சிவசக்தி இல்லை என்றால் வளர்க்கும் சக்தியே இல்லை – ஈஸ்வரபட்டர்

சிவசக்தி இல்லை என்றால் வளர்க்கும் சக்தியே இல்லை – ஈஸ்வரபட்டர்

 

இந்த மனித பிம்ப உடல் ஞான ஆத்மாவுக்குத்தான் சொல்லாற்றலும் செயல் திறமையும் பகுத்தறியும் எண்ண வளர்ச்சியும் கொண்ட நிலை உள்ளதனால்
1.இந்நிலையை வளர்க்கும் முறை
2.ஆத்ம தியானம் பெறும் முறை ஒன்றினால் தான் முடியும்.

அனைத்து அண்ட கோடிகளையும் வளர்க்கும் அறியும் நிலை கொண்ட சக்தி இந்தப் பிம்ப உடலுக்குத்தான் உண்டு. இருந்தாலும் இந்தப் பிம்ப உடலிலும் “தனித்த ஆத்ம தியானத்தால்” உயர் ஞானக் கூட்டினைப் பெருக்க முடியாது.

ஆண் பிம்ப உடலுக்கு அமிலப் படைப்பைப் படைக்கத்தான் முடியும். ஆண் விடும் சுவாச அலையினால் மரம் செடி கொடிகள் தாவர இன வர்க்கத்தையும் மலைகள் உலோகப் பொருள்கள் இந்நிலை போன்ற சில பிம்பப் படைப்பாகத்தான் ஆண் வர்க்கச் சுவாச அலையில் உருப்பெறும் உரு நிலையுள்ளது.

இந்த உரு நிலைக்கு ஜீவன் தரக்கூடிய சக்திக் கூட்டு அலைகள் பெண்மையின் சுவாசக் கூட்டிற்கு உண்டு. பெண்ணினத்தின் சுவாச அலையிலிருந்துதான் புழு பூச்சி வண்டினங்கள் யாவையுமே ஜீவன் கொள்கின்றது.
1.நம் பூமியின் பிம்பமே “சிவ” பிம்பம் தான்
2.இந்த சிவ பிம்பனுக்கு ஈர்ப்புக் குணம் தந்தவள் “சக்தி” சுழற்சி தான்,
3.அமிலப் படைப்பு ஆணினம்
4.சக்தி ஈர்ப்பு பெண்ணினம்.

வளர்க்கும் முதல் இன அமில இனம்… ஆதி முதல்வனே… விநாயகனே… என்று உணர்த்திய “சிவ சக்தி” என்ற உரு நிலைக்கு உருவ வளர்ப்பின் வளர் நிலையின் ஆதி நிலையான சிவன் சக்தி என்ற ஆண் பெண் நிலையான அமிலக் கூட்டமைப்பு தான்.

அந்த ஈர்ப்பு சுழற்சியில் வளர்ப்பின் வளர்ப்பிற்கு நீர் நெருப்பு காற்று இவற்றை வளர்க்கும் முதல் நிலையான விநாயக குண நிலைக்கு வளர்ப்பின் வளர் நிலை சுழற்சியில்… வளரும் ஜீவ சக்திக்கு முருகன் என்ற குணப்படைப்பும்… முருகனுக்குத் துணை சக்தியான ஆசை குண தெய்வானையும்… தேவைக்கும் மேல் பேராசை வளர்ப்பு நிலை தான் வள்ளி குணம்.

முருகனுக்குப் பிள்ளையைக் காட்டவில்லை புராணம்…!

பூமியின் இயற்கை உண்மை உற்பத்தி முறையத்தான் சிவ சக்தியாக்கி ஆதிமுதல்வனாக விநாயகனைக் காட்டி சிவ சக்தி என்ற இந்தப் பூமியானது தன் வளர்ப்பின் வளர்ப்பிற்கு ஆவியாகி… பிம்பமாகி… நீர் நிலம் காற்றை எப்படி முதலாக வளர்த்ததோ அதனை விநாயகனாக உணர்த்தினார்கள்.

முருகன் என்ற பல குண நிலைகளை ஜீவ பிம்ப உடலாக்கி ஆசை என்ற அன்பைக் காட்ட தெய்வானையை உணர்த்தி இன்று வாழக்கூடிய நிலையான பேராசை வள்ளியை உணர்த்திச் சென்றான் அச்சித்தன்.

பூமி மட்டுமல்ல… உருவாகும் ஜீவ சக்தி அனைத்துமே ஒவ்வொன்றுமே
பிம்பம் சிவன்…
சக்தி ஈர்ப்பு…
வளர்ப்பு விநாயகன்…
பொருள் முருகன்…
தேவை தெய்வானை…
தேவைக்கு மேல் உணரும் பேராசை வள்ளியம்மை தான்…!

படைப்பின் உண்மை நிலை இது…!

படரும் வழி முறை இந்நிலை படைப்பான
1.அமிலத்தை ஆண் இனச் சுவாசம் படைக்கின்றது
2.ஜீவ சக்தியின் அலையைப் பெண் இனம் வளர்க்கின்றது.
3.படைப்பில்லையேல் ஜீவ பிம்பத்திற்கு உயிர்த் துடிப்பு இல்லை…
4.உயிர்த் துடிப்பிற்கு பிம்ப உடல் இல்லையேல் செயலில்லை.

உருவாகும் உயிர்க் கருவிற்கு அமில பிம்பத்தைத் தருவது ஆண் இனம். சக்தி ஈர்ப்பு ஜீவன் தருவது பெண் இனம். ஆணின் வித்து அமில வித்துத் தான். பெண்ணின் வித்து ஜீவத் துடிப்பு வித்து.

அமிலப் படைப்பைப் பெண்ணினம் ஏற்று ஜீவ சக்திக் கருவை வளர்க்கின்றது “தாயினம்…”

ஜீவ சக்திகளின் உண்மைப் படைப்பு எப்படி உள்ளதோ அதை ஒத்துத்தான் ஆதம தியானம் பெறும் வாழ்க்கை முறைக்கும் பெண்மையின் சக்தியின் ஈர்ப்பை ஆண் இனச் செயலில் பதிக்கும் நிலையில் தான் ஞான வளர்ச்சியும் அமைதியும் வழி கூட முடியும்.

1.சக்தித் தொடர்பு… சிவ பிம்பம் இணைந்து… வாழ்க்கையைப் போல் வளர்ந்தால் தான் உயர் சக்தி பெற முடியும்.
2.சிவ சக்தி இல்லையேல் வளர் சக்தி இல்லை…!

Leave a Reply