உதவி செய்தால் கிடைக்கும் நன்றிக் கடன் கடைசியில் எப்படிப்பட்டதாக இருக்கும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

உதவி செய்தால் கிடைக்கும் நன்றிக் கடன் கடைசியில் எப்படிப்பட்டதாக இருக்கும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

ஒருவருக்கு நாம் உதவி செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

நம்மால் அந்த உதவி பெற்ற மனிதனோ உதவி செய்ததற்குண்டான நன்றியைக் கடைசியில் (உடலை விட்டுப் பிரியும் போது) எண்ணுகின்றான். பிரமாதமாக… எனக்கு மகராசனாக உதவி செய்தார் என்று…!

அந்த உடலை விட்டு நீங்கும் போது… உதவி செய்தவரை எண்ணி அந்த உணர்வின் வலுக் கொண்டால் உதவி செய்த நம் உடலுக்குள் அந்த ஆன்மா வந்து விடுகின்றது.

நம் உடலுக்குள் வந்து விட்டால் அவன் பெற்ற துயரமோ துன்பமோ நோயோ அவை அனைத்தும் நம் உடலுக்குள் இயக்கத் தொடங்குகின்றது. நம்மையும் அது நலிவடையச் செய்துவிடும்.

இதைப்போன்ற நிலைகளை நாம் தடுக்க வேண்டுமென்றால்
1.அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நாம் எண்ணத்தால் எண்ணுவது அனைத்தும் நமக்குள் ஜீவ அணுக்களாக மாறுகின்றது. நாம் பிறருக்கு உதவி செய்திருந்தால் பற்றுடன் அந்த ஆன்மா நமக்குள் ஜீவான்மாவாக வந்து அவர் படும் துயரத்தை நமக்குள் உருப் பெறச் செய்து விடுகின்றது.

இது போன்ற நிலைகளை அடக்க வேண்டும் என்றால்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும்.
2.நம்மைப் பார்ப்பவர்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர்கள் பெற வேண்டும்
4.அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் எல்லா நலமும் பெற வேண்டும்.
5.நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
6.அங்கே பணி செய்பவர்களெல்லாம் சகோதர உணர்வுகள் பெற வேண்டும்.
7.எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
8.நாங்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணி
9.நமக்குள் பகைமையற்ற உணர்வினை வளர்க்க வேண்டும்.

இது போன்ற நல் உணர்வுகளை நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும். அதைக் கணங்களுக்கு எல்லாம் அதிபதியாக்க வேண்டும். அதாவது பிறர் தீமையை அகற்றும் அந்த உணர்வின் எண்ணத்தைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும். அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் அதிபதியாக்க வேண்டும்.

இவ்வாறு உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும்போது அந்த இடத்தில் மகரிஷிகளின் அருளாற்றலைப் பரவச் செய்கின்றோம்.

1.எல்லாரும் இப்படிச் சொல்லிப் பாருங்கள்…!
2.இந்த காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகள் போய்விடும்.

Leave a Reply