நடக்கப் போகும் அசம்பாவிதங்களை “முன் கூட்டியே அறிய முடியுமா…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

pitutary glands

நடக்கப் போகும் அசம்பாவிதங்களை “முன் கூட்டியே அறிய முடியுமா…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காட்சி:
ஆற்றின் குறுக்கே பழைய பாலம் ஒன்று; புகை வண்டியின் போக்குவரத்தின் தண்டவாளமுடன் தெரிகின்றது.

அதிவேகமாய் ஒரு புகை வண்டி வருவதைப் போன்றும்… வரும் வேகத்தில் ஓடக்கூடிய நிலையில் அப்பாலத்தின் நடு மையம் சரிந்து… புகைவண்டிப் பெட்டிகள் எல்லாம் பாலத்துடன் ஆற்றில் விழுவதைப் போன்றும்… இரண்டு பெட்டிகள் மட்டும் பாலத்தின் இக்கரையில் உடையப் பெற்று நிற்கும் பாலத்தில் நிற்பதைப் போன்றும் தெரிகின்றது.

இதன் பொருள் என்ன…?

இயற்கையில் தன் இச்சையுடன் சுழலத்தக்க மண்டலங்களின் கால நிலை… அவைகளின் சந்திப்புத் தன்மை… சீதோஷ்ண நிலை… வரப் போகும் மாற்றத்தின் முன் அறிவிப்பு… நிகழ் இயற்கைத் தன்மை… பூகம்பம்… கடல் கொந்தளிப்பு… காற்று… மழை…
1.பூமியில் அந்தந்த இடங்களில் எந்தெந்தக் காலத்தில் உஷ்ண நிலை மாறும் கொள்ளும் செயல்
2.இப்படி இயற்கையில் வரும் தன்மை வருவதற்கு முதலிலேயே
3.இன்றைய மனித விஞ்ஞானத்தில் அறியும் ஆற்றலைச் செயல்படுத்தி அறியும் விஞ்ஞானத்தின் செயலைப் போன்று
4.தன் ஞானத்தினாலேயே… அன்றையக் கால நிலையை அறியும் ஜோதிடத் தன்மையில்… இவ் ஒலி ஒளித் தன்மையை உணர்த்தினர் ஞானியர்.

கால ஜோதிட விஞ்ஞான கால சாஸ்திர செயல் முறையிலும் இயற்கையில் நிகழப்போகும் நிலையை அறியும் நிலையுண்டு.

காட்சியில் கண்ட செயற்கையின் விபத்துகளை உணர முடியுமா…?

காட்சியில் கண்ட செயற்கை நிலையில் நிகழும் விபத்துகளை முன் கூட்டி அறியும் தன்மை எப்படி ஏற்படுகின்றது…?

சில பொருட்களின் உறுதியையும் தேய்மானத்தையும் கணக்கில் கொண்டு… பார்க்கும் பொருளின்… அதன் உறுதியான உழைக்கும் காலத்தைக் கணக்கிடுகின்றோம்.

எதிர்பாராமல் நடக்கும் செயற்கை விபத்துகளை முன் கூட்டி அறியும் தன்மைகளை…
1.இச்சரீர உணர்வு எடுக்கும் ஒலியைக் கொண்டு ஒளி அலையை…
2.இக்காற்றின் அமிலத் தன்மைக்கும்… இச்சரீரத்தில் வளர்த்துக் கொண்ட காந்தமின் அலையின் வீரிய நிலையான அமிலத் தன்மைக்கும்
3.இரசத்தன்மையின் (அதாவது பாதரசம்) உணர்வின் எண்ணமுடன் ஜீவ சரீர இயக்கத்தில் மோதும் பொழுது
4.இச்சரீர உணர்வு எண்ண ஒலி கொண்டு ஒளி நிலை பெற்ற தன்மையினால்
5.இப்பூமியின் வளர்ச்சித் தன்மையின் மாற்று நிலை நிகழப் போகக் கூடிய இடங்களின் செயலை அறியலாம்.

இச்சரீர உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் ஒளி சக்தியில்… ஆத்ம வலுவின் ஒளி கூடிய தன்மையில்… சூரிய ஒளிக்கும் பூமியின் ஒளிக்கும் இடையில் மாறு கொள்ளும் தன்மையில்… பூமி எடுத்து வெளிப்படுத்தும் அலைத் தன்மையை “இச்சரீர இயக்கம் ஒளி கொண்டு காண முடியும்…!”

புகைவண்டி விபத்துக்குள்ளாகின்றதென்றால்…
1.விபத்து நடக்கக்கூடிய காலத்திற்கு முன்பாகவே
2.பூமியின் அலையில் பூமி வெளிப்படுத்தும் ஆவித்தன்மையில்
3.அந்தந்த இடங்களில் நடக்கும் செயல் நிலை “தடுமாற்றம் கொள்ளும்…”

பூமியில் சில இடங்களில் மட்டும் எப்படிச் சூறாவளி என்ற சுழல் காற்று சுழல்கின்றதோ… அதைப் போன்று பூமியின் உள் நிலையிலிருந்து வெளிக்கக்கும் ஆவி அமிலத் தன்மையிலும் சில நிலைகள் வெளிப்படும்.

அத்தகைய காலத்தில்… அந்த இடங்களில் செயல் கொள்ளும் மனித உணர்வே… புகைவண்டியில் பலர் சென்றாலும்
1.ஜீவ சரீர உணர்வின் அலையுடன் அத்தொடர்பலை மோதியவுடன்
2.திகில் கொண்ட தடுமாற்றம் ஏற்பட்டு… அதனால் செயல்கள் மாறி விபத்துக்கள் ஏற்படும்.

மனித செயலினால் செயல்படுத்தப்பட்ட தண்டவாளத்திலும்… பாலத்தின் வலுத் தன்மை குறைந்திருந்தாலும்… இப்பூமியின் இயக்கமும் ஒன்றி… இப்பூமியின் வளர்ப்பில் சரீர இயக்கத்தில் ஒளி சக்தி பெற்ற தன்மையினால் செயல் தன்மை வலுக் குன்றி… விபத்துக்கள் உண்டாகும்.

இப்படி நடக்கக்கூடிய தன்மையை… உணர்வின் ஒலி சக்தி கொண்டு ஒளித் தன்மையால்
1.அணுவுக்குள் அணு ஊடுருவும் செயல் தன்மையில்
2.மாற்றுத் தன்மையினால் நிகழும் விபரீதங்களையும் ஞான ஒளியினால் அறிய முடியும்.

இச்சரீரமே ஒளி நிலை கொண்ட ஞான ஜோதியாய் ஒளித் தன்மை கொள்ளும் வளர்ப்பினால்
1.இயற்கை மாற்றம்…
2.செயற்கை வழி… செயற்கை மாற்றம்…! ஒவ்வொன்றையும் அறிய முடியும்.

ஆவியாகி பிம்பமாகி மீண்டும் ஆவியாகும் செயல் முறையில் இயற்கை செயற்கை எல்லாமே இவ்வொலித் தன்மையின் ஒளி நிலை பெற்ற ஆத்ம சரீரத்தில் அறிய முடியும்.

ஜெபம் கொண்டு தியானத்தால் தன் உணர்வைச் சமப்படுத்தி அறியும் நிலை இது.
1.சரீர இயக்கச் செயலுடனும்
2.சரீரமற்ற ஆத்ம உயிரின் தொடர்புடனும்
3.சித்து விளையாட்டின் சித்துச் செயலிலும் நிகழும் நிலையை அறிய முடியும்.

ஆனால்… பலனற்ற தன்மை தான் சரீரமற்ற உயிராத்மாவின் (ஆவி…. ஏவல்… மந்திரம்) தொடர்பு கொண்டு செயல்படுத்தும் முறை

ஆகவே… ஒவ்வொரு ஆத்மாவும் தனக்குள் உள்ள குருவான தன்னுயிரைத் தெய்வமாக்கி…
1.ஒலி கொண்டு ஒளி பெறும்
2.எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கும். அறியும் ஞானத் தொடர் கொண்டு
3.தன் ஜீவ ஆத்மாவில் இருந்தே “வளர்ச்சி நிலை” ஒவ்வொன்றையும் அறியலாம்.

Leave a Reply