உயரிய சுவாசம் எடுத்தால் நீல வண்ண ஜோதியைக் காணலாம் – ஈஸ்வரபட்டர்

உயரிய சுவாசம் எடுத்தால் நீல வண்ண ஜோதியைக் காணலாம் – ஈஸ்வரபட்டர்

 

பரப்பிரம்ம சூத்திரத்தையே அறிந்து கொள்ளும் முயற்சிக்கு அறிவின் உயர் ஞானம் கொண்டு செயல்படுத்தப்படும் முயற்சியாகத் தன்னைத்தான் உணர்ந்து கொண்டு
1.”ஆதி அந்த மூலமாம் ஆதிசக்தியுடன் கலந்திடவே…!”
2.காற்று நூல் கொண்டு தானே சக்தி ஈர்த்து ஆத்ம வலுவைக் கூட்டிக் கொண்டு
3.உயிராத்ம சக்தியை ஜோதியாக்கி ஆதி சக்தியின் மூலத்தில் ஒவ்வொருவரும் கலக்க வேண்டும்.

சுவாசம் செயல்படுவதைச் சூரியன்… சந்திரன்… அக்கினி… என்று பெயர் நாமப்படுத்தி அவற்றின் குணங்களை எண்ணம் கொண்டு எடுத்த உயர் ஞானத்தால்
1.தியானத்தால் அறிந்து கொள்ளும் முயற்சியில்
2.முதலில் காட்சியாக மூலத்தில் எழுந்த நிறங்களைக் காண முடியும்.
3.சீராகத் தியானிப்பவர்கள் பல வண்ண ஒளி அலைகளைக் காண முடியும்

இயற்கையின் செயல்பாட்டைத்தான் மனித ஞானத்தால் அறிந்து கொள்ள இயலுமே அல்லாது அந்த ஆதிசக்தியின் மூலத்தை அறிந்தவர் யார்…?

எந்த நிலையிலும் பேரானந்தத்தையே அனுபவிக்க முடிகின்றதே தவிர அந்தப் பேரானந்ததத்தை எப்படிச் சொல்லால் விளக்குவது என்றே தெரியவில்லை.

பிரம்மம் என்றும் “பிரம்ம அட்சரன்…!” என்றும் சூட்சமமாகக் காட்டப்பட்டதின் பொருளைத் தெளிந்து கொண்டால் உயிரணுக்களின் செயல்பாட்டில் வான இயல் தத்துவம் விளங்கும்.

சுவாசத்தைக் கொண்டு மூலத்தில் எழுந்த முத்தொடரை அறிவதில் வலது நாசி துவார காற்றோட்டத்தில் வெண்மை நிறமும் அதன் குணம் மாயை என்றும்
1.சூரிய சக்தியில் செயல்படும் ஈஸ்வர சக்தியை உயிர்ச் சக்தி என்றும் அறிந்து கொண்டால்
2.பரவெளியில் அட்சரன் என்று மறைபொருளாகக் காட்டப்பட்டதன் உண்மையை உணரலாம்.

பிரம்மம் என்றால் சகல அணுக்களும் அவற்றிலிருந்து உண்டான சகல பொருள்களும் தான். மனிதனும் ஒரு பொருள் தான், ஆனாலும்
1.பிரம்ம அட்சரன் என்று சொல்லால் வேறுபடுத்திக் காட்டியது
2.உயிராத்மாவின் கலப்பாக எண்ணமும்
3.அதனுள் இட்ட மாயை அஞ்ஞானம் ஆணவம் என்ற ஆதிசக்தியின் முத்தொடர் விளையாட்டை அறிந்து கொள்ள இயலுமோ…?

ஒவ்வொரு உயிராத்மாவும் மனிதன் என்ற பிறப்பில் இந்த முத்தொடரைத் தெளிதல் வேண்டும்.
1.மாயையிலிருந்து அஞ்ஞானமும்
2.அஞ்ஞானத்திலிருந்து ஆணவமும் உணர்ந்து தெளிந்து
3.தன் உயிரான்மாவிற்கு வலுக் கூட்டும் செயலாக
4.நீல வண்ண உயிராத்மாவாக ஆவதே ஆக்கம்.

வலது நாசித் துவாரத்தில் ஓடுகின்ற கால் ஞானத்தால் வெண்ணிறத்தைக் காட்டியது.

இடது நாசித் துவாரம் சந்திரகலை என்றும் அதனுள் செல்லும் கால் கரிய நிறத்தைக் காட்டியது ஆணவம்.

இரண்டிற்கும் சமமான சுவாச ஓட்டம் சுழுமுனை என்ற அக்கினியாகச் சிவப்பு நிறத்தைக் காட்டியது அஞ்ஞானம்.

1.இவற்றிலிருந்து நற்சுவாசம் கொண்டு
2.நல் எண்ணத்தால் தன் உயிராத்ம சக்தியின் வலுவைக் கூட்டிக் கொள்ள
3.நீல வண்ண ஆத்மாவாக ஆதி சக்தியுடன் கலக்கும் செயலே மெய் ஞானம்.

Leave a Reply