தொலைத் தொடர்பு அலை வரிசைகளினால் ஏற்படும் தீமைகள்

5G tech

தொலைத் தொடர்பு அலை வரிசைகளினால் ஏற்படும் தீமைகள்

அமெரிக்கா விஞ்ஞானத்தில் மிகவும் உயர்ந்தவன் ஆகிவிட்டான். மற்ற நாட்டின் விஞ்ஞான அறிவுகளைத் தடைப்படுத்தும் வல்லவனாக ஆகிவிட்டான்.

சேடிலைட் டி.வி. என்று அந்த அலைகளை நாம் உற்றுப் பார்த்துக் கொண்டுள்ளோம். இருந்தாலும்… “அதில் வரும் கேடான அலைகளை” யாரும் அறியவில்லை.

சில டி.வி.க்களில் அவன் விஷம் கலந்த உணர்வினை ஒளிபரப்பு செய்கின்றான். அது நமக்குள் பதிவாகின்றது.

அந்த ஒளி அலைகளின் நிலைகளை எல்லாம் சேமிக்கும் கிடங்காக… எதிர் நிலையான ஒளி அலைகளைக் கவர்ந்து நிலை கொள்ளும் நிலைகளுக்கு… அந்த விஞ்ஞான அறிவைப் பரப்பி விட்டான்.

ஏனென்றால் படிப்பறிவில்லாதவன் நான் சொல்கின்றேன். நாளைக்கு உங்களுக்கு பத்திரிக்கை வாயிலாக வந்தால்தான் எல்லாமே தெரியும்.

ஐயோ… இதை அன்றைக்குச் சாமி சொன்னாரே…! என்று சொல்வீர்கள்.

விண்ணிலே ஒரு பெரிய கோளின் சிதையுண்ட பாகம் நம் பிரபஞ்சத்திற்குள் வந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னேன். அந்தப் பாகம் நம் பூமியில் விழாது… வியாழன் கோளில் தான் விழுகும்…! என்றும் சொல்லியிருந்தேன் (சுமார் 30 வருடம் முன்).

ஆனால் விஞ்ஞானிகள் இங்கே விழுகுமோ… என்றும் பின் தப்பி விட்டது…! என்றும் அவர்கள் கருவிகள் மூலம் கண்டுணர்ந்து சொன்னார்கள். பின் அந்த விஞ்ஞானி “அவன் தான் கண்டுபிடித்துச் சொன்னான்…” என்று அவன் பெயரையும் அதற்கு வைத்துக் கொண்டார்கள்.

அதே போல் தான் இதையும் யாம் சொல்கிறோம். விஞ்ஞான அறிவால் டி.வி. ரேடியோவை ரசித்துக் கேட்கின்றோம்… உற்றுப் பார்த்துப் பதிவு செய்திருக்கின்றோம்.

அதன் மூலமாக… ஒரு நஞ்சு கலந்த உணர்வின் தன்மையை அவன் இயக்குவான் என்றால் அதை நமக்குள் பாய்ச்சியபின் காக்கா வலிப்பு போல் சுண்டும்.

இராணுவத்தில் இருக்கின்றான் என்றால் ரேடியோ அலைவரிசையில் அவனுடைய கூர்மையாக நிலைகளில் எதிரியைக் காண விரும்புகிறான் என்றால் அவனுக்குள் ஊடுருவி அவனுக்கு காக்கா வலிப்பாக வரவைக்கும்.

அவனுக்கு மட்டுமல்ல…! டி.வி.யை கேட்டவர்கள் அனைவருக்கும் அந்த அலைகளாக வந்தவுடன் உடலில் பதிவு செய்தது சுண்டிவிடும். பெரும் பகுதி இந்த மாதிரி வலிப்புகள் நிறைய வருகின்றது.

மனிதரைச் செயலிழக்கச் செய்யும் நிலைகளுக்கு அவன் பல முறைகளைக் கையாண்டுள்ளான். அதாவது
1.சக்தி கூடியதும் சக்தி குறைந்ததும்
2.விசை கூட்டியும் குறைத்தும் வைத்திருக்கும் இந்த நிலைகள்
3.எந்த நிமிடம் எதைச் செய்வார்கள்…? என்று சொல்ல முடியாது.

ஒரு நாடு தனக்கு அடங்கி வரவில்லை என்றால் இத்தகைய ஆயுதத்தை எடுத்துப் பயன்படுத்தித் “தனக்கு எவனும் எதிரி இல்லை…” என்ற நிலைக்கு அமெரிக்கா செய்வான்.

இத்தகைய நிலைகளை அவன் செய்வான் என்றால் தத்துவ ஞானியர்கள் (மகரிஷிகள்) அவ்வளவு எளிமையானவர்கள் அல்ல. அவன் கண்டுபிடித்த அணு குண்டைக் காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள்…!

இந்திய நாட்டைச் சீர்குலைக்கும் நிலைகளுக்கு எதைச் செய்தாலும் நிச்சயம் அதைப் படுவார்கள். ஏனென்றால்
1.அந்த விஷமான அலை வரிசைகளைக் கொண்டு மனிதனை செயலிழக்கும் நிலையாக
2.ஒவ்வொரு நாட்டையும் அடிமைப்படுத்த விஞ்ஞான அறிவால் வரப்படும்போது
3.அவனும் அழிகின்றான்… மற்றவர்களையும் அழிக்கின்றான்.
4.நாட்டு மக்களுக்கும் தீங்கைச் செய்கின்றான்

இதைப் போன்ற விஞ்ஞானத்தால் உருவாகும் தீமைகளில் இருந்து நீங்கள் மீண்டிட வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

Leave a Reply