மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன…?

Arul Gnanigal

மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன…?

 

ஆரஞ்சுப் பழம் நன்றாக இருக்கின்றது. நன்றாக இருப்பது கொஞ்சம் கெட்டுப் போய்விட்டால் என்ன ஆகிறது…? அதிலே புழு வருகின்றது. எங்கிருந்து அந்தப் புழு வந்தது…?

கெட்டுப் போகப் போகும்போது காற்றில் இருக்கக்கூடிய கெட்ட அலைகளை இழுத்து அது புழுவாக மாறுகின்றது. நன்றாகக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதே போல் நன்றாக இருக்கின்ற ஆரஞ்சுப் பழம் ஒரு பக்கத்தில் அடிபட்டு அழுகினால் போதும். உடனடியாக புழு வந்துவிடும்.

அதே மாதிரி “வேதனை வேதனை…” என்று நீங்கள் சுவாசித்த உணர்வுகள் உடலில் உள்ள இரத்தத்துடன் கலந்தவுடன் என்ன செய்கின்றது…?

இந்த உணர்வு மாறி இரத்தமாகப் போகும் போது அந்த வேதனைப்படக்கூடிய அணுவாக மாறும். அது தான் இந்திரலோகம். அணுவான பிற்பாடு என்ன செய்கின்றது…?

பழத்தில் அழுகிய உணர்வை எப்படி அந்த அணு சாப்பிட்டவுடனே புழுவாக எப்படி மாறுகிறதோ அதே போல் உங்கள் உடலில் வேதனையான அணுவாக மாறுகிறது. கெட்டதைச் சாப்பிடுகின்றது.

நல்ல பழமாக இருக்கும் பொழுது அதில் புழுக்கள் வருமா…? வராது.

இதே மாதிரி அந்த வேதனையான உணர்வுகள் உங்கள் உடலில் வந்து இரத்தத்தில் கலந்து அது பிரம்மமாக மாறுகின்றது. அப்பொழுது உங்கள் உடலில் என்ன செய்யும்…?
1.அந்த வேதனையின் உணர்ச்சிகளைத் தூண்டும்
2.அந்த அழுகிய உணர்வை எடுத்துத் தான் உங்கள் உடலில் ஒவ்வொரு உறுப்புகளுக்குப் போகும் இந்த இரத்தம்.

மற்ற உறுப்புக்குள் போனவுடன் எங்கெங்கே நல்ல அணுக்கள் இருக்கின்றதோ அந்த உறுப்புகள் கெட்டு அதிலே போய் இந்த அணு தங்க ஆரம்பித்துவிடும்.

நமக்குள் கெட்டது எப்படி உருவாகிறது என்று இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஏனென்றால் இன்னும் சாமியையும் சாமியாரையும் நம்பிப் போய்க் கொண்டிருப்பதைத் தான் விரும்புகின்றோம். ஆனால் அந்த நல்ல சக்திகள் உங்களுக்குள் இருக்கின்றது… உங்களை நீங்கள் நம்பிப் பழகுங்கள் என்பதைத் தான் அடிக்கடி உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் (ஞானகுரு).

ஆகவே எந்தப் பழமாக இருந்தாலும் கொஞ்சம் அடிபட்டு விட்டால் புழு வந்துவிடும்.

இதே மாதிரி நீங்கள் நல்ல நிலையில் இருக்கப்படும்போது
1.ஒருவன் கஷ்டப்பட்டான் என்றால் அந்த உணர்வைக் கேட்கின்றீர்கள்.
2.ஒருவன் சாபமிட்டான் என்றால் அந்த உணர்வைக் கேட்கின்றீர்கள்.

அப்பொழுது அந்த உமிழ் நீர் அங்கே இரத்தமாக மாறினால் அவன் எதையெல்லாம் கேட்டுப் போக வேண்டும் என்று சொன்னானோ… நீ நாசமாகப் போவாய்… உனக்குக் கை கால் முடமாகிப் போகும்… நீ நோயால் சாவாய்…! என்று சொன்னால்…
1.இதே உணர்வுகள் அது இரத்தத்துடன் கலந்து உடல் முழுவதும் படர்கிறது.
2.கலந்த பின் அங்கே போய் என்ன செய்கின்றது…?
3.பதிவானது கருவாகி முட்டை ஆகிவிடுகின்றது… ஒவ்வொரு உறுப்புகளிலும் கூடுகிறது.

உதாரணமாக தேனீ என்ன செய்கிறது…? தேன் எடுக்கச் செல்கிறது. பூக்களில் அமர்கிறது. சில நேரங்களில் அதிலே முட்டையும் இடுகின்றது.

அதே போல் தட்டான் பூச்சி இருக்கின்றது. அது பூவில் இருக்கும் அமுதைச் சாப்பிடுகின்றது. அந்தப் பூ மேலே முட்டையிடுகின்றது.. கொஞ்ச நாள் கழித்து இதனுடைய முட்டை வெடித்துப் பட்டாம் பூச்சியாக மாறுகின்றது. அந்தப் பூ எந்த நிறத்தில் இருக்கின்றதோ அதே மாதிரி வரும்.

அதே மாதிரி அடுத்தவர் உடலிலே எப்படி நோயானதோ அதே போல் ஒரு மனிதன் எப்படிச் சாபமிட்டானோ அதே உணர்வுகள் நம் இரத்தத்திலே கலந்து உடலில் சுற்ற ஆரம்பிக்கின்றது.

1.அது நம்முடைய எல்லா உறுப்புகளுக்கும் போய் வரும்
2.போகின்ற நேரத்தில் இந்த முட்டை ஒன்று ஒதுங்கினால் போதும்.
3.அந்த உறுப்பில் உள்ளதை எடுத்து வளர்ந்து அங்கே அணுவாக விளைகின்றது.
4.அந்த உறுப்பினுடைய நிலைகளையே சாப்பிடக்கூடிய நிலைகள் வந்து விடுகிறது
5.தன் இனத்தை அங்கே பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

நுரையீரலில் அந்த மாதிரித் தங்கி விட்டால் நுரையீரல் ரிப்பேர் கல்லீரலில் தங்கி விட்டால் கல்லீரலில் ரிப்பேர் மண்ணீரலில் தங்கி விட்டால் மண்ணீரலில் ரிப்பேர்.

இது எல்லாம் வந்த பிற்பாடு டாக்டர்கள் இந்த உறுப்பு கெட்டுவிட்டது… இன்ன நோய் இருக்கிறது…! என்று சொல்வார்கள்.

அகஸ்தியன் இதைப் போன்ற பல உண்மைகளை அன்றே கண்டுணர்ந்தான்…தான் வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கினான்… துருவ நட்சத்திரமாகப் போனான்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றால் நாமும் தீமைகளை நீக்க முடியும்.
2.அவனைப் போன்றே அழியா ஒளி உடல் பெறலாம்

அதைத் தான்… அந்த அகஸ்தியன் உணர்வை முழுமையாகக் கண்டுணர்ந்த நமது குருநாதர் “நம் டாக்டர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்” என்னிடம் (ஞானகுரு) என்ன சொன்னார்…?

டேய்…! சாபமிட்டவனை நீ பார்த்தால்…
1.அந்த உணர்வுகள் உன் ஆகாரத்தின் வழியாக உடலுக்குள் போகும்.
2.அந்தக் கருவாகும் அது அணுவாகும்… அது இரத்தத்தில் சுற்றும். தெல்லாம் உனக்குள் நோயாகும்…
3.எப்படி அந்தத் தட்டான் பூச்சி பூவிலே முட்டையிட்டவுடனே அதற்குத் தகுந்த மாதிரி பூச்சிகள் வளர்கின்றதோ
4.அதே மாதிரி இந்த உறுப்பை உட்கொள்ளும் அணுவாக மாறிவிடும்…! என்று சொல்லி
5.இதையெல்லாம் நேரடியாக எனக்குக் காண்பித்தார்… மக்களுக்கு இதை எடுத்துச் சொல்…! என்றார்.

நீங்கள் யாருமே தவறு செய்யவில்லை. அந்தச் சாபமிட்டதை உற்றுப் பார்க்க அந்த உணர்வை நுகர்ந்த பிற்பாடு இங்கே வந்துவிடுகிறது.

உதாரணமாக நாம் ஒரு விஷமான பொருளை எடுத்து வேலை செய்கின்றோம் என்றால் அடுத்து நம் கை கழுவாமல் சாப்பிடுவோமா…?

ஒரு நாற்றமான பொருள் நம் மீது பட்டால் அந்த நாற்றத்தோடு நாம் சாப்பிடுவோமா…? துணியிலும் பட்டது என்றால் துடைக்காமல் உட்கார்ந்தால் என்ன செய்யும்…? இந்த நாற்றம் முன்னாடி இருக்கும். நல்ல சாப்பாடு ருசி இருக்குமா…?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

Leave a Reply