துருவ நட்சத்திரத்தின் ஒளிப் பிளம்பலைகளை நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்க வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் ஒளிப் பிளம்பலைகளை நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்க வேண்டும்

 

ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரையிலும் சதா எத்தனையோ தீமைகளையும் நன்மைகளையும் நுகர்ந்தறிந்து கொண்டே உள்ளோம்.

அது எல்லாம் நம் உடலுக்குள் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலாக மாறிக் கொண்டே உள்ளது.

அப்படி மாறிக் கொண்டே இருந்தாலும் அந்தத் தீமையான உணர்வுகளை நீக்கத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் எடுத்தேயாக வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று உடலுக்குள் செலுத்தினால்
1.தீமைகளை மாற்றிடும் சக்தியாக அது வலுப் பெற்று
2.நல்ல உணர்வுகளாக மாறி… தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்யும் என்று
3.ஞானிகள் இதை நமக்குத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

அதே சமயத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் மட்டும் பெற்றால் பத்தாது.

நாம் பெற்ற சக்திகளையும் நாம் கண்ட உண்மை உணர்வுகளையும் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டுமென்று கணவனும் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் இந்த இரு உணர்வும் ஒன்றி உருவாக்கினால்தான் ஒளியான அணுத் தன்மை அடைகின்றது,

இதை ஒவ்வொருவரும் பழகிக் கொண்டால் இன்றைய விஞ்ஞான உலகில் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அது நம்மைப் பாதிக்காதவண்ணம் மாற்றிக் கொள்ள முடியும்.

1.27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் அந்தத் தூசிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது ஒளிப் பிளம்பலைகள் பரவுகின்றது.
2.அந்த ஒளிப் பிளம்பலைகள் பரவி வரும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால்
3.அதிலிருந்து வரக்கூடிய அணுக்களைச் சுவாசித்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அதைச் சேர்ப்பிக்கின்றது.

27 நட்சத்திரங்களும் ஒன்றுடன் ஒன்று மின்னலாகத் தாக்கி அது உணர்வலைகளாகப் பரப்பப்படும் போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டால் ஒளிக் கற்றைகளாக உடலுக்குள் பரவும்.

ஏனென்றால்…
1.நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் பளீர்… பளீர்… என்று மின்னும்.
2.அந்த உணர்ச்சிகளை நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் ஏங்கிப் பெறும் போது நம் ஆன்மாவாக மாறுகிறது.
3.ஆன்மாவிலிருந்து சுவாசித்து உடலுக்குள் செலுத்தும் போது அந்த உணர்வின் அணுக்கள் ஒளியாக மாறும்.

ஆகவே உயிர் எப்படித் துடிக்கின்றதோ இதைப் போன்றுதான் இந்த உயிர் அணுவின் தன்மை இணைந்து இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்தோமோ அங்கே நம்மை அழைத்துச் சென்று ஆறாவது அறிவு கொண்ட நிலையில் ஏழாவது நிலையாக வளர்ச்சி பெற்று அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய முடியும்.

Leave a Reply