மனிதனால் பூமியில் புதைக்கப்பட்டுள்ள அணுகுண்டுகளின் பாதுகாப்பு பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Climate change

மனிதனால் பூமியில் புதைக்கப்பட்டுள்ள அணுகுண்டுகளின் பாதுகாப்பு பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இங்கே சில உண்மைகளை வெளிப்படுத்துகின்றோம் என்பதின் பொருளே
1.இக்கலியின் மாற்றத்திலிருந்து மக்களை நல்வழியில் கல்கிக்கு அழைத்துச் செல்வதற்காக
2.பல சித்தர்களினாலும் மறைக்கப்பட்ட பல உண்மைகளை இன்று இந்நிலையில் அச்சித்தர்களுடன் கலந்தே
3.இவ்வுலக மக்கள் இதிலிருந்து மீண்டு உண்மையை உணர்ந்து ஏற்று நடப்பதற்காகத்தான்
4.இந்தச் சக்தி அனைவருக்கும் பொதுவானதே.

அச்சக்தியின் நிலையை ஏற்கும் தன்மை மட்டுமல்ல ஏற்றதனை வழி நடப்பதிலும் அச்சக்தியின் தன்மையுள்ளது.

அனைத்தையும் அறிந்து விட்டோம் என்ற நிலையில் நம் சக்தியை விரையமாக்கினாலும் அச்சக்தி நிலைத்திடாது. அச்சக்திகளை நிலைநிறுத்தி வாழும் தன்மையிலே வழி வந்திட வேண்டும் நாம் அனைவருமே.

சூரியனிலிருந்து நாம் அணுக்கதிர்களைப் பெற்று வாழ்கின்றோம். அவ்வாவியான அணுவேதான் இவ்வுலகும் அனைத்து உலகுமே.

ஆவியான அணுவை ஆக்கும் வழியில் செயல்படுத்திடாமல் அழிக்கும் நிலைக்குச் செயல்படுத்திடும் வினையை இவ்வுலக மக்கள் கூடிய விரைவில் உணரும் காலம் மிகவும் நெருங்கிக்கொண்டே வருகிறது.

எந்நிலையில் என்று கேட்பீர்கள்…?

இவ்வுலகில் சூரியனிலிருந்து வரும் அணுக்கதிர்களைக் கொண்டேதான் பல நிலை பெற்ற செயல்களை இம் மனிதனின் எண்ணம் கொண்டு உருவாக்கியுள்ளான்.

இவன் உருவாக்கிய அணுகுண்டுகளை ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாக்கும் நிலையில் பூமியின் அடியில் புதைத்துப் பல இரும்புக் கவசங்களைக் கொண்டு சிறு அணுவும் வெளிப்படாத நிலையில் தன் அறிவை எல்லாம் சக்தியையெல்லாம் செயல்படுத்தி விஞ்ஞானக் குண்டுகளைப் பல நாடுகளில் புதைத்து வைத்துள்ளான்.

“இன்று வெடிக்கப் போகின்றேன்… நாளை வெடிப்பேன்…!” என்று பயமுறுத்தலுடன் பயமுறுத்தலுக்காக வைத்துள்ள குண்டுகளை இவனும் வெடிக்கப் போவதில்லை… மற்றவனும் வெடிக்கப் போவதில்லை.

ஆனால் இவ்வுலகம் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில் சூரியனின் அணுக்கதிர்களைப் பெற்றுக் கொண்டே உள்ளது. இவ்வுலகமும் ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டே உள்ளது.

ஆவியில் வந்த அணுக்கதிர்கள்தான் அனைத்துமே. இவ்வுலகம் ஈர்த்த நிலையில் அது வெளிப்படுத்தும் நிலைகொண்டு இவ்வுலகத்தின் பாதுகாப்பினால் ஆன அணுகுண்டுகள் வைத்துள்ள நிலையெல்லாம் இப்பூமி வெளிப்படுத்தும் காந்த சக்தியை ஈர்த்துக் கொண்டே உள்ளன.

இந்நிலையிலேயே இன்னும் சில காலங்களில் அதன் சக்தி இழந்து இவ்வுலக சக்தி தன்னுள் ஈர்த்த சக்தியை வெளிப்படுத்தும் நிலையில் கக்கும் நிலையில் அதன் மேல்பட்டு ஓர் இடத்தில் வெடிக்கும் நிலையில் அணுக்களின் சிதறலினால் அனைத்து அணுகுண்டுகளுக்கும் அதனதன் ஈர்க்கும் நிலையில் அனைத்தும் வெடிக்கும் நிலை மிகக் குறுகிய காலத்தில் உள்ளது.

இப்பூமியில் அணுகுண்டுகள் வெடிக்கும் நிலையில் இப்பூமியே அதிரும் நிலையில்தான் சிறு அதிர்வினால் இவ்வுலக நிலையே மாறும் தன்மைக்கு வரப்போகின்றது.

இந்நிலையை அறிந்து நல்வழி பெற்று வாழ்வதுதான் நம்மால் இன்று செய்திட முடியும்.

இன்று இந்நிலையை வெளிபடுத்துபவர் ஏன் அந்நிலையிலிருந்து காப்பாற்றலாமே…? என்ற வினாவும் எழலாம்.

1.அனைத்தையும் அறிந்து சூட்சும நிலைகொண்டு நல்வழி புகட்டிடலாமே தவிர
2.அனைத்தும் அறிந்த ஆண்டவன் என்ற அச்சக்தியின் சக்தியே நான் என்ற சக்தி எனக்கில்லையப்பா.

யானறிந்த சக்தியை என்னுடன் கலந்துள்ள பல ரிஷிகளின் நிலை கொண்டே இந்நிலையை வெளியிடுகின்றேன். அதி விரைவில் அனைவருக்குமே வெளியிடவும் காலம் சொல்வோம்.

Leave a Reply