ஆசை இருக்கலாம்… பேராசை இருக்கக்கூடாது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஆசை இருக்கலாம்… பேராசை இருக்கக்கூடாது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சூரியனிலிருந்து கிடைக்கப் பெறும் காந்த அமில சக்தியினால் மட்டும் நம் உலகிற்கு ஒளி பாய்வதில்லை. நம் உலகமும் அதனை ஈர்க்கும் நிலைதனைப் பெறல் வேண்டும்.

அந்தக் காந்த அலைகளை நம் பூமி ஈர்த்து அதன் வட்டத்திற்குள் சுழலவிட்டு அச்சுழற்சியில் இருந்து சூரியனின் ஒளி அமிலத்தை மென்மேலும் ஈர்த்துச் செயல் கொள்ளாவிட்டால் நம் உலகிற்கு சக்தி ஏது…? செயல் ஏது…? இவ்வுலகமே ஏது…?
1.சூரியனின் படைப்பில் சக்தியை அளித்தாலும்
2.நம் பூமி ஈர்த்து செயல் கொள்ளாவிடில் நம் பூமிக்கு ஜீவனில்லை.

அதைப் போல் ஒவ்வோர் உயிராத்மாவும் ஆண்டவன் படைப்பில் அதனதன் சுழற்சியில் ஏற்படுத்திக் கொண்ட அமில சக்தியின் வட்டத்தின் வளர்ச்சியில் தான் அதனின் வாழ்க்கை நிலை அமைகின்றது.

பல பிறப்புகளை ஏற்கும் நம் உயிராத்மா ஒவ்வொரு பிறப்பிலும் சேமிக்கும் அமில சக்தியில் நற்சக்தியும் தீய சக்தியும் கலந்தே வழி வருகின்றோம்.

ஒவ்வொரு பிறப்பிலும் இந்நிலையில் ஒரு பிறப்பில் சேமித்த நற்பயனும் தீய பயனும் மற்றொரு பிறப்பில் ஏற்றத்தாழ்வு கொள்கின்றது. இதன் நிலையில் தொடர்பு கொண்டு நாம் செய்திடும் நிலையல்ல இது.

நாம் வளர்த்த எண்ண நிலை நம்முள் கலந்துள்ள தொடர் நிலையென்ற வழியிலேயே வழி பெற்றால் நாமெல்லாம் இன்று மனித ஆத்மாக்களாய் வாழ்ந்திடும் இப்போக்கிஷமான வாழ்க்கைதனை ஈன நிலைக்கு நாமே அடகு வைக்கிறோம்.

“அடகு” என்றவுடன் திரும்பவும் பெறும் நிலைகல்லவா செப்புகின்றார் என்று உணருவீர்…!
1.ஆம்… இன்று இக்கலியில் நம் உயிராத்மா கொண்ட இப்பொக்கிஷ வாழ்க்கையை அடகு வைத்துவிட்டால்
2.நாம் அதனைப் பெறும் காலம் பல நூறு கோடி ஆண்டுகள் ஆகலாம்.

பல காலமாய்ச் சேமித்து உயிர் ஆத்மாவாய் மனித உடல் கொண்ட எண்ண வளர்ச்சியில் அறிவுப் பொக்கிஷ வாழ்க்கைதனைப் பெற்ற நம் ஆத்மாவின் நிலையைப் பெற்றிருக்கிறோம் என்பதனை உனர்தல் வேண்டும்.

இன்று இந்த வாழ்க்கையில் ஏற்படும் சஞ்சலங்களுக்கு அடிபணியாமல் நம்முடன் (நம் எண்ணமுடன்) மோதிடும் பல நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் சம நிலைப்படுத்தும் பக்குவநிலை பெறல் வேண்டும்.

இம்மனித ஆத்மாக்களினால் மட்டும்தான் ஜீவ சக்தியை ஒளிபெறும் சக்தியாக்கிடல் முடிந்திடும்.

மனித ஆத்மாவிலிருந்து ஒளி பெற்று அஜ்ஜோதியுடன் ஐக்கியமாகி… அஜ் ஜோதியின் வட்டத்தை வளரவிட்டே மண்டலமாய் ஜீவன் கொண்டு வளர்ச்சி பெற்று… வளர்ச்சியில் உயிரணு தோன்றி அதன் வளர்ச்சியிலேயே அமில நிலை பல பெற்று… மண்டலமாய் உருளும் சக்தியும்.. உயிராத்மாவாய் வாழும் நிலையும்… அதன் தொடர் நிலை அனைத்துமே “இம் மனித ஆத்மாக்களுக்குத்தான் உண்டு…”

1.மண்டலமாய் சுழல்வதுவும் இவ்வாத்மாக்களே
2.கொசுவாய்க் கழிவின் சுவாசத்தை ஈர்த்து வாழ்வதும் இம்மனித உயிராத்மாவே
3.இவ்வெண்ண சக்தியில் நிலை கொண்டு அமைவதுவே அனைத்துமே.

நாம் பிறப்பெடுத்து வாழ்வதெல்லாம் நம்மை அவன் அனுப்பி வைத்து நம் சக்தியை எப்படி வளர்த்துக் கொள்கின்றோம் என்று பார்க்கத்தான் என்ற எண்ணமும் வேண்டும்…!

அன்றைய நாளில் மனித ஆத்மாக்களைப் அருள் நிலையில் தான் உயர்வுபடுத்திட முடியும் என்ற தத்துவத்தை உணர்த்தி ஆலயத்தை அமைத்தார்களே அன்றி “ஆலயத்திற்குச் சென்றால் தான் அவனருள் கிட்டும்…!” என்ற நிலையில்லை.

எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி அவரவர்களுக்குகந்த அமில சக்தியையே ஒளி சக்தியாக்கி வழி பெறல் வேண்டும்.
1.ஆசையும் அன்பும் அளவுடனே இருந்திடட்டும்
2.ஆதி ஆசைக்கும் அதி அன்பிற்கும் வழிபட்டால் பேராசைக்குப் பிடிபடும் நிலையில்
3.சலிப்பும் சஞ்சலமும் வெறுப்பும் கொண்டே இதன் வழித்தொடரினால் ஏற்படும் கோபங்களும்
4.அதிலிருந்து ஏற்படும் வைராக்கியத்தின் உறுதியும்
5.எச்சிரமப்பட்டாலும் அடைந்தே தீருவேன் என்ற வெறியின் உந்தலினால்
6.நம்மையே நாம் சிதறவிட்டு வாழ்கின்றோம்.

அன்பும் ஆசையும் இல்லாவிட்டால் உலகமே இல்லை. நற்சக்தியின் பொக்கிஷ சக்தியே இவைதான். ஆனால்
1.இவற்றிற்கே அடிமைப்பட்டு பேராசை நிலையில் செல்லும் எவையுமே
2.அவ்வன்பிற்கும் ஆசைக்கும் எதிர் சக்திதான்…!

Leave a Reply