அருள் ஒளி கொண்டு அனைத்தையும் அரவணைத்துச் சென்றால் தான் பேரானந்தப் பெரு நிலை பெற முடியும்
ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். அதற்கு மத்தியிலே இடைப்பட்ட நிலைகள் வரப்படும் பொழுது ஒருவர் வந்து அவன் மோசமான ஆள்… உதவி செய்யாதீர்கள்…!” என்று நம்மிடம் சொல்கிறார்.
அப்போது நமக்கு வெறுப்பின் தன்மை வருகிறது.
ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணும் போது மற்றவர்கள் செய்ய வேண்டாம் என்று சொன்னால் நாம் எண்ணிய எண்ணங்களுக்கு அது எதிரியாகிறது. நமக்குள்ளே போர் வருகிறது.
சந்தர்ப்பத்தில் இதைப் போன்று தான் நமக்குள் அந்த எதிரியின் தன்மைகள் உருவாகி விடுகிறது. இப்படி உருவாகும் அந்தச் சக்திகள் எப்படிச் செயல்படுகிறது…? என்பதைத்தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது.
கைகேயி இராமன் மீது வெறுப்பு காட்டுகிறது… ஏனென்றால்
1.தன் பையன் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்று தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்தச் சக்தி
2.இது தன்னிலே வளர்ந்த உணர்வு…. அந்த அணுக்கள் அதை எண்ணுகின்றது
3.அந்த உணர்வின் தன்மை இங்கே உருவாக்குகின்றது
தசரதனுடைய ஆசையோ இராமன் மீது இருக்கின்றது. அதே சமயத்தில் தனக்குள் இருக்கும் சக்தி (தசரதனுக்கு எண்ணிலடங்காத மனைவி) அதனுடைய பாசத்தால் ஓங்கி வளர்க்கப்படும் பொழுது அதிலிருந்து அவனால் மீள முடியவில்லை. அதாவது தசரதன் அவன் மனைவியின் நிலையை மீற முடியவில்லை.
அன்பு கொண்ட மனைவி கோசலை தியாகம் செய்கிறது…! மூத்த மகன் இராமன்… சீதாராமா ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலைகள் இருக்கின்றான்.
சுவைக்கொப்பத் தான் எண்ணங்கள் (சீதா என்றால் சுவை – இராமன் என்றால் எண்ணம்) என்று அவனுடைய எண்ண அலைகள் இருப்பினும் தூண்டிய உணர்ச்சிகள் தன் சகோதரனாக இலட்சுமணனாக இருக்கின்றான்.
நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு எந்த உணர்வின் தன்மை எண்ணி எடுக்கின்றோமோ அதன் சக்தியாக இயக்குகிறது. ஆனால் அதிலே இந்த விஷத்தின் தன்மை கலந்தால் எதிலே இது கலக்கின்றதோ அந்த வேகத்தின் தன்மை கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
இது எல்லாம்
1.ஒரு அணுவுக்குள் இருக்கும் நிலையும்… அது கவர்ந்து கொண்ட உணர்வின் சக்தியும்
2.அது எவ்வாறு இயக்குகிறது…? என்று தான் இராமாயணம் காட்டுகிறது.
இராமன் காட்டிற்குள் செல்கின்றான். அங்கே புலியும் இருக்கிறது கரடியும் இருக்கிறது. இருந்தாலும் அதைச் சீராக்கிக் கொண்டு வரும் நிலையாக இராமன் என்ன செய்கிறான்…?
1.இந்த உடலுக்குள் வரும் மற்ற ஆசைகளை விடுத்து அமைதியாகச் செல்கிறான்…
2.எல்லாவற்றையும் இவன் சகோதரனாக ஆக்குகின்றான் என்று காட்டுகிறார்கள்.
அதாவது இந்த மனித வாழ்க்கையில் அந்த அருள் உணர்வின் துணை கொண்டு அனைத்தையும் நம் உடலுக்குள் சகோதரனாக ஆக்க வேண்டும்…!
1.எதையுமே பகைமை ஆக்காது…
2.எதிரியாக உருவாக்காது…
3.இணைந்து வாழச் செய்யும் அரும் பெரும் சக்திகளை நாம் எடுக்க வேண்டும்
4.உடலுக்குள் அதை உருவாக்க வேண்டும் என்று இராமாயணம் காட்டுகிறது.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நீங்கள் நல்ல குணத்துடன் தான் இருக்கின்றீர்கள். ஆனால் சந்தர்ப்பத்தில் பகைமையாகி அதனால் வேதனையான உணர்வை நுகர்ந்த பின் உங்கள் மனதிற்குள் என்ன நடக்கிறது…?
உள்ளுக்குள் மனப் போராட்டமாகி (மனதிற்குள்) சண்டை போட்டுக் கொண்டு மேல் வலிக்கிறது… தலை வலிக்கிறது… என்று சொல்வீர்கள்.
அப்பொழுது உங்களுக்குச் சரியான சிந்தனை இல்லை. ஒரு வேலையின் நிமித்தமாக உங்கள் பையனைக் கூப்பிடுகின்றீர்கள். கூப்பிட்டதும் அவன் வரவில்லை என்றால் “கூப்பிடுகிறேன் பார்… உடனே வர மாட்டேன் என்கிறானே…!” என்ற இந்த உணர்வு தான் வரும்.
கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். வியாபாரம் நன்றாக இருக்கும் இடத்தில் முதலில் சொன்ன மாதிரி மனதில் கொஞ்சம் வெறுப்பாகி விட்டால் என்ன நடக்கிறது…?
கடைப் பையனைக் கூப்பிட்டு இந்தச் சரக்கை எடுத்து வா என்று சொன்னாலும் அவன் வரவில்லை என்றால் “நான் சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன்… உனக்கு என்ன காது கேட்கவில்லையா…?” என்று இப்படிக் கேட்டு இந்த வம்புக்குப் போவோம்.
அந்த உணர்வுகள்… அங்கே தாங்கவில்லை என்றால் “நாம் சொன்ன சரக்கை அவன் எடுத்துக் கொண்டு வரட்டும்…!” என்று பொறுமையாக இருக்க முடியாது. “தான் சொன்னதை ஏன் அவன் செய்யவில்லை…?” என்ற வேகம் தான் வரும்.
நாம் சொன்ன நேரத்தில் அவன் வேறு ஒரு சரக்கைக் கட்டிக் கொண்டிருப்பான். அதைப் பார்த்ததும் ஏம்பா…! நான் சொல்வதைக் கேட்கவில்லையா…? என்று அழுத்தமான சொல் வரும்.
ஏனென்றால் இந்த உணர்வுகளின் இயக்கங்கள் எப்படி…? என்ற நிலையை அறிந்து ஒவ்வொரு நொடியிலேயும் நாம் எதை எப்படிச் செய்ய வேண்டும்..? என்று தெளிவாக உணர்தல் வேண்டும்.
1.மாறுபட்ட எண்ணங்கள் நமக்குள் வரும் பொழுதெல்லாம்
2.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று
3.உடலுக்குள் அதைச் செலுத்தி ஆத்ம சுத்தி செய்தால் “அவன் ரிஷியின் மகன் நாரதனாகின்றான்…!”
மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை அகற்றிடும் சக்தியாக அவன் உருவாக்கிக் கொண்டவன். அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால் அது நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன். (சூரியன் என்றால் நாராயணன்)
அவன் (சூரியன்) எப்படி உலகை இரட்சிக்கின்றானோ அதே போல் சூரியன் கவர்ந்து வைத்திருக்கும் மகரிஷிகளின் உணர்வின் தன்மையைக் கவர்ந்தால்
1.இரட்சிக்கும் அலைகளாக அந்த உணர்வின் இசைகள் நம்மை நல் வழிக்கு மாற்றும்.
2.அதனால் தான் நாரதன் கையில் இசைக் கருவி இருக்கும்.
3.அது சுழன்று சீராகினால் இங்கே மகிழ்ச்சியின் தன்மை வந்து அறியாது வந்த இருளைப் போக்குகின்றது.
சரஸ்வதி கையில் என்ன இருக்கிறது…? வீணை. ஒவ்வொரு உணர்வின் மணமும் அந்த இசையை ஊட்டுகின்றது. எதனின் குணமோ அதனின் ஞானமாக அது இயக்கும். அந்த உணர்வினை ஒளியாக அது இயக்கும். உணர்வை அது ஊட்டும்… உணர்வை அது வளர்க்கும்…!
1.அதைத் தான் இங்கேயும் சுருதி ஏழு…. அங்கேயும் சுருதி ஏழு…! என்று போட்டுக் காட்டியிருப்பார்கள்.
2.ஆறாவது அறிவு ஏழாவது நிலை பெறுவது.
3.ஆக ஞானத்தின் தன்மை ஏழாவது நிலை அடைந்தவன் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரம்…!
அதை நாம் ஒவ்வொரு நிமிடமும் எடுத்து வளர்க்க வேண்டும்.
நடந்ததைச் சொல்வார்கள்… நடக்கப் போவதை அவர்களால் சொல்ல முடியாது…! – ஈஸ்வரபட்டர்
பல சாமியார்கள்… பல வழிச் சாமியார்கள்…! இந்த உலகம் முழுவதுமே ஒவ்வொரு கொள்கையுடன் கடவுளின் அருளைப் பெற உள்ளார்கள் “சாமியார்கள்” என்ற பெயரில்.
அந்தச் சாமியார்களின் நிலை எல்லாம் ஆண்டவனை அடைவதற்கு.. ஆண்டவனை அடிபணிவதற்கு… ஆண்டவனைத் தான் அடிபணிந்து வணங்கி விட்டால்… “தானே ஆண்டவன்…” என்ற எண்ணத்தில் வாழ்கிறார்கள்.
பல வழிகளில் அவர்களுக்குப் பொருளும் புகழும் வருகிறது. பல ஜெபங்களைச் சொல்கிறார்கள். பல வழிகளில் மக்களை அடிபணிய வைக்கிறார்கள் ஆண்டவனை வணங்க…!
அவர்கள் நிலை எல்லாம் என்னப்பா…?
இந்த உலகம் முழுவதுமே இந்த நிலை உள்ளதப்பா…! இந்தச் சாமியார்கள் நிலையில் அவர்கள் பூஜிக்கும் பொழுது
1.உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்லை.
2.கடவுளை வணங்குவதையே மக்களின் மனதில் பெரும் கஷ்டத்தை உண்டு பண்ணுகிறார்கள்.
அவர்கள் நிலையில் இருப்பதெல்லாம் கரு வித்தை என்ற ஆவி தான்..! அவர்கள் நினைத்து ஜெபமிருக்கும் பொழுது அந்த ஆவி காட்சி தருகிறது.
அந்த ஆவியின் உருவத்திற்குப் பல பூஜைகளும் பல உணவுகளும் அளித்துவிட்டு இவர்கள் நினைத்த நினைவுகளுக்கு வரும்படி அந்த ஆவிகளை இவர்கள் வசப்படுத்தி இவர்கள் என்ன எண்ணுகின்றார்களோ… என்ன வேண்டுகிறார்களோ… அவைகளை எல்லாம் அந்த ஆவிகள் எடுத்துச் செப்பி விடுகின்றன.
அவற்றை வைத்துத்தான் இவர்கள் தன்னிடம் வருபவர்களுக்கெல்லாம் அவர்கள் நிலையை உணர்த்தி அவர்கள் ரூபமாகப் பொருள் சம்பாதித்து வருகிறார்கள்.
1.நடந்த நிலையைத்தான் இந்த ஆவிகளால் செப்பிட முடிந்திடும்.
2.நடக்க இருப்பவைகளை அறிந்திட முடிந்திடாது அந்த ஆவிகளின் நிலைக்கு.
3.எந்த ஜோசியனும்… எந்தச் சாமியாரும்… நடக்க இருப்பவைகளைச் செப்பிட முடிந்திடாதப்பா…!
நடந்தவைகளை முழுமையாகச் சொல்லிவிடுவார்கள். அது எல்லாம் கரு வித்தை வேலை தான்..! பல கோவில்களில் அருள் வருவதெல்லாம் இந்த ஆவிகளின் நிலை தான். அருள் அல்லப்பா.. மருள் அது.
1.ஆண்டவனின் அருள் வருபவன் தன்னையும் தன் நிலையையும் மறந்து ஆடிட மாட்டான்.
2.பெரும் அமைதியில் அமர்ந்திருப்பான்.
3.நடக்க இருப்பவைகளை நல்ல முறையில் நடத்திட அருளைத் தான் செப்பிடுவான்.
மருள் வந்தவன் வேலை எல்லாம் குட்டிச் சாத்தான் வேலையப்பா. இந்தக் குட்டிச் சாத்தான் வேலையில் தான் இந்த உலகமே உள்ளதப்பா…! நாட்டை ஆள்பவனே வைத்துள்ளான் குட்டிச்சாத்தானை…!
இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே உரைக்கின்றேன்.
குரு காட்டிய அருள் வழியில் வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியமான நெறிகள்
நமது குருவின் (ஈஸ்வரபட்டர்) அனுபவங்களையும் அவர் எனக்குக் கொடுத்த அனுபவங்களையும் தொடர்ந்து இந்த உபதேச வாயிலாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.
குருனாதர் எனக்குச் சொன்னது…
1.ஒவ்வொரு உயிரைக் கடவுளாகவும்… அந்த உடலைக் கோவிலாகவும் மதித்து நீ செயல்பட்டாய் என்றால்
2.அப்பொழுது அவரிடமிருந்து வரும் பகைமை உனக்குள் மறைகிறது
3.அவர் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்ற நினைவு வருகிறது.
4.அப்படி எண்ணும் போது உன் உடலான ஆலயத்தையும் பரிசுத்தப்படுத்திக் கொள்கிறாய் என்றார்.
குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி… நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் அது எனக்குள் நல்லதாகிறது.
ஆகவே… நமக்குள் உள்ள தீமைகள் போக வேண்டும் என்றால் யார் நமக்குத் தீமை செய்தார்களோ… “அவர்களுக்கு நல்லது செய்யக்கூடிய எண்ணங்கள் வர வேண்டும்…” என்று சொன்னால் அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் வராது.
எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் அவர்களுக்கு வர வேண்டும். என்று சொன்னோம் என்றால் அவர்களைப் பற்றி வெறுப்பான உணர்வுகள் நம் உடலுக்குள் வளர்வதில்லை.
1.ஆனால் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று சும்மா சொன்னால் அந்தக் கெட்டது தான் நல்லதாகும்.
2.அவர் செய்யக்கூடிய கெட்டதற்கு ஊக்கம் கொடுத்த மாதிரி ஆகும்.
ஆகையினால்… நல்லது செய்யக் கூடிய எண்ணங்கள் அவருக்குள் வர வேண்டும்… எல்லோருக்கும் பண்பும் பரிவும் காட்டக்கூடிய அருள் ஞானம் அவருக்குள் வர வேண்டும் என்று சொன்னால் அந்தக் கெட்டதை வளர விடுவதில்லை. ஆக அதை வெறுமனே சொல்ல முடியாது.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்று
2.நம் உடலில் அது படர வேண்டும் என்று இதைக் கலந்து
3.நம் எண்ணங்களுக்கு நல்ல வலு கொடுக்க வேண்டும்.
அந்த வலுவின் துணை கொண்டு அந்த அருள் உணர்வுகளை மற்றவருக்குப் பாய்ச்ச வேண்டும். இப்படிச் செய்தால் குடும்பத்தில் எத்தகைய சங்கடங்கள் வந்தாலும் மாற்றி விடலாம்.
திடீரென்று எதிர்பாராது விபத்துக்களோ மற்றதுகளோ உற்றுப் பார்த்தால்… “அடப் பாவமே… இப்படி ஆகிவிட்டதே…!” என்று எண்ணக்கூடாது.
உடனே ஈஸ்வரா… என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று நமக்குள் இந்த வலுவைக் கூட்ட வேண்டும்.
விபத்தில் ஆன்மா பிரிந்திருந்தால் அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து அவர் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை உந்தித் தள்ளி அங்கே விண்ணுக்குச் செலுத்த வேண்டும்.
உடலில் அடிபட்டிருந்தால் அவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று பூரண குணமாகி அவர்கள் சீக்கிரம் எழுந்து நடக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் இப்படித் தான் நினைக்க வேண்டும்.
பொதுவாக நம் செயல்கள் அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் போகிறது.
1.ஆனால் மேலே சொன்னபடி எண்ணாமல் அவர்களின் வேதனையை எடுத்தால்
2.கிடு கிடு… என்று உடலில் நமக்கு நடுக்கமாகும்.
3.நம் நல்ல குணங்கள் செயல் இழந்து… அவர்கள் அடிபட்ட உணர்வுகள் இரண்யனாகி அதைக் கொல்லும்.
அதனால் தான் அத்தகைய நஞ்சான உணர்வுகளுக்கு இரண்யன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.
இந்த மனித வாழ்க்கையில் நாம் எப்படி வாழ வேண்டும்…? என்று தான் அதை எல்லாம் காவியங்களாகப் படைத்தனர். ஏனென்றால் இது இயற்கை.
அதை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி இப்படிக் கருத்தினைத் தெளிவாக்கிக் கொண்டு வந்தார்கள் ஞானிகள்.
அந்த இரண்யனைப் பிளக்க வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற பயிற்சி கொடுக்கின்றோம். அதை எடுத்து உங்கள் நல்ல குணங்களைக் காத்து மற்றவருக்கும் அதே நல் உணர்வை ஊட்ட முடியும்.
ஈசனின் சக்தியைப் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்
சாமியார் ஒருவன்… நானே கடவுள்…! நானே தெய்வம்…! என்கிறான். அவ்விடம் உள்ள கருவின் வேலை வரைக்கும் தான்… அவன் வேலை எல்லாம்…!
ஆண்டவனின் சக்தியை அறிந்திடாமல் “அவனே கடவுள்..” என்கிறான். ஆண்டவன் என்றால் யார் என்றே அவனுக்குத் தெரிந்திடாது. அந்தக் கருவையே ஆண்டவன் என்கிறான்.
பல பூஜைகள் செய்து வருபவர்களின் எண்ணத்தையும் அவர்களின் கடந்த கால நிலையையும் கண்டிடலாம். இதைப் போன்ற நிலையை வைத்துத்தான் பல ஜோசியங்கள் கோவில்களில் உடுக்கை அடித்துச் சாமி கேட்பது எல்லாமே…!
இவ்வாவிகள் அறிந்து வந்து சொல்வது தான் இவை எல்லாம். மை போட்டுக் கேட்கிறார்கள். ஆண்டவனிடம் பூ கேட்கிறார்கள் என்பதெல்லாம் என்னப்பா…? இவ்வாவிகளின் வேலை தான்.
அருளுடன் தெய்வ நம்பிக்கையும் தன் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் எல்லாமே இந்நிலைக்கு வருகிறது. இதைப் போல உள்ள ஆவிகள் அனைத்துமே உடலை விட்டுப் பிரிந்தவுடன் மறு ஜென்மம் எடுப்பதில்லை. ஆயிரத்தில் கோடியில் ஒன்று தான் உடனே மறு ஜென்மம் எய்துகிறது.
அவசரத்தினால் எடுக்கும் ஜென்மத்தினால் அங்ககீனமுடன் குறையாகப் பிறப்பது குறைப்பிரசவம் குறையுடன் பிறக்கும் குழந்தைகள் நிலை எல்லாமே இது தான்…!
1.முன் ஜென்மத்தில் விட்ட குறையை
2.ஆவி உலகில் இருந்து அறிந்திட “அவகாசம் இல்லாமல்” வந்து குறையுடன் பிறக்கின்றது.
ஆனால் நல்ல நிலையில் ஆவி உலகில் சுற்றும் மறு ஜென்மம் எடுக்கும் வரை உள்ள ஆவிகள் தன் நிலை உணர்ந்து தன் நிலைக்கு ஏற்ற இடமாகத்தான் பிறக்கும்.
குழந்தை பிறப்பதற்கு முதல் ஆவி உலகில் உள்ள வரை அவரவருக்கு முன் ஜென்மம் தெரியும் என்றேன்.
1.ஆவி உலகில் உள்ள பொழுது எந்த நிலையில் பிறக்கலாம்…? என்று தான் தெரியும்.
2.பிறந்த பின் தன் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும்…? என்பது தெரிந்திடாது.
3.பிறந்த பின் முன் ஜென்மமும் ஆவி உலகமும் அறிந்திட முடியாது. இப்பிறவிக்கு எல்லாமே மறைக்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் ஈசனின் சக்தியே விளையாடுகிறது.
பிறப்பு இறப்பு ஆவி உலகம் எல்லாம் அறிந்த மனிதனால் அந்த ஈசனின் சக்தியை மட்டும் அறிந்திட முடிவதில்லை. பல கோணங்களில் ஆண்டவன் என்று வணங்குகிறான்.
அந்த ஈசனின் சக்தியை உணர்ந்த மகா தவ முனிவர்களும் இந்த மனிதர்களுக்குப் புகட்டிடவில்லை. அந்தச் சக்தி நிலையைப் பற்றித் தெரிந்திருந்தாலும்
1.இக்கலியில் வந்த மனிதர்கள்
2.அதையும் தன் வழிக்கு உண்ணக் காசாக்கி இருப்பார்கள்.
அதனால் தான் முனிவர்கள் நிலையில் தன்னையே தன் உடலையே அச்சக்தியின் அருளுக்கு அடிபணிய வைத்து அச்சக்தியின் அருள் எப்படி உள்ளது…? எந்த நிலையில் அந்தச் சக்தியின் அருளைப் பெற்று மக்களுக்கு அருளிடலாம் என்று செயல்படுத்தினர். போகரின் நிலை எல்லாம் அப்படித் தான் வந்ததப்பா…!
உன் நிலையில் ஜெபமிருக்கின்றாய். அஜ்ஜெபத்தின் நிலையில் ஈசனின் சக்தியை உன் நிலைக்கு ஈர்த்திடப்பா…!
எப்படி ஈர்ப்பது என்கிறாய்…?
கண்ணில் இல்லையப்பா ஒளி எல்லாம்.
1.இவ்வெண்ணத்தில்… உன் உயிரில்.. புருவத்தின் மேல்…
2.நெற்றியில் இந்நிலையில் தான் ஒளியப்பா…!
கனவில் பார்க்கின்றாய் பல நிலைகளை.. கண்களை மூடிக் கொண்டு…! அந்நிலை எப்படித் தெரிகின்றது…? கடும் இருட்டில் பல பிராணிகள் பூனை எலியைப் பிடிக்கின்றது. எலி பூனையைக் கண்டு தப்பி ஓடுகின்றது. நாய்க்கும் நரிக்கும் பாம்புக்கும் எப்படியப்பா இருட்டில் கண் தெரிகின்றது…?
சூரிய ஒளியில் இருந்துதான் கண் தெரிகிறது… கண் பார்வையினால்… என்று எண்ணுகிறாய்…!
தவ யோக முனிவர்கள் எல்லாம் அவர்கள் அமர்ந்த இடத்திலிருந்தே அனைத்தையும் அறிந்திட்டார்களே…! அது எப்படியப்பா…? ஒவ்வொரு மனிதருக்கும் அவ் ஈசனின் சக்தியில் எல்லா அருளும் உண்டப்பா..!
1.அவரவர்கள் எடுத்து அவர்களின் நிலையை அறிந்திட்டால்
2,கண்ணும் வேண்டாம்… உண்ண உணவும் வேண்டாம்…!
3.அவ் ஈசனின் சக்தியையே தன் உடல் முழுவதும் ஈர்க்கச் செய்திடலாம் புரிந்ததா…?
ஒவ்வொருவரும் அவ் ஈசனின் சக்தியில் இருந்து பெற்றிருப்பதால் அவரவர்கள் வழியிலிருந்தே அருள் புரிகிறார்கள். இந்நிலை தான் கொங்கணவருக்கும் போகருக்கும் அகஸ்தியருக்கும் கோலமாமகரிஷிக்கும் ஐயப்பனுக்கும் இன்னும் பல மகரிஷிகளுக்கும்…!
1.ஆண்டவன் என்றால் இப்பொழுது யார் என்று புரிந்ததா…?
2.பல வழிச் சாமியார்களின் நிலையும் கோவில்களின் நிலையும் புரிகிறதா…?
3.ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் நிலையும் புரிகிறதா..?
இந்தப் பாட நிலையை வைத்து நான் யார்…? நீ யார் என்னும் நிலை புரிந்திருக்கும்.
1.உன்னையே நீ வணங்கு.
2.உன்னுள்ளே ஈசன் உள்ள பொழுது உன்னுள்ளே அவ் ஈசனின் சக்தியை ஈர்த்திடப்பா..!
இந்த நிலையில் அறிந்திடுவாய் எல்லாமே…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மெய்ஞானிகளின் அருள் சக்திகளை யாம் பெறுவதற்குப் பல சம்வங்களை நிகழ்த்தினார். எமக்குப் பல சிரமங்களை ஏற்படுத்தி அதைக் கொடுத்தார்.
1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுது சிரமங்கள் வருகின்றதோ
2.சந்தர்ப்பம் எது உங்களை இன்னலையும் மன பயத்தையும் கோபத்தையும் ஆத்திரத்தையும் விரக்தியையும் ஏற்படுத்துகின்றதோ
3.அப்பொழுது “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
மெய் ஞானிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் சேர்த்து அந்தத் துன்பத்தை விளைய வைக்கும் உணர்வின் ஆற்றலைத் தணியச் செய்யுங்கள்.
உங்கள் உடலில் வியாதியும் எண்ணத்திலே பல கலக்கமும் மன வேதனையும் மனக் குடைச்சலையும் ஏற்படுத்தும் இந்த உணர்வின் ஆற்றலை அது நம்மை ஆட்டிப்படைக்காதபடி நமக்குள் நல்லதாக மாற்றிடல் வேண்டும்.
கருணைக் கிழங்கை வேக வைத்துப் பல பொருள்களை அதனுடன் இணைத்துச் சுவையாக்கி நாம் உட்கொள்கின்றோம். அதன் மூலம் உடலுக்கு நாம் ஆரோக்கியமான நிலைகள் பெறுகின்றோம்.
அதைப் போன்று எத்தகைய துன்பங்கள் நமக்குள் வந்தாலும் அந்தத் துன்ப உணர்ச்சிகள் நமக்குள் தூண்டாவண்ணம் அதை அடக்கி
1.இன்பத்தின் சொல்லாலும்
2.இன்பத்தின் உணர்வுகளை நமக்குள் தூண்டி
3.விண்ணின் ஆற்றலை நாம் பெறும் தகுதியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் இதைப் போன்று விண்ணின் ஆற்றலைக் கூட்டிக் கொள்ளும் நல்ல சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ளலாம்.
அப்பொழுது அந்த மெய் ஞானிகளின் அருளாற்றல்கள் உங்களுக்குள் பெருகும். யாம் இப்பொழுது உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் மெய் ஞானிகள் அவர்களுக்குள் விளைய வைத்து வெளிப்படுத்திய உணர்வுகள் தான்.
அந்த மெய்ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இன்னல்களிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ள எத்தகைய உணர்வின் ஆற்றலைத் தனக்குள் கூட்டிக் கொண்டார்களோ அத்தகைய உணர்வின் தன்மையை
1.நீங்கள் சாதாரணமான நிலையில் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே
2.உங்களுக்குள் பதியச் செய்து விடுகின்றோம்.
“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரன ஈசனிடம் தொடர்பு கொள்ளுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் பாய்ச்சுங்கள்.
வேண்டியவருக்கு ஒரு நியாயமும் வேண்டாதவருக்கு ஒரு நியாயமும் என்று தான் உணர்வுகள் இயக்குகிறது
வேண்டாதவரைப் பார்க்கும் பொழுது எதிரி என்ற நிலையில் அவர் செய்வது தப்பு என்று நினைக்கின்றோம்… அடுத்தவரிடத்திலும் அதைத் தான் சொல்வோம்.
அவன் நல்லதையே செய்தாலும் கூட…
1.அவனை எந்தக் குறிக்கோளுடன் நாம் முதலில் பதிவு செய்திருக்கின்றோமோ
2.பார்த்தவுடனே ஊரை “ஏமாற்றுவதற்கு என்னவோ… அதைச் செய்கின்றான்…” என்று சொல்கிறோம்.
அவன் நல்லதைச் செய்வான். அவன் செய்வதை நம் மனது ஏற்றுக் கொள்வதில்லை. அவனைப் பற்றிய தவறான உணர்வுகளையே நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.
அதே சமயம் நமக்கு வேண்டியவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தப்பு செய்து விட்டால்… அது எப்படியோ தெரியாமல் நடந்து விட்டது… “அவர் தப்பே செய்ய மாட்டார்…!” என்று தான் நாம் சொல்கிறோம்.
1.இங்கே பாசத்தால் தவறை மறைக்கின்றோம்… தப்பை வளர்க்கின்றோம்
2.அங்கே வெறுப்பால் நியாயத்தையே மறைக்கின்றோம்… ஆனால் தவறை வளர்க்கின்றோம்
இதைப் போன்று நம்மை அறியாது வரக்கூடிய உணர்வுகள் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் வந்து நமக்குள் இயக்குவதைத் தான் கூனி என்றும் சகுனி என்றும் காவியங்களில் காட்டுகிறார்கள்.
ஒருவர் மீது பற்று இல்லை என்றால் அந்த வெறுப்பின் தன்மை வரும் பொழுது கூனி… பழி தீர்க்கும் உணர்வு கொண்டு அது இணைத்து விடுகின்றது.
இவ்வாறு நமக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் அவர்கள் நல்லது செய்திருந்தாலும் கூட…
1.என்ன பெரிதாகச் செய்து விட்டார்…!
2.ஏமாற்றுவதற்குத் தான் இதைச் செய்கிறார்..! என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றோம்
இராமாயணத்தில் கூனி என்ன செய்கிறது…?
இராமன் உயர்ந்தவனாக இருந்தாலும் அது பிடிக்காதபடி அவனைப் பகைமையாக ஊட்டுவதற்கு சிற்றன்னையான கைகேயியிடம் அதை உருவாக்குகின்றது.
தசரதன் உன்னுடைய கணவன் தானே… அவனுக்குப் பிறந்த மகன் தானே பரதனும்…! அவனுக்கு ஏன் அந்த அரசில் உரிமை கிடையாது…? என்ற உணர்வை ஊட்டுகிறது.
இராமன் இருந்தால்தான் சாம்ராஜ்யத்தை ஆள முடியும். இங்கிருந்து அவனை அனுப்பி விட்டால் “பரதன் எளிதாக ஆட்சிக்கு வரலாம்…” என்று இந்த ஆசையின் உணர்வுகளைத் தூண்டுகிறது கூனி.
இராமனைப் பிடிக்கவில்லை… அதனால் பகைமையை ஊட்டி அவ்வாறு செயல்படுகிறது. ஏனென்றால்
1.நமக்குள் எதிரியான உணர்வுகள் சந்தர்ப்பத்தில் உடலுக்குள் அணுக்களாக விளைந்து விட்டால் அது எதைச் செய்கிறது..?
2.ஆசையினால் குற்றவாளிகளை எப்படி உருவாக்குகின்றது…? என்ற உணர்வைத்தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.
காவியங்களில் மகரிஷிகளால் காட்டப்பட்ட மூலக் கருத்துக்களை நாம் உணர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் எளிதில் விடுபட முடியும்.
பகைமைகளை அகற்றி ஒன்றி வாழும் உணர்வை நமக்குள் பெருக்கி உயிருடன் ஒன்றி என்றும் ஏகாந்தமாக வாழும் வழியைத் தான் காவியங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
தென்றலும் ஆண்டவன் தான்… சூறாவளியும் ஆண்டவன் தான்..! – ஈஸ்வரபட்டர்
ஆண்டவன் என்பவன் கருணைஸ்வரூபன் மட்டும் தானா…? ஆண்டவன் என்பவன் எங்குள்ளான்…? என்றெல்லாம் சொல்லியுள்ளேன். ஆண்டவனின் நிலை என்ன…?
இயற்கையில் கலந்துள்ள ஒளி… காற்று… தண்ணீர்… இந்நிலையில் கலந்துள்ளவன்தான் ஆண்டவன்… என்று நான் செப்பியுள்ளேன்.
அப்படி இருக்கும் பொழுது ஆண்டவனால் ஏனப்பா “ஒரே நிலையில்” ஒளி பாய்ச்சவும்… மழை பெய்யவும்… காற்று அடிக்கவும் முடியவில்லை…?
1.இடி இடித்து மழை பெய்கிறது… அதி மழையும் பெய்கிறது
2.பெரும் காற்றும் சூறாவளிக் காற்றும் வீசுகிறது
3.குளிர்ந்த ஒளியும் கடும் வெப்பமும் வருகிறது.
ஆண்டவனின் நிலையில் ஏனப்பா இவ்வளவு மாற்றங்கள்…?
கருணைஸ்வரூபா…! என்று ஆண்டவனை என் சிஷ்யன் (ஞானகுரு) பாடுகின்றான். “கருணைஸ்வரூபா…!” என்று பாடும் பொழுது அவன் மனமும் கருணையுடன் சுற்றுகின்றது.
1.கருணையுடன் வேண்டும் பொழுது
2.அந்தக் கருணை நிலை வேண்டுபவர்களின் மனதிலேயே வருகிறது.
3.எண்ணத்திலும் அந்த நிலையே அப்பொழுது சுற்றுகிறது.
அந்நிலையில் இயற்கைத் தன்மையில் கலந்துள்ள ஆண்டவனும் அதை வேண்டுபவர்களுக்கு அந்நிலையில் ஒளி பாய்ச்சி அருள் புரிகின்றான்.
1.அவன் நிலையிலேயே “கருணை நிலை வேண்டினால் தான்…” அந்நிலையே வருகிறது.
2.அந்நிலை இவன் நிலைக்குப் பெற முடிகிறது.
அந்நிலையில் பூஜை செய்வது தான் நீ வணங்கும் முருகனின் மூலமாக அருள் கொடுக்கும் போகரின் நிலை எல்லாம். பழனி ஸ்தலத்தின் நிலையும் அதுவே தான்…!
சில நிலையில் பூகம்பம் வந்து அடங்காத காற்றும் அடங்காத மழையும் அதி உஷ்ணமும் வரும் பொழுது கருணைஸ்வரூபமான ஆண்டவன் ஏனப்பா அந்நிலையை அளிக்கின்றான்…?
பழனி ஸ்தலத்தின் வழியைச் சொல்கிறேன். ஆனால் கல்கத்தா காளியின் நிலை என்ன..? தென்றல் காற்றப்பா போகர் பெற்ற நிலை. பெரும் சுழல் காற்றப்பா கல்கத்தா காளியின் நிலை.
1.போகரும் அந்த ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தான் முருகனாக அருள் புரிகின்றார்.
2.கல்கத்தா காளியும் ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தான் பெரும் ஆவேச நிலையில் அருள் புரிகின்றாள்.
கல்கத்தா காளியின் நிலை என்னப்பா…? காளி என்பவள் யாரப்பா…?
இடி மின்னலையும் பூகம்பத்தையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டு பெரும் ஆவேசத்துடன் அடங்காத நிலையில் அமர்ந்துள்ளவள் தான் கல்கத்தா காளியாக அமர்ந்துள்ள கடும் தவம் புரிந்த பெண் ஒருத்தியப்பா அவள்.
அக்காளியின் நிலை ஆவேச நிலையப்பா. அடங்காத ஆவேசமான நிலையப்பா…! ஆணவத்தையும் ஏமாற்றுத் தன்மையையும் எரிக்கும் குணம் உடையவள்.
நல்லோர்க்குக் கருணை புரிவதில் பெரும் நாட்டம் கொண்டவள். தவறும் நிலையைக் கண்டு விட்டால் எரிமலையும் பூகம்பமும் தானப்பா அவள்…!
அவன் தந்த ஒளியை அவனதாக்கி அவனுடன் ஐக்கியமாகுவது தான் மெய் ஒளி பெறும் ஆண்டவனின் சக்தி…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
எத்தகைய குறைகளைக் கண்டாலும் நமக்குள் உட்சென்று நம்மை வேதனைப்படச் செய்யும் செயல்களைத் தடுத்து நிறுத்த “ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
அதை நீங்கள் பயன்படுத்துவதற்கு யாம் பனிரெண்டு வருட காலம் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி காடு மேடெல்லாம் அலைந்து அந்த ஆற்றலைப் பெற்றோம்.
ஒரு மருந்தைத் தயார் செய்து நோய் போய்விடும் என்று வைத்தியர்கள் சொல்கின்றார்கள்.
வைத்தியத்தின் முறைகளில் நோய் நீங்கினால் அவருக்குப் பொருள் கிடைக்கும் என்ற நிலைகளில் வைத்தியர்கள் செய்கின்றார்கள்.
நமது குருநாதர் கொடுத்த நிலைகளோ துன்பங்கள் விளைய வைக்கும் நிலைகளிலிருந்து மீள்வதற்கு என்னைப் பனிரெண்டு வருட காலம் காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.
அவர் சொன்ன முறைப்படி அங்கே அலைந்தோம்.
1.தாவர இனத்தின் உணர்வின் சத்து எவ்வாறு வேலை செய்கின்றது…? என்ற நிலையும்
2.மனித சஞ்சாரமே இல்லாத நிலைகள் அங்கே அமைதி கொண்டிருக்கப்படும் பொழுது
3..மனித உணர்வின் எண்ணங்கள் எவ்வாறு செயலபடுகின்றது…? என்ற எண்ணத்தை எடுத்து
4.அதைப் மனித உடலில் விளைய வைத்துத் துன்பத்தை நீக்கிடும் ஆற்றலை ஞானியர்கள் எவ்வாறு பெற்றார்கள்…? என்ற நிலையை
5.எம்மைப் பெறச் செய்தார் குருநாதர்.
அதைப் பெறச் செய்தபின் எனக்கு அடிக்கடி துன்பங்களை விளைய வைத்து அந்தத் துன்பத்தை நீக்க… “நீ எப்படி எடுக்க வேண்டும்…” என்றும் உணர்த்தினார்.
அவர் காட்டிய வழிப்படி யாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலால்தான் எமக்குள் வரக்கூடிய துன்பத்தையும் எமக்குள் வரக்கூடிய வியாதியையும் நிவர்த்தி செய்ய முடிந்தது.
நமது குருநாதர் காட்டிய வழியின் தன்மையை எமக்குள் பதியச் செய்து கொண்டேன். அதை ஒவ்வொரு நேரத்திலும் எடுத்து அதிலே வளர்த்துக் கொண்ட “அந்த உணர்வின் எண்ண அலைகளைத்தான்” உபதேச முறைப்படி
1.ஒவ்வொரு உணர்வின் அலைகளுக்கும் (நன்மை தீமைகளை உருவாக்கும்)
2.நன்மையை உருவாக்கும் உணர்வுடன் கலந்து உபதேசிக்கப்பட்டு
3.இந்த உணர்வுகளை உங்களுக்குள் திணிக்கின்றேன்.
4.உங்கள் துன்பத்தைப் போக்க உங்களுக்குள் அந்த நல்ல உணர்வினைப் பதியச் செய்கின்றேன்.
துன்பத்தை ஊட்டும் உணர்வுகள் உங்களை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளைத் தூண்டச் செய்கின்றது.
நீங்கள் அந்த மனதின் நிலைகளை அடக்கி உங்களைக் காக்கக்கூடிய அந்தச் சக்தியை நீங்கள் பெறுவற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.
அந்தப் பனிரெண்டு வருட கால அனுபவத்தின் நிலையை யாம் சொல்லும் பொழுது அந்தத் துன்பத்தினுடைய நிலைகளை மெய்ஞானியின் அருள் ஒளியுடன் கலந்து திரும்ப உபதேசத்தின் வாயிலாக “வாக்கின் நிலைகள் கொண்டு…, உங்கள் உடலிலே பதியச் செய்கின்றோம்”.
அவ்வாறு பதியச் செய்த அந்த வித்தின் நிலைகளுக்கு மெய் ஞானிகளின் சக்தியைப் பெறுவதற்கு நீங்கள் எந்த நிமிடமானாலும் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி எடுக்க முடியும்.
மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் நினைத்துச் செயல்படுவீர்கள் என்றால் துன்பத்தைப் போக்கக் கூடிய மெய்ஞானியின் அருள் சக்தி உங்களுக்குள் ஊடுருவச் செய்கின்றது.
1.உங்களையறியாமல் ஆட்டிப்படைக்கும் மனக்குழப்பத்தை மனக்குடைச்சலை இது நிவர்த்தி செய்கின்றது
2.உங்கள் எண்ணத்திற்குள் தெளிவாக்கி உங்கள் வாழ்க்கையில் உங்கள் செயலையும் தெளிவுபடச் செய்ய இது உதவுகின்றது.
3.வியாபாரத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
4.குடும்பத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
5.குடும்பத்திலும் ஒற்றுமையாக்கச் செய்கின்றது.
ஒரு நீரின் கீழ் தெளிந்த நீராக இருந்தவுடன் கீழே இருக்கக் கூடிய பொருளை நாம் காணமுடிகின்றது. நீர் தெளிவாக இருந்தாலும் அதே நீரின் தன்மைகள் “அலைபாயும் பொழுது… தெளிவாகத் தெரிவதில்லை”.
நன்மையான நிலைகளை நாம் தெளிவாக்க முடியாத நிலைகளில் இருக்கும் அந்த நேரத்தில் மெய் ஞானியின் உணர்வின் அலைகளை நமக்குள் செலுத்தப்படும் பொழுது
1.பல உணர்வின் அலைகள்
2.அலைந்து கொண்டிருக்கும் நிலையை
3.அது நமக்குள் சமப்படுத்தி நிறுத்தும்.
வெளியிலிருக்கும் எதிரிகளைக் காட்டிலும் நமக்குள் உருவாகும் எதிரிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
நாம் தவறே செய்யவில்லை என்றாலும் கூட அடுத்தவர்கள் நம் மீது ஏதாவது குறையாகச் சொல்லி விட்டால் அவர்கள் உணர்வுக்கொப்ப அது ஆழமாகப் பதிந்து விடுகின்றது.
நமக்குள் பதிவாகி விட்டால் “என்னை இப்படிச் சொன்னானே… செய்தானே…!” என்ற இந்த உணர்வுகள் நமக்குள் எதிரியை வளர்த்துக் கொண்டே இருக்கின்றது. அப்பொழுது
1.நம் நல்ல குணங்களுக்கு இரையே கொடுப்பதில்லை… அதை வளர்ப்பதும் இல்லை
2.நம் நல்ல குணங்களை ஒடுக்க நாமே காரணமாகின்றோம்
அந்த நல்லதைக் காப்பதற்காகச் சாதாரண நிலைகளில் கொடுக்கப்பட்டது தான் விநாயகர் தத்துவம். அன்று மெய் ஞானியான அகஸ்தியனால் இது உருவாக்கப்பட்டது.
அவன் தனக்குள் கண்டுணர்ந்ததைத் தன் இன மக்கள் அனைவரும் பெறுவதற்காக இந்த முறையை வகுத்துக் கொடுத்தான்.
1.துருவ நட்சத்திரமாக இருக்கும் அவனின் ஆற்றலை நாம் பருகினோம் என்றால்
2.எத்தகைய தீமைகளையும் அகற்ற முடியும்… ஒடுக்க முடியும்… அதைப் பழக்கப்படுத்த வேண்டும்.
உதாரணமாக ஒருவர் நம்மைத் திட்டி விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரை உற்றுப் பார்த்த பின் நமது உயிர் அதை இழுத்து அந்த உணர்வின் தன்மையை உணர்ச்சிகளாக இயக்கிச் செயலுக்குக் கொண்டு வருகின்றது.
அடுத்து உடலுக்குள் அதை அணுவாகவும் இதே உயிர் தான் உருவாக்குகின்றது. எவ்வளவு வேதனைப்படும்படி அவன் சொன்னானோ அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக இங்கே விளைந்து விடுகின்றது.
இதைத்தான் உயிரான விஷ்ணு வரம் கொடுக்கின்றான் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. விஷ்ணுவுக்குப் பிறந்த குழந்தை (பிரம்மா) அந்த விஷத்தின் தன்மையாக உருவாகி விடுகின்றது.
ஆகவே பிரம்மா உருவாக்குகின்றான்… அது மீண்டும் தன் இனத்தை உருவாக்கும் தன்மை பெறுகின்றது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… அந்த ஞானமாக வேதனையாக இயக்கும்.
எந்த வேதனையை உருவாக்கும்படி முதலிலே சொன்னானோ அதனால் உருவான அந்த உணர்வுகள் பிரம்மமாகத் தன் இனத்தை மீண்டும் சிருஷ்டிக்கும் வன்மை பெற்றது.
1.வேதனைப்படச் செய்த அந்த அணு மீண்டும் அதே வேதனையை இங்கே உருவாக்குகிறது.
2.அந்த ஞானத்தின் வழிகளிலேயே அது செயல்படும் என்று
3.இவ்வளவு கருத்துடன் அந்த இயற்கையின் நிலைகளை நாம் கண்டுணர இதைக் கொடுத்திருக்கின்றார்கள் ஞானிகள்.
ஒரு விஷமான வித்து காற்றில் இருந்து தன் விஷமான உணர்வின் சத்தை நுகர்ந்து தான் அது விஷச் செடியாக வளர்கின்றது.
அதே போல் தான்
1.எந்த மனிதன் நம்மை வேதனைப்படச் செய்தானோ
2.அவனின்று வரும் இந்த உணர்வை அந்த அணு நமக்குள் அது கிளர்ந்து… சுவாசித்து
3.அதனின் மலத்தை உடலிலே இடும் பொழுது நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அந்த வேதனை தாங்காது
4.அதனுடய செயலைக் குறைக்கச் செய்கின்றது..
5.நம் உடலில் அது நோயாக வருகின்றது
ஆனால் நாம் என்ன நினைக்கின்றோம்…!
நம்மை வேதனைப்படச் செய்தான்… அவனைச் சும்மா விடுவேனா…? என்று கோபத்துடன் எண்ணும் போது இந்த விஷத் தன்மையான அணுக்கள் நமக்குள் பெருக ஆரம்பிக்கிறது.
மீண்டும் அவர்களை எண்ண… எண்ண… நமக்குள் நோயாகவே விளைகின்றது… எதிரியாகின்றது…!
1.எதிரிக்கு நாம் இடம் கொடுத்து விடுகிறோம்…
2.நம்மை நாம் மறந்து விட்டோம்…! என்ற நிலைதான் இங்கே வருகின்றது.
குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் இதை எல்லாம் எனக்கு (ஞானகுரு) அனுபவபூர்வமாகக் கொடுத்தார். அவர் கொடுத்த அதே வழியில் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்குள்ளும் அந்த ஞானிகளின் அருள் உணர்வைப் பதிவு செய்கின்றோம். ஆகவே அந்த மெய் ஞானியின் உணர்வைப் பெற நாம் தியானித்தல் வேண்டும்.
பிறர் நம்மை வேதனைப்படச் செய்தாலும் அடுத்த கணமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அவனிடம் வேண்டி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை செலுத்துதல் வேண்டும்.
எத்தகைய நஞ்சான உணர்வும் நம் உடலுக்குள் உருவாகாதபடி நாம் தடுத்துக் கொள்ள வேண்டும்.
என் வழிக்கு நீங்கள் வாருங்கள் – ஈஸ்வரபட்டர்
ஒரு கொசு எப்படித் தனக்குகந்த ஆகாரம் உள்ள இடத்தில் சுற்றிக் கொண்டுள்ளதோ அப்படித்தானப்பா இந்த மனித மனங்களும் எண்ணங்களும் பிறவிப் பயனை வைத்து அடுத்த பிறவிக்கு வர முற்படுகிறது.
ஒரு அரசனின் வயிற்றில் அவதரிக்கின்றான் அரச குமாரன். தன் நிலைக்கு உகந்த இடமாகத்தான் ஆவி நிலையிலிருந்து அவதரிக்கின்றான் அந்தக் குமாரன்.
ஆனால் ஆயிரம் ஆயிரமாக அந்த அரசன் செல்வத்தைத் தேடி வைத்திருந்தாலும் இந்த அரச குமாரன் அந்தச் செல்வத்தை அவன் வழியில் அழித்துவிடுவதில்லையா…? அப்பொழுது அரசனும் ஆண்டியாகிவிடுகின்றான்.
ஆனால் ஏழ்மை நிலையில் பிறக்கும் சில குழந்தைகள் தன் ஏழ்மையை எண்ணிடாமல் எப்படியும் உயர்ந்த நிலை அடைந்திடலாம் என்று எண்ணும் பொழுது தன் எண்ணத்திலேயே செல்வ நிலைக்கும் உயருகிறது.
1.அந்த நிலையிலிருந்து உயரும் குழந்தையின் நிலைக்கும்
2.பூர்வ புண்ணிய நிலையிருந்தால் தான் உயர முடியும்.
3.எண்ணமே அப்பொழுது தான் தோன்றிட முடியும்.
உங்கள் எண்ணத்தில் சில சந்தேகங்கள் தோன்றியிருக்கும். ஏன் ஆவி நிலையில் இருந்து கொண்டே எல்லோரும் செல்வம் உள்ளவரின் வயிற்றில் அவதரிக்கலாமே….! என்று எண்ணலாம். இதிலே தானப்பா அந்த ஆண்டவனின் சக்தி உள்ளது.
உடலிலிருந்து ஆவி பிரியும் பொழுது அந்த ஆவியின் ஆசை நிலையை வைத்துத்தான் பிறக்கின்றது… “மறு பிறப்பு” என்றேன் முதலிலேயே.
அந்த ஆசை நிலை என்பது பல ரூபத்தில் உள்ளது. பணம் காசு மட்டுமல்ல…! பந்தபாசம் கோபதாபம் எல்லா நிலைகளிலுமே அந்த ஆசை நிலைகள் உள்ளன. ஆவி நிலையில் இருந்து கொண்டு அந்த ஏழ்மை நிலையை அறிந்து தான் அந்தக் குழந்தை பிறக்கின்றது.
தன் நிலையில் உயர்ந்திடலாம் என்ற எண்ணத்திலும் தன்னால் அந்தக் குடும்பத்தை உயர்த்திடலாம் என்ற நிலையிலும் எண்ணிப் பிறக்கிறது.
1.ஆனால் பிறந்தவுடன் தான் எல்லாமே மறைக்கப்படுகிறதே…!
2.அச்சக்தியின் நிலையிலிருந்து அங்கு தான் இருக்கிறதப்பா ஆண்டவனின் சக்தி.
அந்தச் சக்தி நிலையைப் பெறத்தான் சித்தர்கள் தவமிருந்து பல பேறுகளைப் பெற்றார்கள். ஆனாலும் அந்த ஆதி சக்தியின் அண்ட கோடிகளில் அடங்கி உள்ள அந்த முழுச் சக்தி நிலையையும் இன்னும் எந்தச் சித்தனாலும் பெற முடியவில்லையப்பா…!
சித்தர்கள் மகரிஷிகள் எல்லோருமே அந்தச் சக்தியின் நிலையைப் பெறத்தான் இன்னும் தவமிருந்து ஜெபமிருந்து கொண்டுள்ளார்கள்.
இப்பொழுது தான் நீங்கள் கடுகளவிலிருந்து மிளகளவு வந்துள்ளீர்கள்.
1.இன்னும் உலக நிலையையே என்ன…? என்று தெரிந்திடாமல் குடும்ப நிலையிலேயே கலங்கியுள்ளீர்கள்.
2.ஜெப நிலையைக் கூடிய விரைவில் உயர்த்திக் கொள்ளுங்கள்.
3.இந்தப் பாட நிலையிலிருந்து பலவும் பல வழியிலும் புரிய வைக்கின்றேன்.
நான் (ஈஸ்வரபட்டர்) பெற்ற ஜெப அருளிலிருந்து என் வழிக்குத் தெரிந்ததை உங்கள் வழிக்கும் புகட்டுகின்றேன். என் வழிக்கு நீங்களும் மேலும் வந்திடலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஒரு பொருளுக்குள் ஒரு விஷம் பட்டால் அனைத்தையுமே நாசமாக்குகின்றது. இதைப் போன்று
1.நம் உணர்வுக்குள் சிறிதளவு வேதனையாகிவிட்டால்
2.நமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் சேர்கிறது.
ஒரு குழந்தை தவறு செய்தால் “இப்படி ஆகிவிட்டதே” என்று வேதனையை எடுத்தீர்கள் என்றால் இது விஷம்.
இந்த விஷமான உணர்வு கொண்டு குழந்தையைப் பார்க்கப்படும் பொழுது விஷம் அதிகமாகக் கூடி அவன் புத்தியையே மட்டமாக்கும்.
இப்படிப் பண்ணிவிட்டாயே…? பாவி என்று சொல்லி இந்த விஷத்தின் தன்மை கொண்டு ஆக்கப்படும் பொழுது அவனிடம் இருக்கக்கூடிய அந்த வளர்ச்சியின் தன்மையை மட்டமாக்கி அங்கே விஷமாகி அவன் சிந்திக்கும் செயலையும் இழந்து விடுகின்றான்.
நமக்குள் என்ன சக்தி இருக்கின்றது…? என்று நினைத்துப் பார்த்தால், சிந்தித்துப் பார்த்தால் இந்தச் சொல் எதிலிருந்து வருகின்றது…? என்பது தெரியும்.
நாம் சுவாசித்த உணர்வின் தன்மைகள் உயிரில் பட்டு உணர்ச்சிகளாகின்றது.
1.நாம் பேசும் பொழுது அந்த உணர்வின் ஒலியாக மாறி
2.இந்த உணர்வுகள் மற்றொன்றுடன் கலக்கப்படும் பொழுது
3.அந்த உணர்ச்சிகளைத் தூண்டிச் சுவாசிக்கச் செய்து அங்கே விளைந்து விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் மீள்வதற்கு மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி ஆத்ம சுத்தி செய்து நமக்குள் துனபங்கள் தாக்கும் துன்பங்களை உருவாக்கும் நிலையை மாற்ற வேண்டும்.
கருணைக் கிழங்கை வேகவைத்து விஷத்தின் தன்மையை நீக்குகின்றோம்.
எத்தனையோ விஷத்தன்மை கொண்ட எத்தனையோ உணர்வு கொண்ட காய்கறிகளை வேக வைத்து அதிலிருக்கக்கூடிய காரல்களை நீக்கிச் சுவை கொண்டதாக மாற்றிக் கொள்கின்றோம்.
இதைப் போன்று நம் மனித வாழ்க்கையில் எத்தகைய துன்பமான நிலைகள் வந்தாலும் அதைத் நமக்குச் சாதகப்படுத்துவதற்கு வேக வைத்துச் சுவையாக்கும் நிலையாக ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
அப்படிச் செய்தால் அது சுவைமிக்க சொல்லாக நமக்குள் சென்று சுவையான செயல்களைச் செய்யக் கூடிய உணர்வுகளாகத் திருப்பிப் பேசும்படி செய்யும்.
அப்பொழுது நம் சொல்லைக் கேட்பவர்களுக்கும் மகிழ்ச்சி ஊட்டும் நிலைகளாக மாற்றும் சக்தி கிடைக்கின்றது.
நம் உணர்வைச் சுவையற்றதாக ஆக்காதபடி சுவையான தன்மையாக நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.
சிறிது காலம் யாம் சொல்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்குவப்படுத்திக் கொண்டால் அது தானாகவே பேசும்.
கோபம் வந்துவிட்டால் அடங்காத பையனை அடிக்கடி நினைத்தவுடன் கோபம் வருகின்றது. அதே மாதிரி அந்தப் பையன் நன்றாக ஆகவேண்டும் என்று தியானத்தில் எடுத்துக் கொண்டு
1.“நன்றாக ஆகவேண்டும் நன்றாக ஆகவேண்டும்” என்று
2.அடிக்கடி எண்ணினால் பையன் நல்லவனாக ஆகிவிடுகின்றான்.
3.தன்னாலே தன்னிச்சையாக வரும்.
இப்படிச் சொல்லிப் பழகிவிட்டால் அதே நிலைகள் வரும்.
ஒரு குழந்தை படிப்பிலே மட்டமாக இருக்கிறது. “படிப்பிலே இப்படி இருக்கிறானே…” என்று நாம் எண்ணும் பொழுதெல்லாம் மற்றவர்களிடத்தில் எல்லாம் சொல்வோம். நினைக்கும் பொழுதெல்லாம் இந்த வேதனைப்பட்டே நினைப்போம்.
இவ்வாறு நினைக்கும் பொழுது இந்த வேதனைகள் அவன் உடலிலே சேர்ந்து இதையேதான் உருவாக்கும்.
ஆகையினாலே இதையெல்லாம் நீங்கள் மனதிலே பக்குவப்படுத்தி இந்த நிலைகளெல்லாம் நீங்கவேண்டும் என்று ஆத்ம சுத்தியைச் செய்து வரும் தீமைகளைப் போக்கிக் கொள்ளுங்கள்.
“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உங்கள் உயிரிடம் நினைவைச் செலுத்துங்கள். ஓம் ஈஸ்வரா குருதேவா… உங்கள் அருளால் மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கியிருங்கள்.
மகரிஷிகள் வெளிப்படுத்திய சக்திகள் அனைத்தும் இங்கே சுழன்று கொண்டுள்ளது… அதைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும்
நாம் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்… அவர்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சுதல் வேண்டும்.
1.இப்படிச் செய்தால் அது உண்மையான தவமாக மாறுகின்றது
2.ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த முறையைக் கையாண்டு பழக வேண்டும்.
வெளியிலே எல்லோருக்கும் சொல்லி விடலாம். தன் குடும்பம் என்று வரும் போது தான் இதிலே பெரிய சிக்கலே வரும்.
ஏனென்றால் அடிக்கடி சந்திக்கும் நிலையும்… வெறுப்பு உணர்வை வளர்த்துக் கொள்வதாலும்… உடனே அந்த உணர்வைத் தூண்டிக் கோபமாகப் பேசச் சொல்லும்.
ஆகவே…. முதலில் வாரத்தில் ஒரு நாளாவது நம் குடும்பத்தில் எல்லோரும் ஒருங்கிணைந்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எண்ணிக் கூட்டுக் குடும்ப தியானம் செய்ய வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தியும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும். எங்கள் குடும்பம் ஒன்றுபட்டு வாழ வேண்டும். எங்கள் பார்வையால் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். பொருளறிந்து செயல்படும் திறன் அனைவரும் பெற வேண்டும் என்ற இந்த எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இது வளர வளர குடும்பத்திலே மகிழ்ச்சி பெருகும். நம் பார்வையும் சொல்லும் உலக மக்களின் தீமைகளை அகற்றும். நாம் இவ்வாறு எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் நாம் வாழும் பூமியிலேயும் படருகின்றது.
எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன்…
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக அணுக்களாக இருப்பினும்
2.அதைப் பருகி தனக்குள் வளர்க்கும் நிலை இல்லை.
நம் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு தான் இப்பொழுது அதைக் கவர்ந்து வளர்ப்பதற்குண்டான வழிகளை ஏற்படுத்துகின்றோம்.
அன்று அகஸ்தியனும் அவரைப் பின்பற்றிய வியாசரும் மற்ற ஏனைய ரிஷிகளும் எடுத்து அவர்கள் விளைய வைத்த ஒளியான உணர்வுகள் இங்கே மறைந்துள்ளது.
அதை நுகர்ந்து நமக்குள் விளைய வைத்துக் கொண்டால் மீண்டும் அதைப் பெருக்கும் நிலை வருகின்றது.
1.ஆனால் இதற்கு முன் அதைப் பெருக்கும் நிலை இல்லை
2.மகரிஷிகள் விண்ணிலே ஒளியின் சரீரமாக இருந்தாலும் அவர்கள் உமிழ்த்தும் உணர்வின் தன்மையை இங்கே பருகும் நிலை இல்லை
நாம் விண்ணை நோக்கி ஏங்கித் தியானித்து அந்த மகரிஷிகளின் அருளைப் பருகி எல்லோருக்குள்ளும் அது பெருக வேண்டும் என்று அந்த அலைகளை நாம் பரப்ப வேண்டும்.
1.முன்னாடி அந்த நிலை இல்லை
2.ஆனால் அதை இப்பொழுது நாம் உருவாக்குகின்றோம்
ஒவ்வொரு உணர்வுகளிலும் அதைப் பதிவு செய்யப்படும் பொழுது எத்தனையே லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு விளைய வைத்த அந்த அருள் உணர்வுகள் நமக்குள் விளைந்து
1.ஞானத்தையும் மெய்ப்பொருளைக் கண்டுணரும் உணர்வுகளும் நமக்குள் கருவாக உருப்பெறும்.
2.அதை குரு அருளால் உரு பெறச் செய்ய வேண்டும்
3.இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் அவசியம் இதைச் செயல்படுத்த வேண்டும்.
விட்ட குறைய இப்பொழுது முடிக்க வேண்டியதன் அவசியம் – ஈஸ்வரபட்டர்
எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…!
இந்தச் சொல்லைப் பாட நிலையின் முதலிலிருந்தே இன்று வரை சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
1.நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ
2.அதற்குத் தக்கவாறான சுவாச நிலையில் வருவது தான் எல்லாமே என்று பல முறை செப்பியுள்ளேன்.
பூர்வ ஜென்மப் பயனை வைத்து… முதல் ஜென்மத்தில் விட்ட குறையை முடிக்க.. ஆவி நிலையிலிருந்து தன் நிலைக்கு ஒத்த சுவாச நிலையை ஈர்த்துத் தான் “குழந்தைகள் பிறக்கின்றது…” என்று கூறியுள்ளேன்.
ஆண்டவனின் அருளில் பூர்வ ஜென்மத்தின் பலனை அவரவர்கள் நிலைக்கு எடுத்துக் கொண்டால் தான் அந்தப் பலனையே பெற்றிட முடியுமப்பா…!
போன ஜென்மத்தில் நீ செய்த பயனாக… பூர்வ ஜென்மத்தின் பலனால் பல புண்ணியங்கள் செய்தும்.. அந்நிலைக்கு சூட்சம நிலைக்கு ஆண்டவன் என்னும் நிலையின் ரிஷியின் நிலைக்கே வரும் தன்மையைச் சிறிதளவு தவற விட்டதனால் தான் “இந்த ஜென்மமே எடுத்துள்ளாய்…!”
இந்த ஜென்மத்திலும் பிறவி நிலையிலேயே உன் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தால் உன் நிலையும் வேறாகத் தான் இருந்திருக்குமப்பா…!
1.போன ஜென்மத்தில் நீ வைத்திருந்த ரிஷியின் தொடர்பினால்
2.இந்த ஜென்மத்திலும் உன்னை… உன் எண்ணத்தை… அவன் ஒரு நிலைப்படுத்தி வழி நடத்திச் செல்கின்றான்.
ஆகவே கால நிலையைத் தவற விட்டு விடாதே…!
இந்த ஜென்மத்தில் உன் எண்ணமெல்லாம் உயர் நிலையில் செல்வ நிலையில் இருந்ததனால் தான் உன் பூர்வ ஜென்மத்தின் பயனால் இந்த மெய் ஞானத்தைப் பெறும் பேற்றையே பெற்றாயப்பா…!
படிக்கும் ஒவ்வொருவருக்கும் புரிவதற்காக இந்த நிலையைப் புகட்டியுள்ளேன். பெற்ற சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள்.
1.மகரிஷிகளுடன் ஐக்கியமாகுங்கள்.
2.அவர்கள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முற்படுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
உதாரணமாக சாக்கடையைப் பூசி கொண்டு போகின்றோம் என்றால் அடுத்தவர்கள் நம்மைப் பார்த்துப் “போய்யா…!” என்று விலகித் தான் போய்க் கொண்டு இருப்பார்கள்.
(அது போல்) நீங்கள் சங்கடத்தையும் வெறுப்பையும் கோபத்தையும் ஆத்திரத்தையும் எடுத்துக் கொண்டு அடுத்தவர்களிடம் பேசினால் என்ன செய்யும்…?
நம் மீது அவர்களுக்குக் கண்டிப்பாக வெறுப்பு தான் வரும்.
அதற்குத்தான் ஞானிகள் தீபாவளி அன்று புத்தாடைகளை அணியும் நிலையைக் காட்டினார்கள்.
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வைப் புத்தாடையாக
2.ஒவ்வொரு சமயமும் நம் ஆன்மாவாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
அதிகாலையில் துருவ தியானம் இருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எந்தக் காரியத்தைச் செய்தாலும்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற நாங்கள் வேண்டும்.. எங்கள் குடும்பம் முழுவதும் படரவேண்டும்
2.எங்கள் தொழிம் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் வாழ்க்கை வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும்.
4.எங்கள் செயல் வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும்.
5.எங்கள் வாடிக்கையாளர்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரது வாழ்க்கையும் வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
அடிக்கடி இவ்வாறு எண்ணினால் இந்த உணர்வுகள் என்ன செய்கின்றது…?
கையிலோ உடலிலோ அதிகமாக அழுக்காகி விட்டால் அதை உடனுக்குடன் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.
நாம் உடுத்தியிருக்கும் உடை அழுக்காகிவிட்டால் அந்த அழுக்குத் துணியைக் கழற்றி விட்டு வேறு நல்ல துணியைப் போடுகிறோம்.
அது போல் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் இணைத்து வரும் தீமைகளை எல்லாம் சட்டையை மாற்றுகிற மாதிரி மாற்ற வேண்டும்.
ஒரு மான் புலியைப் பார்க்கின்றது. பயத்தின் காரணமாகப் புலியின் உணர்வுகளை அதிகமாக அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் இழுக்கின்றது.
1.புலியின் உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டே இருந்தால்
2.அடுத்து மான் புலியாகப் பிறக்கின்றது.
3.இந்தச் சட்டையைக் (மான்) கழற்றிப் போட்டு விட்டு (புலி) சட்டையை எடுத்துப் போட்டுக் கொள்கிறது.
ஒருவர் கஷ்டப்படுகிறார் என்று அவர்கள் துயரத்தைக் கேட்டறிந்து நாம் உதவி செய்தாலும் அவர்கள் பட்ட துயரம் நமக்குள் அழுக்காகப் படிந்து விடுகின்றது. நாம் கேட்டறிந்து நுகர்ந்த அந்தத் துயரத்தை நாம் நீக்குகின்றோமா…? ஆனால்
1.நாம் உடுத்தியிருக்கும் சட்டை மீது சாக்கடை விழுந்து விட்டது என்றால்
2.உடனே சட்டையைக் கழற்றிவிடுகின்றோம்
3.அடுத்து அந்தச் சட்டையைத் துவைக்காமல் மீண்டும் உடுத்துகின்றோமா…?
அப்போது அந்த மாதிரித் துயரப்படும் உணர்வுகளைக் கேட்டறிந்தபின் அருள் மகரிஷியின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று என்று சொல்லி
1.நம் சட்டையை மாற்றுகின்ற மாதிரி
2.உடனே அந்த அருள் ஒளிச் சுடரை மாற்ற வேண்டும்.
மகரிஷிகளின் கலாச்சாரத்தைக் கொண்டு வந்து உலகில் பரவிக் கொண்டிருக்கும் நச்சுத் தன்மையை அகற்றுங்கள்
உலகம் முழுவதும் நஞ்சாகப் பரவி இருக்கும் இந்த வேளையில்
1.எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மகரிஷிகள் பெற்ற உணர்வின் தன்மையை
2.அந்தக் கலாச்சாரத்தை இங்கே கொண்டு வர வேண்டும்.
சகோதர உணர்வுடன் வாழ வேண்டும்… எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்… என்ற அந்த மகரிஷிகளின் கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும்.
காரணம்… சிந்தனையற்ற நிலையில் மனிதன் இன்று அசுரனாகின்றான். அந்த அசுர சக்தியை மாற்றுவதற்கு நாம் நம் குருநாதர் காட்டிய நிலைகளில் அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்துப் பரப்பியே ஆக வேண்டும்.
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..! என்று நாம் சொல்லும் அந்த அகஸ்தியன் நமது நாட்டில் ஆதியிலே தோன்றிய மனிதன் தான் முதன் முதலிலே விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்தவன்.
அகஸ்தியன் தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி நம் பூமியின் வடக்குத் திசையில் துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டுள்ளான்.
1.இருளைப் போக்கி ஒளியின் சிகரமாக என்றுமே வாழச் செய்யும் கலாச்சாரம்
2.தென்னாட்டிலே தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானது
3.நம் தென்னாட்டில் மீண்டும் இது தழைக்கின்றது… வேறு எந்த நாட்டிலும் இல்லை.
தெற்கிலே உருவான அந்தக் கலாச்சார அடிப்படையில்தான் கருவில் வளரும் குழந்தைகளுக்கு அகஸ்தியன் உணர்வை இப்பொழுது உணர்த்துவதும் உணரச் செய்வதும்.
அத்தகைய சிசுக்கள் வளர்ந்தால் மெய்ப் பொருளின் ஆற்றலை நாமும் பெறலாம். அந்த உணர்வின் தன்மையை எடுத்து உலகம் முழுவதற்கும் பரவும்படிச் செய்யலாம். அதை நாம் வளர்த்தல் வேண்டும்.
தியானத்தில் இருப்பவர்கள் எந்தக் குடும்பத்துடன் தொடர்பு கொண்டாலும் அந்தக் குடும்பத்திலே கர்ப்பம் என்று தெரிந்தால் கருவிலிருக்கும் குழந்தைகள் அந்த அகஸ்தியன் உணர்வுகளைப் பெற்று ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.குடும்பத்தை ஒற்றுமையாக்கும் சக்தி கருவிலேயே விளைய வேண்டும்
3.இருளைப் போக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும்
4.உலகம் ஒன்றி வாழும் அந்த உணர்வின் சக்தி இந்த கருவிலேயே விளைய வேண்டும் என்று எண்ணிச் சொல்லுங்கள்.
அகஸ்தியன் உணர்வைப் பெற்றுத் தென்னாட்டிலே வளரும் அத்தகைய குழந்தைகள் எந்த நாட்டவரையும் காத்திடும் சக்தியாக வளரும்.
விண்ணுலக ஆற்றலை அகஸ்தியன் என்று கண்டுணர்ந்தானோ அதைப் போல எந்நாட்டவரும் விண்ணுலகை ஆற்றலைப் பெறும் தன்மையும்… மண்ணுலகில் வரும் நஞ்சினை வெல்லும் சக்தியும் பின் வரும்.
1.நாம் முன் செல்கின்றோம்.
2.பின் வருவோருடைய நிலைகளும் அதன் வழி செல்லும்.
இனம் இனத்தைத் தான் வளர்க்கும். எதை எடுத்துக் கொண்டாலும் ஒரு செடி வளர்ந்தால் தன் இனத்தை வளர்க்கிறது. தன் இனத்தின் சக்தியைத் தன் வித்திற்கே கொடுக்கின்றது.
இதைப் போலத் தான் தீமையான வினைகள் மனிதனுக்குள் விளைய வைத்து விட்டால் அந்த உணர்வின் தன்மை தன் இனத்திற்கு அதை ஊட்டி அந்தத் தீமையின் விளைவையே மனிதனுக்குள் இயக்கச் செய்கின்றது “இன்றைய நிலைக்குக் காரணம் இது தான்…!”.
இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்… மக்களை மீட்டுதல் வேண்டும். சிறிது பேர் தான் இருக்கிறோம் என்று எண்ண வேண்டாம். இது வளர வளர பல லட்சங்கள் ஆகும்.. பல கோடிகளாகவும் உருவாக்க முடியும்.
இரவில் தூங்கச் செல்லும் போதும் சரி… காலையில் எழுந்தவுடனும் சரி… ஆத்ம சுத்தியை எடுத்து
1.உங்களால் முடிந்த மட்டும் இந்த உலகம் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும்
2.அருள் வழியில் இப்படித்தான் இருக்க வேண்டும்… என்று தியானம் செய்யுங்கள்.
3.அதையே எழுத்தாக எழுதுங்கள்.
யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வுகளைக் கருத்தில் கொள்ளுங்கள். அதைக் கடைப்பிடித்து வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றுங்கள்.
எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவமிருங்கள். அந்த அருளை உலகெங்கிலும் பாய்ச்சுங்கள்.
சுவாசக்கண் மிகவும் முக்கியமானது – ஈஸ்வரபட்டர்
அகக்கண் மனக்கண் ஞானக்கண் இப்படி நம்முள்ளே மூன்று வகைத் தன்மைகள் உள்ள நிலைகளைக் கண்களாகக் காட்டினார் பலர் பல நிலைகளில்.
அகக்கண்ணும் மனக்கண்ணும் ஞானக்கண்ணும் இவை எல்லாமே சுவாசக் கண்ணிலிருந்து தான் வருகின்றன.
நம் உடலிலே பல கோடிக் கண்கள் உள்ளன. அக்கண்கள் வழியாகத்தான் இந்த உடலுக்குச் சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்களை இந்தப் பூமித் தாய் தன்னுள் ஈர்த்து அதை நம்முள் ஈர்த்திடும் செயல் நடக்கின்றது.
1.அகக்கண் மனக்கண் ஞானக்கண் என்பவை
2.நம் மன நிலையை வைத்து ஒவ்வொருவரின் குண நிலையைச் சுட்டிக் காட்ட
3.இந்நிலையில் உள்ள குணக்கண்களுக்குப் பல முன்னோர்கள் இந்த நாமத்தைச் சூட்டினார்கள்.
இந்த மூன்று வகைக் குணக்கண்களுக்குமே முதற்கண் இந்தச் சுவாசக்கண் ஒன்று தான்.
அந்தச் சுவாசக் கண்ணினால் நம் உடலுக்கு நாம் எந்தெந்த நிலைகளை ஈர்க்கின்றோமோ அந்த நிலை கொண்டுதான் நம் வாழ்க்கை முறையில்… விழிப்பு நிலையில்… சுவாச நிலை கொண்டு ஈர்க்கும் தன்மையை வைத்து… நம் கனவில் வரும் நிலைகளும் ஒன்று சேர்ந்தே கலந்து வருகின்றது.
இந்த மூன்று வகைக் குணக்கண்களை வைத்து ஒவ்வொரு மனிதனின் நிலையையும் தெளிவாக அறிந்திட முடியும்.
இப்படி அகம் புறம் ஞானம் என்ற நிலைகளைக் கண்களாக்கி நம் நிலைக்கு வழி கொண்டு வர வழி வகுத்துத் தந்தனர் நம் முன்னோர்கள்.
1.அகத்தில் எண்ணிப் புறத்தில் வாழ்பவர்கள் தான் இன்று உள்ளார்கள்.
2.தான் பெற வேண்டிய ஞானத்தையே மறந்து விட்டார்கள்.
ஞானம் பெற வேண்டியதன் அவசியத்தைத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நாம் வயலைப் பண்படுத்தி நல்ல விதைகளை விதைக்கின்றோம். பூமியில் பதிந்த அந்த விதை பூமியின் துணை கொண்டு
1.பூமியின் காந்த இயக்கத்தைக் கொண்டு (ஈர்ப்பு சக்தி)
2.அதற்கு பருவமான நிலைகள் வரும் போது
3.காற்றிலிருந்து தன் இனமான சக்தியை இழுத்து அது வளர்ந்து விளைகின்றது.
அதே சமயத்தில் நாம் விதைத்த பயிருடன் சேர்த்துக் களைகளும் முளைக்கும். எக்கச்க்கமாக வளரும். நாம் இதைக் கவனிக்காது விட்டு விட்டால் என்ன ஆகும்…?
பயிருக்கு இடும் உரம் மற்றும் தண்ணீரை இந்தக் களைகள் வேகமாக தனக்குச் சத்தாக எடுத்துக் கொள்ளும். விதைத்த நல்ல விதைகளின் பலன் ராசி இருக்காது.
அதைப் போல நல்ல குணங்கள் கொண்டு நீங்கள் பல நன்மைகளைச் செய்தாலும் என்ன நடக்கின்றது..?
நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாரிக்கின்றீர்கள். ஒருவர் சிரமப்படுகின்றார் என்றவுடன் தாராளமாக நூறு ரூபாய் எடுத்துக் கொடுக்கின்றீர்கள். அதைப் பார்த்தவுடன் அடுத்து நோகாமல் ஒரு வார்த்தை சொல்லி விடுவார்கள்.
இவர் லாபம் இல்லாமல் எதாவது செய்வாரா…? தேடி வந்து மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் “லாபம் இல்லாமல் இவர் எப்படிச் செய்வார்…!” என்று சொல்வார்கள்,
எங்கெங்கோ கொள்ளை அடித்து விட்டு அதைக் கொண்டு வந்து இங்கே கொடுக்கிறார்…! என்று இன்னொருவர் சொல்வார்.
அவர் சொன்ன உடனே நான் இவ்வளவு கஷ்டப்பட்டுச் செய்கிறேன், “என்னை இவ்வாறு சொல்கிறார்களே…” என்று வேகமாக எடுத்தால்
1.அவர் கெடுமதியான புத்திதான் நமக்குள் வந்து ஆத்திரத்தை கூட்டும்.
2.நாம் செய்த நல்லது அனைத்தும் பாலுக்குள் விஷம் பட்டது போல் ஆகி விடும்.
என்னை இப்படிச் செய்கிறார்களே… இப்படிச் சொல்கிறார்களே…! என்று வேதனை வந்துவிடும்.
இந்த வேதனையான நிலையில் இருக்கும் போது வியாபாரம் செய்தாலும் ஒருவருக்குச் சரக்கை எடுத்துக் கொடுக்கும் பொழுது அந்த வேதனை வந்துவிடும். வேதனையுடன் வியாபாரம் செய்யும் பொழுது அது மந்தமாகும்.
ஏனென்றால் அடுத்தவர் தன்னைப் பற்றிச் சொன்ன அந்தக் குறையைத் தான் தாங்க முடியாதபடி எடுத்து கொள்ளும் பொழுது அந்த வேதனையை அவ்வப்பொழுது சுத்தப்படுத்தவில்லை என்றால் அதைப் போன்ற களைகள் அடுத்தடுத்து முளைத்துக் கொண்டே வரும்.
அதிகமாக அந்தக் களைகள் முளைத்தவுடன் உடலில் கை கால் குடைச்சல் வந்துவிடும். காசைக் கொடுத்து டாக்டரிடம் சென்று அதை நீக்கலாம்.
வயல்களில் களைகளை எடுத்தாலும் மீண்டும் முளைக்கும். அதைப் போல இந்த உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து உடலில் அந்தக் களைகள் முளைக்க முளைக்க நல்ல குணங்களை அழித்து கொண்டே இருக்கும்.
மனித வாழ்க்கையிலே நீங்கள் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் அந்த ஒரு நொடிக்குள் பிறர் செய்யும் தவறைக் கூர்ந்து கவனித்தாலே போதும். அது நமக்குள் வந்து நமது நல்ல குணங்களை அழித்துவிடும்.
நாம் பாசமாக ஒருவருக்கு உதவி செய்கிறோம். இருந்தாலும் அவர் துன்பங்கள் அதிகமாகி நோயாகி இறந்து விட்டால்
1.என் கஷ்ட நேரத்திலெல்லாம்… “எனக்கு மகராசன் உதவி செய்தார்…!” என்று நம்மை எண்ணினால்
2.அந்த உயிராத்மா நமக்குள் தான் வந்து சேரும்.
3.அவர் பட்ட அந்தக் கஷ்டத்தையெல்லாம் சேர்த்துக் கொடுக்கும்.
நம்மை அறியாமல் வரும் இப்படிப்பட்ட துன்பங்களிலிருந்து மீட்ட வேண்டும் அல்லவா….!
இதிலிருந்து மீளுவதற்குத் தான் தீமைகள் (களைகள்) உங்களுக்குள் வளராது தடுப்பத்தற்குத்தான்
1.உங்கள் மனதைப் பண்படுத்தி பக்குவப்படுத்தி
2.ஞானிகளின் அருள் ஞான வித்தை இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
பதிவு செய்ததை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
நினைவுக்குக் கொண்டு வந்து அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அவ்வப்பொழுது புருவ மத்தியில் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டித் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
தீமைகள் வந்து மோதும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியை வைத்து அதை இடைமறிக்க வேண்டும்
ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த உலகத்துடன் ஒத்துத் தான் வாழுகிறோம். இதிலே பிரிந்து வாழ முடியாது.
1.நன்மை தீமைகளைக் கேட்டுணர்ந்து தான் செயல்படுகின்றோம்.
2.தீமையை நுகர்ந்து தீமை என்று அறிந்து கொள்கின்றோம்… ஆனால் அந்தத் தீமை நமக்குள் விளையாது தடுக்க வேண்டும்.
உங்களுக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை இணைத்து அந்தத் தீமையை நமக்குள் குறைத்துப் பழக வேண்டும்.
மிளகாயைத் தனியாகக் கடித்தால் காரமாகத் தான் இருக்கின்றது. விஷத்தைத் தனியாக உட்கொண்டால் மயக்கம் வருகிறது.
1.ஆனால் அந்த விஷமான சக்தியை ஒரு மருந்துடன் சேர்த்து
2.அதனின் கலவையைச் சிறுக்கப் போகும் போது அந்த உணர்வுகள் மருந்தை நன்மையாக்குகின்றது.
3.உடலுக்குள் வேகமாக மருந்தை எடுத்துச் சென்று நோயை நீக்குகிறது.
இதைப் போன்று தான் தீமைகளை நாம் பார்த்தாலும் அல்லது கேட்டுணர்ந்தாலும் நுகர்ந்த பின் அது நம்மை இயக்குகின்றது. அந்த நேரத்தில் “அதை இடைமறித்து” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைக்க வேண்டும். நமக்குள் அது அணுவாக மாறும்.
மகரிஷிகளின் அருள் சக்தியைக் கலந்த அணுவாக மாறும் போது நமக்குள் அது தீமையை அடக்கும் சக்தியாக உருப் பெறுகின்றது… அப்படி வலுப் பெறும் போது தீமைகளைப் பிளக்கின்றது.
பார்த்துணர்ந்த உணர்வுகள் (எதுவாக இருந்தாலும்) கண்ணின் கரு விழி நமக்குள் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ ஆன்மாவாக மாற்றி அந்த உண்மையைச் சொல்லும்.
ஏனென்றால்…
1.நம் கண்கள் அது வழி காட்டும்.
2.நம் உயிரோ அதை இயக்கிக் காட்டும்.
3.உடலோ தனக்குள் இணைத்துக் காட்டும்.
4.மீண்டும் அதனின் நினைவு வரப்படும் போது அந்த அலைகளே நமக்கு உணர்த்தும்.
இப்படி மற்ற தீமைகளை நாம் எப்படிப் பதிவு செய்கின்றோமோ அதே போன்று தான் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எடுத்துப் பதிவாக்க வேண்டும். உடலில் உள்ள எல்லாவற்றிலும் இதைக் கலக்க வேண்டும்.
இதற்கு முன்னாடி இந்த மாதிரி நமக்குத் தூய்மைப்படுத்தத் தெரியாது. ஆகையினால் எத்தனையோ உணர்வுகள் பதிவாகி இருக்கின்றது.
ஒரு எதிரி நமக்கு எப்பொழுதோ இடைஞ்சல் செய்திருப்பான். திடீரென்று அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் வரும். பார்த்தவுடன் என்ன நடக்கிறது…?
1.அவனைப் பற்றிய பதிவு ஏற்கனவே நமக்குள் இருக்கிறது.
2.அந்த நினைவு வந்த பின் “அயோக்கியப் பயல்… போகின்றான் பார்…! என்ற எண்ணம் டக்… என்று அங்கே வரும்.
அந்தச் சமயத்தில் அவன் மீது வரும் வெறுப்போ கோபமோ பயமோ அந்தத் தவறின் உணர்வுகள் நமக்குள் விளையும். உடலில் ஏற்கனவே இதன் வழியில் ஏற்பட்ட அணுக்கள் தனக்கு வேண்டிய இரையை எடுக்கும்.
அதே போல் அடுத்தவர்கள் மற்றவர்களுடைய குறைகளைப் பற்றிப் பேசும் போது அதை நாம் கேட்க நேர்ந்தால் அவர்கள் செய்த தவறின் உணர்வை நினைக்கும் போது அந்தத் தவறின் உணர்வை இந்த அணு சாப்பிட்டு வளர ஆரம்பிக்கும்.
1.இப்படி எந்தெந்தச் சந்தர்ப்பத்தில் இது வளரத் தொடங்கினாலும்
2.நாம் அவ்வப்போது ஈஸ்வரா… என்று உயிரிடமே வேண்ட வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் தூய்மைப்படுத்த வேண்டும்.
ஏனென்றால் எதைப் பார்த்தோமோ அது ஆன்மாவாகி சுவாசித்து அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்று அணுவாக அது வளர்க்கப்பட்ட பின் அதற்கு இது உணவாகக் கொடுப்பது உயிரின் வேலை தான். நாம் எண்ணியதை ஜீவ அணுவாக மாற்றுவதும் உயிரின் வேலை தான்.
தாவர இனங்களுக்கு சூரியன் எப்படி அதனதன் சத்துகளைக் கொடுத்துச் செழித்து வளரச் செய்கிறதோ அதே மாதிரித் தான்
1.நம் உயிரும் சூரியனாக இருந்து உடலில் அணுக்களை உருவாக்குவதும்
2.அதற்கு வேண்டிய இரைகளைக் கொடுப்பதும்
3.அந்த நினைவைக் கவர்ந்து தனக்குள் அதைச் செயலாக்குவதும் போன்ற வேலையைச் செய்கிறது.
ஆனால் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை அகற்றிய உணர்வுகள் விளைந்து மனித உடலுக்குள் வரும் போது ஆறாவது அறிவாக வருகிறது… கார்த்திகேயா.
ஒவ்வொரு சரீரத்திலும் தனக்குள் அறிந்து உணர்ந்த உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்கள் மாற்றி இன்று மனித உடலாக உருவாக்கியது இந்த உயிர்.
நம் ஆறாவது அறிவால் எதனையும் அறிந்திடும் நிலைகள் வருகின்றது. ஆகவே அதை வைத்து இருளைப் போக்கிய அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து நமக்குள் இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை இணைக்க இணைக்கத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கூடும். அதற்காக வேண்டித் தான் திரும்பத் திரும்பச் சொல்லி உங்களுக்குள் அதை வளர்க்கச் செய்கின்றேன் (ஞானகுரு).
1.உங்கள் எண்ணங்களும் உணர்வுகளும் மாறும் போது அதைத் திருப்பி
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைக் கவரும் சக்தியாக மாற்ற வேண்டும்.
இரவு உறக்கத்தின் போது வரும் கனவுகள் பற்றிய உண்மை நிலைகள் – ஈஸ்வரபட்டர்
நாம் நினைவில் உள்ள பொழுது நடப்பதற்கும்… உறக்கத்தில் காணும் கனவிற்கும்.. என்னப்பா மாற்றம் உள்ளது…?
1.அதிகாலை கனவு பலிக்கும்…!
2.நினைவில் நிற்காத கனவினால் பலன் ஒன்றும் இல்லை…! என்றெல்லாம்
3.கனவின் சகுனங்களையும் பலர் பல விதத்தில் கனவின் உருவம் கண்டு சொல்கிறார்கள்.
நாம் உறக்கத்தில் இல்லாத பொழுது செய்யும் வேலைகளும்… நாம் பேசும் சொற்களும்.. நாம் படிப்பது… பார்ப்பது… இப்படிப் பல நிலைகளில் நம் எண்ணத்துடன் அச்சுவாச நிலை நாம் எடுக்கும் பொழுது நாம் நினைவில் வாழும் நிலையாக உள்ளது.
நாம் உறக்கத்தில் உள்ள பொழுது நம் எண்ணங்கள் உறங்கினாலும்
1.நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.இந்த உலகில் கலந்துள்ள பல அணுக்களின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் வந்து கொண்டே உள்ளது.
அந்த நிலையில் நம் ஆத்மா அச்சுவாச நிலையுடன் செயல்படும் பொழுது பல நிலைகளில் உள்ள சுவாசங்கள் நம் சுவாசத்துடன் கலப்பதால்
1.பல விபரீதக் கனவுகளும்
2.நாம் எண்ணியே பார்த்திடாத சில நிலை கொண்ட கனவுகளும்
3.சிதறுண்ட நிலையிலும்
4.நம் உணர்வையே நாம் உணர்ந்திடாத சில பயங்கர நிலையில் நம் உடல் சிதையுண்ட நிலையிலும் கனவுகளாக வருவதைக் காணுகின்றோம்.
இப்படிப்பட்ட கனவெல்லாம் எந்த நிலையில் இருந்து வருகின்றது…?
பல சிதறுண்ட கனவுகள் அடிக்கடி நம் கனவில் காண்பதனால் அவை நம் ஆத்மாவிற்குச் சில தீங்குகள் விளைவிக்கின்றன.
கனவில் வருபவை எல்லாமே இந்த உலகில் கலந்துள்ள பல கோடி அணுக்களில் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் இப்படிப் பல உயிரணுக்களின் சுவாச நிலையின் உந்துதலினால்தான்
1.நம் எண்ணத்தை (தூக்கத்தில்) நாம் மறந்திருக்கும் பொழுது
2.நம் சுவாச நிலையிலும் அந்த உந்துதலுக்கு நாம் ஆளாகின்றோம்.
இறந்தவர்கள் கனவில் வருவதுவும் நம் சுவாச நிலையைக் கொண்டு தான்…! அவர்கள் ஜீவனுடன் இருந்த காலத்தில் அவர்கள் விட்ட சுவாச நிலையைக் கொண்டு நம் சுவாச நிலைக்கேற்ப ஈர்ப்பு நிலை கொண்டு தான் கனவுகளில் வருகிறார்கள்.
இப்படிக் காணும் கனவெல்லாம் நம் ஆத்மாவைப் பாதிக்காமல்… கனவிலேயே பல உண்மை நிலைகளைக் காணும் வண்ணம் “நம் சுவாச நிலையை ஒருநிலைப்படுத்தி…” ஒழுங்குபடுத்த வேண்டும்.
நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கை நிலையிலிருந்தே நம் சுவாச நிலைக்குப் பல உன்னத நிலையை எடுத்துக் கொண்டு வரும் பொழுது
1.எப்படி நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்குத் தியானத்தின் மூலம் உரம் அளிக்கின்றோமோ
2.அதைப் போல் நாம் கனவில் காணும் நிலையில் நல்ல நிலையுடன் கூடிய கனவுகளாக
3.நம் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்கு உரம் தேடி வைக்க முடியும்.
நாம் உறங்கும் பொழுது பல எண்ணங்களை எண்ணிக் கொண்டே இருப்பதால் அப்படிப் பல எண்ணங்களை எண்ணும் பொழுதே நம் சுவாசநிலை கொண்டு அதற்கொத்த நிலைகளும் வந்து மோதத்தான் செய்யும்.
ஆகவே அத்தகையை எண்ணங்களுக்கு நாம் அடிமையாகாமல்
1.ஜெப நிலையிலேயே நாம் உறங்கும் பொழுது
2.நம் சுவாசமும் நம் உயிரணுவும் ஒரே நிலையில் அவ்வாண்டவனின் சக்தியை ஈர்க்கின்றது.
அந்த நிலையில் இருக்கும் பொழுது நமக்குப் பல அணுக்களின் நிலைகள் நம் சுவாசத்திற்கு வந்திடாமல் ஒரே அமைதி கொண்ட நிலையில் நாம் உறங்கி எழுந்திடலாம்.
கனவும் நினைவும் கலந்தது தான் இந்த வாழ்க்கையே…! விழிப்பில் உள்ள பொழுது தீய அணுக்கள்.. நல்ல அணுக்கள்… என்று நம் சுவாச நிலைக்கு எப்படி வருகின்றனவோ அதே போல் தான் கனவிலும் நடக்கின்றது.
நம் ஆத்மாவிற்கு இரண்டு நிலைகளுமே ஒரே நிலை கொண்ட உணர்வுகளைத்தான் ஈர்க்கின்றது.
1.இது எல்லாமே கனவான வாழ்க்கையின் – “கனவு…நினைவு…” என்று நாம் புரிந்து கொண்டு
2.எல்லாவற்றிலும் ஒரே நிலை கொண்ட அவ்வீசனின் சக்தியை ஒரே நிலையில் ஈர்த்து
3.நம் ஆத்மாவிற்கு நல்ல நிலையைத் தேடிக் கொள்வது ஒன்று தான்
4.நாம் எடுத்திடும் பெரும் முயற்சியாக இருக்க வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஒரு ஆடு ஒரு நரியைப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். நரியோ வலிமையானது. நரியிலிருந்து வெளிப்படும் உணர்வினை ஆடு நுகர்ந்தால் ஆட்டின் உணர்வுகள் அனைத்தும் நரியின் உணர்வாக மாற்றப்படுகின்றது.
அந்த நரியை அடிக்கடி சந்தித்து அது இதைக் கொன்று புசிக்கும் அந்த உணர்வுகள் ஆட்டிடம் தோன்றினால் அந்த உணர்வின் தன்மை வரப்படும் போது ஆட்டின் உணர்வினை இது மறைத்து விடுகின்றது.
1. நரியின் உணர்வுகள் ஆட்டின் உணர்வுகளை மறைத்து
2.அதை மூடிக் கொள்கின்றது.
ஆட்டின் திரையை நீக்கிய பின் அந்த நரியின் உணர்வுகள் பெருத்து அந்த உணர்வின் தன்மை ஆட்டின் உடலில் வித்தாகி விடுகின்றது.
ஆட்டின் உடலை விட்டு (அந்தத் திரையை நீக்கி) உயிர் வெளி வந்தால் நரியின் உணர்வைக் கவர்ந்து அதன் உணர்வின் தன்மை கொண்டு நரியின் உடலுக்குள் புகுந்து நரியாகப் பிறக்கும் தன்மை வருகின்றது.
அதைத் தான் வேதங்கள் கூறுவது ரிக் சாம அதர்வண யஜூர் மீண்டும் சாம என்பது.
ஆட்டின் உடல் ரிக்.. அதாவது சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப ரிக் ஆகின்றது. ஒரு நரியும்… அது சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அதுவும் ரிக் ஆகின்றது.
ஆட்டின் மணமோ சாந்தமானது. நரியின் உணர்வை நுகரப்படும் போது இந்த ஆட்டின் உணர்வை அது மறைத்து விடுகின்றது. ஆட்டின் உணர்வை மறைத்த பின் நரியின் உணர்வே வலு பெறுகின்றது.
உதாரணமாக பாலில் பாதாமைப் போடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பாதாம் கலந்த பாலைச் சாப்பிட்டால் அது நம் உடலுக்குச் சத்து தான்.
ஆனால் அந்தப் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் பாதாமிலும் ஊடுருவி விடுகின்றது. பாதாமின் சத்தையும் இழக்கச் செய்கின்றது. இதைப் போல
1.ஆடு நரியின் உணர்வுகளைச் சுவாசிக்கும் போது
2.அதனுடைய விஷத் தன்மைகள் ஆட்டின் சாந்தமான உணர்வை ஆக்கிரமித்து
3.இது ஒரு திரையாக மாற்றிவிடுகின்றது.
இந்தத் திரை மறைவு ஆன பின் சாந்த உணர்வு கொண்ட ஆடாக இருந்தாலும் வலிமை பெறும் நரியின் தன்மையை ஆடு பெறுகின்றது.
உடலை விட்டு வெளி வந்தபின் ஆட்டின் உயிரான்மா நரியின் ஈர்ப்புக்குள் சென்று நரியாக உரு மாறுகின்றது. ஆட்டின் உடல் என்ற திரையை மாற்றிய பின் நரியாக உருபெறும் தன்மை வருகின்றது.
ஞானிகள் அதைத்தான் “சித்திரை…” என்று காட்டினார்கள்.
ஏனென்றால் நம் மனித வாழ்க்கையிலும் இதைப் போன்று எத்தனையோ கோடி உணர்வுகள் ஒவ்வொரு நாளும் சிறு சிறு திரைகளாக நம் நல்ல குணங்களை மறைத்து விடுகின்றது.
நம் நல்ல குணங்களை மறைக்கும்
1.அந்தச் சிறு சிறு திரைகளை நீக்கவில்லை என்றால்
2.ஆடு நரியாக ஆனது போல் நம் நல்ல குணங்கள் மாறி
3.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த தீமையான உணர்வுகளின் இயக்கமாக அது நம்மை மாற்றிவிடும்.
4.நம் நல்ல குணங்கள் மறையத் தொடங்கும்.
அதை நீக்கும் நிலையாகத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்.
“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் உள் முகமாகச் செலுத்துதல் வேண்டும்.
அவ்வாறு செலுத்தப்படும் பொழுது நம் ஆன்மாவில் சுழன்று கொண்டிருக்கும் தீமையான உணர்வலைகளைப் பிளந்து (சிறு திரைகளைக் கிழித்து) நம் ஈர்ப்பை விட்டு அகலச் செய்யும்.
நம் ஆன்மா தூய்மை அடையும். நம் நல்ல குணங்கள் வலிமை பெறும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் சக்தியை நாம் பயன்படுத்த வேண்டிய நெறி
குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சக்தி கொடுத்தாலும்… நமக்குச் சும்மா கொடுக்கவில்லை. அவர் கொடுத்த பவரை என்னென்ன செய்யலாம்…? என்று கொடுத்திருக்கின்றார்.
நெருப்பை உபயோக்கின்றோம் என்றால்
1.வெளிச்சத்திற்குத் தீபமாக வைக்கின்றோம்…
2.சமையல் செய்யவும் அந்த நெருப்பை வைத்துக் கொள்கிறோம்…
3.அதே நெருப்பை வைத்து இரும்பையும் உருக்குகின்றோம்.
அதைப் போன்று தான் குருநாதர் கொடுத்த சக்தியை ஆக்கச் சக்தியாக மாற்றலாம்… அழிக்கும் சக்தியாகவும் மாற்றலாம். அந்த சக்தியின் உணர்வின் செயல்கள் எப்படி…? என்கிற வகையில்தான் குருநாதர் உணர்த்தினார்.
காரணம்… மனிதனுடைய ஆசையின் உணர்வுகள் பல நிலைகளிலும் தூண்டுகின்றது…
1.முதலில் இதை அழிக்கப் பழக வேண்டும்…
2.அந்த மெய் ஒளியை வளர்த்து பழக வேண்டும்
அதைக் காட்டுவதற்காகத் தான் பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று குரு அனுபவமாகக் கொடுத்தார். அதைத் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகிறேன்.
இந்த வாழ்க்கையில் எத்தனையோ சங்கடங்கள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடியிலேயும் நீங்கள் எண்ணி எடுக்க வேண்டும்.
கஷ்டமோ நஷ்டமோ அல்லது மற்றொருவர் தவறு செய்வதையோ அன்றாடம் நாம் பார்க்க நேர்கிறது… அதை நுகர்ந்து அறிகின்றோம்.
இருந்தாலும் அது எல்லாம் நம்மை இயக்காது தடுக்க அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். அந்தப் பவர் (சக்தி) உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.
உதாரணமாக ஒருவர் கெடுதல் செய்கிறார் என்றால் அவர் குடும்பம் தொலைந்து போக வேண்டும்… என்று சொன்னால் அவர்கள் கெட்டுப் போய்விடுவார்கள்.
1.ஆனால் அந்தத் தொலைந்து போகும் உணர்வு முதலில் நம்மிடம் தான் விளைகின்றது.
2.அப்போது நம் நல்ல குணங்கள் கெடுகின்றது… அவனும் கெடுகின்றான்… நாமும் கெடுகின்றோம்.
அதற்குப் பதிலாக அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி அந்த அருள் உணர்வின் தன்மையை இங்கே விளையச் செய்ய வேண்டும். அறியாது வரும் இருளை நீக்க வேண்டும்.
உதாரணமாக ஒரு போக்கிரி தவறு செய்கின்றான்… நமக்கு இடைஞ்சல் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
நம்மிடம் சக்தி இருக்கிறது என்ற வகைகளில் அவனுக்கு ஏதாவது கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் ஆயுதமாக எடுத்து நாம் பயன்படுத்தும் பொழுது அது நம் நல்ல குணங்களை எல்லாம் அடக்கிவிடும்.
அவனை அடக்கும் உணர்வை எடுத்துத் தான் அங்கே பாய்ச்சுகின்றோம். அதனால் அவனுக்கு அந்தக் கெடுதல் வருகின்றது… ஆக இங்கே விளைந்து தான் அங்கே போகின்றது. நம்மிடம் முதலில் அது விளையாது தடுக்க வேண்டும்.
அந்த மகரிஷிகளின் உணர்வுகளை இங்கே வளர்த்து… அந்தத் தீமைகளை… அந்தக் களைகளை நீக்க வேண்டும்.
1.எப்பொழுதுமே அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று
2.இதைத்தான் பாடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வீட்டிலே எல்லாம் செய்து கொண்டே வருவோம். குடும்பத்தில் ஒற்றுமையாகவும் இருப்போம். அதிலே ஒரே ஒரு பையன் நம் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுவோம்.
நாம் எடுக்கும் வேதனை உணர்வுகள் வீடு முழுவதும் பரவும். அப்படிப் பரவும் போது நம் எண்ணங்களும் மாறுபட்டு விடுகின்றது. அந்த நேரத்தில்
1.“சடார்… என்று அவன் தொலைந்து போக வேண்டும்…” என்ற எண்ணம் தான் வரும்
2.ஆனால் அவனிடம் இருக்கும் கெடுமதி தொலைய வேண்டும் என்ற எண்ணம் வராது.
நானே (ஞானகுரு) திடீரென்று உங்களிடம் கோபிக்கிறேன் என்றால் உங்களிடம் இருக்கும் கெட்ட புத்தி போக வேண்டும் என்று தான் கோபித்துச் சொல்வது.
சாதாரண வாழ்க்கையில் பார்த்தால் “தொலைந்து போகிறவன் இப்படிச் செய்கின்றானே…!” என்ற இந்த உணர்வு தான் இங்கே வரும்.
இப்படி நாம் எடுக்கும் இந்த எண்ணத்தில் “இரண்டு பிரிவாக” இருக்கின்றது.
1.கெட்டது தொலைய வேண்டும் என்று எண்ணினால் அது நல்லது
2.கெடுதல் செய்பவர்கள் தொலைந்து போக வேண்டும் என்று எண்ணினால் அது கெட்டதாகிறது.
ஆகவே… எந்த நேரம் எந்தச் சந்தர்ப்பத்தில் யார் மீது நமக்கு வெறுப்பு வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் வலுவாக்க வேண்டும்.
அதை வலுவாக்கிக் கொண்ட பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல்களில் படர்ந்து அவரின் தீமையான செயல்கள் மறைய வேண்டும்… அதிலிருந்து அவர்கள் காக்கப்பட வேண்டும்… என்று நாம் எண்ண வேண்டும்.
இப்படி நாம் தியானித்து அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சும் போது
1.அவரின் தீமைகள் நமக்குள் வருவதில்லை
2.அதே சமயத்தில் அவரையும் நாம் தீமையிலிருந்து விடுபடச் செய்கின்றோம்.
இத்தகைய பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.
கெட்டதைச் செய்பவன் நல்ல நேரம் பார்ப்பதில்லை… நல்லதைச் செய்ய “நல்ல நேரம்” தேவையா…? – ஈஸ்வரபட்டர்
ஆதியில் ஆண்டவனை எந்த ரூபத்தில் வணங்கினார்கள்..?
உதய காலத்தில் ஆற்றுப் படுகையிலும் குளங்கள் கடல் இப்படி உள்ள இடங்களில் நீரில் நின்று அந்தச் சூரியனின் சக்தியை சூரிய உதய காலத்தில் எண்ணி வணங்கினார்கள்.
அந்த நிலையில் வருண பகவான்… வாயு பகவான்… சூரிய பகவான்… என்று அந்தப் பகவானையே இந்நிலையில் கண்டு வணங்கி ஜெபித்தார்கள்.
1.காற்றும் மழையும் அவ்வொளியும் இல்லாவிட்டால் ஜீவனே இல்லை.
2.ஜீவனைத் தந்த சக்தி இந்த மூன்றுக்கும் தான் உள்ளது என்ற நிலையில்
3.இந்த மூன்றையுமே தெய்வமாக்கி வணங்கினார்கள்.
வணங்கினார்கள் என்ன…? அந்த நிலை கொண்டுதான் நாமும் வணங்க வேண்டும்.
அந்த நிலையிலிருந்து தான் நம் உயிர்ணுவிற்கு நம் ஆத்மாவிற்கே உயிர்த் துடிப்பு வந்தது. அந்நிலையில் அருள் பெற்ற நம் ஆத்மா அவற்றைத் தான் “ஆதி முதல் தெய்வமாக” வணங்கிப் போற்ற வேண்டும்.
ஆதியில் வந்த ஆண்டவனையே தன் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்ட மனிதனப்பா இன்றைய மனிதன்.
இன்றைய மனிதன் நம்பும் நிலை எல்லாம்.. அவன் போடும் கணக்குப்படி தேதியிலும்… கைரேகைகளிலும்… ஜாதகத்திலும்… பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
தன்னுள் இருக்கும் அந்த ஆண்டவனின் சக்தியை மறந்த நிலையில் தான் உள்ளார்கள். உலகம் முழுவதுமே நேரத்தையும் ஜாதகத்தையும் தான் நம்பி வாழ்கிறது.
நாளும் நட்சத்திரமும் தேதியும் இவன் வைத்த கணக்கு தான்…!
ஆதியில் வாழ்ந்த மனிதன் அந்தச் சூரியனின் சக்தி கொண்டு ஒளி நம் நிலத்தில் படும் நிலை கொண்டு “நேரமும் காலமும்” அறிந்து செயல்பட்டான்.
அன்று பல பெரியவர்கள் இந்த இந்த நாட்கள் மழை பெய்யும்.. வெயில் அதிகமாக இருக்கும்… என்றெல்லாம் தான் அந்த ஞானத்தை வைத்து மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இன்றைய வளர்ந்த விஞ்ஞான மனிதன் தன் அறிவைக் கொண்டு பல செயல் ரூபங்களையும் பல உபயோக நிலை கொண்ட பல உன்னதப் பொருள்களையும் கண்டு கொண்டான்.
அவ்வாறு தான் கண்ட நிலையை ஒன்றுடன் ஒன்று பொருத்தி வாழ்பவன்
1.உத்தம நிலையில் வாழ்ந்திடாமல்
2.பேராசை நிலை கொண்டு அழிவு நிலைக்கு ஏனப்பா செல்ல வேண்டும்..?
இன்று மனித மனங்களில் சுவாச நிலையே ஒருவரைப் போற்றியும்… ஒருவரைத் தூற்றியுமே… வாழ்வதாக உள்ளது. நம் மனித ஜென்மத்தில் தான் இந்தப் போற்றலும் தூற்றலும்.
போற்றலுக்கும் தூற்றலுக்குமா நாம் பிறவி எடுத்தோம்…!
ஆண்டவன் சக்தியிலிருந்து மகத்தான உன்னத நிலையில் ஆறறிவு படைத்து மனிதனாகப் பிறவி எடுத்துள்ளோம். அந்த நிலைக்கு அந்த ஆண்டவனின் சக்தியை நாம் உபயோகப்படுத்தாமல் அவன் தந்த சக்தி கொண்டு நம்மை நாம் அழித்து வாழ்கின்றோம்.
அதற்காகத்தான் இச்சக்தியை ஆண்டவன் நமக்கு அளித்தானா…?
மிருக ஜெந்துக்கு ஐந்தறிவு படைத்தான் ஆண்டவன் என்கிறோம். அந்த மிருக ஜெந்து போற்றலுக்கும் தூற்றலுக்கும் ஏங்குவதில்லை. பொருளுக்கும் ஆடை ஆபரணங்களுக்கும் அவைகளிடம் ஆசை இல்லை.
1.அவைகளின் நிலை தான் மனிதன் சொல்வது போல் ஐந்து அறிவு ஆயிற்றே..!
2.அவைகளின் நிலைக்கு எப்படியப்பா இந்த நிலைகளைக் கண்டிட முடியும்…?
அம்மிருகத்தின் நிலையில் உள்ள உயர்ந்த குணம் ஒற்றுமையான குணம் அதன் அறிவுத் தன்மை இன்றைய ஆறறிவு படைத்த மனிதனுக்கு எங்கப்பா உள்ளது…?
மிருகங்களும் பறவைகளும் எந்தக் கடிகாரத்தை வைத்து எந்தத் தேதியை வைத்து நாளும் மணியும் கணக்கிட்டன…?
நாம் நினைக்கின்றோம்… மனிதனுக்குத் தான் எல்லா நிலையும் தெரியும் என்று…! பறவைகள் வாழும் பரிபக்குவமான வாழ்க்கை நிலையை மனிதர்கள் பார்த்து வாழ வேண்டுமப்பா…!
மிருகங்கள் நிலைக்கு என்ன தெரியும்…! நம்மைப் போல் அதற்குத்தான் ஆறறிவு இல்லையே…! என்கின்றான் மனிதன். அனால் இவன் பெற்ற பொக்கிஷத்தைத்தான் இவன் சிதற விடுகின்றான் என்பதை அறியவில்லை.
இது தான் இன்றைய உலக நிலை…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
சென்னை போன்ற பெரிய நகரங்களில் பார்த்தோம் என்றால் ஒரு பக்கம் கழிவு நீர் (சாக்கடை) போகும். ஒரு பக்கம் பைப்பில் நல்ல தண்ணீர் போகும்.
வீட்டுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள நல்ல தண்ணீர் பைப் துருப்பிடித்து சிறிதளவு ஓட்டை ஆகிவிட்டால் வீட்டுக்குள் வரும் நல்ல தண்ணீரில் சாக்கடை கலந்த நீராக வரும். கெட்ட வாசனை கலந்து வரும்.
நல்ல தண்ணீருக்குள் இப்படிக் கலந்து வந்து கிருமிகளாகி பிறகு புழுக்கள் எல்லாம் உண்டாகும்.
1.நல்ல தண்ணீர் பைப்புக்குள் சென்றாலும்
2.பக்கத்திலிருக்கும் சாக்கடையை இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்துவிடுகின்றது.
இதைப் போன்று நாம் போகும்போது மற்றவர்களுடைய உணர்வு வரப்படும்போது நாம் அவைகளைக் கவர்ந்து தெரிந்துதான் போகின்றோம். அதனின் உணர்வை இழுத்துத்தான் நம்மை உணரச் செய்கின்றது.
உதாரணமாக நாம் நல்ல எண்ணம் கொண்டு வேலைக்குச் செல்கிறோம் என்றால் இந்த உணர்வும் சேர்த்துவிடுகின்றது. எது…?
ஒரு நல்ல காரியத்தை எண்ணிப் போகிறோம். ஒருவன் தவறென்ற உணர்வைச் செய்தால் அதையும் இழுத்து விடுகின்றது. அந்தச் சாக்கடையும் இதனுடன் கலந்துவிடுகின்றது.
நல்ல எண்ணத்துடன் நாம் செல்லும்போது ஒருவன் வெறுப்பாக இருந்திருப்பான்… கோபமாக இருந்திருப்பான்… வேதனையாக இருப்பான்…! இதையெல்லாம் நாம் வேடிக்கை பார்த்திருப்போம்.
இது என்ன செய்கின்றது…? இந்தப் பைப்பில் இழுத்து அதை இணைத்து விடுகின்றது.
இதன் வழியில் தான்…
1.நாம் நல்லதை எண்ணிச் செல்லும்போது அதனுடன் இந்த ஆன்மாவில் சேர்த்தவுடனே
2.பிறரின் தவறான உணர்வுகளை இழுத்து அதை உள்ளுக்குள் (நமக்குள்) கொண்டு போய்ச் சேர்க்கின்றது.
ஏனென்றால் நம் கண்ணின் உணர்வு நம் உணர்வு உயிரில் படுகின்றது. பட்ட பிற்பாடு உயிரில் வந்து மோதுகின்றது. அந்த நேரத்தில் நல்ல காரியத்தைப் பார்க்கப் போவதை விட்டுவிடுகிறோம். செய்தாலும் சரியாகச் செய்ய மாட்டோம்.
இந்த உணர்வுகள் வந்தவுடன்… சனியன்…! இதையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கின்றது. இப்படியெல்லாம் தப்புப் பண்ணுகிறார்கள்…! என்று சொல்லிக் கொண்டே ஆபீசுக்குப் போவோம்.
ஆபீசில் போய் உட்கார்ந்தவுடன் இந்த உணர்வு கலந்துவிடும். அப்பொழுது அந்த ஆபீசுக்குப் போவதற்கு முன்னாடி என்ன செய்ய வேண்டும்?
“ஈஸ்வரா..,” என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும், எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும், உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்திச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் பார்த்தவர்களை எண்ணி அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று இது மாதிரி மாற்றியமைக்க வேண்டும். ஏனென்றால்
1.தீமைகள் புகாது அடைத்துவிட்டு
2.நல்லதாக வேண்டும் என்று மாற்றியமைத்து நல்லதை உள்ளுக்குள் கொண்டு போகவேண்டும்.
இந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்தவுடனே தீய அணுக்கள் உருவாகாதபடி தடுக்கப்படுகின்றது. அதற்குத்தான் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்.
நன்றாகத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். இதையெல்லாம் நீங்கள் தெளிந்து தெரிந்து அதன்படி நடக்கவும் உங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.
நான் கஷ்டப்பட்டேன்… அனுபவித்தேன்… சக்தியையும் கொடுக்கின்றேன். நீங்கள் பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் இந்த உபதேசத்தைக் கேட்டும் பலனில்லை.
ஆகவே இதைப் பயன்படுத்த முயற்சி எடுங்கள்.
1.அது நல்ல பலனைக் கொடுக்கும்.
2.உங்கள் எண்ணம் பரிசுத்தமாகும்.
3.நல்ல எண்ணங்களை உருவாக்கலாம்.
4.நல்ல சிந்தனைகளை உருவாக்கலாம்.
எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கே செல்லும் முன் இதே போன்று ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
1.என்னைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் நல்ல எண்ணம் வரவேண்டும்…
2.என் செயல் அனைத்தும் மற்றவர்கள் போற்றும் நிலைக்கு வரவேண்டும்… என்று
3.ஒரு ஐந்து நிமிடம் இந்த எண்ணத்தை எடுத்துச் சுவாசிக்க வேண்டும்.
வழி அறிந்து செயல்படக்கூடிய அருள் ஞானம் (TECHNIQUES) கொடுக்கின்றோம்
ஒவ்வொரு நிமிடத்திலும் அருள் உணர்வுகளை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் வரிசைப்படுத்தி
1.எந்தெந்தச் சந்தர்ப்பத்தில் எது வருகிறது என்ற வகையிலும்
2,குருநாதர் எனக்குக் கொடுத்த சக்தியை இந்த உபதேச வாயிலாக உங்களுக்குள் பதியச் செய்கின்றேன் (ஞானகுரு).
சண்டை போட்டவர்கள் கஷ்டப்படுபவர்களை எல்லாம் பதிவு செய்து கொண்டால் அவர்களின் எண்ணங்கள் வந்து உங்களைத் துயரபப்டச் செய்கிறது… சங்கடப்படச் செய்கிறது… சோர்வடையச் செய்கிறது… வேதனை அடையச் செய்கிறது.
இதைப் போல் தான்…
1.குருநாதர் கொடுத்த உணர்வின் சத்து எனக்குள் பதிவானதை
2.அந்தந்தச் சந்தர்ப்பம் இணைக்கப்பட்டதையும் மாற்றப்பட்ட உணர்வுகளையும்
3.உங்களுக்குள் இணைத்துக் கொண்டே வருகின்றேன்.
சங்கடமான உணர்வு உங்களுக்கு வரும் பொழுதெல்லாம் நான் (ஞானகுரு) இணைக்கும் நல்லதாக மாற்றும் உணர்வுகள வைத்து மாற்றினீர்கள் என்றால் அவ்வப்பொழுது உங்களால் எந்தத் தீமையும் மாற்றிக் கொள்ள முடியும்.
அந்த நிலையை உருவாக்குவதற்குத் தான் இந்த உபதேச வாயிலாக அருள் உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சுவது.
எனக்கு ஒன்றும் தெரியவில்லையே… தெரியவில்லையே…! என்று எண்ண வேண்டியதில்லை. அடிக்கடி இந்த அருள் உணர்வுகளைப் பெற்றுப் பாருங்கள்.
1.இரவெல்லாம் உங்கள் எண்ணங்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் மிதப்பதை காணலாம்
2.அதனுடன் உங்கள் உணர்வுகள் தொடர்பு கொண்டு உங்கள் உடலிலே வளர்ச்சி ஆவதைப் பார்க்கலாம்.
ஆனால் வாழ்க்கையில் சங்கடமும் சலிப்பும் ஆகி யார் யார் மீது வெறுப்புடன் இருந்தீர்களோ அந்த நினைவுகள் சுற்றிக் கொண்டிருந்தால் இரவில் திடீரென்று முழிப்பு வரும்… எழுந்து உட்கார்வீர்கள்.
பகலிலே இந்த உணர்வு அதிகமாக வந்து விட்டால் நம் உணர்வுகள் இங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கும்… அதையும் பார்க்கலாம்.
அதே சமயத்தில் சில நேரங்களில் நாம் வலுவான எண்ணங்கள் எடுக்கும் பொழுது இந்த வலுவின் தன்மை கொண்டு பிறருடைய கஷ்டங்களையும் அறியச் செய்யும்.
ஆனால் நாம் போகும் பாதையில் அதை அறியச் செய்தாலும் அடுத்த நிமிடமே அந்த கனவு வந்து முழித்தவுடன்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அந்தத் தீமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வை மாற்ற வேண்டும்
3.கனவு தான் என்று மட்டும் நினைத்து விடக்கூடாது
காரணம்… பகலிலே கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் வந்து இதை இயக்குகின்றது
1.நமக்குள் பதிவானால் தான் அது கவரும்
2.நாம் நுகர்ந்தால் தான் உயிர் அதை இயக்கும்.
இப்படிக் கண்ட அனுபவங்கள் உங்களுக்குள் வந்தால் தான் உங்களைக் காத்துக் கொள்ள அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் நினைவுக்கு வரும்.
உதாரணமாக ஒரு இயந்திரத்தை ஓட்டுகிறோம். சில நேரங்களில் அதில் பழுது வந்துவிடுகிறது.
அந்தப் பழுது எதனால்…? என்றும் எந்த இடத்திலே…? என்றும் அதை விபரம் தெரிந்தவர்கள் (TECHNICIAN) சீராக்கினால் அது மீண்டும் சரியாக ஓடும். ஆக தெரிந்தவர்கள் அதைச் செயல்படுத்துவார்கள்,
அப்படித் தெரிந்து கற்றுக் கொண்டவர்களிடம் நாமும் கற்றுக் கொண்டால் நாமும் அந்தப் பழுதைச் சீராக்க முடியும்.
அதைப் போன்று தான்
1.வாழ்க்கையில் வரும் இன்னல்களை அகற்றும் அரும் பெரும் சக்தியாக
2.தெரிந்து செயல்படக்கூடிய அந்த அருள் ஞானத்தைக் உங்களுக்குக் கொடுக்கின்றோம்..!
எமது அருளாசிகள்.
உயிருடன் ஒன்றினால் நிஜம்… இல்லை என்றால் கனவு தான்…! ஈஸ்வரபட்டர்
நாம் வாழும் வாழ்க்கை கனவான வாழ்க்கை…!
நாம் உறங்கும் பொழுது வருவது தான் கனவு… நாம் விழித்திருக்கும் பொழுது வாழ்வது “நினைவு..!” என்கின்றோம். கனவும் நினைவும் எல்லாமே ஒன்று தான்…!
1.இன்று நடப்பது நாளை கனவு தான்.
2.நாம் உறக்கத்தில் உள்ள பொழுதும் கனவு தான்.
3.சில நாட்கள் பொறுத்து எண்ணிப் பார்ப்பது எல்லாமே கனவு தான்,
4.முன் ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
5.இந்த ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
6.இனி நமக்கு நடப்பதுவும் கனவு தான்,
அவ் ஈஸ்வரனின் நினைவு ஒன்றே… அவ் ஈசனின் சக்தி ஒன்றே தான் ஒரே நிலை கொண்ட “என்றும் நிலைத்து நிற்கும் நினைவு…!”
கனவுக்கும் நினைவுக்கும் நாம் மாறுபட்டு எண்ணுகின்றோம்.
நடப்பது எல்லாமே கனவு தான் என்ற நினைவு எல்லோருக்கும் வந்தால் இன்றைய உலகில் பகவானைப் பல ரூபமாக்கி பல ஜாதியாக்கி இருக்க மாட்டார்கள்.
இன்று பல மதங்களின் நாமத்தைச் சூட்டி வட கலை… தென் கலை.. என்றெல்லாம் சொல்லி தன்னையே தான் தாழ்த்தி வாழ்கின்றான் மனிதன்.
இதிலிருந்து விடுபட வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
உதாரணமாக நோயுடன் வேதனைப்படுகின்றார்கள். இங்கே என்னைப் பார்த்து அதை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வருகிறார்கள்.
“அட பாவமே..,” என்று பரிதாபப்பட்டு நான் உதவி செய்கிறேன்.
ஆனால் அந்த இடத்தில் பரிபக்குவம் இல்லையென்றால் என்ன ஆகும்…? அந்த நோயின் தன்மையை நுகர்ந்தபின் அதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் எனக்கும் அந்த நோய் வரும்.
அப்பொழுது அந்த நோய் வராமல் தடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…? ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எடுத்து அதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் உடல் முழுவதும் படர வேண்டும், அவர் உடல் நலம் பெறவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.
அதை விட்டுவிட்டு “ஐயோ…” என்று அங்கே சொன்னால் பின் “ஐயோ…” என்று அந்த வேதனை இங்கே வந்துவிடும். அந்த உணர்வின் தன்மை அவர் பட்ட வேதனையைத்தான் நமக்குள் உருவாக்கும்.
அடுத்தவருக்கு இதைச் செய்கிறேன்… அதைச் செய்கிறேன் என்று உதவி செய்தாலும் அந்தப் பக்குவ நிலை தவறினால் என்ன ஆகும்…?
வடை சுடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். எண்ணெய் நன்றாகச் சூடாகும் முன் வடையைத் தட்டிப் போட்டால் என்ன ஆகும்…?
ஒரு வடையைப் போட்டால் வேகும், இரண்டாவது போட்டால் அவ்வளவுதான் வடை வேகாது. எண்ணெய் காணாமல் போகும், எண்ணையை வடை எடுத்துக் கொள்ளும். ருசி இருக்காது.
ஆகையினால் நமது வாழ்க்கையில் தீமை என்ற உணர்வுகளை நுகர்ந்தபின் அதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒருவன் தீய செயல்களைச் செய்கிறான். நமக்குள் அந்தத் தீமை வராதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எடுத்து அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
அடுத்து நாம் யாரிடம் சொன்னாலும் தீமை செய்பவன் குற்றங்களிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணத்தில்தான் நாம் நம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.
அதற்குப் பதில் பார்… நான் சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன்…! நீ மறுபடி மறுபடி தவறு செய்து கொண்டே இருக்கின்றாய்… என்று கோபமாகப் பேசும் நிலைகள் வரும்போது “அவரும் நம்மைத் திருப்பிப் பேசும் உணர்வுகள் வந்துவிடும்…!”
அங்கே பக்குவம் இழக்கப்படுகிறது. அங்கே நம்மைத் தான் குற்றவாளியாக்கும் நிலைகள் உருவாகின்றது.
ஏனென்றால் தீமை செய்பவர்களின் உணர்வுகள் நமக்குள் வந்து அதே சொல்லை நாம் சொல்லும்போது நம்மைக் குற்றவாளியாக்கிவிடும். அப்பொழுது அந்தப் பக்குவம் தவறினால் என்ன ஆகும்…?
அந்தத் தவறு செய்பவனின் நிலைகளில் உண்மைகளை எடுத்துச் சொல்ல முடியாது.
ஆகவே நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொண்டு அந்த உணர்வுகளை அவருக்கும் பாய்ச்சி
1.அவர் உண்மையை உணர வேண்டும் என்று எண்ணிவிட்டு
2.பக்குவமாக நீ நடந்துகொள் என்று நாம் அவரிடம் சொன்னால்
3.அங்கே அந்தப் பரிபக்குவ நிலை வருகிறது.
அப்பொழுது அந்தத் தீமையை நமக்குள் விடாதபடி இப்படி வாழ்க்கையில் மாற்றிப் பழக வேண்டும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா.
இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும்.
சாதாரண வாழ்க்கையில் இருப்பது போல் இல்லாமல் ஒவ்வொரு நொடியும் நம் சுவாசம் உயிர் வழியாக இருக்க வேண்டும்
ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும் பொழுது
1.நம் நினைவுகளை அவசியம் புருவ மத்திக்குக் கொண்டு போய்ப் பழக வேண்டும்.
2.அப்படிச் செய்தோம் என்றால் நம் உயிரே நமக்குக் குருவாக இருப்பதையும்
3.நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்கக் கூடிய ஈசனாக நம் உயிரே இருப்பதையும் உணர முடியும்.
இந்த அடிப்படையில் நாம் எண்ணும் பொழுது எதை எண்ணுகின்றோமோ நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் ஊடுருவுவதும் நமக்குத் தெளிவாகத் தெரிய வரும்.
சாதாரணமாக இந்த வாழ்க்கையின் நிலையில் மூக்கின் வழி வருவதைச் சுவாசிக்கின்றோம்… நம் கண்கள் உற்றுப் பார்க்கின்றது… அதன் வழி தான் வெளியிலிருந்து மற்ற உணர்வுகளை எல்லாம் எடுக்கின்றோம். அது நம் ஆன்மாவாக மாறுகின்றது.
ஆன்மாவிலிருந்து முக்கின் வழியாகச் சுவாசிக்கும் போது உயிரில் பட்டு அந்த உணர்வுகளைப் பின் (பின்னாடி தான்) அறிகின்றோம்.
அதற்காக வேண்டித் தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று அடிக்கடி புருவ மத்தியில் எண்ணச் சொல்கிறோம்.
1.அப்படிச் சொல்லும் பொழுது உயிரை எண்ணி அவனுடன் ஒன்றிடும் நிலையாக ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.
2.அடிக்கடி அதன் வழி கூடி அருள் உணர்வுகளை உள்ளே செலுத்த வேண்டும்.
வாழ்க்கையில் பயன்படுத்துவது கண் வழி கூடி எடுத்து அதை அறிந்து கொண்டாலும் கூட தீமையான உணர்வுகள் நமக்குள் வராதபடி
1.அடுத்த நிமிடம் ஈஸ்வரா… என்று இதை இடை மறித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2.அந்த அருள் உணர்வோடு நாம் ஒன்றும் போது தீமைகளை அது பிளக்கிறது.
நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்து எவ்வளவோ நல்லதைப் பேசினாலும் கூட அடுத்தவர்களிடம் பழகும் போது அவர்களிடம் ஒரு சில குறைபாடுகளோ… குடும்பக் கஷ்டங்களோ இருக்கும் அல்லது நோயோ இருக்கும்.
அவர்கள் நம்மிடம் பேசும் போது சொல்லிலே அது எல்லாம் கலந்து வரும். அவரை நாம் கண்ணிலே பார்க்கும் போது அது எல்லாம் நம் ஆன்மாவில் வரும். அப்பொழுது நாம் சுவாசித்து உயிரிலே பட்ட பின் அதை உணர முடிகின்றது.
அந்தக் கஷ்டத்துடன் அவர்கள் வரும்போது “எனக்கு இந்த மாதிரி இருக்கின்றது…” என்று சொல்லும் பொழுது இந்த உணர்வுகள் நம்முடன் கலக்கின்றது.
இருந்தாலும்… அந்த நேரத்தில் சுதாரித்து
1.ஈஸ்வரா… என்று இந்த உணர்வை வைத்து இடைமறித்து அதைப் பலவீனப்படுத்த வேண்டும்.
2.இந்த உணர்வை வலுப் பெறச் செய்யும் பொழுது அவரிடம் கேட்டறிந்த தீமைகளை மாற்றுகின்றது.
நம்மிடம் அவர் பலவீனமாகச் சொல்லும்போது மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலிலே படர வேண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வலுவாகப் பாய்ச்ச வேண்டும்
ஏனென்றால் ஒரு பாத்திரத்தில் பொருள்களை எடுத்துப் போட்டு அதைச் சமைத்து… அதற்கப்புறம் எடுத்துக் கொடுத்தால் அது ருசியாக இருக்கும். சமைக்காமல் கொடுத்தால் ருசி வராது.
அதைப் போன்று தான் அவர் கஷ்டம்…! என்று சொன்னபின்… அடடா கஷ்டமாக இருக்கின்றதா…! என்று நாம் சொன்னோம் என்றால்
1.அதைத் தான் திரும்பவும் நமக்குள் சமைத்து
2.அதையே தான் (கஷ்டம்) அவருக்கும் கொடுக்கின்றோம்.
இதிலே ரொம்பவும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அடிக்கடி நாம் அந்த அருள் சக்தியை எடுத்துச் சமைத்து நமக்குள் நல்லதாக்கிக் கொண்டே வர வேண்டும். நாம் பார்க்கும்… பழகும் அனைவருக்கும்… அந்த மகரிஷிகளின் அருள் ஒளியையே இணைத்துப் பழக வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
பக்தி எதுவாக இருக்க வேண்டும்…? விரதம் எதுவாக இருக்க வேண்டும்…? எதன் வழி வாழ வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.
ஆனால் பக்தியில் இன்று என்ன செய்கிறோம்…?
லஞ்சம் கொடுத்து சினிமா டிக்கெட் வாங்குகிற மாதிரி… ட்ரெயினில் இடம் பிடிக்கக் காசு கொடுப்பது போல… கோவிலில் பூசாரிக்குக் காசைக் கொடுத்து ஆண்டவனிடம் சொல்லுங்கள்… முருகனிடம் சொல்லுங்கள்… என்று அர்ச்சனைக்குக் காசு எல்லாமே கொடுக்கின்றோம்.
பிறகு பூசாரிக்குக் கொஞ்சம் காசு கொடுத்தால் அவர் இன்னும் சிறிது நேரம் அங்கே தீபத்தைக் காட்டுவார். அவரிடம் கொடுத்து அங்கே காண்பித்து ஆண்டவனிடம் வரம் வாங்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.
ஞானிகள் சொன்னதோ…
1.நம் உடல் ஒரு ஆலயம்,
2.நம் உயிர் ஈசன்
3.நாம் எடுக்கும் உணர்வுகள் தெய்வமாக நின்று இயக்குகிறது.
ஆகவே நாம் இந்த ஆலயத்தை எப்படிச் சுத்தப்படுத்த வேண்டும்..? நம் உடலான சிவனுக்குச் செய்யும் சேவை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?
நல்ல உணர்வுகளை எடுத்து உடலான சிவனுக்கு இங்கே சேவை செய்ய வேண்டும். அதே போன்று உயிரான ஈசனுக்கும் நல்ல உணர்வுகளை எடுக்கும்போதுதான் இங்கே அபிஷேகம் ஆகிறது.
வேதனையோ கோபமோ இதைப் போன்ற உணர்வுகளை நாம் சுவாசிக்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்…?
அடுத்த கணமே “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து இங்கே பட்ட தீமைகளை நீக்கி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.அந்த உணர்ச்சிகளை மாற்றி
2.அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் பரவச் செய்யவேண்டும்.
நம் மீது அழுக்குப் பட்டால் நல்ல தண்ணீரை விட்டுக் கழுவுகிறோமா இல்லையா…?
நாம் நுகரும் (சுவாசிக்கும்) உணர்வுகள் உயிரிலே படுகின்றதா இல்லையா…?
அந்த உணர்வுகள் தான் உணர்ச்சியாகி இயக்குகிறது என்று தெரிகிறது அல்லவா…?
அப்பொழுது தீமையான உணர்வு உயிரிலே பட்டவுடன் அதை நீக்க என்ன செய்ய வேண்டும்…?
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற இந்த உணர்வைக் கொண்டு துடைக்க வேண்டும்.
ஆனால் ஞானிகள் நமக்கு நெறிப்படுத்திய இத்தகைய உண்மை நிலைகளைக் காட்டாமலே சுத்தமாகவே நமக்கு மறைத்து விட்டார்கள்.
குருவின் துணை இருந்தால் தான் எதுவுமே நிலைத்து இருக்கும் – ஈஸ்வரபட்டர்
நமக்கு முன்னே பல கோடிச் சித்தர்கள் வாழ்ந்தார்கள் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். திருவள்ளுவர் தோன்றி திகட்டாத பொக்கிஷத்தை நமக்களித்தார்…! என்றெல்லாம் இன்றும் சொல்லி வருகின்றார்கள்.
திருவள்ளுவரும் போகரும் கொங்கணவரும் ஏனைய எத்தனையோ சித்தர்களும் ஞானிகளும் நம்மைப் பொல் மனிதனாகத்தான் பிறந்தார்கள்.
1.அவர்கள் எல்லாம் இன்றும் உலகம் போற்றும் நிலையில் தன் ஞானத்தை வளர்த்து
2.தன் நினைவில் அவ் ஈஸ்வரனையே ஈசனாக்கி வாழ்ந்து காட்டினார்கள்.
அந்த நிலைகளை எல்லாம் இன்றையக் கலியில் நாம் விஞ்ஞானம் என்னும் ரூபத்தில் நமக்கு ஆண்டவன் அளித்த சக்தியைக் கொண்டுவந்து வீண் விரயமாக்கி விட்டோம்.
1.அன்றிலிருந்து இன்று வரை மனிதப் பிறவியில் மாற்றமில்லை.
2.ஆனால் மனித எண்ணத்தில் தான் பல கோடி மாற்றங்கள் வந்துள்ளன.
இன்றுள்ள நிலையில் ஆண்டவனை ஜெபிக்கும் நிலையிலும் உண்மை நிலைகளைச் சொல்பவர்களை எள்ளி நகையாடும் நிலையில் தான் உள்ளார்கள்.
இந்தக் கலியில் வந்த பல மேதைகள் இராமகிருஷ்ண பரமகம்சர்… விவேகாநந்தர்…! அவர்கள் நமக்களித்த உண்மை நிலைகளையும் “கருத்தில் ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றி வாழ்கின்றோம்…!”
இன்று பிறவி எடுத்த நாமும் ஆசையின் உந்தலுக்கு அடிபணியாமல் வாழ்ந்திட்டால் அன்றையக் கால சித்தர்களைப் போல் வாழ்ந்து காட்ட முடியும்.
1.வளரும் முறையிலிருந்து தான் இந்த நிலை எல்லாமே வருகின்றது
2.வளர்ந்த பின் நாம் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் “தியான நிலை ஒன்று தான் உண்டப்பா…!”
ஒவ்வொருவருவரும் தன் நிலையிலேயே ஏற்றுக் கொள்வதையும் இப்பொழுது வெளியிடும் நிலையில் இல்லாமல் தனக்குத் தெரிந்த உண்மை நிலைகளையும் வெளியிடும் பொழுது அதில் தவறுகள் உள்ளனவா…! என்ற பயத்தில் மறைத்து வாழ்கிறார்கள்.
இந்நிலையைப் போக்க நம் நிலைக்கு நாம் இந்த வழிக்கு வந்தமைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு குருவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அந்தக் குருவின் சக்தியிலிருந்து பல உண்மை நிலைகளைப் பெற முடியுமப்பா…! நீங்கள் இப்பொழுது போற்றிடும் திருவள்ளுவரின் நிலைக்கும் ஒரு மாபெரும் ரிஷி இருந்தார்.
இப்படி ஒவ்வொருவரின் நிலைக்கும் ஒவ்வொரு குருவின் நிலை கொண்டு தான் ஆரம்பப் பாடநிலை அறிந்திட முடியுமப்பா…!
அந்தக் குருவின் நிலை நாம் தியானத்தில் அமர்ந்து அந்தக் குருவை எண்ணி வணங்கிடும் காலத்தில் அவர் பெற்ற சக்தி நிலை கொண்டு நமக்குப் பல உன்னத நிலைகளை ஈர்த்து அளித்திட முடியும்.
1.இந்தக் கலி காலத்தில் ஒரு போகராகவோ திருவள்ளுவராகவோ…
2.நாம் ஏன் வாழ்ந்து காட்டிட முடியாது…?
அவர்களுக்கும் மேல் உயர்ந்த நிலையை அவர்களை எண்ணி ஜெபமிருக்கும் பொழுதே அவர்கள் நமக்களிக்கும் உன்னத நிலை பெற்று வாழ்ந்திடலாம்.
நம்மிடமுள்ள பயத்தைப் போக்கி “நாம் பிறவி எடுத்த பயனைப் பெற்றுக் காட்ட வேண்டும்…!” என்ற வைராக்கிய எண்ணம் கொண்டு வாழ்ந்திட வேண்டும்.
மாய ரூபங்கள் வேண்டாம்… ஒளியான உணர்வுகளுக்கு மட்டும் ஆசைப்படுங்கள்
தியானத்தில் உள்ளோர் ஒரு சிலர் எனக்குக் காட்சி கிடைத்தது… நல்லதானது…! என்றெல்லாம் சொல்வார்கள்.
1.காட்சி கொடுத்து நல்லதாகும் என்ற நிலை வந்தாலும்
2.அது சில நாளைக்குத் தான் இருக்கும்.
நானும் (ஞானகுரு) ஆரம்பத்தில் நிறைய இது போன்று காட்சி கொடுத்துக் கொண்டுதான் இருந்தேன். பிற்பாடு இதையெல்லாம் கூடாது என்பதற்காக வேண்டி நிறுத்தி விட்டேன்.
தியானத்தின் மூலம்..
1.அந்த மெய் ஒளியை நீங்கள் பெற வேண்டுமே தவிர
2.இந்த உடலில் விளைந்த உணர்வினை யாரும் தேடாதீர்கள்… நாடாதீர்கள்…!
நம் குருநாதர் காட்டிய வழிகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து இங்கே வளர்க்க வேண்டுமே தவிர அதைப் பார்க்க வேண்டும்… இதைப் பார்க்க வேண்டும்… என்று ஆசைப்படக் கூடாது.
இந்த உடல் மடியக் கூடியது தான். உடலில் உருவான நிலைகளில் அருளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்க்தில் அந்த மெய் ஞானிகள் பெற்ற ஒளி உணர்வுகளைப் பெற ஆசைப்பட வேண்டும்.
குருநாதர் வந்தார்… தெய்வங்களின் காட்சி கிடைத்தது என்ற நிலைக்குப் போய் விட்டோம் என்றால் மீண்டும் மீண்டும் இந்த உடலில் விளைந்த உணர்வுகள் தான் நமக்குள் வளரும். அதே தொடருக்குத் தான் நம்மையும் இழுக்கும். கடைசியில் இந்தப் புவியின் ஆசை தான் வரும்.
ஆகவே உருவங்களாகக் காட்சி கிடைத்தாலும்…
1.குருநாதர் காட்டிய வழியில் உடனே அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்
2.அந்த ஒளியான உணர்வுகள் உடலிலே விளைய வேண்டும் என்று
3.மெய் வழியில் சென்று அந்த வலுவைத் தான் கூட்ட வேண்டும்.
அப்படி இல்லாதபடி சாமி (ஞானகுரு) வந்தார்… காட்சி கொடுத்தார் எனக்கு நல்லதானது… காட்சி கொடுத்தார் உடல் நல்லாதனது…! என்று சொல்வதெல்லாம் உடல் இச்சைக்குத் தான் மாறும்.
அதைத்தான் யாம் வன்மையாக கண்டிப்பது. இந்த நிலையிலிருந்து எல்லாம் நாம் மாறுபட வேண்டும்.
1.மெய் ஒளியை நமக்குள் பெற வேண்டும்
2.நம்முடைய பார்வையால் பிறருடைய தீமைகள் நீங்க வேண்டும்
3.சாமி செய்தார் என்பதற்குப் பதில் சாமி பார்வை பட்டு பிறருடைய தீமைகள் எப்படிப் போனதோ
4.அதே போல் நம் பார்வையால் பிறருடைய தீமைகளை அகற்ற வேண்டும்
5.ஒளியான உணர்வுகள் பேரருள் பேரொளியாக வளர வேண்டும்
6.அத்தகைய சக்தியை நாம் பெற வேண்டும்… அது தான் முக்கியம்.
வாழும் வரை இப்படியே வாழலாம் என்ற எண்ணத்தில் தான் இன்று உள்ளார்கள் – ஈஸ்வரபட்டர்
இந்த மனிதப் பிறவி எடுக்க ஆண்டவனின் சக்தியில் பல நாள் தவமிருந்து நாம் பெற்றதே இப்பாக்கியம்.
ஆனால் நாம் எடுத்த மனிதப் பிறவியையே பெரும் பயத்துடனும் கலக்கத்துடனும் வாழ் நாட்களை வீணடித்துக் கொண்டு வாழ்கின்றோம்.
1.நாம் எடுத்த பிறப்பின் பயனைப் பெறுவது என்பது
2.நம் வாழ் நாட்களை வீண் விரயம் செய்யாமல் வாழ்ந்து காட்டுவது தான்…!
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு குணாதிசயத்தைப் பெற்றுள்ளான். மனிதப் பிறவி எப்பொழுது எடுத்துள்ளோமோ அப்பொழுதே அந்த ஆண்டவனின் “பரிபூரண சக்தி” பெற்றவர்களாகத்தான் தாயின் கருவுக்கே வந்து உதிக்கின்றோம்.
இந்த நல்ல நிலையில் வந்தவர்கள் எல்லாம் நல்ல நிலையில் வாழ்ந்திடாமல்
1.பெரும் பேராசை நிலை கொண்டு பல விஞ்ஞான ரூபங்கள் எடுத்து
2.கடைசியில் தன்னைத் தானே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள்
3.இன்றைய உலக நிலை இது தான்.
விஞ்ஞான ரூபத்தில் வந்த மனிதர்கள் எல்லாம் தன்னுள் இருக்கும் சக்தியை ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டால் விஞ்ஞானத்தையே வெல்லும் மெய் ஞானத்தைக் கண்டிடலாம்.
கூடுவிட்டுக் கூடு பாய்கின்றார்கள் சித்தர்கள்… என்றெல்லாம் கதைகளாகவும் காலப்போக்கிற்காகவும் படிக்கின்றார்கள். ஆக இன்றைய மனிதர்களின் குண நிலையெல்லாம்… பெரும் உல்லாசத்தைக் காணும் குணமாகவே உள்ளது…!
கனவும் நினைவும் உள்ள காலமாக உள்ளதப்பா இந்தக் காலம்.
1.கருத்துடன் நமக்குப் பல பெரியோர்கள் போதித்த கருத்தையெல்லாம்
2.தன் உல்லாச வாழ்க்கைக்காக வியாபாரமாக்கத்தான் தெரிந்திருக்கின்றது
3.தன்னுள் இருக்கும் உண்மை நிலைகளை வீண் விரயமாக்கி வாழ்கிறார்கள்.
“வாழும் வரை வாழலாம்…!” என்ற எண்ணம் தான் மக்களின் மனதிலே பதிந்துள்ளது. இந்த உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகு “அழியாத ஆத்மா” எப்படியெல்லாம் வட்டமிட்டுக் கொண்டுள்ளது…? என்று யாருமே எண்ணிப் பார்ப்பதில்லை.
1.எண்ணிப் பார்ப்பதில்லை என்றால்
2.எண்ணத்தில் பயம் வருவதால் தான் எண்ணிப் பார்ப்பதில்லை…!
இன்றுள்ள நிலையில் நாம் நமக்குத் தெரிந்த ஒரே வழி… அச்சக்தியின் நிலை கொண்டு சகல ஜீவராசிகளையும் காத்து வாழ்ந்திட… அவ் ஈஸ்வர தியானம் இருப்பது ஒன்றே தான்.
அச்சக்தியின் நிலை கொண்டு ஒவ்வொருவரும் இந்த உலகில் உள்ள பல கோடி உண்மை நிலைகளைத் தன்னுள் ஈர்க்க முடியும்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்…! என்று நம் முன்னோர்கள் சொல்லவில்லையா…! எந்நிலையையும் ஜெயம் கொண்டு வாழ்ந்து காட்டிட வேண்டுமப்பா…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
காரமான பொருள்களைத் தனியாக உட்கொள்ளும் போது அந்தக் காரத்தின் உணர்ச்சி தான் முன்னிலையில் நிக்கும். காரம்… காரம்… என்று தான் சொல்லிக் கொண்டேயிருப்போம்.
ஆனால் இந்தக் காரத்தை அடக்க “சப்…!” என்று இருக்கும்
1.மற்ற காரம் இல்லாத பொருள்களை இதனுடன் இணைக்கப்படும் போது
2.காரத்தின் தன்மை குறைந்து சுவை மிக்க நிலைகளாக உருவாகின்றது.
நமது வாழ்க்கையில் வெறுப்போ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ இத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தறியப்படும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அவை எல்லாம் உருவாக்கப்படுகின்றது.
ஏனென்றால்…
1.பிறருடைய துயரங்களையும் துன்பங்களையும் கேட்டறிந்து அவர்களுக்கு உதவிகள் செய்தாலும்
2.கேட்டறிந்த அந்த உணர்வுகளை நாமும் நுகர நேர்கின்றது.
3.அந்தத் துயரப்படும் உணர்வுகள் நமக்குள் வந்த பின் நம்மையும் துன்பப்படச் செய்கிறது
4.அப்பொழுது நாம் நுகர்ந்த அந்தத் துன்பமான உணர்வுகளை தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…!
அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரிடம் கேட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினை உடலுக்குள் சேர்த்துப் பழக வேண்டும்.
முதலில் சொன்ன மாதிரி தனிக் காரத்தை அடக்கப் பல நல்ல சரக்குகளைச் சேர்த்து அதைச் சுவைமிக்கதாக மாற்றுவது போன்று
1.நாம் கேட்டறிந்த துன்பமான துயரமான உணர்வின் தன்மையை அடக்க
2.வலுவான அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளைக் கூட்டி விட்டால்
3.நாம் நுகர்ந்த தீமைகளைத் தணியச் செய்து நல்ல உணர்வின் அணுக்களாக மாற்றும்.
நாம் நல்ல குணங்கள் கொண்டு இருக்கும் பொழுது ஒரு வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனைப்படும் உணர்வின் தன்மை அதிகரித்து நல்ல குணத்தின் வலிமையை அது குறைந்து விடுகின்றது.
ஆகவே நம்முடைய நல்ல குணத்தின் தன்மையை நாம் அதிகமாக வலு பெறச் செய்ய வேண்டும். அதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவசியம் நாம் நுகர வேண்டும்.
அப்பொழுது உயிரான ஈஸ்வராலோகத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உருவாகத் தொடங்குகிறது.
“பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…!” என்ற நிலையில் ஆறாவது அறிவால் அருள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து தீமை செய்யும் உணர்வுகள் நம் உடலில் உருவாகாதபடி அருள் உணர்வுகளை உருவாக்கிடல் வேண்டும்.
தீமை என்ற உணர்வுகளைக் குறைத்து தீமைகளை அகற்றிடும் வலிமை கொண்ட உணர்வின் அணுக்களாக எடுக்கும் போது
1.ஈஸ்வரலோகத்தில் அந்த உணர்வுகள் உருவாக்கப்பட்டு
2.நம் இரத்தங்களில் கலக்கச் செய்யப்படும் போது அது இந்திரலோகத்தில் கருத்தன்மை பெற்று
3.தீமைகளை மாற்றிடும் வலிமை பெற்ற பிரம்மலோகமாக… நல்லதைச் சிருஷ்டிக்கும் பிரம்மலோகமாக (உடலாக) மாறுகின்றது.
நன்மைகள் செய்யத் துணிவு வேண்டும் என்று நம் குருநாதர் சொன்னதன் உட்பொருள் என்ன…?
நாம் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் கூட ஒரு சிலர் நம்மிடம் பகைமை கொண்டு பேசுவார்கள். நல்லதைச் செய்தாலும் கூட இந்த மாதிரி வரும்.
காரணம் என்ன என்றால்…
1.கெடுதல் செய்த உணர்வு கொண்ட ஆவி அவர் உடலிலே இருந்தால்
2.நீங்கள் நல்லது செய்வதைப் பார்த்தாலே அவருக்குப் பிடிக்காது.
3.எதிரி என்ற நிலைகளில் உங்களைக் கண்டாலே இல்லாததை எல்லாம் சொல்லும்.
ஒரு உடலுக்குள் இந்த மாதிரி ஆவி இருந்தாலே நாம் தியானம் செய்கிறோம் என்று சொன்னாலே போதும். நம்மைப் பார்த்ததும்…
1.என்னை ஏதோ செய்கின்றான்… இதைச் செய்கின்றான்.. அதைச் செய்கின்றான்…! என்று சொல்ல ஆரம்பிக்கும்
2.நாம் ஒன்றுமே செய்யவில்லையே… இப்படிச் சொல்கிறதே…! என்று நினைப்பீர்கள்.
அந்த உணர்வை நுகர்ந்தாலே “நான் ஒன்றுமே சொல்லவில்லை இந்த மாதிரித் தவறாகச் சொல்கிறான்… பாவிப்பயல்…!” என்ற இந்த அலைகளில் சிக்கிவிடுவோம்.
அந்த மாதிரி நேரத்தில் எல்லாம்…
1.உடனே மகரிஷியின் அருள் உணர்வை நமக்குள் எடுத்து வலுவாக்கிக் கொண்டு
2.அவருக்குள் இருக்கும் அந்த ஆவி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.அவருக்குள் இருந்து நன்மை செய்யும் செயல்கள் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
இதிலே நமக்கு அந்தத் துணிவு அவசியம் வேண்டும். அதனால் தான் நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும் என்று சொல்வது. அந்த இடத்திலே துணிவு இருந்தால் தான் அதைச் செய்ய முடியும்.
1.நமது குருநாதர் கொடுத்த நிலைகளை ஒவ்வொன்றையும் நீங்கள் வரிசைப்படுத்திப் பாருங்கள்
2.நன்மை செய்ய வேண்டும் நமக்குள் அது வளர வேண்டும் என்றால் அதற்குத் துணிவு வேண்டும்.
உடலில் ஆவி உள்ளவருக்கு அவர் கஷ்டப்படுகிறார் உதவி செய்ய வேண்டும் என்று நாம் சொன்னால் போதும்…!
ஐய்யய்யோ பாவிப் பயல்…! எனக்கு ஏதோ செய்கின்றான்… விஷம் வைக்கின்றான்… மருந்து வைக்கின்றான்…! என்று சொல்லும்… பார்க்கலாம் இதை எல்லாம்…!
அவர்கள் உடலில் இருக்கும் அந்த ஜீவான்மா (ஆவி) மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அந்த உடலிலிருந்து நன்மை செய்யும் நிலைக்கு வர வேண்டும் என்று நாம் எண்ணி எடுக்க வேண்டும்.
ஏனென்றால் இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் நல்லது செய்கின்றோம் என்றாலும் கூட அடுத்த வீட்டுக்காரர் நம்மைப் பற்றி இல்லாததை எல்லாம் சும்மா சொல்லிக் கொண்டே இருப்பார். காரணம் அவர் உடலில் ஒரு ஆன்மா இருக்கும்.
ஆக… ஆன்மா இல்லாதவர்களே இல்லை.
ஆனால் நம்மைக் கண்டவுடனே அதற்கு வெறுப்பாக இருக்கும்… உடலில் எரிச்சல் ஆகும்…! அப்படி நம்மை எரிச்சலுடன் பார்க்கும்போது நம் ஆன்மாவில் முன்னாடி அது அதிகமாகப் பெருகிவிடும். இது பெருகி விட்டால் அதைத்தான் நாம் சுவாசிப்போம். அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்கும்.
ஆனாலும் உயிரிலே பட்டபின் இந்த உணர்வை வெளிப்படுத்துவது நம் உயிரே தான். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள் வந்தாலும்
1.உடனே இடைமறித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.இங்கே புருவ மத்திக்கு நினைவைக் கொண்டு வர வேண்டும்.
3.இப்படிப் பல முறை கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி உணர்வின் சக்தியை தனக்குள் எடுக்க வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதே சமயத்தில் எந்த உடலில் எப்படிப்பட்ட ஆன்மா இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அந்த நன்மை செய்யும் சக்தியாக வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
இதைச் செய்தால் அவர்கள் உணர்வு நம்மை எதிர்மறையான உணர்வுடன் இயக்காது. அதே சமயத்தில் அவர்களுக்குள்ளும் இந்த அருள் உணர்வுகள் சென்று ஊடுருவி இயக்கும். விலகிச் சென்றாலும் சென்று விடுவார்கள். நமக்குத் தொல்லை தர மாட்டார்கள்.
1.துணிவுடன் செய்து நமக்குள் இருக்கும் நல்ல குணத்தைக் காக்க வேண்டும்.
2.அவர்களுக்குள்ளும் இந்த அருள் உணர்வை நாம் பாய்ச்சும் போது
3.அங்கேயும் உண்மையை உணர்த்தும் சக்தியாக அவர்களை இயக்கும்.
செயற்கையில் உருவாக்கப்பட்ட நஞ்சை இயற்கையாலும் இன்று வடிகட்ட முடியவில்லை – ஈஸ்வரபட்டர்
இன்று உலகினிலே பல வகையான ஜீவராசிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தன் நிலைக்கு ஏற்பச் சுவாச நிலையை எடுக்கின்றது.
1.மனிதரின் சுவாச நிலை தான்
2.எல்லாத் தன்மையையுமே தன் சுவாசத்தில் ஈர்க்கும் நிலையில் உள்ளது.
மனிதனின் சுவாச நிலை அவன் ஒவ்வொரு எண்ணம் கொண்டும் எண்ணிடும் பொழுது அந்நிலையில் அவன் எடுக்கும் சுவாச நிலையைப் பொறுத்து அவன் வாழ்கின்றான்.
இவ்வுலகினிலே நாகப்பாம்பைப் போல்
1.நச்சுத் தன்மையுள்ள கொடிய விஷத்தைத் தன்னுள் ஈர்த்து எடுத்திடும் ஜீவராசிகள் இல்லாவிட்டால்
2.இந்தக் காற்றில் கலந்துள்ள கொடிய விஷங்கள் எல்லாம் பெரும் தீங்கைத் தான் விளைவித்திருக்கும்.
அவ் ஈசனின் சக்தியிலிருந்து நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் தெரிந்திடாமல் பல வகை உண்மை நிலைகள் உள்ளன. எல்லாமே அவ்வீசனின் சக்தியில் வந்தவை தான்.
ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நிலையில் உற்பத்தியாகி வளர்ந்திருக்கின்றன. தாவரங்கள் எல்லாம் அதனதன் சுவாச நிலை மேல் நோக்கி அந்தச் சூரியனின் சக்தியை நேராக ஈர்க்கும் நிலையில் உள்ளன.
பல வகைத் தாவரங்களிலும் பல வகை நல்ல உணவாகவும் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் அமையப் பெற்றுள்ளன.
நாம் எண்ணுகின்றோம். உபயோகமில்லாமல் இப்படி ஏன் பல வகைத் தாவரங்கள் உள்ளன என்று…? அச்சக்தியின் அருள் பெற்றுத் தான் அவையும் வளர்கின்றன… நல்ல கனி கொடுக்கும் தாவரங்களும் வளர்கின்றன.
அந்தக் கொடிய விஷமுள்ள தாவரங்கள் எல்லாம் இல்லாவிட்டால் இந்தக் காற்றிலிருந்து இன்னும் பல தீய நஞ்சு கலந்த அணுக்கள் தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
1.அந்த விஷ அணுக்களையே உண்டு உயிர் வாழும் தாவரங்கள் இருப்பதால் தான்
2.நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்றையே சுத்தமாக்கி நாம் சுவாச நிலைக்கு ஈர்த்துக் கொள்ள முடிகிறது.
இந்த உலகில் தோன்றியவை எதுவுமே வீணாகவும் உபயோகமற்றதாகவும் தோன்றவில்லை.
1.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தன் சுவாச நிலையைக் கொண்டு தோன்றி
2.இந்த உன்னதமான உலகத்தைப் பல கோடி ஆண்டுகள் காத்து வருகின்றது.
இன்றைய உலகத்தில் விஞ்ஞானம் என்ற பெயரால் பல வினைகளைச் செய்து… தன்னையே தான் அழித்துக் கொள்ளும் இந்த மனிதரின் நிலைகள் எல்லாம்… இன்னும் ஜீவனுடன் உயிர் வாழ்கிறதென்றால் எந்த நிலையில்…?
நச்சுத் தன்மையைத் தானே உண்டு வாழும் நாகப் பாம்புகளும்… நச்சுடன் நச்சாக வளர்ந்து பெரும் விஷத் தன்மையுள்ள நாம் சொல்லும் செடி கொடிகளும் இல்லாவிட்டால்…
1.இன்று வீசும் காற்றே பெரும் விஷமுள்ளதாக வீசி
2.எந்த ஜீவராசிகளுமே உடலுடன் வாழ்ந்திட முடிந்திருக்காதப்பா…!
இந்த நச்சுத் தன்மை பாம்பிலும் தாவரங்களிலும் தான் உண்டு என்று இம்மனிதர்கள் எண்ணுகின்றார்கள். இவை எல்லாம் நமக்கு நன்மையைத்தான் அளிக்கின்றன.
இம்மனிதனாக வாழ்வதற்கு மாபெரும் தவமிருந்து நமக்கு அந்தச் சூரியனிலிருந்து பல ஜென்மங்கள் எடுத்து பெரும் வாழ்க்கையை வாழும் பாக்கியம் பெற்ற நாம் “நம் மனைதையே விஷமாக்கி வாழ்கின்றோம்…!”
இந்த மனித உடலைப் பெற்று வாழ்வதே நாம் செய்த பாக்கியம் தான். இந்தப் பாக்கியம் பெற்ற நாம் இந்த மனித உடல் உள்ள பொழுதே நாம் பிறவி எடுத்த பயனைப் புரிந்து “நம் மனதையே நல் மனதாக்கி வாழ்ந்திட வேண்டும்…!”
பிறவி எடுத்த புனிதத் தன்மையைப் போற்றிக் காத்து எவன் ஒருவன் வாழ்கின்றானோ… அவனெல்லாம் அச்சக்தியின் சக்தி பெற்ற… நம்முள் கலந்துள்ள பல தேவர்களின் தேவர்களைக் கண்டிடலாம்.
1.அந்தத் தேவர்களின் தேவர்களாகவும் நாம் ஐக்கியப்பட்டு
2.உடலை விட்டு நம் ஆத்மா செல்லும் நிலைக்குள் சகல நிலையையும் பெற்றிடும் பாக்கியம் பெறத்தான்
3.இந்தப் பாட நிலையெல்லாம் அளிக்கின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நாம் ஒரு வேலை செய்யும் பொழுது கையிலே அழுக்குப்படுகின்றது. ஆனால் அதைத் துடைத்துவிட்டுத் தான் உணவு உட்கொள்கின்றோம். அடுத்த காரியத்தைத் தொடர்கின்றோம்.
ஏனெனில் நாம் கையிலே அழுக்கானபின் தொழில் செய்தபின் அதைத் துடைக்காதபடி மற்றொரு இடத்தில் செயல்பட்டால் அதுவும் மாசு பட்டுவிடும்.
இதைப்போல ஒருவருடைய நிலைகள் நாம் பார்த்துக் கொண்ட பின் அவர்களைக் காப்பாற்றும் எண்ணம் கொண்டு காப்பாற்றினாலும் அதைத் துடைக்கும் நிலை நமக்கு வரவேண்டும். அதைத் துடைத்திடும் உணர்வு நமக்குள் உண்டு.
ஒரு குழந்தைக்குத் தலைவலி வந்து விட்டால் பச்சிலை இங்கிருக்கின்றது என்றால் நாம் எப்படி தேடிச் சென்று, கொண்டு வந்து அதைக் குழந்தைக்குக் கொடுக்கின்றோம். நம் ஆறாவது அறிவு இப்படி வேலை செய்கிறது.
இதைப் போலத் தான் தீமைகள் வரும் பொழுதெல்லாம் தன் உணர்வின் எண்ணத்தால் “மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்…!” என்ற ஏக்க உணர்வு கொண்டு எண்ணி நமக்கு முன் சுழன்று கொண்டு இருக்கும் அருள் ஞானியின் உணர்வைத் தனக்குள் எடுத்துத் துடைத்துப் பழக வேண்டும்.
அந்த மெய் ஞானிகள் அனைவரும்
1.தன் வாழ்க்கையில் வந்த எதிர் நிலைகள் அனைத்தையும்
2.தனக்குள் தீமைகள் விளைவித்த அந்தச் சக்தியை அவர்கள் துடைத்துப் பழகி,
3.நஞ்சினை அடக்கி உணர்வினை ஒளியாக்கி,
4.ஒளியின் சிகரத்தால் பொருள் கண்டு உணரும் ஆற்றல் பெற்று
5.மற்ற எந்த சக்தியானாலும் தெரிந்திடும் ஆற்றல் பெற்று
6.தெரிந்து கொள்ளும் உணர்வின் தன்மையை வளர்த்து
7.தங்கள் உணர்வு அனைத்தையும் ஒளியாக மாற்றிச் சென்றவர்கள்.
இதைத்தான் ஏழாவது அறிவு சப்தரிஷி என்று சொல்வது. இதைச் சப்தரிஷி மண்டலம் என்று சொல்வார்கள்.
மனிதனாக வளர்ந்து அந்த மெய் ஞானி அவன் தெளிந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி,
1.அவன் உடலிலே விளைய வைத்த ஆற்றல்களும்
2.அவன் உடலில் வெளிப்பரப்பிய மணமும் மூச்சலைகளும்
3.அவன் எண்ணத்தால் வெளியிட்ட உணர்வும் இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்துள்ளது.
இப்பொழுது உங்களுக்கு யாம் உபதேசிக்கும் பொழுது அவர்கள் உடலில் விளைய வைத்த மணங்களை நீங்கள் நுகர நேருகின்றது.
அந்த மணங்களை நீங்கள் நுகரும் பொழுது உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த வேதனைகளையும் மனக்கவலையையும் நீக்கிடும் சக்தியாக அமையும்.
நம் ஆன்மாவில் வரும் தீமைகளை உடனே கட் (CUT) பண்ணப் பழக வேண்டும் – ஞானகுரு
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி இதை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் இணைத்துக் கொண்டே வரவேண்டும்.
இதை நினைப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகின்றது…!
1.எத்தகைய எதிர்மறையான உணர்வு வந்தாலும்
2.நம் ஆன்மாவில் வரும் அந்தத் தீமைகளைக் “கட்” பண்ணப் (CUT – நிறுத்தி) பழக வேண்டும்.
இதைத்தான் நரசிம்மன் வாசல்படி மீது அமர்ந்து மடி மீது வைத்து இரண்யனைப் பிளந்தான் என்று சாஸ்திரம் சொல்கிறது.
நரசிம்மன் என்றால் உயிர்…
வாசல்படி என்பது நம் மூக்கு..
மடி என்பது ஆன்மா…
இரண்யன் என்பது விஷமான (தீமையான) உணர்வு…!
நமது ஆறாவது அறிவு கார்த்திகேயனாக இருக்கின்றது. அந்த அறிவின் தன்மை கொண்டு ஒளியின் தன்மை பெற்ற மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் கொண்டு வரப்படும் பொழுது அறியாது உள் புகும் இருளை மாயக்கின்றது.
இந்த வழியில் நாம் செல்ல வேண்டும் என்று தான் எத்தனையோ காவியங்களையும் சாஸ்திரங்களையும் ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.
ஆறாவது அறிவு கொண்டு அந்த அருள் ஒளியை எடுத்து உடலுக்குள் செலுத்தி அந்த உணர்வுகள் உள்ளே (நமக்குள்) வலுப்பெற்ற பின் தீமைகளை அகற்றுகின்றது.
முன் வழி கூடி நீக்க முடியுமா…? என்றால் முடியாது. அதாவது…
1.தீமைகளை அப்படியே நேருக்கு நேர் நாம் தள்ள முடியாது.
2.உயிர் வழியாக மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உடலுக்குள் பெருக்கி வலுவாக்கி
3.அதிலே கொதித்து வரும் அந்த அலைகள் மூலம் ஆன்மாவிலிருக்கும் தீமைகளைப் பிளந்து தள்ள வேண்டும்.
எப்படித்தான் இருந்தாலும் ஒரு சங்கடமான எண்ணத்துடன் தியானத்தில் நீங்கள் உட்கார்ந்து பாருங்கள்.
1.உட்கார்ந்தால் எழுந்து போகச் சொல்லிக் கொண்டுதான் இருக்கும்…
2.உட்கார முடியாது… ஆட்டம் கட்டும்… எப்படியோ வரும்…
3.யார் யார் என்னென்ன சொன்னார்களோ அந்த நினைவு வந்து அவர்கள் மீதெல்லாம் வெறுப்பு அதிகமாக வரும்
4.கடைசியில் தியானத்தைச் செய்வதை விட்டுவிட்டு வெறுப்பான உணர்வுகள் கூடிய பின் எழுந்து விடுவோம்.
தியானத்தில் உட்கார்ந்து இருந்தீர்கள்…! என்ன இப்பொழுது எழுந்து விட்டீர்கள்…! என்று வீட்டிலே கேட்டால் அவர்களிடம் சண்டைக்குச் செல்ல ஆரம்பிப்போம்.
கணவனாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும் கேட்டவர்கள் மீது கோபம் வந்து விடும். ஏனென்றால் வெறுப்பின் உணர்வுகள் அதிகமானபின் இத்தகைய சொல்தான் வரும்.
அடிக்கடி உங்களிடம் ஆத்ம சுத்தி செய்யச் சொல்வதன் நோக்கமே ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்குள் இப்படி வரும் தீமைகளை வலு இழக்கச் செய்வதற்குத் தான்.
அவ்வாறு ஆத்ம சுத்தி செய்து கொண்டே வந்து
1.வரிசைப்படுத்தி எல்லா குணங்களிலும் எல்லா உணர்வுகளும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும்.
அந்த அருள் ஒளியை நாம் உருவாக்கத் தெரிந்து கொண்டால் “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலைக்கு வருகின்றோம்.
ஆகவே கார்த்திகேயா…! நாம் அறிந்திடும் அறிவு பெற்றவர்கள். அருள் ஒளியின் தன்மை கொண்டு எதையுமே நல்லதாக உருவாக்கும் திறன் பெற்றவர்கள். நீங்கள் சீராகப் பயன்படுத்த வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).
எண்ணம் போல் தான் நம் வாழ்வு – ஈஸ்வரபட்டர்
1.நம் எண்ணத்தில் பல நினைவுகளைச் சிதறடித்துக் கொண்டு நாம் சுவாசம் எடுக்கும் பொழுது
2.அந்த நிலையே நம் எண்ணத்தையும் சுவாசத்தையும் மாற்றி அமைத்து
3.அதனால் பல அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகி
4.மீண்டும் மீண்டும் பல பல எண்ணங்களை எண்ணியே
5.நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்.
நாம் எந்த நிலையில்… எந்த நினைவில் இருக்கின்றோமோ… அந்நிலையில் எண்ணும் எண்ணத்தை வைத்து நாம் சுவாசம் எடுக்கும் பொழுது “அந்நிலையேதான்…” வாழ் நாட்களில் நம்முடன் கூடவே வருகின்றது.
1.ஆண்டவனை நினைத்துச் சுவாசம் விடும் பொழுது
2.அந்தச் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்குப் பெரும் உன்னத நிலை கிட்டுகின்றது.
ஆனால் அதை நாம் புரிந்திடாமல்…
1.நம் வாழ்க்கையையே…
2.நம்மையே நாம் அடிமையாக்கிக் கொள்கின்றோம்.
3.அசுத்த சுவாச நிலை என்பதன் பொருளும் இது தான்.
நம் எண்ணத்தைக் கொண்டு தான் நம் சுவாச நிலையில் பலவித நறுமணங்கள் பெற முடிகிறது. நல்ல மணமுடைய சுவாச நிலையில் உள்ள பொழுது நம் உயிர் நிலைக்குப் பெரும் ஊட்டம் கிடைக்கின்றது.
நாம் வாழ்வதுவும் மடிவதுவும் நம் எண்ணத்தைக் கொண்டு தான்…!
இதைப் புரிந்து கொண்டு அந்த நிலையில் இருந்து தான் பல கோடிச் சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள்.
1.வாழும் வாழ்க்கையில் நிறைவு பெற்று வாழும் பொழுது
2.அந்தச் சித்தர்களின் நிலையைப் போல இந்த மனித உடலைப் பெற்ற நாம் எல்லோருமே பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்.
நம் உயிராத்மாவிற்கு உயர்ந்த நிலையைத் தேடிக் கொள்ளலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஒரு விஷச் செடியின் அருகிலே இருக்கும் ரோஜாப்பூ தன் மணத்தின் வலிமை கொண்டு அந்த விஷச் செடியின் மணத்தைத் தனக்குள் அணுகாது தடுத்து நிறுத்தி விடுகிறது.
இதைப்போல தான் அருள் ஞானிகள் தீமையைத் தனக்குள் அணுக விடாது நறுமணத்தின் மகிழ்ச்சியின் நிலைகள் உணர்வாக ஒளிகளாக ஒளியாக மாற்றிக் கொண்டு இன்றும் விண்ணுலகில் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் அலைகள் நமக்கு முன் படர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் அடிக்கடி கவர்ந்து உங்கள் உடலுக்குள் சக்தி வாய்ந்த மணங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அப்பொழுது அந்த மணத்தின் உணர்வின் செயலாக நல்ல எண்ணங்கள் நம்மை இயக்கி நம் சொல்லின் தன்மை கேட்போருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கும். நாம் எடுத்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள்ளும் மகிழ்ச்சியை ஏற்படச் செய்யும்.
இத்தகைய நிலைகளை நாம் உருவாக்க உருவாக்க தீமைகளைக் கண்ணுற்றுப் பார்த்தாலும் ரிமோட் கண்ட்ரோல் (REMOTE CONTROL) போல
1.அந்தத் தீமைகள் நம்மை அணுகாது
2.அது அறிந்திடும் ஆற்றலாகத் தான் பயன்படும்
3.ஆக தீமைகள் நமக்குள் சேராது தடுக்கும் ஆற்றலைப் பெருகச் செய்யும்… உங்களை நம்புங்கள்…!
அந்த நல்ல சக்திகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன். இந்த உபதேச உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து அருள் ஞானியின் ஆற்றல் மிக்க சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றேன்.
அதனின் வலுவின் துணை கொண்டு உங்களுக்கு முன் படர்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷியின் உணர்வின் ஆற்றலை நீங்கள் நினைக்கும் போதெல்லாம் அதைப் பருக முடியும். ஆற்றல் மிக்க சக்தியாக வளர்த்துத் தீமைகள் அகற்றும் நிலையைப் பெற முடியும்.
ஒரு வித்தினை ஊன்றி விட்டால் அது தனது உணர்வின் வலுக் கொண்டு அந்தச் செடியின் சக்தி வளர்கின்றது. அதைப் போல ஒருவர் உங்களை ஏசிவிட்டால் அவர்களைத் திரும்பத் திரும்ப எண்ணும் போது கொதிப்பும் கோபமும் உங்களுக்குள் எழுகின்றது,
பின் உங்கள் நல்ல காரியங்களைச் செயல்படுத்த முடியாது அந்தக் கொதிப்பின் தன்மை கொண்டு உங்களுக்குள் நோயாகவும் விளைகின்றது. ஆகையினால் அந்த நோயை நீக்க அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் வித்தாகப் பதிவு செய்கின்றோம்.
உங்களுக்கு எத்தகைய துன்பங்கள் ஏற்பட்டாலும்… நோய்கள் வந்தாலும்… உங்கள் எண்ணத்தால் “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்களை அறியாது சேர்ந்த தீமைகள் நீங்க வேண்டும்
4.எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் வீடு முழுவதும் படர வேண்டும்.
6.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பெற்று மன பலம் மன வளம் பெற வேண்டும்.
7.எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் வசிஷ்டரும் அருந்ததி போல ஒற்றுமையாக வாழ்ந்திடும் நிலைகள் வேண்டும்.
8.எங்கள் தொழில் வளம் பெருக வேண்டும்.
9.எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்.
19.எங்கள் விவசாய நிலங்களில் பயிர்கள் நல்ல நிலைகள் விளைந்திட வேண்டும்.
11.எங்கள் விவசாய நிலங்களில் வேலை செய்வோர் அனைவரும் மன பலத்துடன் இருக்க வேண்டும்.
12.அவர்கள் பயிரிடும் பயிர்கள் வலுவான நிலைகள் கொண்டு வளர வேண்டும்.
13.அதிலே விளைந்ததை உணவாக உட்கொள்பவர்ளும் அதைப் பயன்படுத்தும் அனைவரும் மன பலத்துடன் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்ற
14.இந்த உணர்வுகளை எல்லாம் எப்பொழுது நீங்கள் எடுக்கின்றீர்களோ
15.ஒவ்வொரு நொடியிலேயும் அந்த அருள் ஆற்றல் மிக்க மகரிஷியின் அருள் சக்தியை உங்களுக்குள் பற்றுடன் பற்றி வாழ்கின்றீர்கள்.
இந்தப் புவியில் ஏற்படும் தீமைகளை எல்லாம் பற்றற்றதாக மாற்றி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திட இது உதவுகிறது.
மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் உருவாக்கச் செய்வது தான் இந்தத் தியானப் பயிற்சியின் முக்கிய நோக்கம் – ஞானகுரு
அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து நம் உடலுக்குள் உருவாக்கிக் கொண்டே வர வேண்டும். அதைத் தான் “பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்…” என்று சொல்வது.
சந்தர்ப்பத்தால் இணைவது எதுவாக இருந்தாலும் அது பிரம்மம் தான். ஆனால் அந்த மெய் ஞானியின் உணர்வை நமக்குள் இணைத்து அதை உருவாக்க தெரிந்து கொண்டால் கார்த்திகேயா…!
அதாவது புறத்திலே பார்க்கும் போது
1.தீமை என்று ஒன்றைத் தெரிந்து கொள்கின்றோம்…
2.அந்தத் தீமையை அகற்றத் தெரிந்து கொள்கின்றோம்…
3.ஆனால் தீமையை அகற்றும் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் உருவாக்க வேண்டும்…
4.அது நம்மால் முடியும் என்ற நிலைக்கு வரவேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் இணைத்து இணைத்து தீமையை அகற்றும் சக்தியாக நமக்குள் உருவாக்கிக் கொண்டே வர வேண்டும். இது மிகவும் முக்கியமானது.
அதனால்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகிறாய்…! என்று தெளிவாகக் காட்டுகிறார்கள்.
சந்தர்ப்பத்தால் தீமைகளைக் கேட்க நேர்ந்தாலும்… அது நம் ஆன்மாவில் மோதி இயக்கினாலும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று இதை இணைத்து உருவாக்க வேண்டும்.
1.பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரினங்கள் எல்லாம் தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட நிலைகளை எண்ணிப் பார்க்கின்றது.
2.அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வினைத் தான் தனக்குள் உருப் பெறச் செய்கின்றது.
அதனுடைய சந்தர்ப்பம் இப்படி உருப்பெறும் பொழுது அது வளர்ச்சியாகி அந்த உடலை விட்டு அகன்ற பின் அந்த வலிமையான உடலுக்குள் சென்று பரிணாம வளர்ச்சி அடைகின்றது.
ஆனால் நாம் தீமை செய்வோரின் உணர்வை எடுத்துக் கொண்ட பின்… தீமை செய்வோரையே எண்ணி… அந்தத் தீமை நமக்குள் வலிமையாக வளர்ந்து விட்டால் அது நம்மைத் தேய் பிறையாக மாறுகின்றது.
அப்படித் தேய்பிறையாக மாறாதடி நாம் மாற்ற வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை மாற்றி நமக்குள் உருவாக்க வேண்டும்.
ஏனென்றால்…
1.நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதன் வழி தான் நம் உயிர் அதை உருவாக்குகின்றது…
2.அணுவாக உருவாக்குகின்றது உணர்வின் சத்தைப் பதியச் செய்கின்றது.
3.அதையே மீண்டும் எண்ணும் பொழுது கடவுளாக நின்று அந்த வழியிலேயே நமக்குள் உருவாக்குகின்றது.
ஆகவே நாம் எண்ணியது எதுவோ உயிர் அது உருவாக்குகின்றது. உருவாக்கியதை… மீண்டும் அந்த எண்ணத்தை வலு சேர்க்கும் போது அந்த வளர்ச்சி நமக்குள் பெறுகின்றது. இது எல்லாவற்றுக்கும் பொதுவானது தான்.
அதே போல் தான் யாம் கொடுக்கும் அருள் உபதேசங்களை ஒரு தடவைப் பதிவாக்கி விட்டு அதற்குப் பின் அப்படியே விட்டு விட்டால் மீண்டும் அதற்கு உணவு கிடைக்க வேண்டுமல்லவா…!
1.நேற்று சாப்பிட்டால் இன்று ஏன் சாப்பிட வேண்டும் இன்று விட்டு விட்டால் என்ன ஆகும்…?
2.அது போல் தான் தியானம் இருந்தோம்… ஆத்ம சுத்தியும் செய்தோம்…
3.மீண்டும் மீண்டும் அதை எல்லாம் எதற்குச் செய்ய வேண்டும்…? என்று விட்டுவிட்டால்
4.சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமை நமக்குள் வலுவாகி விடும்.
5.கொடுத்த சக்தியை வளர்ப்பது தடையாகிவிடும்.
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து எமக்கு (ஞானகுரு) அனுபவமாகக் கொடுத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
உங்களுக்கு மீண்டும் மீண்டும் அந்த அருள் ஞான உணர்வுகளை இங்கே ஊட்டிக் கொண்டிருப்பதன் நோக்கமே… உங்களை நீங்கள் காத்து… இந்த உலகையும் காத்திடும் அரும் பெரும் சக்திகளாக வளர வேண்டும் என்பதற்குத் தான்…!
பிறந்த நேரம் காலம் முக்கியம் இல்லை… இன்றைய வாழ்க்கையில் நல்லது பெற வேண்டியது தான் முக்கியம் – ஈஸ்வரபட்டர் சொன்னது
பிறவி எடுத்து நம் பிறவியில் நமக்கு வரும் குணாதிசயங்கள் எல்லாம் ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் சொல்வதைப் போல்
1.நாம் பிறக்கும் நாளைக் கொண்டோ…
2.பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டோ… வருவதல்ல..!
இந்தக் குண நிலைகளின் உண்மை நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் வருவது அவன் முதல் பிறவியில் செய்ததின் தொடர்ச்சி தான்… இந்தப் பிறப்பில் நாம் சாந்தமாக உள்ளதும்… கோப நிலையில் உள்ளதும்… மற்ற எல்லாமே…!
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குண நிலையில் வாழ்கின்றோம். எல்லோரும் ஒன்றாக நினைப்பது அந்த ஆண்டவனின் சக்தி ஒன்றைத்தான்.
குண நிலையில் பல மாற்றங்கள் இருந்தாலும் அந்த ஆண்டவனின் சக்தியை ஒரே நிலையில் எப்படி வணங்குகின்றோமோ அந்த நிலையிலேயே எல்லோரும் வாழ்ந்திடலாம்.
1.ஒருவர் கோபக்காரராக இருந்தால் அந்தக் கோப நிலை முதல் ஜென்மத்தின் தொடர்ச்சி தான்.
2.சாந்தமுள்ளவராக இருப்பதும் முன் ஜென்மத்தின் எண்ணத்தை வைத்துத்தான் அமைகிறது.
முன் ஜென்மத்தின் தொடரிலேயே இப்பொழுது பிறவிக்கு வந்தாலும் இந்த ஜென்மத்தில் நாம் வாழும் வாழ் நாட்களை வீண் விரயமாக்கிடாமல் வாழ வேண்டும்.
அந்த வினைப்பயன்கள் எல்லாம்
1.நாம் பிறந்த நேரம்…
2.நாம் செய்த பாவ புண்ணியங்கள்… என்று
3.தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
இப்பொழுது வாழ்ந்திடும் வாழ் நாட்களில் நம் எண்ணத்திலும்… நம் சுவாசத்திலும் அந்த மகரிஷிகள் ஞானிகளின் அருள் சக்திகளை எடுத்து வாழ்ந்து சுவாசத்தைச் சீராக்கி அருள் மணங்களை நம் சுவாச நிலைக்குக் கொண்டு வந்து வாழ்ந்திட வேண்டும்.
இந்தப் பிறவியில் இதை அதிகமாக வளர்க்கும் பொழுது நம்முடைய நாளைய சரீரம் அது ஒளியின் சரீரமாக அமையும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நாம் காலையிலிருந்து இரவு வரை வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் என்ற உணர்வுகளைச் சுவாசிக்க நேருகிறது.
1.அது எல்லாம் நம் உயிரிலே பட்ட பின் உமிழ் நீராக மாறி
2.ஆகாரத்துடன் கலந்து கலந்து அது இரத்தமாக வருகின்றது.
அதனால் எதன் உணர்வு அதன் இயக்க உணர்வாக மாறியதோ உடலுக்குள் போனவுடனே அது கருத்தன்மை அடைந்து விடுகின்றது… முட்டையாகின்றது. அதிகமாகி விட்டால் அந்த முட்டை வெடித்த பிற்பாடு அணுவாகின்றது.
சாதாரணமாக ஒரு தட்டான் பூச்சி அது ஏதாவது ஒரு பூச்செடியில் போய் முட்டையிட்டால் அந்த பூவின் மணத்தை எடுத்துப் பூவின் நிறத்தில் பட்டாம் பூச்சியாக மாறுகின்றது.
இதைப் போன்று தான்…
1.நாம் வேதனை வெறுப்பு என்ற உணர்வை எடுத்துக் கருத்தன்மை அடைந்தால்
2.நல்ல அணுக்கள் வேதனை உருவாக்கும் முட்டைகளாக மாறிவிடும்.
இதை மாற்றியமைக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதைப் பலவீனப்படுத்த வேண்டும்.
அப்பொழுது அந்தக் கரு முட்டைக்குள் என்ன செய்யும்…?
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கருமுட்டைக்குள் பாய்ச்சப்படும்போது அதற்குத தக்கவாறு அந்தக் கருமுட்டைகள் அணுக்கள் மாற்றமடைகிறது. தீமையை நீக்கிடும் நிலை பெறுகின்றது.
ஆனால் அதே சமயத்தில் முட்டை அணுவாகி விட்டால் மாற்றாமல் விட்டு விட்டால் அதனுடைய இனத்தை அது பெருக்கி முட்டைகள் அதிகமாக இட்டுப் பெருக்க ஆரம்பித்துவிடும்.
வேதனை அணுக்கள் நமக்குள் பெருகி விட்டால்…
1.நல்ல அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது தடைப்படுகின்றது.
2.உடல் உறுப்புக்களின் செயல்கள் குறைகின்றது. பின் நோயாகி விடுகின்றது.
வேதனை உணர்வுகளை அடிக்கடி நாம் எண்ணப்படும் போது ஆத்ம சுத்தி எடுத்தால் உடனுக்குடன் அந்த அணுக்களை மாற்றி நல்லதாக மாற்றிக் கொள்ள முடியும்.
இது ஒரு பழக்கத்திற்கு வந்தால் நாம் அந்த அகஸ்தியன் எப்படி அகண்ட அண்டத்தையும் அறிந்து உணர்வை ஒளியாக மாற்றினானோ அவன் பெற்றதையெல்லாம் நமக்குள் பெற்று நாமும் இந்த உடலுக்குப்பின் அவன் பிறவியில்லா நிலை அடைந்தது போல் அடைய முடியும்.
நமக்குச் சொந்தம் அதுதான். இந்த உடல் சொந்தம் நமக்கு வேண்டாம்.
மெய் ஞானிகள் மக்களுக்குக் கொடுத்த ஆலயத்தின் முக்கியமான தெய்வீகப் பண்பு
1.நாம் கவர்வது (சுவாசிப்பது) எல்லாம் மணமாக மாறுகின்றது.
2.அந்த மணத்தை நுகரும் பொழுது அது உணர்வாக ஆகின்றது
3.அந்த உணர்வின் தன்மை தான் இயக்கம் ஆகின்றது
4.அந்த உணர்வின் தன்மை தான் செயலாகின்றது
5.அந்த உணர்வின் தன்மை தான் உடலாகின்றது என்ற நிலையைத் தெளிவாக்குவதற்குத்தான்
6.ஆலயத்திலிலுள்ள தெய்வத்திற்குத் தங்க ஆபரணங்களையும் வைரக் கிரீடத்தையும் வைத்து
7.மலர் மாலைகளையும் பல ஔஷதங்களையும் வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.
தெய்வத்திற்குத் தங்க ஆபரணங்களை மார்பில் அணிந்து காட்டி உள்ளார்கள் என்றால் அந்தத் தங்கம் எப்படி மங்காது இருக்கின்றதோ
1.அந்தத் தங்கத்தை போல என் மனம் மங்காது இருக்க வேண்டும்
2.இந்த ஆலயம் வருவோருக்கெல்லாம் அவர்கள் மனம் மங்காத நிலை பெற வேண்டும்
3.நாம் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் மனம் மங்காத நிலையில் வரவேண்டும்…
4.தங்கத்தைப் போல அவர்கள் மனங்கள் வளர வேண்டும் என்று எல்லோரையும் எண்ணும்படி செய்கிறார்கள்.
ரோட்டில் செல்லும் பொழுது ஒருவன் அடிபட்டுக் கீழே விழுகின்றான். அடப் பாவமே யார் பெற்ற பிள்ளயோ…? என்று உற்றுப் பார்க்கின்றோம். வேதனையான உணர்வை நுகர்கின்றோம்.
ஆனால் அவன் அடிபட்டிருந்தாலும் அவனை எண்ணும் பொழுது நம்மை அறியாமலே “அவன் உடல் நலம் பெற வேண்டும்” என்று எண்ணத்தை நமக்குள் தோற்றுவிக்க வேண்டும்…
1.உடனடியாக நல்ல உணர்வை எடுக்க வேண்டும் என்பதற்குத்தான் ஆலயங்களை அமைத்தனர்…
2.உயர்ந்த பண்புகளையும் எண்ணி எடுக்கும்படி செய்தனர் ஞானிகள்.
ஆலயத்தில் கனிகளை வைத்துக் காட்டியிருக்கின்றார்கள். கனிகளைப் பார்த்த பின் அதனின் சுவையை எண்ணி… அதை உட்கொள்ள வேண்டும் என்று எப்படி விரும்புகிறோமோ அதே போன்று அந்தக் கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
ஆண்டவனுக்குச் சுவை கொண்ட பொங்கலையும் படைத்து வைத்திருக்கின்றார்கள். பலவற்றையும் சேர்த்துச் சமைத்துச் சுவைமிக்க நிலையாக அந்தப் பொங்கலை உருவாக்கியது போன்று
1.வாழ்க்கையில் வரும் அனைத்து உணர்வுகளும் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளாக நமக்குள் விளைய வேண்டும்
2.எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரும் சுவை கொண்ட வாழ்க்கையாக வாழ வேண்டும் என்றும்.
3,இப்படி உயர்ந்த பண்புகளை எண்ணி எடுப்பதற்குத் தான் அங்கே பொங்கலை வைக்கும்படி காட்டுகின்றார்கள்.
4.பல பல சுவை கொண்ட பதார்த்தங்களையும் அங்கே வைக்கின்றார்கள்.
இது எல்லாம் துவைதம்… கண்ணுக்குப் புலப்படக் கூடியது. இதை வைத்துக் கண்ணுக்குப் புலப்படாத உயர்ந்த சக்திகளை எண்ணி எடுக்கும்படி செய்கிறார்கள் ஞானிகள்.
ஆகவே…
1.இபபடி ஆலயத்தில் ஞானிகளால் உருவாக்கப்பட்ட தெய்வீக நிலையை எண்ணி
2.நமக்குள் அந்தத் தெய்வ குணத்தை உருவாக்கக் கூடிய நிலையும்
3.நமக்குள் அதை உருபெறச் செய்யக்கூடிய நிலையையும்
4.நம் உடலுடன் இணைக்கக் கூடிய நிலையையும்
5.நம் சொல்லால் பிறருடைய நிலைகளை அருள் வழியில் இயக்கக்கூடிய சக்தியையும் பெறச் செய்வதற்குத்தான் ஆலயம்…!
சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…! (ஞானகுரு).
உயிர் விண்ணின் அங்கம்… உடல் மண்ணின் அங்கம்… மண்ணாகப் போகும் நிலையை விடுத்து உயிருடன் ஒன்றி ஜோதி நிலை பெறுவோம் – ஈஸ்வரபட்டர்
சூரியனின் சக்தியிலிருந்து ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா ஜீவ அணுக்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன.
1.ஒவொரு ஜீவராசியும் எந்த நிலை கொண்டு ஜீவன் பெற்றதோ
2.அந்நிலையில் அந்த ஜீவராசிகள் எண்ணம் ஈடேறியவுடன்
3.அதனுடைய ஜீவ உடலைப் பெற்ற நிலையும் மாறிவிடுகின்றது.
அதே போல் தான் பறவைகள் மிருகங்கள் மனிதர்கள் எல்லோருடைய நிலையும் உள்ளன.
மனிதர்களுக்கு… மனிதன் ஜீவன் பெற்ற நாளிலிருந்து தாயின் கருவில் எப்படிப் பத்து மாதங்கள் இருந்து பிறக்கின்றதோ அந்நிலை வைத்து மனிதனின் சராசரி ஆயுட்காலமும் உள்ளது.
யானையின் ஆயுட்காலம் கருவில் இருபது மாதங்கள் இருப்பதால் அதனுடைய சராசரி ஆயுட்காலமும் கூடி இருக்கின்றது.
இப்படி ஒவ்வொரு மிருகத்தின் நிலையும் கழுதைக்கு ஏழு ஆண்டுகள் கோழிக்கு இரண்டு ஆண்டுகள் நாய்க்கு பதினாறு ஆண்டுகள் இப்படிப் பறவைகள் நிலையிலும்
1.அவை அவை எத்தனை நாட்கள் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றனவோ
2.அந்நிலை கொண்டு தான் அதனதன் ஆயுட்காலமும் உள்ளன.
உங்கள் எண்ணத்தில் மனிதர்கள் ஏன் ஆறு ஆண்டுகளும் வாழ்கிறார்கள்… அறுபது ஆண்டுகளும் வாழ்கின்றார்கள்…? என்று எண்ணக்கூடும்.
அற்ப ஆயுளில் ஜீவன் பிரிவதெல்லாம் அவரவர்கள் எண்ணத்தைக் கொண்டு தான்…!
ஆனால் இந்த மனித உடல்களுக்கு மட்டும் தான் அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து அழியா உடலையும் அழியா உயிரையும் உருவாக்கும் சக்தியாக அவ்வாண்டவனின் சக்தியில் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்நிலை பெற்ற நாம் எல்லோரும்
1.அந்த ஆண்டவனின் சக்தியை அந்த நிலையில் நாம் பேணிக் காத்து
2.இந்த உலகில் நாம் உதித்ததையே அழியாச் செல்வமாக்கி
3.நாம் சேர்த்திடும் ஒரே சொத்து… உன்னதமான சொத்து… நம் உயிராத்மாவுக்கு அளிப்பது தான்…!
அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து பல ஒளிக்கதிர்கள் நம் பூமியைத் தாக்கிப் பெற்ற செல்வங்கள் தான் இன்றைய உலகில் உள்ள எல்லாமுமே…!
அந்த இயற்கையிலிருந்து தான் செயற்கையையும் செய்கின்றோம். அந்தச் செயற்கை அழிந்தாலும் இயற்கையுடன் தான் கலக்கின்றது.
இந்தப் பூமியில் உள்ள
1.இயற்கைத் தன்மையும்…
2.செயற்கைத் தன்மையும்…
3.நம் உடல்..
4.நாம் சேர்த்த பொருள் எல்லாமுமே…
5.மண்ணுடன் மண்ணாகத் தான் ஆகின்றது.
அழியாச் செல்வமான நம் ஆத்மா மட்டும் தான் ஆண்டவனிடம் ஐக்கியமாக முடியும். ஆகவே
1.மண்ணுடன் மண்ணாகும் இந்த உடலுக்காகவும் பொருளுக்காகவும் வாழாமல்
2.வாழ்வாங்கு வாழச் செய்யும் உயிராத்மாவை ஆத்ம ஜோதியாக்குவோம்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஒருவர் தன் கஷ்டங்களை எல்லாம் நம்மிடம் சொல்கிறார். இரக்கப்பட்டுக் கேட்கிறோம். கஷ்டமான உணர்வுகளைச் சொல்லும் போது நம் கண்களோ அதைப் பதிவு செய்கிறது.
அதாவது அந்தக் கஷ்டமான உணர்வுகளைக் கவர்ந்து நமக்குள் வினையாகப் பதிவு செய்கின்றது.
1.அந்த வினைக்கு நாயகனாக அதனின் உணர்வின் மணத்தை நாம் நுகரப்படும் போது
2.அவரின் வேதனையான உணர்வுகள் நமது ஆன்மாவிற்குள் உரிமை கொண்டாட ஆரம்பித்து விடுகின்றது.
3.தெளிந்த மணம் கொண்ட நம் ஆன்மாவில் நஞ்சான உணர்வுகள் கலந்து கொண்டபின்
4.நாம் சிந்திக்கும் செயல் இழந்து அந்தப் பாச உணர்வால் நமக்குள் தீய வினைகள் விளைந்து விடுகிறது.
யார் வேதனைப்படுகின்றாரோ அவர்களுக்கு நாமும் வேதனையுடனே உபகாரம் செய்கின்றோம். உபகாரம் செய்தாலும்… நம் நல்ல குணத்திற்குள் இந்த வேதனையான உணர்வுகள் கலந்துவிடுகின்றது.
அதை நீக்க என்ன செய்ய வேண்டும்…?
வாழ்க்கையில் வரும் துன்பங்களை நீக்க அன்றைய மெய் ஞானிகள் தன் உணர்வின் ஆற்றலை மக்களுக்குத் தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள். அந்த வழியைத்தான் யாம் உபதேசிக்கின்றோம்.
நாம் நல்லதைக் காக்க வேண்டும் என்று தான் முதலிலே பிறர் கஷ்டப்பட்ட உணர்வுகளை நுகர்ந்தோம். அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு நல்ல உணர்வின் தன்மையைக் காக்க முடிந்தது. நல்ல செயல்களை அறியவும் செய்யவும் முடிந்தது.
1.ஆனால் அந்த உணர்வுகள் நம் உயிரிலே மோதியபின் அது இயக்கி அந்த உணர்ச்சிகளை ஊட்டி
2.நம் உடலை இயக்கியபின் தான் தெரிகின்றது.
இந்த உணர்வின் சத்து (பிறர் துன்பப்பட்டது) நம் ஆன்மாவில் கலப்பதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்த அசுத்தமே நம் உடலில் சேர்ந்து விடுகின்றது. அதைத் துடைப்பதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற முறை.
1.“ஓ…ம் ஈஸ்வரா…” என்று நமது உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று
3.இங்கே புருவ மத்தியில் நிறுத்திவிட வேண்டும்
அவரின் வேதனையான நஞ்சான உணர்வு சிறிது தான் உள்ளே போகும். பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று வலுக்கூட்ட வேண்டும்.
அவ்வாறு செய்யும் பொழுது நம் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் வேதனையான நஞ்சான உணர்வினை அது தள்ளிவிடும், நமது ஆத்மா பரிசுத்தமாகின்றது,
1.நமது கையில் அழுக்கு பட்டது என்றால் நாம் கையைக் கழுவுகின்றோம்.
2.அதைப் போன்றுதான் நம் ஆன்மாவில் அழுக்குப் பட்டவுடன் சுத்தப்படுத்த வேண்டும்.
அப்படிச் சுத்தப்படுத்துவதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம். அந்த உணர்வுகள் உடலில் சக்தி வாய்ந்ததாக ஆகும் பொழுது தீமைகளை அகற்றுகின்றது
பின் வேதனைப்பட்டவர் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று அந்த ஆற்றல்மிக்க சக்தியை நுகர்ந்து அவருக்குப் பாய்ச்ச வேண்டும்.
அடுத்து மகரிஷிகள் அருள் சக்தியால் நீங்கள் நலமடைவீர்கள்…! என்ற நல்ல வாக்கினை அங்கே பதிவு செய்ய வேண்டும்.
1,இப்படிச் செய்தால் அவருக்குள் விளைந்த தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை
2.மாறாக நாம் எடுக்கும் உயர்ந்த சக்தி நமக்குள் ஆற்றல்மிக்கதாக மாறி மற்றவர்களையும் காத்திடும் சக்தியாக அங்கே செயல்படுகின்றது.
தீமை எந்த வழியாக நமக்குள் வருகிறது…? அதைத் தடுக்க நாம் போட வேண்டிய பாதுகாப்பு வேலி எது…?
உதாரணமாக ஒருவர் கடுமையான நிலைகளில் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அந்த நோயின் தன்மை கொண்டு உடலில் விளைந்த அந்த உணர்வுகளை…
1.அவர் சொல்வதைக் கேட்கும் பொழுது
2.நம் காதின் புலனறிவுக்குள் அவர் வேதனயாக இட்ட குரலின் உணர்வுகள் நம்மை இயக்கச் செய்கின்றது.
3.இந்த உணர்வுகள் நம் உடல் முழுவதும் பரவி கண்ணின் நினைவலைகளுக்கு வருகின்றது.
அப்பொழுது அது எந்தத் திசை…? என்று பார்க்கின்றது.
நமது கண் யார் வேதனையுடன் சொல்லுகின்றாரோ அவரைப் படம் எடுக்கின்றது. அப்படிப் படம் எடுத்த இந்த உணர்வுகள் ஊழ்வினையாக நம் எலும்புக்குள் பதிவாகின்றது.
1.ஒரு லேசர் (LASER) இயக்கத்தைப் பாய்ச்சி X-Ray படம் எடுப்பது போல
2.நமது கண்ணின் பார்வை லேசரைப் போன்று படம் எடுத்து
3.அந்த உணர்வின் காந்தப் புலன்கள் நமக்குள் ஊடுருவி உணர்வின் தன்மையை ஊழ்வினையாகப் பதிவு செய்கின்றது.
அதே சமயம் கண்ணின் நினைவலைகள் கொண்டு இயக்கப்படும் பொழுது அந்த உணர்வால் கண்ணுக்குள் இருக்கக்கூடிய புலனறிவும்… உடலுக்குள் இருக்கக்கூடிய புலனறிவும் இணைகின்றது.
அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தால் நுகர்ந்து பார்க்கச் செய்கின்றது. அது நமது ஆன்மாவாக மாறுகின்றது.
நமது ஆன்மா என்பது என்ன…?
நமது ஆன்மா என்பது, நம்மை சுற்றி இருக்கும் நம் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள காற்று மண்டலம்தான்.
இன்று ரேடியோ அலைகள் எப்படிப் படர்கின்றது…? எப்படி ஈர்க்கப்படுகின்றது…? எப்படி வேலை செய்கின்றது…? அதே மாதிரித்தான்
1.நம் ஆன்மாவில் நாம் எண்ணிய சுவாசித்த உணர்வலைகள்
2.பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்தைப் போன்று நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.
நம் கண்கள் வேதனைப்பட்டவரை எலும்புக்குள் பதிவாக்கியபின் “மேக்னட்” போன்று பதிவான உணர்வலைகள் இழுக்கப்பட்டு நம் ஈர்ப்பு வட்டத்திற்குள் (ஆன்மாவாக) வந்து சேரும்.
நமக்குள் ஆன்மாவாக மாறியபின் நம் உடலிலிருந்து நஞ்சினை நீக்கும் நமது நல்ல ஆன்மாவுக்குள் அவர்பட்ட வேதனையான நஞ்சு கலந்து விடுகின்றது.
ஆன்மாவில் வருவதைத்தான் நாம் மூக்கின் வழியாகச் சுவாசிக்கின்றோம்.
1.ஆகவே நஞ்சான உணர்வுகள் கலந்து கொண்டபின்
2.நாம் சுவாசிக்கும் பொழுது உயிருக்குள் பட்டவுடனே
3.பாலில் துளி விஷம் கலந்து குடிக்கும் பொழுது எப்படி மயக்கம் வருமோ
4.அதைப் போல நமக்கும் வேதனை உண்டாகின்றது.
அதாவது பரமாத்மாவிலிருந்து நமது ஆன்மாவாக மாறுகின்றது. எப்படி…?
அந்த நோய்வாய்ப்பட்டவர் வேதனை தாங்காது சொல்வதை அந்த வேதனையான மணம் வெளிப்படும் பொழுது அந்த மணத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது.
நமது பூமி ஒரு பரம்… அதாவது எல்லை. இந்த எல்லைக்குள் அவர் பேசிய வேதனையான குரலின் தன்மையை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பரத்துக்கு ஆத்மாவாக… பரமாத்மாவாக (இந்தக் காற்று மண்டலத்தில்) மாற்றிவிடுகின்றது.
1.நாம் கண் கொண்டு அவரைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது
2.;அவர் சொல்லும் உணர்வுகளை அந்த உடலிலிருந்து வெளிப்படுவதை
3.நம் கண்ணுக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் இழுத்துப் பராமாத்மாவில் இருப்பதை நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
இப்படி வந்தவுடன் நம் நல்ல ஆன்மாவில் தீமையான உணர்வு உரிமை கொண்டாட ஆரம்பிக்கின்றது. நம் நல்ல எண்ணத்தையும் நல்ல மனதையும் பலவீனப்படுத்துகின்றது.
அதை மாற்றத் தான் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
ஆகவே தான்
1.நம்முடைய ஆன்மாவில் (நமக்குள்) தீமைகள் புகும் வழியைத் தெரிந்து கொண்டால்
2.அதை மாற்ற அடுத்த கணமே அருள் ஞானிகளின் நினைவாற்றலை நம் கண்ணான புலனறிவுக்குக் கொண்டு வந்து
3.அதைப் பதிவாக்கி… ஊழ்வினை என்ற வித்தாக்கி…
4.அதன் வழி கொண்டு நம் ஆன்மாவிலே மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெருக்க வேண்டும்.
இந்த முறைப்படி செய்தால் பிறிதொரு தீமை செய்யும் உணர்வு நம் ஆன்மாவிலிருப்பதை அது பிளந்து அதைச் செயலற்றதாக்கும். நம் ஆன்மா தூய்மை ஆகும்.
அருள் உணர்வுகள் “கவசம் போன்று…” நம்மைக் காக்கும் சக்தியாக வரும்.
அடுத்தவன் நிலையைக் கண்டு ஏங்குபவனும் அடுத்தவனின் புகழுக்காக வாழ்பவனும் தான் மிகுந்து உள்ளனர் – ஈஸ்வரபட்டர்
இந்த உலகினிலே ஜீவன் பெற்ற ஜீவாத்மாக்கள் எல்லாம்
1.தான் ஜீவன் பெற்ற நிலையை அறிந்து
2.ஜீவாதார உண்மையுடன் ஜீவித்து – இந்த ஜீவனை
3.நம் உடலில் ஜீவன் உள்ள பொழுதே நாம் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்
4.பல வழிகளையும் வழி முறைகளையும் மகரிஷிகள் நமக்களித்தார்கள்.
அந்த வழிகளை எல்லாம்… முறைகளை எல்லாம்… பல வழிகளில் மாற்றி விட்டார்கள். அவரவர்களுக்கு ஒரு மதம் என்ற நிலயில் ஒவ்வொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள்.
தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தன் சுற்றத்தார்களுக்கும் ஒவ்வொரு நிலையையும் ஏற்படுத்திக் கொண்டு பல சடங்குகள்… பல சாஸ்திரங்கள்… என்று பார்த்து நம் மூதாதையர்கள் காலத்திலிருந்தே நம் குடும்பத்தில் இந்நிலையில் தான் எல்லா நிலைகளும் நடந்து வருகின்றன…! என்று உண்டாக்கி விட்டார்கள்.
ஒவ்வொரு உண்மை நிலைகளையும் தன் தன் நிலைக்கேற்பத் தன் மதத்தின் வாயிலாக அதையே ஒரு வழக்கமாக்கிக் கொண்டு அதனால் வரும் எண்ணச் சிதறல்களைப் பற்றி எண்ணாமல்
1.ஒவ்வொருவரும் மதம் என்ற ரூபத்தையே கொண்டு வந்து
2.அதனுள் சிக்கிக் கொண்டு மதத்தையே “மதமாக்கி” வாழ்கிறார்கள்.
மதத்தினால் வந்திடும் நன்மைகள் என்னப்பா…? பல மதங்களை ஏற்படுத்திக் கொண்டு அம்மதங்களின் வாயிலாக ஆண்டவனின் சக்தியையே பிரித்துக் கொண்டார்கள்.
1.இவர்கள் பிரித்த நிலைக்கு வருவதல்ல அந்த ஆண்டவனின் சக்தி.
2.அச்சக்தியின் நிலை எல்லோருக்கும் பொதுவானதே.
அன்று ஆண்ட அரசர்கள் தன் நிலைக்கு அடிபணியப் பல மந்திரிகளையும்… அந்த மந்திரிகளுக்கு ஊழியம் செய்ய அதற்கொத்த சேவகர்களையும்.. இப்படியெல்லாம் ஏற்படுத்தித் தன் ஆட்சி நிலை நிலைத்திருக்கத் தன் நிலைக்கு உகந்தபடி அவரகள் செய்த நிலையில் இருந்து தான் “ஜாதி மதங்களே” இன்றைய உலகில் பெருகி உலவி வருகின்றன.
1.அவ் ஈசனின் சக்தியில் இஜ்ஜீவ ஆத்மாக்களை ஜாதி மதங்களாகப் பிரித்து அனுப்பவில்லையப்பா…!
2.எல்லா உயிரணுக்களும் அந்த ஆண்டவனின் சக்தி பெற்று ஒரே நிலையில் தான் உதிக்கின்றன.
இந்த நிலை இருக்கும் பொழுது ஜாதி மத வேறுபாடுகளை இவர்கள் உண்டு பண்ணி தன் தன் நிலைக்கு ஏற்ப… தான் வாழ… தன் சுற்றத்தார் வாழ… என்ற நிலையை எல்லாம் ஏற்படுத்தி மனித எண்ணத்தையே பெரும் கேள்விக்குறியாக ஆக்கிவிட்டார்களப்பா…!
1.எல்லோரும் ஓர் மதம்…
2.எல்லோரும் ஓர் குலம்…! என்ற
3.உண்மை நிலையை உணர்ந்து வாழ்பவர்கள் அரிதிலும் அரிது.
எந்த நிலை கொண்டு எப்படிப் புகட்டினாலும் உபதேசத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அரிதாக உள்ளார்களப்பா..!
1.அடுத்தவன் நிலையைக் கண்டு ஏங்குபவனும்
2.அடுத்தவனின் புகழுக்காக வாழ்பவனும் தான் இன்றைய நாட்டில் மிகுந்து உள்ளனரப்பா…!
தன் எண்ணத்தையும் சுவாசத்தையும் தான் பெற்ற ஜீவ சக்தியின் நிலையையும் பற்றி இனியும் புரிந்திடாமல்… அந்த நிலையிலேயே வாழ்ந்திடாமல்…
1.நம் எண்ணத்தைக் கொண்டு தான்..
2.நாம் விடும் சுவாச நிலையிலிருந்து தான்..
3.நம் நிலைகள் எல்லாமே நடக்கின்றன…! என்று உணர வேண்டுமப்பா…!
எண்ணத்தையும் சுவாசத்தையும் புரிந்து கொண்டு வாழ்பவர்கள் “அப்புருஷோத்தம ஜெபத்தை” ஏற்ற புனித ஆத்மாவாக என்றுமே இருந்திடலாம்.
நாம் ஈர்க்கும் ஒவ்வொரு சுவாச அலையும் நம் உடலுக்கும்.. நம் உணர்விற்கும்… நம் உயிர் நிலைக்கும்.. எப்படியெல்லாம் எந்தெந்த நிலை ஏற்படுத்தி நம் உடலும்.. உணர்வும்… உயிரும்… எந்த நிலையில் உள்ளன..? என்று நாம் ஜெபத்திலிருந்தே அறிந்து கொள்ளலாம்.
இன்றிருக்கும் ஜாதி மதத்திற்கு அடிமையாகாமல்… வழி முறையில் உள்ள பல சடங்குகளுக்கும் சாங்கியங்களுக்கும் நாம் அடிமையாகாமல்…
1.நம் எண்ணத்தையும் சுவாசத்தையும்
2.அவ்வீசனின் சக்திக்கே அடிபணியச் செய்தல் வேண்டுமப்பா…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
உதாரணமாக ஒருவர் கடுமையான நிலைகளில் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அந்த நோயின் தன்மை கொண்டு உடலில் விளைந்த அந்த உணர்வுகளை…
1.அவர் சொல்வதைக் கேட்கும் பொழுது
2.நம் காதின் புலனறிவுக்குள் அவர் வேதனயாக இட்ட குரலின் உணர்வுகள் நம்மை இயக்கச் செய்கின்றது.
3.இந்த உணர்வுகள் நம் உடல் முழுவதும் பரவி கண்ணின் நினைவலைகளுக்கு வருகின்றது.
அப்பொழுது அது எந்தத் திசை…? என்று பார்க்கின்றது.
நமது கண் யார் வேதனையுடன் சொல்லுகின்றாரோ அவரைப் படம் எடுக்கின்றது. அப்படிப் படம் எடுத்த இந்த உணர்வுகள் ஊழ்வினையாக நம் எலும்புக்குள் பதிவாகின்றது.
1.ஒரு லேசர் (LASER) இயக்கத்தைப் பாய்ச்சி X-Ray படம் எடுப்பது போல
2.நமது கண்ணின் பார்வை லேசரைப் போன்று படம் எடுத்து
3.அந்த உணர்வின் காந்தப் புலன்கள் நமக்குள் ஊடுருவி உணர்வின் தன்மையை ஊழ்வினையாகப் பதிவு செய்கின்றது.
அதே சமயம் கண்ணின் நினைவலைகள் கொண்டு இயக்கப்படும் பொழுது அந்த உணர்வால் கண்ணுக்குள் இருக்கக்கூடிய புலனறிவும்… உடலுக்குள் இருக்கக்கூடிய புலனறிவும் இணைகின்றது.
அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தால் நுகர்ந்து பார்க்கச் செய்கின்றது. அது நமது ஆன்மாவாக மாறுகின்றது.
நமது ஆன்மா என்பது என்ன…?
நமது ஆன்மா என்பது, நம்மை சுற்றி இருக்கும் நம் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள காற்று மண்டலம்தான்.
இன்று ரேடியோ அலைகள் எப்படிப் படர்கின்றது…? எப்படி ஈர்க்கப்படுகின்றது…? எப்படி வேலை செய்கின்றது…? அதே மாதிரித்தான்
1.நம் ஆன்மாவில் நாம் எண்ணிய சுவாசித்த உணர்வலைகள்
2.பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்தைப் போன்று நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.
நம் கண்கள் வேதனைப்பட்டவரை எலும்புக்குள் பதிவாக்கியபின் “மேக்னட்” போன்று பதிவான உணர்வலைகள் இழுக்கப்பட்டு நம் ஈர்ப்பு வட்டத்திற்குள் (ஆன்மாவாக) வந்து சேரும்.
நமக்குள் ஆன்மாவாக மாறியபின் நம் உடலிலிருந்து நஞ்சினை நீக்கும் நமது நல்ல ஆன்மாவுக்குள் அவர்பட்ட வேதனையான நஞ்சு கலந்து விடுகின்றது.
ஆன்மாவில் வருவதைத்தான் நாம் மூக்கின் வழியாகச் சுவாசிக்கின்றோம்.
1.ஆகவே நஞ்சான உணர்வுகள் கலந்து கொண்டபின்
2.நாம் சுவாசிக்கும் பொழுது உயிருக்குள் பட்டவுடனே
3.பாலில் துளி விஷம் கலந்து குடிக்கும் பொழுது எப்படி மயக்கம் வருமோ
4.அதைப் போல நமக்கும் வேதனை உண்டாகின்றது.
அதாவது பரமாத்மாவிலிருந்து நமது ஆன்மாவாக மாறுகின்றது. எப்படி…?
அந்த நோய்வாய்ப்பட்டவர் வேதனை தாங்காது சொல்வதை அந்த வேதனையான மணம் வெளிப்படும் பொழுது அந்த மணத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது.
நமது பூமி ஒரு பரம்… அதாவது எல்லை. இந்த எல்லைக்குள் அவர் பேசிய வேதனையான குரலின் தன்மையை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பரத்துக்கு ஆத்மாவாக… பரமாத்மாவாக (இந்தக் காற்று மண்டலத்தில்) மாற்றிவிடுகின்றது.
1.நாம் கண் கொண்டு அவரைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது
2.;அவர் சொல்லும் உணர்வுகளை அந்த உடலிலிருந்து வெளிப்படுவதை
3.நம் கண்ணுக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் இழுத்துப் பராமாத்மாவில் இருப்பதை நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
இப்படி வந்தவுடன் நம் நல்ல ஆன்மாவில் தீமையான உணர்வு உரிமை கொண்டாட ஆரம்பிக்கின்றது. நம் நல்ல எண்ணத்தையும் நல்ல மனதையும் பலவீனப்படுத்துகின்றது.
அதை மாற்றத் தான் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
உடலில் உள்ள அணுக்களின் பசிக்கு… நம் உயிர் உணவைக் கொடுத்து அதை வளர்க்கும் விதம்
செடி கொடிகள் வெளிப்படுத்தும் சத்தினை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது. செடியிலே விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் நிலத்தின் தன்மை கொண்டு காற்றிலிருந்து தன் இனச் சத்தை எடுத்துத் தன் வித்தாக வளர்க்கும். அதற்கு ஈரப்பதம் இருந்தால் போதும்.
இது போன்று தான் நம் உடலுக்குள் பல குணங்களின் சத்துக்கள் இருக்கின்றது. அதிலே வேதனைப்படும் உணர்வின் அணுவாக வளர்ந்து விட்டால் உடனே அதனின் உணர்ச்சிகளைத் தூண்டும். இரத்த நாளங்கள் வழி தன் உணவை எடுக்கும்.
காற்று மண்டலத்தில் எப்படி அனைத்துச் சத்துக்களும் இருக்கின்றதோ அதிலிருந்து எடுத்து செடி கொடிகள் எடுத்து வளர்வது போல் தான் நம் உடலில் உருவான அணுவும் வளரும்.
1.அதாவது நம் உடலில் நுகரும் பொழுது (சுவாசிக்கும் போது) வெப்ப மண்டலங்கள் வரும்.
2.பின் 48 நாட்களில் சுவாசித்தது கருவாகி முட்டை ஆகிறது.
3.உடல் முழுவதும் சுற்றும்போது அந்தந்த உறுப்புகளில் போய் ஒட்டிக் கொள்ளும்.
4.முட்டை வெடித்து அணுவாக ஆனபின் தன் உணர்ச்சியைத் தூண்டும்
5.இரத்தத்தின் வழி கூடி சிறு மூளைக்கு (அந்த உணர்வு) வரும். ஏனென்றால் அதனுடைய பசிக்கு அந்தச் சாப்பாடு கேட்கும்.
இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் நம் உயிர் என்ன செய்யும்…?
1.நம் கண் காது மூக்கு நிலைகளுக்கு ஆணையிடும்.
2.எந்த மனித உடலில் இருந்தது தீமைகள் வந்ததோ அதை இழுக்கும்.
3.அதைச் சுவாசித்து உயிரிலே பட்ட பின் அந்த மனிதனின் எண்ணங்கள் நமக்கு வரும்.
பாவிப்பயல்…! அன்றைக்கு இப்படிச் செய்தான் என்று நாம் எண்ணும் பொழுது அதே உணர்வு நமக்குள் வந்து தீமை விளைவிக்கக் கூடிய சந்தர்ப்பமாக அமையும்.
இதை எல்லாம் நமக்குள் அனுபவபூர்வமாகப் பார்க்கலாம் இந்த எண்ணங்கள் எப்படிக் கிளர்ந்து எழுகிறது என்று…! ஆக இத்தகைய எண்ணங்கள் வந்து விட்டால் அந்த நேரத்தில் நம் வியாபாரங்கள் கெடும்.
நம் பையனாக இருந்தாலும் கூட… “இப்படிச் செய்கிறானே” என்று வேதனைப்படுகின்றோம். அது வேதனையை உருவாக்கும் அணுக்களாக விளைகின்றது… நம் உடலாக மாறுகிறது.
இப்படி எல்லாம் நினைத்துவிட்டு ஒரு காரியத்திற்குச் சென்றால் நல்லதாகாது. எந்த வேலையைச் செய்தாலும் நிச்சயம் எதிரியாகி விடும். ஏனென்றால் அந்த வேதனையான உணர்வு வரும் பொழுது நமக்குள் சரியாக இயங்காது.
தொழில் செய்யும் இடங்களில் பகைமை வந்து விடுகின்றது வியாபாரம் செய்தாலும் வேதனை உணர்வு வந்தபின் நாம் சொல்வதைக் கேட்டால் “சரக்கை வேண்டாம்…” என்று ஒதுக்கி விடுவார்கள்.
இது எல்லாம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்கள். இதை மாற்ற வேண்டும் அல்லவா…!
அதற்காகத்தான் துருவ தியானத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று காலையில் எண்ண வேண்டும்.
கணவன் மனைவிக்கு அந்தச் சக்தி பெற வேண்டும் என்றும் மனைவி தன் கணவனுக்கு அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
அதே போன்று நம் குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்கள்
1.சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று கண்டிப்பாக எண்ண வேண்டும்.
2.காலை துருவ தியானத்தில் இதை எல்லாம் அவசியம் செய்ய வேண்டும்.
முன்னோர்கள் முதலில் அங்கே சென்று விட்டால் சப்தரிஷி மண்டலத்தில் இருந்து தன்னிச்சையாக (AUTOMATIC) நாம் அந்தச் சக்திகளைப் பெற முடியும். ஒவ்வொரு நிமிடமும் அதை வளர்க்க வேண்டும்.
அதிகாலையில் இந்தச் சக்திகளை அனுதினமும் எடுத்தோம் என்றால் பின் யாருடைய உதவியும் தேவையில்லை. அருள் உணர்வை வளர்த்த பின் நம்முடைய உயிரான்மா அங்கேதான் செல்லும்.
சகஜ வாழ்க்கையில் யாராவது நமக்குத் தீமை செய்தால் பாவிப்பயல் எனக்கு இப்படிச் செய்தானே…! என்று எண்ணுகின்றோம். அப்போது யாருடைய உதவியுமா கேட்கின்றது…? இல்லையே…!
நேராக அவனுடைய உடலுக்குள் தான் இந்த ஆன்மா செல்கின்றது இங்கே பட்ட வேதனையை அங்கே உருவாக்குகிறது. பழி தீர்க்கும் நிலையாகச் செயல்படுத்துகின்றது.
அதைப் போன்று தான் துருவ தியானத்தின் மூலம் எடுக்கும் துருவ நட்சத்ததிரத்தின் சக்தியை வலுவாக்கிக் கொண்டா நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலே போய்த் தான் நிற்போம்…!
ஆகவே கணவன் மனைவி அவசியம் இந்த உயர்ந்த சக்திகளை எடுத்தே ஆகவேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நஞ்சினை வென்ற அகஸ்தியர் துருவனாகி துருவ மகரிஷியானர். கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இரு மனமும் ஒரு மனமாகி ஒன்றுபட்டு வாழ்ந்து நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று ஒன்றிய நிலைகள் கொண்டு,.. இல்லற வாழ்க்கையில் இருளை நீக்கினார்கள்.
1.அவர்கள் வானுலக ஆற்றலைத் தம்முள் நுகர்ந்து
2.மின்னலின் அணுக்களைத் தமக்குள் அணுவாக மாற்றி
3.உயிருடன் ஒன்றி மின் அணுவாகத் தம் உடலின் தன்மையை மாற்றி
4.இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர்.
துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றவர் ஆறாவது அறிவு பெற்றவர்கள் ஏழாவது நிலை கொண்டு இன்று சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர்.
தீமைகளிலிருந்து விடுபட்ட துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நாம் நுகர்ந்து பழகினால் ஒவ்வொரு நிமிடமும் தீமைகளை அகற்றிடும் வல்லமை பெற்றுத் தீமையற்ற நிலையாக வாழலாம்.
வேதனயான உணர்வை நாம் நுகர்ந்தால் அது நமது இரத்த நாளங்களில் கலந்து விடுகின்றது. நம்மை மனிதனாக உருவாக்கிய உடலின் அணுக்கள் விஷத்தின் தன்மை கொண்டபின் உடலின் அணுவின் தன்மை மாறுகின்றது.
உடலில் உள்ள அணுக்கள் விஷத்தின் தன்மையாக மாறும் பொழுது உடலில் வலி வருகின்றது. வலி வந்தால் உடல் நலிகின்றது, எண்ணம் குறைகின்றது.
எவ்வளவு செல்வம் தேடினாலும் எவ்வளவு செல்வம் சேமித்து வைத்தாலும் கடுமையான நோய்கள் வந்துவிட்டால் வாழ்க்கையில் வெறுப்பு தான் வருகின்றது.
வெறுப்பு உணர்வுகள் வரப்படும் பொழுது
1.உடலை வெறுக்கின்றோம்,
2.வேதனையை வளர்க்கின்றோம்.
3.இதனால் நாம் நிம்மதியற்ற நிலைகளில்தான் வாழ வேண்டி வரும்.
ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியில் அழுக்குப்பட்டு விட்டால், கண்ணாடியில் படிந்த அழுக்கைத் துடைத்தால்தான் நம்முடைய உருவத்தைக் காண முடியும்.
இது போன்று…
1.பிறருடைய தீமையின் உணர்வுகள் நமது ஆன்மாவில் பெருகி விட்டால்
2.நம்மை எது இயக்குகிறது என்று அறிய முடியாதபடி
3.நாம் பார்த்திருந்த உணர்வுகள் நமது உடலை இயக்கி
4.நம்மை நாம் அறிய முடியாத நிலைகள் ஆக்கி விடுகின்றது.
ஆகவே நம்மை நாம் எப்படி அறிய வேண்டும்…?
கண்ணாடியில் அழுக்குப் படிந்திருந்தால், நாம் எப்படிப் பார்த்தாலும் நமது முகம் தெரியாது. இது போன்றுதான் நமது ஆன்மாவில் அழுக்குப் படிந்து விட்டால் சிந்திக்கும் தன்மை இழக்கும் நிலை வருகின்றது.
1.கண்ணாடியில் படிந்த அழுக்கை நீக்கியவுடன் கண்ணாடியில் நமது உருவம் தெளிவாகத் தெரிவது போன்று
2.நமது ஆன்மாவில் கலந்த அழுக்கை நீக்கித் தூய்மைப்படுத்த வேண்டும்.
தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று அடிக்கடி நாம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உடலுக்குள் உணர்வின் தன்மையைச் செலுத்தப்படும்போது அறியாமல் புகுந்த வேதனைகள் நம் ஆன்மாவிலிருந்து நீங்கி நமது ஆன்மா தூய்மை பெறுகின்றது.
அப்பொழுது நமக்குள் தெளிவான நிலைகள் வரும்… சிந்திக்கும் தன்மை நமக்குள் வருகின்றது… தீமை அகற்றும் வல்லமை பெறுகின்றது… தீமைகள் புகாது தடுக்கவும் முடிகின்றது.
மகரிஷிகள் சுவாசிக்கும் விண்ணின் ஆற்றலை நாமும் விண்ணிலிருந்தே சுவாசிக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்
சக்தியின் நிலை கொண்டு உயிர் பெற்ற உயிர் அணுக்கள் எல்லாமே தன் தன் உயிர் நிலை நிலைத்து நிற்க உணவை உட்கொள்கின்றன. மனிதர்களுக்கு அவரவர்கள் உண்ணும் உணவிலிருந்து சில உணர்வுகளும் உண்டாகின்றன.
நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலை வளர்க்கத்தான் என்ற நிலையில் உண்ணுகின்றோம். நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் தான் நம் உடலை நாம் காத்திட முடிகிறது என்றால்…
1.பல கோடிச் சித்தர்களும் பல தவசு முனிவர்களும் பல ரிஷிகளும்
2.பல நாள்கள் ஆகாரம் புசிக்காமலே ஜெப நிலையிலிருந்து இன்றும் இருந்து கொண்டுள்ளார்கள்.
அது எந்த நிலையப்பா…?
நாம் உண்ணும் உணவு நமக்குச் சக்தியளித்து சக்தி எல்லாம் நமது உடலில் ஈர்த்துப் பாக்கி நிலையில் உள்ளது கழிவாகிறது என்னும் நிலை தான் மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ளது.
நம் உடல் ஒரு இயந்திரம் போல் உள்ளது என்று எண்ணுகின்றோம்.
நாம் உண்ணும் உணவின் நிலை என்ன என்றால் நாம் எந்த ஆகாரத்தைப் புசிக்கின்றோமோ அந்நிலையிலிருந்து அவ்வாகரத்தின் தன்மை “நம் சுவாச நிலைக்கு வந்துதான்” நாம் பிறகு சுவாசம் எடுக்கும் பொழுது நம் உடல் அந்த ஆகாரத்தை ஏற்கிறது.
சித்தர்கள் ஞானிகள் பெற்ற நிலை எல்லாம்
1.”அச்சுவாச நிலையிலிருந்தே” தன் உடலுக்கு வேண்டிய ஆகாரத்தை ஏற்று எடுக்கும் நிலையை
2.அச்சூரியனிலிருந்தே பூமிக்குக் கிடைத்திடும் அணுவின் சக்தி நிலை கொண்டு தன் சுவாச நிலைக்கு ஏற்றுக் கொள்கிறார்கள்.
மரம் செடி கொடிகளின் நிலை எல்லாம் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளின் நிலைக்கும் உயர்ந்த நிலை பெற்ற நிலையப்பா…!
சூரிய சக்தியிலிருந்து ஒளிக் கதிர்கள் நம் பூமியைத் தாக்கி அதிலிருந்து தான் நாம் சுவாசிக்கின்றோம். மற்ற மிருகங்களின் நிலையும் மற்ற ஜீவனின் நிலையும் சூரியச் சக்தியின் ஒளிப் பிளம்பு பூமியில் பட்ட பிறகு தான் தன் சுவாச நிலைக்கு எடுத்துக் கொள்கிறது.
1.கீழ் நோக்கிய சுவாச நிலை கொண்டு தான்
2.இயற்கையில் எல்லோருமே ஜீவன் பெற்றுள்ளோம்.
3.பூமி ஈர்த்து வெளிக்கக்கும் நிலையைத் தான் நம் சுவாச நிலைக்கு எடுக்கின்றோம்.
மரம் செடி கொடிகளின் இலைகள் எல்லாம் அவ்ஈசனின் சக்தியைப் பெற்று அவ்ஈசனின் சக்தி என்பது சூரியனிலிருந்து வெளி வரும் ஒளிக் கதிர்களை நேராகவே தன் சுவாச நிலைக்கு ஈர்க்கின்றது.
அதிலிருந்து நாம் பெறும் புஷ்பங்களும் காய் கனிகளும் நாம் உண்ணும் பொழுது நம் உயிரணுவிற்கும் நம் உடலுக்கும் பெரும் ஆரோக்கிய நிலை தருகின்றன. மற்ற அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்குவதில்லை.
1.மற்ற ஜீவராசிகளைச் சமைத்து உண்ணும் பொழுது
2.அதை எவ்வளவு உஷ்ணத்தை ஏற்றிச் சமைத்தாலும்
3.அந்த அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்கத்தான் செய்யும்.
அந்த அணுக்களின் நிலையிலிருந்தெல்லாம் தப்பி… நாம் உண்ணும் உணவில் நல்ல நிலையை எடுத்துக் கொள்ள… அன்று வாழ்ந்த சித்தர்கள் நமக்குச் சொல்லிய பல வழிகள் மறைந்து விட்டன.
நாம் ஜெப நிலையிலிருந்து நல்ல உணர்வுடன் நாம் விடும் சுவாச நிலையிலிருந்து
1.அந்த ஈஸ்வர சக்தியை எடுத்துக் கொண்டால்
2.நம் நிலைக்கும் அச்சூரியனிலிருந்து வரும் சக்தி நிலைகள் பூமிக்கு வந்து தாக்கிடாமல்
3.பெரும் உன்னதமான நிலையில் நம் சுவாச நிலைக்கே அது வந்து
4.அழியாச் செல்வமான நம் உயிரணுவிற்கு… நம் ஆத்மாவிற்கு… சகல நிலையையும் பெற்றிடலாம்.
சித்தர்களும் ஞானிகளும் பல காலங்கள் ஆகாரம் புசித்திடாமல் இருந்த நிலைகள் எல்லாம் எப்படி…? என்று இப்பொழுது புரிந்ததா…!
தியான நிலையில் இருந்து கொண்டிருந்தால் இந்நிலையில் தியானம் பெற்றவர்கள் நிலை ஆயிரம் அணுகுண்டுகளை வெடித்தாலும் நம் சுவாச நிலைக்கு அவ்வணுகுண்டின் அழிக்கும் தன்மை என்றுமே வந்து தாக்கிடாது.
நம் கண்ணிற்குத் தெரியாமல் வாழும் பல கோடி ரிஷிகளின் நிலை எல்லாம் இது தானப்பா…!
நாம் நுகர்ந்தது (சுவாசிப்பது) உடலில் கரு முட்டையாகி அணுவாக எப்படி உருவாகிறது…? அணுவான பின் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் என்ன…?
உதாரணமாக நாம் வேதனைப்படுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். உயிரால் நுகரப்பட்டு அந்த உணர்வுகள் ஓ…ம் நமச்சிவாய.. ஓ…ம் நமச்சிவாய.. என்று நம் உடலாக (அணுக்களாக) உருவாகின்றது.
1.ஆனால் அந்த வேதனை என்ற உணர்வு அணுவாக (உடலாக) ஆவதற்கு முன்
2.வேதனையை நுகர்ந்த அடுத்த கணமே அதற்கு ஜீவன் கொடுக்காதபடி அணு உருவாகாதபடி தடுக்க வேண்டும்.
ஏனென்றால் வேதனைப்படுகிறார் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த உணர்வின் தன்மை இரத்தத்தில் கருவாகி விடுகின்றது.
அப்படிக் கருவாகி விட்டால் “ஒரு 48 நாட்கள்” ஆனால் நம் உடலில் இரத்தத்தில் சுற்றி வரும்போது வேதனை உருவாக்கும் அணுவாக உருவாகின்றது.
1.எந்த உறுப்பில் அது ஒட்டிக் கொள்கின்றதோ அங்கே அந்த அணு ஜீவன் பெற்ற நிலையில்
2.அதே இரத்தத்தின் வழியாகத்தான் தன் ஆகாரத்தை (வேதனையை) எடுக்கும்.
பூமியில் விளையும் ஒவ்வொரு தாவர இனச் சத்தையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது.
ஒரு செடியில் விளைந்த வித்தை மண்ணிலே ஊனறினோம் என்றால் காற்றுடன் காற்றாகக் கலந்து வரும் சூரியன் கவர்ந்து வைத்துள்ள தன் இனமான உணர்வினை அது பிரித்தெடுத்துத் தான் அந்தச் செடி மீண்டும் விளையும்.
இன்று டி.வி. ரேடியோக்களில் ஒளி ஒலி அலைகளாக எண்ணிலடங்காத ஒளிபரப்புகளைச் செய்கிறார்கள். வீட்டிலிருக்கும் சாதனத்தை வைத்து
1.அந்தந்த அலை வரிசைகளில் வருவதைத் திருப்பி நமக்கு வேண்டிய ஸ்டேஷனை வைத்தால்
2.அதை மட்டும் கவர்ந்து நாம் பார்க்கின்றோம் அல்லது கேட்கின்றோம்
3.மற்ற அலைகள் வந்தாலும் அதைக் கவர்வதில்லை.
இதைப் போன்று தான் எந்த உணர்வின் தன்மையை நாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் தன்மையைத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றது… அதை அந்த அணுக்கள் இழுத்தே கவர்கின்றது.
அதாவது…
1.எந்த எண்ணத்தை நாம் கவர்ந்தோமோ அந்த அணுவின் தன்மையாக
2.நமக்குள் ஒரு கரு முட்டையாக உருவாகின்றது.
3.இரத்தத்துடன் கலந்து சுழன்று வரும் பொழுது எந்த உறுப்பின் பாகத்தில் இது இணைந்து விடுகின்றதோ
4.அதனின் பருவமாகும் போது முட்டை வெடித்து அணுவாக மாறுகின்றது… கூட்டை விட்டு வெளியே வந்து விடுகின்றது.
உதாரணமாக நத்தை ஓட்டுடன் ஒட்டி இருந்து பாதுகாப்பாக இருப்பது போல
1.நாம் நுகர்ந்த உணர்வின் அணுக்கரு உடலின் உறுப்போடு ஒட்டி
2.எந்த உணர்வின் சத்தை அதை எடுத்ததோ இரத்தத்தில் வருவதை உறிஞ்சி
3.உணவாக எடுத்து வளர்ந்து தன் இனத்தைப் பெருக்கும்.
அந்த அணுவின் (வேதனை) மலம் தசையாகி உறுப்புகளில் சேர்க்கும் பொழுது ஏற்கனவே உருவான நல்ல அணுக்களால் உருவான உறுப்பைச் செயலிழக்கச் செய்யும்.
முதலில் உறுப்புகள் அழகாக இருக்கும். இந்த வேதனை என்ற உணர்வுகள் சேர்ந்து அதனின் அணு வெடித்து நுரையீரலிலோ அல்லது கல்லீரலிலோ இது போன்ற அணுக்கள் தேங்கி விட்டால் விஷத்தின் தன்மை பாய்ந்து விடும். பின் அந்த உறுப்புகளில் எல்லாம் வலி எடுக்க ஆரம்பிக்கும்.
இரத்தங்களை உடல் முழுவதும் பிரித்து அனுப்பும் இருதயத்தில் இது போன்ற வேதனை அணுக்கள் உருவானால் அது இரத்தம் போகும் பாதையே அடைத்துவிடும் (ஹார்ட் அட்டாக்).
நம் இதயத்தில் இயற்கையாகவே மூன்று பிரிவுகள் வழியாக இரத்தம் உடல் முழுவதும் செல்கிறது. மேலே சொன்ன வேதனையான அணுக்கள் இதயத்தில் உருவானால் அடைப்பாகி… இரண்டு பாதை வழியாகப் போகும். அதிலும் அடைப்பானால் ஒன்றின் வழியாகப் போகும்.
ஒன்றின் வழியாகப் போகும் போது திணறலாகும். அதுவும் அடைபட்டால் நின்றுவிடும்.
இது எல்லாம் நாம் சந்தர்ப்பத்தால் எடுக்கும் எண்ணங்கள் உணர்வுகளுக்குத் தக்க நம் உடலில் அணுக்கள் உருவாகி அதனால் ஏற்படும் விளைவுகள்.
இதை மாற்ற வேண்டும் என்றால்…
1.நம் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து
2.ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
3.தீமையான அணுக்கள் உடலுக்குள் உருவாகாத வண்ணம் தடைப்படுத்தியே ஆக வேண்டும்.
சித்தர்களால் மறைக்கப்பட்டுள்ள உண்மைகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
பல கோடி உயிரணுக்கள் வந்து நம் உடலிலும் எண்ணத்திலும் கலக்கும் நிலையில் உள்ளதப்பா மனித உடல்.
1.பல கோடி அணுக்களின் ஈர்ப்பு நிலையில் இருந்து தப்பி
2.அழியாத செல்வமான நம் ஆத்ம ஜோதி நிலை கண்டிடத்தான்
3.இந்தத் தியான நிலை… சுவாச நிலை எல்லாமே…!
தியான நிலையில் உண்மை நிலையைப் புரிந்து ஒவ்வொருவரும் செயல்பட்டுப் பல கோடித் தீய உயிரணுக்களின் செயல்களுக்கு நாம் அடிமையாகாமல் அதிலிருந்தெல்லாம் நாம் தப்பி நம் சுவாச நிலையில் நம் எண்ணத்தில் அவ்வீசனின் சக்தியை ஊன்றச் செய்ய வேண்டுமப்பா…!
பல மகரிஷிகள் ஞானிகள் சித்தர்கள் எல்லாம் பெரும் ஞானப் பேராற்றல் நிலையை எய்தியது எப்படியப்பா..?
1.மற்ற அணுக்களின் சக்திகள்… உந்தல்கள்…!
2.தன் நிலைக்கு வந்து செயல்படாமல் மாற்றிக் கொண்டார்கள்.
அவர்கள் பல கோடி உண்மை இரகசியங்களை அறிந்து அன்றைய காலத்தில் அதை ஜாதக வடிவிலும்… கோவில்களிலும்… மருத்துவத்திலும்… பல உண்மை நிலைகளை எல்லாம் கண்டறிந்து பெரும் சூட்சமத்தில் இரகசியமாக வெளியிட்டார்கள். பல உண்மைகளை மறைத்தும் விட்டார்கள் அன்றையச் சித்தர்கள்…!
இந்நிலையில் பல உண்மைகளை அறிந்து தன் உயிராத்மாவை அழியாச் செல்வமாக்கி நான் என்றால் என்ன…? என்பதை அன்றே உணர்ந்தார்கள். பின் வரும் மக்களுக்காக எவ்வளவோ பெரும் நிலைகளை எல்லாம் கண்டுணர்ந்து
1.இன்றும் சூட்சம நிலையில் இருந்து கொண்டே
2.ஆண்டவன் ரூபத்தில் வந்து பல வழிகளில் உணர்த்துகிறார்கள்.
அழியாச் செல்வமான இந்த உயிராத்மாவை மனிதர்கள் எல்லோருமே என்ன…? என்று புரிந்து கொண்டு வாழ்ந்திட வேண்டுமப்பா…!
ஜெப நிலையில் அமர்வதையும்… தெய்வத்தை வணங்குவதையும்… பலர் பல நிலையில் பொருளுக்காக என்று செயல்படுத்தி உண்மை நிலையையே புரிந்து கொள்ளாமல் சிதறடித்து விட்டார்கள்.
நம் உயிராத்மாவை… உடலை விட்டுப் பிரிந்த பல ஆத்மா என்னும் அணுக்களின் நிலையில் இருந்து தப்பி ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும்… வாழ்ந்திட முடியும்…!
இந்த உடலில் இருந்தால்..
1.இனி எத்தனை காலங்கள் உடலுடன் வாழ முடியும்…! என்ற உண்மையைப் புரிந்து கொண்டு
2.தன் ஆத்மாவிற்குத்தான் அழியாச் செல்வத்தைச் சேமிக்க வேண்டும்.
இந்தச் சூரியனிலிருந்து நாம் பல கோடி நன்மைகளைப் பெற்று வருகின்றோம். சூரியன் எப்படிப் பல மண்டலங்களின் நிலை கொண்டு அச்சக்திகளைத் தன்னுள் ஈர்த்துப் பல நன்மைகளை அளிக்கின்றதோ அதே போல் அச்சக்தியின் அருள் பெற்ற நாம் எல்லோரும் சத்திய நிலையில் வாழ்ந்து சமுதாயத்தில் நல் நிலையில் வாழ்ந்திட வேண்டும்.
1.இந்தப் பிரபஞ்சத்தில் நாம் பிறருக்குச் சுமையாக வாழ்ந்திடாமல்
2.பிறரின் நன்மைக்காகப் பிறவி எடுத்த பயனைப் பெற்றிட வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
அன்று மெய் ஞானிகள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை நீக்க தன் உணர்வின் ஆற்றலை மக்களுக்குத் தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள். அந்த வழியைத்தான் யாம் உபதேசிக்கின்றோம்.
தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றினால் எப்படி செம்பும், பித்தளையும், வெள்ளியும், ஆவியாகச் செல்கின்றதோ அதைப் போன்று நாம் ஆத்ம சுத்தி செய்து நமக்குள் வரும் தீமைகளை நீக்க முடியும்.
ஓ…ம் ஈஸ்வரா… என்று நம் உயிரை எண்ணி விண்ணை நோக்கி நாம் உணர்வைச் செலுத்த வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்க வேண்டும். விண்ணிலிருந்து சுவாசித்து அதை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
நாம் நல்லதை எண்ணி வாழும் பொழுது ஒவ்வொரு நிமிடமும் சந்தர்ப்ப வசத்தால் நமக்குள் சங்கடமோ துன்பமோ பயமோ அவசரமோ ஆத்திரமோ இதைப் போன்ற உணர்ச்சிகளை நாம் நுகர நேருகின்றது.
இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் உமிழ் நீராகச் சேர்ந்து அந்த உணர்வின் அலைகள் நம் உடலுக்குள் அது சுழன்று வருவதற்குள் நாம் அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்யும் பொழுது அதைப் பரிசுத்தப்படுத்தி நல்ல உணர்வுகளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கருணைக்கிழங்கை வேக வைத்தவுடன் அதில் உள்ள விஷத்தின் தன்மைகள் மாறுகின்றது. இதைப் போன்று
1.கடினமான சொற்கள் நம்மை இயக்கவும் அறியவும் உதவினாலும்,
2.அது நம் உடலுக்குள் போய்த் தீங்கு செய்யாதபடி நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால் நாம் நல்லதைக் காக்க வேண்டும் என்று தான் அந்த உணர்வுகளை நுகர்ந்தோம். அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு நல்ல உணர்வின் தன்மையைக் காக்க முடிந்தது. நல்ல செயல்களை அறியவும், செய்யவும் முடிந்தது.
1.ஆனால் அந்த உணர்வுகள் நம் உயிரிலே மோதியபின் அது இயக்கி அந்த உணர்ச்சிகளை ஊட்டி
2.நம் உடலை இயக்கியபின் தான் தெரிகின்றது.
இந்த உணர்வின் சத்து நம் உடலுக்குள் கலப்பதை அதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்த அசுத்தமே நம் உடலில் சேர்ந்து விடுகின்றது. அதைத் துடைப்பதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற முறை.
வாரத்தில் ஒரு நாள் நாம் கூட்டுக் குடும்ப தியானம் செய்து நம் மூதாதைதையர்களை விண் செலுத்தினால்தான் சுலப நிலைகள் கொண்டு அந்த அருள் சக்திகளைப் பெற முடியும்.
இன்று விஞ்ஞானிகள் எப்படிப் பல நிலைகளையும் பொருத்தி அதனை இணைத்துச் செய்கின்றனரோ அதே போன்றுதான்
1.மெய் ஞானிகள் தன் உடலின் தன்மையில்
2.இயற்கையின் சக்தியைத் தனக்குள் தொடர்பு கொள்வதற்கு,
3.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி
4.உணர்வின் எண்ணத்தைப் புலனறிவான தன் கண்ணுக்குள் செலுத்தி
5.கண்ணின் நினைவை விண்ணை நோக்கி ஏகி அதன் வழியிலே தனக்குள் சக்தியைப் பெருக்கிக் கொண்டார்கள்.
இப்படி அவர்கள் பெற்ற அந்த சக்திகளை நீங்கள் பெறுவற்காக வேண்டித்தான் அவர்கள் எந்த மார்க்கங்களிலே சென்றார்களோ அவ்வழிகளிலே உங்களையும் செல்லச் செய்வது.
இதில் ஒன்றும் கஷ்டமில்லை.
வாரத்தில் ஒரு நாள் வீட்டில் எல்லோரும் சேர்ந்து தியானம் செய்து, உங்களுக்குள் சக்தியைக் கூட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கக்கூடிய ஆற்றலை இந்த முறைப்படி செய்து கொண்டால் விண்ணுலகையும் அண்டத்தையும் நீங்கள் காணலாம்.
அந்த அண்டத்திற்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மையை நமக்குள் இழுத்து நம்மைத் துன்பப்படுத்தும் நிலைகளைக் குறைக்கலாம்.
உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.
சர்க்கரைச் சத்து இரத்தக் கொதிப்பு உப்புச் சத்து மூச்சுத் திணறல் இது எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டது தான்…!
நாம் உணவாக உட்கொள்கிறோம் என்றால் அதில் உள்ள சத்துகள் எல்லாம் நம் உடலிலே முதலில் அமிலமாகத்தான் மாறும்.
விஷத்தன்மை கொண்ட நம் பித்த சுரபி…
1.அதனுடைய சுரப்புக்குத் தக்கவாறு சாப்பிடும் ஆகாரத்திற்குள் கலந்து
2.அந்த அமிலத்தன்மையை குளுக்கோஸாக மாற்றுகிறது.
குளுக்கோசாக மாற்றி வரப்படும் பொழுது இரத்தங்களிலே இருக்கக்கூடிய செல்கள்
1.இந்த உணர்வின் தன்மையைச் சுழலச் செய்து சுழலச் செய்து
2.அதைச் சிவப்பணுக்களாக மாற்றி விடுகின்றது.
அப்படி மாற்றும் தன்மை அங்கே இல்லை என்றால் விஷத்தின் தன்மையால் அந்தக் குளுக்கோஸ் சர்க்கரையாக மாற்றி விடுகின்றது. இப்படி அந்தக் குளுக்கோஸ் அதிகமானால் சர்க்கரைச் சத்து இரத்தத்திலே அதிகமாகிவிடும்.
காரணம்… அடிக்கடி வேதனையான உணர்வைச் சுவாசிக்கும் பொழுது அல்லது வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது அல்லது வேதனையான உணர்வுகளை எடுக்கும் போது உடலில் விஷத் தன்மைகள் அதிகமாகிறது.
உதாரணமாக ஒருவர் செய்யும் தவறான செயலைப் பார்த்து நம்மால் அதைத் தாங்க முடியவில்லை என்றால் சோர்வான உணர்வைத்தான் நுகர்கின்றோம். அதை நுகரப்படும் பொழுது கோபமான உணர்வுகளைக் கலந்து நாம் சுவாசிக்க நேருகின்றது.
இது நமக்குள் கூடியபின் இந்த உணர்வு பிரிக்கப்பட்டு குளுக்கோஸை சிவப்பணுக்களாக மாற்றும் தன்மைக்கு மாறாக இதனுடைய உணர்வின் செல்கள் அழுத்த நிலைகள் கொண்டு இரத்தக் கொதிப்பு நோயாக மாறும்.
1.சர்க்கரைச் சத்து உள்ளவர்களுக்கு ரொம்பச் சீக்கிரம் இந்த இரத்தக் கொதிப்பும் வரும்.
2.காரணம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப (சோர்வு வேதனை கோபம்) அணுக்களின் தன்மை வீரியம் அடைகின்றது.
வைத்திய ரீதியில் எடுத்துக் கொண்டாலும் கூட இரத்தத்தைப் பரிசோதித்துத் தான் இரத்தக் கொதிப்பு இருக்கிறது… சர்க்கரைச் சத்து இருக்கின்றது என்பார்கள்.
அதே சமயத்தில் இந்த இரண்டும் மோதும் பொழுது சலிப்புத் தன்மை அடைந்து பிரிக்கப்படும் பொழுது… ஆஸ்த்மா போன்ற சளித் தன்மையும் அதிகமாகின்றது.
சர்க்கரை அதிகமாகும் போது சளி உருவாகி எல்லா இடத்திலும் அது உறைந்து அந்த அமிலங்கள் மாறுகின்றது. உடலுக்குள் ஒவ்வொன்றையும் இப்படி மாற்றுகின்றது.
பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ காலமாகப் பல சரீரங்கள் பெற்று இன்று மனிதனாக வளர்ந்து வந்திருந்தாலும்…
1.நாம் இன்று சந்திக்கும் சந்தர்ப்பங்கள் மூலம் உடலில் அணுத் தன்மைகள் மாறி
2.கடைசியில் வேதனை என்ற உணர்வே மிஞ்சுகின்றது…
3.மனிதனின் ரூபத்தையே மாற்றும் தன்மைக்கு வந்து விடுகின்றது.
ஆக அந்த வேதனை எதில் உருவாகிறது என்றால் சந்தர்ப்பத்தால் இணைத்த உணர்வு கொண்டு தான் நமக்குள் அது வருகின்றது.
ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தையே நல்லதாக மாற்றும் நிலைக்குத்தான் உபதேசங்கள் வாயிலாக அருள் ஞானத்தை உங்களுக்குள் வளர்க்கும் தன்மையாக இங்கே செயல்படுத்திக் கொண்டுள்ளோம் (ஞானகுரு).
உடலை விட்டுப் பிரிந்து செல்பவர்கள் கைலாசமோ வைகுண்டமோ சொர்க்கமோ அடைவதில்லை – ஈஸ்வரபட்டர்
மனிதர்கள் பிறந்து வளர்ந்து இந்த உலக வாழ்க்கையை விட்டு அந்தந்த உடலிலிருந்து ஆத்மா பிரிந்து சென்ற பிறகு
1.அந்த ஆத்மாக்கள் எந்த நிலையில் இருக்கின்றன…?
2.அவ்வாத்மாக்களின் நிலை என்ன..? என்ற உண்மை நிலையை
3.ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டும்…! என்பதன் பொருளில் தான்
4.ஆத்மாவிற்கு முதலிடம் தந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
இந்த உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றவுடன் பரலோகத்திற்குச் செல்கிறது…! என்கிறார்கள். இப்பரந்த உலகிலே அந்த ஆத்மாக்கள் அபிலாஷையுடன் (ஆசாபாசத்துடன்) சென்றிருந்தால் பரந்த உலகில் சுற்றிக் கொண்டிருப்பதில்லை.
தன் ஆத்ம நிலை கொண்டு எந்த இடத்தில் அதன் ஆன்மா பிரிந்ததோ அந்த நிலையிலேயே
1.அந்த ஆத்மா பிரிந்து செல்வதற்கு முதலில் இருந்த உடல்
2.எந்த இடத்தில் எந்த நிலையில் வாழ்ந்ததோ அங்கேயே தான் சுற்றிக் கொண்டுள்ளது.
அதனுடைய ஆசைகளும் அதனுடைய எண்ணங்களும் செயல்படும் வரை அதற்குக் கால நிலைகள் இல்லை.
1.எவ்வளவு காலம் வேண்டுமாகிலும்
2.அதன் ஆசை முடியும் வரை
3.அங்கே தான் சுற்றிக் கொண்டு தான் இருக்கும்.
அந்த ஆத்மாவின் உருவம் என்பது அவ்வாத்ம ஜோதியின் நிலை அதாவது உருவமில்லாத அந்த உயிராத்மா எப்படி இருக்கும்…?
அது சிறிய அணுவாகத்தான் உள்ளது. அவ்வாத்மாவைச் சுற்றி அது வாழ்ந்த நாட்களில் அதன் சுவாச நிலையைக் கொண்டு அவை பேசிய பேச்சுக்களும் விட்ட சுவாச நிலையும் அதே நிலையில் தான் சுற்றிக் கொண்டேயுள்ளது.
இந்த உலகினிலே “பல கோடி ஆத்மாக்கள்” காற்றிலே பரந்து பரவியுள்ளன. ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு நிலை கொண்டு சுற்றிக் கொண்டுள்ளது.
இன்றைய உலகில் வாழ்ந்திடும் மக்களில் நம் (உடலுடன் உள்ளவர்கள்) ஒவ்வொருவரின் சுவாச நிலை எப்படி உள்ளதோ அந்நிலைக்கு ஏற்ப
1.நாம் விடும் சுவாச நிலை கொண்டு
2.நாம் விடும் சுவாச நிலை என்று சொல்லும் பொழுது கோபம் மகிழ்ச்சி சாந்தம் இப்படிப் பல உணர்ச்சிகள் நமக்கு வரும் பொழுது
3.அத்தகைய உணர்ச்சிகளுக்கும் உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாவின் ஆசைக்கும் ஒத்த நிலை வரும் பொழுது
4.மனிதர்கள் (நம்) உடலில் அந்த உயிராத்மாக்கள் புகுந்து தன் எண்ணத்தையும் தன் ஆசைகளையும் செயல்படுத்திக் கொள்கிறது.
ஆனால் அதே சமயம் உள்ளே புகும் உயிரான்மாக்கள் வெளியேறும் வழியே இல்லை. புகுந்த உடலை விட்டு எப்பொழுது அந்த உடலுக்குச் சொந்தமான உயிரான்மா பிரிகிறதோ அன்று தான் அந்த உடலில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் வெளியே வர முடியும்.
ஆகவே அந்த உயிரான்மாக்களின் செயல்களிலிருந்து தப்ப வேண்டும் என்றால்
1.தியான நிலை மிகவும் முக்கியமான ஒன்றப்பா…!
2.அதைத் தவிர வேறு வழி இல்லை.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
பிறர் செய்யும் தவறுகளைப் பார்த்து அதைத் தவறு என்று உணர்ந்தாலும்… ஆபத்து வரும் பொழுது ஆபத்து வருகின்றது என்ற உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நம் உடலைக் காத்தாலும்
1.சுவாசித்த உணர்வுகள் நமக்குள் மன வலுவைக் குலைக்கச் செய்யும்.
2.அதிலிருந்து நம்மை மீட்டுக் கொள்வதற்கு ஆற்றல் தேவை.
நீங்கள் அத்தகைய ஆற்றல் பெறும் நிலைக்காகத்தான் யாம் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நமது குருநாதர் கொடுத்த அருள் வாக்கின் தன்மையை உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் கொடுக்கின்றோம்.
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல சந்தர்ப்பங்களில் எமக்குத் துன்பத்தை ஊட்டி அவர் கொடுத்த ஆற்றல்மிக்க சக்தியை யாம் சுவாசிக்க நேர்ந்தது.
துன்பத்தை நீக்கும் இந்த உணர்வின் தன்மை கொண்டு எப்படி ஒளியின் சரீரம் பெற வேண்டும்…? அதை எப்படிப் பெற முடியும்…? என்பதைப் பல அனுபவங்களின் வாயிலாகக் கொடுத்தார்.
குருநாதர் கொடுத்த ஆற்றல்மிக்க அந்தச் சக்திதான்….
1.யாம் (ஞானககுரு) 12 வருட கால அனுபவத்தில் வளர்த்த
2.பல இன்னல்களைப் போக்கும் துன்பங்களைத் துடைக்கும் ஆற்றல் மிக்க சக்தியான
3.வாக்காக இங்கே கொடுக்கும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்.
பல இன்னல்களைத் தாங்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அந்த ஒவ்வொரு இன்னலையும் நீக்குவதற்குப் பேரண்டத்தின் ஆற்றலையும் ஞானிகளின் உணர்வலைகளையும் சுவாசித்து அதை உடலுக்குள் அணுக்களாக மாற்றுவதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதம் உங்களுக்குக் கொடுக்கப்படுகின்றது.
துன்பம் வரும் பொழுது…
1.ஓ…ம் ஈஸ்வரா… என்று உயிருடன் தொடர்பு கொண்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வைச் சுவாசிக்க வேண்டும்.
அப்படிச் சுவாசிக்கும் பொழுது அந்த மெய் ஞானிகள் விளைய வைத்த ஞானத்தின அருள் ஒளிகள் நீங்கள் நினைத்த மாத்திரத்தில் சுலபத்தில் வரும்.
அத்தகைய தன்மைதான் யாம் கொடுக்கும் இந்த வாக்கு, இந்த ஆத்ம சுத்தி என்பது. இது துன்பங்களை நீக்கக் கூடிய கடுமையான ஆயுதம்.
இதை நீங்கள் எடுக்கும் பொழுது துன்பம் நீங்கும்… நோய்கள் நீங்கும்.. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கூடும். இந்த மனித வாழ்க்கையில் நீங்கள் புனிதம் பெற முடியும்.
ஆகவே இதை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.
கணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்
கணவன் மனைவி இணையாது… தனித்த நிலையில் தவத்தின் மூலம் ஆற்றல் மிக்க சக்திகளைப் பெற்றாலும் முனித் தன்மை என்பதே விஷத் தன்மை கொண்டது. ஒன்றை ஊடுருவிக் கொல்லும் சக்தி பெற்றது.
1.பெண் பால் என்ற நிலையில் இணைந்து வரப்படும் போது தான்
2.விஷத்தின் தன்மை ஒடுக்கி
3.ஒரு துடிப்பின் நிலையாக இயங்கி
4.அணுவின் சக்தி பெறக்கூடிய தகுதி பெறும்.
இதையெல்லாம் வாழ்க்கையில் சிந்தித்துப் பார்த்தால் தெரியும்.
ஏனென்றால் கணவன் மனைவி இரண்டு பேரும் அன்பாகப் பேசி… ஒரே எண்ணத்துடன் ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்று எண்ணினால் எண்ணங்கள் கை கூடி அந்தக் காரியங்கள் சித்தியாகும்.
ஆனால் கணவன் ஒரு வேலையைச் செய்யப் போனால் இதை எதற்குச் செய்து கொண்டிருக்கிறார்…? என்று மனைவி இடைமறித்து அழுத்தமாகச் சொன்னால் போதும்.
அதற்கு அடுத்து கணவன் என்ன வேலை செய்தாலும் கூட இந்தக் குறை உணர்வுகளே அங்கே வளரும்.
ஆகவே குடும்பத்தில் வாழும் பெண்கள் சர்வ ஜாக்கிரதையாக ஒரு சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
1.பெண்பால் என்ற உணர்வு எதனில் கலக்கின்றதோ அதனின் உணர்வின் கலவை கொண்டு
2.அடுத்து கருத்தன்மை பெறக்கூடிய தகுதி பெற்று விடுகின்றது. (ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்).
இதைப் போன்ற நிலைகள் இந்த வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. ஏனென்றால்…
பல கோடி உணர்வுகள்
பல குடும்பங்களில்
பல நிலைகள்
பல வித்தியாசமான நிலைகள் உண்டு.
கணவன் நல்லவனாக இருக்கலாம். இருந்தாலும் சந்தர்ப்பத்தில் அறியாமையினால் ஒரு வேதனைப்படும் செயலைச் செயல்படுத்தும்போது சங்கடமான உணர்வுகளைக் குடும்பத்தில் உருவாக்குகின்றது.
வேதனை என்ற விஷத்தன்மை வரும் பொழுது மனைவியை நினைக்கும் போதெல்லாம் அடிக்கடி வெறுப்பின் தன்மையும் வேதனைப்படும் தன்மையும் கணவனுக்கு வரும்.
பின் அடுத்து மனைவி நல்லதைச் சொன்னாலும் கணவன் அதை ஏற்றுக் கொள்ளும் பண்பு வருவதில்லை. அதே சமயத்தில் மனைவிக்கும் இந்த விஷத்தின் தன்மை கூடுகின்றது,
இப்படி விளைந்த உணர்வு பரவியபின் அந்தத் தவறின் உணர்வு அங்கேயும் விளைகின்றது.
1.இருவருமே இதே உணர்வின் தன்மை வளர்க்கப்படும் பொழுது இருவருக்குமே நோய் வருகின்றது.
2.கை கால் குடைச்சல் மேல் வலி தலை வலி என்று வரிசைப்படுத்தி வரும்.
இருவரும் ஒன்று சேர்த்து ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு சரி… இதை வாங்கலாம்…! என்று எண்ணினாலும் வேதனை கலந்த உணர்வுடன் இருவருமே செல்லப்படும் பொழுது அந்தப் பொருளை வாங்கினாலும்… வாங்கிய பின் இரண்டு பேருக்கும் பகைமை வரும்.
1.அப்போது அந்தப் பொருளைப் பாதுகாக்கும் சக்தியை இருவருமே இழந்து விடுகின்றனர்.
2.இது எல்லாம் இயற்கையின் நியதிகளில் உணர்வுகளின் இயக்கம் தான்.
கணவன் மனைவி இருவருமே அருள் ஒளியைப் பெற்று அதைக் இருவருக்குள்ளும் கருவாக்கினால் மகிழ்ந்து வாழச் செய்யும். வெறுப்போ பகைமையோ வளராது… நோயாகவும் மாற்றாது.
அதற்காக வேண்டித் தான் அதிகாலை துருவ தியானத்தில் இருவருமே ஒன்று போல் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் அவசியம் எண்ணித் தியானிக்க வேண்டும் என்று உங்களிடம் யாம் சொல்வது.
இந்தப் பழக்கத்திற்கு இருவருமே வந்து விட்டால் குடும்பத்தில் மன மகிழ்ச்சியும் செல்வமும் செல்வாக்கும் சொல்வாக்கும் தன்னாலே பெருகும்.
மிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்
ஒரு உணர்வின் தன்மை ஒரு அணுவின் தன்மை சேர்க்கப்படும் போது அது எந்தெந்த குணத்தின் தன்மை அதிகமாகச் சேர்க்கின்றதோ அது ஆற்றல் பெறுகின்றது.
இதைப் போன்றுதான் இயற்கையின் உண்மையினுடைய நிலைகள்.
நாம் மெய் உணர்வின் தன்மையை அறிந்துணர்ந்தபின் அந்த மகரிஷிகள் அருள் வழியைக் காட்டியபின் இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே யாம் சொல்லும் நிலைகளைக் கடைப்பிடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் பிரச்சினைகளையும் சங்கடங்களையும் எதிர் கொள்கின்றீர்களோ அதையெல்லாம் உங்களுக்கு நன்மை பயக்கும் நேரமென்று எடுத்துக் கொள்ளுங்கள்.
எப்படி…?
என்னைத் திட்டிவிட்டானே… இரு நான் பார்க்கின்றேன்…!’ என்றால் அன்றைய நாள் துன்பத்தைக் கொடுக்கும் நாள்.
அவர்கள் சொன்னவுடன் அல்லது நம் பையனே அப்படிப் பேசி இருந்தாலும் கூட அந்த உணர்வுகள் ஆத்திர உணர்வுடன் வெளிப்படுத்தும் போது நமக்குக் கெட்ட நாள். நமக்குள் அந்த உணர்வின் தன்மையைக் கூட்டுகின்றது.
ஆகவே யாராவது திட்டினாலும், உணர்ச்சிவசப்பட்டு ஏசும் நிலை வந்தாலும்…
1.உடனே ‘’ஓ…ம் ஈஸ்வரா…’’ என்று உயிரை எண்ணுங்கள்
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
4.அப்பொழுதே இது அடங்கும்.
ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசி அந்த உணர்ச்சியைத் தூண்டும் நேரத்திலும் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டால் அவர்களால் சங்கடமாக ஏற்படுத்திய உணர்வுகள் நம்மை ஆட்டிப்படைக்காதபடி அதை அடக்க இந்த ஆயுதம் உதவும்.
அடுத்து… யார் நமக்கு தவறு செய்தார்களோ அவர்களை எண்ணி.
1.மகரிஷிகளின் அருளால் அவர்கள் நாளை செய்வதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று ஆணையிடுங்கள்
2.அதே சமயத்தில் அவர்கள் தீமையான உணர்வுகள் உங்களுக்குள் வராது தடுக்கச் செய்யுங்கள்.
இதை நீங்கள் பயன்படுத்தி ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் ஒளிகளைச் சேர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
மனித வாழ்க்கை அது எந்த நிமிடம் என்று சொல்ல முடியாது. நாம் இப்பொழுது எந்த நிலைகளில் இருந்தாலும் மனிதருடன் வாழப்படும் பொழுது குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இன்றைய விஞ்ஞான உலகத்தில் பல பல குறைகளைக் கண்டு கொண்டு தான் இருக்கிறோம்.
ஆனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் ஆத்ம சுத்தி செய்வதன் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சேர்த்து ஒவ்வொரு நிமிடமும் அந்த புனிதப் பயணமாக இந்த வாழ்க்கை இருக்க வேண்டும்.
உங்களிடம் யாம் (ஞானகுரு) எதற்காக இதைச் சொல்கிறோம்…?
நீங்களெல்லாம் மகிழ்ந்திருந்தால் தான்… மகிழ்ச்சியான சொல்களைச் சொன்னால்தான் எமக்கும் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
அதைப் போல நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு
1.யாராவது துன்புற்று உங்களிடம் வந்தாலும் உடனே அவர்களுக்கு நன்றாகிப் போகும்…! என்று சொல்லுங்கள்.
2.அவர்களுக்கு உடல் நலமாகிவிடும்.
3.உடல் நலம் பெற்றேன் என்று அந்த மகிழ்ச்சியான எண்ணங்களைச் சொல்லும்போது
4.அந்த நல்ல உணர்வுகளை உங்களுக்குச் சொந்தமாக்குங்கள்.
நான் எப்படி உங்களுக்கு நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றேனோ அதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அந்த எண்ணத்தைப் பரப்புங்கள்.
நம்முடைய மூச்சு பிறருடைய துன்பங்களைப் போக்க உதவ வேண்டும். துன்பமான உணர்வுகளைக் காதிலே கேட்டு நம் உடலுக்குள் நின்று அந்தத் துன்பங்கள் நம்மை ஆட்டிப் படைத்துவிடக் கூடாது.
பிற துன்ப அலைகள் எல்லாம் அது விஷம். அது ஊடுருவி நம்மைக் கெடுக்கத் துரித நிலைகளில் செயல்படும். அதை மாற்றுவதற்கு மெய் ஞானிகளின் அருள் ஒளி நமக்குள் இருந்தால்தான் மாற்ற முடியும்.
1.மெய் ஞானிகளின் அருள் ஒளி நெருப்பு.
2.அந்த நிலையின் தன்மையை நாம் பெற வேண்டும்.
3.ஆனால் இதற்குக் குருவின் துணை வேண்டும்.
குருவின் இணைப்பு கொண்டு அன்று மகரிஷிகள் எவ்வழிகளில் எடுத்தார்களோ…
1.அந்த உணர்வின் ஆற்றலின் நிலைகள் கொண்டு
2.அதைப் பின்பற்றி நடப்போரின் நிலைகள் கொண்டுதான் அந்த சக்தியைப் பெற்றிட முடியும்.
நீங்கள் ஒவ்வொருவரும் இந்த மனித வாழ்க்கையில் புனிதம் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் ஆத்ம சுத்தி செய்து பயிற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.
உங்கள் குடும்பத்தில் யாருக்கு எந்தச் சிக்கல் வந்தாலும் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள், எல்லாமே நல்லதாக வேண்டுமென்று எண்ணுங்கள்.
1.இதைப் போன்று சிறிது நாளைக்கு முயற்சி எடுத்துப் பாருங்கள்.
2.இந்த உண்மை நிலைகளை நீங்கள் உங்கள் உடலுக்குள்ளும், உணர்வுக்குள்ளும் பார்க்கலாம்.
பிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது – ஈஸ்வரபட்டர்
இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நாள் வரை பல உண்மைகளை அறிந்து கொள்ள நாம் எல்லோருமே ஆர்வம் கொண்டுள்ளோம்.
1.பிற்கால வாழ்க்கையை எண்ணி
2.இனி நடக்கப் போகும் நிலை என்ன…? என்பதை அறிய எல்லோரும் விரும்புகின்றோம்.
இருந்தாலும் நம்முள் உள்ள பரமாத்மாவை மறந்து விட்டு “பரலோகத்திலுள்ள பரமாத்மா…!” என்று வேண்டி ஜாதகங்கள்… ஏட்டுச் சுவடிகள்.. என்று இப்படிப் பல வழிகளில் ஆரூடம் பார்த்து “அறிதல்” என்றெல்லாம் நம் காலத்தைச் சிதறவிட்டு விடுகின்றோம்.
சூரியனின் சக்தியிலிருந்து அந்தச் சூரியனைச் சுற்றியுள்ள பல மண்டலங்களின் நிலையை வைத்து அம்மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியனில் பட்டுச் சூரியனிலிருந்து நம் பூமிக்கு வந்திடும் ஒளியின் தன்மையை வைத்துப் பல நிலைகள் நடக்கின்றன.
அந்தச் சூரிய சக்தியின் பிம்பத்தில் பல மண்டலங்களின் ஒளி பட்டு “அது பூமிக்குக் கிடைக்கும் நேரத்தைத்தான்” அன்றைய சித்தர்கள் ஜாதகங்கள் என்ற நிலையில் கண்டனர்.
1.சந்திரனின் பார்வை… சூரியனின் பார்வை… என்றும்
2.கேது… இராகு… என்ற ஒவ்வொரு மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியன் மேல் படும் பொழுதும்
3.அந்த ஒளிக் கதிரின் தன்மை பூமியின் மேல் படும் காலத்தை வைத்துத்தான் சித்தர்கள் ஜாதகம் கணித்தார்கள்.
ஜென்ம நட்சத்திரம் என்கிறார்கள். எந்தக் குழந்தைக்கும் ஜென்ம நட்சத்திரத்தை இன்றைய ஜாதகக்காரர்களால் அறிய முடியாது. குழந்தை பிறந்த நேரத்தை வைத்து ஜென்ம நட்சத்திரம் குறிக்கின்றார்கள்.
அதுவல்ல ஜென்ம நட்சத்திரம்…!
1.அது தன் தாயின் வயிற்றில் “என்று உதயம் பெற்றதோ…” அந்த நேரம் தான் அதற்கு ஜென்ம நட்சத்திரம்.
2.அந்த நிலையைக் கணித்திட இன்றைய ஜாதகக்காரர்களால் முடியாது.
இராமர் இராம நவமி அன்று பிறந்தார்… என்றும் முருகன் பிறந்த நாளை வைகாசி விசாகம்…! என்றும் கணிக்கின்றார்கள் பாட நிலைப்படித்தான்…!
இராமர்… கிருஷ்ணர்… முருகன்… எல்லாம் பிறவி எடுக்கவில்லை. அவர்களின் குணாதிசயங்களை வைத்துத்தான் நம் சித்தர்கள் அவர்களுக்கு நாமங்கள் இட்டார்கள்.
அப்படி இருக்கும் பொழுது இராமர் பிறந்த நேரத்தையும் முருகன் பிறந்த நேரத்தையும் எப்படிக் கொண்டாடுகின்றார்கள்…? என்று நீங்கள் நினைக்கலாம்.
அன்றையச் சித்தர்கள் மற்ற மண்டலங்களின் ஒளிக்கதிர்கள் சூரியனில் பட்டு பூமியைத் தாக்கும் பொழுது…
1.என்றென்று அந்த நல்ல நிலை பெறும் நாளோ அந்த நாட்களின் குணா அம்சங்களை வைத்து
2.அந்த நாட்களை அந்த ஒளியிலிருந்து வரும் சக்தியின் நிலை கொண்டு
3.முருகருக்கும் இராமருக்கும் பிறந்த நாட்கள் என்று கணித்தார்கள்.
கணித்தார்கள் என்றால் அந்த நிலை பெறும் நேரத்தை நல்ல நேரமாக ஏற்று அந்த நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் உகந்த நாள்…! என்று மக்களுக்கு ஏற்றுக் கொள்ளப் பல வழிகளைச் சொல்லிச் சென்றார்கள்.
ஆனால் அந்த உண்மைகளை எல்லாம் காலப்போக்கிலே சிதறடித்து விட்டார்கள்.
மற்ற மண்டலங்களின் ஒளி சூரியனில் எப்பொழுது கிடைக்கப் பெறுகிறது…? மற்ற மண்டலங்களில் உள்ள சக்தி சூரியன் மேல் பட்டு அதன் பின் அச்சூரியன் நமக்கு அளிக்கின்றது.
சந்திரனில் ஒளிக் கதிர்கள் இல்லா விட்டால் “இன்றைய வண்ணங்கள்… சுவைகள்…” இவை எவையுமே நாம் பெற்றிருக்க முடிந்திடாது.
அதைப் போல் தான் ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் நமக்குப் பலவித இயற்கைத் தன்மை வாய்ந்த சக்தியெல்லாம் கிடைக்கின்றது.
பெரும் பேறு வாய்ந்த சக்தியுள்ள பூமியப்பா…! இன்று நாம் வாழ்ந்திடும் பூமி. இந்தப் பூமித் தாயின் உயிரோட்ட உண்மைகளை உணர்ந்து கொண்டு உலகினிலே உதித்த நாம் எல்லோருமே உண்மையுடன்… “உன்னதமாக வாழ்ந்திட வேண்டுமப்பா…!”
ஒவ்வொருவரும் அவரவர்கள் கடந்த காலத்தை எண்ணிக் கலங்கிடாமல் நம்முள் உள்ள பரமாத்மாவின் நிலையை அறிந்து வாழ்ந்திடுங்கள்.
1.தவறின் நிலையை எல்லாம் மறந்துவிட்டு
2.இனி தவறில்லாத வாழ்க்கையை வாழ்ந்து
3.பிறந்த பயனை இக்கலியின் கடைசியில் கல்கியில் ஒவ்வொருவரும் ஒளி நிலை அடையத்தான் இதை உணர்த்துகின்றேன்.
4.என்னுடைய (ஈஸ்வரபட்டன்) ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று புருவ மத்தியில் உள்ள நம் உயிரான ஈசனை வணங்க வேண்டும். பின் தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்க வேண்டும்.
அடுத்து இந்த அருள் வழியில் நம்மை அழைத்துச் செல்லும், நமது ஞானகுரு சற்குரு அருளாசி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்க வேண்டும்.
பின் ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள அருள் ஞானிகளின் அருள் உணர்வை எண்ணி ஏங்கிக் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நினைவைத் துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கிச் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று வலுவாக எண்ணி ஏங்க வேண்டும்.
1.இவ்வாறு வலுக்கூட்டிய இந்த எண்ணத்தைத் துருவ நட்சத்திரத்தின் பால் ஊடுருவிச் செலுத்தி
2.நமது கண்களின் காந்தப் புலனறிவால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து ஈர்த்து
3.உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து உயிர் வழி சுவாசிக்க வேண்டும்.
இந்தப் பதிவின் துணை கொண்டு மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி ஏக்கமான நிலையில்
1.அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து
2.எங்கள் இரத்த நாளங்களில் கலந்து
3.எங்கள் உடலில் உள்ள ஜீவ ஆன்மா ஜீவ அணுக்கள் பெற்று
4.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என எண்ணி
5.நம் உடலுக்குள் அலை அலையாகப் படரச் செய்யவேண்டும்.
இதுவே ஆத்ம சுத்தி…!
மனிதராகிய நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக அறிந்து உணர வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நன்கு ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.
இதனைத் துருவ தியானத்தின் மூலமே பெற முடியும்.
1.அத்தகைய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து
2.நம் உடலுக்குள் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுக்கும் பொழுது
3.எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும் அதை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள்
4.ஒளியின் சுடராக மாற்றிவிடும்.
துருவ நட்சத்திரத்தின் இயல்பு அது…!
நன்றாக இருப்பவர் திடீரென்று இருதயம் அடைத்து… சிறு நீரகம் செயலிழந்து மரணம் அடைவதன் காரணம் என்ன…? (HEART ATTACK KIDNEY FAILURE)
வான் வீதியில் உருவானது “உயிரணு…” என்னென்ன குணங்களை நாம் எண்ணுகின்றோமோ அந்த “அணுக்களை…” நம் உடலில் சேர்த்துக் கொள்கிறோம்.
அது நம்முடன் சேர்ந்து வளர்ச்சி ஆகி அதனுடைய இனத்தைப் பெருக்கும் பொழுது அது “ஜீவ அணுவாக…” மாறுகின்றது.
வான் வீதியில் சூரியனிலிருந்து வெளி வரும் வெப்ப காந்தங்கள் கோள்களின் சத்தினை எடுத்துக் கொண்டால் அது வெறும் அணு தான்.
1.அந்த அணுவை நாம் சுவாசித்து நுகர்ந்த பின் உயிர் ஜீவ அணுவாக மாற்றுகின்றது.
2.ஜீவ அணுவாக மாறிய பின் ஜீவ ஆன்மாவாக ஆகின்றது.
ஒரு மனித உடலில் நோய்வாய்ப்பட்டது என்றால் அந்த உடலில் அது ஆன்மாவாக மாறுகின்றது. அந்த உடலில் விளைந்ததை நாம் கூர்மையாக உற்றுப் பார்த்தால் நோய்க்குக் காரணமான அணுக்களை நமக்குள் எடுத்துக் கொள்கின்றோம்… நம் உடலில் விஷத் தன்மையாக மாறுகின்றது.
அதே சமயத்தில் அண்ட நோய்வாய்ப்பட்டவர் உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் அந்த உடலில் விளைந்த சக்தி நமக்குள் வந்து அந்த ஆன்மாவும் நமக்குள் வந்து விடுகின்றது.
நம் உடலுக்குள் வந்தவுடனே ஜீவ ஆன்மாவாக மாறுகின்றது. நமக்குள் வட்டமிடுகின்றது. நம் இரத்தத்தில் தான் அது சுழன்று கொண்டிருக்கும்.
ஆவி பிடித்தவர்களைப் பார்த்தோமென்றால் ஒரு வித வேகமான துடிப்புடன் இருப்பதைப் பார்க்கலாம். அந்த இரத்த ஓட்டங்களில் சுற்றிக் கொண்டு வருவதைப் பார்க்கலாம்.
1.இரத்தத்தில் சுற்றி வரும் பொழுது சிறு மூளை பாகம் வந்தால்
2.அந்த இறந்தவருடைய எண்ணங்களை வைத்து நம்மை இயக்கும்.
3.அங்கிருந்து (சிறு மூளை) விலகிச் சென்றால் மறுபடியும் சாந்தமாகி விடும்.
ஆனால் அது சிறு மூளையில் பட்டு இயக்கத் தொடங்கும் போது எண்ணங்கள் அது என்னென்ன எடுத்திருக்கின்றதோ அதை எல்லாம் பேசும். அதனுடைய உணர்வுக்குத் தகுந்த மாதிரி வேண்டாததை எல்லாம் கேட்கும்… வேண்டாததை எல்லாம் பேசும்.
ஆக இரத்த நாளங்களில் செயல்படுவது ஜீவான்மா. நமக்குள் இருந்து அதற்கு வேண்டியதை உற்பத்தி செய்து அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். அதனுடைய எண்ணங்கள் தோற்றுவிக்கப்படும் பொழுது தான் அதை நாம் சுவாசிக்கின்றோம்… உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.
ஆனால் ஜீவ அணுக்கள் என்பது நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மை நம் தசைகளில் ஒரு சேர்கின்றது. அப்பொழுது ஒவ்வொன்றும் அடங்கி எந்தெந்த குணங்களை எடுத்தோமோ அந்த உணர்வை உடலில் இருந்து எடுக்கும்… வெளியிலிருந்து…!
செடிகளிலே வித்து விளைகின்றது. அதே மாதிரித் தான் மனித உடலில் அந்த எண்ணங்கள் உருவானால்… பதிவாகும் போது ஊழ்வினை என்ற வித்தாக உருவாகின்றது. பின் இந்த மனித உடலிலிருந்து அலைகளாகப் பாய்கின்றது.
நான் உபதேசிக்கிறேன் என்றால் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அணுக்களாக மாற்றுகின்றது. அதை நீங்கள் சுவாசித்து உங்களுக்குள் வரும் பொழுது விளைந்து ஜீவ அணுக்களாகிறது.
என்னுடைய ஜீவ அணுக்கள் அதிகமான பிற்பாடு நான் இறந்து விட்டால் உடலுக்குள் வந்தால் ஜீவாத்மாவாக வருகின்றது. அது இரத்தத்தில் தான் இருக்கும். இரத்தத்தில் சில மாற்றங்கள் எடுத்துத் தன் உணர்வுகளை எடுத்துச் செயல்படுத்தும்.
இது போல் வருவதைத் தான் பேய் பிடித்தது… ஆவி பிடித்தது… ராட்சஸ உணர்வு போல் வருகிறது… என்றெல்லாம் சொல்வார்கள்.
சில கொடூரமான தெய்வங்களை உருவாக்கிப் கொடூரமான பல்லுடன் காட்டியிருப்பார்கள். அது போன்ற தெய்வத்தையே வாழ் நாள் முழுவதும் வணங்கி அந்த அந்த அலைகளைப் பதிவாக்கி அவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் அடுத்த உடலுக்குள் சென்றால் அதே நினைவுடன் தான் வரும்.
அடுத்த உடலை அடக்கி ஆட்சி புரியும் தன்மை வரும். வாய் பேச விட மாட்டேன் என்கிறது என்றெல்லாம் சொல்வார்கள். அது போன்று எத்தனையோ உண்டு.
ஆனால் அந்த ஆன்மா அது நம் இரத்தத்தில் தான் இருக்கும். அணுக்கள் நம் உடலோடு ஒட்டி வரும். தீமையின் உணர்வுகளுக்கு வரப்படும் பொழுது இரத்தத்தில் தான் இந்த அணுக்கள் பெருகும்.
1.இரத்தத்தில் இத்தகைய அணுக்கள் பரவும் பொழுது தான்
2.சில நேரம் இருதயத்திற்கு வரும்பொழுது இருதயத் துடிப்பு குறைகிறது… அதை அடைக்கும் (ஹார்ட் அட்டாக்)
3.அதே சமயத்தில் இரத்தத்தின் வழி அந்த அணுக்கள் கிட்னிக்கு வந்தால் விஷத் தன்மை பாய்ந்து கிட்னி பழுதாகி விடும்.
பார்க்கலாம் சிலருக்குத் திடீரென்று அட்டாக் வந்தது… சிறுநீரகம் செயலிழந்து விட்டது மரணம் அடைந்தார் என்று…! அது எல்லாம் இத்தகைய ஆன்மாக்களின் நிலைகளால் தான்.
அவரவர்கள் எண்ணத்திலிருந்து தான் ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது – ஈஸ்வரபட்டர்
இன்றைய உலகில் உள்ள பெரும்பகுதியானோர் தன் உயிரின் உண்மை நிலையையும்… கடவுளின் நிலையையும்… தான் வாழும் வாழ்க்கை நிலையையும்… புரியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
ஈஸ்வர சக்தி பெற்ற… பிறப்பிலிருந்து நல்லவர்… கெட்டவர்… என்ற பாகுபாடு இல்லாமல் அச்சக்தியில் இருந்து அவர்களுக்கு அளித்த மாபெரும் சந்தர்ப்பத்தை “நலமாக வாழ்ந்திடத்தான்” ஒவ்வொருவரும் பிறக்கின்றார்கள்.
பிறவி எடுத்த நிலையில் அவரவர்கள் வளர்ந்த நிலை… மண் வாக்கு… மன நிலை… சுவாச நிலையைக் கொண்டு வாழும் பொழுது “தன் சுவாச நிலையிலே தான்” அவர்களுடைய நிலை எல்லாமே நடக்கின்றன.
1.இன்றைய காலத்தில் மக்கள் ஆண்டவனை வணங்குவது என்பதே
2.தன் கஷ்டங்களுக்கு மீட்கும் வழியை வகுத்துத் தரத்தான் பல கோவில்களுக்குச் சென்று வணங்குகிறார்கள்.
3.பல காணிக்கைகளைக் கட்டி பல வேண்டுதல்களையும் செய்து
4.ஆண்டவனையும் இவர்கள் செய்யும் வியாபாரத்தில் பாகஸ்தனாக்கி
5.இவர்கள் செய்யும் பாவத்திற்கும் ஆண்டவனின் பெயரை உபயோகித்துக் கொள்கிறார்கள்.
நான் அள்ளி அள்ளி ஆண்டவனுக்கு அளித்தேன்… எல்லா ஆண்டவனுக்கும் பல நிலையில் பூஜை செய்கிறேன்… அந்த ஆண்டவனுக்குக் கண்ணில்லையா…? என்றெல்லாம்
1.இவர்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது
2.அந்த ஆண்டவனையே எதிரியாகவும் ஆக்கிவிடுகின்றார்கள்.
இவர்கள் எண்ணி ஏங்கும் பொருள் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் எந்தக் கோவிலுக்காவது சென்று வந்தால் அந்த நிலையிலிருந்து பொருள் வந்தவுடன் ஆண்டவனை… “எல்லாம் அவன் தான்…!” என்கிறார்கள்.
(ஆனால்) இவர்கள் மன நிலையில் இருந்து தான் அவ்வாண்டவனின் சக்தியே செயல்படுகிறது.
அந்தச் சூரிய சக்தியிலிருந்து இவர்கள் ஈர்க்கும் நிலையிலிருந்து தான் அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது என்ற உண்மையை இதைப் படிக்கும் அனைவரும் உணர்ந்து
1.அவரவர்கள் எண்ணத்திலிருந்து தான்…
2.அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது என்ற உண்மையை உணருங்கள்.
நம் சித்தர்கள் பல வழிகளில் பல உண்மைகளைச் செய்யுள்களின் (பாடல்கள்) வடிவில் மனிதர்களின் எண்ணத்திற்குப் பதியும்படி முதலிலேயே வெளியிட்டுள்ளார்கள்.
ஆட்டை வெட்டுபவனுக்கு… ஒவ்வொரு நாளும் பல ஆடுகளை அடித்து வியாபார நிலைக்கு அவன் அதை விற்கிறான். ஆட்டை வெட்டுபவனுக்குத் தான் பாவம்… உண்ணுபவனுக்கு அல்ல…! என்று எண்ணுகின்றோம்.
அவன் எதற்காக ஆட்டை அடிக்கின்றான்…?
அவன் எண்ணமெல்லாம் அவனுக்கு வேண்டிய பொருள் கிடைத்திடத்தான்…! அதைச் செய்கிறான். பாவ புண்ணியத்தை அவன் எண்ணத்தில் கொண்டு வருவதில்லை.
பாவ புண்ணியத்தை அவன் எண்ணி விட்டால் அவன் எண்ணத்திலேயே அது ஊன்றி.. அவன் அந்தத் தொழிலை ஒரு நாளும் செய்திட முடியாது.
பல தண்டனைகள் பெற்ற கைதிகளை ஒருவன் தூக்கிலிடுகின்றான். ஒரே நாளில் அவன் பலரைத் தூக்கிலிட்டாலும்.. அவனுக்கு அந்தப் பாவம் அண்டுவதில்லை.
அவன் பொருள் வாங்க அந்தப் பணியைச் செய்கிறான். தன் மேல் தவறை எண்ணும் பொழுது தான் அவனுக்கு அந்நிலை தோன்றிடும். அவன் தொழில் அது தான்; அவன் ஊதியத்தைப் பெறுகின்றான்; அவன் எண்ணமெல்லாம் அந்த ஊதியத்தின் மேல் தான் உள்ளது.
அவன் ஆத்மாவில் அவன் நல்ல நிலைகள் பெற்றிருந்தால் அவனை எந்தப் பாவ புண்ணியங்களும் அண்டுவதில்லை. அவன் நிலையும் உயர்ந்து நிற்கிறது.
1.பல பாவங்கள் செய்துவிட்டு
2.செய்த பாவங்களைத் தன் எண்ணத்திலேயே கலக்கவிட்டு
3.தன் சுவாச நிலையை மேலும் கடினமாக்கிக் கொண்டு
4.பல இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள் இன்றைய மனிதர்கள்.
இந்நிலையிலிருந்தெல்லாம் விடுபட்டு நம் உயிரணுவிற்கு ஊட்டம் தந்து அவ்வுயிரணுவிற்கு அழியாச் செல்வத்தைத் தேடத்தான் இந்தப் பாட நிலையை எடுத்து இயம்புகிறோம்.
1.உயிரணுவின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்
2.இனி வாழும் நாட்களை நல்ல நிலையில் வாழ்ந்திடுங்கள் என்பதற்கே இதை வெளியிடுகின்றோம்,
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
உதாரணமாக சில வருடங்களுக்கு முன் ஒருவன் நமக்குக் கெடுதல் செய்திருப்பான். அதனால் நம் குடும்பமே நஷ்டம் அடைந்திருக்கும். இல்லாததைச் சொல்லி இருப்பான்.
அவனைப் பார்த்தவுடன் கஷ்டமான நிலைகள் நமக்குள் ஏற்கனவே பதிவானது இழுத்து நம் ஆன்மாவில் வந்துவிடும்.
அப்பொழுது அவனை வெறுக்கும் நிலைகள் நமக்குள் உருவாக ஆரம்பித்துவிடும். சிறிது நாள் அதற்குச் சாப்பாடு இல்லாமல் இருந்தது. சாப்பாடு கிடைத்ததும் வீரியம் அடைய ஆரம்பித்துவிடும்.
மண்ணுக்குள், எத்தனையோ வித்துகள் மறைந்து இருக்கின்றது. சிறிது காலம் மழை இல்லையென்றால், வறண்டு போய்விடுகின்றது. ஒரு நாள் மழை பெய்துவிட்டால், தளதளவென்று வெளியில் வரத் தொடங்கி விடுகின்றது.
இதைப் போன்றுதான் பகைமை உணர்வுகள் அவன் செய்த தவறான நிலைகள் நமக்குள் பதிவானாலும் அவனைப் பார்த்தவுடனே அந்த இனத்தைத் தனக்குள் கவர்ந்து அதனின் செயலாகத் தனக்குள் ஆகாரம் தேட ஆரம்பித்துவிடும்.
அப்பொழுது…
1.நாம் இவ்வளவு தியானம் எடுக்கின்றோம்
2.அவனைப் பார்த்தவுடனே ஏன் கோபம் வருகின்றது…! என்று நினைப்போம்.
இந்த உணர்வு இங்கு வந்தபின் இரவு தூங்கினால் கெட்ட கனவாக வரும். அந்த வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது எப்படியெல்லாம் இருந்தோமோ நம் எண்ணத்திற்கு அவன் நினைவு வராது.
கெடுதல் செய்தவனைப் பார்த்து அந்த உணர்ச்சி நமக்குள் தூண்டப்பட்டாலும் அவன் உரு நமக்குள் நினைவிற்கு வராது.
1.அந்த நேரத்தில் மற்ற மனிதர்களிடத்தில் உருவான
2.கெடுதல் செய்த உணர்வின் தன்மை நமக்கு எதிரில் இருந்தால், அது வந்துவிடும்.
இரவில் தூங்கும் பொழுது யாரோ கெடுதல் செய்கின்ற மாதிரி இன்னொரு உரு நமக்குள் தெரியும். நாம் முன்பின் பார்த்திருக்க மாட்டோம். அந்த மனிதனின் உருவம் நமக்குள் தெரியும்.
அப்பொழுது நம்மை அறியாமலே இரவு வேளைகளில் தீமையின் உணர்வுகள் நம் தூக்கத்தைக் கெடுக்கும்.
நாம் இரவில் தூங்கும் பொழுது இந்த மாதிரி உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் “ஈஸ்வரா…” என்று உயிரை வேண்டி துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் இணைத்து அதைப் பெற வேண்டும் என்று எண்ணி உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்.
அதைச் செலுத்தியவுடன் தன்னை அறியாமலே தூக்கம் வரும்.
1.எந்தெந்த வகையில் தீமைகள் வந்தாலும் இப்படி நாம் எடுத்துக் கொண்டால்தான நமக்குள் தூய்மைப்படுத்த முடியுமே தவிர
2.ஒரேடியாக ஜெபமிருந்து ஆண்டவன் அருளைப் பெறுவேன் என்று சொன்னால் நடக்காது.
ஒவ்வொரு நிமிடத்திலும் உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டே இருக்கும். அவ்வப்பொழுது அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வை எடுத்து இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும்.
2.இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும்.
3.அப்படி அடக்கிக் கொண்டே வந்தோமென்றால் அது அப்படியே உறைந்துவிடும்.
4.எல்லா உணர்வுகளிலும் அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
இப்படி மனிதன் அடக்கிய நிலைகள்தான் இந்த பூமியில் எத்தனையோ விதமான விஷங்கள் கோபங்கள், வெறுப்புகள் இவைகளை எல்லாம் அடக்கினான்.
அவ்வாறு அடக்கி அவனுடைய வாழ்க்கையில் செய்யும் முறைகள் இப்படி அந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டு வரும் பொழுது பேரானந்தப் பெரும் செல்வம் நமக்குக் கிடைக்கின்றது.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் இணைத்துப் பழக வேண்டும். இல்லையென்றால்… நான் எல்லாம் செய்கின்றேன்… ஆனால் உலகில் எங்கு திரும்பிப் பார்த்தாலும் இப்படித்தான் இருக்கும் என்று இதற்கு வலு கொடுத்து விடுகின்றோம்.
அப்பொழுது நாம் போகும் பாதையில் புவியின் ஈர்ப்பிற்கு வந்து விடுகின்றோம்.
1.எது எப்படி இருந்தாலும் எவ்வளவு கடுமையான நிலைகளை நாம் பார்த்துணர்ந்தாலும்
2.ஒவ்வொரு நொடியிலும் ஆத்ம சுத்தி என்ற நிலையை நம் ஆன்மாவில் கலக்கும் நிலையை
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்து, தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
இதுதான் ஆத்மசுத்தி என்பது. இதை முறைப்படி நம் வாழ்க்கையில் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
காற்று பலமாக அடிக்கும் பொழுது தூசி வருகின்றது. அதிகமாகத் தூசி வரும்போது ஒதுங்கிக் கொள்கின்றோம்.
இதே மாதிரி…
1.தீமையான உணர்வு வரும் பொழுது அந்த எண்ணத்தில் இருந்து விலகி நிற்க
2.அந்த மகரிஷிகளின் உணர்வை ஆதாரமாக வைத்து
3.இதிலிருந்து சிறிது நேரமாவது விலகி நிற்க வேண்டும்.
மனிதர்களான நாம் எந்தத் துன்பத்தையும் போக்க முடியும்
மனிதனாகத் தோன்றிய நாம் அனைவரும் பரசுராம்… சமப்படுத்தும் சக்தி பெற்றவர்கள். உதாரணமாக காய்கறிகளை நாம் வேக வைக்கின்றோம்… பல பொருள்களைச் சேர்த்துச் சுவையாக உருவாக்குகின்றோம்.
அதே போன்று பலராம்…! பலருடைய எண்ணங்களை நாம் கேட்டு நுகர்கின்றோம். ஆனாலும் அதிலே வரும் தீமைகள் விளையாது அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் கலக்கச் செய்ய வேண்டும்…. கலந்து விட்டால் தீமைகளை அது வேக வைத்துவிடும்.
மகரிஷிகள் என்பவர்கள் எத்தகையை நஞ்சையும் அடக்கி ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள். அவர்களின் உணர்வுகளை எடுக்கப்படும் போது அந்த ஒளியான உணர்வுகள் உடலில் விளையத் தொடங்குகின்றது.
1.நம்மை அறியாது வரும் தீமைகளைத் தடைப்படுத்த இதை அவசியம் செயல்படுத்த வேண்டும்.
2.சிறிது நாள் பழகிக் கொண்டால் போதும். பிறகு நீங்கள் சொல்ல வேண்டாம்… அது தன்னாலே வரும்… சொல்ல வைக்கும்…!
3.இதற்கு முன்னாடி ஐய்யய்யோ… அம்மம்மா…! என்று சொல்வீர்கள்
4.இப்பொழுது ஈஸ்வரா… என்ற சொல் வரும். உயிரையும் நினைக்க வரும்
5.உயிரோடு ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால்
6.உங்களுக்குள் அது சக்திவாய்ந்ததாக உருவாகிறது.
ஆனால் ஈஸ்வரா… என்று வேதனை கலந்த உணர்வை எடுக்கக் கூடாது. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை இணைத்துப் பழக வேண்டும்.
1.இதன் படி செய்தால் எந்தத் துன்பத்தையும் நீக்க முடியும்.
2.உங்கள் சொல்லால் பிறருடைய துன்பத்தையும் போக்க முடியும்.
3.துன்பத்தை போக்கும் உணர்வுகள் உங்களிலே விளைகின்றது.
துன்பத்தைக் கண்டுணரும் பொழுது துன்பத்தை விளைவிக்கும் அணுக்கள் விளைகின்றது. அப்பொழுதெல்லாம் துன்பத்தை அகற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை இணைத்தால் துன்பத்தை அடக்கும் சக்தியாக வருகின்றது.
1.கொஞ்சம் நாம் இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.
2.தியானம் என்பது இதுதான்…!
யாரோ செய்வார்… எவரோ செய்வார்… என்று எண்ணாதபடி தீமையை நீக்கிய அருள் உணர்வுகளை இப்படி வளர்த்துக் கொண்டால் நமது உயிரில் எதனை வலுப்படுத்திக் கொண்டோமோ அந்த மகரிஷிகள் வாழும் எல்லைக்கே நம்மை அழைத்துச் செல்லும்.
ஏனென்றால் கண்ணின் நினைவு கொண்டு எதனைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதன் வலிமை தான் நமக்குள் சேர்க்கின்றது.
வான மண்டலத்தை எண்ணும் பொழுது நினைவு மகரிஷிகள் பால்தான் செல்கின்றது. அந்த உணர்வின் தன்மை ஆகும் போது கூர்மை அவதாரம்.
கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கின்றான் என்று காட்டுகின்றார்கள்.
ஒருவன் கடுமையாக வேதனைப்படுகிறான் என்று உற்றுப் பார்த்துப் பதிவாக்கினால் அந்த உணர்வுகள் சாரதியாக வருகின்றது. அந்த வேதனையான உணர்வுகளை நமக்குள் சேர்ப்பிக்கின்றது.
ஆனால் அதைத் தடுக்க அந்த அருள் ஞானிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தால் அது அர்ச்சுனனாகி வலிமை ஆகின்றது.
1.நம் கண்கள் அங்கே அந்த மகரிஷிகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கின்றது.
2.வலுவாக எண்ணி நாம் எடுக்கும் இந்த உணர்வின் பிரகாரம்
3.உயிர் நம்மை அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்லும்.
வேதனைப்பட்டே வாழ்வது நல்லதா… அல்லது அதிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணி வாழ்வது நல்லதா…? – ஈஸ்வரபட்டர்
எண்ணத்திலும் செயலிலும் வார்த்தையிலும் “உயர்வு… தாழ்வு…” என்ற எண்ணம் தான் மனிதர்களின் மனதிலே ஊன்றியுள்ளது.
உயர்வு எனும் பொழுது நம் உடலுக்கு… நம் உயிருக்கு.. அழியாச் செல்வம் என்ற உயர்ந்த நிலை நாம் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் தான் நம் எண்ணத்தில் ஊன்றி நிலைத்திட வேண்டுமப்பா…!
1.உடல் வாழ்க்கையில் இந்த உலகிலே சேர்த்திடும் சொத்து சுகத்தைத்தான் நாம் எண்ணி வாழ்கின்றோம்.
2.அழியாச் செல்வத்தை நாம் எண்ணுவதில்லை.
3.தூல சரீரத்தைத்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்… சூட்சம சரீரத்தை எண்ணுவதில்லை.
மனிதர்களின் எண்ணமும் செயலும் இன்னும் ஒரு நிலைப்படாமல் இந்தச் சரீர நிலையை எண்ணிக் கொண்டே தான் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
1.வாழும் நாள் எல்லாம்…
2.மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாம் மனதைத் தந்து விட்டால்
3.நம் மன நிலையில் பல சோர்வுகளை அடைந்து பல தீய அணுக்களின் செயல்களுக்கு நாம் உட்பட்டு
4.நம்மையே… நம் சுவாச நிலையையே… கெடுத்துக் கொள்கின்றோம்.
தீய எண்ணத்தை வளரவிட்டு அதையே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் தீய அணுக்களின் வேலை துரிதப்படுகின்றது.
அந்த நிலையில் நம் உயிரணுவிற்குப் பெரும் சோர்வைத்தான் நாம் அளிக்கின்றோம். அதையே வளர விட்டால் நம் சுவாச நிலையும் மாறுபட்டு… இன்னும் பல தீய அணுக்களைத்தான் நாம் மேலும் மேலும் பெறுகின்றோம்.
இதையெல்லாம் அறிந்து நம் உயிரணுவிற்கு நாம் பெறும் அழியாச் செல்வமான “ஆத்ம ஜோதி” என்ற நிலையைப் பெற ஈஸ்வர தியானங்கள் பெற்று அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பல அரிய பொக்கிஷங்களை நம் உயிரணுவிற்குச் சேமித்து வைக்க வேண்டும்.
இந்த உடலில் உள்ள பொழுதே மனிதனாகப் பிறந்த இந்தப் பாக்கியத்தை
1.ஞானச் சரீரத்திற்கு… அந்த ஞான நிலை பெற…
2.நம் ஆத்மாவிற்கு அழியா நிலை பெற…
3.நம் எண்ணத்திலும் செயலிலும் நல்ல உணர்வுகளையே என்றும் நாம் சுவாச நிலையில் எடுத்துக் கொண்டால்
5.நம் உயிர் நிலை ஊட்டம் பெறுகின்றது,
ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
வாழ்க்கையில் நமக்குத் துன்பம் என்ற நிலைகள் எப்போது வருகிறதோ…
1.அந்தத் துன்பத்தை மனதார நாம் ஏற்றுக் கொண்டு
2.இந்த இன்பத்திற்குண்டான வழியை அந்த மெய் ஞானியின் அருள் ஒளியை நாம் ஏற்றுக் கொண்டு
3.அந்தத் துன்பத்தை நீக்கும் முயற்சியை எடுப்பதற்கு
4.இந்தச் சந்தர்ப்பத்தை எடுத்துத் தியானமும் ஆத்ம சுத்தியும் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
“ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரான ஈசனை எண்ணிப் புருவ மத்தியில் நினைவினைச் செலுத்தி விண்ணிலிருந்து நம் பூமிக்குள் வந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று உடலுக்குள் கண்ணின் நினைவினை ஒரு இரண்டு நிமிடமாவது செலுத்த வேண்டும்.
இதுவே ஆத்ம சுத்தி…!
ஆத்ம சுத்தியை இவ்வாறு எடுக்கப்படும் பொழுது வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை நீக்கி மனிதனாகப் பெற்ற புனிதத் தன்மையை நாம் பெறுகின்றோம்.
சந்தர்ப்பவசத்தால் எல்லை கடந்த துன்பங்கள் வரப்படும் பொழுது நாம் ஏங்கியிருக்கக்கூடிய நிலைகள் நம்மை மறந்து… துன்பத்தை மறந்து… மெய் ஒளியின் தன்மை பெற வேண்டுமென்று தியானத்தின் வழி நாம் கூட்டும் இந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கப்படும்போது விண்ணின் ஆற்றலை நாம் பெறமுடியும்.
நாள் முழுவதும் உடலுக்காக வேண்டி நாம் பாடுபட்டு உழைத்தாலும் மெய் ஒளி பெறும் அந்தச் சந்தர்ப்பத்தை ஒவ்வொரு நாளும் ஒரு 15 நிமிடமாவது மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று தியானித்து அந்த ஆற்றல் மிக்க சக்தியைக் கூட்டிக் கொள்வோம்.
ஆகவே நமது வாழ்க்கையிலே நாம் சாதாரண மனிதனுக்குள் பழக்கப்பட்டுப் பழகி வரப்படும் பொழுது எதிர்பாராத சலிப்போ, சஞ்சலமோ, பயமோ, ஆத்திரமோ, கோபமோ, வேதனையோ இதைப் போன்ற உணர்ச்சிகள் தூண்டும் பொழுதெல்லாம் அடுத்த கணம் நாம் ஆத்ம சுத்தி செய்து நம் உடலில் வரக்கூடிய துன்பங்களைத் துடைக்க வேண்டும்.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அதிகமான துன்பம் ஏற்படும் சமயத்தில் ஆத்ம சுத்தி மூலம் விண்ணின் ஆற்றலை அதீதமாகப் பெற முடியும்.
ஒரே எண்ணத்தில் இருப்பதும்… தன்னை மறந்து இருப்பதும் தான் தியானம்…! என்று எண்ணுகின்றனர் – ஈஸ்வரபட்டர்
தியான நிலை என்றால் என்ன…? என்று தெரியாமலே பல தியான முறைகளை நாம் எல்லோருமே கையாளுகின்றோம்.
1.தியானத்தில் எப்படி அமர்வது…?
2.சுவாச நிலையை எப்படி ஒருநிலைப்படுத்துவது…?
3.தன்னை மறந்து அமரும் நிலை தான் தியான நிலை என்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
4.தியானத்தில் அமர்ந்த பின் எண்ணத்தில் சிதறல்கள் வரும் பொழுதெல்லாம் அந்த எண்ணத்திலேயே ஊன்றிடாமல் எப்படி இருப்பது…? என்ற எண்ணத்திலும் உள்ளார்கள் பலர்.
இப்படிப் பல நிலைகளைச் சொல்லி உள்ளதால் தனக்கு எது உகந்தது…? எதை எடுத்துக் கொள்ளலாம்…? என்ற எண்ணத்திலேயே இன்னும் பலர் இருக்கிறார்கள்.
வாழ்ந்திடும் காலம் எல்லாம்… வாழ்க்கை வாழ்ந்து விட்டு
1.தன் வயதான காலத்தில்தான் ஜெப நிலையில் இருக்க வேண்டும்…
2.என் மனம் இன்னும் ஒருநிலைப்படவில்லை…! என்றெல்லாம் இன்றையப் பெரியவர்கள் பலர் உள்ளார்கள்.
ஜெபம் என்றால் என்னப்பா…? ஜெபித்திடும் பொருள் என்னப்பா…?
என் (ஈஸ்வரபட்டர்) வழியில் ஜெபம் என்பதெல்லாம் நம் ஜெபத்துடனே கலந்து
1.நம் நினைவிலும்…
2.கனவிலும்…
3.எந்த நிலையிலும்..
4.எந்த நிலை எனும் பொழுது – நம் வாழ்க்கை நிலையிலும் நாம் செய்யும் வேலை நேரத்திலும்
5.நம்முடனே அந்த ஆண்டவன் உள்ளான் என்ற எண்ணத்தில்…
6.அதாவது அந்த எண்ணம் மட்டும் அல்ல… “இருக்கிறான்…!” என்ற எண்ணத்தில்
7.ஒரே நிலையில் நாம் எண்ணிக் கொண்டே இருந்தால் அதுதானப்பா நமக்குகந்த ஜெபம்.
பூஜை செய்வது… கோவிலுக்குச் செல்வது… இவை எல்லாம் நம் மனதை அமைதிப்படுத்த வேறு நிலையிலிருந்து நம் எண்ணத்தை அந்த ஆண்டவனையே நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்காகத்தான்…!
ஜெப நிலையில் நீங்கள் இருக்கும் பொழுது உங்கள் எண்ணத்தை ஈர்க்கும் நிலை அந்தச் சித்தர்களின் நிலைக்கு வருகிறதப்பா..! அந்நிலையில் அவர்களுடைய பரிபூரண ஆசிகளைப் பெறுகின்றீர்கள்.
ஜெப நிலையில் இருக்கும் பொழுது நாம் விடும் மூச்சும் நல் மூச்சாக வெளிப்படும். எண்ண அலைகள் மற்ற அணுக்களுடைய நிலைகள் உயர்ந்த அணுக்களுடைய நிலைகள் நம்முடைய மூச்சிலும் கலக்கப்படுகிறது. நல்ல அணுக்களாகக் கிடைக்கப் பெறுகின்றது.
அந்நிலையில் சிறுகச் சிறுக நாம் ஈர்க்கும் மூச்சில் நம்முடைய உயிரில் அது சேர்க்கப்படுகின்றது. அது சிறுகச் சிறுக அந்த உணர்வுகள் சேர்க்கப்பட்டவுடன் நம் உயிர் நிலை உயர்ந்த சக்திகளைப் பெறுகின்றது.
அந்நிலையில் உயர்ந்த சுவாச நிலைகள் நம் உயிரணுவிற்கு உயிருக்கு ஊட்டமாகக் கிடைக்கப் பெறுகின்றது.
இந்நிலையில் அந்த உயிருக்கு நாம் பெற்ற சக்தி அந்த ஆத்மாவிற்கு ஊட்டமளித்திருப்பதனால் எந்தத் தீய அணுக்களும் தீய சொற்களும் நம்மை வந்து அணுகாது.
1.நம் சுவாச நிலையிலேயே நம் ஜெப நிலையில் இவ்வருளைப் பெற்றிருப்பதனால்
2.ஆயிரம் அணுகுண்டுகளைப் போட்டாலும் அதலபாதாளத்தில் நம்மை அடைத்து வைத்திருந்தாலும்
3.சுவாச நிலையில் நாம் இந்நிலை பெற்றிருக்கும் பொழுது எந்தத் தீய சக்திகளும் நம்மை வந்து தாக்கிடாது.
இந்த நிலை பெறத்தான் இந்தப் பாட நிலை எல்லாமே…!
ஒவ்வொருவரும் இதில் உள்ள உண்மையை உணர்ந்து உருவமில்லா ஆண்டவனை எண்ணிக் கொண்டே பல கோடி ஜெபங்களை ஜெபித்துப் பல மந்திரங்களைச் சொல்லி கால நிலையைக் கடத்திடாமல்
1.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று புருவ மத்தியில் உயிரான ஈசனை எண்ணி
2.விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தியானத்தின் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.
தியானத்தில் இருக்கும் பொழுது உங்கள் ஜெபத்தில் பல நறுமணங்கள் கூடும் உங்கள் ஜெபத்திற்கு அருளை அளித்திடுவார் அவ்வீஸ்வரர்.
நாம் நம் ஆத்மாவிற்கு நல்ல மணங்களை அளித்துத்தான் ஊட்ட நிலையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
இயற்கையே மாற்றியமைத்துக் கொண்டு தனக்குள் இந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொள்ளும் சக்தி இந்த மனிதனுக்குத்தான் உண்டு. நாம் எந்த மெய் உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ… அதனின் நிலைகளில் நாம் வளர்ந்து விடலாம்.
நீங்கள் வளர வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் வளருகின்றேன். நீங்களும் இதைப் போன்று எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்… நீங்கள் நிச்சயம் வளர்கிறீர்கள்.
இந்தத் தியானத்தின் மூலம் எடுத்துக் கொண்ட மகரிஷிகளின் உணர்வுகளை எல்லோருக்கும் பாய்ச்சப்படும் பொழுது நிச்சயம் நாம் அந்த நிலைகளைப் பெறுகின்றோம்.
நான் இப்படி நினைத்தேனே…! ஆனால் இன்று இப்படித் துன்பங்கள் வந்துவிட்டதே என்று இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இல்லை.
நமக்கு உடல் முக்கியமாக வேண்டும். ஆனால் இந்த உடலுக்குள் இருக்கப்படும் பொழுதே நாம் எதைச் செய்ய வேண்டும்? எதை நாம் கழிக்க வேண்டும்? எதை நாம் கூட்டவேண்டும்? என்பது தான் முறை.
இந்த உடல் நமக்கு என்றும் சதமில்லை.
இந்த உடலை விட்டு உயிராத்மா சென்று விட்டால் இந்த உடலில் நாம் எந்த வினையைச் சேர்த்து கொண்டோமோ இந்த வினையின் உணர்வுகள் உயிருடன் ஒன்றி அதை இயக்கியே தீரும்.
உடல் மீது பற்று கொண்டால் வேதனையை உருவாக்கும். இந்த நிலையில் இருந்து நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும பத்தாவது நிலையான “கல்கி..” என்ற நிலையை அடைய வேண்டும்.
சூரியனை விட்டுப் பூமி விலகிச் சென்றால் பனிப் பாறைகளாகிவிடும். நாம் இதற்குள் சிக்கிவிடாதபடி இப்பொழுது இருக்கும் குறைந்த காலத்திலேயே நம்முடைய எண்ணத்தை அந்த மகரிஷிகளின் எண்ண உணர்வுடன் இணைக்கச் செய்ய வேண்டும்.
இந்த உடலை விட்டு நாம் சென்றால் அந்த விண்ணுலகம் சென்று என்றும் அழியா ஒளிச் சரீரமாக பெரு வீடு பெரு நிலையான அந்த நிலையை நாம் அடைய வேண்டும்.
அந்த எண்ணத்தை வலுவாக வைத்து இதை நீங்கள் செய்து பாருங்கள். உங்கள் வாழ்விலே தெய்வீக நிலையாக மலர முடியும்.
அருள் ஞானம் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் வருவோருக்கு ஞானிகளின் உரச்சத்தை ஏற்றிக் கொடுக்கின்றேன்
ஆரம்பத்தில் குருநாதர் காட்டிய வழியில் பாதரசத்தையும் பச்சிலை மூலிகைகளையும் வைத்துச் சில மணிகளைத் தயார் செய்தேன் (ஞானகுரு). அதை வைத்துச் சில சக்திகளை எடுக்கும்படியும் சொல்லியிருந்தேன்.
ஏனென்றால்… அந்த அருள் சக்திகளை எடுத்து உடலிலே ஒவ்வொரு மணியாக எடுத்து இறுக்கிக் கொண்டு வரவேண்டும்.
1.அப்படி வளர்த்துக் கொண்டால் நட்சத்திரமாக முழுமையடையும்.
2.ஆண் பெண் என்ற நிலையில் (கணவன் மனைவி) அருள் உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்.
இதை எல்லாம் தெளிவாக அறிவதற்குத் தான் காடுகளுக்கு அழைத்துச் சென்றார் குருநாதர்.
தாவரங்களின் இலைகளைப் பார்த்தோமென்றால் ஒரே செடியாகத் தான் தெரியும். ஆனாலும் அதிலே ஆண் செடி பெண் செடி என்று இருக்கும்
1.அதிலிருந்து ரசத்தை எடுக்க வேண்டும்… அதைச் சேர்த்தால்தான் இணையும்
2.இல்லாமல் போனால் அதைச் சேர்க்க முடியாது.
3.மருந்து வகைகளை எடுத்துக் கொண்டால் ஆண் செடி பெண் செடி என்று சேர்த்தால் தான் அந்தக் கரு உருவாகும்.
4.அப்படி உருவானால் தான் அது மருந்துக்கு (மருத்துவத்திற்கு) உதவும்.
அதைத்தான் சித்தர்கள் காப்பு கட்டி வைத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள்… பல பொய்களைச் சொல்லி வைத்திருப்பார்.
மூகாம்பிகையில் நான் இருக்கும் பொழுது சில மணிகளைச் செய்து அங்கே கொடுத்துவிட்டு வந்தேன். இது எல்லாம் சூட்சும நிலைகள் கொண்டு அன்று செயல்படுத்தியது.
பல இடங்களுக்கும் சென்று குருநாதர் கொடுத்த சக்தியைச் சரியா… தவறா…? என்று அவர் சொன்ன முறைப்படுத்தித்தான் செயல்படுத்தியது.
1.இந்த உண்மைகளை எல்லாம் நீ தெரிந்து கொள்ள வேண்டும்.
2.இதைத் தெரிந்து கொள்ளாதபடி எங்கேயும் வெளி விடாதே…! என்று சொல்லி விட்டார்.
அதை எடுத்து எல்லா இடங்களும் சுற்றி அறிந்த பிற்பாடு அந்த ஞானிகளின் சக்திகளை ஒவ்வொருவருக்கும் எப்படிக் கிடைக்கச் செய்ய வேண்டும்…? என்று தெரிந்து கொண்டு அதன் வழிகளிலே இப்போது கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
என்னை மற்றவர்கள் போற்ற வேண்டும் என்றால் நான் எதை வேண்டுமானாலும் செய்யலாம். பார்த்தீர்கள் என்றால் அடேயப்பா… சாமி எவ்வளவு பெரியவர்…! என்று கூட்டங்கள் அதிகமாக வரும்.
ஆனால் அந்தக் கூட்டம் எதற்கு வரும்…?
இப்பொழுதும் சில கூட்டங்கள் வரத்தான் செய்கிறது அந்த கூட்டங்களை நான் கழித்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.
1.உண்மையான நிலைகள் ஞானத்தின் வழித்தொடரைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் வருபவர்கள் தங்கியிருப்பார்கள்
2.இந்த உடல் இச்சைக்கு என்று கேட்டு வருபவர்கள் கொஞ்சம் குறைத்தே தான் இருக்கும்
ஆனால் இந்த அருள் ஞான வழியில் வருபவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஞானிகளின் உரச்சத்தை ஏற்றி வளர்த்துக் கொண்டே இருப்பேன்
முழுமையாக உடலுக்கு வேண்டும் என்றும் இந்த வாழ்க்கைக்குத் தான் வேண்டும் என்று வருபவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நான் கழித்து விடுவேன்.
ஆனால் உடலை வைத்துத் தான் நாம் அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும். அருள் ஞானத்தைப் பெற வேண்டும்.
நீங்கள் வளர்ந்தீர்கள் என்றால் மற்றவர்களும் அதைப் பெறக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கின்றது நீங்கள் வளர்ந்தால் தானே…!
1.நான் ஒருவன் வளர்ந்து என்ன செய்ய முடியும்…?
2.என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது…!
நான் நினைக்கலாம் யானையைச் செய்வேன்… பூனையைச் செய்வேன்… என்று. அப்படி எல்லாம் சொன்னால் அது வெறும் திமிர் தான். அப்படி ஒன்றும் செய்ய முடியாது.
ஒரு நெல்லை எடுத்து விதைத்துப் பல நெல்களாக உருவாக்கி அந்த அருள் உணர்வின் தன்மையை எடுத்துச் சமப்படுத்த வேண்டும். அந்த உணர்வின் வலுவைக் கொடுத்து எல்லோரையும் பெறச் செய்ய முடியும்.
1.குரு கொடுத்து அது தான்…!
2.அதைத்தான் உங்களையும் செய்யச் சொல்கின்றேன்.
நான் அதைச் செய்தேன்… என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டால் பிறகு நானும் அந்த வளர்ச்சிக்குப் போக முடியாது… தீர்ந்துவிடும். ஆகையினால் நான் வளர வேண்டும் என்றால் நீங்கள் வளர வேண்டும் என்று நான் நினைக்க வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்… உங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்… என்ற இந்த எண்ணம் என்றைக்கு நான் கொள்கின்றேனோ
நீங்களும் வளர்கிறீர்கள்…
நானும் வளர்கின்றேன்…
உலகத்தையும் வளர்க்க முடிகின்றது…
நானும் அந்த வளர்ச்சிக்குச் செல்ல முடிகின்றது.
கவலையிலிருந்து மீள வேண்டும் என்பது போல் அதி சந்தோஷத்திலிருந்தும் மீள வேண்டும் – ஈஸ்வரபட்டர்
மனித உடலில்.. இந்த மனித ஜென்மத்தில்.. பல தவறுகளையும் பாவங்களையும் நடைமுறையில் நாம் எல்லோருமே செய்கின்றோம்.
1.அந்தத் தவறைத் தவறு என்று உணர்ந்து கொண்டு
2.“தவறு செய்யாதவர்கள்” யாருமே இருக்க முடியாதப்பா…!
அந்தத் தவறிலிருந்து விடுபட்டு தன் நிலை என்ன..? தான் யார்..? என்ற எண்ணத்துடன் பல நல்ல உணர்வுகளை நற்காரியங்களை எடுத்துக் கொண்டு
1.நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரே எண்ணத்துடன் உயிரான ஈஸ்வரனை எண்ணும் பொழுது
2.நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்கு.. அச்சக்திதான் ஒரு நிலையில் ஊட்டம் பெறுகிறது,
“அந்த நிலையிலேயே நாம் என்றும் இருந்து கொண்டிருந்தால்…” நம் வாழ்க்கை முறையில் பல இன்னல்களும் பல இன்பங்களும் வந்து மோதும் பொழுதும் நம் உயிர் நிலைக்கு… நம் ஆத்மாவிற்கு… இவை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாதப்பா..!
ஒரு மனிதனுக்குக் கஷ்டங்கள் கவலைகள் வந்திடும் பொழுது அவற்றிலிருந்து நாம் எப்படி மீண்டு… நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரு நிலைப்படுத்திட வேண்டும் என்று சொல்கின்றோமோ அப்படித்தான் இன்பத்திலிருந்தும்… அதி சந்தோஷத்திலிருந்தும்… மீண்டு வர வேண்டுமப்பா…!
1.கவலையிலிருந்து மீண்டு வந்தால் எல்லாமே தீர்ந்தது…! என்று எண்ணிவிட வேண்டாமப்பா..!
2.நாம் எப்படிக் கவலையிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதே போலத்தான்
3.அதி சந்தோஷத்தையும் நம்முள் ஏற்றுக் கொள்ளாமல் மீள வேண்டுமப்பா…!
இன்றைய மனிதர்கள் எல்லோருமே மனித வாழ்க்கையில் உள்ள கஷ்ட நஷ்டங்களில் கவலையிலிருந்து மீண்டு சந்தோஷ நிலைக்குச் செல்ல வேண்டும்…! என்று தான் விரும்புகின்றார்கள்.
1.இதிலிருந்து மீண்டு அதற்குச் செல்லும் பொழுது
2.அவ்வெண்ணமும் அந்தச் சுவாச நிலையும் மாறுபட்டு
3.நம் ஆத்ம நிலைக்கே அது பெரும் தீங்காகிறதப்பா…!
இந்த நிலையிலிருந்து மக்கள் மீண்டு ஒரு வழிக்குக் கொண்டு வரத்தான் அன்றைய ஞானிகளும் ரிஷிகளும் ஆண்டவனின் ரூபத்தை வைத்துப் பல நூல்களை வடித்தார்கள் “மனிதர்கள் மனதில் பதியும்படி…!”
மனிதர்கள் எண்ணத்தில் சுவாசத்தில் என்றுமே ஒருநிலைப்படுத்தி அவ்வுயிரணுவிற்கு ஊட்டம் சேர்த்துக் கொண்டால் அவர்கள் இருக்கும் ஜெப நிலையிலிருந்து பல உன்னத நிலைகளை அடையலாம்.
1.எண்ணத்திலும் சுவாசத்திலும் தானப்பா நம் ஆத்மாவிற்கு நாம் சேர்த்திடும் சொத்தெல்லாம் உள்ளதப்பா…!
2.பல ரிஷிகளும் ஞானிகளும் பெற்ற நிலையெல்லாம் அது தானப்பா…!
மனித வாழ்க்கையில் வந்திடும் பல இன்னல்கள் இன்பங்கள் எல்லாவற்றையும்
1.மனிதன் தன் எண்ணத்திலும் செயலிலும் எற்றுக் கொள்ளாமல்
2.பிறரின் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் தன் மனதைக் கலங்கவிடாமல் என்றும் ஒரே நிலையில் இருந்து
3.தன் எண்ணத்தில் வந்து மோதிடும் பல அபிலாஷைகளுக்கு அடிமையாகாமல் அதிலிருந்து மீண்டு
4.தன் சுவாச நிலையில் “ஒரு நிலை எய்தி வாழ்ந்திட வேண்டுமப்பா…!”
அது தான் நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் சொத்து…!
புள்ளி விபரம் வைத்துப் பல கணக்குகள் போட்டு நட்சத்திர மண்டலக் கணக்குகளை எல்லாம் மனிதர்களுக்குப் புகட்டிட விஞ்ஞானிகள் பல நாட்கள் தன் அறிவையும் நேரத்தையும் செலவழித்து மக்களுக்குப் புகட்டுகிறார்கள்.
இதிலெல்லாம் பெறும் இலாபம் என்னப்பா…! அதனால் மனித ஆத்மாவிற்குப் பயன் என்னப்பா…?
ஆத்மாவிற்கு எந்த நிலையை நாம் தேடிக் கொள்ள வேண்டும்…? என்ற எண்ணம் மனிதனுக்கு வந்துவிட்டால்
1.அவன் ஆத்ம நிலையில் இருந்து கொண்டே அறிந்திடலாம்
2.அகண்ட அண்டத்தில் உள்ள பல கோடி உண்மைகளை…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
இங்கே கற்றுக் கொண்ட நிலைகள் நம் குடும்ப வாழ்க்கையிலும் சரி… நம் எதிரியாக இருந்தாலும் சரி… நம் சொல்லின் நிலைகள் அங்கே இனிமைப்படுத்த வேண்டும்.
மற்றவர்கள் காரமான நிலைகளில் பேசினாலும்
1.நாம் எடுத்துக் கொண்ட தியானத்தின் பலன்
2.பிறர் காரமாகப் பேசக்கூடிய உணர்வுகளைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலாகப் பெற வேண்டும்.
இதை ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள் ஆற்றல் பெறுவதற்கு சதா நீங்கள் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை எடுத்து உங்கள் உயிரை ஈசனாக மதித்துப் பழகுங்கள்.
1.கோவிலிலே அந்த ஈசனுக்குப் பாலாபிஷகம் செய்வது போன்று
2.உங்கள் உயிரான ஈசனுக்கு அந்த மெய் ஞானியின் அருள் சக்தியான நிலைகளை
3.நீங்கள் சுவாசித்து அபிஷேகிக்க வேண்டும்.
அந்த மெய் ஞானிகளின் உணர்வின் மணங்கள் உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து அந்த அபிஷேகத்தை யாம் செய்து கொண்டே இருக்கின்றோம் (ஞானகுரு).
ஆகையினாலே ஒவ்வொரு நிமிடமும் இந்த ஆத்ம சுத்தியைச் செய்து அங்கே உங்கள் உயிரான நிலைகளுக்கு அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசித்து உங்களுக்குள் மகிச்சியை உருவாக்குங்கள்.
ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நாம் எடுத்துப் பிறருக்குச் சொன்னாலும் அவர் உடலில் இருக்கக்கூடிய உயிரான ஈசனிடம் நாம் வெளிப்படுத்தும் இந்த உணர்வுகளை அவர்கள் சுவாசித்து ஒலிகள் மூலம் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் தூண்டப்படுகின்றது.
நாம் பேசிய உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் நிலைகள் அந்த உடலை இயக்கச் செய்து நம்மைப் பக்குவப்படுத்துவதோ நம்மை சொல்லச் செய்வதோ இதைப் போன்ற நிலைகள் ஏற்படுகின்றது.
ஆகையினாலே இதையெல்லாம் கண்டுணர்ந்த நாம் ஒவ்வொரு நிமிடமும் இதைப் பாச அணைப்புடன் செயல்படுத்த வேண்டும்.
ஒரு குழந்தை தவறு செய்தாலும் பாசத்துடன் அணைத்துக் கொள்கின்றோம் அல்லவா…! உடலிலே வேதனையாகும் பொழுது நமக்குள் ஒரு அசுத்தம் பட்டு விட்டால் அசுத்தம் என்ற நிலைகளை எண்ணாதபடி அதைத் துடைக்க முற்படுகின்றோமல்லவா…!
அதைப் போன்று
1.பிறருடைய எண்ணங்களில் அசுத்த சொற்கள் வந்தாலும்
2.எண்ணத்தாலே துடைக்கும் பக்குவத்தை நாம் பெறுதல் வேண்டும்.
கதைகளிலும் காவியங்களிலும் வடித்த உருவம் தான் கடவுள்..! என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் – ஈஸ்வரபட்டர்
இன்றைய மக்களுக்கு… நன்மை தீமைகளை வழி வகுத்துச் சென்றிட… புரியாத நிலைகளில் தான் இன்றைய மதங்களும் மக்களும் உள்ளார்கள்.
ஆதியில் இருந்து…
1.இம் மனித ஆரம்ப காலத்திலிருந்தே… உதயத்திலிருந்தே வந்த பல சித்தர்கள் கொடுத்த உண்மை நிலைகளை எல்லாம்
2.அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி பிரித்தும் சேர்த்தும் சிதற விட்டுவிட்டார்கள்.
பல உண்மை நிலைகளை மதம் என்ற அடிப்படையில் உலகில் பல பாகங்களில் பல சித்தர்களால் வெளியிட்டதை
1.அந்தந்த நிலையில் உள்ள மக்களுக்குப் புரியும்படியாக வெளியிட்டதை
2.காலத்தின் செயலால் ஒரே அடிப்படையில் ஒவ்வொருவரும் தன் நிலைக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள்.
ஆனால் எல்லோரும் சொல்லும் அடிப்படைக் கருத்து நம் ஆத்மாவிற்கு நாம் சேமித்து வைத்திடும் நிலை என்ன…? என்ற ஒன்றே தான்.
அதை வைத்துத்தான் பலர் பல வழிகளில் பல கதைகளைக் கட்டி… உண்மை இரகசியத்தை எல்லாமே மக்களுக்கு உண்மையாகப் போதிக்காமல் கதை வடிவில் அதை வடித்து
1.கதையையே கடவுளாகக் காட்டி…
2.மக்களுக்குக் கடவுள் என்றாலே “கதையில் வடித்த உருவம் தான்…!” என்ற எண்ணம் வரும்படிச் செய்துவிட்டார்கள்.
எல்லா மக்களுமே தான் உயர வேண்டும்… உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்… என்ற எண்ணத்தைக் கொண்டு தான் வாழ்கின்றார்கள். ஆனாலும் அவ்வாழ்க்கையில் வரும் பேராசை நிலையில் தான் பல பாவங்களுக்கு உட்படுகின்றார்கள்.
நல்வழியில் நடத்திச் சென்றிடத்தான் அன்றையச் சித்தர்கள் பல அரும்பாடுபட்டுத் தவமிருந்து தான் பெற்ற சக்தி நிலைகளை மக்களுக்கு உணர்த்தினார்கள்.
இராமாவதாரத்தில் வந்த வான்மீகி முனிவரால் எழுதப்பட்ட இராமாயணக் காவியத்தையே அதில் உள்ள உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.
அதில் உள்ள குணா அம்சங்களை ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படிக் குணா அம்சங்கள் அமைகிறது…? என்ற தத்துவ உண்மைகளை உணர்த்திடாமல்
1.அந்தக் கதையையே தன் தன் நிலைக்கு உகந்தபடி மாற்றியும் மறுத்தும்
2.இது தான் உண்மை… இது எல்லாம் தவறு…! என்று சுட்டிக் காட்டும் நிலையில் அன்றே சிலர் திருத்திவிட்டார்கள்.
அன்று எழுதிய இராமரின் கதை தான் இன்றும் பல கோணங்களில் திரித்துச் சிதறடித்தாலும் அந்த இராமரின் கதையே தான் உலவிக் கொண்டுள்ளது.
இராமாயணத்தின் மகத்துவத்தை அதிலுள்ள உண்மை நிலைகளை உலகிலுள்ள மக்கள் எல்லோரும் புரிந்து கொண்டால் இன்று உலகில் நடந்திடும் இக்குழப்ப நிலைகளும்… மனிதனை மனிதன் ஏமாற்றி வாழும் நிலையும் இருந்திடாதப்பா…!
எல்லோரும் என்னும் பொழுது ஒரு நற்செயலைச் செய்பவரும் நல்ல காரியத்தைச் செய்பவர்களும் பல நல்ல நிலைகளை எல்லாம் இப்பொழுது மதங்களின் வழியில் தன் தன் மதத்திற்கு உகந்தபடி சிதறடித்து விட்டார்கள்.
1.ஒருவனே தேவன் ஒன்றே குலம்…
2.அத்தேவனில் இருந்து பிரிந்து வந்த பிம்பங்கள் தான்… நாம் எல்லோருமே…
3.எந்த மதத்திற்கும் யாரும் அடிமையில்லை…! என்ற சொல்லெல்லாம் இந்த மனிதனின் மனதிலும் ஏறவில்லை.
ஏட்டிற்கும் எழுத்திற்கும் தான் அது எல்லாம் இப்பொழுது உகந்ததாக உள்ளது.
ஆண்டவனையே… “தனக்கு மட்டும் தான் சொந்தம்…!” என்ற எண்ணத்தில் கோவில்களுக்குச் செல்பவர் தான் பலர் உள்ளனர் இன்றும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே மெய் ஒளியின் அருள் அந்த மகரிஷிகள் பெற்ற அருள் ஒளிகளைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
சாமியிடம் (ஞானகுரு) போனோம்… சாமி கொடுக்கவில்லை…! என்று குறையை எண்ணாதீர்கள். அந்த அருள் ஒளியை வளர்ப்போம்… அந்த அருள் ஒளியினுடைய நிலைகளில் ஒளி நிலை பெறுவோம். நாம் வாழ்க்கையில் வரக்கூடிய தீமையின் நிலைகளை நம் மூச்சாலே நம்மை அணுகாது பாதுகாப்போம் என்று உறுதி கொள்ளுங்கள்.
அந்த மெய் ஒளியின் நிலைகள் பெறப்படும் போது இருள் விலகும், அந்தப் பொருள் தெரியும். இருள் விலகிப் பொருள் காணும் போது வாழ்க்கையிலும் நீங்கள் பொருள் காணலாம்.
உடலில் எவ்வளவு வேதனைகள் துன்புறுத்தினாலும் அந்த இருளை மாய்க்க உங்களுக்கு யாம் கொடுப்பது ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்.
புலி நம்மைத் தாக்க வரும்போது அதை வேட்டையாடுவதற்கு அம்பைக் கொண்டு எவ்வாறு எய்கின்றோமோ அதே போன்று
1.உங்கள் உடலுக்குள் நின்று உங்களை வேட்டையாட நினைக்கும்
2.அந்தத் தீய விஷ உணர்வுகளையும் வேதனைப்படச் செய்யும் அந்த உணர்வின் தன்மைகளையும்
3.வேட்டையாடுவதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்.
ஓ…ம் ஈஸ்வரா…” என்று அந்த உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உங்கள் உடலுக்குள் செலுத்தி ஆத்ம சுத்தி செய்து
1.உங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும்
2.அந்த உணர்வின் தன்மைகளை அந்த மகரிஷியின் அருள் ஒளியாலே அடக்கச் செய்யுங்கள்.
அப்போதுதான் அவைகள் அடங்கும்.
வேதனையாக இருக்கின்றது என்ற நிலையை மறந்துவிட்டு அந்த மகரிஷிகளின் அருள் ஒளியாலே எனக்குள் இருக்கக் கூடிய துன்பங்கள் நீங்கும் என்ற உணர்வைச் சுவாசியுங்கள்.
அந்த உணர்வின் தன்மை மெய் ஞானியின் அருள் உணர்வு உங்களுக்குக் கிடைக்கும்போது, மெய் ஞானிகள் அவர்கள் உடலிலே எப்படித் தீமையை மாய்த்து மெய் ஒளியின் தன்மையைப் பெற்றார்களோ அந்தத் தீமையான உணர்வை மாய்க்க அருள் ஒளியின் தன்மையிலே சென்றால்தான் முடியும்.
நிறையப் பேர் சாமியிடம் சென்று வந்தோம்… தலை வலி போகவில்லை. சாமியிடம் சென்றால் என்ன கிடைக்கின்றது…? என்று எண்ணுவார்கள்.
அருள் வழியில் நன்றாக ஆகிவிட்டதென்றால் மீண்டும் வருவார்கள். அடுத்த முறை வந்து “சாமி…” என்று கேட்பார்கள். மூன்றாம் முறை வரும் போது என்ன செய்கிறார்கள்…?
நம் வாழ்க்கையில் அடிக்கடி அசுத்தங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்போது என்ன செய்கின்றோம்…?
அன்று நல்லதாக நடந்தது, இன்று யாம் சொன்ன வழிகளிலே தீமை நீக்கும் செயலாக நடந்தீர்களா…? என்று யாம் அவர்களிடம் கேட்டால், நேரம் இல்லைங்கே…! என்று சொல்கிறார்கள்.
இது போன்று நேரமில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்றால் அவர்கள்… ஒன்றும் கிடைக்கவில்லை என்ற நிலைக்குப் போய்க் கொண்டிருப்பார்கள்.
அந்த மாதிரியாக, நமது வாழ்க்கையினுடைய நிலைகள் பயனற்றதாகப் போய் விடாதபடி நாம் மெய் வழி காண்போம்.
வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தைப் போக்குவதற்குத்தான் இப்பொழுது யாம் உபதேசிப்பது. அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்திற்குள் பல இரகசியங்கள் இருக்கின்றது.
இந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு நமக்குள் ஆற்றல் பெற்றபின் யார் துன்பப்பட்டு வந்தாலும நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அவர்கள் உடலில் இருக்கக் கூடிய தீமைகளை நீக்க அவர்களையும் அந்த ஆத்ம சுத்தி செய்யப் பழக்குங்கள்.
1.யாம் எப்படி உங்களை நல்லதாக்க வேண்டுமென்று விரும்பி
2.இந்த ஞானத்தின் வழி முறை கொண்டு உங்களுக்குள் சேர்க்கச் செய்கின்றோமோ
3.இதைப் போன்று நீங்களும் செயல்படுத்துங்கள்.
உங்கள் மூச்சாலும் பேச்சாலும் மற்றவர்களுடைய துன்பத்தைப் போக்கச் செய்யுங்கள். இதை உங்கள் அனுபவத்திலே நீங்கள் பார்க்கலாம். நீங்கள் உங்களை நம்புங்கள். நாம் எடுக்கும் தியானத்தின் மூலமாக ஆற்றல் மிக்க சக்தியைப் பெறமுடியும்.
யாரோ செய்து கொடுப்பார்… எவரோ செய்து கொடுப்பார்… என்று எண்ணாதபடி
1.நாம் இதைப் பெற முடியும் இந்த ஆற்றல் மிக்க சக்தி நம் உடலில் உண்டு
2.அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாம் பெற முடியும் என்ற நிலைக்கு நாம் வர வேண்டும்.
உயிருடன் தொடர் கொண்டு அந்த அலையின் வரிசையில் இங்கே பாய்ச்சப்படும் போது, ஒவ்வொன்றும் நல்லதாகும்.
1.நம்மால் முடியுமா…? என்ற பலவீனத்தை மட்டும் விட்டு விடுங்கள்.
2.எண்ணியதைப் படைக்கும் சக்தி உங்களை இயக்கிக் கொண்டிருக்கும்
3.உங்களை ஆண்டு கொண்டிருக்கும் இந்த உயிருக்கு உண்டு.
உயிரின் துணை கொண்டு அது எப்படி நம்மை ஒளியாக உருவாக்குகின்றதோ நம் உணர்வின் செயலை உருவாக்குகின்றதோ அதைப் போன்று நம் உணர்வுகள் அனைத்தும் அந்த ஈசனின் உணர்வின் ஒளி அலைகளாக மாறி அந்த உணர்வுகள் செயல்படும்.
ஆகவே… உயிர் நம்மை ஒளியாக இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உணர்வாக நாம் மாற்ற வேண்டும்… மாற வேண்டும்.
ஒன்றை ஒன்று விழுங்கித்தான் ஒன்றுக்குள் மறைந்து வருகின்றது. ஆனால் எல்லாவற்றிருக்கும் ஞானம் உண்டு. இன்றைக்குக் காற்றாக வருகிறதென்றால் இந்தக் காற்றும், போர் முறைகளிலேதான் வருகின்றது.
பல அணுக்களின் நிலைகள் கொண்டு நம் பூமிக்குள் விளைந்த நிலைகள் கொண்டு எதிர் நிலையான அலைகள் பட்டவுடன் ஒன்றுக்கொன்று போர் செய்துதான் சுழிக் காற்றும் வருகின்றது.
இவையெல்லாம் ஒன்றையொன்று வெல்லும் போது ஏற்படக் கூடிய மூச்சின் அலைகள்தான்.
ஆகையினாலே எல்லாமே இயற்கையின் செயல்தான். அனைத்தையுமே அறிந்துணரக்கூடிய ஆற்றல் மனிதனுக்கு உண்டு. மனிதனாக இருக்கக் கூடிய நாம் எதைக் கொண்டு எதை வெல்ல வேண்டும்…?
நாம் இருளை வென்று ஒளியாக்க வேண்டும். இது தான் கடைசி நிலை.
சாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்
இந்த மனித வாழ்க்கையில் நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் சோர்வு வந்து விடுகின்றது. அதனால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது… மாற்றங்கள் ஆகின்றது.
சிந்திக்கும் தன்மை குறைந்தால் அடுத்து நாம் எண்ணியபடி எதுவும் நடக்கவில்லை என்றால் விஷமாகின்றது. சோர்வு… சிந்தனை குறைவு… வேதனை என்ற இது மூன்றும் சேர்த்து ஒரு கருவின் தன்மையாகிறது. உயிர் அந்த அணுவாக உடலுக்குள் உருவாக்குகின்றது.
நான் நினைத்தேன் வரவில்லையே… என்ற எண்ணத்தில்
1.“சாமி (ஞானகுரு) சொன்னாரே…
2.கிடைக்கவில்லையே… கிடைக்கவில்லையே…! என்ற உணர்வைத் தான் மீண்டும் வளர்க்க முடியும்.
3.ஆக.. கீழான நிலைக்குத் தான் போக முடியும்.
3.வலு கொண்ட நிலையிலே சாமியை எண்ணுவீர்கள்
4.ஆனால் சாமி சொன்னதை (உபதேசம்) விட்டு விடுவீர்கள்.
வயலில் விவசாயம் செய்யும்போது களைகளைப் பிடுங்க வேண்டும் என்று சொன்னால் களையைப் பிடுங்குவதற்குப் பதில் முளைத்த நல்ல செடிகளைத் தட்டி விட்டால் என்ன செய்யும்…!
விவசாயத் துறையில் நல்ல வித்தைத் தான் கொடுக்கின்றார்கள்… பயிரிடுகின்றோம். ஆனாலும் வளர்ந்த பின் களைகளை எடுப்பதற்குப் பதில் களையுடன் சேர்த்து பயிரையும் பிடுங்கி விட்டால் பலனற்றுப் போகும்.
அதைப் போன்று தான்
1.நான் (ஞானகுரு) கொடுத்த அருள் ஞான வித்தை விளையை வைத்துத் தீமைகளை (களைகளை) நீக்குவதற்குப் பதில்
2.நான் கொடுத்த சக்தியையே வீழ்த்தி விடுகின்றார்கள்.
கொடுத்த சக்தியை இழக்கப்படும் பொழுது ஒரு காரியத்தை எண்ணிச் செய்தால் சோர்வடைந்து வேதனை என்ற நிலை உருவாகின்றது.
ஆனால் இதற்கு முன்… பல பிறவிகளிலும் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் எப்படி வளர்ச்சியடைந்தோமோ தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வு கொண்டு மீள வேண்டும்… மீள வேண்டும்… என்ற உணர்வுகளைச் சேர்த்துத் தான் வளர்ந்து வந்துள்ளோம்.
பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து அதன் வழி இத்தனையும் கடந்து வந்த மனிதன் நாம்
1.மீண்டும் தன் இச்சையின் உணர்வு உண்டு நிறைவேறவில்லை என்றால்
2.சோர்வும் வேதனையும் அடைந்து அத்தகைய அணுவின் தன்மையாக வரப்படும் பொழுது
3.நம் நல்ல குணங்களை அடக்கிவிடுகிறது… அதர்வண…!
நல்ல குணங்களை அடக்கியபின் தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் விளைந்து (யஜூர்) விட்டால் மீண்டும் சாம…!
அதே தீமையான எண்ணம் இயக்கத் தொடங்குகிறது. அதை மாற்றுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் அரும் பெரும் சக்தியை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன்.
தீமைளைளச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒரு இரண்டு நிமிடம் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரிடமே வேண்டுங்கள். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் இணைத்துக் கொள்ளுங்கள்.
இப்படிச் செய்து வாழ்க்கையில் வந்த வேதனைகளை அடக்கப்படும் பொழுது அதர்வண. தீமைகள் செயலற்றதாகின்றது.
1.துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த அருள் ஒளியின் அணுக்களைப் பெருக்கினால் அப்பொழுது யஜுர்…
2.ஒளியான அணுக்களாக நமக்குள் ஒவ்வொரு நாளும் வளர்க்க வேண்டும்.
ஆயுளை நிர்ணையிப்பது யார்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
1.எந்த ஆண்டவனும்… எந்தக் கடவுளும்… நம் ஆயுளை நிர்ணயிக்கவில்லை.
2.அவனவன் எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…!
அவனவன் சுவாச நிலையைக் கொண்டு அவனவனுக்கு வரும் வியாதிக்கும் பிணிக்கும் வித்திட்டவன் ஆண்டவனா…?
இவன் உண்ணும் உணவிலும் சுவாச நிலையிலும் உடல் என்னும் கூட்டிற்கு “இவனே தேடிக் கொள்கின்றான் பல வினைகளை…!”
இவன் உடலில் வரும் வியாதியில் இவன் உடல் படும் அல்லலைக் கண்டு இந்த உடலிலிருந்து பிரிந்து செல்கிறது அந்த ஆத்மா.
எந்த நிலையிலும் இவன் அந்த ஆத்மாவை ஆண்டவனாக எண்ணி இந்த உடலில் தங்கி இருக்க வேண்டும் என்ற அவா வைத்து “ஆண்டவனே தான் இவ்வாத்மா…!” என்ற எண்ணம் தோன்றி வேண்டிக் கொண்டால் இந்த உடலை விட்டு இவ்வாத்மா எந்தக் காலத்திலும் பிரிந்து செல்லாது.
1.ஆத்மா என்னும் ஜோதி தான் எல்லா உயிரினத்திலும் உள்ளதப்பா..!
2.பெரும் சித்தர்களும் ரிஷிகளும் அவர்கள் உடலில் உள்ள ஆத்ம சக்தியைப் புரிந்து கொண்டு தானப்பா
3.அவர்கள் அந்த உன்னத நிலையைப் பெற்றார்கள்.
மனித உடலில் தான் அந்த உன்னத நிலையைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது. மனித உடலை மாற்றிக் கொண்டால் இன்னும் பல கோடி ஆண்டுகளாகுமப்பா அந்த ஆத்மா ஜோதியுடன் ஜோதியாகக் கலப்பதற்கு…!
ஒவ்வொரு மனிதனும் “தன்னுள் ஆண்டவன் இருக்கின்றான்…!” என்ற எண்ணமுடன் வாழ்ந்திட்டால் இன்றையக் கலியில் நடக்கும் கூத்துக்கள் எல்லாம் இருக்காதப்பா…!
ஆண்டவனின் சக்தியைக் கல்லிலும் மண்ணிலும் பார்த்துத்தான் வணங்குகிறார்கள்.
1.இவர்கள் வேண்டுவதெல்லாம்…
2.அக்கல்லின் உருவத்தில் இவர்களுக்கு ஆண்டவன் வந்து அருள் செய்ய வேண்டும்…! என்ற எண்ணம் தான்
3.இன்றும் அப்படித்தான் உள்ளது.
நம் ஆத்மாவில் உள்ள அருளை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமப்பா…! நம் ஆத்மாவின் மூலமாக நாம் ஜெப நிலையில் இருக்கும் பொழுது எல்லா நிலையையும் அறிந்து கொள்ளலாம்.
1.நாம் யார்…?
2.நம் ஆத்மாவின் நிலை என்ன…?
3.நம்முள் இருக்கும் ஈசனின் சக்தி என்ன…? என்ற எல்லா உண்மையுமே அறிந்து கொள்ளலாம்.
நாம் பாவம் செய்து விட்டோம்…! அதனால் நமக்கு இனி இந்த ஜென்மத்தில் என்ன பேறு கிடைக்கப் போகிறது…? என்ற எண்ணம் என்றுமே எண்ணிடலாகாதப்பா…!
1.தவறை எண்ணி வருந்தும் பொழுதே
2.நம் ஆத்மா நம் தவறுக்கு மன்னிப்பு அளிக்கின்றதப்பா…!
நம் ஆத்மாவின் நிலையேதான் ஆண்டவன் என்ற ஒரே எண்ணம் மக்களுக்கு வந்து தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டுமப்பா..! அழியும் யுகத்தில் அழியாச் செல்வம்… ஒரே செல்வம்… இவ்வாத்மா தானப்பா…!
கலியின் கடைசியில் கல்கியின் ஆரம்பமான நாளில் “கடைசிச் சந்தர்ப்பத்தை…” ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்திக் கொண்டு தன் ஆத்ம ஜோதியை அவ்வாண்டவனுடன் கலக்க விட்டு ஆண்டவனுடன் ஆண்டவனாக அச்சூட்சம உலகத்திற்கு அழைத்துச் செல்லத்தான் இந்தப் பாடங்கள் எல்லாமே…!
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் இவ்வாத்மா என்னும் ஆண்டவனின் சக்தியைப் புரிந்து கொண்டு
1.ஆத்ம ஜோதியாகக் கலந்திட வேண்டும் என்பது தான்
2.இவ் ஈஸ்வரபட்டனாகிய