இடி மின்னல்கள் எப்படி வருகிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

thunder and lightnings

இடி மின்னல்கள் எப்படி வருகிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பால்வெளி மண்டலம் சூனிய மண்டலம் என்கின்றனர். பால்வெளி மண்டலமும் பல மண்டலங்களில் இருந்து வெளிப்படும் சக்தியினைத் தன்னுள் வைத்துக் கொண்டேதான் சுற்றிக் கொண்டுள்ளது.

இப்பால்வெளி மண்டலத்தில் இருந்து மழை வரும்போது இடியும் மின்னலும் எந்நிலையில் வருகின்றன…?

பால்வெளி மண்டலத்தில் பல சக்திகள் சுற்றிக் கொண்டுள்ள நிலையில் மேகம் அடர்ந்து மழை பெய்யும் பொழுது பல அமில சக்திகள் சுற்றிக் கொண்டுள்ள நிலையில் மழைத் துளிகள் அதன் மேல் பட்டவுடன் இரண்டு வெவ்வேறு நிலை அமிலங்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதும் பொழுது ஏற்படும் நிலைதான் இடியும் மின்னலும்… மழை வரும் காலங்களில் ஏற்படுவதெல்லாம்.

இரண்டு தன்மை கொண்ட சக்திகள் மோதுண்ட நிலையில் ஒன்றை ஒன்று ஏற்காத நிலையில் பூமி எப்படிப் பூகம்பத்தை நிலநடுக்கத்தை வெளிப்படுத்துகின்றதோ அந்நிலை போலத்தான் இப்பால்வெளி மண்டலத்தில் இந்தச் “சத்ரு… மித்ரு” நிலை மோதுண்ட நிலையில் இடியும் மின்னலும் வருவதெல்லாம்.

இடியும் மின்னலும் வரும்போது பூமியில் உள்ள எவ்வமிலத்தன்மை கொண்ட சக்தி இப்பூமியில் அது தாக்கும் இடத்தில் உள்ளதுவோ அதனுடன்தான் இம்மின்னலுடன் வெளிவரும் அமில சக்தி வந்து கலக்கின்றது.

சில வகை மரங்கள் இவ்வமிலத்தன்மை கொண்டதாக உள்ளன. அவற்றின் மேல் இந்த மின்னல் தாக்கும் பொழுது அம்மரம் இதனைத் தன்னுள் ஈர்த்துக் கொள்கின்றது. தன் சக்திக்குகந்த அணு சக்தியைத் தான் அச்சக்தியின் நிலை கொண்ட மரங்கள் ஈர்க்கும்.

எப்படிப் பூமியில் பல நிலை கொண்ட தாவரங்களும் கனி வர்க்கங்களும் திரவங்களும் இக்காற்றினில் உள்ள அணுக்களைத் தனக்கு வேண்டியதைத் தன் நிலைக்கு ஒத்த அணுவை… தான் ஈர்த்து வளர்ந்து கொண்டே உள்ளனவோ அவை போல் தான் இப்பால்வெளி மண்டலத்திலும் சுற்றிக் கொண்டுள்ள அமில சக்திகளும் அதனதன் இனத்துடன் சுற்றிக் கொண்டே உள்ளன.

அதன் மேல் நீர்நிலை படும்போது ஒன்றுடன் ஒன்று மோதுண்ட நிலையில் வெளிப்படுகின்றது இடியுடன் கூடிய மின்னல்.

இம்மின்னல் வரும் பொழுது…
1.ஓர் இடத்தில் அப்படரும் ஒளி ஆரம்பித்தவுடன்
2.ஒரே நேர் கோடுபோல் நீண்டு அப்பட படக்கும் ஒலி ஒலித்துக் கொண்டே
3.அச்சக்திகள் உள்ள தூரம் வரை அப்படப்படக்கும் ஒலியுடன் கூடிய ஒளியின் மின் காற்றும் ஒலித்து வருகின்றது.

அம்மாறுண்ட சக்திகள் மோதுண்டு வரும் வரைதான் இடியின் ஒலியும் மின்னலின் ஒளியும். இடி இடிக்கும் பொழுது அதிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் இப்பூமிக்குள் வந்து… “அதன் சக்திகுகந்த தாவரங்களின் நிலையுடன் வந்து கலந்து விடுகின்றது…”

அதிகமான மேகங்கள் கூடி மழை பெய்யும் காலங்களில் நம் முன்னோர்கள் மரங்களின் கீழ் நிற்கக் கூடாது என்று சொல்லி வந்ததன் உண்மை இது.

இன்றைய விஞ்ஞானத்தில் மின்னலைத் தாங்கும் கருவிகளைக் கண்டுணர்ந்து மின்னலில் இருந்து மனிதரைக் காக்கும் நிலையில் அச்சக்தியை ஈர்க்கும் கருவிகளைப் பதித்து வைத்துள்ளார்கள்.

சில வகைத் தாவரங்களுக்கு இம்மின்னலை ஈர்க்கும் சக்தி நிலையுண்டு. மனிதரின் மேலும் மற்ற ஜீவராசிகளின் மேலும் மாடு மனை இவற்றின் மேலும் விழுந்தால் அந்நிலையில் தாங்கும் சக்தி இருப்பதில்லை.

ஆனால் இந்நிலையில் சக்தி கொண்ட தாவரத்தின் மேல் அம்மின்னலின் ஒளிக்கதிர்கள் தாக்கினாலும் அவை ஈர்த்தே வளர்கின்றன. சில தாவரங்கள் மரங்கள் இந்த இடி மின்னல் பட்டவுடன் கருகும் நிலையும் பெற்றுள்ளன.

இடியும் மின்னலும் எந்த நிலை பெற்று வருகின்றதோ அந்த நிலை போலத்தான் இவ்வான மண்டலங்களில் பல பல சக்தி நிலைகள் மாறு கொண்டு சுற்றிக் கொண்டுள்ளன.

Leave a Reply