“முக்காலமும் அறியும் சக்தியை” எப்படிப் பெறலாம்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

spiritual-stiffnesses

“முக்காலமும் அறியும் சக்தியை” எப்படிப் பெறலாம்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இஜ்ஜீவ காந்த சரீரத்தில்… எண்ணத்தின் அலைத் தொடர்பு அனைத்தும்… நினைவின் வளர் காலம் (நினைவு தெரியும்) முதற் கொண்டு பூமியில் பிறந்த சரீரத்தின் ஆத்ம அலையுடன் பதிவு பெற்று விடுகின்றது.

மீண்டும் மீண்டும் எண்ணும் எண்ணம் இச் சரீர ஜீவகாந்த அலையுடன் மோதப் பெற்று… இச்சரீரத்தை இயக்கும் ஆத்ம அலையில் பதிவு நிலை பெற்று…
1.ஒலியின் எதிர் தொடர்புடன் எண்ணத்தின் செயல் வாழ்க்கை
2.இப்பூமி ஈர்ப்பு பிடியில் நாம் வாழுகின்றோம்.

அதாவது மின்காந்தத்தால் ஒலி அலையை நாடாக்களில் பதிவு செய்து மீண்டும் அதே மின் காந்தத்தைப் பாய்ச்சி பதிவான ஒலியை கேட்கின்றோம் அல்லவா…!

அதைப் போன்று… ஜீவ காந்த சரீரத்தின் உணர்வுடன் கூடிய எண்ண அலைகள்… ஆத்மாவில் பதிவானதை… மீண்டும் அவ்வலைத்தொடர் இச்சுவாசமுடன் ஜீவகாந்த அலையுடன் மோதியவுடன்… அதன் பிடிப்பிலேயே மீண்டும் மீண்டும் பூமியின் பிடியிலேயே சிக்க வேண்டியதிருக்கும்.

இப்பூமிப் பிடிப்பிலிருந்து விடுபடத் தன் ஆத்ம வலுவைப் பெற வேண்டுமென்றால் இஜ்ஜீவ காந்த சரீர உணர்வின் எண்ணத்தில் ஏற்கனவே பதிவு பெற்ற தொடர்பு நிலைகளை மாற்றி அமைக்க வேண்டும்.

வலுவான ஒலி சக்திகளை… காந்த மின் அலைத் தொடர்பைப் பெற்று… உணர்வின் எண்ணத்தில் இப்பூமி வளரத் தொடர்பு கொண்ட நம் சூரிய குடும்ப ஒளி சக்திகளுடன் எண்ணத்தைச் செலுத்தி பல சமைப்பின் முலாமைப் பெற வேண்டும்.

அதனின் வளர்ச்சியில்… பகுத்தறியும் விழி ஒளியைப் பாய்ச்சி எதிர்படும் பொருளறிந்து வழி செல்லும் வாழ்க்கைதனை… “ஞான ஒளி பாய்ச்சி” எதனையும் அறியும் தொடர்பைப் பெற முடியும்.

இஜ்ஜீவ காந்த சரீரத்தில் இன்று செயல்படும் ஆத்ம வலுவின் வளர்ச்சித் தொடருக்கு மேலும் வலுக்கூட்டும் “சப்தரிஷிகளின் தொடர்பில்” உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி…
1.ஜீவகாந்த சரீரத்தின் எண்ண அலைக்கு
2.வலுவான ஒளி காந்தத்தை மேன்மேலும் நாம் எடுக்கும்போது
3.ஞானத்தின் ஒளி நிலையைப் பெற முடியும்.

ஞானத்தின் ஒளித் தன்மையை இவ்வாத்மாவின் பதிவு நிலைப்படுத்தப்பட்ட வீரிய சக்தியினால்… “முக்காலமும் அறியும் மூல மந்திரத்தை” ஒவ்வொரு ஆத்மாவும் பெறலாம்.

ஆதிசக்தியின் சக்தியாக… ஜீவசக்தியின் சமைப்பு நிலைக்கு நம் சூரியக் குடும்பமல்லாத
1.வேறு பல சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த ரிஷி சக்திகளின் சமைப்பு நிலை கொண்டு
2.அதற்குகந்த வலுக்களை… ஒளியின் வண்ணச் சமைப்புகளால் சுவை கூட்டும் ரிஷித் தொடர்பில்தான்
3.கரு உரு வார்ப்பக வழித் தொடர்கள் வளருகின்றது.

அத்தகைய வழித் தொடர் பெற்று உயர்ந்த நிலையில் வளரும் மனித உயிராத்மாக்களுக்கு மீண்டும் உரம் சேர்க்கும் வளர்ப்பிற்கு வளர் சக்தியின் ஒளி சக்தியான “ரிஷி சக்தியின் ஒளித் தொடர்பால் தான்” உயர்வு நிலை கிட்டும்.

 

Leave a Reply