வலு கொண்டு சொல்வதற்கும்… சந்தேக உணர்வுடன் சொல்வதற்கும் உண்டான வித்தியாசங்கள்

வலு கொண்டு சொல்வதற்கும்… சந்தேக உணர்வுடன் சொல்வதற்கும் உண்டான வித்தியாசங்கள்

 

எத்தனையோ கொடிய நிலைகளிலிருந்து மீண்டு “எல்லாவற்றிலிருந்தும் மீள வேண்டும் என்ற சக்தி பெற்றவன் தான் மனிதன்…!”

மற்ற உயிரினங்கள்… உதாரணமாக தவளையோ பாம்போ பதுங்கியிருந்து தான் தனக்கு வேண்டிய உணவைப் பிடிக்கிறது. தவளை தப்பித்துக் கொள்ள எண்ணுகிறது. பாம்போ அதைக் குறி வைத்து அப்படியே பார்க்கிறது… பாய்ந்து அதைப் பிடிக்கிறது.

1.தவளையின் தசைகள் பாம்பிற்கு இரையாகிறது
2.ஆனால் தவளையின் உயிரோ பாம்பின் உணர்வைக் கவர்ந்து
3.பாம்பின் கருவிற்குள் சென்று பாம்பாக அடுத்து உருவம் பெறுகிறது.

இதைப் போன்று தான் பரிணாம வளர்ச்சியில் ஒன்றை ஒன்று தாக்கித் தன்னை வளர்ச்சி பெறச் செய்கிறது.

இப்படி ஒவ்வொரு உடலிலேயும் தன்னைப் பாதுகாக்கும் உணர்வுகளை வளர்த்து… வளர்த்து… வளர்த்து… எல்லாவற்றையும் நாம் பாதுகாக்கும் நிலையாக மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.

ஆனால் மனிதனாக ஆன பின் நாம் என்ன செய்கிறோம்…? எதிரியை வீழ்த்தி விட்டு நாம் நன்றாக வாழ வேண்டும் என்று தான் எண்ணி வாழ்கிறோம்.

கடையை வைத்து வியாபாரம் செய்கிறோம். அது நன்றாக இருக்க வேண்டும் என்றால் அடுத்த கடையை அதை எப்படி எப்படி எல்லாம் “சரியில்லை…” என்று சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் செய்வோம்.

1.நம்மை அறியாமலே அவர்கள் சரக்கை மோசம் என்று சொல்வோம். ஆனால் சரக்கு நன்றாக இருக்கும்.
2.அவர் மீது நமக்கு வெறுப்பு இருக்கும்… அதனால் சரக்கை மோசம் என்று தான் சொல்வோம்.

இங்கே இவ்வளவு உயர்ந்ததாகப் பேசினாலும்…
1.மனம் ஒத்திருந்தால் அவர் சரக்கு மட்டமாக இருந்தாலும் கூட…
2.பரவாயில்லை… அவர் சரக்கு நன்றாக இருக்கிறது…! என்று தான் சொல்வோம்.

இந்த உண்மையை எல்லாம் தெரிந்து கொண்ட பிற்பாடும் கூட இந்த உணர்வு வரும்.

காரணம்…
1.அவர் மீது பற்று இருக்கும் போது அவர் கொண்டு வந்த சரக்கையும் நல்லதாகக் காட்டிவிடும்.
2.ஆனால் அவர் மீது பற்று இல்லை என்றால் அவர் எடுத்துக் கொண்டு வந்த சரக்கையும் மட்டமாகக் காண்பிக்கும்.

இதே உணர்வை அங்கே அடுத்தவரிடமும் பதிவு செய்து விட்டோம் என்றால் அதே நோக்கத்தில் பார்த்தால் “நீங்கள் சொன்னது சரியாகப் போய்விட்டது…!” இந்த உணர்வுகள் தான் அங்கே வந்து பாயும்.

எதிரிக்கு இந்த உணர்வின் அலைகளை மாற்றப்படும் போது இந்த உணர்ச்சிகளை அது மாற்றும். இதன் மேல் பற்று கொண்ட உணர்வு கொண்டு “நம் வார்த்தையைக் கேட்டார்கள்” என்றால் அவர்களுக்கும் அது தான்.

உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற உணர்வை நீங்கள் பாய்ச்சும் போது அதை மற்றவர்கள்கள் பதிவு செய்து கொண்டார்கள் என்றால் அந்த உயர்ந்த நிலைக்கு அவர்களும் வருகிறார்கள்.

நாம் சொல்வதை…
1.சரியான நிலைகளில் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா… ஏற்றுக் கொள்ள மாட்டார்களா…? என்று இதைக் கலந்து விட்டு
2.அடுத்து நீங்கள் சொன்னீர்கள் என்றால் அங்கே அதை ஏற்றுக் கொள்ளாத உணர்வே வரும்.

இத்தகைய உணர்வின் இயக்கங்களை எல்லாம் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தான் சொல்வது (ஞானகுரு).

Leave a Reply