குட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

குட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கிளி… எலி… அணில்… ஜோதிடம் இப்படிப் பல நிலைகளைச் செய்வது எந்த நிலை கொண்டு…?

இவை எல்லாமே கரு வித்தையின் செயல்தான். அந்தந்தப் பிராணிகளின் உடலில் கருவின் மையை ஏற்றிவிடுவார்கள். அவரின் பழக்கப்பட்ட பரிபாஷைகள் இப்பிராணிகளுக்குத் தெரிந்திடும்.

இவர்கள் சொல்லும் பெயர் நாமத்தைக் கேட்டு அந்தப் பிராணிகள் ஜோதிடம் செப்பிடும் நிலையாக வரும். அதாவது…
1.அந்தப் பிராணியின் உடலிலுள்ள குட்டிச்சாத்தான்தான்
2.அவன் சொல்லும் நாமகரணத்திற்குகந்த செயல் கொண்ட
3.எந்த நிலை பெற்ற குண நிலைக்குகந்த ஏடுகளை ஓதிட வேண்டுமோ அதனையே சரியாக எடுத்துத் தரும்
4.இவர்கள் மன நிலைக்குகந்த சொல்வாக்கே அதிலும் காணப்படும்.

அவ்வெண்ணமுடனே இவர்கள் செயல்பட்டால் அதன் தொடர்ச்சி நிலையில்தான் அவர்களின் வாழ்க்கை நிலையும் இருந்திடும். இவ் உலகினில் பல பாகங்களில் இச்சூனிய வேலை நடக்கின்றது.

பிறரைத் தன் வசியப்படுத்தவே இக்கரு வித்தை வேலையெல்லாம் செய்யப்படுகின்றன. ஆவியின் தொடர்புப்படுத்தி தன் உடலிலேயே பல ஆவிகள் துர் ஆவிகளை ஏற்றிக்கொண்டு அதனை ஏவி சூனியம் செய்வார்கள்.
1.சூனியத்திற்கு அடிமைப்பட்டவன்
2.அச்சூனியத்தினாலேதான் அதனுடைய ஆத்மாவும் பிரியும்.

பிற இடத்தில் ஜெபம் செய்து பல பொருட்களை வைத்துவிட்டு இக்குட்டிச்சாத்தானின் தொடர்புடைய நாமத்தை இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜெபித்தால்…
1.அவ்வாவியான குட்டிச்சாத்தானே அப்பொருளை இவர்கள் “வா…!” என்றவுடன்
2.இவர்களின் கையில் அப்பொருள் கிடைக்கும் நிலையில் செய்து தரும்.
3.இவர்கள் வைத்த பொருள்தான் அங்கிருந்து வருமே ஒழிய
4.ஆகாயத்தில் இருந்து ஆண்டவனால் செய்விக்கப் பெற்ற உருவச் சிலையோ விபூதியோ புஷ்பமோ
5.எவையுமே இவர்களிடத்திற்கு மாறுபட்டு வராது.

இந்த நிலையிலுள்ள எந்தெந்தச் சாமியார்கள் ஆகட்டும்… அல்லது மந்திரவாதிக ஆகட்டும்… அவர்களால் மக்களை ஏமாற்றிடும் செயலுக்குத் தன் புகழ் உயர.. தன் நாமத்தினால் பொருளீட்டி… இச்செயலையெல்லாம் செய்வித்து
1.மக்களை மட்டும் அவர்கள் ஏமாற்றவில்லை
2.தன் ஆத்மாவையே… தானே ஏமாற்றி வாழ்கின்றார்கள்.

சொந்தமில்லா இவ்வுடலின் வாழ்க்கை எத்தனை நாட்களுக்குச் சொந்தமப்பா…?

“இருக்கும் ஒரே சொந்தம்” நம் ஆத்ம சக்தியை இயற்கை என்னும் சொந்தமுடன் சொந்தமாக்கி நம் ஆத்மாண்டவனை நல்வழியில் செயலாக்குவதை விட்டு சாமியார்கள் என்ற நாமத்தில் ஏன் ஆண்டவனின் நாமத்தையே அடிமைப்படுத்திடல் வேண்டும்…?

இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூட நம்பிக்கையின் வித்தே இத்தகைய சூனியக்காரர்களினால் வந்த நிலைதான். நம் பூமியில் நாம் வாழும் இக்கண்டத்தில் தன்னை றியாமலே நம்மில் பலர் இதற்கு அடிமை கொண்டு வாழ்கின்றனர்.

நமக்கும் மேல் சீனாவிலும் ஜப்பானிலும் இன்னும் சில ஆப்பிரிக்கக் கண்டங்களிலும் அரேபிய நாடுகளிலும் இந்த நிலை அதிகம். ஒவ்வோர் இடத்திலும் வாழும் மனிதர்களின் எண்ண நிலைக்கொப்ப அங்கு வாழும் கருவித்தை வேலைகளும் நடக்கின்றன.

நம் பூமியில் இங்கே இந்த இந்திய தேசத்தில்தான் பல ரிஷிகளும் சப்தரிஷிகளும் உரு பெற்று… “உயர்ந்த நிலை எய்தியவர்கள் அதிகம் வாழ்ந்த பூமி இது…”

அவர்களின் எண்ண ஓட்டமும் (சப்த அலைகள்) அவர்கள் விட்ட சுவாசத்தின் சப்த அலையையும் தாங்கி வாழும் நிலைதான் இப்பூமியின் நிலை.

கரு வித்தையின் குட்டிச்சாத்தான் ஏவலில் உள்ளவர்கள் இதை உணர்ந்து நல் ஆத்மாவாய் இப்பொருள் என்னும் பேய்க்கு அடிமைப்படாமல் வாழ்ந்திட வேண்டும்.

அதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றேன்…!

Leave a Reply