“நம்முள் ஈசனே குடி கொண்டுள்ளான்…” என்று உணர்ந்து அவன் வழியில் நாம் வாழ்ந்திட வேண்டும்

“நம்முள் ஈசனே குடி கொண்டுள்ளான்…” என்று உணர்ந்து அவன் வழியில் நாம் வாழ்ந்திட வேண்டும்

 

பாம்பின் விஷத்தையும் போக்கி விடலாம் மற்றத் தீய சக்திகளையும் நம்முள் அண்டவிடாமல் போக்கி விடலாம்.
1.ஆனால் நம்முள்ளே நாம் ஏற்றிக் கொண்ட இவ்வெண்ணத்தின் சுமையை
2.ஒரு நிலைப்படுத்தி ஜெபம் பெறுவதுதான் நம் சக்திக்கும் மேம்பட்ட சக்தி.

இவ்வுலகச் சூழ்ச்சியிலிருந்தும் மற்றவர்களின் நிலையின் தாக்குதலிலிருந்தும் இன்றுள்ள இவ்விஷமான இவ்வுலக நிலையிலிருந்து மீண்டு செயல் கொள்ளுவது மிகவும் கடினம்…!

ஆத்மீக நெறியின் வழிமுறைக்கு நம் வழி அமைந்த பிறகு…
1.நாமே தான் நமக்குகந்த நெறி முறையை அமைத்துக் கொண்டு செயல்படல் வேண்டும்
2.அச்செயல் வழியில்தான் நம் சக்தி நிலையே கூடி வழி வந்திடும்.

இந்நிலையின் தொடர் நிலை வந்த பிறகு பிறரின் எண்ண நிலையை நம்முடன் மோதவிட்டு ஆத்மீக நெறி முறையில் செல்லுவதும் அழகல்ல. “போற்றலும் தூற்றலும்…” ஒரு நிலை போன்ற சம நெறியின் வழியாக்கிடல் வேண்டும்.

இவ்வெண்ணத் தொடரின் வழி பெற்ற பிறகு ஞானத்தின் சக்தி நிலை கூடும் நிலையில் நம் உடலில் உள்ள முன்பு வாழ்ந்த வாழ்க்கையில் உள்ள தீய சக்திகளும் செயலற்றதாய் நற்சக்திகளின் நிலை வளர்ந்து கொண்டே வரும்.

இந்த நிலையின் வழித் தொடரில் வந்த பிறகு..
1.வாழ்க்கையுடன் உள்ள நம் நிலையில் ஏற்படும் சிக்கலை நம் எண்ணத்தில் ஏற்றிக் கொண்டு
2.அந்தக் கவலையை வளரவிடும் பொழுது நம் உடலில் உள்ள தீய சக்திகளுக்கு நாம் உரம் இட்ட நிலை போல் வளர்ந்து விடும்.

நற்சக்தியின் நிலை கூடுவதற்குப் பல காலம் ஜெபம் பெற்று ஞானத் தொடரை வழிபெற்ற பிறகு ஒரு சில நொடியில் இவ்வெண்ண மோதலினால் அதை விரையப்படுத்தலாகாது.
1.பக்திமானாக சக்திமானாக ஆண்டவனின் சக்தியில் ஒளிர
2.ஒரு நாளில் இரண்டு நாளில் அந்த ஞானத் தொடரும் சக்தி தொடரும் வந்திடாது.

உயிரணுவாய்… உயிராத்மாவாகப் பிறப்பெடுத்து… நாம் நம் உடலுடன் சேமிக்கும் அமில சக்தி அனைத்தையுமே நற்சக்தியாகக் கலந்து ஒளி பெறும் நிலையில் தான் நம் நிலையும் உயர்ந்திடும்.

இவ்வாத்மீக நெறிக்கு வழி பெற்றிட…
1.தீய சக்திக்கு நாம் அடி பணியாமல் நம்முள் தீய சக்தியை அகற்றினால் அன்றி
2.நூறாண்டு காலமல்ல நூறு கோடி ஆண்டானாலும் நம் ஆத்மாவை
3.ஆண்டவனின் சக்தியின் சக்தியாய் ஒளிரச் செய்வது கடினமே.

சொத்தும் சுகமும் அல்ல சக்தியின் செல்வம். இது போன்ற அல்ப ஆசைகளை நம் எண்ணத்தில் துறக்கும் நிலை பெற வேண்டும்.

துறவியாய் ஆண்டிக் கோலம் பூண்டு செல்லும் துறவறம் அல்ல…!

1.ஒன்றை எண்ணிய நிலையில் “அடைந்தே தீருவோம்…!” என்ற பேராசையின் பிடியில் சிக்கிடாமல்
2.வாழ்க்கைக்குகந்த அன்புச் செல்வங்களைத் தன்னிறைவு பெற ஆசையுடன் செயல் கொள்ளுங்கள்.

உண்ணும் எவ்வுணவையும் அமுதமாக உண்டிடும் பக்குவ நிலையில் வாழ்ந்திடுங்கள். உண்ணும் உணவே ஒவ்வோர் உடலையும் எண்ண நிலைக்கொப்ப அமில சக்தியின் சேமிப்பையும் நம் உடல் பெறுகின்றது.

எண்ணத்தையே அமுதாக்கி உண்டிடுங்கள். எவ்வுணவை உண்டாலும் அமிர்தமாய்… நம் உடலில் செயல் கொள்ளும் வழி முறையும் செயல் நிலையும் நாமாய் வழி வகுத்துத்தான் நம் ஆத்மா செயல் கொண்டிடும்.

நாம் வாழ்ந்திடும் இனி வரப்போகும் ஒவ்வொரு நொடியையுமே இவ்வழித் தொடரின் ஜெப சக்தியை வளரவிட்டே நம்முள் நம் ஆத்மாவாய் நம் ஈஸ்வரனே குடிகொண்டுள்ளான் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

நாம் எடுத்திடும்… நாம் விட்டிடும்.. சுவாசமே
1.அவ் ஈஸ்வரனின் ஜெபத்துடனே ஓ…ம் ஈஸ்வரா…! என்ற நிலையிலேயே
2.எந்நிலையில் எச்செயலில் இருந்திட்டாலும்
3.நம் எண்ண ஜெபம் முழுவதுமே அவ் ஈசனின் நினைவுடன் இருந்திட்டால்
4.மற்றத் தீய சக்தியின் நிலை நம்மை எப்படித் தாக்கும்…?

ஏனென்றால் நம்மை அத் தீய சக்தியில் இருந்து காக்கத்தான் அவ் ஈசனே ஜெபம் கொண்டு நம்முள் உள்ளானே…!

1.நம் ஆத்மாவே ஈசன் தான்… ஈசனின் சக்தியில்லாமல் எச்சக்தியுமில்லை.
2.ஈசனே குடி கொண்டு உள்ள நம் ஆலய ஆத்மா கொண்ட நம் உடலை
3.ஈசனின் சக்தியாய் வாழ்ந்திடும் நெறி முறையின் வழித்தொடர் கொண்டே வாழ்ந்திடுங்கள்.

Leave a Reply