இந்த உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்

Sarguru Eswara

இந்த உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்

நஞ்சு கொண்ட உணர்வுகள் மனித உணர்வுக்குள் கூடிக் கூடி… இன்று மனித சிந்தனையே இழக்கப்பட்டு… மனிதனாக ரூபம் இருந்தாலும் மிருகத்திற்குண்டான உணர்வுடன் அசுர உணர்வு கொண்டு ஒருவனை ஒருவன் அழித்திடும் நிலை வருகின்றது.

இத்தகைய தன்மைகள் வரும்போது மதம் இனம் குலம் என்ற நிலைகளில் பாகுபாடுபடுத்தி… மனிதன் என்ற இனத்தை “நமக்கு நாமே அழித்திடும் நிலை வந்துவிட்டது…”

ஒன்றுமறியாத பச்சிளம் குழந்தைகளையும் இனத்தால் ஜாதியால் மதத்தால் நம்மை அறியாமலே நமக்குள் வெறி கொண்ட உணர்வு கொண்டு அழித்திடும் உணர்வுகளாக வந்தது.. இந்த விஞ்ஞான அறிவால் தான்.

ஏனென்றால் இந்த விஞ்ஞானமே அன்று நாட்டைக் காத்திட அரசன் “பிரிவினை” என்ற உணர்வை ஊட்டப்பட்டு அதனின் நிலைகள் கொண்டு நாட்டுப் பற்று என்ற பெயரில் தன் நாட்டைக் காக்க இத்தகைய அழிவின் தன்மையை அன்றைய அரசன் இதைச் செய்தான்.

ஆனால் மெய்ஞானியோ இந்த மனித வாழ்க்கையின் நிலைகள் தனக்குள் வந்த தீய வினைகளைப் போராடி அதனை வென்று தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி விண் சென்றான்.

மனித உடலுக்காக வேண்டி இச்சைப்பட்டு தான் வாழ வேண்டும் என்று பிரித்தாளும் நிலைகள் கொண்டு அரசர்கள் இப்படி தனக்கென்ற ஒரு கடவுளை நியமித்து அதை மதங்களாக மாற்றப்பட்டு கடவுளின் இஷ்டப்படி நாம் செயல்படுகின்றோம் என்று உணர்த்தினார்கள்.

ஒவ்வொரு மதங்களும் அதற்கென்ற கடவுளைத் தேர்ந்தெடுத்து… தான் எண்ணிய உணர்வைக் கடவுளாக்கி… அதன் நிலைகளை நியாயப்படுத்தி அதையே காத்திட முற்படுகின்றார்கள்.

தன் மதத்தைக் காக்க வேண்டும் என்ற நிலையில் மாற்று மதங்களாக இருந்தாலும் அந்தக் குழந்தைகள் தவறு செய்யவில்லை என்றாலும் அதை அழித்திடும் நோக்கத்துடன் தான் எல்லா மதங்களும் உள்ளன.

தான் எண்ணிய கடவுள் இதைத் தான் கட்டளை இட்டான் என்ற நிலைகள் கொண்டு மனித இனத்தையே அழித்திடும் நிலைகள் கொண்டு போர்க்களங்களாகி மனிதனுக்குள் இந்த நஞ்சினை விளைய வைக்கும் நிலை ஆகிவிட்டது.

அரசன் கட்டளைப்படி போர் செய்தாலும் போர்க்களங்களில் உயிரை விடப்போகும்போது (உயிர் பிரிக்கப்படும்போது) தன் குழந்தைகளின் மேல் பற்று பாசமாக இருந்து அந்த பாச உணர்வால் தனக்குள் வெறித்தன்மையான உணர்வுகள் விளைந்து அந்த அலைகள் எல்லாம் பூமியிலே படர்ந்துள்ளது.

இதனால்… இன்று சிறிதளவு நமக்குள் குறை ஏற்பட்டாலும்
1.அது பழி தீர்க்கும் உணர்வின் தன்மையாக நமக்குள் வளர்ந்து
2.அவரைப் பழித்திடும் உணர்வும்… பழி தீர்த்திடும் உணர்வாக வளர்ந்து சிந்தனை இழந்து
3.ஒன்றும் அறியாத குழந்தைகளையும் தாக்கி… அவர்களைக் கூடப் பாதுகாக்கும் திறனற்று
4.நமக்குள் நஞ்சு கொண்ட உணர்வாக வளர்ந்து கொண்டுள்ளது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நஞ்சினை வென்ற அந்த மெய் ஞானிகள் உணர்வினை உங்களுக்குள் அருள் ஞான வித்துகளாகப் பதியச் செய்ய உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் வலுவாக்கி… அதிலே விளைந்த உணர்வின் துணை கொண்டு…
1.நீங்கள் விடும் மூச்சலைகள்
2.இந்தக் காற்று மண்டலத்தில் பரவியுள்ள நஞ்சினை வென்றிடும் சக்தியாக மலர வேண்டும்
3.அருள் உணர்வு உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.
4.உங்கள் மூச்சலைகளால் பிறருடைய தீமைகள் அகல வேண்டும்.

ரோஜாப்பூவிலிருந்து வெளிப்படும் நறுமணத்தின் தன்மை கொண்டு அதனுடைய வலுவால் மற்றதை எப்படி விலக்கித் தள்ளுகின்றதோ இதைப் போல
1.உங்கள் மூச்சின் அலைகள் வெளி வருவது
2.நஞ்சு கொண்ட அலைகளை இது துரத்தி… அதனைச் செயலற்றதாக்கி
3.அதனை நல்லதாக மாற்றும் நிலையாக வரவேண்டும்.

இந்த நிலை வந்தால்தான் வேகாக்கலை என்ற நிலையை அடையும் தன்மை வருகின்றது. ஆகவே…
1.வேகாக்கலை அடைந்த அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்
2.அந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் விளைந்திட வேண்டும் அது வளர்ந்திட வேண்டும்
3.உங்கள் பேச்சால் மூச்சால் செயலால் இந்த உலகைக் காத்திட வேண்டும்.
4,உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய நல் உணர்வை காத்திட வேண்டும்
5.உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்.

குரு அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

Leave a Reply