சிந்தனைச் சிலையைச் சீர்படுத்த வேண்டிய அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

lord siva shrine

சிந்தனைச் சிலையைச் சீர்படுத்த வேண்டிய அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் முன்னோர்கள் ஒலியின் நாதம் கொண்டு ஒளித் தன்மை வளரும் உண்மையைத் தன் சித்தத்தில் அறிந்து கொண்டனர்.

சூரியனும் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களுக்கும்… பூமியின் தொடர்பு பெற்ற இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும்… சனிக் கோளில் உருவாகிக் கரையும் பன்னிரண்டு கோள்களுக்கும் தொடர்பு கொண்டு… பன்னிரண்டு மாதங்களின் நாமகரணத்தை ஒலியின் ஒளியால் சூட்டினார்கள்.

இயற்கையின் தொடர்களை…
1.கோள்களின் ஈர்ப்பில் விகித கணிதத்தை வான சாஸ்திரத்தில் அறிந்த தொடரில்
2.ஒவ்வொரு ஜீவ உயிரின் வீரியமுமே… மூன்று நட்சத்திர ஒலி ஒளி பெற்ற பின் தான்
3.ஜீவ உயிரணு உயிர் பெறுகின்றது.

மனித நிலை பெற்ற பின் அடுத்த நிலை பெற மனித உணர்வின் எண்ண அலையின் ஜீவகாந்த ஈர்ப்பு வலுப் பெறுவதினால்… வலுவின் தொடர் இப்பூமி இழுக்கும் ஒலி அலைகளைக் காட்டிலும் மனித ஜீவ உணர்வின் வீரியம் பெற்று விடுகின்றது.

பூமியின் தொடரிலேயே… நடைமுறை வழக்கத்திற்கொப்ப மனிதன் வாழ்ந்தான் என்றால்
1.இப்பூமி எதன் தொடரில் சக்தி பெற்று… சமைத்து பூமியின் வளர்ப்பின் வளர்ச்சி சுழற்சி வளர்கின்றதோ
2.அதன் அதன் ஈர்ப்பு பிடிப்பில் தான் இப்பூமியில் பிறந்த நாம்
3.இப்பூமியின் ஈர்ப்பு சுழற்சியுடன் சுழன்று கொண்டிருக்க முடியும்.

ஜீவகாந்த பகுத்தறியும் எண்ண உணர்வைக் கோள்களின் தொடர்புடன் மனிதன் வளர்க்க வேண்டும் என்பதற்குத்தான் மனிதனின் உண்மை நிலையை சிவரூபத்தில் உணர்த்தினார்கள் நம் முன்னோர்களாகிய அன்றைய ரிஷிகள்.

சிக்கலைத் தீர்க்க சிலை வைத்தான்
சிந்தனைச் சிலையை (மனித உடல்) உணர்ந்தானா…?

சிறுமையின் உருவாய் சிலையென்று
சந்தியில் நிற்கும் நிலையென்ன…?

சஞ்சலத்தில் சச்சரவை
சங்கடத்தில் சிக்கலின்றி
சிந்தனையில் சீர்தூக்கி
சிந்தைதனில் சீர்படுத்து…!
(சிவன் படமும் விளக்கமும்)

இதன் தொடரை மனிதன் பெற்றால் மனித நிலை தெய்வ நிலை பெறக்கூடிய தொடர்பிற்கு வளர முடியும். ஒளி கொண்டு ஒளி பெறும் ஆத்ம பலத்தின் தொடர்பைப் பெறலாம். ஆகவே இயற்கையின் தொடர்புடன் உயரும் நிலை தான் தெய்வ நிலை.

இப்புவியின் ஈர்ப்பில் வளரும் கனிவளங்களும் மற்றத் தாவரங்களும் சத்தெடுத்து அதனதன் மாற்றுத் தன்மை சிலவற்றில் வீரியமாக இருப்பது போன்று
1.இயற்கையின் ஒலித்தன்மையில் மனித ஜீவாத்மாவில் சிலருக்கு
2.சரீர உணர்வின் ஜீவ நிலையே ஒளித் தன்மை கூடியிருக்கும்.

அத்தொடரில் இயற்கையை ஒன்றி… கோள்களின் தொடர்புடன் எண்ணத்தில் ஒளிரும் ஆத்மா… நட்சத்திர நிலை போன்று என்றுமே மாறாத நிலையில்… இப்பால்வெளி மண்டலத்திலுள்ள எண்ணிலடங்கா அமிலத்தின் சமைப்பை எடுக்கவல்ல “ஜோதி நிலை பெற்று… வளர்ச்சியின் வளரும் நிலை பெறலாம்…”

ஆனால்… மனித நிலையிலேயே பிற ஆத்மாவின் ஈர்ப்பின் ஒலி அலைகள் சாடும் நிலைக்குத் தன் ஆத்மாவை அடகு வைக்கும் நிலை தான் “மந்திர தந்திர மாய நிலை…!”

Leave a Reply