மனிதப் பிறப்புக்கு அடுத்த வளர் நிலையான “சத்தியத்தின் சக்தி நிலை” பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

light worlds

மனிதப் பிறப்புக்கு அடுத்த வளர் நிலையான “சத்தியத்தின் சக்தி நிலை” பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

தீக்குச்சியில் பூசப்பட்ட மருந்தும் பெட்டியில் பூசப்பட்ட மருந்தும் உராயும் பொழுது தீக்குச்சி எரிந்து அம்மருந்தின் வேகம் உள்ளவரை ஒளி தருகின்றது.

இவ்வுராய்வைப் போன்றே திரவக எரி பொருளும் அதன் தொடர்பு கொண்ட உராய்வுக் கல்களைச் செலுத்தும் பொழுது தன் ஒளி தருகின்றது.

ஒன்று போல் உள்ள இரண்டு கற்களை உரசும் பொழுதும் அதிலிருந்து ஒளி பிறக்கின்றது.

இப்படி உலக உணர்வில் மனித ஞானத்தின் சமைப்புத் தன்மை கொண்டு செயற்கை ஞானத்தில் வழிப்படும் உண்மைகளும்… இயற்கையின் உணர்வில் பிறக்கப்பட்ட உண்மையும்… சூரியனின் சமைப்பு தன்மையால் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது.

சூரியனின் ஈர்ப்புப் பிடியில் உந்தித் தள்ளும் காற்றலையில் மோதப் பெறும் அமில ஒளி நிலையில் ஜீவன் கொண்ட “உயிரணு…”
1.சூரியனின் பிடிப்பலையை விட்டுக் காற்று மண்டல நிலையற்ற பால் வெளி மண்டலத்தில் மிதந்து வரும் அவ்வுயிரணு
2.பூமியின் ஈர்ப்புப் பிடியில் தான் எச்சுவைக் கொண்டு உயிர் பெற்றதோ
3.அதன் தொடர்பில் ஜீவ வளர்ப்பு நிலை மாற மாற
4.ஒன்றின் சமைப்பிற்கு முலாம் பெற்று… ஜீவ வளர்ச்சியின் உஷ்ண நிலையில் ஓர் தொடர்பு வளர்ச்சி நிலை மாறி
5.மீண்டும் பிறிதொரு வளர்ச்சிக்கு வரும் வழித் தொடர் மாற
6.அவ்வுயிரணுவின் வலுத்தன்மையைக் கூட்டிக் கூட்டி… உயிரணுவின் பரிமாணம் கனம் பெற்று
7.எல்லாவற்றையும் அறியக்கூடிய செயல்… சொல்… ஞானம் பெறும்… சரீர நிலைக்கு (மனித உடல்)
8.அவ்வுயிர் காந்தம் ஜீவ காந்த உணர்வு நிலை செயல் கொள்ளப் பல சமைப்பில் புல்லாகி பூண்டாகி என்ற வழி நிலைக்கொப்ப
9.பல கோடி அமிலத் தன்மையில்… பல மோதலில்… பிம்ப நிலை மாற்று நிலை மாறி… மாறி…
10.சமைப்பின் அமில வீரிய சக்தியான உயிர் ஜீவாத்மா ஒளி பெற்ற சரீர இயக்கத்தில்
11.பல மோதலில் உருப்பெற்ற உணர்வின் எண்ணச் சரீரத்தில்
12.மெய் ஞான சக்தி பெறுவதுதான் மனிதனுக்கு அடுத்த நிலை.
13.மெய் என்றால் உண்மை என்ற பொருள் தான்… உலக இயல்பின் செயல்படும் உண்மையாக உள்ளது.
13.இன்று நடப்பவை சொல்லப்படும் சொல் சத்தியம் என்றால் அதுவே நாளை கனவாகி விடுகின்றது.

இவ்வுடலில் உயிர் இயக்கமும்… வாழும் வாழ்க்கையும்… “சத்தியம்” என்றால் உடலை விட்டு உயிர் பிரிந்த பின் எது சத்தியமாகின்றது…?

சொல்லப்படும் சொல்லிலேயோ வாழும் வாழ்க்கையிலேயோ சுழலும் ஓட்டத்தில் சத்தியம் இல்லை. சத்தியத்தின் உண்மை நிலையை ஒவ்வொருவரும் உணரல் வேண்டும்.

1.சூரியனின் ஒளி பூமியில் படும் போதுதான் பூமிக்கு வெளிச்சம்.
2.பூமியின் மேல் சூரியனின் ஈர்ப்பு வட்டம் இல்லா இடத்தில் அங்கு சத்தியம் செயல்படுவதில்லை.
3.சூரியனின் ஒளி நிஜம் இல்லை என்று இரவில் பூமி சொல்ல முடியுமா…?

ஒளிரும் மங்காத் தன்மையான உயிர் ஜீவ ஜோதி நிலை தான் “சத்திய நிலை…!” சத்தியத்தின் ஒளியை ஒளிரச் செய்யும் சக்தியாகத் தான் மனித உணர்வின் எண்ணத்தின் ஞானத்தைச் செயல்படுத்த வேண்டும்.

உலகப் பிடிப்பில் நீ சிக்காதே…
உலகத்தையே நீ வெறுக்காதே…
உலகத்தையே நீ உனக்கு சொந்தமாக்கு…!

உலகம் உனக்குச் சொந்தமல்ல…
உலகுக்காக நீ வாழவில்லை…
உலகத்தில் தான் நீ வாழுகின்றாய்…!

உலகம் உறங்குவதில்லை…
உலகத்தில் நீ உறங்காதே…
உலக சுகத்தை நம்பாதே…!

உலகத் தேரில் பவனி வா…!
உலக ஞானம் நீ பெற்றால்…
உலகையே நீ படைக்கலாம்…!

 

Leave a Reply