மெய் ஞானிகளின் பேராற்றல்களைப் பெறக் கூடிய வாய்ப்புகளைக் கொடுத்தாலும் அதை வளர்ப்போர் குறைவாகவே உள்ளனர்
ஒரு மனிதனுக்குள் உருவாகும் உறுப்பின் தன்மையை நேரடியாக நீ பார்…! என்றார் குருநாதர்.
ஒரு சமயம் திருச்சியில் ஒரு பையன் கையில் போட்டிருந்த மோததிரத்தை விழுங்கி விட்டான். டாக்டரிடம் சென்று மோதிரத்தை வெளியில் எடுக்க முயற்சித்திருக்கின்றார்கள். ஒன்றும் வெளியில் வரவில்லை.
பேதிக்கு மருந்து கொடுத்தார்கள் அது ஒன்றும் ஆகவில்லை. குடலில் சிக்கிவிட்டது.. அதனால் குடலை ஆபரேஷன் செய்ய வேண்டும். ஆனால் ஆபரேஷன் செய்தால் அவன் செத்து விடுவான்… என்ன செய்வது…? என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்தப் பையனுக்கு ஏழு வயது. அப்புறம் நான் அங்கே செல்லும்போது அந்தப் பையனின் தாயாரைக் கூப்பிட்டு வந்து பையன் உடலில் உள்ள மோதிரத்தைப் பாரம்மா…! என்று சொன்னேன்.
ஆமாங்க… இந்த இடத்தில் இருக்கின்றது என்று அந்த அம்மாள் சொல்கிறது.
இரண்டு மூன்று வாழைப்பழத்தைச் சாப்பிடச் சொல்லி சில இதுகளைச் செய்யும் போது அந்த மோதிரம் கீழே இறங்கி வருகின்றது. அவர்கள் கண்ணில் பார்க்கின்றார்கள். வயிறு வலிக்கின்றது… இந்த இடத்தில் வலிக்கின்றது என்று சொல்கிறான். அப்புறம் இது வெளியில் வருகின்றது.
இது எல்லாம் யாம் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்யும் போது பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.
ஏனென்றால் குருநாதர் ஒவ்வொரு உறுப்புகளையும் பார்க்கச் சொன்னார். சூட்சும நிலைகள் இயக்குவதின் நிலைகள் எவ்வாறு என்று அறியச் சொன்னார். அதைத் தெளிவாக அறிய முடிந்தது.
முன்பு எம்மிடம் பழகியவர்கள்… உதாரணமாக கந்தசாமி அவர்களை எடுத்துக் கொண்டால் முருகன் வருகிறார்… அவர் வருகிறார்.. இவர் வருகிறார்… என்று எத்தனையோ நிலைகளை அவர்களுக்குக் காண்பித்தேன்.
ஏனென்றால் ஒரு மனித உடலில் எடுத்துக் கொண்ட பக்தியின் உணர்வின் அலைகள் அது எவ்வாறு வருகின்றது…? என்று தெளிவுப்படுத்தி உள்ளேன்.
இயற்கையின் நிலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சாட்சியாக எடுத்து ஒவ்வொருவருக்கும் யாம் எடுத்துக் காட்டினாலும் அவரவர்கள் பெரிய சித்தராக ஆகி விடுகின்றனர்.
சாமிக்குத் (ஞானகுரு) தெரியாது…! நம்மிடம் கேட்டுத் தான் தெரிந்து கொள்கின்றார் என்று இப்படிப் பிரித்து சென்றவர் பல பேர்.
ஒரு நூற்றியெட்டுப் பேரை யாம் வடிவமைத்து ஒரு உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குவது…? என்ற அந்த உண்மைகளை எல்லாம் அறியச் செய்ய யாம் பல நிலைகளைச் செய்தாலும் அதைப் பெற முடியாத நிலைகளில் அவர்கள் இடைவெளிகளிலேயே பிரித்துக் கொண்டனர்.
சத்திய சாய்பாபா தன் வாயிலிருந்து லிங்கத்தை எப்படிக் கக்குகின்றார்…? என்று அதே மாதிரி ஒரு பையனுக்கு எடுத்துக் காட்டச் சொல்லிச் செய்யச் சொன்னேன்.
பல முறைகளை பலருக்கும் பலவிதமான நிலைகளைக் காட்டிச் செய்யச் சொன்னேன்.
அம்பாசமுத்திரத்தில் ஒரு பையனுக்கு அகஸ்தியருடைய உணர்வின் தன்மையை ஏற்றிக் கொடுத்த பின் அவன் தியானத்தில் இருக்கும்போது பச்சிலைகள் வரும்.
அங்கே ஒரு டாக்டருடைய அப்பாவிற்குக் கடுமையான தலை வலி. வலி குறைய 12 ரூபாய் மாத்திரை மூன்று வேலைக்குச் சாப்பிட வேண்டும். ஆனால் முழுவதும் தலை வலி நிற்கவில்லை.
ஆனால் அந்த டாக்டர் இந்தத் தியானம் செய்து கொண்டிருந்தார். அந்த மாதிரி இருக்கப்படும்போது அவர் தந்தை என்னுடைய தலை வலியைப் போக்க முடியவில்லை… என்னடா தியானம்…? என்று சொல்லிச் சத்தம் போட்டு அவர்களுக்குள் பெரிய கலாட்டா வந்துவிட்டது.
அந்தச் சமயத்தில் தான் முதலில் சொன்ன அம்பாசமுத்திரத்தில் இருந்த அந்தப் பையன் தியானத்தின் மூலம் எண்ணி எடுக்கும் போது ஒரு பச்சிலை வேர் வந்தது.
அந்த வேரை குருநாதர் டாக்டருடைய தந்தையின் தலை மாட்டில் வைக்கச் சொன்னார் என்று அங்கே போய் வைத்தான். அதை வைத்தவுடனே தலை வலியே போய்விட்டது.
அந்த விஷத் தன்மைகளை எல்லாம் எடுத்துவிட்டது. 12 ரூபாய் மாத்திரைக்கு வேலை இல்லாது போய்விட்டது.
2.அவர் அலைகள் இங்கே புகுத்தப்பட்டு
3.அதே உணர்வின் தன்மை எடுக்கப்பட்டு
4.21 பச்சிலைகள் (முக்கியமானது) அதை உறையும் தன்மையாக அந்த வேராகக் கொண்டு வரும்படி செய்தேன்.
கடைசியில் என்ன ஆகிவிட்டது…? அந்தப் பையன் வரவே இல்லை. வேறு வேறு விதத்தில் தவறான நிலைகளுக்கு அவன் நடக்க ஆரம்பித்தான்.
ஞானத்தின் வழியில் வளர்ச்சி ஆவதற்குத் தயார் செய்தேன். ஆனால் அவன் வேறு நிலைகளுக்குப் போய்விட்டான். நான் கூப்பிட்டவுடன் கிராக்கி செய்கிறான்.
அந்தப் பையனின் அப்பா பையனிடம்… சாமி உனக்கு எவ்வளவோ சக்தி எல்லாம் கொடுத்தார். ஏன் இப்படி இருக்கின்றாய்…? என்கிறார்.
“இது உனக்கெல்லாம் தெரியாது…” என்று அவன் கூறிவிட்டான். இப்படியெல்லாம் சில நிலைகள் ஆரம்பத்தில் நடந்தது.
ஏனென்றால் ஞானிகள் பெற்ற சக்திகளை நிரூபணம் செய்வதற்காக நான் சில முயற்சிகளை எடுத்தேன். அது எல்லாம் பலனற்றுப் போய்விட்டது.
இன்றைய உலகம் சுருங்கிக் கொண்டிருக்கின்றது. விஞ்ஞான அறிவால் பேரழிவின் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.
மனிதனின் எண்ணங்கள் குறைந்து வரும் இந்த நேரத்தில் மெய் ஞானியின் உணர்வுகள் உங்களுக்குள் பரவ வேண்டும். உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். வேறு எதுவும் இல்லை.