கடவுளின் அவதாரத்தில் ஆமையை ஏன் போட்டார்கள்…? – கூர்மை அவதாரம்

கடவுளின் அவதாரத்தில் ஆமையை ஏன் போட்டார்கள்…? – கூர்மை அவதாரம்

 

கண் தெரிந்த பிற்பாடு ஒரு புழு என்ன செய்கின்றது…?

புழு பாறையின் மீது நகர்ந்து செல்கிறது. அந்தப் பாறையிலே வெயில் படுகின்றது. ஆனால் அதிலே முதலில் வெயில் இல்லை.

புழு அதன் மீது நகர்ந்து செல்லப்படும் போது கொஞ்சம் நேரமாகின்றது. ஆனால் அதற்குள் வெயிலின் கடுமையாகிப் பாறை சூடாகின்றது.

சூடாகும் போது தாங்க முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

1.அந்த நேரத்தில் தன் கண் கொண்டு தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வு கொண்டு நாலாபுறமும் பார்க்கின்றது.
2.அப்போது அங்கே சுற்றி இருக்கும் செடிகளும் அதனின் நிழலும் புழுவிற்குத் தெரிகின்றது.

அதே சமயத்தில் அந்த வெயில் செடியிலே பட்டு அந்த மணம் வெளி வருகிறது. அதை இந்தப் புழு கண் கொண்டு கூர்மையாகப் பார்க்கின்றது.

அதிலிருந்து வரக்கூடிய அந்த மணத்தைக் புழுவின் கண்ணில் உள்ள காந்தப் புலனறிவு… சத்தியபாமா கவர்கின்றது.
1.அந்தச் செடியின் நிழலையும் மணத்தையும் சுவாசித்த பின் சத்தியபாமா உணர்த்துகின்றது.
2.அதாவது அங்கே நிழல் இருக்கின்றது என்ற நினைவை ஊட்டுகின்றது.

அந்த மணத்தின் தன்மை கொண்டு நிழல் இருக்கிறது என்று காட்டப்படும் போது மூஷிகவாகனா கூர்மையாகக் கவனித்து அதைச் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை எண்ணம் கொண்டு அந்த நிழலுக்கு இந்த உடலை அழைத்துச் செல்கிறது.

அப்படி அழைத்துச் சென்றாலும்
1.இங்கே அடித்த வெப்பமும்
2.இது ஏற்கனவே உணவாக உட்கொண்ட நிலையும்
3.அங்கே செடியின் நிழல் வேறு.

இருந்தாலும் அந்த நிழலுக்காக வேண்டி அதை எண்ணுகிறது தன்னைக் காக்க…!

ஆனால் அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்தது. இந்த உணர்வின் தன்மை அதற்குள் வினையாகச் சேர்கின்றது. மூஷிகவாகனா. ஆனால் தப்பித்து விட்டது.

செடியைக் கண் கொண்டு படம் எடுத்தது. அந்தச் செடியிலிருந்து உணர்வின் தன்மையைச் சத்தியபாமா உணர்த்துகின்றது. உள்ளுக்குள் போனவுடனே இந்த உடலுக்குள் உணர்வுகள் எதிர் நிலை ஆகிறது.

ஆனால் இந்த உடலைக் காத்துக் கொள்ளச் சென்றது. அதை நுகர்ந்து பார்த்த உணர்வின் சத்து உள்ளே சேர்ந்து விடுகிறது.

நாம் நல்லவராக இருக்கின்றோம். ஒருவர் கஷ்டப்பட்டால் என்ன செய்கிறோம்…? ஐயோ… பாவமே…! என்று அவர்கள் சொன்னதை எல்லாம் கேட்டு வைத்துக் கொள்கிறோம்.

அந்த வினை எல்லாம் இங்கே சேர்த்த பிற்பாடு மாரி…! மாரியம்மனை ஏன் வைத்திருக்கின்றார்கள்…? அந்தச் சக்தி என்ன செய்கிறது..?

கஷ்டப்படுவதைப் பார்த்து நாமும் அங்கே வேதனைப்பட்டோம் இங்கே நமக்குள்ளும் அதே வேதனையாக வந்துவிடுகிறது. அது தான் மாரி. (அங்கிருப்பது நமக்குள்ளும் மாறி வருகிறது)

அதே போல் தான் இந்தப் புழு அங்கே வேதனைப்பட்டது.
1.அதிலிருந்து தப்பித்துக் கொள்ளக் கூர்மையாக எண்ணியது.
2.அந்த உணர்வின் தன்மை அந்தச் சத்தைத் தனக்குள் எடுத்து மாரி…
3.இதற்குள் வந்து அது வினையாகச் சேர்கிறது.

முதலிலே தன் உணர்வுக்குள் வேதனையாகச் சேர்ந்தது. காரணம் அதனின் சத்து வெப்பம்… சூடு அதிகம். ஆனால் செடியின் மணத்தின் சத்தை “அந்த நிழலைப் படம் எடுத்தது…” இந்த உணர்வின் சத்து உடலில் விளைகின்றது. இதற்குள் எதிர்நிலையாகிறது.

ஒரு எலி வீட்டிற்குள் வங்கு போட்ட மாதிரி புழுவின் உடலில் அது வங்கு போடுகிறது. வங்கு போட்டு அந்த வினையின் சத்தாகச் சேர்த்து வினைக்கு நாயகனாக அடுத்த சரீரம் ஆமையாகப் பிறக்கிறது.

ஆமையை நெருப்பில் தூக்கிப் போட்டால் ஒன்றும் ஆகாது. அது சூட்டைத் தாங்கும் சக்தி கொண்டது. காரணம்
1.அந்த வெயிலின் கொடுமையான சக்தியை இதற்குள் தாங்கி
2.அதனின்று காத்துக் கொள்ள வேண்டும் என்று படமெடுத்து
3.அந்தத் தாவர இனச் சத்தை நுகர்ந்து இதனுடன் இணைத்து
4.அந்த உணர்வின் தன்மை கனத்த ஓடு கொண்ட ஆமையாகிறது.. அந்த ஓட்டிலே பார்த்தால் “வரி வரியாக” இருக்கும்.

பரிணாம வளர்ச்சியில் நாம் எப்படி வளர்ந்து வந்தோம் என்பதைக் காட்டுவதற்குத் தான் ஆமையைப் போட்டு ஞானிகள் காட்டியுள்ளார்கள். எதைக் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவாக்குகின்றோமோ அதற்குத் தக்க அடுத்த உடல் என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

ஆனால் கடவுளின் அவதாரத்தில் ஆமையை ஏன் போட்டார்கள்…? என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாத நிலையில் தான் நாம் இருக்கின்றோம்.

Leave a Reply