஈர்ப்பில் எடுத்து நாம் சேமிக்கின்றோமோ அந்த நிலைக்குத்தக்க உயிராத்மா வித்து தான் பிறிதொரு கூட்டுச் சேர்க்கை வளர்ப்பு ஜீவனுக்கு வழி காட்ட முடியும்.
இவ்வாத்ம ஜீவ உயிரானது காந்த சக்தி கொண்டது…!
1.நாம் எடுக்கும் சுவாசமானது
2.கவன நரம்பில் மோதுண்டுதான் நெற்றிப் பொட்டில் ஈர்க்கப்பட்டு
3.சிறு மூளையின் செயலுக்குச் சென்று இந்தப் பிம்ப உடல் ஜீவிக்கின்றது.
4.ஆகவே “காந்த சக்தி” கொண்டது தான் நம் உயிராத்மா…!
எந்த எண்ண சுவாசத்தை நாம் எடுக்கின்றோமோ… அதன் நிலைக்கொப்ப வலு சக்தி கொண்ட முலாமாக… இந்த உயிர் காந்த ஆத்மாவுக்கு அது வலு ஏறுகின்றது.
நாம் பூசிய முலாமின் ஈர்ப்பு காந்த உயிரணுவின் செயலானது இவ்வுடலில் இருக்கும் காலத்தில் சேமித்த தன்மை கொண்டுதான் பிறிதொரு ஜென்மப் பிறப்பு (அடுத்த) உடலுக்கு இந்த வித்தின் கலவைக் கூட்டுச் சேர்க்கைக்குகந்த பிறப்பெடுக்க முடிகின்றது.
தாவரங்களின் புவி ஈர்ப்புப் பிடியுடன் ஒன்றி வளர்ந்த உயிரணுக்களும்… இந்தப் புவியுடன் ஒன்றிய கனிவள உயிரணுக்களும்… ஒன்றிலிருந்து ஜீவன் பிரிந்து மற்றொரு ஜீவ சக்தி எடுப்பது என்பது இப்புவி ஈர்ப்புடன் ஒன்றிய பிறப்பில் இருந்ததால் குறுகிய காலத்தில் தொடர் பிறப்பின் பிறப்பு வளர்கின்றது.
அதுவே ஆத்ம பிறப்பெடுக்கும் இவ்வுயிராத்மா.. அது சேமிக்கும் முலாமின் அமில வளர்ச்சியின் சக்தி வலு இக்காந்த ஈர்ப்பு சக்தி கூடி விடுகின்றது,
அப்படிக் கூடி விடுவதனால் அவ்வுயிர் ஆத்ம வலுவினால் ஜீவ சக்தி கொண்ட வளர்ப்பாகும் தன்மைக்குத் தன் சேமிதக் கலவைக் கூட்டு அமிலத் தன்மைக்கொப்ப ஈர்ப்பு நிலையின் “உயிர் வித்தின் ஈர்ப்பில் தான்… பிறப்பெடுக்க முடியும்…!”
நெல் விதையைப் பக்குவப்பட்ட நஞ்சை நிலத்தில் போட்டால் தான் அது வளர்கின்றது. அதையே மேடு காடுகளில் போட்டால் அந்த நிலப் பகுதியில் நெல்லுக்குத் தேவையான பக்குவத் தன்மை இல்லாததால் இதன் வளர்ப்பு வளர்வதில்லை.
அதைப் போன்று இந்த உயிராத்ம சக்திக்கு…
1.எந்த ஈர்ப்பு அமிலக்கூட்டு முலாமாக மோதுண்டு
2.வாழும் காலத்தில் அதனின் வளர்ப்பு வளர்ந்ததோ
3.அதன் ஈர்ப்புப் பிம்பத்திற்கே செல்கிறது.
இயற்கைச் சுழற்சித் தன்மையில் சுழன்று வாழும் உயிராத்மாக்கள் “சுழற்சி ஈர்ப்பின் சுழலாகச் சுழலும் சுழற்சியையே…” (இயற்கையின் இயக்கம்) தன் உணர்வால் எடுக்கும் எண்ணம் மனிதனுக்குத் தான் உண்டு.
இப்படிப்பட்ட ஜீவன் கொண்ட பகுத்தறிவும் செயலாற்றும் பிம்ப உடலின் உயிராத்மா காந்த சக்தியினால்தான்
1.உருவாகும் இயற்கை கோளங்களையும்
2.உருவாகும் சக்திக்கே உரு நிலை தரும் சக்தியும்
3.இந்த மனித பிம்பத்திற்குத்தான் உண்டப்பா…!
அப்படிப்பட்ட தகுதி கொண்ட இந்த மனித உயிராத்மாவிற்கு நாம் சேமிக்கும் எண்ண உணர்வால்
1.நாம் எடுக்கும் “சுவாசத்தின் முலாம்” கொண்டுதான்
2.இந்த உயிராத்மாவின் உயர்வை நாம் காண முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருள் சக்திகளை நாம் பெற்று அவர் வழியைப் பின்பற்றி பேரானந்தப் பெருநிலையை நாமும் பெறுவோம்.
1.அவரின் அருளை நாம் பெற வேண்டும் என்றால்
2.நாம் பார்ப்போரெல்லாம் பேரானந்தப் பெரு நிலை பெற வைக்க வேண்டும்
3.அவர்கள் பேரானந்தப் பெருநிலை பெறும் உணர்வலைகள் வருவதை நாம் நுகர வேண்டும்.
4.நமக்குள் பேரானந்தத்தை வளர்த்திட வேண்டும்.
ஒரு நெல் பயிரை நாம் விளைய வைத்து அதை நாமும் உட்கொண்டு மகிழ்கின்றோம். அதே சமயத்தில் இதை மற்றவரும் உட்கொண்டு மகிழ்ந்திட வேண்டும், நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் நாம் அந்தப் பயிர்களை விளையச் செய்வோம்.
“யாரும் இதை வாங்கக் கூடாது.., உட்கொள்ளக் கூடாது..,” என்ற எண்ணத்தில் விளைய வைப்பதில்லை. இதைப் போல குரு அருளை வளர்ப்போம்… மற்றவர்களையும் நாம் பெறச் செய்வோம்.
ஏனென்றால் ஈஸ்வரபட்டாய குருதேவர் நமக்கு “எவ்வளவு பெரிய.., பொக்கிஷத்தைக் கொடுத்துள்ளார்…!” என்று எண்ணுங்கள்.
குறைகளை அகற்றுங்கள். மெய்ப்பொருளைக் காணும் உணர்வை உயர்த்துங்கள். உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். அதையே தவமாக்குங்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானியுங்கள். தியானம் என்பது முதலில் அந்த உயர்ந்த சக்தியை நமக்குள் வளர்த்துப் பழகுவது.
ஒரு பாத்திரத்தில் நாம் பல பொருள்களைப் போட்டுச் சமைக்கின்றோம் என்றால் அதில் சமைத்த பொருள்களுக்கொப்பத்தான் வாசனை வரும்.
எல்லாப் பொருள்களையும் நாம் போட்டுச் சமைத்தபின் “சிறிதளவு.., உப்பைப் போட்டுப் பார்க்கலாமே..!” என்று தன் இஷ்டத்திற்குச் சேர்த்தால் என்ன ஆகும்…?
சமைத்த அந்த உணவைச் சாப்பிடுபவர்கள் அனைவரும் “உப்பு அதிகமாகிவிட்டது..,” என்று தான் சொல்வார்கள். இதைப் போன்று நாம் சமைக்கும் உணர்வின் சுவையே அதைக் கேட்போரின் நிலைகள் மனம் மகிழும்.
1.அருள் ஞானியின் உணர்வுகளைத் தியானத்தால் நமக்குள் எடுத்து
2.அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கி எல்லோருக்கும் அதைக் கிடைக்கச் செய்யவேண்டும்.
ஆகவே… “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானிப்போம். மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற வேண்டும் என்று தவமிருப்போம்”.
எல்லா ஆலயங்களுக்கும் சென்று அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வ குணத்தைப் பெறவேண்டும் என்று தியானிப்போம். இந்த ஆலயத்திற்குள் வரும் ஒவ்வொருவரும் அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும் என்று தவமிருப்போம்.
அங்கே வைத்திருக்கும் கனியைப் போன்று மலரைப் போன்று பாலைப் போன்று பன்னீரைப் போன்று சந்தனத்தைப் போன்று அந்த நறுமணங்கள் அனைத்தும் நாங்கள் பெறவேண்டும்.
இந்த ஆலயத்திற்கு வரும் அனைவருக்கும் அந்த நறுமணங்கள் கிடைக்க வேண்டும் என்று இதை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.
மலரைப் போன்ற மணமும் மகரிஷிகளின் அருள் சக்தியும் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியும் நாங்கள் பெற வேண்டும். இந்தக் கோவிலுக்கு வரும் அனைவரும் அந்த நிலை பெற வேண்டும் என்று நாம் தவமிருக்க வேண்டும்.
அதற்குப் பதில் கோவிலுக்குள் போய் “நான் தவமிருந்து… அந்தத் தெய்வத்தைப் பெறப் போகின்றேன்… பார்க்கப் போகிறேன்…” என்றால் இது தவமில்லை.
இயற்கையின் நியதிப்படி மனிதனின் அடுத்த நிலை எது…? – ஈஸ்வரபட்டர்
இப்புவி ஈர்ப்பு மட்டுமல்லாமல் உருவாகும் அனைத்து அணுத் தன்மையும் அணுத் தோன்றி அணு வளர்க்கும் வளர்ச்சியிலேயே மோதுண்டு மோதுண்டு வளர்ந்து வருகின்றது.
முதலில் அந்த அணு தாவரமாக வளர்ந்தாலும் அல்லது அணுவாக உலோகம் வளர்ந்தாலும் எத்தொடர் வழி அணுக் கொண்டு எதன் எதன் தொடர்பெல்லாம் அந்த ஆரம்ப உயிரணு மோதுண்டு வழி பெறும் தன்மை பெற்றதோ
1.அந்த அவ்வுயிரணுவின் அமில ஆத்மக் கலவையில் அதனின் வளர்ச்சித் தொடர்
2.ஒவ்வொரு சக்திக் கலவை வழி கொண்டு
3.அதன் சேர்க்கை உருவ அமைப்பை (MOULD) வளர்த்துக் கொள்கின்றது.
ஆரம்ப உயிரணுத் தோன்றி இவ்வீர்ப்பில் புல்லாக “புல் செடியாக” வளர்ந்து அப்புல் செடியானது மக்கி மடிந்து விடுகின்றது.
மடிந்தாலும் அது வளர்த்த அவ்வுயிரணு அப்புல் செடியாக வளர்ந்த கலவையின் முலாமுடன் பிறிதொரு வளர்ப்பிற்கு அவ்வுயிரணு வித்து அமிலத் தன்மை வளரும் பொழுது
1.புல்லாகிய முதல் உயிரணு
2.பிறிதொரு வளர்ப்பிற்கு வரும் பொழுது “வலுவான செடித் தன்மை” கொண்ட பிறப்பை எடுக்கின்றது.
இப்பிறப்புத் தன்மை செடி மக்கிய அவ்வுயிரணு அச்செடி வளர்ப்பில் பல அணுக்களை வளர்த்துத் தன் வலுவைக் கூட்டிக் கொண்டு இசெடியின் முலாமான அமிலக் கூட்டுத் தொடர்புடனும் பிறிதொரு வளர்ப்பில் இதற்கு மேல் “வலுவான பூவாகும்” வளர்ப்பாகின்றது.
இத்தொடர் கொண்டு ஒவ்வொரு வளர்ச்சியின் ஈர்ப்பிலும்…
1.எச்சுவை கொண்டு… எவ்வழித் தொடர் வளர்ப்பிலெல்லாம் ஓர் உயிரணு வழித் தொடர் கொண்டு
2.தன் கூட்டுக் கலவையின் வளர்ச்சி மோதலுக்குகந்த முலாமான அமிலத்தைச் சேமிக்கும் வலுக் கொண்டு
3.அவ்வுயிரணு உயிராத்மாவாக புவிஈர்ப்புப் பிடியில் சிக்குண்டு
4.வளரும் தாவர நிலை மாறி ஜீவ சக்தி பெறக்கூடிய நடக்கும்… பறக்கும்… ஊரும்.. நீந்தும்… நிலை பெறுகின்றது.
இந்த வழித் தொடர் எல்லாமே இயற்கையின் நியதிகள்.
ஆக… இந்த மனித உயிராத்மாவின் சக்தி மற்றெல்லா ஜீவ சக்தியினைக் காட்டிலும் உயர்ந்த ஈர்ப்பு சக்தி கொண்டது.
1.ஆத்ம உயிரைச் செயல்படுத்தும் தன்மை கொண்டு தான்
2.இந்தப் பிம்ப உடல் ஆரோக்கியமும் ஞான வளர்ச்சியும் வலுக் கொள்கின்றது.
அப்படி என்றால் உயிராத்மாவை வலுப் பெறும் தன்மைக்கு நம் உணர்வலையின் எண்ணத்தை எப்படிச் செயல்படுத்துவது…?
உடலுடன் கூடிய உயிராத்மாவை…
1.எப்பிம்பத்தில் இவ்வுயிர் ஆத்மக் கலவை செயல்படுகின்றதோ
2.அதே பிம்பத்திலிருந்து தான் இவ்வுயிராத்மாவையும் வலுப் பெறச் செய்ய முடியும்.
குயவன் செய்யும் பானையின் உருவிற்கு அவன் சேர்க்கும் மண்ணும்… அவன் வடிக்க எண்ணிய அச்சின் வடிவாகவும் தான்… பானை அமைகின்றது.
அதைப் போன்று ஒவ்வொரு உயிரணுவும் எப்புவி ஈர்ப்பில் ஜீவன் கொண்டு எதிலேயெல்லாம் மோதுண்டு மோதுண்டு உருவாகி வலுப்பெற்றதோ அதன் தன்மை போன்று
1.நம் உயிராத்மாவானது இந்தப் பிம்ப அச்சுக்கூட்டில் இருக்கும் பொழுது
2.ஆத்ம உயிர் வித்தை உயர்ந்த வித்தாக்க வேண்டும்.
இப்பொழுது நாம் வாழும் இந்தப் பிம்பக் கூட்டிலிருந்து தான் அந்த நிலை பெற வேண்டும் என்பதை உணர்ந்து கிடைத்த “இந்தப் பாக்கியத்தை நழுவ விடாதீர்கள்…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நீங்கள் அனைவரும் இந்த உலகுக்கு எடுத்துக்காட்டாக நிறைவுபடுத்தி அந்த உணர்வின் தன்மை நாம் பெற வேண்டும் என்று
1.“நான்…,” மட்டும் இல்லாதபடி
2.அனைவரும் பெறவேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும்.
அருள் ஞானத்தை நாம் நமக்குள் சமைத்து விளைய வைத்த அந்த அருள் ஞானிகளின் உணர்வை எல்லோருக்கும் ஊட்டுதல் வேண்டும்.
பிறர் அந்த எண்ணங்களை எண்ணும் பொழுது அவர்களும் அதைச் சுவைத்து அதன் வழியில் அவர்கள் பெற முடியும்.
நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் இதைச் செயல்படுத்த வேண்டும்.
1.அருள் ஞானத்தின் நிலைகளே ஒளிச் சுடராக வளர வேண்டும்.
2.அனைவருக்குள்ளும் மகிழ்ச்சியின் தன்மை பெருக வேண்டும்
3.அருள் ஞானம் எல்லோரும் பெறவேண்டும்.
ஏனென்றால் “உலகைக் காக்கும் அருள் உணர்வுகள்..,” வளரவேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்வது.
நான் ஒருவனாகச் செய்யவில்லை. நானாகச் செய்வதற்கு வலுவில்லை…!
அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் ஒலிக்கின்றது. உணர்வின் அலைகள் படர்கின்றது. உங்கள் மனங்கள் உருவாகின்றது. அந்த உணர்வின் செயலாக.., “நீங்கள் தான் உருவாக்குகின்றீர்களே.., தவிர நானல்ல”.
நீங்கள் எங்கே இருந்தாலும் சரி குருவின் உணர்வுகள் உங்களுக்குள் ஊடுருவி அந்த ஐக்கியமாகும் உணர்வு கொண்டு செயல்படுத்துங்கள். அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் இணைந்து அதுவே உங்களுக்குள் வளர்ந்து அதனின் செயலாக்கமாக உங்களை அது இயக்கத் தொடங்கும்.
பதிவு செய்த நாடாவில் உள்ள இசையை மீண்டும் போடும் பொழுது அதை மகிழ்ந்து கேட்கின்றோம், அதைப் போன்று மகரிஷிகளின் உணர்வு (அதைப்) பதிவு செய்த “நாடாவாகத்தான்.., நான் இருக்கின்றேன்”.
அந்த நாடாவில் வரும் ஒலியை நானும் நுகர்கின்றேன். எனக்குள் மகிழ்ந்திடும் நிலையைப் பெருக்குகின்றேன். எல்லோரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்ற நிலையைத்தான் உருவாக்குகின்றேன்.
ஒரு இனிமையான இசையைக் கேட்கும் பொழுது அகமகிழ்ந்திடும் நிலைகளை நீங்கள் வெளிப்படுத்துகின்றீர்கள்.
அதைப் போன்று உங்களுக்குள் அந்த அருள் உணர்வுகள் இசைந்து “உங்களை அது மகிழ்ச்சி அடையச் செய்யும் பொழுது..,” அதைக் கண்டு நான் சந்தோஷப்படுகின்றேன்.
இதைத்தான் குருநாதர் எனக்குக் காட்டினார்.
இதைச் சீராகக் கடைப்பிடிக்கும் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
1.எந்தத் துயரத்திற்கும் நீங்கள் இடம் தராதீர்கள்
2.குறையான உணர்வுகளை உங்களுக்குள் புகவிடாதீர்கள்.
கணவன் மனைவி நீங்கள் இருவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை வசிஷ்டரும் அருந்ததியும் போன்று கவர்ந்து கொள்ளுங்கள்.
எல்லோருக்கும் அந்த அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்று உங்கள் மனதினை உயர்த்துங்கள். இவ்வாறு செய்து வந்தீர்கள் என்றால் அது சொர்க்கபூமியாக…” இருக்கும்.
தீமைகளிலிருந்து விடுபட்டு அருள் ஞான நிலைகள் கொண்டு உருவானது. அதை நாம் அனைவரும் உருவாக்கிக் கொண்டுள்ளோம்.
“அதனின்.., உருவின் தன்மையை.., உலகம் பார்க்க வேண்டும்” என்றால் அங்கே அருள் ஞானம் பேச வேண்டும். அருள் ஞானத்தின் உணர்வுகளை அங்கே பரப்ப வேண்டும். அருள் ஞானம் வளர வேண்டும்.
இந்தப் பூமியில் ஒவ்வொருவரும் தன்னை அறிதல் வேண்டும். தன்னை அறிந்து செயல்படும் திறன் அனைவரும் வேண்டும். “அனைவரும் வாழ வேண்டும்..,” என்ற எண்ண உணர்வுகள் உருப்பெறவேண்டும்.
உலகில் வாழும் அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அதைத்தான் நமக்குள் பெருக்க வேண்டும்.
சாந்த குணத்திற்கு இருக்கும் வலிமை வேறு எதற்கும் இல்லை
கொடும் செயல்கள் நடப்பதையும்… கொடும் தவறு செய்பவர் உணர்வுகளையும்… கேட்டுக் கொண்டே இருந்தால் அதை நுகர்ந்து அறிந்தபின்
1.ஒரு பத்து நாளைக்குத் தொடர்ந்து கேட்டால் நம் உடலுக்குள் அந்தக் கொடூர உணர்வுகள் விளைந்து விடுகிறது.
2.நம்மையும் அந்தத் தவறு செய்யும் நிலைகளுக்கே இயக்கி நம்மையும் தவறுள்ளவர்களாக மாற்றி விடுகின்றது.
இதைப் போன்ற நிலையிலிருந்து மனிதர்கள் நாம் விடுபட வேண்டும் என்று செயல்பட்டவர் தான் நம் காலத்தில் வாழ்ந்த மகான் காந்திஜி.
அவர் பெற்ற ஞானத்தை நாம் தெரிந்து கொள்வது மிகவும் நலம். அவருடைய வழிகளை நாமும் கடைப்பிடிக்க வேண்டும்.
1.தீமை இல்லாத உடலாக நாம் உருவாக்க வேண்டும்
2.தீமை செய்யும் எண்ணங்கள் நமக்குள் உருவாக்காதபடி தடுக்க வேண்டும்
3.தீமையற்ற உலகம் உருவாக வேண்டும்
4.தீமையற்ற நாடாக உருவாக வேண்டும் என்று
5.தீமையற்ற மக்கள் உருவாக வேண்டும் என்று அவரை நாம் நினைவு கொண்டு
6.காந்திஜி வழியில் அரும்பெரும் சக்திகளைப் பெறும் நிலையாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்
அவருக்குள் பிறக்கச் செய்த ஞானத்தின் நிலைகளை அந்த அருள் உணர்வுகளை நமக்குள்ளும் உருவாக்குவோம்… அதைப் பிறக்கச் செய்வோம்… அருள் ஞானச் செல்வத்தை வளர்ப்போம்.
ஏனென்றால் பிறருக்குத் தீங்கு விளைவிக்காத நிலையை நாம் பெற வேண்டும். எதை வைத்து..?
சாந்தமான குணத்தை வைத்து…!
கோபத்தால் உடனடியாக ஒன்றைச் செய்து விடலாம்.
1.ஆனால் அதே உணர்வின் வேகம் நம்மை இயக்காது நிறுத்த வேண்டும் என்றால்
2.மன பலம் தேவை… சாந்தம் அவசியம் தேவை.
அத்தகைய சாந்தத்திற்குண்டான வலிமை வேறு எதற்கும் இல்லை. சாந்தத்தின் வலிமை கொண்டு தான் எதையும் சாதிக்க முடியும். சாந்தத்தால் சாதித்தவர் காந்திஜி. அவருடைய வலிமை எவருக்கும் இல்லை.
எல்லோரும் சொல்வார்கள்…
1.வீர தீரத்துடன் ஒருவரை அழித்து விடலாம்… நான் அழித்து விட்டேன்… அழித்துவிடுவேன்… என்று
2.ஆனால் அது வலிமை அல்ல… கோழைத்தனம் தான்
3.ஒருவரை ஏசிவிடலாம்… இதுவும் கோழைத்தனம் தான்
4.ஒருவருக்குத் தீங்கு செய்யலாம்… இதுவும் கோழைத்தனம் தான்.
மன வலிமை வேண்டும் என்றால் அந்தச் சாந்தம் நமக்கு வேண்டும். வரும் தீமைகளை அறிந்து அந்தத் தீமைகளை அகற்றும் வலிமை பெறுவதே சாந்தம் என்பது.
எத்தகைய தீமையும் தன்னைச் சாராது காந்திஜி அந்தச் சாந்தத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டார். காந்திஜி தான் சாந்தத்தால் வலிமை பெற்ற அந்த அரும் பெரும் சக்திகளை நாம் அனைவரும் பெற்றோம் என்றால் நம் குடும்பத்திலும் சரி… தொழிலிலும் சரி… வரும் சிறு குறைகளையும் மாற்றி அமைக்க முடியும்.
அந்த வலிமை கொண்ட சாந்தத்தை வைத்து நம்மை இயக்கும் தீமையான உணர்வின் வலிமையை அடக்க முடியும். குடும்பப் பற்றும் வரும்.
காந்திஜி நாம் வாழும் இந்தக் காலகட்டத்தில் இதைச் செயல்படுத்தியவர். அவர் மக்களுக்காக அரசியல் நிலைகளை எடுத்தாலும் அரசு என்ற நிலைகளுக்குச் செல்லவில்லை.
அருள் ஞானிகள் உணர்வைத் தனக்குள் நுகர்ந்தார். அந்த அருள் உணர்வுகளைத் தான் அனைவரும் பெற வேண்டும் என்று அரசியலில் புகுத்தினார்… அதை அவர் செயல்படுத்தினார்.
ஆகவே இத்தகைய சாந்தமே மிகவும் வலிமை கொண்டது.
1.சாந்தத்தின் உணர்வு கொண்டே நமக்குள் வரும் தீமையை அடக்கி
2.ஞானத்தின் வழியில் செல்லும் பொழுது நல் ஒழுக்கங்கள் நமக்குள் ஓங்கி வளரும்.
3.தீமைகளை அடக்கி ஆட்சி புரியும் சாந்த நிலைக்கு ஒவ்வொருவரும் வந்தால் இனி வரும் சமுதாயமும் சீர்படும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
உயர்ந்த குணங்கள் கொண்டு வந்தாலும் “சொந்தம்…” என்ற நிலைகள் வரும் பொழுது “பந்தம்…” என்று ஆகி பாசத்தால் வந்தவுடன் குடும்பத்திலோ மற்ற நிலைகளிலோ சிக்கல்கள் வந்தால் செய்வதறியாது தவிப்போர் உண்டு.
“பாசத்தால்… இப்படி ஆகிவிட்டதே…” என்ற நிலைகள் கொண்டு கற்றுணர்ந்த உணர்வை அறிய முடியாது செயல்படுத்த முடியாது அதைத் தவற விடும் நிலை வந்துவிடுகின்றது.
“நேசத்தால்…” உயர்ந்த நிலைகள் கொண்டு மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று எண்ணினால் அந்த நேசம் உயர்வைக் காட்டும். அனைவரையும் நாம் நேசிக்க வேண்டும்.
“எதைக் கொண்டு…” நேசிக்க வேண்டும்…?
“அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அனைவரும் பெற வேண்டும்…” என்று அந்த நேசத்தைக் கூட்ட வேண்டும். குரு காட்டிய வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்.
ஏனென்றால்…
1.உங்களுக்கு யாம் “படிப்படியாக… சிறுகச் சிறுகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்…”
2.எல்லாம் “பூரணமாகச் சொல்ல வேண்டும்…” என்றால் காலம் இல்லை.
3.குருநாதர் எனக்குள் பதிவு செய்த பேருண்மைகள் “எண்ணிலடங்காதது…” இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.
அவ்வளவு பெரிய அண்டத்தின் (பிரம்மாண்டத்தின்) உணர்வுகள் பதிவு செய்ததை “எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்” என்று அவ்வப்பொழுது துணுக்குத் துணுக்காக எடுத்துக் கொடுக்கின்றோம்.
அந்த நினைவைக் கூட்டும் பொழுது உணர்வை ஒளியாக்கி உணர்வின் தன்மை எண்ணமாக்கி அதனின் நிலைகளைத்தான் செயல்படுத்துகின்றோம்.
1.ஒவ்வொரு நிலைகளிலும் ஒவ்வொரு ரூபத்திலும் குருநாதர் காட்டிய அருள் வழியை
2.அவர் பதிய வைத்த உணர்வின் ஏட்டை நினைவு கொள்ளும் பொழுது
3.எனக்குள் உணர்த்தி அந்த உணர்வின் தன்மையை அவரே தான் இங்கே வழி நடத்துகின்றார்.
ஏனென்றால் என்னுள் அவர் இருந்து அல்ல…!
“அவர் பதிவு செய்த நாடாவாக..,” (MEMORY DISC) நான் எண்ணும் பொழுது உணர்வுகள் இயக்கப்பட்டு அது பெறப்பட்டு “நீங்கள் பெற வேண்டும்… என்று அவர் செய்த உணர்வைத் தான்…” நான் செய்கின்றேன்.
அவருடைய உணர்வுகள் தான் என்னைச் செய்ய வைக்கின்றது.
ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நாம் அனைவரும் பெறுவோம். குரு காட்டிய அருள் வழிகளில் நாம் செல்வோம்.
இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகளின் உணர்வைப் பெறுவோம். மகிழ்ச்சி பெறும் நிலையை இந்த உடலுக்கு மகிழ்ச்சி பெறச் செய்வோம். நாம் பார்க்கும் அனைவரது உடல்களையும் மகிழச் செய்வோம்.
மகரிஷிகளின் அருள் உணர்வுடன் ஒன்றியே இந்த வாழ்க்கையை வாழ்வோம். என்றும் பேரானந்த நிலைகள் பெற்று பெரு வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளுடன் வாழும் நிலையை நாம் உருவாக்குவோம்.
1.இதைப் படித்துணர்ந்தோர் அனைவரும் அவர்கள் வீட்டில் மகிழ்ச்சி போங்கும் நிலைகளாக உருவாகும்
2.கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்திட குரு அருளும் எமது அருளும் உறுதுணையாக இருக்கும்.
3.மெய் உணர்வை நீங்கள் அனைவரும் பெற்று உங்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
மகரிஷிகளின் அருள் சக்தி பெறத் தியானிப்போம். உலகம் நலம் பெற தவமிருப்போம். உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற தவமிருப்போம்.
ஞானகுரு – ஈஸ்வரபட்டர்
ஒன்று பலவாகும் வித்தை வளர்க்கும் சக்தி எத்தொடர்பின் வளர்ப்பில் வளர்கின்றதப்பா…? தான் பெற்ற சக்தியைப் பலரும் பெறவல்ல வழித் தொடரை வளர்க்கும் முறை எப்படி…?
மனித எண்ணத்தின் பகுத்தறியும் உணர்வு ஞானம் வளரும் ஈர்ப்பலைக்கு ஞானிகளின் வழி வகுத்து குடும்ப வாழ்க்கை முறையில் பல நெறி முறைகளைக் காவியக் கதைகளில் உணர்த்திச் சென்றார்கள்.
அதன் வழித் தொடரில் பக்தியை ஊட்டி மனித ஆத்மாக்களின் எண்ணச் சிதறலை வழி வகுத்து
1.மனிதன் தன்னை மறந்து சில தேவையின் இச்சையில் தன் உணர்வையே இழக்கும் நிலைக்குச் செல்வதை
2.அன்றே காவியங்களில் கதையாக – தெய்வங்களான நிலைக்குக் கதை உருவங்கள் தந்து செயல்படுத்தினார்கள்.
உடல் உறுப்புகள் செயலிழந்தாலும் கை கால்கள் முடம் ஏற்பட்டாலும் மனிதன் பகுத்தறியும் ஆற்றலினால் செயற்கை உபகரணத்தால் தன் தேவையை அமைத்துக் கொள்கின்றான்.
தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயற்கையின் மாறுபாட்டுக்கு ஏற்ப வெயில் குளிர் மழை காற்று இவைகளைத் தாங்கக்கூடிய வீடுகளை அமைத்துக் கொள்கின்றான்.
அதை எல்லாம் செய்தாலும்… இந்தப் புவியில் வாழும் மனிதன்
1.தன் வளர்ச்சியால் ஆத்ம பலம் கொண்டு
2.பூமியின் ஈர்ப்பலையில் இருந்து விடுபடும் உணர்வின் செயலுக்கு
3.தன் ஆத்ம ஞானத்தை வளர்த்துக் கொண்டால் தான் மனிதனின் ஆத்ம பலம் கூடும்.
ஞானத்தால் சக்தி கொண்டு
1.தான் பெற்ற சக்தியைப் பிறிதொரு ஆத்மாவும் பெறவல்ல போதனையால்
2.எச்சக்தி கொண்டு நம் ஆத்ம ஞானம் வளர்ந்ததோ
3.அதற்கு வலுவான ஆத்ம வலு அலைச் சக்தியை நம் ஆத்மாவும் பெற்று வலுப் பெறகின்றது.
ஏனென்றால் காந்த மின் ஈர்ப்பு ஜீவ உயிர் இது…!
இந்த உயிர்த் துடிப்பின் ஆத்ம ஈர்ப்பின் வலு கூட்ட இவ்வுணர்வின் எண்ணத்தைப் பக்குவம் கொண்டு ஞானம் வளர்த்து ஞானத்தால் அறியும் உயர் ஞான வழி முறையை
1.ஞானம் வளர்க்கப் பிறிதொரு ஆத்ம சுழற்சி எண்ணத்தில் செலுத்தி
2.அந்த வலு சக்தியை நம் உயிராத்மா பெற வேண்டும் (இது முக்கியம்).
உயிர் தந்தாய்… உடல் தந்தாய்… குருதியினைப் பாலாக்கி வளர்த்திட்டாய்… என்று அன்னையை முதல் தெய்வமாக குருவாக வணங்குகின்றோம். ஒவ்வொரு மனிதனுக்கும் குரு யார்…?
தன் உயிராத்மா தான் முதல் குரு. தாயானவள் நம் ஈர்ப்பிற்கு ஜீவன் பெற வழி தந்து வளர்ச்சி தந்து முதல் குருவானாலும் இந்த ஆத்ம குரு வளர்ப்பினால் தானே அக்குருவை நாம் அடைய முடிகின்றது.
குருவின் உண்மை நிலை என்ன..? போதனையால் பெறுவது குரு அல்ல…!
1.குருவின் போதனையை குரு காட்டிய போதனையாக நம் ஆத்ம குரு ஏற்கும் பொழுது தான்
2.எக்குருவின் போதனையையும் இந்தக் குரு செயலாக்கி வழிப்படுத்தும் முறைக்கு வருகின்றது
நம் ஆத்ம குரு வளர்ந்தால் தான் குரு சிஷ்யத் தன்மை வளர்கின்றதப்பா…! இக்குரு முறை அனைத்து நடை முறைச் செயல்களுக்கும் ஒன்றியது தான்.
இவ்வாத்ம குருவை… ஞானம் வளர்க்கும் நற்குருவின் செயல் குருவாக… இவ்வாத்ம குரு வளர்வது தான் குருத் தன்மை பெறும் நிலை.
1.ஒவ்வொரு ஆத்மாவும் தன் உயிர்க்குருவை உயர் குருவாக
2.இந்தப் புவி ஈர்ப்புப் பிடி சுழற்சியிலிருந்து விடுபட்டு
3.இந்த உயிராத்மாவை ஞான குருவாக்குங்கள்.
பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று சொல்வதற்கல்ல மனித வாழ்க்கை – ஈஸ்வரபட்டர்
உணர்வால் உந்தப்படும் அச்சமுடன் கூடிய எண்ணத்தால் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுக்கும் சுவாச முறை கொண்டு
1,வாழ்க்கை நெறி வழியிலும்
2.குடும்பச் சுழற்சிச் செயலிலும்
3.பந்த பாசச் சுற்றத்தாரின் உணர்வுடன்
4.இந்த உணர்வின் எண்ணத்தையே வெளிப்படுத்தினால்
5.வைத்தியனால் பலரின் உணர்வு எண்ணமுடன் கலந்து
6.அவர்களின் வியாதிக்கு இவர் எண்ணத்தைச் செலுத்திச் செலுத்தி அதனுடன் கூடிய சுவாசத்தை எடுப்பதனால்
7.இந்த வைத்தியனுடைய உணர்வே அவ் ஈர்ப்பின் பிடியில் சிக்குண்டு
8.அவ்வலைத் தொடர் எண்ணம் கொண்ட செயலுடனேயே ஒன்றிவிடும்.
ஆகையினால் வைத்தியர்களின் பெரும்பாலோரின் வாழ்க்கை நிலை அமைதி கொண்ட இன்ப இல்லற குடும்ப வாழ்க்கை அமையாமல் அவர்களின் வாழ்க்கையே அமைதியற்ற நிலையில் தற்கொலைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ளக்கூடிய சுழற்சியுடன் ஊன்றிவிடுகின்றது.
அதே போன்று விஞ்ஞானத்தில் தன் ஞானத்தை வளரவிடுபவர்களும் எவ் அலை ஈர்ப்பில் தன் உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி தன் ஞானத்தை எவ் விஞ்ஞானச் செயல் கண்டு எவ் ஒரு மாற்றப்படைப்பைத் தன் அறிவின் ஞானம் கொண்டு உருவாக்க முற்படுகின்றார்களோ அதே ஈர்ப்பின் சுழற்சி வட்ட அலைத் தொடருடன் எண்ணத்தை ஒன்றிவிடுகின்றனர்.
தன் அறிவின் ஞானத்தால் அறியும் புதிய விஞ்ஞான அலையில் சிக்குண்டு அதனுடனே ஒன்றி தன் உணர்வின் எண்ணச் சுவாசத்தால் தன் ஆத்ம ஞானமும் அதுவாகவே உட்பட்டு விடுகின்றனர்.
அப்படிப்பட்ட விஞ்ஞானி தன் குடும்ப வாழ்க்கையையோ உற்றார் சுற்றார் மற்றோரின் எண்ண அலையை மனிதச் சுழற்சி நெறி முறை பழக்க வழக்கங்களையும் அறியும் தன்மை அற்று விடுகின்றனர்.
எந்த ஆராய்ச்சி ஈர்ப்பின் பிடி அலையில் சிக்குண்டனரோ பசி தாகம் மற்றெல்லா உணர்வுகளையும் மறந்து அவற்றின் பிடிக்குத் தன் ஞான அறிவின் ஆத்மாவையே செயலாக்குபவனுக்கு
1.வாழ்க்கையில் ஏற்படும் எவ் எதிர் நிலையான எதிர்ப்பையும் ஏற்க முடியாத தன்மையில்
2.விஞ்ஞானத்தால் தன் அறிவின் ஞானம் கொண்டு பல புதிய செயற்கைச் செயல்களைச் செய்விக்கும் அந்த விஞ்ஞானி
3.தன் உணர்வின் ஞானத்தில் அமைதி கொண்ட வாழ்க்கையை அமைக்க முடியாமல்
4.தற்கொலைப் பிடிப்பில் தன்னையே மாய்த்துக் கொள்கின்றான்.
ஆகவே உணர்வால் செலுத்தும் எண்ணம்…
1.எவ் ஈர்ப்பலையையும் தன் உடலுடன் எடுத்துக் கொள்ளும் செயலாக ஒன்றாமல்
2.தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் செயலாக இவ்வெண்ணம் செயல்பட வேண்டும்.
ஒன்றைக் கொண்டு பலவற்றை வளர்க்க வேண்டும் என்றால் அவ் ஒன்றான விதையை புழு பூச்சி அரிக்காமல்… சொத்தைப் பட்டு வெடிப்பு ஏற்படாமல்… விதை நன்றாக இருக்க வேண்டும்.
அப்படிப் பாதுகாக்கப்பட்ட அந்த விதையைத் தான் பக்குவப்படுத்திய நிலத்திலிட்டுப் பயிராக்கி அதன் மகசூலாகப் பல விதையை எடுக்க முடியும்.
அதைப் போன்று மனித வித்தின் வளர் வித்து ஆத்மாவை எப்படியப்பா வளர்ப்பது..?
நம் ஆத்ம ஜீவனை… இஜ்ஜீவனுடன் கூடிய உடலின் உணர்வால்
1.எண்ணத்தில் எடுக்கும் செயல் கொண்டு
2.நற்சத்தான வித்தாக்கி அந்த வித்தைக் கொண்டு
3.பல வித்துக்களை எடுக்க வேண்டும்.
பிறந்தோம்… வளர்ந்தோம்… மணந்தோம்.. பிள்ளைகளைப் பெற்றோம்… என்ற வழித் தொடரில் வளர்ப்பதல்ல ஆத்ம வித்தின் சக்தியை…!
இருதயத்தைச் சீராக இயங்கச் செய்யவும்… மன வலிமை பெறச் செய்யவும் நாம் தியானிக்க வேண்டிய முறை
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயம் முழுவதும் படர்ந்து இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவை இருதயத்திலே செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை இருதயத்திலே செலுத்தி நல்ல அணுக்களை அங்கே உருவாக்கி
1.உடல் முழுவதற்கும் நல்ல இயக்கச் சக்தியாக மாற்றவும்
2.நல்ல இரத்தங்களை உறுப்புகள் முழுவதற்கும் பாய்ச்சக் கூடிய வலிமை பெறச் செயுங்கள்.
3.சிறு மூளை முதற் கொண்டு மேலே நல்ல இரத்தம் சென்று நல்ல உணர்வாக மாற்ற
4.அத்தகைய திறன் கொண்ட இதயத்தை உங்களிலே உருவாக்குங்கள்.
உங்கள் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
மீண்டும் நினைவு படுத்துகிறேன். அருள் உணர்வின் இயக்கமாக அந்த அணுக்களுக்கு இதை ஊட்டுகின்றேன் (ஞானகுரு).
அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தால் அதைப் பெறச் செய்யுங்கள்.
1.உங்களால்தான் முடியும்… நீங்கள் எண்ணினால் முடியும்.
2.அந்த உணர்வின் தன்மையை நீங்கள் ஈர்க்கக்கூடிய சக்திக்கு
3.எமது அருளும் குரு அருளும் உங்களுக்குள் கலந்து உறுதுணையாக இருக்கும்.
இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நேரடியாக இருதயத்திற்குக் கிடைக்கக்கூடிய திறன் பெறுகின்றது. அதைப் பெற்று உங்கள் இதயத்தைச் சீராக்கிக் கொள்ளுங்கள்.
இருதயத்தில் வலி இருந்தால்… வாய்வினாலேயோ மற்ற நிலைகளினாலோ… இருதயம் பலவீனமாக இருந்து ஹார்ட் அட்டாக் வரக்கூடிய அத்தகைய அணுக்கள் இருந்தால் அதை எல்லாம் மாற்றித் தெளிவான இருதயமாக நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்.
துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைப் பெருக்கி உடலில் எல்லா அணுக்களிலும் ஒளி என்ற உணர்வைப் பாய்ச்சி உடல் முழுமைக்கும் நல்ல உணர்வுகளை உருவாக்கும் திறன் கொண்ட இதயமாக உங்களுக்குள் உருவாக்குங்கள்.
1.அருள் உணர்வைச் சேர்த்து அசுர குணங்களை நீக்கச் செய்யும் சக்தியாக
2.அறியாது சேர்ந்த அசுர குணங்களை அகற்றிடும் சக்தியாக
2.நல் உணர்வை வளர்க்கும் சந்தர்ப்பமாக உருவாக்குங்கள்.
நரகாசுரனைக் கொன்ற நாள் என்று ஞானிகள் சொன்னது போல் கண்ணின் நினைவு கொண்டு அந்த அருள் உணர்வுகளை உடல் முழுவதும் பாய்ச்சி
1.அசுர குணங்களை… அசுர அணுக்களை
2.நமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.
நல்ல உணர்வின் இயக்கம் கொண்ட உடல் உறுப்புகளாக நமக்குள் உருவாக்கச் செய்யும் அந்தச் சக்தி பெறச் செய்வதே இந்தத் தியானத்தின் நோக்கம்.
உதாரணமாக இருதயத்தில் பலவீனம் இருந்தால்
1.அது பம்ப் செய்யும் போது கிடைக்கவில்லை என்றால் துடிப்பு வேகமாக இருக்கும்.
2.சில உணர்வின் மோதல் அழுத்தமானல் இரத்தம் போகாது தடுக்கும் போது அந்த நேரத்தில் துடிப்பு அதிகமாகும்.
3.நரம்புகளில் அந்த இயக்கச் சக்தி அது போகும் பாதையில் பலவீனமானல் இழுக்கும் சக்தி குறையும்.
அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் வலியும் வேதனையும் தோன்றும்.
அதைப் போன்ற நிலையில் இருந்து தப்ப உங்கள் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.
1.சீரான நிலைகள் கொண்ட இருதயமாக நீங்கள் இயக்கச் செய்யுங்கள்
2.உங்கள் கண்ணின் நினைவினை இருதயத்தில் செலுத்தி அந்த உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்யுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
பையனோ தாயோ அல்லது தந்தையோ குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பினும் குடும்பத்தில் ஏவரேனும் ஒருவர் பிறர் தவறு செய்யும் உணர்வினைத் தனக்குள் பதிவு செய்து விட்டால் கோப உணர்வின் கார வித்து விளைந்து விடுகின்றது.
பையனாக இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.
கோபமாகப் பேசிய உணர்வுகள் இவனுக்குள் அதிகமாகக் கலந்து விட்டால் அவன் போகும் பொழுதெல்லாம் அடிக்கடி யாரைத் தவறு செய்தானோ அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் கோபத்தின் உணர்வுகள் தூண்டும்.
ஏனென்றால் நாம் பொது இடங்களில் பழகும் பொழுது அவனின் தவறை எண்ணும் பொழுதெல்லாம் அவன் செய்த தவறின் தன்மையே நமக்குள் விளைந்து கொண்டே இருக்கும்.
அப்பொழுது அந்தக் கார உணர்ச்சிகளைத் தூண்டும்.
அந்த உணர்ச்சியுடன் பையன் வீட்டிற்குள் வந்தவுடனே ஒரு வேலையின் காரணமாக அவன் அப்பா கூப்பிட்டு “நீ சிறிது அதைப் பார்த்துக்கொள்..,” என்று சொல்வார்.
பையன் உடனே “சரீ….!” என்று கார உணர்வுடன் சொல்வான்.
பையன் என்னடா… நம்மிடம் மரியாதை இல்லாமல் பேசுகின்றான்…? என்று அப்பா எண்னுவார். இந்தச் சந்தர்ப்பம் பையன் தவறு செய்யவில்லை.
ஒரு குழம்பு வைக்கும் பொழுது காரத்தைப் போட்டபின் அந்தக் காரத்தின் உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றதோ இதைப் போன்று தான் அங்கே இயக்கமாகின்றது.
பையன் நல்லவனாக இருந்தான். ஆனால், அவன் தொழில் செய்யும் இடத்தில் ஒருவன் தவறு செய்கின்றான்.
1.தவறு செய்பவனைப் பார்த்தபின் அவன் இப்படித் தவறு செய்து கொண்டிருக்கின்றான் என்று வேதனைப்படுகின்றான்
2.வேதனை என்றால் நஞ்சு… நஞ்சு கலந்து விட்டால் சிந்திக்கும் தன்மையை இழந்து விடுகின்றோம்.
3.பின் அவன் செய்யும் தவறைப் பார்க்கும் பொழுது இந்த விஷத்தின் தன்மை உச்சகட்டம் அடைகின்றது… கோபமாக மாறுகின்றது.
அந்த உணர்வின் வேகம் அந்தக் கோபத்தின் தணல் அடையப்படும் பொழுது அந்த உணர்வின் எண்ணங்கள் தன் ஆன்மாவில் பெருக்கி விடுகின்றது.
இவ்வாறு தொழில் செய்யும் இடத்தில் “அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம்..,” அந்த எண்ணங்கள் இயக்கும். இவன் “அயோக்கியப் பயல்…, எப்பொழுது பார்த்தாலும் தவறு செய்து கொண்டிருப்பான்..,” என்ற நிலைகள் வரும்.
ஆனால்… அவன் (முதலில்) கோபித்தவனோ இவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் “பெரிய.., யோக்கியன் மாதிரிப் பேசுகின்றான் பார்..,” அடுத்து ஜாடையில் பேச ஆரம்பிப்பான்.
இவனை எண்ணும் பொழுது இரண்டு உணர்வுகளும் மாறி மாறி மாறி இந்த உணர்விற்கு அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வாக அது பையன் உடலுக்குள் வளர்ச்சி அடைந்துவிடுகின்றது.
அதனுடைய வளர்ச்சிகள் அதிகமாகும் பொழுது ஆன்மாவில் அது பெருகிவிடுகின்றது. அதன் வளர்ச்சியின் தன்மை அவனிடமிருந்து வெளிப்படும் பொழுது சூரியன் காந்த சக்தியால் கவரப்பட்டு பரமாத்மாவில் பெருகுகின்றது.
ஆனால், அவன் எண்ணிய உணர்வு அவனுக்குள் ஒரு வித்தாகின்றது.
இப்படி இவர்கள் உரையாடும் உணர்வின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது கண்கள் அந்தக் காரமான வேதனையான உணர்வுகளைப் பரமாத்மாவிலிருந்து கவர்ந்து தன் ஆன்மாவாக மாற்றுகின்றது.
பின் உயிரின் நிலைகள் “இழுக்கும் பொழுது…” இது உடலுக்குள் உள்ள ஜீவான்மாக்களுக்கு உணவாகக் கொடுக்கின்றது.
1.ஏனென்றால் விஷ்ணு வரம் கொடுக்கின்றான்
2.தனக்குள் வளர்க்கப்பட்ட தன் பிள்ளைக்கு “பிரம்மா” அவன் சிருஷ்டிக்கும் உணர்வுகளுக்கு
3.விஷ்ணுவே அவனுக்கு ஆகாரம் கொடுத்து அதனின் உணர்வின் தன்மையை வளர்வதற்குத் தன் பிள்ளைக்கு உபகாரம் செய்கின்றான்.
அவனால் உருவான உணர்வின் தன்மை உடலான சிவனுக்குள் அந்த எரிச்சலூட்டும் உணர்வின் செயலாகவே இது மாறுகின்றது. ஆக, இந்த உயிரின் இயக்கம் விஷ்ணு.
“குரு பிரம்மா…. குரு விஷ்ணு… குரு சாட்சாத் மஹேஸ்வரா….”
ஆகவே எல்லாவற்றையும் நமக்குள் உருவாக்குவது “உயிர்…” என்று குரு பிரம்மா குரு விஷ்ணு குரு… “சாட்சாத் இந்த உயிரின் தன்மையே குருவாகின்றது…” இது சாட்சாத் மஹேஸ்வரா.
சர்வத்தையும் எனக்குள் உருவாக்கும் தன்மை பெற்றது (உயிர்) என்று மிகவும் தெளிவாகச் சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு சாட்சாத் மஹேஸ்வரா என்று சொல்வார்கள். ஆனால்
1.எதைக் குறிக்கின்றனர்..,?
2.எதைச் சொல்கின்றனர்..,?
3.எதற்காகச் சொல்கின்றனர்..,? என்ற நிலையை நாம் உணர்வதில்லை.
சாதாரண வழக்கில் இன்று சாஸ்திர ரீதியாகப் பலர் இதைப் படித்திருந்தாலும் இதைப் போல குரு பிரம்மா குரு விஷ்ணு குரு சாட்சாத் மஹேஸ்வரா என்று யாரை எண்ணுகிறார்கள்..,?
“உயிரை” எண்ணுவதில்லை.
கடவுள் என்ற எண்ணத்தில் புறத்தால் காட்டிய அந்த உணர்வை விஷ்ணு என்று சிலை வைத்ததை எண்ணுகின்றார்கள். குரு பிரம்மா என்று நான்கு தலை வைத்த சிலையைப் பார்த்து அது தான் பிரம்மா என்று எண்ணுகின்றார்கள்.
“எண்ணும் பொழுது” – நான்கு நமக்குள் அந்த உணர்வின் தன்மை சக்தியாக விளைகின்றது என்பதை மறந்துவிடுகின்றார்கள்.
இப்பொழுது ஒரு கோபமான உணர்வை எண்ணும் பொழுது குரு பிரம்மமாகின்றது. குரு விஷ்ணு தனக்குள் அது குரு பிரம்மமாக மாற்றுகின்றது. கார உணர்ச்சி நமக்குள் உருவாகின்றது.
தனக்குள் உள் செல்லும் பொழுது குரு மஹேஸ்வரா. தனக்குள் அதை உருவாக்கும் செயலாக நமக்குள் அந்த உருவைப் பெருக்கும் தன்மை வருகின்றது.
ஆனால்
1.நாம் எதை எண்ண வேண்டும்…?
2.குரு பிரம்மமாக எதை உருவாக்க வேண்டும்…?
3.குரு விஷ்ணுவாக அவனிடம் எதைக் கேட்க வேண்டும்…?
4.அந்த விஷ்ணுவிடம் வரம் கேட்பது எதுவாக இருக்க வேண்டும்…?
இதை உணர்த்துவதற்குப் பல நிலைகள் காட்டினாலும் அதை நாம் இது வரையிலும் “மூலத்தை… அறியாது” ஆக துவைதம் என்று உருவத்தைக் காட்டிய பின் சிலையை வடித்து வைத்து அந்தச் “சிலையைத்தான் நாம் கடவுளாக” மதிக்கின்றோம்.
அதற்கு நைவேத்தியம், சாங்கியம் செய்து அவனுக்குப் படைத்து விட்டால் அவன் எல்லாமே பார்த்துக் கொள்வான் என்று சாங்கிய சாஸ்திரத்தில் நாம் நாட்டம் செலுத்திக் கொண்டுள்ளோம்.
முதலில் சொன்ன நிலையில் தொழில் செய்யும் இடங்களில் ஏற்படும் தீமைகள் வீட்டுக்குள்ளும் வந்துவிடுகின்றது.
தாய் தன் பையனிடம் சொல்லி “நீ இதைச் செய்யப்பா…” என்று ஒரு வேலையைச் சொன்னால் அவன் என்ன சொல்வான்…?
“நீ என்ன…? சும்மா எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கின்றாய்…? என்று தாயிடம் வேகமாக எதிர்க்க ஆரம்பித்துவிடுவான்.
தாய் சாந்தமாகச் சொல்லும் பொழுது இந்தக் காரம் சாந்தத்திற்கு எதிர்ப்பு நிலை. அது ஏற்றுக் கொள்ளாது.
உடனே தாய்.., “ஏண்டாஆஆ… இப்படிப் பேசுகின்றாய்..,? சாந்த உணர்வுடன் சொல்லும்.
“ஏண்டா இப்படிப் பேசுகின்றாய்” என்ற சொல் வரும் பொழுது நீ எப்பொழுது பார்த்தாலும் “நச்சரித்துக் கொண்டே இருக்கின்றாய்…” என்று தாயை வெறுக்க ஆரம்பிப்பான் பையன்.
குரு பிரம்மா. அதாவது “நாம் எண்ணியதை” அது மீண்டும் அதிகமாக “குரு விஷ்ணு – குரு பிரம்மமாக மாற்றி விடுகின்றது”.
அதனின் வளர்ச்சியின் தன்மை பெருக ஆரம்பிக்கும்.
குரு மகா… அந்த உணர்வின் தன்மை “சாட்சாத் மஹேஸ்வரா”. அதை எல்லாம் (சர்வத்தையும்) மஹேஸ்வரனாக நமக்குள் இருந்து நாம் எண்ணியது ஒவ்வொன்றையும் அது உருவாக்குகின்றது.
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு சாட்சாத் மஹேஸ்வரா, “வெறும் சொல்லால் அல்ல”,
எதை விஷ்ணுவிடம் வரம் கேட்க வேண்டும்…? எதைப் பிரம்மமாக்க வேண்டும்…? எதை சாட்சாத் மஹேஸ்வரனாக நமக்குள் உருவாக்கும் சக்தியாக மாற்ற வேண்டும்…? என்ற நிலையை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே மிகவும் நலம்.
தாய் சொன்னாலும் இதே மாதிரி அந்தக் கார உணர்வுகள் சொன்னவுடன் இந்த நாதம் என்ன செய்யும்…?
நம் வாயினுள் ஒரு காரமான பொருளைப் போட்டவுடன் என்ன சொல்கின்றோம்…?
“உஷ்ஷ்.. ஆ..ஆ…” என்று அலறுவது போல இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டவுடன் உணர்வுகள் உராய்ந்து “சாம…”
அதனின் உணர்வின் நாத இயக்கமாக இயக்கும். நாதமாக இயக்கப்படும் பொழுது “ஏண்டா… இப்படிச் செய்கின்றாய்.?” என்று சொல்லும் அந்தத் தாய்.
இதை அந்தப் பையனின் தந்தை பார்த்தார் என்றால் இந்த உணர்வின் தன்மை அவருக்குள் போய் “ஏண்டா… நீ இந்த மாதிரியெல்லாம் அம்மாவிடம் பேசுகின்றாய்…?” “அம்மா என்னடா உன்னைத் தவறாகச் சொன்னது?” என்பார்.
நீங்கள் எப்பொழுது பார்த்தாலும் என்னை “எதிரியாகத்தான்…” கருதுகின்றீர்கள் என்பான் பையன்.
அப்பொழுது எதிரியாகப் பதிவு செய்து கொள்கின்றீர்கள். அவன் எதைச் சொல்ல வந்தாலும் நல்லதை ஏற்றுக் கொள்ளாது.
இங்கே எதிரியின் தன்மை பகைமையாகும் பொழுது தாயும் தந்தையும் கடவுள் என்ற நிலைகளை மாற்றிவிடுகின்றது. “தன்னைக் காக்கும் தெய்வம்…” என்ற நிலைகளை இங்கே இழக்கச் செய்துவிடுகின்றது.
1.ஒரு சுவையான பதார்த்தத்தில் கார உணர்ச்சியின் தன்மை அதிமாகி விட்டால் அதைத் தூக்கியெறியும் நிலையே வரும்.
2.அதைப் போன்று தாய் என்ற நிலையோ தந்தை என்ற நிலையோ இங்கே செயலற்றதாக மாறிவிடுகின்றது.
ஏனென்றல் பொது வாழ்க்கையில் பிறர் செய்யும் தீமையான உணர்வின் தன்மை தனக்குள் வளர்க்கப்படும் பொழுது குரு விஷ்ணு குரு பிரம்மமாக மாறி குரு சாட்சாத் மஹேஸ்வரனாக அதனின் வளர்ச்சியின் தன்மை அடைகின்றது.
நாம் எண்ணிய உணர்வை கண் நமக்கு எப்படி வழி காட்டுகின்றது…?
தாய் மீது வெறுப்பாகி விட்டால் கண் அதைப் பார்த்தவுடன் அந்தத் தாய் சொன்ன நினைவின் அலைகளை இங்கே காற்றில் இருப்பதைக் கவர்கின்றது.
பார்ததபின் அந்த வெறுப்பின் உணர்வைச் சுவாசித்துத் தாய் நல்லதைச் சொன்னாலும் கேட்காதபடி “தலையைத் திருப்பிக் கொண்டு” போகும்.
“இதைச் செய்டா…” என்று தாய் சொல்லும்.
“ஊ…ஹ்ம்…” என்று தான் சொல்வான். அப்புறம் நான்தான் “சரி..,ரீ..,” என்று சொல்லிவிட்டேனே…! அப்புறம் ஏன் இன்னும் திரும்பச் சொல்கின்றாய்…? என்று தாயிடம் எதிர்த்தே பேசுவான் பையன்.
1.அவன் தவறு செய்யவில்லை
2.தனக்குள் வளரும் அந்த வித்தின் தன்மை “அது” அவனுக்குள் வளரத் தொடங்கிவிடுகின்றது.
அதே சமயம் தந்தையும் “தாய் என்னப்பா சொன்னது…” என்று பையனிடம் கேட்டால் பையன் என்னை எதிரியாகவே நீங்கள் கருதுகின்றீர்கள் என்று சொல்லித் தந்தையையும் வெறுக்கத் தொடங்குவான்.
ஏனென்றால் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். நம் உணர்வின் செயலாக்கங்கள் “உயிர் நம்மை எப்படியெல்லாம் இயக்குகின்றது…” என்பதைத் தெளிவாக நீங்கள் அறிதல் வேண்டும் என்பதற்கே சொல்கின்றேன்.
இந்தத் தத்துவத்தை நாம் புரிந்து கொண்டால் மகரிஷிகள் காட்டிய உண்மைகளை நாம் எளிதில் காணலாம்.
துன்புறுத்தும் உணர்வை விடுத்துவிட்டுக் காக்கும் உணர்வை வளர்த்தவர்களே மகான்கள்…!
காந்திஜியின் பிறந்த நாளை நாம் கொண்டாடுகின்றோம். மற்றவர்கள் அடிமைத்தனத்திலிருந்தும் பிறிதொரு தீமையின் விளைவுகளிலிருந்து நம்மை எல்லாம் மீட்டிய மகான் இந்த நாட்டிலே ஜெனித்த நாள் தான் அது.
ஞானிகள் கண்ட உணர்வினைத் தன்னிலே அவர் வளர்த்துக் கொண்டவர். சாந்தம் என்ற நிலைகள் கொண்டு பகைமையற்ற உணர்வுகளை வளர்த்து… பகைமைகளைத் தவிர்த்துத் தீமையில் இருந்து விடுபட்டு அதன் வழி கொண்டே சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தவர் மகாத்மா காந்திஜி என்பதனை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
அவர் வாழ்ந்த காலங்களில்
1.தன் உடலைப் பற்றி எண்ணாது
2.தனக்குள் வரும் சுகத்தை எண்ணாது
3.நமது நாடு… நமது மக்கள்… நமது என்றே… தன்னுடன் அரவணைத்து வாழும் நிலையாக
4.நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளும் அந்த அருள் சக்தியை
5.வெறுமனே சொல்லால் அல்ல… செயலாலேயே அதைச் செயலாக்கிக் காட்டினார்.
உடலை விட்டு உயிர் பிரியும் போது கூட…
1.தன்னை ஒருவன் கொலை செய்தான் என்று எண்ணவில்லை
2.அந்த நேரத்திலும் அவனை எதிரியாகக் கருதவில்லை
3.தீயவன் என்றும் அவனைச் சொல்லவில்லை
4.அவனை அறியாது இயக்கும் தீய விளைவுகளிலிருந்து அவன் காக்கப்பட வேண்டும்
5.அவன் காப்பாற்றப்பட வேண்டும் என்று தான் ஜீவன் பிரியும் பொழுதும்
6.அத்தகைய நினைவு கொண்டுதான் தன் செயலாக்கங்களை வெளிப்படுத்தினார்.
அவர் எண்ணி வெளிப்படுத்திய அந்த உயர்ந்த உணர்வலைகள் அனைத்தும் நமக்கு முன் பரவிக் கொண்டுள்ளது. அதை எல்லாம் நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
மனிதனுக்குள் செயல்படும் உணர்வுகள் அனைத்தும் பண்புடன் இயக்கப்பட வேண்டும். சகோதர உணர்வுகள் உருப்பெற வேண்டும். ஒருவருக்கொருவர் ஒன்றி வாழ வேண்டும். மனிதர்கள் என்ற பண்பு கொண்டு இயங்க வேண்டும் என்று தான் மகான்கள் அனைவரும் கூறியுள்ளார்கள்.
அந்த மகான்கள் காட்டிய வழிப்படி நாம் நடந்தால் நாமும் உயர்ந்த நிலையை அடையலாம். உடலுக்குப் பின் பேரானந்த நிலையான அழியா ஒளிச் சரீரமும் பெறலாம்.
பலம் பொருந்தியவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் கூட மரண பயம் உள்ளது – ஈஸ்வரபட்டர்
காற்றலையில் புவி ஈர்ப்பின் பிடியில் வாழும் நாம்… நம் உணர்வில் உணர்வில் உந்தப்படும் எண்ணத்தில் உணர்வின் செயலைக் கொண்டு மட்டும் உடல் சேர்க்கை அமிலக்கூட்டு வளரவில்லை.
எறும்பு கொசு தேள் பாம்பு மூட்டை இதைப் போன்ற உயிரினங்கள் சந்தர்ப்பத்தால் நம்மை அவை கடிக்கும் பொழுது அவை சேமித்த விஷ நிலை கொண்ட அமில உணர்வானது அதன் கடி உணர்வை நாம் அறியும் பொழுது அதன் ஈர்ப்பு குண அமிலம் முழுவதையும் நம் உடல் பிம்ப உணர்வலையின் அமிலத்துடன் எடுத்துக் கொள்கின்றோம்.
வாழ்க்கையில் சில ஜீவராசிகளான இந்தப் பூச்சிகள் நம்மைக் கடிக்காமல் இருக்குமா…?
இவற்றின் ஈர்ப்பலையின் உணர்வின் அச்சம் நம் எண்ணமுடன் மோதும் பொழுது
1.அதனுடைய விஷம் நம் உடலில் ஏறிக் கடிக்கும் பொழுதும்… தாக்கும் பொழுதும்… நசுக்கும் பொழுதும்…
2.அதற்கு ஏற்படும் மரண பயம் நம் உடலிலும் ஏறிவிடுகின்றது.
எவ்வமில குண ஜெந்துவின் கடிபட்டதோ அதனுடைய உணர்வையும் நாம் பெற்று அவற்றின் விஷ உணர்வின் தீய அமிலங்களும் நம் உடலுக்குள் சேர்ந்து விடுகின்றது.
நம் உடல் அமிலத்துடன் அப்படிச் சேரும் பொழுது அதனுடைய வழித் தொடர் கொண்ட எண்ண குணத்தை இந்த உடலைக் கடிக்கும் சில ஜீவ ஜெந்துக்களின் நிலையை நாம் அடைகின்றோம்.
இதிலிருந்து தப்பும் முறை எப்படி..?
1.ஒவ்வொரு மனிதனுக்கும் எதிரி யார்…?
2.ஞானத்தை வளர்க்க விடாமல் இருப்பதும் எல்லா நிலைகளுக்கும் தடை ஏற்படுத்தும் எதிரி யார்,,,?
3.இந்த மனிதனுக்கு நற்குண வழிக்குச் செல்ல வழி காட்டும் நண்பன் யார்…?
4.அன்பான எதிர் அலையின் உணர்வை அடையவல்ல சக்தி நண்பன் யார்…?
எதிரியான நிலையை ஏற்படுத்துவதும் இந்த உடல் பிம்பக்கூடுதான்… நற்சக்தியின் ஞான அலையைப் பெறவல்ல தன்மையைச் செயல்படுத்தவல்ல நண்பனும் இந்த உடல் பிம்பக் கூடுதான்…!
ஆகவே தீய குணத்தின் எண்ணத்தை மேற்கொள்ளும் பொழுது தீய சக்தியின் நிலையை ஏற்படுத்துவதும் இந்த உடல் பிம்ப வீட்டினுள் வாழும் உணர்வின் எண்ணச் செயல் தான்.
நல்ல வழிக்கு வழி நடத்திச் செல்வதுவும் இந்த உணர்வின் எண்ணச் சக்தி கொண்ட நல் அலையின் சக்தியினால் தான்.
உணர்வில் எடுக்கும் எண்ணத்தின் செயல் எத்தன்மை கொண்டுள்ளதோ அத்தன்மை கொண்ட ஒவ்வொரு மனிதனையும் அந்தந்த நிலைக்கு உட்படுத்துவது இந்த உடல் என்ற பிம்பக்கூடு தான்.
விஞ்ஞானிகளும் பல மருத்துவர்களும் தற்கொலையின் செயலில் ஈடுபடுவதும் அவற்றின் வளர்ப்புத் தன்மையும் எதனால் ஏற்படுகின்றது…?
மருத்துவர்கள் சந்திக்கும் ஆத்மாக்களின் உணர்வில்…
1.பெரும்பகுதி எண்ணத்தின் வியாதியான “மரண பயம்…” கலந்தே வருவதால்
2.அத்தகையவர்களின் எண்ணத் தொடர்புடனே இவர்களின் வாழ் நாள் செல்ல நேர்கின்றது.
3.இப்படி அந்த அச்ச உணர்வின் பிடிக்கு இவர்களின் உணர்வலையும் செல்வதினால்
4.இதே சுழற்சி வட்டத்தால் இவர்கள் உணர்வுடன் இந்த மரண பயம் உந்தப்பட்டுவிடுகிறது.
அதனால் இவர்களின் உணர்வின் எண்ணமே இந்த மரண பய ஈர்ப்புப் பிடியில் சிக்குண்ட நிலையில் பலரின் செயல் இதே உணர்வுடன் செயல் கொள்கிறது…. தன்னால் அதைத் தாங்க முடியாது போகின்றது.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
கரும்புச் சாற்றுக்குள் கெமிக்கலைப் போட்ட பின் அது கருப்பாக இருப்பது வெளுப்பாகின்றது. அழுக்குகள் அனைத்தும் பிரிந்து விடுகின்றது. சர்க்கரை வெண்மையாகின்றது.
கரும்புச் சாற்றில் உள்ள அழுக்குகளை அகற்றினாலும் அந்தச் சர்க்கரையில் கலந்துள்ள கெமிக்கலின் வீரியத் தன்மையை இவர்கள் பிரித்தெடுப்பதில்லை.
ஆகையினால் இந்தச் சர்க்கரையை நாம் சாப்பிடுவோம் என்றால் அதிலே கலந்த இந்த நஞ்சு நாம் உணவாக உட்கொள்வோர் அனைவருக்கும் குடல் புண் வருவதும் குடலில் ஜீரணிக்கும் சக்தியும் இழந்துவிடுகின்றது.
சர்க்கரை வெண்மையாக அழகாக இருக்கின்றது என்று நாம் பார்ப்போம். இது விலை பேசுவதற்கு உதவுகின்றது. ஆனால் அந்த சர்க்கரையில் கலந்த கெமிக்கலால் நம் உடலில் நோயாகின்றது.
1.அது அதிகமாகிவிட்டால் நஞ்சுகள் பரவி
2.நம் சிறுநீரகத்தில் இது நஞ்சாக (POISON) மாற்றி நஞ்சினை நீக்கிடும் நிலையைச் செயலற்றதாக ஆக்கிவிடுகின்றது (சிறுநீரகம் பழுதாகின்றது)
3.அதனால் உப்புச் சத்தோ அல்லது சர்க்கரைச் சத்தோ இது வந்துவிடுகின்றது.
இதனின் உணர்வுகள் வெப்பத்தின் தன்மை அதிகரித்துவிட்டால் நம் நுரையீரலுக்குள் ஊடுருவி அதில் உந்திச் செலுத்தும் (PUMPING) நிலைகளும்
1.இழுத்து விரியும் தன்மை குறைந்து
2.அதனால் கல்லீரல் வீக்கமாகிவிடுகின்றது.
தொடர்ந்து இவ்வாறு ஒவ்வொரு உறுப்பும் பாதிக்கப்படுவதால் வைத்தியம் வைத்தியம் என்று மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கின்றது.
நாம் யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் இத்தகைய நிலை ஏற்படுகின்றது.
இதைப் போன்ற நிலைகளை மீட்டுவதற்காகத்தான் குருநாதர் எமக்கு உணர்த்திய மெய் உணர்வின் ஆற்றல்களை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
இன்றைய உலகில் தீமைகள் எவ்வாறு சாடுகின்றது என்பதை குருநாதர் எம்மை அறியச் செய்தார்.
அவர் உணர்த்தியதைக் கூர்ந்து கவனித்தேன். அதை நீக்கும் ஆற்றலையும் எம்மைப் பெறச் செய்தார்.
குருநாதர் எமக்குள் பதிவு செய்ததை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது அவர் காட்டிய விண்ணின் ஆற்றலை என்னால் பெற முடிந்தது. அவர் சொன்ன வழியில் எனக்குள் வந்த தீமைகளை நீக்க முடிந்தது.
தீமைகளை நீக்கும் எண்ணங்களை வளர்த்து உங்களுக்குள் அருள் ஞான வித்தாகப் பதிவு செய்யும் போது நீங்களும் இதை எண்ணினால் உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்க இது உதவுகின்றது.
நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் நல்லது செய்யும் உங்கள் உணர்வுக்குள் அறியாது புகும் இத்தகைய தீமைகள் அகற்றப்பட வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.
உங்களை அறியாது வந்த தீமைகளில் சிக்குண்டு மீளாத நிலைகள் கொண்டு விஷத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்கின்றேன்.
மகரிஷிகள் தமக்குள் தீமைகளை நீக்கிய நிலைகள் கொண்டு அவர்கள் ஒளியின் சுடராகப் பெற்ற ஆற்றல்மிக்க உணர்வுகள் இங்கே படர்ந்துள்ளது.
அந்த மகரிஷிகளை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது அவர்கள் உடலிலே விளைந்த உணர்வுகளை நீங்கள் கவர முடியும். எத்தகைய நோயாக இருந்தாலும் குறைக்க முடியும்.
புற அழகு முக்கியமில்லை… அகத்தின் அழகு தான் மிகவும் முக்கியமானது – ஈஸ்வரபட்டர்
ஒலி கொண்டு… ஒளி கொண்டு… உருவான உணர்வு சக்தியில் இவ்வொலியின் உணர்வில் தான் உழல்கின்றது… உலகச் சுழற்சியும்… ஜீவ சக்தியும்… உயிர் அணுத் துடிப்புகள் யாவுமே…!
இவ்ஒலி ஈர்ப்பின் தாக்குதலுக்குகந்த உணர்வின் சுழற்சி ஈர்ப்புப் பிடியில் பிடிபட்டுள்ள வளர்ச்சி தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே.
1.இனிமையான இசைக்கு இவ்வுணர்வின் எண்ண ஈர்ப்பு செல்லும் பொழுது
2.இனிமையின் நாத ஒலி ஜீவ சக்தி ஒவ்வொன்றின் அலையிலும் மோதுண்டு
3.அதன் தொடர்பு கொண்ட வளர்ப்பு சக்தி ஒவ்வொன்றிலும் கூடுகின்றது.
அதிர்வு… இடி… மின்னல்… காட்டாற்று வெள்ளப் பெருக்கின் வேக ஒலி… இந்நிலை மோதும் பொழுது இவ்வுடலே அவ்வுடலின் “அச்ச உணர்வுடன்” செல்வது போன்ற உணர்வின் பயம் ஏற்படுகின்றது.
அருவியில் அமைதியாகச் சலசலப்புடன் அந்நீரின் ஒலி மோதலைக் கேட்கும் பொழுது அவ் இனிமையுடன் கூடி நம் உணர்வின் எண்ணமும் மயங்குகிறது.
மாலை நேரப் பட்சிகளின் அமைதியான ஒலி நம் உணர்வின் இனிமை உணர்வைக் கூட்டுகின்றது.
ஒலியின் ஈர்ப்பு எந்நிலை கொண்டு கால நிலையில் உணர்வின் மோதலில் மோதுகின்றதோ அதற்குகந்த வளர்ச்சி மனித உடலின் உணர்விற்கும் ஜீவராசிகள் தாவரங்கள் கனி வளங்கள் ஒவ்வொன்றின் வளர்ச்சிக்குமே இவ் ஒலியுடன் ஒலி கூடும் ஒலித் தன்மை கொண்டு வளர்ப்பு நிலை கூடுகின்றது.
இவ்வொலியின் செயற்கை அதிர்வில் சுற்றுப் புறத் தாவர இன வளர்ச்சிக்கும் நகர்ப்புறத்தைத் தாண்டி வரும் தாவரங்களின் வளர்ச்சிக்கும் மாறு கொண்ட வளர்ப்பு விகித நிலை இருக்கும்.
1.இவ் ஒலி உணர்வில் சேமிக்கும் அச்ச உணர்வின் ஈர்ப்பே
2.மனித உணர்வில் ஒவ்வொரு நொடிக்கும் இம்மரண பயம் என்ற பிடி ஈர்ப்பில் சிக்குண்டு வாழும் தன்மை
3.இன்றைய நாகரீக செயற்கைப் பிடி வாழ்க்கையில் உள்ளது.
இயற்கைச் சுழற்சியில் இயற்கையிலிருந்து மாறுபட்டு இப்பேராசைப் பிடியில் நாகரீகச் செயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் இந்த மரண பயம் என்ற பிடியுடன் சிக்கித்தான் இன்று வாழும் நிலை உள்ளது ஜீவ சக்தி அனைத்திற்குமே.
உருவத்தில் பெருத்த யானையும் உணர்வில் மரண பயத்தை வளர்த்துக் கொண்டு
1.தன் இரு செவிக்குள்ளும் எறும்பும் பூச்சிகளும் ஏறாத வண்ணம்
2.தன்னைத்தானே செவியை விசிறிக் கொண்டே காத்து வாழுகின்றது.
இந்த எறும்பின் ஊர்தல் அதன் செவி மட்டத்தில் உள்ள ஜவ்வில் பட்டவுடன் ஏற்படும் இரைச்சல் அவ் யானையின் உணர்விற்கு மரண பயத்தின் அச்சத்தை ஏற்படுத்தி அந்த எறும்பின் ஊர்தல் செவிக்குள் பாய்ந்தவுடன் தன்னை அறியாமல் வெறி கொண்டு மிகவும் பதட்டம் ஏற்பட்டு அந்த உணர்வின் பிடியிலேயே சிக்குண்டு மாய்கின்றது, இன்னும் சில யானைகள் அவ்வுணர்வின் மதம் பிடித்துக் கொள்கிறது.
இவ்வுணர்வால் எடுக்கும் அச்சத்தால் விளையும் பயம் தான் இந்த மரண பய உணர்வு.
எண்ணத்தால் இவ்வுணர்வின் பிடியை மாற்றிக் கொண்டு… உயர் ஞான வழி ஈர்ப்பு வளர்ச்சிக்கு எண்ணம் செல்லும் வாழ்க்கை இருந்தால் இப்பிம்ப உடலில் ஏற்படும் அச்ச உணர்வின் நிலை மாறும்.
எச்சக்திக்கும் சக்தி பெற இந்த உடல் பிம்பம் தேவை. ஆனால்
1.இந்த உடல் பிம்ப உணர்வில் ஏற்படும் மாற்றங்களும் நலிவுத் தன்மையும்
2.இந்த உடல் பிம்பத்தைப் பேணி வளர்க்கும் ஈர்ப்பலையும்
3.இந்த உடல் பிம்பத்தின் சுகம் காணும் ஆரோக்கிய வாழ்க்கையின் ஆவல் உணர்வும்
4.பிம்ப உடலின் அழகின் ஆசையிலும் இவ்வுணர்வின் ஈர்ப்பை எண்ணம் செலுத்தி வாழும் வாழ்க்கையைக் காட்டிலும்
5.உணர்வின் எண்ணம் உயர்ந்த குணத்தின் ஈர்ப்பில் செல்லும் உணர்வால்
6.இந்தப் பிம்ப உணர்வும் ஆரோக்கிய அழகும் தானாக வளரும்.
7.அகத்தின் அழகை முகத்தில் காணலாம் என்பதின் பொருளும் அதுவே.
மரண பயம் என்ற அச்சத்தை விட்டு இந்த உடல் கூட்டின் அழகு ஆரோக்கியம் இவற்றைப் பேணிக் காக்கும் உணர்வு ஈர்ப்பை விட்டு
1.நல்ல ஞான வளர்ச்சி வாழ்க்கையுடன் நாம் வாழ்ந்தால்
2.அமைதி கொண்ட வாழ்க்கையும் ஆரோக்கிய உடல் நிலையும்
3.வாழ்க்கையில் செய்யப்படும் தொழில் நேர்மையும் அதற்குகந்த வருவாயும் இன்பமும் நமக்குக் கிட்டும்.
உணர்வின் சுழற்சி இந்த நிலையில் சுழன்றால் தான்… வளர்ச்சியின் ஆத்ம சொத்தை வளர்க்க முடியும்.
நம் உடலில் உள்ள கணையங்களுக்கு நாம் தியானிக்க வேண்டிய முறை
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கல்லீரல் மண்ணீரல் முழுவதும் படர்ந்து அதை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வைப் பாய்ச்சுங்கள்.
1.கல்லீரல் மண்ணீரல் வீக்கம் இருந்தால் தணிகின்றது
2.அசுத்தங்கள் இருந்தால் அகற்றப்படுகின்றது.
கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியை ஊட்டும் பொழுது இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்தவும் உணவாக வரும் நிலையில் அதிலுள்ள அசுத்தங்களை அகற்றி நல்ல உணர்வாக மாற்றும் திறனும் பெறுகின்றது.
கல்லீரல் மண்ணீரலைச் சீராக இயங்கச் செய்யும் அந்த ஆற்றல் நமக்கு இப்பொழுது கிடைக்கும்.
இரத்தத்தைச் சமப்படுத்தும் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.கணையங்களை உருவாக்கிய அணுக்கள் சீரானால்
2.உப்புச் சத்தைக் குறைக்க சர்க்கரைச் சத்தைக் குறைக்க இரத்த கொதிப்பை குறைக்க உதவும்.
எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் போது அத்தகைய குறைபாடுகளைத் தூண்டும் அணுக்களை எல்லாம் வடிகட்டி நமக்குள் சமப்படுத்தும் நிலைகள் பெறும்.
தீமைகளைச் சமப்படுத்தி ஒன்றாக்கி நல்ல உணர்ச்சிகளை ஊட்டும் தன்மை நம் கணையங்கள் இப்பொழுது பெறுகின்றது.
சமையல் செய்யும்போது பல சரக்குகளைப் போடுகிறோம். எல்லாம் ஒன்றாகிச் சமமாக இருந்தால் சுவை கூடுகின்றது. குறைந்தால் சுவை குறைகிறது.
ஒரு காப்பியைப் போடுகின்றோம் என்றால் சமமான சூடாக இருந்தால் காப்பித்தூள் இனிப்பு எல்லாம் ஒன்றாக சேர்ந்து சுவையாக இருக்கும்.
சூட்டின் தன்மை குறைந்தால் போடக்கூடிய காப்பித்தூளையும் பாலையும் இனிப்பின் தன்மையும் ஒன்றாக்காதபடி சுவையைக் குறைத்து விடுகின்றது.
அதைப் போன்று தான் நம் உடலில் உள்ள கணையங்கள் சமமாக்கும் அந்தத் தெளிவான நிலைகள் பெற்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் “அருள் கணையங்களாக” மாற்றிக் கொள்ள முடியும்.
அந்தக் கணையங்கள் சீராக இயங்குவதை இப்பொழுத் நீங்கள் உணர முடியும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறும் பொழுது
1.கணையங்களை உருவாக்கிய அணுக்கள் ஒரு புத்துணர்ச்சி பெறும்.
2.சர்க்கரைச் சத்து உப்புச் சத்து போன்ற குறைபாடுகளை நாம் அகற்ற முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து அணுவின் ஆற்றலைப் பெருக்கி அணு குண்டுகளையும் ஹைட்ரஜன் குண்டுகளையும் உருவாக்கி இன்று உலகையே அழிக்கும் நிலைகளுக்கு எல்லோரையும் பயமுறுத்திப் பெரும் அச்சுறுத்தலாக்கி விட்டனர்.
ஆனாலும் அந்த அணுவின் ஆற்றலைக் கொண்டு பலருக்கு நன்மை செய்யும் நிலைகளாக அதிக அளவு மின்சாரத்தை உருவாக்குவதற்கும் பயன்படுத்துகின்றார்கள்.
சிறிதளவே உள்ள யுரேனியத்தின் துணை கொண்டு பெரும் இயந்திரங்களையும் இயக்கி காந்தத்தின் தன்மையை அதிகமாக உற்பத்தி செய்யும் நிலைக்கு வந்துள்ளார்கள் இன்றைய விஞ்ஞானிகள்.
அன்று மெய்ஞானிகள் தான் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு
1.விண்ணுலக ஆற்றலைத் தன்னுள் அடக்கி
2.அதை உணவாக உட்கொண்டு தீமைகளை ஒடுக்கி
3.நஞ்சு தனக்குள் அடங்கி நிற்கும் நிலையாக
4.ஒளியின் சுடராக மாற்றி “வேகா நிலை” அடைந்துள்ளார்கள்.
ஒரு பாம்பினம் தான் உணவாக உட்கொள்ளும் மற்ற உயிரினங்களின் மீது நஞ்சினைப் பாய்ச்சுகின்றது.
அந்த நஞ்சினை உணவுடன் சேர்த்துப் “பல பல நஞ்சு கொண்ட உயிரனங்களை உட் கொண்டு” இதற்குள் மீண்டும் மீண்டும் அந்த நஞ்சு சேர்ந்து அந்த நஞ்சே உறையும் தன்மையாக “நாகரத்தினமாக” மாற்றுகின்றது.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் தன் உணர்வின் செயலால் அறிந்துணர்ந்திடும் ஆற்றல் கொண்டு நஞ்சினைத் தனக்குள் அடக்கி அடக்கி…, உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிடும் ஆற்றல் பெற்றான்.
1.நஞ்சினை ஒளியாக மாற்றி
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் ஒளி அலைகளாக
3.மின்னணுவின் இயக்கமாக நம் உடலில் இயக்குவது போல்
4.துருவ நட்சத்திரமாகச் சுழன்று கொண்டுள்ளான்.
உதாரணமாக வைரமோ நஞ்சின் தன்மை கொண்டது, அது தனக்குள் “பளீர்…” என்ற ஒளியைக் காட்டுகின்றது. ஒளியை மற்றவர்களுக்கு அறியச் செய்யும். ஆனால் அது “தானாக இயங்காது”.
அகஸ்தியனோ உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை கொண்டு விண்ணின் ஆற்றலை உணவாக உட்கொண்டு ஒளியின் சுடராக இன்றும் வளர்ந்து கொண்டேயுள்ளான்.
27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது. ஒரு விஷத் தன்மை கொண்ட நட்சத்திரத்தின் ஒளிக்கற்றை எதிலும் சிக்காது நேரடியாகப் புவிக்குள் சிக்கிவிட்டால் பதிவாகிவிடுகின்றது.
இந்த நட்சத்திரத்தின் உணர்வலைகள் எதெனெதன் தாவர இனங்களில் கலந்ததோ அவை அணுக்களாக வளரப்படும் பொழுது அதனின் கருவைக் கவர்ந்து கொள்கின்றது.
பின் தன் வலுவால் மண் இனங்களுக்குள் கருவாகக் கூட்டித் தான் பட்ட நிலைகள் கொண்டு வைரங்களாக ஒரு பாறையாக உருவாகின்றது.
அந்த பாறைக்குள் துடிப்பின் நிலைகள் எடுத்து தன் ஒளியின் கவசமாக மாற்றிக் கொள்கின்றது. தனது வளர்ச்சியில் உணர்வின் தன்மை கவர்ந்து விளைகின்றது,
ஒரு கடுகளவு ஆகும்போது இந்த உணர்வின் தன்மை பெருகப் பெருக மற்றதைப் பிளந்து இது வெளி வந்துவிடும்.
ஏனென்றால் இதனின் வளர்ச்சி சிறுகச் சிறுக ஆகி தனக்குள் பாறையின் நிலைகள் வெடித்து அது வெளி வந்துவிடும். அதற்கு மேல் வளர்ச்சி இல்லை.
ஒரு நஞ்சு கொண்ட பாம்பினத்தின் செயலும் இதுவே.
முதிர்ச்சி அடைந்தால் பாம்பின் உடலிலிருந்தும் இத்தகைய மாணிக்கக் கல்லை எடுக்கலாம்.
ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியனோ தான் கவர்ந்த உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றினான். “உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு” என்றுமே அழியாத நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.
2000 சூரியக் குடும்பங்கள் ஒன்றாகச் சேர்த்து இணைத்து ஒரு பேரண்டமாகச் சுழன்று கொண்டிருக்கின்றது.
2000 சூரியக் குடும்பங்களிலிருந்து வெளிப்பட்டு வரும் உணர்வின் நிலைகள் நம் பிரபஞ்சத்திற்குள்ளும் வந்து கொண்டிருக்கின்றது. அதை இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் நம் பூமியும் கவர்கின்றது.
இவ்வாறு 2000 சூரியக் குடும்பங்களிலிருந்து வருவதை நம் பூமி கவரும் அந்த எல்லையில் (அகஸ்தியன்) நின்று இதை நுகர்ந்து தான் உணவாக எடுத்து நஞ்சினையே ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளது “துருவ நட்சத்திரம்”.
நஞ்சினை ஒளியாக மாற்றிடும் உணர்வின் அலைகளாக அதிலிருந்து பரவிப் படர்ந்து கொண்டுள்ளது.
1.அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்றவர்கள் பல கோடி.
2.அவர்களைத்தான் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வது.
உயர்ந்த சக்தி பெற நமக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பவர்கள் யார்…?
அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்ற எண்ணத்துடன் தான் நாம் தியானம் செய்கின்றோம்.
அம்மா அப்பா அருளால் என்கிற பொழுது தாய் தந்தையரைப் பரிபூரணமாக எண்ண வேண்டும்.
ஏனென்றால் தாய் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்ற நிலையையே எண்ணி நம்மை வளர்த்தது. குழந்தையாகப் பிறந்த பின் அந்த அறியாப் பருவத்தில்
1.தெரியாமல் அசிங்கமான பொருளை தொடச் சென்றாலோ
2.நெருப்பு என்று அறியாமல் தொடச் சென்றாலோ
3.அதிலிருந்து காப்பாற்றக்கூடிய எண்ணமாக அவர்கள் உணர்வுகளைப் பதிவு செய்து நம்மைக் காக்கின்றார்கள்.
அதே போன்று கல்வியில் நாம் சிறந்து இருக்க வேண்டும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தையும் நமக்குள் பதிவு செய்கின்றார்கள்.
அவர்கள் பேசிய பேச்சுகள் அனைத்தையும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமியில் அலைகளாகப் பரவி வைத்துள்ளது. அதே சமயத்தில் அவர்கள் எண்ணிய எண்ணம் நமக்குள் பதிவாகி ஊழ் வினையாகவும் இருக்கின்றது.
நாம் என்ன குறும்புத்தனம் செய்திருந்தாலும் அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு
1.என் குழந்தை நன்றாக இருக்கவேண்டும்
2.அவன் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணிய
3.இந்த உணர்வுகள் அவர்கள் உடலிலும் ஆழமாகப் பதிந்து இருக்கின்றது.
4.அந்த உணர்வலைகள் பூமியிலும் படர்ந்து கொண்டிருக்கின்றது
5.அதே சமயத்தில் நமக்குள்ளும் அது பதிந்து இருக்கின்றது
இப்படிப் பதிந்துள்ளதைத் தான் நாம் அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம். இப்படி எண்ணினால் உடனே அந்தச் சக்திகளை இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகிறது.
எப்படி…?
1.நம் உடலில் இருக்கக்கூடிய விலா எலும்பு பக்கம் இருக்கக்கூடிய காந்த சக்தி (மேக்னட்) அந்த அலைகளைக் குவித்துக் கொடுக்கின்றது.
2.அதைக் குவித்தவுடன் நமது உயிரான மேக்னட் இழுக்கின்றது.
உயிருக்குள் பட்ட உடனே நாம் எதை எண்ணினமோ அந்த உணர்வு ஓ…ம் பிரணவம் ஜீவன் உண்டாகின்றது. அது தான் ஓ… என்பது. அந்த உணர்வின் சத்து நம் உடலாக இணைந்து விடுகின்றது… ஓம் நமச்சிவாய.
நாம் எண்ணக்கூடியது அனைத்தும் நமக்குள் ஜீவனாகி அந்த சக்தி நம் உடலாகின்றது. ஏற்கனவே அம்மா அப்பா பதிவு செய்த இந்த உணர்வுகள் உடலில் இருப்பதால் அது உடலுடன் ஐக்கியமாகச் செய்கிறது.
நலம் பெற வேண்டும் என்று சொன்ன அவர்களின் உணர்வின் சக்தி நமக்குள் வலு கூடுகின்றது. அம்மா அப்பா அருளால் என்று எண்ணி அதைச் சொல்லும் பொழுது அந்தத் தகுதி நமக்குக் கிடைக்கின்றது.
அதே போன்று ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்கிற போது வாழ்க்கையில் எதையெல்லாம் நாம் எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சக்தி ஓ… என்று பிரணவமாகி ம்… என்று உடலாக மாறுகிறது. நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து எண்ணங்களுக்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது.
1.நம் தாய் தந்தையர் நாம் நலம் பெறுவதற்காக எத்தனை உணர்வுகளை எடுத்தார்களோ
2.ஊழ் வினையாக நமக்குள் பதிவு செய்த அந்த உணர்வுகளை மீண்டும் நாம் எண்ணும் பொழுது
3.அந்த வலுவான சக்தியை நாம் பெறுகின்றோம்.
அதே போன்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற இந்த நோக்கத்தில்தான் நான் (ஞானகுரு) இப்பொழுது பேசுகின்றேன்.
அந்த மகரிஷிகளை எண்ணி குரு வழியில் அந்த சக்தி பெற வேண்டும் என்று நான் முதலில் எண்ணுகின்றேன். அது உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற இந்த நினைவுடனே பேசுகின்றேன்.
ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று உயிரை எண்ணி… அம்மா அப்பாவை எண்ணி… அவர்கள் நாம் நலம் பெற வேண்டும் என்று சொன்ன அந்த உணர்வின் தன்மையை முன்னணியில் கொண்டு வந்து அவர்கள் அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.நாம் நன்மை பெற வேண்டும் என்று உளளப்பூர்வமாக அவர்களுக்குள்
2.இந்த உயர்ந்த எண்ணங்கள் கொண்டு வந்ததை நினைவுக்குக் கொண்டு வந்து ஜீவனூட்டி
3.அவர்கள் பெற்ற அருள் ஞான நிலை பெற வேண்டும் என்று எண்ணும்போது
4.நம் ஆன்மாவை அது வலுக் கொண்டதாக மாற்றுகின்றது
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ண உணர்வைக் கூட்டும்போதெல்லாம் அதை நாம் பருகுவதற்கு நம் அன்னை தந்தையின் அருள் உறுதுணையாக இருக்கும்.
அதற்கு தான் இதைச் சொல்லிக் கொடுப்பது.
இறக்காமல் இருக்க வரம் வேண்டுமா…? பிறக்காமல் இருக்க வரம் வேண்டுமா…? – ஈஸ்வரபட்டர்
“மரண பயம்…!” என்ற உணர்வு மனிதனுக்கு மட்டுமல்ல. ஜீவ பிம்பம் அனைத்திற்குமே உண்டு. பிறப்பில் நாம் எடுக்கும் சுவாச உணர்வின் அலைத் தொடரில் பிறந்த குழந்தைக்கும்… ஏன்… கருவில் இருக்கும் குழந்தைக்குமே… மரண பயம் என்ற அச்ச உணர்வு உண்டு.
பிறந்த குழந்தைக்கு அந்தக் குழந்தையின் உடலில் கடிக்கும் கொசுவினால் வலி ஏற்பட்டாலும்… உலுக்கும் தன்மை கொண்டு உலுக்கி விழுந்து சில குழந்தைகள் வீர்…! என்று அழவும் செய்யும். அதிர்வு நிலை ஏற்பட்டவுடன் இக்குழந்தைகள் அழுகும்.
கருவிலேயே மரண பயம் என்ற அச்ச உணர்வுடனேதான் கருவே உருவாகின்றது. அதன் வழியில் கரு வளர்ச்சியின் நிலை கூடி வருவதினால் இவ்வுணர்வின் அச்சம் மாறி “மரண பயத்தை எப்படி விட முடியும்…?”
1.மரண பயம் என்ற உணர்வின் பிடியில் வாழ்க்கை உள்ளதனால்தான்
2.மனித வாழ்க்கையில் சோர்வும் இன்னலும் கலகங்களும் கோபத் தன்மையும்
3.பொறாமை உணர்வும் போட்டி நிலைகளும் பேராசை நிலையும் புகழ் நிலையும் ஏற்படுகின்றன.
ஆனால்
1.”பிறவா வரம் வேண்டும் இறைவா…!” என்று இறை சக்தியை இறைஞ்சி
2.இன்னமுதுடன் இனிதிசை கொண்ட இல்லற இன்ப இல்வாழ்க்கை என்ற இனிய வழித் தொடரில்
3.ஈன்றெடுக்கும் இறைச் செல்வ மக்களுடன் இயற்கை வழி இனிய ஒளி இன்பம் பெற
4.பிறவா வரம் பெறும் இறை ஞானம் நிலையுடன்தான்…
5.வாழ்க்கை நிறைவு செல்வது “பிறவா வரம் பெறும் நிலை…!”
பிறவா வரம் பெறும் உணர்வு கொண்டு சேமிக்கும் உணர்வின் எண்ணத்தில் கூடும் அமிலச் சாற்றில்
1.மரண பயம் என்ற உணர்வுடன் வளரும் பருவக் காலமும் வளர்ந்த வாழ்க்கைக் காலமும்
2.மனிதனின் உணர்வில் இவ் அச்ச உணர்வினால் தான் இப்பேராசை புகழ் போட்டி பொறாமை எல்லாமே வருகிறது.
ஆறிலும் சாவு… நூறிலும் சாவு…! என்ற பயத்தையும் ஊட்டி… பின் பிறவா வரம் என்ற இயற்கை உணர்வுடன் நாம் ஒன்றிச் சென்றால் இல்லறம் இன்பம் கொள்ளுமா…! இயற்கை வாழ்க்கையும் நமக்குக் கூடுமா…? நாளை… நாளை…! என்ற உணர்வே மனிதனுக்கு உழன்று கொண்டு உள்ளது.
தாவரங்களைப் போன்றும் பூமிக்கடியில் வளரும் கனி வளங்களைப் போன்றும்…
1.பூமியின் ஈர்ப்புப் பிடியுடன் வளராமல்
2.எங்கும் சென்று எதனையும் செயலாற்றக்கூடிய நிலையில் நடந்தோடும் செயலைக் கொண்ட ஜீவ பிம்ப மனிதனுக்கு
3.இன்றைய நாகரீகச் சுழற்சிப் பிடிப்பு வாழ்க்கையில்
4.தன் ஜீவனுக்குப் பிறகு சேமிக்கும் பேராசை பொருள் செல்வச் செயலினால் தான்
5.இன்றைய ஜீவ சக்திகளின் மரண பய உணர்வு ஒவ்வொரு நொடிக்கும் அதிகப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் தான் உண்ணும்… உடுக்கும்… வசிக்கும்… வாழ்க்கைப் பிடியில் சிக்கி… தேவைக்கு மேல் அடையும் பேராசை குணத்தினால் தன் வாழ்க்கையையே மரண பயத்திற்கு அடகு வைத்து விட்டான் இன்றைய கலி மனிதன்.
அதிலிருந்து இஜ்ஜீவ பிம்ப உடலை மீட்டத் தெரியாத அச்ச உணர்வில் இருக்கும் வரை
1.உண்ணும் உணவையும் உணரும் காம இச்சையின் இன்பத்திலும்
2.செயற்கை வாழ்க்கை முறையிலும் தான் இன்பம் உள்ளது என்று ஏங்கியே வாழ்ந்து
3.இதன் தொடர் நிலையிலேயே நீடிக்க அதற்கு வேண்டிய பொருளை ஈட்டவும்
4.அதிலே தவறு ஏற்படும் பொழுது செய்த தவறை மறைக்கப் பிறிதொரு தவறின் நிலைக்குச் சென்று
5.பொருள் (சொத்து செல்வம்) என்ற சேர்க்கை இருந்தால் தான் எந்த இன்பத்தையும் அடையலாம்
6.எந்தச் செயலையும் செய்யக்கூடிய “வல்லுனரையும்” பணத்தால் சேவகம் (அடிமையாக்க) செய்ய வைக்க முடியும்..! என்ற குணமும்
7.முன்னேறிய இன்றைய அரசியல் ரீதியிலும் பொருள் என்ற பிடியில் புகழ் என்ற இன்பம் காணவும்… சென்று விட்டதால்
8.உயர்ந்த ஞான சக்தி கொண்ட ஞான வித்தகர்களின் ஞான போதனையே இவ்வாயிரம் ஆண்டு காலத்தில் அற்றுப்போய் விட்டது.
ஒவ்வொரு மனிதனும் தன் ஜீவ சக்திக்குத் தகுந்த தேவையின் செயல் கொண்டு வாழாமல்
1.உடல் குன்றி விட்டால்… நாளை என்ன செய்வோம்…?
2.செய்யும் தொழில் நசிந்து விட்டால்… நாளை என்ன செய்வோம்…? என்ற எண்ணத்துடனே வாழும் நிலை உள்ளது.
இன்று வாழும் சுக வாழ்க்கைக்காக வேண்டி “அன்றன்று சேமிக்கும் பொருளே பிரதானம்…!: என்ற எண்ணத்தின் பேராசைப்பிடியில் மரண பயம் என்ற அச்ச உணர்வுடனே உள்ளார்கள்.
ஆகவே…
1.பக்தி என்ற முறையில் ஆண்டவனை வணங்குவதிலிருந்தும்
2.எதிர்காலத்திற்காகச் சேமிக்க வேண்டிய பொருளின் சேர்க்கையிலிருந்தும்
3.மரண பயத்தைத் தன்னுள் ஏற்றிக் கொண்ட மனிதனுக்கு
4.எப்படியப்பா மரண பயத்தை விட்டு விட்டு
5.ஞான வளர்ச்சியையோ தெய்வ சக்தியையோ வளர்த்துக் கொள்ள முடியும்…? அல்லது பெற முடியும்…!
விஞ்ஞானத் துறையில் எடுத்துக் கொண்டாலும் அதிலே பல செயல்களை ஆராயும் மனிதர்கள் எல்லாம் தற்கொலை என்ற தன்னை மாய்த்துக் கொள்ளும் முடிவிற்கு ஏன் செல்கிறார்கள்…?
பிறவா வரம் பெறும் இனிய சக்தி கொண்ட ஞானிகள்… தன் உடலைப் பாதுகாக்க இந்த வாழ்க்கையில் உள்ள பொழுதே உடல் என்ற கூட்டின் முதுமை உணர்ந்து.. பிறவா சக்தி கொண்ட நிலையில் உடலைச் சமாதி நிலைப்படுத்திக் கொள்கின்றனர்.
அதனால் அவர்களுக்கு இந்த உணர்வின் மரண பயம் என்ற அச்ச உணர்வு இருப்பதில்லை. ஆனால் நமக்கு…?
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஒரு வெளிச்சத்தைக் காட்டினால் அந்த வெளிச்சத்தினால் நாம் பல பொருள்களை “இது இன்னது தான்… இது இன்னது தான்…” என்று காண முடிகின்றது.
இதைப் போல அந்த அருள் மகரிஷிகள் தன் உணர்வின் ஆற்றல் மிக்க சக்தி கொண்டு அவர்கள்
1.“ஒளி கண்ட உணர்வின் தன்மை கொண்டு” எதனையும் பிளந்து
2.அதற்குள் இருக்கும் இருளைப் பிளந்து
3.அதற்குள் இருக்கும் உணர்வின் சத்தை உணர்ந்தவர்கள்.
4.தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சிகரமாக மாற்றினார்கள்.
ஒளியாக மாற்றிடும் ஆற்றல் கொண்டு விண்ணுலகிலிருந்து வரும் நஞ்சு கொண்ட உணர்வுகள் உருவாகி வருவதைப் “பலவீனமாக்கி…” அதனின் உணர்வையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றார்கள்.
அண்டத்தின் உணர்வை இந்த மண்ணுலகில் தோன்றிய இந்தப் பிண்டத்திற்குள் (இந்த உடலில்) மாற்றி இன்றும் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் பெருக்கிக் கொண்டுள்ளார்கள்.
விண்ணுலக ஆற்றல் (அண்டத்தின் சத்து)
1.அது இங்கே மண்ணுலகில் கலந்து மாறி வருவதற்கு முன்பாக
2.அண்டத்தின் உணர்வை அடக்கி அதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி
3.இந்தப் பிண்டத்திற்குள் (தன் உடலுக்குள்) உருவாக்கினார்கள் அன்று மகரிஷிகள்.
அதனின் துணை கொண்டே உணர்வின் ஒளியாக ஒளியின் சரீரமாக “துருவ நட்சத்திரமாகவும்… சப்தரிஷி மண்டலமாகவும்…” இன்றும் (என்றும்) நிலைத்துள்ளார்கள்.
பூமியின் துருவப் பகுதியில் நிலை கொண்டு விண்ணின் ஆற்றல் புவியின் ஈர்ப்புக்குள் “நுழையும் தருவாயில்…” அதைத் தனக்குள் நுகர்ந்தறிந்து உணர்வின் ஆற்றலை ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளார்கள்.
இந்த மனித உடலில் இருப்பது போன்றே உயிருடன் ஒன்றிய உணர்வின் சத்தை ஒளியின் சிகரமாக மாற்றி “என்றும் பதினாறு” என்று அழியாத நிலைகளில் உள்ளார்கள்.
“அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றல்” மற்ற அலைகளை அடக்கி ஒளியின் தன்மையில் பொருளைக் காணும் நிலையாக விளைந்திட்ட அந்த அருள் ஞானியின் உணர்வுகள் “நமக்கு முன்” சுழன்று கொண்டிருக்கின்றது.
இந்த உபதேசத்தின் வாயிலாக அதை நீங்கள் கேட்டுணரும்போது சக்தி வாய்ந்த “ஞான வித்தாக…” உங்கள் உங்கள் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.
அதனை நீங்கள் நினைவு கொள்ளும்போது நினைத்த மாத்திரத்தில் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற முடியும்.
தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றினால் செம்பையும் பித்தளையும் அது ஆவியாக மாற்றுகின்றது. தங்கம் பரிசுத்தம் அடைகின்றது.
அதைப் போன்று நீங்கள் எடுக்கும் அருள் உணர்வுகள் இந்த மனித வாழ்க்கையில் துயரத்தையும் துன்பத்தையும் வெறுப்பையும் உருவாக்கும் நிலைகளை அடக்கி
1.மெய் ஒளியின் உணர்வின் சரீரமாக “உடலை அது காத்து”
2.அதுவே “குருவாக…” நின்று உங்களை நல்வழிப்படுத்தும்.
இந்தப் பிண்டமான உடலுக்குள் இருந்து… அகஸ்தியனைப் போன்று “அகண்ட அண்டத்தை எட்டிடும்” உணர்வின் ஆற்றலைப் பெற முடியும்.
அதைப் பெற்று இந்தப் பிண்டத்திற்குள் விளைந்த நஞ்சை அகற்றி நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்ற முடியும்.
செல்வத்தை நாடாதீர்கள்… அருளைப் பெருக்குங்கள்… இருளை அகற்றும் ஞானம் பெறுங்கள்
உதாரணமாக ஒருவர் வேதனைப்படுக்கிறார் என்றால் அதைப் பதிவாக்கிக் கொள்கின்றோம். திருப்பி எண்ணும் பொழுது அந்த வேதனை நமக்கும் வருகின்றது.
வேதனை வந்த பின் நம் தொழிலைச் சீராக செய்ய முடியவில்லை. வேதனையுடன் நடந்து சென்றால் பாதையில் உள்ள மேடு பள்ளம் தெரிவதில்லை.
இதைப் போல் ஒருவர் கோபிக்கின்றார். அதையும் பதிவு செய்கின்றோம். அப்போது கார உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அந்த உணர்ச்சிகள் நம்மைக் கோபக்காரனாக ஆக்கிவிடுகிறது. ஆகவே
1.நமது வாழ்க்கையில் எது எல்லாம் பதிவாகின்றதோ
2.அவையெல்லாம் மீண்டும் நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.
இதைப் போன்றுதான்
1.அகஸ்தியன் எவ்வாறு இருளை அகற்றி உணர்வை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனானோ
2.அதன் உணர்வின் அலைகளை உங்களுக்குள் பதிவாக்கி
3.அதை நினைவு கொண்டு நீங்கள் பெறுவதற்குண்டான தகுதிகளை ஏற்படுத்துகின்றோம்.
இந்தத் தகுதியை ஏற்படுத்திய பின் எப்பொழுது உங்கள் வாழ்க்கையில் தொழிலில் நஷ்டமோ கஷ்டமோ நோயோ மற்ற எதுவாக இருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் செலுத்திக் கொள்ள முடியும்.
உங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வைச் செலுத்தி விட்டால் அந்த அருள் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் “நாளுக்கு நாள்” வளர்ந்து கொண்டே வரும்.
இப்படி நம்முடைய வளர்ச்சியின் தன்மை அடைந்தால் இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைய முடியும். “அதற்குத்தான் இந்த தியானமும் உபதேசம்…”
செல்வத்தை நாம் தேட வேண்டும் என்று சென்றால் இந்த வாழ்க்கைக்கு உதவும்.
1.ஆனால் அதையே பெற வேண்டும் என்று ஏக்கத்தைப் பெற்றால்…
2.செல்வத்தை தேடி நாம் சென்றால்
3.அது தவறு பிழை என்ற நிலைக்கே அழைத்துச் சென்றுவிடும்.
ஆனால் உயிர் வழி அருள் ஞானிகளின் உணர்வை வலுவாக்கி அவர்கள் பெற்ற உயர்ந்த உணர்வைப் பெற்றால் செல்வம் தன்னாலே தேடி வரும்
நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை அந்த அருள் செல்வம் உங்களை தேடி வரும். ஆகவே செல்வம் தான் நம்மைத் தேடி வர வேண்டும்.
ஆகவ இங்கே கொடுக்கப்படும் உபதேசத்தின் நிலையிலிருந்து செல்வத்தை நாடாதீர்கள். அருளைப் பெருக்குங்கள். இருளை அகற்றி அருள் ஞானச் செல்வத்தை ஊட்டுங்கள்.
1.என்றும் அந்த அருள் செல்வம் நமக்குள் இருந்து
2.அகச்செல்வம் அருளாகி இருளை நீக்கி மெய்ப்பொருள் காணும் உணர்வாக
3.ஒளி உடலாக மாற்றும் அந்தத் தகுதி பெற வேண்டும்.
ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெற வேண்டும் என்று எப்பொழுது எண்ணினாலும் சிந்திக்கும் ஆற்றல் கொண்டு வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளும் தன்மை வருகின்றது.
தீமையை நீக்கும் ஆற்றல் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் அமைதி கிடைக்கின்றது… சாந்தம் கிடைக்கின்றது… விவேகம் கிடைக்கின்றது.
நான் சொல்லி உங்களுக்குள் இதை எல்லாம் பதிவு செய்தாலும் “உங்கள் உணர்வுக்குள் விளைந்தால் தான் அது ஞானம் ஆகும்…”
காரணம் சொல்லும் உணர்வை வைத்து நினைவு கொண்டு எடுத்தாலும் அது கடினமாகும்.
1.நினைவைப் பதிவாக்கிப் பழக்கப்படுத்தி இந்த உணர்வை எடுத்துக் கொண்டால்
2.நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் உருவாக்கும்.
3.இருளை அகற்றி மெய்ப்பொருள் கண்டு பிறவியில்லா நிலையை அடையும் தகுதியை நீங்கள் பெறுவீர்கள்.
4.எனக்குக் குருநாதர் எப்படிச் செய்தாரோ அதைத் தான் நான் செய்து காட்டுகின்றேன்.
உங்கள் உயிர் கடவுள்… உடல் ஒரு கோவில்… மனிதனை உருவாக்கிய அரும்பெரும் சக்தியான தெய்வங்கள் உங்களுக்குள் கொலு வீற்றிருக்கின்றது.
அந்தத் தெய்வங்களைக் காக்க வேண்டும் என்று தான் குருநாதர் காட்டிய வழியில் உபதேசிக்கின்றோம்.
செயற்கரிய செயலைச் செய்யக்கூடிய சக்தி பெற்றவன் தான் மனிதன் – ஈஸ்வரபட்டர்
பாலில் சேர்க்கப்படும் பொருளைக் கொண்டு அதன் சுவையும் மணமும் நிறமும் எப்படி மாறுகின்றதோ அதைப் போன்று தான்
1.இந்த மனிதப் பிம்ப உடலில் சேர்க்கப்படும் உணர்வின் எண்ண சுவாச அமிலத்தால்
2.பிம்பக் கூட்டின் உருவ நிலையும்… குண நிலையும்… சொல் வடிவமும்… அமைகின்றதப்பா…!
நல் உணர்வு சுவாச முறையால்… நாம் எடுக்கும் ஜெப சக்தி காந்த மின் அலைச் சுவாசத்தால்…
1.உடல் பிம்பக் கூட்டில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும்
2.சக்திவாய்ந்த ஒளியில் வளப்படுத்த முடியும்.
இந்த உடல் பிம்ப ஜீவக் கூட்டிலிருந்து… ஜீவ சக்தியுடன் கூடிய இவ்வலை ஈர்ப்பின் குணத்தின் சக்தி கொண்டு தான்..
1.சகல சக்தியையும் அறியவல்ல ஆற்றலையும் செயல் முறையும்
2.என்றுமே அழியா வண்ணம் பல படைப்பைப் படைக்கவல்ல படைப்பின் சக்தியும்
3.இந்தப் பிம்பக் கூட்டிற்கு உண்டு
இந்தப் பிம்பக் கூட்டில் எடுக்கும் இச்சக்தியினால் எச்சக்தியையும் அடையலாம் என்று உணர்த்துகின்றீரே…! அப்படியானால் நீரிலும் நெருப்பிலும் குதிக்க முடியுமா…? என்ற வினா எழும்பலாம்.
கடும் உஷ்ண அலையைக் கக்கும் நெருப்புக் குண்டத்தில் இஜ்ஜீவ பிம்ப உடலுடன் அமர்ந்திருக்க முடியுமா..? என்றால் முடியுமப்பா…!
1.தான் எடுக்கும் உயர் சக்தி அலையின்… “ஒளியுடன் ஒளியாகும் ஒளி சக்தி பெற்றால்…”
2.தணல் விட்டு எரியும் நெருப்பில் அமர்ந்தாலும்
3.இந்த உடல் பிம்ப ஈர்ப்புச் சக்தியிலிருந்து வெளிப்படுத்தும் ஒளி அலையைப் பாய்ச்சினால்
4.அந்த நெருப்புக் கோளம் தான் அணையுமே தவிர இந்தப் பிம்ப உடலைப் பாதிக்காது.
இயற்கையின் சீற்றமுடன் விளையாடுவதற்கல்ல உயர் ஞான சக்தி. ஆனால் உள்ள சக்தியை உணர்த்துவதற்காக இதைச் சொல்கிறோம்.
ஆழ் கடலாக இருந்தாலும்… பூகம்பமோ… சூறாவளியாகவோ.. இருந்தாலும் ஒலியின் சக்தியுடன் ஒளிரும் சக்தி கொண்டு எந்த வகையான இயற்கையின் சீற்றத்திலிருந்தும் பிம்ப உடலையும் தப்ப வைக்க முடியும்.
திராவகத்தில் போடப்படும் மற்ற உலோகங்கள் கரைந்தாலும் தங்கத்தின் குணம் எப்படிக் கரைவதில்லையோ அதைப் போன்று
1.இந்த உணர்வால் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால்
2.ஒலி கொண்டு ஒளி பெற்றோமானால்
3.உயர் ஞான சக்தியை வழி கொண்ட எச்சக்தியாகவும் நாம் ஆக முடியும்.
பூமியின் ஜீவ சக்தியைக் கொண்டு வளர்த்த சக்தியின் தாதுப் பொருள்களில் பிரிந்த திரவக சக்தியிலிருந்து (பூமிக்கடியில் இருக்கும் எண்ணை – CRUDE OIL) ஒன்றைக் கொண்டு பலவாகப் பெட்ரோலியப் பொருள்களைப் பல வகையிலும் பிரித்து பல சாதனைகளைப் புரிகின்றோம் அல்லவா…!
அதைப் போன்று..
1.இந்த உணர்வின் சுவாசத்தால் எடுக்கும் இஜ்ஜீவ சக்தியைக் கொண்டு
2.இப்பேரண்டப் பெருநிலையின் வளரத் தக்க முறைதனையும்
3.ஒவ்வொரு மண்டலங்களிலிருந்தும் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றோன்று உருவாகும் முறைதனையும்
4.அணுவுக்குள் அணுவாக ஊன்றி அணுச் செயல் தொடர்பனைத்தையும்
5.ஒலியையும் ஒளிக் காட்சிகளையும் மணத்தையும் சுவை குணத்தையும் அவை மாறும் செயற்கை வடிவையும்
6.இவ்வெண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால் எடுக்கவும் உணரவும் நமக்குள் வளர்த்திடவும் முடியும்.
இந்த நிலையெல்லாம் பெறுவதற்கு மனித உணர்வில் ஊன்று கோலாக நிலைத்துள்ள “மரண பயம்” என்ற இந்த வித்தை முதலில் அகற்ற வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
யாம் உபதேசித்த உணர்வின் எண்ணம் கொண்டு கண்களை மூடி ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணித் தியானிக்கும் பொழுது அந்த மகரிஷிகளின் உணர்வின் ஈர்ப்பின் அலைகள் உங்களுக்குள் வரும்.
1.அந்த அலைகள் வரும் போது புருவ மத்தியில் “குறு…குறு…,” அந்த உணர்ச்சிகள் தெரியும்
2.சிலருக்கு ஒளி அலைகள் வருவதையும் பார்க்கலாம்.
தியானித்து முடிந்த பின் கண்களைத் திறந்து மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்துள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும், எல்லோரும் சேர்ந்து சொல்ல வேண்டும்.
இந்த உணர்வின் தன்மை ஏகோபித்த நிலைகள் வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் சக்தி வாய்ந்ததாக மாறி “செவிப்புலனறிவில்…” தாக்கப்படுகின்றது.
1.அந்த உணர்வின் நிலைகள் உந்தப்பட்டு
2.உணர்வின் தன்மைகள் சுவாசிக்கப்பட்டு
3.சுவாசித்த உணர்வுகள் தன் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.
அந்தப் பதிந்த வலுவின் தன்மையைச் சேர்ப்பிக்கும் நிலை தான் “தியானம்” என்பது.
ஒரு நூல் அது எத்தகைய நூலாக இருந்தாலும் அது பலவும் ஒன்றாகச் சேர்த்து ஒன்றாகும் பொழுது வலுப்பெறுவது போல் அனைவரும் சேர்த்து உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பபடும் பொழுது ஆற்றல்மிக்க சக்தியாகின்றது.
பல (100) இசைக்கருவிகளை ஒன்றாக இணைத்து அது இசையாக வெளிப்படுத்தும் பொழுது ஒரு காந்தப் புலன் அதற்குள் கவர்ந்து அனைவரும் சேர்ந்து அந்த அனைத்து வாத்தியங்களும் வாசித்த உணர்வுகள் ஒரு அணுவிற்குள் சிக்கி அந்த அணுவின் தொடர் வரிசை செல்லும் பொழுது அந்த நாதத்தின் இனிமையை நாம் நுகர முடிகின்றது.
இதைப் போலத்தான் வலு கொண்ட உணர்வின் எண்ணத்தின் துணை கொண்டு நாம் அனைவரும் அந்த ஞானிகளின் உணர்வைத் தனக்குள் ஏற்றி அதனைப் பருக வேண்டும் என்று ஏங்கித் தியானிக்கும் பொழுது அதைக் கவரும் ஆற்றல் நாம் பெற்றாலும் கவர்ந்த உணர்வுகள் நமக்குள் பங்கிட்ட நிலைகள் கொண்டு நமக்குள் வலுவாக ஏறுகின்றது.
1.ஆயிரக்கணக்கோர் கூடி உணர்வின் தன்மை இதைத் தூண்டச் செய்து கூட்டுத் தியானமாக அமைத்து
2.அதனின் வலுவைச் சேர்க்கும் “அருள் ஞான வித்தாகப் பதியச் செய்கின்றோம்”.
3.அனைவருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
4.அவர்கள் வாழ்க்கையில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
5.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் வாழ்க்கையில் மன பலமும் மன வளமும் பெற வேண்டும்
6.தியானமிருக்கும் குடும்பங்களில் உள்ளோர் தொழில் வளமும் செல்வமும் செல்வாக்கும் பெற்று
7.செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வளர்ந்திட வேண்டும் என்று ஒவ்வொருவருமே இதை எண்ண வேண்டும்.
ஒருவர் சொல்ல எல்லோரும் இதைச் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அனைவரும் தனக்கென்று கேட்காது… “பிறரை வாழ்த்தும் நிலைகள் நாம் எண்ணும் பொழுது” அந்த மகா ஞானியின் உணர்வைப் பெறும் தகுதி பெறுகின்றோம்.
அதனின் துணை கொண்டு நாம் இந்தப் பூமியின் நிலையில் மனிதனின் ஈர்ப்புக்குச் சிக்காது விண் சென்ற அந்த உணர்வின் சக்தியை நமக்குள் அதைக் கவர முடியும். நமக்குள் வலுவாக ஏற்றிக் கொள்ள முடியும்.
சீரற்றுச் சென்று கொண்டிருக்கும் பூமியைத் “தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியனின் அருளால்” நிச்சயம் நாம் சமப்படுத்துவோம்
பண்டைய காலத்தில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பூமியிலே விளைந்த மகரிஷிகள் இந்தப் பூமி சூரியனை விட்டு மாறிச் செல்லும் பொழுது அந்தச் சூரியனையே குறிக்கோளாகக் கொண்டு தன் பார்வையின் நிலைகளை நேரே செலுத்திப் பூமியைத் திருப்பி விட்டுள்ளார்கள்.
இந்தப் பூமி வட துருவமாக இருந்து அதன் வழியில் விண்வெளியின் ஆற்றலை இது கவர்ந்து பூமி வளர்ச்சி அடைந்து வந்தது.
அப்படி வந்தாலும் அதிகமாக இந்தத் துருவ நிலைகளில் அது தனக்குள் கவர்ந்து கொள்ளும் பொழுது
1.துருவத்தின் நிலைகள் எடை கூடி குடை சாயும் நிலைகளில்
2.இப்படிக் கவிழும் தன்மை வரும் பொழுது
3.துருவ மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்.
4.இத்தகைய மாற்றங்கள் வரப்படும் பொழுது பூமியும் திசை திருப்பி வரும்.
இதனைத் தன் வலுவான எண்ணங்கள் கொண்டு பண்டைய கால மகரிஷிகள் இந்தப் பூமியைச் சீர்படுத்தி வந்தனர்.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்லும் இந்த அகஸ்தியன் தனக்குள் எடுத்து கொண்ட வலுவின் திறமை கொண்டு இந்தப் பூமியினைச் சமப்படுத்தி சீராக ஓடச் செய்து தன் நினைவின் அலைகளை மாற்றிச் சென்றவன்.
இதைப் போன்று ஒவ்வொரு காலத்திலேயும் மகரிஷிகள் தோன்றி இதைச் சீர்படும் நிலைகளுக்குச் செய்தார்கள்.
இன்று விஞ்ஞான அறிவால் அணுகுண்டும் ஹைட்ரஜன் குண்டும் நாம் செயல்படுத்தும் நிலைகளிலிருந்து அது வெடித்து கதிரியக்கச் சக்தி பூமியின் நடுமையம் சென்றுவிட்டது.
அதனால் வெப்பங்கள் அதிகமாகி துருவப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் கரைந்து நீர் நிலைகள் பெருகி நிலம் குறையும் நிலைக்கு வந்துவிட்டது விஞ்ஞான அறிவால்.