இன்றைய உலக மாற்றத்திற்கு வித்திட்டவர்கள் அன்றாண்ட அரசர்கள் தான் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்றைய உலக மாற்றத்திற்கு வித்திட்டவர்கள் அன்றாண்ட அரசர்கள் தான் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சக்தியின் சக்தி பெற்று… பூமியில் மனித ஆத்மாவாய் அறிவு நிலை பெற்று… ஆக்கத்தின் செழிப்பினால் அகிலத்தையும் ஆளும் செழிப்பைப் பெறத் தகுதி பெற்ற மனிதனே படைப்பில் முதிர்ந்த படைப்பு. முழுமுதல் கடவுள் மனிதன் தான்.

அத்தகைய எண்ண வளர்ச்சியாக இந்தப் பூமியில் மனித ஆத்மாவாய் வாழும் பக்குவம் பெற்று அந்த உயிரணுவிற்குத் தொடர் நிலை கொண்ட அமில சக்தி கூடப் பல கோடி ஆண்டுகள் ஆயிற்று.

ஆகவே பெரும் பாக்கிய சக்தி என்பது இன்று மனிதனாக வாழும் சக்தியே…!

இருந்தாலும்… இயற்கையின் செழிப்பில் அன்பு கொண்ட இதயமாய் வாழ்ந்து வந்திட்ட நிலையையே
1.அறிவில் மிஞ்சியே நிலை என்ற கணிப்பில்
2.ஒவ்வோர் இடத்தில் வாழ்பவர்களும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
3.அவர்களில் ஒருவரைத் தலைவனாக்கி அரசாளும் நிலைப்படுத்தி விட்டனர் இந்தப் பூமியில்.

அந்த வட்டத்தின் வழியிலேயே அவர்களைச் சார்ந்த இனத்தவரை எல்லாம் தனி ஓர் இனமாய்ப் பிரித்து ஜாதி வெறியூட்டி ஒருவரின் உயர்வில் ஒருவர் பொறாமை கொண்டனர்.

இதன் தொடர்ச்சி நிலையிலேயே இன்றளவும் மனிதனின் எண்ண வளர்ச்சி வளர்ந்து இக்கலப்பான சக்தி நிலையை ஊட்டி ஊட்டி…
1.இன்றைய மனிதன் ஒவ்வொருவனும் தனக்குள் உள்ள ஆண்டவனை மறந்தே உள்ளார்கள்.
2.தானும் இந்த நாட்டின் மன்னன் என்ற நிலையில்
3.ஒவ்வொருவரின் மனப்பாங்கும் “இம்மதிப்பின் பேராசை வெறியில்” வழி வந்துவிட்டது.

இன்று நம்முடன் வாழ்ந்திடும் மனிதர்களால் மட்டும் ஏற்படவில்லை இன்றைய இந்தக் கலியின் இழி நிலை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முதலே “ஆட்சி என்னும் வித்திட்டு” அழிவதற்கு… மனித எண்ணங்களுக்குப் பாதை வகுத்துத் தந்தவர்கள் அன்றாண்ட அரசர்கள்தான்.

இன்றைய செயற்கையில் இம்மனித எண்ணங்களின் நிலை இன்று பிறப்பில் மட்டும் வந்திட்ட நிலையில்ல. நற் சக்தியின் பயனும்… சொல்லில் செயலும் மாறிவிட்டது.

செயற்கையில் இந்தப் பூமியின் பொக்கிஷத்தை உறிஞ்சி எடுத்ததல்லாமல் இப்பூமியிலிருந்து ஏவிவிட்ட விஷத் தன்மை கொண்ட ஊசிகளும் (இராக்கெட்) காற்று மண்டலத்தையும் பிரபஞ்சத்தையும் நஞ்சாக்கி விட்டது.

இன்றல்ல நேற்றல்ல இவ் ஏவுகணை அனுப்பும் நிலையே இப்பூமியில் பல நூறு ஆண்டுகளாகச் செயல்படுத்தி வந்த நிலையினை…
1.நம் பூமியின் வட்டத்திற்கு மேல் பால்வெளி மண்டலத்திற்கும் மற்ற கிரகங்களுக்கும் அனுப்பிவித்த ஏவுகணைகளெல்லாம்
2.இப்பூமியில் ஏற்படும் இயற்கையின் மாற்றத்தினால்
3.ஒவ்வொரு மண்டலத்திற்கும் இதன் தொடர்பினால் மாற்றம் ஏற்படப் போகின்றது…! என்பதனை உணர்த்தினேன்.

பால்வெளி மண்டலத்தில் ஏவச் செய்த விஷ ஊசிகளும்… ஏவுகணைகளின் நிலையில் நிறைந்துள்ள அணுவிசை சக்திகளும்… இனி நடக்கப் போகும் மாற்றத்தினால் அங்கங்கு செயலிழந்து அதனின் சுற்றலுக்குகந்த அருகாமை கொண்ட மண்டலங்களில் மோதி அவற்றின் நிலையிலிருந்தும் பல தீய சக்திகள் ஏற்படத்தான் போகின்றன…!

1.இயற்கையின் சக்தியே மாற்றம் கொள்ளும் சீற்றம் கொள்ளும் நிலையெல்லாம்
2. இம்மனித ஆத்மாவினால்தான் நடக்கப் போகின்றன.

இம்மனித ஆத்மாவினால் மண்டலமாய் உருக்கொண்டு சுழன்றிடவும் முடியும். சுழற்சியின் சக்தியில் பல கோடி மண்டலங்களை வளர்த்திடவும் முடியும்.

1.ஆக்கத்தின் அறிவு சத்தியாக ஒளிரும் ஆத்மாவையே
2.அழிவின் சக்திக்கு அடிகோலும் பேராசை பேயின் நிலையில் சிக்குண்டு
3.தன் சக்தியைத் தானே நீங்கள் இழந்து விடாதீர்கள்.

கலியின் மாற்றத்தில் படப்போகும் இன்னலை உணர்ந்து கொள்ளுங்கள். இங்கே உணர்த்திடும் இச்சக்தி நிலையை உணர்ந்து ஆத்மாவின் சக்தியைச் செயலாக்கிடுங்கள்.

இக்கலியின் மாற்றத்தினால் சந்திரனுக்கு நம் பூமியின் தொடர்பும் ஈர்ப்பு சக்தியும் பழக்கப்பட்டு வந்திட்ட நிலையில் 1980ல் நடந்த சூரிய கிரகணத்திற்குப் பின் சந்திரனுக்குச் சில சக்திகள் கூடியது.

சூரியனைத் தாண்டிக் கேது சென்றதால் பூமிக்குக் கேதுவின் விஷ அணுக்கள் கூடி நம் பூமி இன்று சுழன்று ஓடும் வட்டத்திலிருந்து சிறிது கீழ் இறங்கிச் செல்லும் நிலை உருவானது.

அதே சமயத்தில் பூமியின் ஈர்ப்பு சக்தி… நம் பூமியின் பொக்கிஷ அமில சக்தியின் இயற்கைத் தன்மை… சந்திரனின் வட்டத்திற்கு அதிகமாகச் சேரத் தொடங்கியது.

நடந்த அன்றைய மாற்றத்தின் நாளிலிருந்தே சந்திரனில் நீர் நிலைகள் அதிகரிக்கும் தன்மை உருவானது. (விஞ்ஞானிகள் சமீப காலமாகத் தான் சந்திரனில் நீரைக் கண்டறிந்துள்ளனர்).

நம் பூமியின் பொக்கிஷ சக்தியே இந்த நீர் நிலைகள்தான். சந்திரனும் நம் பூமியின் ஈர்ப்பால் அந்தச் சக்தி நிலை கூடிக் கூடி வளர்ச்சி ஆகிக் கொண்டே உள்ளது.

இந்நிலையின் தொடர் வளர்ச்சி நிலை சந்திரனுக்கு உண்டு. மனித ஆத்மாவினால் மாறப்போகும் தன்மை நிலையிலிருந்து மீளுவதற்கும் இயற்கையில் சக்தியுண்டு. அதைத் தான் இங்கே தொடர்ந்து காட்டிக் கொண்டு வருகின்றேன்.

Leave a Reply